- Messages
- 275
- Reaction score
- 297
- Points
- 63
அத்தியாயம் - 25
காவ்யா இறந்த துக்க செய்தி கேட்டு நெஞ்சி வெடிப்பது போன்ற வேதனையோடு மயங்கி சரிந்த மதுவை, பதறி தாங்கிய வீரும் ரகுவும் அவள் கண் விழிக்கும் வரை உள்ளளவில் கலங்கி போயினர்.
மீண்டும் மது கண் விழித்தது தான் தாமதம், "ஐய்யோ.. என் பொண்ணு போய்ட்டாளா" நெஞ்சிலும் தலையில் அடித்துக்கொண்டு கண்ணீர் விட்டவளை, அத்தனை எளிதில் யாராலும் சமாதானம் செய்ய இயலவில்லை.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையோடு பல குழப்பங்கள் சூழ அமர்ந்திருக்க, இறுக்கமான முகத்துடன் தூணில் சாய்ந்திருந்த ரகுவை நெஞ்சம் படபடக்க பார்த்தாள் மிது.
"அப்போ, என் அண்ணன் பண்ண தவறுக்காக என் அக்காவ பழி வாங்க நினைச்சி, இவர் என்ன.." அதற்கு மேல் யோசிக்க முடியாமல், உள்ளம் பதகளித்து மருகி கண்ணீர் சொட்டியது பாவைக்கு.
யாதவி செய்வதறியாது கையை பிசைந்து நிற்க, "இத்தனை தூரம் கஷ்டப்பட்டு ஓடினியே.. உனக்காகவே நான் ஒருத்தன் இருக்கேன், ஒருதரம் கூட என்னைய நினைச்சி பாக்க தோணலையா டி உனக்கு.." சிவகுரு விழிகளில் யாதவி மீதிருந்த கோபம் குபுகுபுவென கொப்பளித்தது.
யாருக்கு என்ன ஆறுதல் சொல்ல ஒன்றும் புரியாத சூழ்நிலை. நிலா தாய்க்கு தண்ணீர் தந்து அக்காளின் இழப்பை ஏற்க முடியாது கண்ணீரை துடைத்தவளாக,
"ஆமா என் அக்கா மக எங்க? அவளை நீதானே வளத்தின கூட்டிட்டு வந்தியா யாதவி.." அவசரமாக நிலா கேட்கவும் தான், அனைவருக்குமே அந்த எண்ணம் வந்தது.
"க்.கூட்டிட்டு வந்திருக்கேன் அண்ணி, ஆனா இங்க இல்ல.. பெங்களூருல என் பிரண்ட் வீட்ல பாதுகாப்பா இருப்பான்னு விட்டு வந்திருக்கேன்" என்றாள் மெல்லிய குரலில்.
"ரகு, இன்னைக்கே என் பேத்தி நம்ம வீட்டுக்கு வரணும்.. அதுக்கான வேலை என்னவோ வெரசா பாரு.." வீரின் கட்டளை குரல் மகனிடம் சென்றாலும், அவனுக்கு கூட பேத்தி உயிரோடு இருப்பது பெரும் வியப்பயும் மகிழ்ச்சியும் ஒருசேர அள்ளி தந்தது.
ரகுக்கும் அதே நிலை தான். ஆனாலும் காவ்யா அனுபவித்த வேதனைகளை அத்தனை எளிதில் மறந்து விட முடியாதே! குழந்தையை அழைத்து வர்ற அவனே புறப்பட்டு இருக்க, மிது மனம் தான் போகும் அவனை ஊமையாக பார்த்து கதறியது.
கணவனின் ஒற்றை அதட்டலில் பொட்டி பாம்பாக அடங்கும் மது, வீரை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அழுகை குறைந்தாலும் மூச்சடைக்கும் கேவல் மட்டும் நிற்காமல், பேத்தி எப்போது வருவாள் என்ற ஏக்கத்தோடே வெறும் தரையில் சுருண்டு கொண்ட மனைவியின் இத்தகைய நிலையை காண முடியாதென்று தான், அத்தனை பெரிய துக்க செய்தியை சொல்லாமல் விட்டதன் காரணமே!
யாதவியின் நிலையோ படு மோசம். ஆறு ஏழு வருடங்களாக சொந்த மகளை போல் வளர்த்த குழந்தை இன்று தன் கையை விட்டு சென்று விடுமோ என்ற தவிப்பை அவள் மாமன் உணர்ந்தானோ!
ஆதரவாக பற்றிய அவன் கரத்தை குனிந்து பார்த்த யாதவிக்கு, இப்போது கூட தன் குடும்பத்தில் உள்ள ஆட்களை கண்டு, நம்ப இயலாத அச்சம் படரவே செய்தது.
அவள் வந்த நோக்கம் என்ன? இப்போது நடக்கும் கூற்று என்ன? தங்கை வாக்கப்பட்ட வீடு தான் தனது அண்ணியின் பிறந்த வீடு என தெரிந்ததில் இருந்து, அதுவரை இருந்த அப்பட்டமான பயம் கூட சற்று அவளை விலகி இருப்பது வியக்கக்கூடிய விஷயம் தான்.
"இனி வரக்கூடிய பிரச்சனைகளை எப்படி சமாளிக்க? ஒருவேள என் அண்ணன் பண்ண பாவத்துக்காக தான், என் தங்கச்சிய ரகு.." மிது மனதில் ஓடிய அதே எண்ணம் தான், இவள் மனதிலும் நடுக்கமாக ஓடியது.
"அதான் வந்த வேலை சிறப்பா முடிஞ்சிதே, நம்ம பொறப்படலாமா டி" தன் இணையை தனியாக இழுத்து வந்து சிவகுரு கேட்டதும், அவசரமாக வரமாட்டேன் என மறுத்து விட்டாள் யாதவி.
"ப்ளீஸ் மாமா, என்ன இப்டியே விட்டுடுங்க நான் திரும்பவும் லண்டன் போய்டுறேன்.. என் அண்ணிக்கு பிடிச்ச அவங்க குடும்பத்தோட அவங்க மகள எப்படியோ சேர்த்திட்டேன்.. அதுவே போதும்" என்றவளை அழுத்தமாக பார்த்தான் அவன்.
"அப்போ இதுதான் உன் முடிவா டி.." குரலில் உள்ள கடுமை உணராத பாவை, ஆம் என்று தலையாட்டியதும் சீறி எழுந்த கோபத்த்துடன் விரைப்பாக அவளை கண்ட சிவகுரு, இனி ஒருமுறை அவளை தவற விட தயாராக இல்லை. முதலில் குழந்தை வரவேண்டும் பிறகு இவளை பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அவனுக்கான நேரம் வரும் வரை அமைதி காக்க முனைந்தான்.
இரவு வெகு நேரம் ஆன பின்னே ஒன்பது வயது பெண் குழந்தையை தோளில் போட்டு தூக்கி வந்திருந்தான் ரகுபதி. குழந்தைக்கு நல்ல உறக்கம் போலும், ஒரே நாளில் பழகிய தாய் மாமன் தோளில் பாதுகாப்பான நித்திரை கண்டதோ!
மழலை முகம் மாறாத முகத்துடன், குட்டி குட்டி உதடுகள் பிளந்து உறங்கும் குழந்தையை ஆனந்த அதிர்வோடு கண்டனர் அங்கிருந்த அனைவரும்.
"இந்தா ம்மா, பாப்பாவ வாங்கிக்கோ.." அதன் உறக்கம் கலையாது அன்னையின் மடியில் படுக்க வைத்தான் மென்மையாக.
புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தையை ஆசையோடு பார்ப்பது போல, அதன் முகம் கை கால்களை தொட்டு தடவி பார்த்த அத்தனை பேரின் விழிகளிலும் பரவசம் பொங்க, காவ்யா பெற்ற வைரத்தை இமைக்காது ரசித்தனர்.
"என் பேத்தி ப்..பே.ர்.. என்னது.." மகள் ஜாடை சிறிதே சிறிது ஒட்டி இருந்த குழந்தையை கண்டு வார்த்தையே இல்லை மதுக்கு. வீர்க்கு சொல்லவா வேண்டும், தன்னை மீறி கண்கள் கலங்கி விட்டது.
"நிவேஷிதா ஆண்டி.. ஷாட்டா நிவானு கூப்ட்டு பழக்கம்" யாதவி பதில் அளிக்க, அனைவரும் அந்த பெயரை சொல்லி பார்த்துகொண்ட அழகிய தருணம் அது.
குடும்பத்தின் சலசலப்பில் மெல்ல கண் விழித்த நிவா, புதிதாக அனைவரையும் கண்டு மிரல விழித்த குட்டி திராட்சை கண்கள் காவ்யாவின் கண்களை நினைவு படுத்த, இன்னொரு குழந்தை அநியாயமாக பரிப்போய் விட்டதே என்ற துக்கம் தொண்டை வரை அடைக்காமல் இல்லை.
"அத்தை.." கூட்டத்தில் அத்தையை தேடி கண்டு பிடித்து அழைத்தது துணைக்கு.
"பயப்படாத நிவா, இவங்க எல்லாரும் யார் தெரியுமா.." என்ற யாதவி, ஒவ்வொருவரையும் அவளுக்கு நிதானமாக அறிமுகப்படுத்தி வைக்க, ஏற்கனவே அனைவரோடும் இயல்பாக பேசி பழகும் சுபாவம் உடைய குழந்தைக்கு, நீண்ட நேரம் பிடிக்கவில்லை, அங்குள்ளவர்களை ஏற்றுக்கொள்ள.
ஒவ்வொருவரின் முத்த தித்திப்பிலும் பாகாக உருகியது லண்டன் ஜில் பேபி. வெளிநாட்டு தேஜஸ் நிவா முகத்திலும் ஆடையிலும், பேச்சிலும் தெரிந்தாலும், யாதவி வளர்ப்பு அனைவரும் மெச்சும்படி மாறியதைக்குறியதாகவே இருந்தது.
"நிவா குட்டி.. இனிமே பாட்டி உன்ன பத்திரமா பாத்துக்குறேன்.. ஆதவன் ஆதிரா போலவே நீயும் எங்கிட்ட இருந்துக்குறியா செல்லம்.." மது ஆசையாக கேட்க,
"சரி பாட்டி ஆனா அத்தை.." யாதவியை பார்த்தது ஏக்கமாக. மது பதில் சொல்ல தெரியாது தடுமாற
"இங்க பாரு நிவா, இதோ இவளும் உன் அத்தை தான், எங்கிட்ட எப்டி இருப்பியோ அதே போல இவளோட இரு.. இவங்க உன் சித்தி உம்மேல பாசமா இருப்பாங்க.. கொஞ்ச நாள் நீ இங்கே பாட்டி கூட சமத்து பொண்ணா இருப்பியாம்.. அத்தை வேலைய முடிச்சிட்டு அடிக்கடி உன்ன வந்து பாத்துட்டு போவேனாம்.. சரியா.." அவள் தலை வருடி அன்பாக சொன்ன விதத்தில் அழகாக தலை அசைத்தாள் குட்டிபெண்.
மது மூன்று பேர பிள்ளைகளையும் அருகில் வைத்து கொஞ்சிக்கொண்டிருக்க, கணவனும் மகனும் அந்நியப்பட்டு போனார்கள் அவ்விடத்தில்.
"நீ என்ன க்கா முடிவு பண்ணிருக்க.." தனிமையில் அக்காளை அழைத்து வந்து மிது தான் கேட்டது.
"லண்டன் போறேன் மிது" என பெருமூச்சு விட்ட யாதவி "கடைசியா இங்கிருந்து போகும் போது நான் நானாவே இல்ல மிது.. திரும்ப இங்க வந்திடவே கூடாதுன்ற முடிவுல தான் இருந்தேன்..
ஆனா திடீர்னு ஒருநாள் உனக்கும் சிவகுரு மாமாக்கும் கல்யாணம் நடக்க போறதா, அன்நோன் நம்பர்ல இருந்து என் நம்பர்க்கு வாட்சப் வந்ததும் எனக்கு என்ன பண்றதுனே புரியல டி..
சொந்த அண்ணனே இப்டி ஒரு கேவல செயல செஞ்சதுக்கு பிறகு, யாரையும் நல்லவங்கனு என்னால முழுமையா நம்ப முடியல மிது.. உன்ன எப்படியாவது எங்கூட கூட்டிட்டு போய்டணும்னு நானும் இந்தியா வர்ற முயற்சி பண்ணேன், சரியா அந்த டைம் நிவாக்கு வைரல் பீவர் வந்து ஹாஸ்பிடலே கதியா கிடந்தேன்..
ஆனா மனசு முழுக்க உனக்கும் மாமாக்கும் கல்யாணம் முடிஞ்சிருக்குமேன்னு மேலும் பாரம் ஏறி தவிச்ச நேரத்துல திரும்பவும் அதே நம்பர்ல இருந்து வந்த மெசேஜ் பாத்து மொத்தமா உடைஞ்சிட்டேன் மிது..
உனக்கு நடந்த ஒவ்வொன்னும் அந்த மெசேஜ்ல தெளிவா இருந்தது.. கூடவே இந்த வீட்டு அட்ரஸ் முதற்கொண்டு.. அந்த ஷரத்தோட ஆள் தான் உன்ன இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டானோன்ற பயத்துல பதறி, நிவாக்கு சரியானதும், உடனே இங்க ஓடி வந்துட்டேன்..
ஆனா இங்க வந்த பிறகு தான் எனக்கே பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துது மிது.. என்ன இருந்தாலும் உன் புருஷன் உனக்கு பண்ணது எந்த விதத்துல நியாயம் ஆகும்.."
தங்கையின் வாழ்க்கையில் இப்படி ஒரு அநியாயம் நடந்த ஆதங்கம் தாங்கவில்லை யாதவிக்கு.
"ஹ்ம்.. விடு க்கா, என் வாழ்க்கைல இதெல்லாம் நடக்கணும்னு இருந்திருக்கு போல.. ஆனா அக்கா, நீ லண்டன் போனது தான் இங்க யாருக்கும் தெரியாதே, பிறகு எப்டி உன் நம்பர் கண்டு பிடிச்சி என்ன பத்தின டீடைல்ஸ ஷேர் பண்ணது.." மிது சந்தேகமாக கேட்க,
*வேற யாரு அது, நான் தான் அந்த பையன் டாய்..
யார்ரா அந்த பையன், ஹான்..
நான் தான் அந்த பையன்..
யார்ரா அந்த பையன், ஹான்..
நான் தான் அந்த பையன்..* செல்போனில் பாடல் ஒலிக்க விட்டு அதனை ஆட்டியபடியே, வேட்டியை ஏத்திப் பிடித்து ஸ்டைலாக என்ட்ரி கொடுத்த சிவகுருவின் நக்கல் சிரிப்பில், இரு பெண்களும் திகைத்து பார்த்தனர்.
"மாமா நீங்களா.." மிது வாய் பிளக்க,
"அப்கோர்ஸ் நானே தான் அது.." என்றவனின் அழுத்த பார்வை யாதவியை துளைத்தது.
"நான் தான் அப்பவே சொன்னேனே, நீ எங்கே இருக்கேன்னு கண்டு பிடிக்கிறது எல்லாம் எனக்கு ஜூஜூபி மேட்டர்னு.." திமிராக அவளை பார்த்தபடி உரைத்தவன், யாதவியின் முறைப்பை ஜோராக பெற்றான்.
"நீங்க நினைக்கிறது எதுவும் நடக்காது.. நான் காலைல லண்டன் போனா இனி ஒருகாலம் திரும்ப வரவே மாட்டேன்.. உங்களால முடிஞ்சதை பாருங்க"
சதிசெய்து தன்னை சிக்கலில் சிக்க வைக்க நினைக்கிறானே என்ற கோவத்தில், உதடு துடிக்க சவால் விட்டவளாக, விடியல் பொழுதில் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு, நிவாவை பிரிய மனமே இல்லாமல் கண்ணீரை துடைத்தபடியே ஏர்போர்ட் நோக்கி காரில் சென்றவளை, காரோடு கடத்திவிட்டிருந்தான் வெள்ளை சட்டைக்காரன்.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 25
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.