- Messages
- 300
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் 23
இந்த பதிவில், ஆண்களை தூக்கியும், பெண்களை கீழ் இறக்கியும் நான் கூறி இருக்கவில்லை.. பெண்களை போன்று ஆண்களுக்கும் கற்ப்பும் மனதும் உண்டு என்பதை மட்டுமே என் எழுத்தின் வடிவில் உங்களிடம் கொடுத்துள்ளேன்.. யாரும் தவறாக எண்ண வேண்டாம் செல்லங்களே..
முழுதாக படிச்சிட்டு சொல்லுங்க...
வானத்தின் கதவுகள் மெல்ல மெல்ல மூடும் தருணத்தில், கார்மேகங்கங்கள் புடை சூழ ஆதவனை தன்னிலை மறக்க செய்து, இரவும் அல்லாத பகலும் அல்லாத அந்த அழகிய மாலை வேலையில், பச்சை பசேர் மரம் செடி கொடிகள் எல்லாம், சுழட்டி அடிக்கும் சாரல் காற்றில் மெல்ல அசைந்து நடனம் ஆடும் நேரமது...
வீல் சேரில் ஒற்றை காலை எந்நேரமும் தொங்க போட்டு இருந்ததில், பாட்டியின் கால் சற்று வீங்கி போய் இருப்பதில், அவர் அவ்வபோது வலியில் முகம் சுழிப்பதை கண்டு கொண்ட முல்லை, அவர் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காது, தரையில் அமர்ந்து, வீங்கி இருந்த காலுக்கு தைலம் தடவி நீவி விட்டுக் கொண்டிருக்க அவளை கனிவாக பார்த்தார் பாட்டி..
"அம்மாடி முல்ல குழந்தைங்க இனிமேல் என்கூடவே படுக்கட்டும்" என்றதும் முல்லை நிமிர்ந்து பார்த்தவளாக,
"ஏன் பாட்டி" என்றாள்.
"ஜோசியர் சொன்ன அந்த மூணு மாசம் கணக்கு இன்னையோட முடியிதுமா, பாவம் உன் புருஷன் வேற எந்நேரமும் முகத்தை தொங்க போட்டே சுத்துறான்.." பாட்டி நமட்டு சிரிப்புடன் சொல்லிட, அவர் சொல்ல வருவதை புரிந்து கொண்டவளின் முகமோ செம்மை பூசிக் கொண்டது.
அதனை பாட்டியிடம் மறைக்க பெரும்பாடு பட்டவளாக, "பாட்டி ஆனா நீங்க எப்டி குழந்தைங்கள தனியா பாத்துபீங்க, அதுவும் நைட்ல, அனு நான் பக்கத்துல இல்லனா அழுவா பாட்டி.." என்றாள் தயக்கமாக.
"நான்னா நான் மட்டுமா பாத்துக்க போறேன்.. என் கூட தாயம்மாவும் தானே இருக்க போறா, அவ கூட குழந்தைங்க நல்லா ஒட்டிப்பாங்க, ஏற்கனவே உன்னையும் குழந்தைங்களையும் தனி ஒரு அறைலயும், உன் புருஷன ஒரு அறைலயும், ஜோசியர் பேச்சை கேட்டு தனித் தனியா பிரிச்சி வச்சிட்டேன்னு என் மேல ரொம்ப கோவத்துல இருக்கான்.. இன்னும் குட்டிங்களையும் உன்கூட விட்டேன்னு வையி, அவன் நிலைய நீயே நினைச்சி பாரேன்.. " பாட்டி கூறி சிரிக்க..
பாட்டி சொல்லியதை நினைத்து பார்த்த முல்லைக்கும் சிரிப்பாக தான் வந்தது...
இரு குட்டிகளும் எந்நேரமும் முல்லையை விடாது, இரவெல்லாம் அனு குட்டிக்கு கதை சொல்ல சொல்லியும், வீர் பையன் கண்களை உருட்டி கை கால்களை உதைத்து தாயின் பேச்சி குரலுக்கு தகந்தார் போர் இசையமைப்பதும் என அவளை ரெண்டு குட்டி வாண்டுகளும் அவர்களுக்காக பிஸியாகவே வைத்திருக்க... தந்தையை தாயின் அருகில் நெருங்க விடாது முல்லைக்கு ஓய்வே கொடுக்காமல் அவளை பிடித்து வைத்து கொள்ளும்போது, அரவிந்தின் முகத்தை பார்க்க வேண்டுமே!
பகலெல்லாம் கம்பனி சென்று விடுபவன்.. மாலை வீடு வந்தால் அனு ஒரு பக்கம் அவன் மீது ஏரிக் கொள்வதும், தந்தையின் குரல் கேட்டதும் எத்தனை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும் குட்டி கண்களை பட்டென திறந்துக் கொண்டு, அவ்.. அவ்.. ஆஆவ்வ்வ்.. என மழலை குரலில் எச்சில் ஒழுக சிறு இதழ்கலை லேசாக பிரித்து அசைத்து.. கை கால்களை ஆட்டி தூக்க சொல்லி தந்தையிடம் தாவப் பார்க்க... வீர் பையனின் செயலில் ஓடி போய் அள்ளி அனைத்துக் கொள்வான்.. அரவிந்த்...
இப்படியே இரவுவரை தந்தையை விடாது இரு வாண்டுகளும் பிடித்து வைத்து இருக்க.. எங்கே அவன் அவனின் மனைவியிடம் பேசுவது, கொஞ்சுவது, முத்தம் கொடுப்பது, மத்தது எல்லாம்... அதுவும் பாட்டி ஜோசியம் அது இது என இருவரையும் ஒரு அறையில் தங்க வைக்காமல், தனி தனி அறையில் போட்டது வேறு அவனுக்கு சொல்லவா வேண்டும்....
மனதுக்கு பிடித்த காதல் மனைவியை பக்கத்தில் வைத்துக் கொண்டு கொஞ்சி பேசக் கூட முடியாமல், தவித்து போய் இருக்கிறானே..! அப்படி இருந்தும் ஏதாவது ஒரு சின்ன கேப் கிடைத்தாலும் அதனை பயன் படுத்தி மனைவியிடம் நெருங்கினாலும்,, அதற்கு அவன் மனைவி ஒத்தொழைக்க வேண்டுமே..! எப்படியாவது கணவனுக்கு டிமிக்கி கொடுத்து அவனிடமிருந்து தப்பித்து ஓடி விடுகிறாளே...!
அவள் தன் மேல் உள்ள அன்பில் தான், ஜோசியர் சொன்னதை மீறி ஏதாவது விபரீதம் நடந்து விட்டால், தனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தில் தான் அவள் தன்னிடம் விலகி இருக்கிறாள் என்று தெரிந்தாலும், ஆசை மனைவி மேல் அவனுள் எழும் உணர்ச்சிகளை கட்டு படுத்த படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறான்...
இது அனைத்தும் அவனுக்கு ஒரு புது அனுபவமாகவே தான் இருக்கிறது... மனதுக்கு நெருக்கமான பெண்ணின் தொடுகைக்கும்,.. வேறொருத்தியின் தொடுகைக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொண்டான்..
இரண்டு ஆண்டுகள் மனைவியாக ஒருத்தி தன்னுடன் உரிமையாக இருந்த போதும்,, அவளிடம் வராத உணர்வுகள் உணர்ச்சிகள் யாவும்... அவன் மனதுக்கு பிடித்த காதலியாக நினைக்கும் மனைவி மேல் வற்றாத நீரூற்றாக பெருக்கெடுப்பதை நினைத்து ஆச்சிரியம் கொண்டான்...
முதல் முதலில் முல்லை பயத்தில் அவனை பின்னால் இருந்து அந்த கொட்டும் மழையில் அனைத்த போது இதுவரை எந்த பெண்ணிடமும் உணர முடியாத ஒரு ஆண்மையின் சிலிர்ப்பை முதல்முறை முல்லையின் தொடுகையில் உணர்ந்தான்.. அவளை அந்த துருவன் மானபங்க படுத்த நினைத்து அவளின் அடையை கிழித்து உருவிய போது,, ஏன்னென்றே தெரியாத சொல்லமுடியாத வேதனை அவன் மனதை ஆட்டி படைத்தது..
அன்று மருத்துவமனையில் அவனுக்கு முல்லை வாயோடு வாய் கோர்த்து மருத்துவ முத்தமாக தண்ணீர் அருந்த கொடுத்தது.. அது அரவிந்தை பொறுத்த வரை இதழ் முத்தம் தான்.. அந்த ஒரு முத்தத்தில் முழுமையாக உணர்ந்து கொண்டான்.. இவள் தன்னவள் தனக்கானவள் என்று....
முதல் முதலில் கீதா அவனுக்கு கொடுத்த இதழ் முத்தத்தில் அருவருப்பு மட்டுமே உணர்த்தவனுக்கு.. முல்லையின் சிறு சிறு தீண்டல்கள் கூட அத்தனை சுகமாய் சக்கரையாக இனித்தது... இருந்தும் அவனுள் ஒரு கலக்கம் இருந்து கொண்டே தான் இருந்தது.. அது அவன் கடந்த கால வாழ்க்கையாக கூட இருக்கலாம்.. அதானல் அவன் பட்ட அவமானங்கள் ஏராளம்...
கீதாவின் ஆபாச வீடியோக்களை வைத்துக் கொண்டு, அரவிந்துக்கு ஆகாதவர்கள் எப்படி எல்லாம் அவன் முகத்துக்கு நேராக அவமானம் படுத்தி இருக்கிறார்கள், அவளுடைன் ஒன்றாக இருந்த ஆண்கள், "இன்னைக்கு இவன் பொண்டாட்டி தான் டா மச்சா.. ப்பா செம்ம.. சும்மா நச்சின்னு இருந்தா தெரியுமா." .என்று அவன் காது பட பேசும் போது,, வாழ்க்கையே வெறுத்துப் போனான்..
என்னதான் அவன், கீதாவை மனைவியாக நினைக்கவில்லை என்றாலும்... ஊரை பொறுத்தவரை அவள் அவன் தாலி கட்டிய மனைவி தானே.. அதுவும் அவனை ஏமாற்றி உடலுறவு கொண்ட போது செத்து விடலாமா என்று கூட அவன் மனதில் தோன்றமால் இல்லை..
மனம் விரும்பாத ஒரு ஆண், ஒரு பெண்ணை அத்துமீறி தொடும் போது வரும் அருவருப்பும் ஒவ்வாமையும்,
அவன் தீண்டிய இடம் எல்லாம் கூசி பெண்களுக்கு மட்டும் தான் அருவருக்க செய்யுமோ?...
ஏன் அதில் ஆண்கள் மட்டும் விதிவிளக்கா என்ன.. ஆண்களுக்கு மட்டும் மனதையும் கற்பையும் உனக்கு சொந்தமில்லை என்று கடவுள் வைக்காமல் விட்டுவிட்டாறா?.. பெண்களுக்கு மட்டுமே கற்ப்பும் மனதும் சொந்தம் என்று கையெழுத்து இட்டு..
அப்போது அரவிந்தை போல் கற்ப்பை பெரிதாக என்னும் ஆண்களுக்கு என்ன பதில்?... கீதாவை போல் சில கேடு கெட்ட பெண்கலாளும் சில நல்ல ஆண்கள் கற்பையும் வாழ்வையும் தொலைத்து விட்டு வாழ்க்கையே வெறுமையாகி இருக்க தான் செய்கிறார்கள்... அதில் ஒருசிலர் மட்டுமே முன்னேறி செல்லும் சில பெண் சிங்கத்தை போல ஆண் சிங்கங்களாக அடுத்த கட்டத்தை நோக்கி வாழ்க்கை பயணத்தை தொடர்கிறார்கள்..
அது போல் தான் அரவிந்தும்,, முல்லை எனும் வசந்தமலரால் அவனின் அடுத்த கட்ட வாழ்க்கையை நோக்கி இப்போது அவன் பயணம்.. மகிழ்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும்...
குழந்தைகளின் மழலையிலும் தன்னை அடிமையாக்கி அவர்களுடன் நேரம் செலவிடவில்லை என்றால், அன்றைய நாள் முழுக்க ஏதோ ஒரு வெறுமை குடி கொண்டதை போல இருக்கும் தந்தையவனுக்கு..
"என்னமா முல்லை தனியா சிரிக்கிற.. உன் வீட்டுக்காரனை நினைச்சி தானே.." பாட்டி அவளை சீண்ட..
அவளும் வெட்கமாக, ஆம் என தலை அசைத்து புன்னகை பூத்தாள்.
"இத்தனை நாளா எதையோ பறிகொடுத்தவன் போல சிரிப்பை மறந்து வெறும் உடலா சுத்திட்டு இருந்தவன் முகத்துல.. திரும்பவும் சிரிப்பும், சந்தோஷமும், பழைய உற்சாகத்தையும், குறும்புதனத்தையும் பாக்கும் போது.. இப்ப தான்ம்மா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எல்லாம் உன்னால தான்.. நீ மகராசியா இருக்கணும் தாயி." பாட்டி கண்கலங்க கூற, எதுவும் சொல்லாமல், முல்லை புன்னகைத்து கொண்டால்..
மாலை வீடு வந்த அரவிந்த் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டே வீட்டை கண்களால் அளவிட்டு அவன் மனயாலை தேட, அவள் எங்கே அவன் கண்ணில் பட்டால்..
இரவு வரை அவள் கணவனுக்கு தரிசனம் கொடுக்காமல் கண்ணாம்பூச்சி விளையாட்டு விளையாடினாள்.
தாயம்மா அந்த வீட்டில் வேலை செய்பவர், அந்த வீட்டின் ஒரு அங்கம் என்றே சொல்லலாம், குழந்தைகளை உறங்க வைத்து அவரிடம் குழந்தைகளை ஒப்படைத்தவளாக, கணவன் இருக்கும் அறைக்கு செல்ல... அங்கு அவன் பல்கனியில் கை கட்டி, வானில் இருந்து அருவி போல் கொட்டும் வெள்ளி மழையை ரசித்து பார்த்து நின்றிருந்தான்.
சார் என்ற மெல்லிய சத்தத்தில், தன் காதில் விழுந்த அந்த குரல் நிஜம்தானா என்று ஆச்சிரியமாக அவன் திரும்ப... மனைவியின் தரிசனத்தில் அதிசயத்து போனான் ஆடவன்...
மழை...

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 23
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.