• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
170
Reaction score
146
Points
43
அத்தியாயம் 30

பேச போகிறேன் என்று அரைமணி நேரம் ஓடி விட்டது. கொத்தித் தின்ன தூண்டும் குருவிக் குஞ்சி வாயை சத்தம் வராமல் திறப்பதும் பின்பு மூடுவதுமாய் ஏதோ தவிப்பாக அமர்ந்திருந்தவளை ஆழ்ந்து பார்த்தான் ருத்ரங்கன்.

"இப்ப பேசப்போறியா இல்ல எழுந்து போகவா.." மேலும் சிறிது நேரம் பொறுத்துப் பார்த்து பொறுமை இழந்து அவனே கத்திவிட்டான்.

அதில் நெஞ்சி திடுகிட்டு அவனை முறைத்தவாய், ஒருவாரு மனதை தேற்றிக்கொண்டு எப்படியோ பாகுமிட்டாய் உதட்டை பிரித்து முத்து வார்த்தைகளை கொட்டத் துவங்கி இருந்தாள் குழலி.

"இங்க பாருங்கோ நீங்க பண்றது எதுவும் சரியில்ல. உன்னை பிடிக்கும் அதுனால உன் கல்யாணத்தை நிறுத்தி தாலி கட்டி தூக்கிண்டு வந்துட்டேன்னு நீங்க ஈஸியா சொல்லலாம். ஆனா அதோட பின்விளைவுகளை பற்றி கொஞ்சமாவது நினைச்சி பாத்திருக்கேளா?

இதுனால நேக்கும் என் குடும்பத்துக்கும் எவ்வளவு மனஉளைச்சல் ஏற்பட்டு இருக்கும். சரி என்னையும் என் குடும்பத்தையும் விடுங்கோ, இதுநாள் வரைக்கும் உங்களை பத்தியாவது என்னைக்காவது யோசிச்சிருக்கேளா..

கண்டிப்பா மாட்டேள்.. அப்டி யோசிக்கிறவாளா இருந்திருந்தா உங்க நெஞ்சில பயம் இருக்கும். ஐயோ நம்ம தப்பு பன்றோமே நாளைக்கு நம்மள தேடி போலீஸ் கேஸ்னு ஆனா நம்ம வாழ்க்கை என்னாகும். நம்மள நம்பி வரவ வாழ்க்கை என்னாகும்னு உங்க எதிர்காலத்தை பற்றிய பயமும் சிந்தனையும் இருந்திருக்கும்.

கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் நீங்க யாரோ நான் யாரோ. நீங்க என்ன பண்ணிட்ருந்தாலும் நேக்கு எந்த கவலையும் இருந்திருக்காது. ஆனா இனிமே அப்டி என்னால இருக்க முடியாதே..

உங்க வாழ்க்கைக்குள்ள தான் என் வாழ்க்கையும் பிணைஞ்சி இருக்கு, கட்டாயமா பிணைக்க வச்சுட்டேளே.."

எனும் போதே குரல் நடுங்கி கண்ணீரும் அவள் கன்னம் தாண்டிட, கல்லாக சமைந்து சலனமற்று பார்த்தானே தவிர்த்து வார்த்தைக்கு கூட அவளுக்கு ஆறுதல் கூறவில்லை ருத்ரன்.

"எனக்கு கணவரா வர போறவா எப்டிலாம் இருக்கணும், எங்கிட்ட என்ன மாதிரி எல்லாம் நடந்துக்கனும்னு நிறைய நிறைய கற்பனைகளை வளர்த்து வச்சிருந்தேன் தெரியுமா. ஆனா நீங்கோ என் கற்பனைகளுக்கு முற்றிலுமான அப்பாற்பட்டவர்.

உங்களுக்கு தேவைப்படும் நேரத்துல எல்லாம் கட்டிப் பிடிப்பேள், முத்தம் கொடுப்பேள். இன்னும் ஏதேதோ செய்து என் மனசை நோகடிச்சி இருக்கேள். சரி போகுது தாலி கட்டின பாவத்துக்கு அதையெல்லாம் கூட ஒருவகைல பொறுத்துகிட்டு போய்டலாம்.

ஆனா நீங்க செய்ற கொலைகளை எப்டி பொறுத்துக்க முடியும். ஒரு உயிரை சாகடிக்கிற உரிமைய உங்களுக்கு யார் கொடுத்தது.. அவா குடும்பம் விடற கண்ணீரும் சாபமும் உங்களையும் உங்களை சார்ந்த என்னையும் தானே சாரும்.

இப்ப வேணும்னா உங்களை நேக்கு பிடிக்காமல் இருக்கலாம், பிற்காலத்தில ஏதோ ஒரு சந்தர்ப்பதுல உங்கள நேக்கு பிடிச்சி மனசார ஏற்றுகொள்ளும் போது நமக்கு குழந்தை வந்தா, அந்த குழந்தைக்கும் உங்க பாவம் சேராதா..

இதோ நான் ஒரு வார்த்தை உங்களை தப்பா சொல்லிட்டேன்னு அந்த கோபத்துல என்னை விட்டு விலகி இருக்கேளே.. நீங்க ஒவ்வொரு முறையும் என்கிட்ட நடந்துக்குற முறையாகட்டும், நீங்க பண்ற தவறுகளாவட்டம் இதையெல்லாம் நினைச்சி நான் எப்டி ரணமா தவிச்சு போவேன்னு ஒருமுறை கூடவா உங்களுக்கு தோணலை"

மனதில் உள்ள வலிகளையெல்லாம் கண்ணீரோடு அவனிடம் கொட்ட, எந்த ஒரு அசைவும் இல்லாத இடித்து வைத்த புளி போல் அமர்ந்து அதே பார்வையை தான் அவள் மீது வீசினான்.

"இப்ப கூட உங்க மனசு கரையலைல ஒரு ஆறுதலுக்காக கூட, உனக்காகவாது நான் என்னை மாத்திக்கிறேன் டி குயிலுஊ..னு ஒரு வார்த்தையாவது உங்க வாயில இருந்து வருதா.."

அவனது உணர்வுகள் தொலைத்த பார்வை கண்டு கொதித்துப் போய் மின்னல் வேகத்தில் பாய்ந்து அவன் சட்டை இல்லாத கட்டுமேனியில் நீள் சுருளாக கருகருவென வளர்ந்திருந்த நெஞ்சி முடியை பற்றி ஆவேசமாக உளுக்கி எடுக்க, அப்போதும் பார்வை மாறாமல் அசையாமல் இருப்பவனை கண்டு ஆத்திரம் கூடியது அவளுக்கு.

"யோவ்.. மாக்கானா நீ. ஏதாவது வாயத் திறந்து தான் பதில் சொல்லேன். ஜடம் மாறி உக்காந்திருந்தா என்ன அர்த்தம்ம்.."

குரங்கு குட்டியாக அவன் மடியிலேயே தாவி அடர்த்தியான கழுத்து வரை வைத்திருந்த அவன் தலை முடியயை பிடித்து ஆட்டியவளின் கோபத்தை கண்டு அரக்கனுக்குள்ளும் சிரிப்பு மூட்டியது. ஆனாலும் வெளியே விரைத்த முகம்தான் அவளின் மரியாதை குறைந்த வார்த்தைகளில்.

"ஏய்ய்.. லூசு என்ன அறைஞ்சிடுவேன் மரியாதையா இறங்கி போடி.." பம்பரம் போல் கரகரவென தலையை ஆட்டியதில் உலகமே சுற்றுவதை போல் உணர்ந்தவன், அவள் இடையில் கை நுழைத்து அவளை தள்ள முயன்றவனின் முதுகை இருகால்களாலும் இறுக்கமாக கொக்கிப் போட்டுக் கொண்டாள், அவளையும் அறியாத பலத்த கோபத்தில்.

"ஆமாய்யா நான் லூசுதான்.. நீ ஒரு நரகாசுரன்னு தெரிஞ்சும் உனக்காக போய் கவலை படறேன் பாத்தியா நான் லூசுதான். முடிவா இப்ப என்ன தான் சொல்ல வரீங்க.." மூக்கை உறிஞ்சியபடி கண்ணை புறங்கையால் துடைத்துக்கொண்டவள் உணரவே இல்லை அவனது இரும்பு தொடைகளில் அவள் எஜமானியாக அமர்ந்திருப்பதை.

அரக்கனே ஆனாலும் மனைவியிடம் அடிமையாக தான் வேண்டும். அரக்கனும் மனைவியானவளை நேசிக்கும் பொருட்டு.

ஆரம்பத்தில் எல்லாம் அவனது கூட்டாளிகள் பேசுவதை கேட்டிருக்கிறான். "மனைவியை ஆரம்பத்திலேயே அடக்கி வைக்க வேண்டும், அடித்து மிரட்டி அடிமை படுத்த வேண்டும் இல்லையேல் கைமீறி போனால் மனைவி நம்மை அடிமை படுத்தி விடுவாள். அது ஆண்களுக்கு அவமானம்"

அப்படி இப்படி குடிபோதையில் உளறுவது அடிக்கடி நடக்கும். ஒரு முறை காரின் பின்னே அவன் ஆள் ஒருவன் மற்றொரு ஆளுக்கு, தன்னை பிடிக்காத மனைவியை கட்டாயமாக தன்வசப்படுத்துவது எப்படி என்றெல்லாம் அறிவுரை வழங்கியதை கூட எதர்ச்சியாக கேட்டிருக்கிறான்.

அப்போதெல்லாம் குழலியை தன்னோடு தூக்கி வந்து வைத்திருந்தால் கூட அவளையும் அப்படித்தான் நடத்த வேண்டும் என்று மனதில் எண்ணி திட்டம் தீட்டி வைத்திருந்தவன், குழலியின் பால் முகம் பார்க்க பார்க்க அவளை அதட்டிப்பேசக் கூட கல்நெஞ்சம் இடம் கொடுக்காமல், இருக்கும் வரை அவளின் அடிமையாக கூட வாழ்ந்துவிட வேண்டும் என்ற அடங்காத எண்ணம் தோன்றியதை கண்டு அவனே திடுக்கிட்டு இருக்கிறான் பலமுறை.

அதற்காக தன் இலக்கை விட்டுக்கொடுத்து அவளுக்கு மட்டுமே அடிமையாக இருக்க முடியுமா அவனால்.

அவன் பாதை முற்றிலும் விஷ முட்கள் கொண்ட கரடுமுரடு பாதை. அதில் அவன் மட்டுமே பயணமாக முடியுமே தவிர தன் ஈரம் சுரக்காத கல்வெட்டு நெஞ்சில் புதைத்து வைத்திருப்பவளுக்கு எவ்வித சிறிய ஆபத்தையும் நெருங்க விடமாட்டான்.

"நேனு என்ன சொல்லணும்னு எதிர்பாக்குற" இயந்திரத்தனமாக கேட்டவன், குழலியின் சேட்டைகளை கோபம் கொள்ளாமல் நிதானமாக அனுபவித்தான் அவளது நெருக்கத்தையும் சேர்த்தே.

"இது எல்லாத்தையும் விட்டுடுங்கோ. செஞ்ச தப்புக்கெல்லாம் நீங்களே ஸ்டேஷன் போய்ட்டு அப்ரூவர் ஆகுங்கோ, என் அண்ணாகிட்ட உங்களை பத்தி எல்லாத்தையும் சொல்றேன், அவா எனக்காக கண்டிப்பா உங்கபக்கம் நிப்பா. குறைச்ச தண்டனைய மட்டுமே கிடைக்கிற மாதிரி பண்ணுவா. எது எப்டியோ நீங்க தான் என் ஆத்துக்காரர் உங்களுக்காக எத்தனை வருஷம் வேணாலும் காத்திருக்கேன். எனக்கே எனக்காக மட்டும் நல்லவாளா திருந்தி திரும்ப வாங்கோ. நாம எங்கேயாவது போய் ஷேமமா வாழலாம்"

கண்ணீர் நிற்காமல் பெருக்கெடுக்க, எதிர்காலம் எண்ணி கட்டியவனுக்காக மனம் மாறிய பேதை அவன் கரத்தை மென்மையாக பற்றி நெஞ்சோடு அணைத்துக்கொண்டவளாய், கொண்டவன் மனதையும் தனக்காக மாற்றி விட வேண்டும் என்ற தவிப்போடு அவனுக்கு புரிய வைக்க நினைத்தாள்.

அதற்கு ருத்ரன் கட்டுப்பட வேண்டுமே!!

அவனது அலட்சிய தோரணையில் இதயம் நொறுங்கிப் போனாள் குழலி.

"ஏண்ணா.. என்னை நேசிச்சி தானே கட்டிக்கிட்டு தூங்கிண்டு வந்தேள் அப்போ எனக்காக மாற மாட்டேளா.." பரிதாபமாக உதடு துடித்தவளை உணர்வுகள் செத்த பார்வை பார்த்தவன் ஆழ்ந்த மூச்செடுத்தான்.

"நீ மட்டும் தான் பேச போறதா சொன்னதா நியாபகம்"

"நான் கேட்டதுக்கு இது பதில் இல்லை" கோபத்தில் மூக்கு சிவந்தாள் தேவதை.

"என்னால யாருக்காகவும் மாற முடியாது. நான் இதுதான் என்னை இப்டியே ஏத்துக்கிட்டு வாழுறதா இருந்தா வாழு, இல்லையா இத்தனை நாளும் அமைதியா இருந்ததை போல இன்னும் கொஞ்ச காலம் ஒரு மூலைல இரு. இதை தவிர்த்து என்னால வேற ஒன்னும் பண்ண முடியாது"

கேலியாக இதழ் வளைக்க, உறைந்த கண்ணீருடன் பார்த்தாள் அவனை.

"அப்போ கடைசி வரைக்கும் இந்த கத்தி துப்பாக்கிய தான் சுமக்கப் போறேள்.. இதுதான் உங்க முடிவா..?"

"ஆமா" என சட்டென வந்த பதிலில் இருதயம் தீயாய் எரிய விருட்டென அவனை விட்டு விலகி, கண்ணீரை துடைத்துக்கொண்டு கதவை நோக்கி விருவிருவென நடந்தவளின் கரத்தை ஒரே தாவில் பற்றி நிறுத்திட,

"மச்.. விடுங்கோ" அவனிடமிருந்து கரத்தை விலக்க முயன்றவளை ஆழமாக பார்த்தான் அவன்.

"எங்கே போறே" பிடித்த கரத்தை விடவில்லை அவன்.

"நான் எங்கே வேணாலும் போவேன் உங்களுக்கு என்ன. உங்கள மாதிரி ஒரு கொலைகார சுயநலவாதி கூட இருக்குறதுக்கு வேற ஆளை பாருங்கோ. முற்றும் துறந்த முனிவர் போல நீங்க பண்ற அராஜகத்தை எல்லாம் பொருத்திக்கிட்டு என்னால இங்க இருக்க முடியாது"

வெறுப்பாக சீறியவளை கண்கள் சுருக்கி தேகம் அசையாது பார்த்தான்.

"ஆனா என்னை மீறி உன்னால இந்த வீட்டை விட்டு போக முடியும்னு நினைக்கிறியா" கர்வமாய் அவன் உரும.

"அப்டி போய்ட்டா என்ன பண்ணுவேள்" அவன் கர்வத்தில் சினம் கொண்டாள் பாவை.

"உன்னை ஒன்னும் ஒன்னும் பண்ண மாட்டேன். ஆனா என்னைக்காவது ஒருநாள் நீயா என்னை தேடி வரும்போது உன்னால என்னை நெருங்கவே முடியாது"

தீர்க்கமாக சொன்ன ருத்ரனை கண்டு ஏலனமாக நகைத்தாள்.

"ஹா..ஹா.. குட் ஜோக்.. யாராவது நெருப்புனு தெரிஞ்சே அதுல குதிக்க நினைப்பாளா..

எந்த ஒரு நிலையிலும் ஒருத்தனுக்கு ஒருத்தி மட்டும் தான்னு என் ஆத்து பெரியவா சின்னதுல இருந்தே வேதம் ஓதி சொல்லிக் கொடுத்தே வளர்த்துட்டா. மனசுக்கு பிடிக்குதோ புடிக்கலையோ தாலின்னு ஒன்னு ஒரு பொண்ணு கழுத்துல ஏறிட்டா, கட்டாயமாக இருந்தாலும் கட்டினவனை அனுசரிச்சு வாழ மட்டுமே கத்துக்கொடுத்துட்டா.

அந்த ஒரு காரணத்துக்காக தான், நீங்க நல்லவாளோ கெட்டவாளோ உங்ககிட்ட பேசி புரியவச்சு, நானும் என் மனசை மாத்திக்கிட்டு வாழ முயற்சி பண்ணாலும்னு ஒரு நப்பாசைல உங்ககிட்ட இந்த அளவுக்கு இறங்கி வந்து பேசினேனே தவிர, உங்க மேல உள்ள ஆசையினால இல்ல.

அப்டி ஒரு ஆசை ஜென்மத்துக்கும் உங்கமேல நேக்கு தோணாது..

உங்கள மாதிரி ஒரு சேடிஸ்ட்ட பொறுத்து வாழ வேண்டிய அவசியமும் நேக்கு இல்லை"

கோபத்தில் துல்லி பற்களை கடித்தாள் வெறுப்பாக.

"அதெல்லாம் சரி இப்ப நீ எங்க போவ.." சலனமற்று கேட்டான் அவள் குடும்பத்தைப் பற்றிய செய்திகளை நன்கு அறிந்தவனாய். அதுவும் காலையில் தான் வெங்கட் கூட தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றான் பழைய வீட்டில் அழைத்து வந்து வைத்திருக்கும் தந்தையை பார்க்க.

அப்படி அவனே எதிர் வீட்டில் இருந்திருந்தாலும் குழலியை விட ருத்ரன் முடிவு செய்ய வேண்டுமே.

அவன் அப்படி கேட்டதில் நக்கலாக அவனை பார்த்த குழலி.

"நான் என்ன உங்கள மாதிரி யாரும் இல்லாத அனாதையா..

நேக்கு ஒன்னுன்னா கடைசி வரைக்கும் பாரம் இல்லாம என்னை ராணி போல தாங்க என் அண்ணா இருக்கா, எம்மேல உயிரையே வச்சிருக்க அம்மா அப்பானு நிறைய சொந்தங்கள் இருக்கு.

ஆனா உங்களுக்கு அடிச்சு போட்டா கூட கேக்க ஒரு நாதியும் இல்லை. உங்க அகம்பாவம் பிடிச்ச குணத்துக்கு கடைசி காலத்துல ஒருத்தர் கூட உங்களுக்காக இருக்க மாட்டா"

தானும் கர்வமாய் சொல்லி கோணல் சிரிப்போடு அவன் முகம் பார்க்க, கண்கள் இரண்டும் ரத்தமாய் சிவந்து இரும்பாக இறுகி இருந்தது அவன் முகம்.

தொடரும்.

உடல்நிலை சற்றே சரி இல்லாமல் போச்சுது drs. அதுனால தான் ரெகுலர் ud's கொடுக்க முடியாம போச்சி. இப்போ கொஞ்சம் ஓகே இனிமேல் தடை இல்லாமல் குயில் வந்திடும். படிச்சிட்டு தைரியமா கமெண்ட் பண்ணுங்க 😅
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 30
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top