- Messages
- 304
- Reaction score
- 217
- Points
- 63
அத்தியாயம் - 3
யமுனாவின் கண்ணீர் கண்ணை விட்டு வற்றியதோ இல்லையோ உடலும் மனமும் மிகவும் சோர்ந்து, யாரென்றே தெரியாதவனிடம் கற்பை பறிகொடுத்து பாவியான விடயம் திலீப் அறிந்தால் தன்னை பற்றி என்ன நினைப்பான்? தன்னை நம்புவானா மாட்டானா என்ற கவலை வேறு அவளை கொலையாய் கொன்றது.
சரித்ரா சென்று cctv முதல் சிஸ்டத்தில் பதிவான பெயர் வரை அனைத்தையும் அலசி ஆராய்ந்து விட்டாள். ஆனால் பெரிதாக எந்த பதிலும் உருப்படியாக இல்லை, பெண் பெயரில் புக்கிங் செய்தது மற்றும் வந்தது ஒற்றை ஆண் என்பதை தவிர.
மற்றபடி வந்தவனின் முகம் கூட அறியாதவாறு மொத்த ஆதாரமும் அழிக்கப்பட்டிருக்க, கையை பிசைந்த நிலையில் அறைக்கு வந்த சரித்ராவின் பதட்டமான முகத்தை பார்த்தே ஓரளவு நடந்ததை கணித்த யமுனாவின் அழுகை மீண்டும் வலுபெற்று உடல் குலுங்க தேம்பி அழுதவளை சமாதானம் செய்ய முடியாமல் திணறினாள் சரித்ரா.
"எனக்கு என்ன சொல்றதுனே தெரியல இதழ், உனக்கு நடந்தது சாதாரண விஷயம் இல்ல தான், அதுக்காக அதையே நினைச்சி அழுதுட்டு இருந்தா எல்லாம் சரியாகிடுமா சொல்லு. கெட்டதுலயும் ஒரே ஒரு நல்லது என்னன்னா அங்க இருந்தது ஒரே ஒருத்தன் தான்" துண்டை எடுத்து அவள் கண்ணீரை துடைத்துபடி பெருமூச்சோடு கூறவும் நிமிர்ந்து பார்த்தாள் யமுனா.
"எப்படி சரித். வந்தவன் என்ன கும்பலா கெடுக்காம ஒருத்தன் தானே கெடுத்தான் அதுனால மறந்து பொறுத்துப் போடினு சொல்ல வரியா" தெறித்த விழிகள் எங்கோ வெறிக்கக் கேட்டவளை வேதனையாக தான் பார்க்க முடிந்தது.
"இதழ் இப்போதைக்கு இதை தவிர வேற வழி இல்ல டி. இதை கெட்ட கனவா நினைச்சி மறந்து தான் போகணும். வந்தவன் இவ்வளோ கிளவரா ஐடியா பண்ணி எல்லா எவிடென்ஸையும் அழிச்சிட்டு போய் இருக்கான்னா நிச்சயமா அவன் ஒரு பெரிய ஆளா தான் இருக்கனும். நம்ம போய் போலீஸ் கம்ளைண்ட் கொடுத்தாலும், அந்த கம்ளைண்ட் நம்ம பக்கம் திரும்பி போலீஸே நம்மகிட்ட மிஸ்யூஸ் பண்றதுக்கு கூட நிறைய வாய்ப்புகள் இருக்கு.
நம்மக்கிட்ட பெருசா பேமிலி பேக்ரவுண்டு இல்ல. இவன் தான் கெடுத்தானு சொல்ல எந்த ஒரு ஆதரமும் இல்ல. அட்லீஸ்ட் ஆள் யாருனு தெரிஞ்சாலாவது வேற எந்த வழிலயாவது அவனை பிடிக்க முடியுமானு பாக்கலாம். ஆனா இப்ப நிலைமையே வேற மாதிரி இருக்கு டி. வயசு பொண்ணுங்க நாம வயித்துப் பொழப்புக்காக பஞ்சம் பிழைக்க ஊர் விட்டு ஊர் வந்து தங்கி இருக்கோம். மேல மேல அசிங்கப்பட்டு இன்னும் நாலு பேர் கை நம்ம மேல படறத விட இந்த கசப்பான விஷயத்தை பல்லக் கடிச்சிட்டு மறந்து போறது பெட்டர். சொல்ல வரற்த புரிஞ்சிகிட்டு நல்லா யோசி இதழ். உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னா இதை உன் லவ்வர்கிட்ட இருந்து மறைக்கிறது கூட தப்பே இல்ல"
அதுவரை சரித்ரா சொன்ன விடயத்தை பற்றி யோசனையோடு இருந்தவள் கடைசி வார்த்தையில் அதிர்ந்து போய் அவளை பார்த்தாள்.
"என்ன சரித் சொல்ற இவ்வளோ பெரிய விஷயத்தை எப்படி நான் திலீப்கிட்ட இருந்து மறைக்க முடியும்" உதடுகள் இரண்டும் நடுங்கிப் போனது.
"பின்ன என்ன இதழ். நீ உன் வீட்ட விட்டு அவமானப்பட்டு வெளிய வந்தது யாருக்காக திலீப்க்காக தானே. நாளைக்கு அவனே உண்மை தெரிஞ்சி உன்னை ஏத்துக்கிட்டா நல்லது தான் ஆனா சரிதான் போடின்னு உன்னை நம்பாம தூக்கி எறிஞ்சிட்டு போனா நீ தாங்குவியா இதழ்" சரித்ரா அப்படி கேட்டதும் பதில் சொல்லத் தெரியாமல் நெஞ்சம் விம்ம தடுமாறி திணறினாள் யமுனா.
"அதுக்காக ஒருத்தன் என் சுயநினைவு இல்லாம என்ன கெடுத்து நாசம் பண்ணத அவங்கிட்ட இருந்து மறைக்க சொல்றியா சரித்"
"அதான் நீயே சொல்லிட்டியே உன் சுயநினைவு இல்லாம தான் கெடுத்தான்னு, அதே போல நீ கண் விழிச்சி கண்ட காட்சிய உன் மைண்ட்ல இருந்து மொத்தமா எரேஸ் பண்ணிட்டு உன்னோட எதிர்காலத்தை பத்தின நினைவுகள மட்டும் நினைச்சி மூவ்ஆன் பண்ணு இதழ்" திட்டவட்டமாக சரித்ரா சொல்லிட, உயிர்ப்பின்றி பொம்மையாக தலையாட்டியவளின் தேகம் மொத்தமும் தீயிலிட்டு கருகுவதை போன்ற ரணத்தையும் ஒருவன் தன் தேகம் தொட்டான் என்ற அருவருப்பையும் சேர்ந்தே கொடுத்தது.
சரித்ரா என்னதான் யமுனாக்கு ஆறுதல் கூறினாலும் உள்ளுக்குள் பல பின்விளைவுகளை எண்ணி மறுகியது அவள் மட்டுமே அறிவாள்.
எங்கே அவளை கெடுத்தவன் வீடியோ ஃபோட்டோ எதுவும் எடுத்து வைத்து பின்னாளில் மிரட்டி பிரச்சனை செய்வானோ! ஒருவேளை யமுனா அணைத்தும் மறந்து அவளின் காதலனை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழும் போது பூதாகரமாக வந்து நிற்பானோ! அல்லது இவ்வளவு தெளிவாக பிளான் போட்டு அவளை கெடுத்தவன் துபாயில் இருக்கும் திலீப்க்கு இதை பற்றி தெரியப்படுத்தி விடுவானோ!
இப்படி பல சிந்தனைகள் அவள் மூளையை குடைந்தாலும் எதையும் வெளியே சொல்லி அவளை அச்சுறுத்த நினைக்காதவள் இரவு டியூட்டிக்காக கிளம்பும் முன்னவே, அழுது அழுது முகம் சிவந்த நிலையில் விரக்தியாக எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளை கட்டாயமாக சிறிது உண்ண வைத்தாள்.
ஆளில்லாத போது எதுவும் விபரீத முடிவு எடுத்து விடக் கூடாது என்றே பாலில் தூக்க மாத்திரையை கலக்கிக் கொடுத்து அவள் உறங்கும் வரை உடன் இருந்து விட்டு சென்றாள்.
சரித்ரா எண்ணியது போலவே நினைக்க முடியாத அளவுக்கு கடுஞ்சூறாவளி ஒன்று உருவாகி யமுனாவின் வாழ்க்கையை புரட்டிப் போட காத்திருப்பதை அறியாமல் குழப்பத்தில் உழன்றாள்.
** ** **
"ஸ்டீஃபன்.." யுகனின் கம்பீர அழைப்பில், "சார்.." என அடுத்த நொடி அவன் முன்னால் இருந்தான்.
"லாஸ்ட் டைம் இந்தியாக்கு எதுக்கு போனோம்?" எடுத்ததும் காட்டமாக கேட்ட கேள்வியில் கைகால் உதறினான் ஸ்டீஃபன்.
"இந்தியால வாங்கி இருக்க லாண்ட்ஸ்ல புது பேங்க் பிராஞ்சஸ் கட்ட பூமி பூஜை போட போனோம் சார்" அதை சொல்வதற்குள் வியர்த்து விறுவிறுத்துப் போனான்.
"ம்.. குட்.. பூஜை போட்டு எவ்வளோ நாள் ஆச்சி?" நீல நிற ருத்ரவிழிகள் கோரமாக உருள அடுத்தக் கேள்வி.
"ஒ... ஒன் மந்த் இருக்கும் சார்" உதட்டை தாண்டி சத்தம் வெளிவர மறுத்தது அவனுக்கு.
"ஒன் மந்த் வரைக்கும் அங்க எந்த ஒரு வேலையும் நடக்கல ஆனா இன்ஜினியர்ஸ் சேலரி மட்டுமே ஃபைவ் க்ரோர் தாண்டி இருக்கே எப்படி? நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சி சேத்த பணத்த எவனுக்கு தூக்கி குடுத்த.. உன் அப்பன் வீட்டு பணமா அது?" மேஜையில் இருந்த ஃபைலை தூக்கி ஆங்காரமாக அவன் முகத்திலேயே விட்டெறிந்தான் யுகன் ஷிவேஷ்.
கீழே விழுந்த ஃபைலை எடுத்து புரட்டிப் பார்த்த ஸ்டீஃபன் அதிர்ந்து போக, "சார் இந்தியால நடக்குற வேலையெல்லாம் பொறுப்பா கவனிக்க நம்ம மைக்கில்கிட்ட சொல்லி இருந்தேன். என்கிட்ட நல்லா மண்டைய மண்டைய ஆட்டி வாக்குறுதி கொடுத்துட்டு, இப்படி அவன் கவனக்குறைவா இருந்து காசையெல்லாம் கரியாக்குவான்னு நினைச்சி கூட பாக்கல சார்."
நம்ப வைத்து பழி வாங்கிய மைக்கில் மட்டும் கையில் கிடைத்தால் அடித்தே அவன் மண்டையை பிளக்கும் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு தன்மையாக தன்னிலை விளக்கம் கொடுக்க, யுகன் அவன் சொல்வதை கேட்க செவிசாய்க்க வேண்டுமே!
"யூஸ்லெஸ் இர்ரெஸ்பான்ஸிபில் இடியட். நான் உன்கிட்ட அந்த பொறுப்பை ஒப்படைச்சா நீ உன் இஷ்டத்துக்கு கண்டவங்கிட்டயும் வேலைய கைமாத்தி விட்டு காரணமா சொல்ற..." மின்னல் வேகத்தில் யுகனின் கரம் ஸ்டீஃபனின் கன்னங்களை பரிதாபமாக பதம் பார்த்து இருந்தது.
வெள்ளைத் தோள்காரன் ரத்தம் கசியும் கன்னத்தில் வலி பொறுக்க முடியாமல் தலை கிறுக்கிறுத்து சுருண்டு விழுந்தான்.
அதை எதையும் கண்டுகொள்ளாத யுகன் ஷிவேஷ்,
"இப்ப வேலை பாக்குற வர்க்கர்ஸ் எல்லாரையும் வேலைய விட்டு உடனடியா தூக்கு, 100% நம்பிக்கையான ஆட்களை மட்டும் வேலைய பாக்க சொல்லு. இன்ஜினியர்ஸ் எல்லாம் டாப் குவாலிஃபைடா செலக்ட் பண்ணு. இனிமே எந்த ஒரு தப்பும் நடக்காம ஸ்ட்ராங்கா பில்டிங் கட்டி முடிக்கணும்னு இன்ஜினியர்ஸ் எல்லார்கிட்டயும் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிடு, சரியா இன்னும் ஒன்எயர் தான் டைம் அதுக்குள்ள எல்லா பில்டிங்கும் பிராப்பரா கம்ப்ளீட் ஆகி இருக்கனும் காட் இட்."
மளமளவென கட்டளையை பிறப்பிக்க, தட்டுத்தடுமாறி எழுந்த ஸ்டீஃபன் அனைத்திற்கும் "ஓகே சார்" என்றவன் காலம் கடத்தாமல் உடனடியாக யுகன் சொன்ன அனைத்தையும் ஒவ்வொன்றாக செய்யத் தொடங்கி இருந்தான்.
முன்பே சொன்னதை போல், புதிய கட்டிடங்களை பிரமாண்டமாக எழுப்பி புதிய வங்கிகளை இந்தியாவில் தொடங்க தான் இத்தனை ஆர்ப்பாட்டங்களும். அதுவும் அவன் அன்னை ஆன்ரோகல்ஸ்க்கு போட்டியாக இவன் முதலில் வங்கியை திறக்க வேண்டும் என்பதில் மட்டும் வெறியாக இருக்கிறான் ஷிவேஷ்.
** ** **
"ஹேய் சிவ் பேபி. எதுக்காக உங்க பையன் எனக்கு போட்டியா ஒவ்வொரு விஷயத்தையும் செஞ்சிட்டு இருக்கான். இந்தியாவுல இப்ப அவன் பேங்க் ஓபன் பண்ணி என்ன பண்ண போறான், அதான் அவனுக்கு இங்கேயே கொல்லை லாபம் வருதே அதை வச்சி பிழைச்சிக்க தெரியாதா. ஏற்கனவே சுத்தி சுத்தி என்ன டவுன் பண்றதுலேயே குறியா இருக்கான் இதுல இந்தியாலயும் கால் வச்சா என்னோட ஒட்டுமொத்த சாம்ராஜ்யமும் இருந்த இடம் தெரியாம போய்டும்"
கையில் பாதி புகைத்த சிகரெட் மறு கையில் விலை உயர்ந்த மது கோப்பை, ஆள் பாதி ஆடை பாதி என 55 வயதிலும் கிளாமர்க்கு குறைவில்லாத ஆடை என வெள்ளைக்காரி ஆன்ரோகல்ஸ் படு கவர்ச்சியாக அமர்ந்து பெற்ற மகனைப் பற்றி குறைப்பட்டுக் கொண்டிருக்க, அவள் கணவனான சிவராமபூபதி ஆன்ரோ சொல்வதை கேட்டபடி மற்றொரு இருக்கையில் அமர்ந்து தானும் மது அருந்திக் கொண்டிருந்தார்.
"நான் என்ன பண்றது ஆன்ரோ. உன் மகனுக்கு உன்னை மாதிரியே பிடிவாத குணம் ஜாஸ்தி. நீ தேவை இல்லாம அவங்கிட்ட சவால் விட போய் தான் உனக்கெதிரா பிஸ்னஸ் தொடங்கினதும் இல்லாம ஒவ்வொரு முறையும் உன்னை வீழ்ச்சி அடைய வைக்கிறான். உன்னால நான் நிம்மதியா சந்தோஷமா பணக்கார வாழ்க்கைய அனுபவிக்கலாம்னு நாடு விட்டு நாடு ஓடி வந்து உன்னை கல்யாணம் பண்ணா, கடைசி காலத்துல நீ பெத்த மகனாலே பிச்சை எடுக்குற நிலைமை வந்திடும் போல"
பூபதி அவர் தனியாக தன் குறையை படிக்க, ஆன்ரோ முகமோ கோபத்தை பிரதிபலித்தது.
"என்னோட "பேங்க் ஆப் பினான்சியல் அமெரிக்கா" என் தாத்தா காலத்துல இருந்து முதல் இடத்துல நிலைச்சி அமோகமா பேர் போன பேங்க் பிசினஸ். என் கைக்கு வந்த பிறகும் பக்காவா ரன் பண்ணேன். ஆனா இந்த ஷிவேஷ் எப்போ தனியா பேங்க் தொடங்கினானோ அப்பவே என்னோட எல்லா பேரும் புகழும் பின்னுக்கு போய்டுச்சி.
பெத்த மகனா இருந்தாலும் என்னோட தோல்விய எப்பவும் யாருக்காகவும் விட்டுக் கொடுத்து என்னால ஒத்துக்கவே முடியாது. இங்க பாருங்க சிவ், நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது ஷிவேஷ் யூஎஸ் தாண்டி இந்தியாவுல அவன் பிஸ்னஸ்ஸ ஸ்டார்ட் பண்ணவே கூடாது. அங்க எந்த வேலையும் நடக்கக் கூடாது. முடிஞ்சா யூஎஸ் பிசினஸ்லயும் சிக்கலை உருவாக்குங்க"
ஆன்ரோவின் கடுமையான பேச்சில் வழக்கம் போல் தலையாட்டிவிட்டு, ஷிவேஷ்க்கு என்னென்ன பிரச்சனைகளை உருவாக்க முடியுமோ அனைத்தையும் ஒவொன்றாக களம் இறக்க தயாரானார்
** ** **
"ஹெலோ ஹெலோ.. கேக்குதா இதழி.. என்ன பதிலே பேச மாட்ற. முன்னாடி மாதிரி இல்ல டி நீ ரொம்பவே சைலன்ட்டா மாறிட்ட. வேலை ஜாஸ்தியா இதழி நீ நல்லா தானே இருக்க" அந்த பக்கம் திலீப் அக்கறையாக போனில் பேசிக்கொண்டிருக்க,
"ஹ.ஹான்.. அ.ஐயம் ஃபைன். நான் எப்பவும் போல தான் இருக்கேன், நீ எப்படி இருக்க திலீப் எப்ப ஊருக்கு வருவ" முன்பு போல் காதலனிடம் சகஜமாய் பேச முடியாமல் குற்றவுணர்ச்சியில் குறுகுறுத்துப் போனாள் யமுனா.
"சீக்கிரம் வரேன் இதழி. ஊருக்கு வந்ததும் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி சொல்லணும். அந்த விஷயத்தை நீ கேள்வி பட்டதும் உன்னோட ரியாக்ஷ்ன் எப்படி இருக்கும்னு நான் லைவ்வா நேர்ல பாக்கணும்" ஊடகமாய் பேசி புன்னகைக்க, "ஒருவேளை தங்களின் திருமண விடயத்தைப் பற்றி சர்ப்ரைஸாக பேசப் போகிறானோ" என்று நினைக்கும் போது ஒருபக்கம் காதல் கைகூடப் போவதை எண்ணி மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபக்கம் இத்தனை பெரிய உண்மையை மறைக்கிறோமே என்ற எண்ணமே அவளை கூரு போட்டது.
"ஓகே திலீப் நான் வைக்கிறேன், வேலை இருக்கு" என்று அழைப்பை துண்டித்தவள் தன் நிலை எண்ணி தானாக வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு வேலையை கவனிக்க சென்றவளுக்கு அடுத்தடுத்த பேரதிர்ச்சிகள் தயாராக இருந்தன.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 3
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.