• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
170
Reaction score
146
Points
43
அத்தியாயம் - 31

வீட்டை விட்டு போகிறேன் என்ற வீரமங்கை இப்போது ஒரு மூலையில் பீதியோடு நடுங்கியபடி அமர்ந்திருப்பதை பார்த்த ருத்ரன், ஏளனமாக சிரித்து விட்டு அங்கிருந்து நகர, குழலியின் கண்களில் இருந்து நிலையில்லாது கொட்டியது கண்ணீர் துளிகள்.

சற்று முன்வரை அவனை நோகடிக்க வேண்டும் என்றே வார்த்தைகளை சிதறவிட்டு கோபத்தில் திமிரிய குழலியின் கரத்தை விடாது பற்றி இருந்த ருத்ரன், சிவந்த விழி பார்வையால் அவளை கூர்மையாக பார்த்து பதில் பேசாது இருந்தவனுக்கு, அவள் பேச்சை எல்லாம் ஒரு பொருட்டாக கூட எண்ணவில்லை எனும் போது மனதை எப்படி பாதித்து இருக்கும்.

இறுகிய பாறையாய் தன் உணர்வுகளை வேண்டுமென்றே சாகடித்து வெறும் ரத்தக்கூடாக மட்டுமே வாழும் இதயம். அவனை சார்ந்தவற்றை அவள் எப்படி பேசினாலும் அவனுக்கு வலிக்கப் போவதில்லை. நடுவில் அவளையே அவளை வைத்து பேசாதவரை.

அனாதை என்று சொன்னாலும் அவனுக்கு வலிக்காது. கொலைகாரன் என்றாலும் அவனுக்கு உரைக்காது.

அது தெரியாத மங்கையும் அவனை காயப்படுத்திவிட்டதாக செருக்குடன் திமிரிக்கொண்டிருக்க, டப்.. என்ற துப்பாக்கி சுடும் சத்தத்தில் நெஞ்சிக்கூடு தூக்கிவாரி போட்டு அதிர்ந்து போனாள் குழலி.

பின்னால் ஒருவன் சரியாக நெற்றிப்பொட்டில் குண்டு பாய்ந்து மூளை சிதறி ரத்தவெல்லத்தில் இறந்து கிடைப்பதைக் கண்டு, ஆஆ.. என்ற அலறலுடன் பேரச்சத்தில் உறைந்து இதயம் நடுங்கிய குழலி, கொஞ்சமும் பயம் நீங்காது ருத்ரனின் முகம் காண, இதுவரை காணாத கொலை நடுங்க வைக்கும் தோரணையில் கோபத்தில் இறுகிய தாடை துடிக்க மறுக்கையில் துப்பாக்கிடன் வெறித்தனமாக நிற்பவனை கண்டு ஆடிப் போனாள்.

"கண்களில் அதீத பயத்துடன் தன்னையே மிரண்டு போய் பார்ப்பவளை கண்டுகொள்ளாதவன்,
"மதனுஉஉஉ.." என கத்திய கத்தில் இடி முழங்கியது போல் ஆட்டம் கண்டது அவ்வீடு.

அதுவரை வீட்டில் இல்லாது வெளியே சென்றிருந்த மதன் அப்போது தான் ஜீப்பை நிறுத்திவிட்டு உள்ளே வந்துகொண்டிருந்தவன் காதில், ருத்ரனின் ஆவேச குரல் கேட்டிட, தாமதிக்காது உடனே ஓடி வந்தான் மதன்.

"அண்ணையாஆஆ.." என பதட்டமாக வந்தவன் செத்து கிடைப்பைவனை கண்டு கண்கள் சுருக்கினான்.

"அண்ணையா இவனை தானே நாளைக்கு நம்ம சம்பவம் பண்ண நாள் குறிச்சது. ஆனா இக்கட எப்டி. அதுவும் நீ இருக்க இடம்னு தெரிஞ்சே தைரியமா வந்திருக்கான்" இப்போது பதட்டம் இல்லாமல் சாதாரணமாக அவன் கேட்டிட, குழலியின் நெஞ்சம் தான் திகைத்துப் போனது.

"ம்ம்.. அவனுக்கு நாளைக்கு செத்து போக புடிக்கலையாம் அதான் இன்னைக்கே என் கையாள சாக வந்துட்டான்"

"அண்ணையா.."

"டேய் முட்டாள்.. அவனுக்கு நான்தான் போட போறேன்னு தெரிஞ்சி, நான் அவனை போட போடறதுக்கு முன்னாடி அவன் என்னைய போட வந்திருக்கான். சீக்கிரம் அவனை தூக்கி போட்டு இடத்த சுத்தம் பண்ணு" எரிச்சலாக சொல்லிட, குழலியின் ஓங்கி ஒலித்த அழுகையில் மேலும் கடுப்பானான் ருத்ரன்.

"ஏய்ய்..இப்ப எதுக்கு அழற" ருத்ரனின் அதட்டலில் மென்தேகம் குலுங்கி அதிர்ந்து மேலும் அவள் அழுகை அதிகரித்து போனது.

"ஆஆஆ.. வாய மூடு டிஇஇ.. சும்மா கண்ணுல கண்ணீரை வச்சி கடுப்ப கிளப்பிக்கிட்டு.. ஆமா இதுக்கு முன்னாடி நீ என்ன சொல்லிட்டு இருந்த.."

ஓவர் டென்ஷனாகி அவன் கத்தியதில், இதயத் துடிப்பு எகிறிய நிலையில், சத்தமான விசும்பலுடன் அவனை ஏறிட்ட பார்வையில் அத்தனை பயம்.

"இப்புடுசூடு.. எனக்கு பிடிக்காத விஷயத்தை செய்றேன்னு ஓவரா துள்ளிக்கிட்டு இருந்தேன்னு வையி, உன்னைய கடைசி வரைக்கும் தாங்குறவன் எவ்ளோ பெரிய பிஸ்தாவா இருந்தாலும் சரி, பாக்குற இடத்துல நாய சுடற மாதிரி சுட்டு தூக்கிப் போட்டு போயிட்டே இருப்பேன்.

ஒழுங்கா போயி ஒரு மூலைல அடங்கி இரு. என் பொறுமைய சோதிக்க நினைச்ச, உரு தெரியாம சிதச்சிடுவேன். உன்ன ராணியா தாங்கப் போறவனை"

அழுத்தம் திருத்தமாக கர்ஜித்தவன், மிரண்ட மான்குட்டியாக நெஞ்சடைத்து நின்றவளை இழுத்து மெத்தையில் தள்ளிவிட்ட ருத்ரன், அவளின் கண்ணீர் தேங்கிய துடிக்கும் முகத்தை பார்த்தபடியே வெளியேறி இருந்தான்.

** ** **

முதல் நாள் இரவு வந்து சென்ற வெங்கட், மறுநாள் காலையிலும் காவேரியை பார்க்க ஆவலோடு வந்திருந்தவன், மீண்டும் அவள் மனதை சுக்கலாக உடைத்து விட்டு சென்றிருந்தானே!!

இனி ஒருபொழுதும் தனக்கு கிடைக்கவே கிடைக்காது என நினைத்திருந்த காதல், ஒற்றை இரவில் தன்கை சேர்ந்த மகிழ்ச்சியில், அவன் இட்டு சென்ற முத்தம் அடித்தொண்டை வரை மிட்டாயாய் தித்திக்க விடியவிடிய காதலன் நினைவில் உறங்காமல் புரண்டுகொண்டிருந்தாள் காவேரி.

சூரியனிடம் போட்டிப் போட்டு அதன் கதிர்கள் வரும் முன்பே வேகத்துடன் எழுந்த காவேரி வீட்டு வேலைகளை எல்லாம் பதமாக முடித்து, வியர்வையில் துளிர்ந்த உடலை குளிர்ந்த நீரால் சுத்தப்படுத்திக் கொண்டவளாய், அவளிடம் இருப்பதிலேயே நல்ல தாவணியை சுற்றிக்கொண்டு என்றுமில்லாத திருநாளாய் கண்ணாடியை பார்த்து பவுடர் பூசி பொட்டு வைத்த முகத்தை அடிக்கடி கண்டு நாணம் கொள்வதை ராஜேஸ்வரி பாட்டி யோசனையாக பார்த்தார்.

வயது பெண் வந்த நாளில் இருந்து ஏனோ தானோவென சுற்றிவிட்டு, திடீரென முகத்தில் தேஜஸ் கூடி தனியாக வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டால் என்ன அர்த்தம் என வயதில் அனுபவமிக்கவர் என்னதென உணராமல் இருப்பாரா!..

அவளின் படபடப்பான உற்சாக முகத்தை கண்டு தனக்குள் சிரித்துக்கொண்டவர், காவேரியிடம் எதுவும் கேட்டு அவளை சங்கடப்படுத்த விரும்பாமல் எப்போதும் போல் இயல்பாகவே இருந்தார்.

ஆனால் காவேரியின் கால்கள் தான் தரையில் நிற்காமல் வாசலுக்கும் வீட்டிற்கும் நடையாய் நடந்தது.

"ஏன் டி யம்மா. இப்ப எதுக்கு வாசலை குத்தகை எடுத்து வச்சவ மாறி அந்த நடநடக்குற. யார எதிர்ப்பாத்து இம்புட்டு பூரிப்பு" பாட்டியின் கேள்வியில் நாணம் பூத்தது அவள் முகத்தினில்.

"ப்.பாட்டி உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்.." எப்போதும் தடுமாற்றம் இல்லாமல் படபடப்பாக பேசுபவள் பாட்டியிடம் பேச தடுமாறிப் போனாள்.

"சொல்லுமா.." என்றார் வாஞ்சையாக.

தான் வெங்கட்டை காதலித்தது தொடங்கி அனைத்தையும் சொல்லி முடித்தவள்,

"இன்னைக்கு அவைய கூட்டிட்டு போறேன்னு சொன்னாவ பாட்டி. வந்தா கூட போகட்டுமா.." பாவமாக அவர் அனுமதி கேட்க, மெல்லச் சிரித்தார் பாட்டி.

"இதை ஏன்மா என்கிட்ட கேக்குற. உன்னை கட்டிக்க போறவர் தானே, உனக்கு விருப்பம் இருந்தா தாராளமா கூட போ சந்தோசமா வாழ்க்கைய தொடங்கு. ஆனா ஒன்னு அவர் வீட்ல உள்ள பெரியவங்க சம்மதத்தோட போ.

என்னதான் நாம ஜாக்கிரதையா இருந்தாலும் இந்த உலகம் பொம்பளைங்க மேல தான் ஈஸியா பழி சொல்லும். கள்ளம்கபடம் இல்லாத வயசு பொண்ணு நீ, வாழ்க்கைல நிறைய கஷ்டங்களை சந்திச்சிட்ட, இனியாவது நீ நிம்மதியான வாழ்க்கைய வாழனும். பாட்டி என்ன சொல்ல வரேன்னு புரியிதா கன்னு"

அன்பாக அவள் தலை வருட, சரி என பாட்டியிடம் தலையாட்டிய காவேரியின் முகத்தில் அதுவரை இருந்த தெளிவு மாறி குழப்ப சாயல் ஓடியது, வெங்கட்டின் பெற்றோர்களை எண்ணி.

அவளின் எதிர்பார்ப்பை வீணடிக்காமல் காக்கி உடையில் தோரணையாக பைக்கிள் வந்தவனை கண்டு பரவசத்தில் துள்ளினாள் காவேரி.

"பாட்டி, மச்சா வந்துட்டாவ" சிறுமி போல் அவள் உற்சாகம்கொள்ள,

"தம்பிய உள்ள கூப்பிடுமா" என்றார் கனிவாக.

"கட்டச்சிஇஇ.." பார்த்ததும் அள்ளிக்கொள்ளத் தோன்றும் ஆவேசத்துடன் மின்னல் வேகத்தில் நெருங்கியவனை பார்வையாலே அடக்கி, பாட்டி என அவர் பக்கம் காட்டியவளை ஏமாற்றமாக பார்த்தான் வெங்கட்.

"வணக்கம் பாட்டி" ஏனோ அவரை கண்டதும் மரியாதை தானாக வந்தது அவனுக்கு.

"நமஸ்தே தம்பி உக்காருங்க" என்றிட தலையாட்டிவிட்டு அமர்ந்தவனுக்கு, பாட்டி முன்பே சொன்னதன் பேரில் காப்பியை எடுத்து சூடாக நீட்டிய கண்மணியை பார்வையாலே விழிங்கிக் கொண்டான் அவளவன்.

"உங்கள பத்தி காவேரி எல்லாம் சொன்னா தம்பி. தங்கமான பொண்ணு காவேரி அவ வாழ்க்கை நல்லா இருந்தா எனக்கும் ரொம்ப சந்தோஷம்" பாட்டி சொன்னதும் இதமான புன்னகை அவனது ரோஸ் நிற உதட்டில்.

"ஆனா ஒரு விஷயம் சொல்லணும் தம்பி" என்றதும் என்ன என்பது போல் கண்கள் கூர்ந்து சுருங்கின.

"காவேரி சொன்னா உங்க வீட்ல இன்னும் உங்க காதலுக்கு சம்மதம் சொல்லலைனு. அதோட உங்க அம்மா அப்பா இல்லாத இந்த நேரத்துல காதலியே ஆனாலும் வயசு பொண்ண எப்டி நீங்க கல்யாணம் ஆகாம கூட வச்சிருக்க முடியும். ஊர்ல இருக்க உங்க அம்மா அப்பா திரும்ப வந்து பாத்தா என்ன நினைப்பாங்க.

அதுனால உங்க அம்மா அப்பா சம்மதம் சொல்ற வரைக்கும் காவேரி என்கூடவே இங்கேயே இருக்கட்டும் தம்பி.

என்னடா இந்த கிழவி கொஞ்ச நாள் அவ வீட்ல இவளை வச்சிருந்துட்டு ஓவரா உரிமை எடுத்துக்குறாளேனு நினைக்காதே. காவேரி இங்க வந்து கொஞ்ச நாளே ஆகி இருந்தாலும் என் சொந்த பேத்திய போலவே மாறிட்டா.

ஆரம்பத்துல அவ உன்ன தேடி வந்த அன்னைக்கே நீ அவளை எப்படியாவது உன் கூடவே வச்சிருந்தின்னா பிரச்சனை இல்ல. இப்ப தான் அவளுக்கு நான் துணையா இருக்கேனே, உன் அப்பாக்கு உடம்பு குணமானதும் காவேரிய பத்தி நிதானமா எடுத்து சொல்லி அவங்க சம்மதத்தோட அவளை உன் வீட்டுக்கு அழைச்சிட்டு போறியா தம்பி. யாருக்கும் மனக்கஷ்டம் இருக்காது"

அவர் ஒன்றும் கட்டளை இடவில்லை. மாறாக இப்படி செய்தால் யாரின் மனமும் வேதனை கொள்ளாது என்ற எண்ணத்துடன் அவர் எடுத்து சொன்னவருக்கு, வெங்கட் காவேரியை இப்போதே அழைத்து செல்ல தான் போகிறேன் என்றாலும் அவர் மறுக்கப் போவதில்லை.

யோசனையாக அவன் காவேரியைப் பார்த்தான். அவளும் தவிப்போடு பாட்டி சொல்வது சரி என்பது போல் பார்த்தாள் அவனை.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 31
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Messages
46
Reaction score
37
Points
18
Ji sathiyama ruthran ah purinjukave mudiala... Manda soodaguthu ji.... Daily um oru ud kuduthudunga sagi....pls pls pls pls pls....
 
Top