• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
170
Reaction score
146
Points
43
அத்தியாயம் - 28

ருத்ரனின் கோபத்தில் குழலி வெடவெடத்துப் போக, மிரட்சியை தாண்டிய ஏமாற்றம் அவளின் விழிகளில் உள்ளதை அத்தகைய கோபத்திலும் நன்கு உணரவே செய்தான் ருத்ரன்.

வெறும் பணத்திற்காக கட்டிய மனைவியை கூட கொலை செய்வானா!!..

அந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அவளால். கண்களில் நிலை இல்லாமல் வழிந்த கண்ணீர் கன்னம் தாண்டி கழுத்தை தீண்ட, ருத்ரனின் மீசை தாடிகள் சூழ்ந்த தடித்த உதடுகள் மின்னல் வேகத்தில் அதனை உறிஞ்சி அவளை மெத்தையில் சாய்த்திருக்க, அவனது ஒவ்வொரு செயலையும் ஜீரணிக்க முடியாமல் அதிர்ச்சியில் மிரண்டாள் புள்ளிமான்.

"என் தொழில் இதுதான். யாருக்காகவும் இந்த கத்தி துப்பாக்கிய கைல எடுக்காம என்னால இருக்க முடியாது. உனக்காக கூட" இரும்பை உடைக்கும் குரலால் அவள் தொண்டைக்குழியை அதிர வைத்தான்.

"பிறகு எதுக்காக என் கல்யாணத்தை நிறுத்தி நேக்கு கிடைக்க இருந்த நல்ல வாழ்க்கைய கெடுத்து என்னை தூக்கிட்டு வந்து வச்சிருக்கேள். உங்க கூட இருக்குறதால தானே நீங்க செய்ற அட்டூழியத்தை எல்லாம் பாக்குறேன் என் காதால கேக்குறேன்.

நானா வம்படியா உங்க கூட வரேன்னு சொன்னேன். இந்நேரம் நான் எவ்வளவு சந்தோஷமா இருந்திருப்பேன் எல்லாத்தையும் கெடுத்துட்டேளே..

உங்க தொழில் இதுதான்னா எதுக்காக என் வாழ்க்கைய நாசம் பண்ணேள். இந்த கத்தி துப்பாக்கியோட நீங்க மட்டும் தனியா போராடி சாக வேண்டியது தானே.. என்னையும் ஏன் இந்த பாவத்துல பங்கெடுக்க வச்சி சித்ரவதை செஞ்சி சாகடிக்கிறேள்"

ஆற்றாமையில் அவன் மார்பில் குத்தி குலுங்கி அழுதவளின் கரத்தை பிடித்து மெத்தையில் அழுத்தி, உஷ்னமான கோப மூச்சி அவள் முகத்தில் படர கோரமாக பார்த்தவனை கண்டு, உதடு துடித்தது அச்சத்தில்.

"எனக்கு உன்ன பிடிச்சி இருந்துச்சி, சொல்லப் போனா உன்ன பாக்குறதுக்கு முன்னாடியே உன்னோட குரல்ல மயங்கிட்டேன்னு தான் சொல்லணும்.

இந்த குரலை தினமும் கேக்க என்ன வேணாலும் பண்ணலாம்னு தோணுச்சு. அதுக்காகவே உன்ன உரிமையா தூக்கினேன். ஆனா இப்போ.. ஏன் டா அவசரப்பட்டோம்னு ஒவ்வொரு நேரமும் நினைக்க வைக்கிற டி.

எப்பப்பாரு அழுகை. கொலை பண்றது தப்பு மனசாட்சி இருக்கா. பாவம் சாபம்னு என்னத்தையாவது உளறி ஒப்பாரி வைக்க வேண்டியது" சலிப்பாக கோபம் கொண்டவனை தீயாக முறைத்தாள் குழலி.

"அப்டி சலிப்பா இருந்தா என்ன விட்டுடுங்கோனு தானே வந்ததுல இருந்து ஆயிரம் முறை சொல்றேன். விடாம என்னை பிடிச்சி வச்சிக்கிட்டு எதுவும் கேக்கக்கூடாதுனா எப்டி?.. நான் கேள்வி கேக்க கூடாதுன்னா இந்த தாலிய நீங்க என் கழுத்துல கட்டி இருக்கக் கூடாது" பயத்தை மறைத்து ஆவேசமாக கத்தியவளை ஒரு மார்க்கமாக ருத்ரன் பார்த்த பார்வையில் முதுகு தண்டு சில்லிட்டுப் போனது.

"அப்போ தாலி கட்டி உன்ன கூட வச்சிருக்குறதால என்னை நீ கேள்வி கேப்ப அப்டிதானே குயிலுஊ" குரல் குழைய அவள் கண்களை கூர்மையாக நோக்கியவனின் பார்வையில் வில்லங்கம் இருப்பதை அவள் கவனிக்கவில்லை போலும்.

"ஆமா பின்னே தாலி கட்றது எதுக்கு? ஆத்துக்காரர் தப்பு செஞ்சா ஆத்துக்காரி தட்டிக்கேக்கணும். அதுவே ஆத்துக்காரி தப்பு பண்ணினா ஆத்துக்காரர் தட்டி கேக்கணும். தப்பு எது சரி எதுனு ஒருத்தருக்கொருத்தர் அனுசரிப்பா எடுத்து சொல்லி கடைசி வரைக்கும் புரிதலோட வாழனும்.

ஆனா இங்க அப்டியா இருக்கு. உங்க பாதை மொத்தமும் கத்தி துப்பாக்கி ரத்தம்னு கரடுமுரடானது. எப்ப யார் உயிர் போகும்னு தெரியாத பதைபதைப்பான வாழ்க்கை. ஆனா நான் அன்பும் அமைதியும் மென்மையையும் நேசிக்கிறவ. நேக்கு இதெல்லாம் பாக்க ரொம்ப பயமா இருக்கு"

குழலியின் கண்ணீர் அவனை நெருப்பாய் சுட்டாலும், உணர்வுகளை வெளிகாட்டாமல் கல்லாக அவளை பிரிந்து மெத்தையில் உருண்டவன் மல்லாக்கப் படுத்து கண்மூடிபடி ஏதோ யோசனையில் உழல, அதுவரை இரும்பு சிறையில் அகப்பட்டதை போல் மூச்சி விடவும் சிரமமாய் அவனுக்கடியில் நசுங்கிக்கிடந்த குழலி கண்ணீரை துடைத்துக்கொண்டு எழுந்தவள், அவனை பார்த்தபடியே முட்டிக்காலில் முகம் புதைத்து அமர்ந்துவிட்டாள்.

"அப்போ நான் தான் உன் பாவான்னு நீயே உன் வாயாலே ஒத்துக்கிட்ட அப்டிதானே குயிலுஊ.." மூடியகண்கள் திறவாமல் ருத்ரன் கேட்டிருக்க,

"என்ன கேட்கிறான் பைத்தியக்காரன்" என்ற குழப்பத்துடன் பார்த்தாள் அவனை.

"உன்கிட்ட தான் கேக்குறேன் பதில் செப்பு"

"நான் எப்போ அப்டி சொன்னேன்"

"ஏய்.. இப்பதானே டி தாலி கட்டிட்டா ஆத்துக்காரன் ஆத்துக்காரினு ஏதோ பைத்தியக்காரி மாதிரி கதையெல்லாம் விட்ட அதுக்குள்ள மறந்து போச்சா" படக்கென தேகம்அதிர எழுந்து அமர்ந்தவன் அவள் முட்டிக்காலில் இவன் கைஊன்றி அவள் பிறைமுகம் காண, திருவிழாவில் தொலைந்த பிள்ளை போல் பாவமாக முழித்தாள்.

"அ.அது.. நான் புரிய வைக்கிறதுக்காக அப்டி சொன்னது" என்றாள் திணறலுடன்.

அதற்கு பதிலேதும் இல்லாமல் அவளையே அவன் பார்ப்பதில் அவஸ்தையாக உணர்ந்தாள் குழலி.

"எ. என்ன.." நா உளர்ந்து போனது அவளுக்கு.

"ஏன் டி உனக்கு நான் செய்ற கொலை மட்டும் தானா கண்ணுக்கு தெரியிது. உனக்காக நான் செய்ற எதுவும் உன் கண்ணுக்கு தெரியவே இல்லையா" கனிவாக கேட்கவேண்டியதை கூட விரைப்பாக கேட்டவனை என்ன சொல்ல.

"எனக்காக அப்டி நீங்க என்ன செஞ்சிட்டேள். எனக்கு தேவையானதை எல்லாம் வாங்கிக்கொடுத்து, மூணு வேலைக்கும் வக்கனையா சாப்பாடு போட்டு என்னை ஒரு சிறைவாசி போல உங்க கட்டுப்பாட்டுல வச்சிருக்கேள்.

உங்ககூட இருக்க எனக்கு விருப்பமா இல்லையா எதுவும் என்னை கேக்கலையே நீங்க. அப்புறம் எப்டி நீங்க எனக்காக பண்றது எல்லாம் என் கண்ணுக்கு தெரியும்.

அப்டி தெரிஞ்சாலும் அதுக்கு மதிப்பிருக்கா?

நிம்மதியான ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான வாழ்க்கைய உங்களால எனக்கு கொடுக்க முடியுமா?

முடியாது.. ஏன்னா உங்களுக்கு உங்களோட சுயநலம் மட்டும் தான் பெருசு. என்னோட உணர்வுகளையெல்லாம் புரிஞ்சிக்க முடியாது. அந்த அளவுக்கு ரத்தவெறி பிடிச்சி இருக்கீங்க..

பணத்துக்காக கட்டினவளையே கொல்லுவேன்னு சொன்ன நீங்க, நாளைக்கே பணம் தரேன் உன் ஆத்துக்காரிய என் கூட அனுப்பி வைனு எவனாவது கேட்டா கூசாம கூட்டிக்கொடுக்கவும் செய்வீங்க.."

அவள் கடைசி வாக்கியத்தை சொல்லும் போதே இரும்பால் அடித்ததை போல் அவள் கன்னம் பஞ்சி பஞ்சாக சிதறி இருக்க வேண்டும். அந்த அளவுக்கு கோவத்தின் உச்சத்தில் காற்றைக்கிழிக்கும் வேகத்துடன் நரம்பு புடைத்த கரத்தை அவள் கன்னம் உரச ஓங்கி இருந்தவன், தாடை இறுகி அவளை பார்த்த பார்வையில் ரத்தம் உறைந்து நடுநடுங்கி விட்டாள்.

"யார்கிட்டயும் காட்டாத பொறுமைய உன்கிட்ட மட்டும் காட்றேன்னா. உன்ன எனக்கு பிடிக்கும் அந்த ஒரே காரணத்துக்காக மட்டும் தான். அதுக்காக என்ன வேணும்னாலும் நீ என்கிட்ட பேசிடலாம்னு அர்த்தம் இல்ல.

எந்த ஒரு காரணத்துக்காகவும் என் கோவம் உன்ன எந்த விதத்துலயும் கஷ்டப்படுத்திடக் கூடாதுனு ரொம்பவே அடங்கி போறேன். இன்னொரு தடவை இப்டி ஏடாகூடமா பேசின.. யோசிக்கவே மாட்டேன் கொன்னு புதச்சிடுவேன்"

ஆத்திரம் தீராமல் பற்களை கடித்தவன் எப்போதோ அவளின் கொத்துமுடியை பற்றி இருந்ததில், முகத்தை மூடி பயத்தில் ஒடுங்கி போய் நடுங்கிக் கொண்டிருந்த குழலி அந்நிலையிலும் அவன் அழுத்தமாக தன் கூந்தலை பற்றாமல் வார்த்தையிலும் முகத்திலும் மட்டுமே கடுமையை காட்டியதை நன்கு உணரவே செய்தாள்.

"என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு குழலி. சோதிச்சி பாத்த பஸ்பமாகிடுவ. என்ன அனுசரிச்சு என்கூட அட்ஜஸ்ட் பண்ணி வாழு டி, அதை விட்டு ஓவரா பேசின.." அவள் தலை முடியை விடுத்து விரல் நீட்டி எச்சரிக்கை விடுத்தவன் வேகமாக எழுந்து மது பாட்டிலோடு பால்கனி சென்றுவிட்டான்.

போகும் அவனையே கண்ணீரோடு பார்த்துக்கொண்டிருந்த குழலிக்கு நெஞ்சில் பாரம் குடிகொண்டது.

விளங்க முடியாத புதிராகவே தோன்றினான் ருத்ரன். எப்போது நன்றாக பேசுவான், எப்போது சிரிப்பான் என்று எதுவும் கணிக்க முடியாது. அவனாக பேசினால் அவளிடம் நெருங்கினால் தான் உண்டு. மற்ற நேரங்களில் ஏதோ யோசனையில் நெற்றி சுருங்கி எங்கோ வெறிப்பான், அவளை தீண்டாமல் படுத்து உறங்கிவிடுவான்.

அப்பாடா உறங்கிவிட்டான் என்று அவள் நிம்மதி பெருமூச்சு விட்டு தானும் உறங்கிப் போனால், காலையில் கண் விழிக்கும் போது அவள் உதடுகள் அவன் வசம் சிக்குண்டு கடிபட்டு இருப்பதை கண்டு ஆரம்பத்தில் ஒவ்வொரு முறையும் அதிர்ச்சி அடைந்து ஆர்ப்பாட்டம் செய்தவள், பிறகு பழகி போனதை போன்ற சலிப்பு வந்துவிட்டது.

இடைவிடாத முத்தங்களுக்கு மட்டும் இடைவெளியே இல்லை. மென் முத்தம், கடி முத்தம், வதை முத்தம், சுக முத்தம், எச்சில் முத்தம், போதை முத்தம், தாப முத்தம் என முத்தங்களில் எத்தனை வகை உண்டோ அத்தனையும் அந்த பாவப்பட்ட குட்டி மென்னிதழை முற்றுகையிட்டு ஒவ்வொரு நாளும் கற்றுகொண்டிருக்கிறான் சலிக்காது.

முத்தம் இல்லாமல் பித்து கொண்ட ஆணை கண்டு உள்ளம் கலங்கித் துடிப்பது அவள் தான். என்ன விதமான காதல் இது.
என் உடல் வேண்டாம் உணர்வுகள் வேண்டாம், பொம்மை போல் அவனை பிரியாது இருந்தால் போதுமென நினைக்கிறான். நான் இருந்தால் போதும், எண்ணிலடங்கா உற்சாகமும் அமைதியும் அவன் முகத்தில் சூழ்ந்து இருக்கும்.

பார்க்க தான் முரடன் போல் காட்டுமேனியை கண்டபடி வளர்த்து வைத்திருக்கிறான். ஆனால் தன்னிடம் பேச்சிலும் முகத்திலும் கடுமை கொண்டாலும், சிறு அழுத்தத்தில் கூட தன்மேனியில் மென்மையை கடைபிடிப்பவனை சிறிது நாட்களாக தான் உன்னிப்பாக கவனிக்க தொடங்கினாள்.

வன்மையிலும் மென்மை உள்ளதை ஆணித்தரமாக கண்டுகொண்ட பின்தான், ஏதோ பெயர் அறியா மாற்றம் அவனுக்காக தன் மனதில் உண்டானதையும் உணர்ந்தாள். மனதில் உண்டான மாற்றமே அவனை அத்தனை முறை கணவன் என வாய்மொழியாக சொல்ல வைத்தது.

தன்னால் முடிந்தவரை, அவன் செய்து கொண்டிருக்கும் பாவத்தில் இருந்து அவனை விடுவிக்க நினைக்கிறாள். ஆனால் ருத்ரன் அதற்கு பிடிக்கொடுக்காமல் கோவம் கொள்வது எதிர்காலத்தை எண்ணி அச்சம் பரவுகிறதே மனதில்.

"தனது பெற்றோரிடமிருந்து கடத்தி வந்த ஒரு கொலைகாரனுக்காகவா இலகுறது என் மனம்?" அவளுக்குள்ளே அடிக்கடி கேட்டுக்கொள்ளும் கேள்வி தான் என்றாலும், ஏதோ சிறு நம்பிக்கை தோன்றியது நிச்சயம் ருத்ரன் தன் குடும்பத்தை ஒன்றும் செய்திருக்க மாட்டான் என்று.

ஆனால் கிருஷ்ணாவின் நிலை என்ன? அதை நினைக்கும் போது தான் உள்ளுக்குள் குழப்பமும் ருத்ரனை கண்டு அச்சமும் உண்டாகிறது.

நெஞ்சை நிறைத்த அவளின் பொன் தாலி, அடிக்கடி பாரம் குறைந்து கழுத்தில் இருந்து காணாமல் போவதை போன்ற பின்பம் தோன்றி, இதயத்தையே திடுக்கிட வைத்து உடல் முழுவதும் நடுங்கி வியர்வை ஆறாக பெருக்கெடுத்து, தானாக அருகில் படுத்திருக்கும் கணவன் பக்கம் திகிலுடன் பார்வை மேயும், அவனுக்கு என்னானதோ என்ற பதட்டத்துடன்.

பெண்மனம் கொண்ட இத்தகைய தீராத அவஸ்தையெல்லாம் அவனுக்கு புரியவா போகிறது?

இதோ முழு போத்திலையும் வான் நோக்கி வாயில் சரித்த ருத்ரன்,

"எத்தனை கொலை தெரியுமா டி.. ஒன்னு.. ரெண்டு.. மூணு.. அம்பது.. ம்ஹும்.. லிஸ்ட்டு பெருஸு.. அவ்வளவு கொலை என்னால கூட கத்தி துப்பாக்கி இல்லாம எவனையும் சாகடிக்க முடியாது டி..

ஆனா நீ ஒரே ஒரு வார்த்தையால இந்த ருத்ரனையே சிதச்சிட்ட.. என் இதயத்தை கூழாக்கிட்ட.. இந்த வார்த்தைய நேனு அவ்வளவு ஈஸியா விட்டுடுவேன்னு நினைக்காத, தண்டனை இருக்குஉஉ.. நேரம் வரும் போது தெரியும் இந்த ருத்ரன் யார்னு. அப்ப வருத்தப்படுவ டி.. ஆனா அதை பாக்க நான் இருக்க மாட்டேனே.."

மதுவின் அளவு அதிகரித்து நிலையில்லாமல் கத்திக்
கொண்டு காலி போத்திலை சுவற்றில் தூக்கி எறிந்து உடைத்து, அவள் பேசிய பேச்சிற்கு அந்த இடத்தையே ரணகளப்படுத்தி, அவளை நிலைக்குலைய வைத்துக் கொண்டிருக்கிறானே அரக்கன்.

அவன் பிதற்றுவதை எல்லாம் உள்ளே உறக்கம் இல்லாது மூலையில் அமர்ந்திருந்தவளின் செவியை எட்டி, கண்ணீரை சுரக்க செய்தது.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 28
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
New member
Messages
23
Reaction score
15
Points
3
ருத்ரன் நா இருக்க மாட்டேன்னு சொல்லும் போது romba கஷ்டமா இருக்கு sis pls அப்டி எதுவும் எழுதிராதீங்க 😔😔
 
Messages
46
Reaction score
37
Points
18
Pochu intha writer ji ruthran ah vachu etho perusa plan panniduchu.... Kandipa ruthran pinnadi etho periya twist iruku athu matum nalla theriuthu.... Perusa ethachum panni engala ala vachudathing ji....
 
Top