Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
245
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 40

காலை உணவை முடித்துக் கொண்டு ஆத்வி அலுவலகம் செல்ல வெளியே வந்தவன், காரின் அருகில் கையைப் பிசைந்தபடி நின்றிருந்த கவியை பார்த்தும் பார்க்காததை போல காரினுள் ஏறப்போக,

"ஒரு நிமிஷம்.." கவியின் தயக்கமான குரலில் அலட்சியமாக கண்டான் அவளை.

"உ.உங்க க்.கிட்ட கொஞ்சம் பேசணும்.."

"என்கிட்ட பேச என்ன இருக்கு, அதுவும் நான் எவ்ளோ சீப்பான ஆளு.. பொம்பள பொருக்கி என்கிட்டயெல்லாம் மேடம் எதுக்கு பேசணும்.." கைக்கட்டி நின்று நக்கலாக வந்த பதிலில் சட்டென நிமிர்ந்தவள்,

"ஸ்வாதிக்கு சரியான நேரத்துல பணம் கட்டி ஆப்ரேஷன் செய்ய உதவி பண்ணதுக்கு, உங்களுக்கு நன்றி சொல்ல தான் கூப்ட்டேன்.. எனக்கு எல்லாமே என் ஸ்வாதி தான், அவளை காப்பாத்தி எனக்கு ரொம்ப பெரிய உதவி செஞ்சிருக்கீங்க ரொம்ப நன்றி.." அவள் கையெடுத்து கும்பிட, அப்போதும் தன்மீது நம்பிக்கை இல்லாமல் வெறும் பணம் கொடுத்து உதவியதற்கு மட்டுமே நன்றி என்றது அவனது கோவத்தை கிளறி அதிகரிக்க வைத்தது.

கோவத்தை அடக்கிக் கொண்டு நிதானமாக அவளை கண்டவன், "நான் என்ன ரோட்ல போற வரவங்களுக்கு எல்லாம் இலவசமா உதவி செய்ய சேவை மையமா வச்சி நடத்திட்ருக்கேன்.. ஒவ்வொரு ரூபாயும் கஷ்டப்பட்டு உழச்ச பணம், என் பணம்.. அப்டி கஷ்டப்பட்டு கிடைச்ச பணத்தை அசால்ட்டா தூக்கிக் கொடுத்து இருக்கேன்னா சும்மாவா.."

நிறுத்தி நிதானமாக புருவம் ஏற்றி இறக்கவும், ஏதோ உள்ளர்த்தம் வைத்து தான் இவன் பேசுகிறான் என்று நன்றாக உணர்ந்துக் கொண்ட கவி, "சரி நீங்க கொடுத்த பணத்தை நான் மாசம் மாசம் கொஞ்ச கொஞ்சமா திருப்பி கொடுத்திடறேன்.." என்றவளை ஏற இறங்க பார்த்தான்.

"யாரு நீ கொடுப்ப.. உன் வாழ்க்கைல நீ லட்ச ரூபாய எல்லாம் கண்ணால கூட பாத்திருக்க மாட்ட, நீ அந்த பணத்தை கொடுப்பியா.. அப்டியே கொடுத்தாலும் மாசம் ஒரு ரெண்டாயிரம் மூனாயிரம் கொடுப்பியா, பத்து லட்சத்தை முழுசா கொடுக்குறதுக்குள்ள நீ பாட்டியாகிடுவ.." என்றான் இகழ்ச்சி துள்ளும் குரலில்.

அவன் பேச்சில் முகம் கருத்த கவி, "அப்ப நான் எப்டி உங்க பணத்தை திருப்பி கொடுக்குறது.." என்றாள் புரியாத பாவனையில்.

அவளை மேலிருந்து கீழாக கூர் பார்வையால் அளந்தவன், அவளருகில் நெருங்கவும், பின்னே செல்ல வழி இன்றி, காரின் மீதே ஒட்டி நின்றவளாக எச்சில் விழுங்கிய கவி, "எ.ஏன்.. ஏ.ஏன்.. இப்ப கிட்ட வரீங்க.." திணறலான மிரலும் பார்வை, கிறங்க வைத்தது ஆத்வியை.

"நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வரேன்.." என்றவனின் உஷ்னமான மூச்சிக் காற்றை தவிர, அவனது சுண்டு விரல் கூட அவளை தீண்டி இருக்கவில்லை.

அதை நன்றாக உணர்ந்துக் கொண்ட கவி, அப்படி என்ன சொல்லப் போகிறான் என்ற எண்ணத்தோடு கருமணிகள் அலைமொத அவனையே அவள் பார்த்திருக்க,

"பத்து லட்சமும் சலிச்சி போற வரைக்கும் நீ எனக்கு வேணும்.. நான் போதும் போதும்னு சொல்ற அளவுக்கு, எனக்கு வேண்டிய எல்லாமும் நீ ஒருத்தியே செய்யணும்.. அதுவும் உன் சம்மதத்தோட,

இதுக்கு நீ சம்மதம் சொன்னா, எனக்கு பணத்த திருப்பிக் கொடுக்க வேணாம்.. அதுவே முடியாதுனு மருத்தா, சிம்பிள் நான் கொடுத்த பணத்துல ஒரு பைசா குறையாம எடுத்து வச்சிட்டு, வந்த வழியப் பாத்து போயிட்டே இரு.." கண்ணில் தீவிரம் கூட்டி அவன் உறுதியாக சொன்னதை கேட்டு, விக்கித்து போனாள் பாவை.

கொடுத்த பணத்திற்கு அவன் தன்னையே விலைமாதுவாக அழைக்கிறானா என்ற எண்ணமே, கூனிக் குறுக வைத்தது அவளை.

"நீங்க என்ன பேசுறீங்கனு புரிஞ்சி பேசுறீங்களா, இல்ல என்ன பழிவாங்கனும்னு இப்டிலாம் சொல்றீங்களா" இயலாமையோடு கேட்டவளின் குரல் கம்மியது.

"ரொம்ப ரொம்ப நல்லாவே புரிஞ்சி தான் கேக்குறேன், நீ எப்டி வேணும்னா நெனச்சிக்கோ ஐ டோன்ட் கேர்.. எனக்கு நீ வேணும், முடியாதுனா நான் ஏற்கனவே சொன்னது போல பணத்தை எடுத்து வை..

இன்னும் டூ வீக்ஸ் உனக்கு டைம். நல்லா யோசிச்சி முடிவெடு, அதுவரைக்கும் நீ என் முன்னாடி வரக் கூடாது.. மீறி வந்த.." அழுத்தமாக நிறுத்தி, அவள் இதழையும் வெகுநாட்களாக கடித்து சாரு குடிக்காமல் விட்ட சிவந்த மூக்கையும் ஒரு மார்க்கமாக பார்த்தபடி, திரும்பாமலே பின்னால் அடியெடுத்து வைத்து நடந்தவன்,

"கண்ணாலே பாத்துட்டு இருக்க உன் விஷயத்துல நான் ஒன்னும் அவ்வளவு நல்லவன் இல்ல.." மோகத்தில் மின்னிய அழுத்தமான பார்வை, அவள் சங்கு கழுத்தை தாண்டி சென்று எச்சரிக்கை விடுத்தது.

அந்த எச்சரிக்கை புரிய வேண்டியவளுக்கு நன்றாக புரிந்து விட, இதயம் துடிக்க மறந்து விழி விரித்த நிலையில் அவனையே காண, ஆத்வியின் கார் மின்னல் வேகத்தில் சீறி மறைந்தது.

******

"ஹெலோ.. வெங்கட் ஆபிஸ்ல இருக்கீங்களா.." அந்த பக்கம் யாதவ் குரல். எதிரொலித்தது.

"ஆமா சார், ஆபிஸ்ல தான் இருக்கேன் சொல்லுங்க சார்.." என்றார் மேனேஜர் வெங்கட்.

"அது ஒன்னும் இல்ல, அங்க வேலை பாக்குறாங்களே ஸ்வாதி அவங்ககிட்ட ஒரு டிசைன் பத்தி கொஞ்சம் பேசணும், ஃபோனை கொடுங்க.." என்றதும்,

"சார்.." என தயங்கிய வெங்கட், "சார் அவங்க இப்ப வேலைக்கு வர்றதில்ல.." என்றதும் யாதவ்க்கு பதட்டம்.

"ஏ.ஏன்.. என்னாச்சி, ஏன் ஸ்வாதி வேலைக்கு வரல.." அவன் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே, மொத்த கம்பனியும் பின்ட்ராப் சைலன்ட் மோடில் சென்றது.

ஒவ்வொருவரின் இதயம் துடிக்கும் சத்தமும் அவர்களுக்கே எதிரொலிக்க, செய்து கொண்டிருந்த வேலைகளை எல்லாம் அப்படியே நிறுத்தி விட்டு, பயம் கலந்த மரியாதையுடன் எழுந்து நின்றனர். கூரிய கண்கள் கண்ணாடியில் மறைந்து, தோரணையாக நடந்து வந்துக் கொண்டிருந்த ஆத்வியைக் கண்டு.

கையசைவில் அமர சொல்லி வேலையை கவனிக்கக் கூறியதில், எழுந்த வேகத்தில் அமர்ந்துக் கொண்டனர்.

"சார்.. ஆத்வி சார் நம்ம கம்பனிக்கு வந்திருக்கார்.." ஆச்சிரியமாக வெங்கட் சொல்லவும், யாதவ்க்கு எங்கே அதெல்லாம் மண்டையில் ஏறியது.

"ஸ்வாதி ஏன் வேலைக்கு வரல" உள்ளம் படபடக்க அந்த பக்கம் யாதவ் கத்திக் கொண்டு இருக்க, இந்த பக்கம் இருந்தவர் எதிரில் நடுநாயக்கமாக நின்றிருந்த ஆத்வியைக் கண்டு எச்சிலை விழுங்கி, "வணக்கம் சார்.." என்றார் மரியாதையாக.

"போனில் யார்..?" என்பதை போல் சைகையில் கேட்ட விதத்தில் கால்கள் நடுங்கியவர்,

"யாதவ் சார் தான், லைன்ல இருக்கார் சார்.." என்றார் பணிவாக.

"கொடு.." என கை நீட்ட, கொடுக்க மாட்டேன் என்றா சொல்வார். நொடியில் அவன் கையில் அவர் அலைபேசி இருந்தது.

"ஹலோ.. வெங்கட் எத்தனை முறை கேக்குறது, ஸ்வாதி ஏன் ஆபிஸ் வரல அவளுக்கு என்னாச்சி.." இம்முறை கோவமாக அவன் கத்த,

"உனக்கு கீழ வேலை பாக்குற ஸ்டாப் மேல, அப்படி என்ன அக்கறை உனக்கு.." ஆத்வியின் கனீர் குரலில் ஒரு நொடி திகைத்த யாதவ்,

"அண்ணா நீயா.." நம்பமுடியாமல் அவன் கேட்டான்.

"இல்ல என் ஆவி, கேட்டதுக்கு பதில் சொல்லு யாதவ்.. உனக்கு கீழ வேலை பாக்குற பொண்ணு மேல உனக்கு என்ன தனி அக்கறை.." பள்ளி வாத்தியாய் தம்பியை மிரட்டல் விடுக்க, தவறு செய்த மாணவனாய் அந்த பக்கம் திணறிப் போனான் யாதவ்.

"அண்ணா எனக்கு அந்த பொண்ண பிடிச்சி இருக்குழ் அவகூட பேசியும் நாளாச்சு.. போன் போட்டாலும் எடுக்கல, அதான்..." என்றான் இழுவையாக.

"ஓகே ரைட், இனிமே யாருக்கு போன் போட்டு டிஸ்டர்ப் பண்ணாதே. உண்மையாவே அந்த பொண்ண உனக்கு பிடிச்சி இருந்தா, நேர்ல வா பேசிக்கலாம்..

அதுவரைக்கு தேவை இல்லாத சிந்தனைல வேலைல கோட்டை விட்றாத, உன்ன நம்பி ஆயிரக் கணக்கான பேசன்ஜர்ஸ் ட்ராவல் பண்றாங்க.." பேச்சில் அத்தனை எரிச்சல், ஆனால் அதில் நிறைந்திருந்த அக்கறை புரிய வேண்டியவனுக்கு புரியாமல் இல்லை.

"சரிண்ணே, இனி கவனமா இருக்கேன்.." உடனே தந்த யாதவ் மனம், முன்பு இருந்ததை விட இப்போது நிம்மதி இழையோடிய உணர்வானது. இனி ஆத்வி, ஸ்வாதியை பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையாலோ என்னவோ!

மேலும் எதுவும் பேசாமல் அழைப்பை துண்டித்து வெங்கட் கையில் ஃபோனைக் கொடுத்த ஆத்வி,

"இங்க வேலை பாத்த பொண்ணு ஸ்வாதி அவ பேட்ச் எது..? அந்த பேட்ச்ல மொத்தம் எத்தனை பேர் இருக்காங்க..? அவங்களோட மொத்த டீடைல்ஸும் கொண்டு வாங்க, அப்புறம் ஸ்வாதி இங்க வேலை பார்த்தவரை யார் யாரெல்லாம் அவகிட்ட பேசினாங்க, அவளுக்கு யாரெல்லாம் க்ளோஸ்னு இதையும் குயிக்கா கலெக்ட் பண்ணி எடுத்துட்டு வாங்க.." உத்தரவிட்டவன் இரும்புக் குரல் ரீங்காரமிட்டது, யாதவின் ஆபிஸ் அறையில்.

"எஸ் சார், ஒரு டென் மினிட்ஸ்ல எல்லா டீடைல்ஸும் கொண்டு வரேன்.." என்ற வெங்கட், அவன் இட்ட வேலையில் கவனமானார்.

சொன்னது போலவே பத்து நிமிடத்தில் ஆத்வி கேட்ட அனைத்தையும் கொண்டு வந்து அடுக்கியவர், "நாப்பதாவது நம்பர் அவங்க பேட்ச் சார், அவங்களோட மொத்தம் அம்பது பேர் இருக்காங்க.. அவங்க டீம் லீட் செந்தில்.." என்று தொடங்கி, அந்த ஐம்பது பேரின் விபரங்களையும் சொன்னவர்,

"ஸ்வாதி இங்க வேலை பார்த்த வரை, அவங்க வேலை விஷயத்தை தவிர அனாவசியமா வேற யாரோடவும் அதிகம் பேச மாட்டாங்க சார்.. அவங்க உண்டு அவங்க வேலை உண்டுன்னு கவனமா இருப்பாங்க..

யாதவ் சார் இருந்தவரை வேலைகளை தப்பு தப்பா செஞ்சி திட்டு வாங்குவாங்க, பாக்கவே பாவமா இருக்கும் சார்.. மத்தபடி எனக்கு தெரிஞ்சி அவங்களுக்கு இங்க க்ளோஸ் எல்லாம் யாருமே இல்ல சார்" தனக்கு தெரிந்ததை சொல்லி முடித்தார் வெங்கட்.

சிறு தலையசைப்போடு கவனமாக கேட்டுக் கொண்டவன், "இங்க வேலை பாக்குறவங்கள்ள யாராவது அந்த பொண்ணு பின்னாடி, லவ் அது இதுனு சொல்லி சுத்திட்டு இருந்தாங்களா?.."

"எனக்கு தெரிஞ்சி அப்டி எதுவும் இல்ல சார், ஆனா அந்த டீம் லீட் செந்தில ஒருமுறை ஆருத்ரா மேடம், எல்லார் முன்னாடியும் வார்ன் பண்ணாங்க, ஏதோ ஸ்வாதிகிட்ட அந்த பையன் சேட்டை பண்ணத பாத்து.. அப்புறம் அவன் ஸ்வாதிகிட்ட எந்த வம்பும் வச்சிக்கிட்டது இல்ல..

ஆனா கொஞ்ச நாளா அவனுக்கு கொடுத்த சிஸ்டட்த்தை விட்டுட்டு, ஸ்வாதி பக்கத்துல காலியா இருந்த சிஸ்ட்டத்துல தான் உக்காந்து வேலை பாத்தான், ஏன்னு கேட்டதுக்கு, அவன் சிஸ்ட்டம் வேலை செய்யலைன்னு சொன்னான்.. எனக்கும் யாதவ் சார் இல்லாம பயங்கர வேலை, அதை சரியா கவனிக்க முடியாம போச்சி சார்.." என்றார் விளக்கமாக.

ஓகே என்று எழுந்தவன், "இனிமே வேலைல யார் என்ன சொன்னாலும் அதை முதல்ல சரியா கவனிச்சி, அவங்க உண்மை சொல்றாங்களா, பொய் சொல்றாங்களான்னு செக் பண்ணுங்க.. அனாவசியமா ஒரு இடம் விட்டு இன்னொரு இடம் மாறினாலும், என்னனு கேட்டு அப்பப்பவே அந்த பிரச்சனைய சரி செய்ய பாருங்க வெங்கட்.." அதிகாரத்திலும் ஒரு கனிவோடு சொன்னவன், அந்த கம்பனியை ஒரு ரவுண்டிங் வந்த பின்பு, அங்கிருந்து கிளம்பி சென்றான்.

*******

மதிய வேலையில் உணவு பையுடன் படுஜோராக கிளம்பி ஆத்வியின் அலுவலகம் வந்த ஹரிதாவின் முகம் ஏகத்துக்கும் கோவத்தில் கொதித்தது.

காரணம் அவளை மதியம் வா பார்க்க வேண்டும் என்று சொல்லி விட்டு, அவன் தான் யாதவின் அலுவலகம் சென்று விட்டானே!

மாலை வரை அவனுக்காக காத்திருந்து ஒருமணி நேரமாக கை வலிக்க போட்ட மேக்கப் கலைந்தது தான் மிச்சம். ஃபோன் போட்டாலும் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என்றே வந்து மேலும் வெறுப்பேற்ற, நேராக அசோக் அறைக்கு வந்தவள், "உன் பாஸ் ஆத்வி எங்க.."

கொஞ்சமும் மரியாதையின்றி திமிராக கேட்டவளுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை தான். அதிலும் நண்பன் என்றதை கூறாமல் பாஸ் என்று அழுத்திக் கூறியதிலேயே தெரிந்தது, நீ வேலைக்காரன் என்றதை குறிப்பிடுவது. இருந்தும் தற்போது பதில் சொல்வதை தவிர வேறு வழியில்லையே!

"ஆத்வி காலைலயே ஆபிஸ் வந்துட்டு, அவன் தம்பி ஆபிஸ்க்கு ரவுண்ட்ஸ் போயிருக்கான், அப்டியே வெளிய வேற வேலைகள் இருக்கு அதை முடிச்சிக்கிட்டு வீட்டுக்கு போயிடுவான்." வேலை பார்த்தபடியே பதில் தந்தான் அசோக்.

"ஹேய் Mr. இனிமே ஆத்விய அவன் இவன்லாம் சொல்ற வேலை வச்சிக்காத. ஏன்னா அவன் என் ஹபாண்ட், உனக்கு பாஸ்.. நீ அவங்கிட்ட வேலை பாக்குற சாதாரண ஒருத்தன், சோ ஒழுங்கா நடந்துக்கோ.." நீட்டிய விரலை அவன் முகத்துக்கு நேராக ஆட்டி திமிராக உரைத்து திரும்பிப் பார்க்காமல் சென்றாள்.

போகும் அவள் முதுகை வெறித்த அசோக், "ஆமா வந்துட்டா பெரிய இவ.. இவ சொன்னா நான் என் நண்பன அவன் இவனு சொல்லாம விட்டுடணுமா.." அலட்சியமாக எண்ணி விட்ட வேலையை தொடர்ந்தான்.

******

இரவு எட்டு மணியை போல் வீட்டிற்கு வந்த ஆத்வி, நடுகூடத்தில் ஓரமாக நின்ற கவியின் முகம் அதிர்ச்சியில் இருப்பதை, யோசனையாக பார்த்தவன்,

நீண்ட பெரிய சோபாவில் சாய்ந்து அமர்ந்து காலை ஆட்டிக் கொண்டிருந்த ஹரிதாவை கண்டதும், கவியின் அதிர்ச்சிக்காக காரணம் புரிந்தவனாக, "இந்த நேரத்துல இங்க என்ன பண்ற.." விரைப்பு சத்தத்தில் பின்னால் திரும்பினாள். ஹரிதா.

"உனக்காக எவ்ளோ நேரம் வெயிட் பண்றது ஆத்வி, ஆபிஸ்க்கு போகாம இவ்ளோ நேரம் எங்க போய் ஊர் சுத்திட்டு வர்ற.. காலை ஆட்டியபடி திருமிராக கேட்ட விதம், அங்கிருந்த பெண்கள் இருவருக்குமே கோவம் வரும்படியாக தான் இருந்தது.

"இங்க பாருமா, நாங்களே எங்க பிள்ளைய உன் அளவுக்கு அதிகாரம் செஞ்சது இல்ல.. அவனுக்கு வெளிய ஆயிரம் வேலை இருக்கும், அதையெல்லாம் உன்கிட்ட சொல்லிட்டு செய்ய முடியாது.. கொஞ்சம் மரியாதையா பாத்து பேசு.." மகனை பற்றிப் புரிந்தவள், எங்கே முழுகாமல் இருப்பவளுக்கு அவனால் பங்கம் வந்து விடுமோ என்ற நல்லெண்ணத்தில் மறைமுகமாக சொல்ல,

"நான் ஆத்விகிட்ட பேசிட்டு இருக்கேன், நீங்க ஏன் தேவை இல்லாம நடுவுல வரீங்க.. இத்தனை நாள் இவன் உங்களுக்கு மகனா இருந்திருக்கலாம், ஆனா இப்ப இவன் எனக்கு ஹஸ்பண்ட்..

ஆத்வி மேல உங்கள விட எனக்கு தான் எல்லா விதத்துலையும் அதிகமான ரைட்ஸ் இருக்கு, எங்களுக்கு நடுவுல நீங்க வராம இருக்க வரை தான், உங்க மரியாதை..." என அதற்கு மேல் பேசப் போனவள் உதடு, ரெண்டாக கிழிந்து செங்குருதி. வடிந்தது.

தன்னெதிரில் ருத்ரனாக நின்றிருந்த ஆத்வியை கண்டு, சகலமும் அடங்கியவளாக கன்னத்தில் கை வைத்து, உடல் உதறப்பார்க்க, அவன் அடித்த அடியின் சத்தத்திலே, கவி தன் வாயை இரு கைகள் கொண்டு மூடியஓடி பின்னால் நகர்ந்து விட்டாள்.

"ஆத்வி பொறுமையா இருப்பா.." மித்ரா பதட்டமாக சொல்ல, தலைமுடிகள் அதிர்ந்து குலுங்கும் வேகத்தோடு ஒரு பார்வை பார்த்தானே! சிறிதும் அடங்காத கணவனின் கோவத்தை அப்படியே மகன் முகத்தில் நேரில் கண்டு, திகைத்துப் போன மித்ரா, ஆஆ.. என வாய் பிளந்து விட்டாள்.

"என் மாம பத்தி இன்னு ஒரு வார்த்தை பேசின, உன்ன கொன்னு புதச்சிடுவேன்.." கண்கள் சிவந்து துடிக்க உருமியவனின் கோவத்தை முதன் முதலாக கண்ட ஹரிதா வெலவெலத்துப் போக,

"என்னைக்கும் இந்த ஆத்வி முதல்ல என் அம்மாவுக்கு மகன், அந்த உரிமை கடைசி வரை மாறாது.. என் மாம்க்கு அடுத்து தான், மத்த எவளும்.." தீர்க்கமாக உரைத்தவன் பார்வை, கவியை தொட்டு மீண்டது.

"ஆமா யாரு நீ.. யார் நீன்னு கேக்குறேன்.. வெறும் கையெழுத்த மட்டும் வச்சி ஓவரா ஆடாத.. ஒத்த கையெழுத்துல பல பேரோட தலையெழுத்தே மொத்தமா மாறிப் போகும், எதுக்கும் கவனமா இரு.." பற்களை கடித்தவனின் கோபத்தில் நடுங்கி போனாள் ஹரிதா.

"இனி கல்யாணம் அன்னைக்கு உன்ன டீல் பண்ணிக்கிறேன்.. இப்ப குழந்தைக்காக உன்ன சும்மா விடுறேன், ஓடிப்போ.." அதீத வெறியில் வாசலைக் காட்ட, அடித்துப் பிடித்து உயிர் தப்பியதே மேல் என்று ஓடிவிட்டாள்.

அவள் சென்றும் கூட கோவம் தனியாமல் தலையை அழுந்தக் கோதியபடி, இதற்கும் அதற்கும் வேகமாக நடந்த மகனை கண்டு அவனிடம் வந்த மித்ரா,

"ஏன் ஆத்வி அம்மாவ உனக்கு அவ்ளோ பிடிக்குமா.." பூரிப்பாக கேட்ட அன்னையை நின்று பார்த்தவன்,

"யூ ஆர் மை சோல் மாம்.. எப்டி பிடிக்காம போகும்.." சட்டென புன்னகைத்தவனின் கோவம் மொத்தமும் எங்கு சென்றதோ!

ஆனந்தக் கண்ணீர்ப் பொங்க, "என் தங்கமே.." என மகனின் கன்னம் கிள்ளி செல்லம்க் கொஞ்சி, அவனை கட்டிக் கொள்ள, அழகான புன்னகையுடன் தானும் அன்னையைக் கட்டிக் கொண்டவன் நெஞ்சிக்கொதிப்பு, தற்போது அடங்கி இருந்தது.

தாய் மகன் இருவரது புனிதமான பாசத்தையும் ஒதுங்கி நின்றுப் பார்த்த கவிக்கு கண்கள் கலங்கி, அன்று ஆத்வியை தவறாக பேசியதை நினைத்து குற்றவுணர்ச்சி அதிகமானது.

அந்நேரம் வீட்டுக்கு வந்த ஆதியின் கண்ணில் அம்மா மகன் இருவரும் கொஞ்சிக் கொள்ளும் காட்சி பட்டுவிட, புசுவானம் போல் பொறபொறவென மேலெழும்பியது பொறாமை.

"மித்துஊ.." என்ற கணவனின் குரலில்,

"இதோ வரேங்க.." என குரல் கொடுத்தபடி, மகனை விட்டு அவசரமாக பிரிந்து ஆதியிடம் செல்லப் போக,

"மாம்.." என்ற ஆத்வியோ அவளை விடாமல் பிடித்து வைத்து, தோள்மீது கை போட்டுக் கொண்டான், தந்தையை வெறுப்பேற்றும் வகையில்.

அதில் வெறியாக மகனை முறைத்த ஆதி, "உன் மகனோடவே இருந்திடு, என்னங்க நொன்னங்கனு கூப்டுட்டு வந்த தொலைச்சிக் கட்டிடுவேன் உன்ன.." கோவத்தில் கத்தி விட்டு செல்ல,

"டேய்.. உனக்கு எந்தெந்த நேரம் விளையாடணும்னு விவஸ்த்தையே இல்லையா.. பாரு கோவிச்சிட்டு போய்ட்டார், இனி மலை இறங்குறது கஷ்டம்.." மித்ரா கவலையா சொல்ல,

"அவர விடுங்க மாம்.. எனக்கு பசிக்குது, சாப்பாடு போட்டு அப்புறம் போய் உங்க சமாதானப் பூறாவ தூது அனுப்பி, டேட சரி பண்ணுங்க.." குறும்பு மன்னன் அன்னையின் கையால் உண்டு விட்டு, தனதறைக்கு சென்றிட, போகும் அவனை விழி நீர் பெருக்கெடுக்க ஏக்கமாக பார்த்து நின்றாள் கவி.

வேறு ஒருத்தியின் கணவன் அவன் என்பதை மூளை நம்பினாலும் பாழாய் போன மனம், ஏற்றுக் கொள்ள முடியாமல் அடம் பிடிக்கிறதே!

காலையில் அவன் பேசியதை நினைகையில் அருவருப்பில் உடல் நடுங்கினாலும். இன்னும் இரண்டு வாரத்தில், அவனுக்கும் அந்த ஹரிதாவுக்கும் ஊரரிய திருமணம் என்று கேள்விப் பட்டதில் இருந்தே, ஏதோ தனக்கு சொந்தமானதை யாரோ தன்னிடமிருந்து கட்டாயப்படுத்தி பறித்து செல்வதை போல, மனமெல்லாம் ரணமாக காந்தியது.

அந்த நிலையில் கூட அவன் அறைக்கு செல்லும் போது தன்னைப் பார்த்த பார்வை, அப்பப்பா.. உடல் சிலிர்த்துப் போனது. பெண்ணுடலை ரசனையாக உண்ணும் அவன் கூர் விழிகளில், தொலைந்துப் போனாள் பேதைபெண்.

காலில் ரெக்கைக் கட்டிக் கொண்டு நாட்கள் வேகமாக பறந்து சென்று, ஆத்வி ஹரிதாவின் திருமண நாளும் வந்துவிட்டது. அதற்கு முன்னவே ஆரு அஜய் தன்யா அனைவரும் பிறந்த வீட்டுக்கு வந்து திருமண வேலைகளை தொடங்கி விட்டனர்.

ஸ்வாதி கவியோடு இயல்பாக பழவும் தவரவில்லை அவர்கள்.

கவியின் முகம் நாளுக்கு நாள் எதையோ பறிகொடுத்ததை போலிருப்பதை உணர்ந்து கொண்டாள் ஸ்வாதி. ஆனால் அவள் இருந்த மனநிலையில் எதைப்பற்றியும் கேட்க தான் முடியவில்லை.

திருமணம் முடிந்த கையோடு, மாலை பொழுதே லடக் ரெய்டு வேறு உள்ளதால், அதற்கு தேவையான அனைத்தையும் முதலில் தயார் செய்து வைத்துக் கொண்டான் ஆத்வி.

அக்னி குண்டத்தில் தாராளமாக நெய்யை ஊற்றியபடி, 'மாப்பிளையாண்டாளை அழைச்சிட்டு வாங்கோ' என்ற ஐயரின் குரலில், பட்டு வேஷ்டி சட்டையில் புது மாப்பிளைக்கே உரிதான தோரணையுடன், கழுத்தில் மாலையணிந்து கம்பீரமாக நடந்து வந்த ஆத்வியை, கண்ணீர் உடைபெடுக்க கண்டு நின்றாள் கவி.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 40
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top