• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
170
Reaction score
146
Points
43
அத்தியாயம் - 27

கருவானை அலங்கரித்து ஆங்காங்கே மின்னிக் கொண்டிருந்த நட்சத்திரங்களை கைகட்டி நின்று வெறுமையாக பார்த்துக் கொண்டிருந்தவளின் தோளில் சூடான ஸ்வாசம் பரவி, இடையில் ஊர்ந்த கரம் அழுத்தம் கொடுத்ததில் திடுக்கிட்டு திரும்பிய குழலி, இரும்பாக புடைத்த அகல மார்பில் தலையை முட்டிக்கொண்டதிலேயே அறிந்து கொண்டாள் அவன் யார் என்று.

அதிகாலையில் அவள் கண் விழிக்கும் முன்பே அவசர அவசரமாக எழுந்து குளித்து விட்டு சுத்தபத்தமாக சம்பவத்திற்கு சென்று விட்டான் ருத்ரன். உறக்கம் கலைந்து எழுந்தவளுக்கு அவன் இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும், எங்கு சென்று என்ன செய்துகொண்டிருப்பான் என்று நினைக்கும் போதே நெஞ்சம் கசந்து ஈரக்குலை நடுங்க செய்தன.

தன்னை ஒவ்வொரு முறையும் அவன் தொடும் போதும், எத்தனை எத்தனை உர்களை கொன்று பாவக்கரையை இந்த கரம் சுமந்து கொண்டிருக்கிறதோ என்ற எண்ணமே அவளை நிலைகொள்ளாமல் செய்துவிடும்.

கழுத்தில் உறுத்தும் தாலியை நெஞ்சோடு இறுக்கிப்பிடித்து தன் தலைவிதியை எண்ணி கண்ணீர் சிந்தும் குழலி, ருத்ரன் கையால் கட்டிய இந்த தாலியை பெரும்பாவமாகவே நினைத்தாள்.

இப்போதும் எத்தனை பேரை வெட்டி சாய்த்து துப்பாக்கி குண்டுகளை இரக்கமின்றி நெஞ்சில் இறக்கினானோ மனதில் நினைத்துக் குமுறியவள், அவன் கையில் இருந்து விடுபட திமிற மேலும் இறுக்கம் அதிகரித்து கால்கள் அந்திரத்தில் தொங்கியதும் விழிகள் தாழ்த்தி அவன் முகம் பார்த்தாள்.

"காலைல இருந்து ஓடி ஓடி சம்பவம் செஞ்சி ஒரே உடம்பெல்லாம் அலுப்பா இருக்கு குயிலுஊ.. உன் கையாள ஆட்டுக்கால் சூப் வச்சி தரியா" இடையோடு தூக்கி மென்கழுத்தில் முரட்டுமுகம் தேய்க்க,

"நேக்கு அதெல்லாம் தெரியாது. உங்க மேல ரத்த வாடை வருது எனக்கு கொமட்றது விடுங்கோ" அவனது கேசம் பற்றி தன் கழுத்தில் இருந்து வெறுப்பாக முகத்தை தள்ளி கால்களை உதறிதும் அலுங்காமல் கீழே நிறுத்தியதும் வேகமாக பின்னால் நகர்ந்தவளை கண்டு புருவம் ஏற்றி வளைத்தான்.

"எத்தனை நாளைக்கு இப்டியே சாக்கு சொல்லி தப்பிக்கிறேன்னு பாக்குறேன். ஆமா நான் வீட்டை விட்டு போனதுல இருந்து என்ன பண்ணிட்டு இருந்த, நான் இல்லனு நிம்மதியா இருந்தியா இல்ல எப்போ நான் வருவேன்னு ஆசை காத்திருந்தியா"

அவளின் கோவம் கொண்ட குட்டி முகத்தினை உற்று பார்த்தபடியே சட்டையை கழட்டிய ருத்ரனை பாராமல் நின்றாள் குழலி.

"கேட்டதுக்கு பதில் வரல. நான் பக்கத்துல வருவேன். சொல்லு குயிலு பாவாவ தேடுனியா இல்லையா" சட்டையற்ற படிக்கட்டு தேகம் மினுமினுப்பாக அதிர அவளை நெருங்க முற்படவும்.

"இ..இல்ல.. நான் உங்கள தேடலை. நிம்மதியா சாப்ட்டு தூங்கி எழுந்தேன். இதுதான் உண்மை போதுமா. பின்னாடி போங்கோ" அவசரமாக உரைத்தவளை கண்டு உதட்டின் ஓரம் சிரிப்பை உதிர்த்தான்.

"ஓ.. நிம்மதியா சாப்ட்டு தூங்கினியா. அப்போ நைட் நல்லா பாவாக்கு விடிய விடிய கம்பெனி கொடுப்பேன்னு சொல்ற அப்டி தானே!" வில்லங்கமாக மீண்டும் நெருங்க, மிரளும் விழிகளால் கொல்லை கொண்டான் ஆண்மகனை.

"என்ன குயிலு.. பார்வையாலே போதை ஏத்துற" முரட்டுக்குரல் உருமியதில் இதயம் நடுங்க செய்தது.

"வெறும் முத்தம் மட்டும் போதும்னு எவ்வளவோ கட்டுப்படுத்தி வச்சிருக்கேன். ஆனா முடியாது போலயே டி மொத்தமும் வேணும்னு உடம்பு முறுக்குது" துப்பட்டாவை மீறியும் திமிறிய அழகினை பார்வையால் களவாட, அவசரமாக உடையை சரிசெய்து அறைக்கு ஓடியவளை, பின் தொடராமல் சிரித்துக்கொண்டவன் சிறிது நேரம் கழித்து கிட்சன் நோக்கி சென்றான்.

"அண்ணையா நீ கேட்ட எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துட்டேன்" இரண்டு கையிலும் பெரிய பெரிய பைகளோடு வந்தான் மதன்.

"என்னடா சொன்னதை எல்லாத்தையும் வாங்கிட்டியா. எதுவும் வாங்காம விட்டு வந்தியா"

"இல்ல அண்ணையா நீ சொன்ன எல்லாத்தையும் ஒன்னு விடாம வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு" என்றவன் பையில் இருந்தவற்றை அனைத்தையும் தரையில் கொட்டிட, அதிலிருந்த காய்கறிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலைக்கு உருண்டதை எல்லாம் பொருக்கி அதனோடு வைத்தான்.

கீரை வகைகள், வெண்டைக்காய், அவரைக்காய், கொத்தவரைங்காய், பீட்ரூட், கேரெட், தயிர் மோர் பால் பாக்கெட்டுகள் என்று மாமி உண்ணும் சைவ உணவு பொருட்கள் அனைத்தையும் சரி பார்த்து, பின் அவற்றை எடுத்து பிரிட்ஜில் தனித்தனியாக அடுக்கி வைக்கும் ருத்ரனை கவனமாக பார்த்துக்கொண்டிருந்த மதன், எதையோ நினைத்து தனக்குள் சிரித்துக்கொண்டான்.

காரணம் உண்டே, அசைவம் இல்லாமல் ஒரு பருக்கை கூட தொண்டையில் இறங்காது. இன்றோ கட்டியவளுக்காக தானே முன்வந்து சைவத்தில் குதித்தவனை கண்டு சிரிக்காமல் எப்படி?

கத்திரிக்காயை சூட்டில் வாட்டி தோலை நீக்கி மசித்து, தண்ணீரில் ஊற வைத்த காஷ்மீர் மிளகாயுடன் சேர்தஅதை சட்னி போல் ஆந்திரா ஸ்டைலில் ரெடி செய்தவன், தோசை ஊற்றி ஹாட்பாக்ஸில் அடுக்கி வைக்கும் நேர்த்தியே நேர்த்தி தான்.

"அண்ணையா ஆள சுடுறதுல மட்டுமில்ல தோசை சுடுறதுல கூட கைத்தேர்ந்த ஆளு தான்" மதன் நெஞ்சில் பெருமை பாடிக்கொண்டான்.

"டேய்.. இதையெல்லாம் எடுத்து அக்கட வை, நான் போய் குயில கூட்டிட்டு வரேன்" என்ற ருத்ரன் விருவிருவென அவன் அறைக்கு சென்றிட, கிளிபிள்ளை போல் சொன்னதை செய்தான் மதன்.

"அந்த வானத்துல அப்டி என்ன தான் தெரியிது" திடீரென செவியருகில் கேட்ட சத்தத்தில் வெடுக்கென தலையை மட்டும் பின்னால் திருப்ப, ருத்ரன் தான் அவள் முதுகை ஒட்டி நின்றிருந்தான்.

"மச்.. இப்ப என்ன" கடுப்பாக வந்தது அவள் வார்த்தை.

"சாப்ட கூட்டிட்டு போக வந்தேன்" விரைப்பான பேச்சும் சூடான மூச்சும் அவள் கழுத்தில் படர,

"எனக்கு பசி இல்ல" வேகமாக தள்ளி நின்றாள்.

"ஆனா எனக்கு பசிக்குது. நீயா வந்தா பிரச்சனை இல்ல நானா இங்க கொண்டு வந்தா இங்கிலிஸ் கிஸ்ஸு மூலமா தான் சாப்பிடுவேன். இப்புடு செப்பு வரியா இல்ல கொண்டு வரவா?"

புருவம் ஏற்றி இறக்கிய விதத்தில் எச்சிலை விழுங்கியவளுக்கு தெரியாதா, அவன் உணவுண்ணும் முறை. வந்த நாளில் இருந்து அவள் முரண்டு பிடிக்கும் போதெல்லாம் வாய் வழி உணவுப்பரிமாற்றம் தான் அதிகம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

இன்றும் அதே போல் நடந்து விடக்கூடாதென்றே அவனுக்கு முன்னால் வேகமாக ஓடியவளை கண்டு நகைப்பாக பின்னால் சென்றான் ருத்ரன்.

"ரா வதினா.. எங்க அண்ணையா அதுக்காக கூட இவ்வளவு டேஸ்டா சமையல் செஞ்சது இல்ல. ஆனா உனக்காக பைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாட்டையே அடிச்சிக்கிற அளவுக்கு டேஸ்ட்டா செஞ்சிருக்கு பாரேன்"

என்ற மதனை முறைத்தபடி அமர்ந்த குழலி,

"அப்படி என்ன உலகத்துல யாராலயும் செய்ய முடியாத பெரிய இந்த டேஸ்ட்ல செஞ்சிட்டா. என் தலை எழுத்து கொலைகாரன் கையாள செஞ்ச சாப்பாட்டை எல்லாம் ஆச்சாரம் இல்லாம சாப்பிடணும்னு"

முணுமுணுப்பாக பேசினாலும் தெளிவாக இருவரது செவியையும் எட்டுவதை போல் தான் பேசினாள்.

அதில் கலக்கமா மதன் ருத்ரனை பார்க்க, அவன் எதுவும் கேட்காததை போல் குழலியின் அருகில் அமர்ந்து அவனே அவளுக்கு தோசையை எடுத்து வைத்து கத்திரிக்காய் சட்னியை வைக்க, வாசனை என்னவோ நன்றாக தான் இருந்தது ஆனாலும் அவன் செய்தான் என்ற எண்ணமே சாப்பிட ஒப்பாமல் தட்டையே உற்று நோக்கியவளின் தோளை இடித்து,

"சாப்பிடு. இல்ல இங்கிலீஸ் கிஸ்ஸு தான்" அதட்டலாக அவள் காதில் சொன்னதும் வேறு வழியின்றி மெதுவாக கொரித்தாள்.

"அண்ணையா, இந்த கத்திரிக்கா மசியல எங்க செய்ய கத்துக்கிட்ட இதுவரைக்கும் நீ செஞ்சி பாத்ததே இல்லையே. ரொம்ப பிரமாதமா இருக்கு" என்ற மதன் இதோடு பத்தாவது தோசையை விழுங்கி விட்டான்.

பதில் சொல்லாது ருத்ரன் உண்ண,

குழலிக்கும் அது மிகவும் பிடித்து விட்டது என்றே சொல்லலாம். இத்தனை நாளும் வேண்டா வெறுப்பாக உண்டவள், இன்று நான்கு தோசையை காலி செய்து ஐந்தாவது தோசையை உண்டு கொண்டு இருப்பதை ருத்ரனும் பார்த்தான் தான், ஆனாலும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

"அண்ணையா என் வயிறு ஃபுல். நேனு போய் தூங்கறேன். அப்புறம் காலைல 6 மணிக்கு சம்பம் பண்ற இடத்துக்கு போகணும் அண்ணையா"

கடைசியாக அவன் எப்போதும் போல் சொல்லி செல்ல, அதுவரை இயல்பாக உண்டு கொண்டிருந்த குழலியின் முகம் இறுகி சட்டென எழுந்து அறைக்கு சென்று விட, ருத்ரன் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

மெத்தையின் ஓரத்தில் அமர்ந்து அதன் விளிம்பை பிடித்து உருட்டியபடி இருந்த குழலி, அவள் மடியில் கணம் கூடியது கூட உணராமல் எதையோ யோசித்துக் கொண்டிருந்தவளின் இரவு உடையான தாவணி விலகி அங்கு ஈரம் படிந்ததும் தான் படபடப்பாக குனிந்து பார்த்தாள்.

"என்ன குயிலுஊ.. ஆ..ஊ..ன்னா தனியா உக்காந்து எதையாவது யோசனைலே இருக்க. பாவா அசதியா வந்திருக்கேனே கைகால அமுக்கி விட்டு தலைய பிடிச்சி விட்டு, அப்டியே கொஞ்சம் அப்டி இப்டி கில்மா பண்ணி சந்தோசப் படுத்துவோம் ஹ்ம்..எதுவும் இல்ல"

பெரிதாக அலுத்துக்கொண்டாலும் வயிற்றில் இடும் எச்சில் கோலத்தை நிறுத்தவில்லை.

"எதுக்காக இப்டி அப்பாவி மனுஷாலோட உயிரை எல்லாம் அநியாயமா கொன்னுட்டு இருக்கேள். எத்தனை பேர் துடிதுடிச்சி செத்து இருப்பா அவங்க பாவமெல்லாம் உங்கள சும்மா விடுமா. அவங்க குடும்பத்துல உள்ளவா எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பா. அதையெல்லாம் நினைக்க மாட்டேளா.."

வேதனையாக கேட்டு கண்ணீர் விட்டவளை தலைதூக்கி பார்த்தான்.

"கத்திக்கும் துப்பாக்கிக்கும் எது அப்பாவி உயிர் எது பாவப்பட்ட உயிர்னு தெரியவா போகுது. எல்லாம் பணம் தான் காரணம். கத்திய எடுத்தோமா சதக் சதக் ரெண்டு துண்டு. துப்பாக்கியால குறி வச்சோமா டுமீல் டுமீல் ரெண்டு சுடு. அவ்வளவு தான் இதெல்லாம் ஒரு பொழுதுபோக்கு குயிலு. நீ கண்டுக்காத"

சாதாரணமாக கூறி மீண்டும் விட்ட வேலையை தொடர.

"ச்சீ.. ஒரு உயிரை கொன்னு அந்த பாவத்துலயும் சாபத்துலயும் சேர்த்த பணத்துல உக்காந்து சாப்பிட எப்டி உங்களுக்கு மனசு வருது. இதுல வேற பொழுதுபோக்குக்காக செய்றேன்னு என்கிட்டயே சொல்றேளே. நீங்க எல்லாம் மனுஷ பிறவி தானா.."

கோபத்தில் உதடு துடிக்க குயில் கத்திட. நிதானமாக எழுந்து சம்மணமிட்டு அமர்ந்தவனின் பழுப்பு நிற கண்கள் நிறம் மாறி கோபத்தை பூசிய சிகப்பு நிறமாக அவள் பேசத் தொடங்கும் போதே மாறி விட்டிருந்தது. ஆனாலும் அவளிடம் தன் கோபத்தை காட்ட விரும்பாதவனாக,

"நீ நினைக்கிற மாதிரி நான் ஒன்னும் மனுஷ பிறவி இல்ல. அப்பாவி உயிர்களை கொன்னு அந்த ரத்தத்தை குடிச்சி உயிர் வாழுற கொடிய மிருகம். மிருகத்துக்கு தப்பு எது சரி எது எதுவும் பிரிச்சிப் பாக்க தெரியாது. பசிச்சா கண்ணுல படர எந்த உயிரையாவது வேட்டையாடி தின்கிறது தான் தெரியும்.
அப்டி தான் நானும் பணம் கொடுத்து கொல்ல சொன்னா யாரை வேணாலும் கொல்லுவேன்"

கண்ணில் ஒரு வித வெறியுடன் அவன் பற்களை கடித்து சொன்னதில் நடுமுதுகு சில்லிட்டுப் போனது குழலிக்கு. ஆனாலும் கோபம் தீரவில்லையே!

"நாளைக்கே என்னையும் கொல்ல சொல்லி யாராவது பணம் கொடுத்தா என்ன பண்ணுவேள். எதை பத்தியும் யோசிக்காம கொன்னுடுவேளா" ஆத்திரம் குறையாது அவள் கத்த,

"ஆமா டி.. கொல்லுவேன்ன்ன்.. பணத்தை கொடுத்து கொல்ல சொன்னா, உன்ன மட்டும் இல்ல உன் அப்பன் அண்ணன் அம்மா இப்டி எல்லாரையும் வெட்டி கூரு போட்டுடுவேன்"

அதுவரை இருந்த இலதுத்தன்மை மறைந்து மிருகம் போல் கர்ஜிக்க, ஓநாயிடம் மாட்டிய ஆட்டுக்குட்டியாக நடுங்கி விட்டாள் குழலி.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 27
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Messages
46
Reaction score
37
Points
18
Ji nijama solren... Kuzhali pavam.... Ruthran pinnadi etho story Iruka? Avan seiyarathu ethume puriala ji.... Epoum ketkara ques tha Ivan nallavana kettavana ? Pls reveal pannungalen thalaiye suthuthu ji....
 
Top