• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
170
Reaction score
146
Points
43
அத்தியாயம் -33

அன்றைய நாளுக்கு பிறகு குழலியை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை ருத்ரன்.

ஆனால் அவளுக்கு தான் அங்கு தனிமையில் இருப்பது ஒவ்வொரு நொடியும் அச்சத்தை உண்டாக்குகிறது. அதுவும் தன் கண்முன்னால் வீட்டிலேயே ஒருவனை கொன்று போட்ட பிறகு அவள் மனநிலை எப்படி இருக்கும்..?

ருத்ரனை கொல்ல வீட்டிற்கே ஆள் தேடி வர துணியும் போது வெளியே போகும் இடத்தில் எல்லாம் எத்தனை பேர் அவனை கொன்று கூரு போட காத்திருக்கின்றனரோ என்று நினைக்கும் போதே அச்சத்தில் கண்ணீர் முட்டி இதயம் கணக்கிறது.

ஒருப்பக்கம் தாலி கட்டியவனுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்று மனம் பதைபதைத்தாலும், இதுவரை செய்த தவறுகளுக்கு தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று மற்றொருமனம் அடித்துக்கூறுகிறது.

ஆனபின்னும் அவனது தண்டனை காலங்களில் ருத்ரனை பிரிய நேரிடுமே என்ற கவலையே நெஞ்சை அடியோடு உளுக்கவும் செய்கிறது.

என்னவிதமான தவிப்பு இது? புரியாமல் குழம்பி பரிதவித்து போனாள் குழலி.

இப்படி தன் தவிப்பை எதையுமே புரிந்துகொள்ளாமல் தன்னையும் கண்டுகொள்ளாமல் எப்படி இவனால் எந்த கவலையும் இல்லாமல் இருக்க முடிகிறது..? யோசித்து யோசித்து மண்டை வலியோடு குளிர் காய்ச்சல் வந்தது தான் மிச்சம்.

மாலை பொழுது, ஊசித் தூறலாக தொடங்கிய மழை நேரம் செல்லச் செல்ல பலத்த மழையாக பொழியத் துவங்கிட, மெத்தையின் விளிம்பில் கிடந்த போர்வையை கூட எக்கிஎடுத்து போர்த்திக்கொள்ள திராணியின்றி, காய்ச்சலின் வீரியம் அதிகரித்து குளிரில் முணங்கிக் கொண்டு தேகம் குறுக்கி படுத்திருந்தாள் குழலி.

ருத்ரன் வந்து போகும் நேரங்களை கணக்கிட முடியாதவை, மாலை வெளுக்கத் தொடங்கிய மழை இரவாகியும் ஓய்வில்லாமல் அடித்து வீசியது.

பத்து மணியளவில் வீட்டிற்கு வந்த ருத்ரனின் தேகம் பாதி மழையில் நனைந்த நிலையில் சட்டையில் படிந்திருந்த ரத்தக்கரை மழை நீரில் கசிந்து இருப்பதால் வந்த வேகத்தில் குளியலறை புகுந்துகொண்டவன் மனதில் ஏதேதோ எண்ணங்கள் சூழ்ந்து, அவன் அடுத்தடுத்து செய்ய வேண்டிய செயலை ஒவ்வொன்றாக நினைவூட்டின.

"இதுக்கு மேல தாமதம் வேண்டாம், எல்லாத்தையும் சீக்கிரத்துல முடிச்சிட்டு கடைசி திட்டத்தை நினச்ச மாதிரியே பக்காவா செயல்படுத்தனும். அதுக்கு முன்னாடி குயிலுக்கு ஒரு வழி பண்ணனும்"

மனதில் தீர்க்கமாக எண்ணிக்கொண்டவன், இடையில் வெறும் கருப்பு வேஷ்டியை மட்டும் கட்டியதோடு தலையை துவட்டியபடி வெளியே வரும் போதுதான் பாவையின் முணுகள் சத்தம் செவியை எட்டியதும் கண்கள் சுருக்கி அவளைத்தான் பார்த்தான்.

"என்னாச்சி குயிலுஊ.." நின்ற இடத்திலேயே குரல் கொடுத்தான்.

பதில் சொல்லும் நிலையிலா உள்ளாள். அவன் முரட்டுக்குரலில் தேகம் தூக்கிவாரி போட்டு அச்சத்தில் மேலும் முணுகியவளை நெருங்கி நெற்றியில் கைவைத்துப் பார்க்க, அனலாய் கொதித்தது அவளின் தேகமே!

"சரியான பயந்தாங்கோலி, அன்னைக்கு அப்டித்தான் ஒரு முத்தத்துக்கே பயந்து ஜுரத்துல படுத்தா, இன்னைக்கும் ஒரு கொலைய பாத்ததுக்கே ஜுரத்துல படுத்துட்டா, இவளை வச்சி இன்னும் குறைநாளை எப்டி ஓட்றது..?"

சலிப்பாக நினைத்த ருத்ரன் அவளை ஆழ்ந்து பார்த்து, போர்வையை எடுத்து போர்த்தி விடுகையில் போர்வையோடு சேர்த்து அவனது கரத்தையும் இறுக்கமாக இழந்து கழுத்தோடு அணைத்துக் கொண்டாள் குழலி.

அவள் அப்படி செய்ததும் ருத்ரனின் விழிகள் விரிய, கரத்தை உருவ முயன்றவனுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு குழலியின் துடிக்கும் சிறுமுகம் கிட்டத்தில் பார்த்ததும், என்ன தோன்றியதோ! மெல்ல அவளின் அருகிலேயே அமர்ந்துகொண்டவன் கரத்தை அவளிடமே விட்டுவிட்டான்.

"ஏ..ஏண்ணா.. எங்கே இருக்கேள்.. எங்கே இருந்தாலும் சீக்கிரம் ஆத்துக்கு வந்துடுங்கோ.. உ.உங்களுக்கு ஏதாவது ஆகிட்டா ந்.நான் என்ன பண்ணுவேன்.. ந்.நேக்கு ரொம்ப பயமா இருக்குண்ணா.. "

கண்களை கூட திறக்க முடியாமல், தேக வெட்பம் அதிகரித்து குளிர்காய்ச்சலில் தேகம் நடுங்கியவளின் உதடுகள் துடித்த நிலையிலும், கணவனை எதிர்பார்த்து, அவனுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்று துடிக்கும் மனதுதான் உன்னதமான மனைவியின் பிரதிபலிப்போ!

மனைவியின் பிதற்றல் தனக்கானது என்று தெரிந்தும்கூட மனதளவில் எண்ணி உவகைகொள்ள முடியாத சூழலில், பாவையின் மதிமுகத்தை வெறித்துப் பார்த்தான் உணர்வுகள் தொலைத்த விழிகளுடன்.

"நேரம் நேரம் கூடக்கூட தேகம் வெட்டி வெட்டி இழுக்க குளிரில் காய்ச்சல் அதிகமாகி பிதற்றல் மொழி கணவனையின் அருகாமையை யாசிக்க, செய்வதரியாது திகைத்த ருத்ரன், வேகமாக கரத்தை உருவியவனாய் கிட்சன் சென்று வெந்நீர் வைத்து எடுத்து வந்தான்.

பருத்தி துணியில் வெந்நீர் நனைத்து நெற்றியில் பத்து போட்டவன், வீட்டில் எங்காவது மாத்திரை இருக்குமா என்று மூலை முடுக்கெல்லாம் தேடிப்பார்க்க, இதுவரை மருந்து மாத்திரை உபயோகப்படுத்த்தவன் வீட்டில் எங்கனம் இருக்கும்.

மச்.. என பின்னந்தலையில் தட்டிக்கொண்டவனாய் வெளியே பார்க்க, மழை விடுவதாய் இல்லை. குழலியின் காய்ச்சலும் இறங்குவதாய் தெரியவில்லை.

இன்று அதிகம் மழை என்பதால் அவன் கூட்டாளிகளை எல்லாம் அவரவர் வீட்டிற்கு போக சொல்லிவிட்டு ருத்ரன் மட்டுமே தனியாக வீட்டிற்கு வந்தான். யாருக்காவது ஒருத்தருக்கு அழைப்பு விடுத்தால் கூட மழையாவது புயலாவது அடுத்த நிமிடமே அவன் கண்முன் நிற்க விசுவாசிகள் நிறைய பேர் உண்டு. ஆனாலும் ஏனோ யாரையும் தன் மனைவிக்காக அழைக்கத் தோன்றவில்லை.

நின்ற இடத்தில் இருந்தே பின்னங்கழுத்தை தடவியபடி குருவிக்குஞ்சியாக போர்வைக்குள் நடுங்கிய மனைவியை திரும்பிப் பார்த்தான்.

மருத்துவமனைக்கு செல்வது தான் சரி என்று மூளை சொன்னாலும், மனது கேளாமல் மனைவியின் அருகில் சென்று பூனையாக போர்வையில் புகுந்தவனை நொடிபொழுதில் இறுக்கிக் கட்டிக்கொண்டாள் மாமி.

முதல் முறையாக தன்னவளின் அணைப்பில் மூச்சி முட்டியது ஆணவனுக்கு.

நீண்ட நாட்களுக்கு பிறகு அவளின் நெருக்கத்துடன், முன்பஞ்சி குன்றுகள் அவனது வெற்று மார்பை குத்திட்டு பதம் பார்க்க, கட்டுதேகம் சிலிர்த்துப் போனான்.

மனைவி பிடிக்கும் அதற்காக அவளை தன் ஆண்மைக்கு இறையாக்க வேண்டும் என்று இதுநாள் வரை அவன் நினைத்ததே இல்லை. அவளின் மிரண்ட விழிகளை பார்க்க ஆசைகொண்டு அடிக்கடி உன்னை எடுத்துக்கொள்வேன் என்று வம்பாக சீண்டியதோடு சரி.

தன்னவள் தான் என்றபோதும், தாலி கட்டும் முன்பும் சரி தாலி கட்டிய பின்பும் சரி பார்வைகள் சிலநேரம் தன்னவள் என்ற உரிமையோடு எல்லைமீறுமே தவிர்த்து, புத்தி என்றும் எல்லை மீறியது இல்லை.

வெறும் முத்தமும், அவளின் மடி தரும் சுகமும் போதும் என்று நினைப்பவனையும் மீறி, சிலநேரங்களில் தன் மனைவிதானே என்ற எண்ணத்துடன் எசக்குப்பிசக்காக பார்வை செல்லும் போதெல்லாம், தன்னை கடினப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டு அவளை விலகி செல்லக்கூட முயன்று இருக்கிறான்.

ஆனாலும் அந்த மென்வயிற்றில் தலை வைத்து உருளும் சுகம் கேட்டு அடம்பிடித்து வம்படியாக பெண் வயிற்றினில் நாவினை சுழற்றி பள்ளத்தாக்கை தூர்வாரி , விரல்களால் மத்தளம் வாசித்தபடியே உறங்கினால் தான் கண்சொக்கி திருப்தி அளிக்கும்.

மனைவியானவளை மேல்கீழ் ஆராய்ச்சி அடிஆழம் வரை சென்று விளையாடிப் பார்க்க வேண்டும் என்ற ஆணுக்கே உரிய ஆசைகள் ஏராளம் உண்டு.
ஆனால் அந்த ஆராய்ச்சிக்கு தான் உகந்தவன் இல்லை என்றுதானே, இனி முத்தமும் வேண்டாம் மடி சுகமும் வேண்டாம் என்ற உறுதியோடு இத்தனை நாளும் அவளிடம் தடுமாறும் மனதை அடக்கிக்கொண்டு ஓடி ஒதுங்கி ஒளிந்து இருந்தது.

இன்று அவன் உறுதிகளை எல்லாம் சோதிக்கும் வகையில், தேகநடுக்கத்தில் தானாக பாவையின் பலவீனமான கரங்கள் ஆணவன் மார்பையும் கழுத்தையும் ஒருசேர தடவி ஒருவித அவஸ்தையை உண்டாக்கியதும் நெஞ்சிக்கூடு தவித்துப் போனான்.

"குயிலுஉஉஉ... என்ன டி செய்து உடம்பு.." அவள் முகத்தில் தழுவிய கலைந்த தலைமுடியை காதினோரம் ஒதுக்கி விட்டு மெல்லமாக கேட்டு, நெற்றியில் மென்முத்தம் வைக்க, மேலும் வேகமாக ஒன்றினாள் ஆணவன் மார்புச்சூட்டை தேடி.

பெண்ணவளின் சுவாசம் அவன் கழுத்தில் மோதி, வறண்ட இதழ்கள் கழுத்தை உரச உரச ஆண்மை திண்டாடி ஆட்டம் கண்டதும் ஆழ்ந்த மூச்செடுத்தான் ருத்தன்.

"உஃப்.. இது சரிப்பட்டு வராது, ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறது தான் எல்லாத்துக்கும் நல்லது" என்று நினைத்தவனாய் அவளை விட்டு விலகப்போக, அவனது விலகல் உணர்ந்து எங்கே தன்னை பிரிந்து சென்று விடுவானோ என பயந்து தவிப்பாக பாய்ந்து அவன் கழுத்தை க்கட்டிக்கொள்ள செய்வதரியாது திகைத்து விழித்தான்.

நள்ளிரவு பன்னிரண்டை தாண்டி விட்டது.

"குயிலுஉஉஉ.."
"குயிலுஊ.. பாவா இக்கட தான் உன் பக்கத்துல இருக்கேன். பயப்படாத டி நான் எங்கேயும் போகல"

அவள் காதில் ரகசியம் போல் மெல்லக்கூறி அவளின் படபடப்பை குறைக்க முட்பட்டவன், அவள் முதுகை நீவிவிட்டான் மென்மையாக.

"எ.என்ன விட்டு எங்கேயும் போகாதேள்.. எங்கூடவே இருக்கோ.. எங்கூடவே இருங்கோண்ணா.." உதடு நடுங்க சொன்னதையே சொல்லி பிதற்றிய பேதை மெல்ல மெல்ல சுயநினைவை இழந்துகொண்டே வருவதை உணர்ந்த ருத்ரனின் இதயக்கூட்டில் உதிரம் உறைந்தது.

"குயிலுஊ.. கண்ணத்திற டி.."

கன்னத்தைப் பிடித்து உளுக்க, பிதற்றல் கூட இல்லை அவளிடம். சுவாசக்காற்றும் உள்ளடங்கிக்கொண்டே செல்ல, அவளின் உள்ளங்கை உள்ளங்கால்களை எடுத்து மடியில் வைத்து பரபரவென தேய்த்து விட்டும் முன்புபோல் அவளிடம் சீரான மூச்சி இல்லை என்று உணர்ந்துகொண்டவன்,

பெண்ணவளின் வறண்ட இதழில் இதழ் பதித்து மூச்சி வழங்கியபடியே, அவள் ஆடை கலைந்து திரைப்பட பணியில் சிக்கிமுக்கி கற்கள் போல் தேகத்துடன் தேகத்தை இணைத்து சூட்டை தனித்து கற்பாறை மனதுடன் அவளுடன் தன்னை பின்னிப் பிணைத்துக்கொண்டான் ருத்ரங்கன்.

இப்படி ஒரு சூழல் தன்னவளோடு ஏற்படும் என்று கனவிலும் நினைத்ததில்லை அவன். முத்தம் வேண்டும் மொத்தமும் வேண்டாம் என்ற எண்ணத்தில் தானே இத்தனை நாளும் தன்னை ஏக்கம் நிறைந்த விழிகளுடன் தன்னையே பார்வையால் மொய்த்தவளை விடுத்து தள்ளி இருந்தது.

இன்று அவளுக்காகவே அனைத்து காரியங்களையும் பதட்டமாக செய்து முடித்து, பெண்மையின் பெட்டகத்தில் தன் உயிர்நீரை சேர்த்து, ஓய்ந்து போய் மூச்சி வாங்க படுத்திருந்தவன் மார்பில், சீரான மூச்சுடன் சற்றே தெளிந்த முகத்துடன், காய்ச்சல் குறைந்து ஆழ்ந்த நித்திரையில் இருந்த குழந்தைமுக குயிலை ஆழ்ந்த பார்வையுடன் உறங்காமல் பார்த்துக்கிடந்தான் ருத்தன்.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 33
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Messages
46
Reaction score
37
Points
18
Ena ji ruthran avlo nallavana? Irundhalum kuyilu epdi react agum ithuku? Ena ji ruthran kuyilu romancec bayangarama expect pannoam bt inniku Wednesday ndra mari sappyunu mudichutinga.... Andhra mirchi kaarame illa ji...
 
Administrator
Staff member
Messages
170
Reaction score
146
Points
43
Ena ji ruthran avlo nallavana? Irundhalum kuyilu epdi react agum ithuku? Ena ji ruthran kuyilu romancec bayangarama expect pannoam bt inniku Wednesday ndra mari sappyunu mudichutinga.... Andhra mirchi kaarame illa ji...
காரமானான் அப்பெண்குட்டி தாங்காது ஜி 😂
 
Messages
46
Reaction score
37
Points
18
Nenga maami ya thappa guess pannitinga ji... Ini vara epis la parunga ji... Andhra mirchi ke tough kuduka poguthu ji...😂😂😜😜🤣
 
New member
Messages
7
Reaction score
4
Points
3
குயில் கண்ணு முழிச்சு பார்த்தால்
எப்படி கூவ போகுதோ
 
Top