- Messages
- 245
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 43
தலைகுனிந்து அமர்ந்திருந்தவளை பார்த்தபடி, கம்பீரம் குறையாக் குரலில் "ஹெலோ.." என்க,
"ஹெலோ மாப்பி நான் தான் டா பேசுறேன்.." என்ற தீபக்கின் உற்சாகமான குரலைக் கேட்டதும் சலிப்பாக நெற்றியை நீவிவிட்டவன்,
"எதுக்கு போன் பண்ண சீக்கிரம் சொல்லித் தொல.." என்றான் கடுப்பாக.
"அட பார்றா புதுமாப்பிளைக்கு கோவத்த.. நானும் கேள்வி பட்டேன்டா, உன் கல்யாணக் கூத்தை.. கேவலம் ஒரு காதுகேக்காதவள போய் கல்யாணம் பண்ணிக்கிட்டியாமே, இதை நான் உன்கிட்டருந்து கொஞ்சம் கூட எதிர்ப்பாக்கல ஆத்வி.." அந்த பக்கம் தீபக் எல்லளாக மொழிந்தது, போனை தாண்டியும் கவிக்கு நன்றாக கேட்டு விட்டது.
சற்று நேரம் வரை உணர்ச்சிப் பெருக்கில் செவ்வானமாக இருந்த முகம், இப்போது இத்தகைய அவமானம் தனக்கு தேவை தானா என்பது போல அழத் துடித்தது.
ஆத்வி எதுவும் பேசுமால் அமைதியாக இருக்க, "நான் கூட உன் பின்னாடி Ak.. Ak..னு சுத்திட்டு திரிஞ்சாளுங்களே அதுல அவளாவது ஒருத்திய, உன் ரேஞ்சிக்கு ஏத்தவளா பாத்து கரெக்ட் பண்ணி செட்டில் ஆவேன்னு நெனச்சேன்..
ஆனா போயும் போயும் ஒரு ஹாண்டிகேப்புட கல்யாணம் பண்ணி ஜோக்கர் ஆகிட்டியே மாப்பி.. இதை கேள்வி பட்டதும் என்னால சிரிப்ப அடக்கவே முடியல தெரியுமா,." அந்த பக்கம் அவன் சத்தமாக சிரித்துக்கொண்டிருக்க, கவிக்கு அவமானத்தில் இறந்து விடலாம் போலிருந்தது.
ஆத்வியோ எந்த எதிர்பேச்சுமின்றி, மனைவியின் முகத்தில் தோன்றும் ஒவ்வொரு உணர்ச்சிகளையும் உள்வாங்கியபடி அமைதி காக்க, அதுவே அவள் உயிர் துடித்துக் கொண்டு இருந்தாள்.
"அப்புறம் எனக்கொரு சந்தேகம், உன் பொண்டாட்டிக்கு காது தான் கேக்காது, மத்தது எல்லாம் சரியா இருக்குமா இல்ல.. அதுவும் பூட்டகேசா.." தீபக்கின் கேலிப் பேச்சில், கோவத்தில் சிவந்த கண்களும் அவன் கையில் கிடைத்தால் உயிருடன் வெட்டிப் போடும் வெறியும் ஒருசேர வந்தக் கோவத்தை அடக்க முடியாமல், முகத்தை மூடி அழுதுக் கொண்டிருக்கும் கவியை வெகுவாக முறைத்துக் கொண்டிருக்க,
"அப்புறம் மாப்பி, அன்னைக்கு நான் சொன்னேன்னு லோக்கல் சரக்கடிச்சி பண்ணியே ஒரு சேலஞ், அதெல்லாம் என்ன மண்ணாங்கட்டி சேலஞ்சி.. இப்ப நான் சொல்ற சேலஞ்ச நீ உண்மையான ஆம்பளையா இருந்தா செஞ்சி காட்டி எனக்கு வீடியோ எடுத்து அனுப்பு டா பாப்போம்.. அப்ப நம்புறேன் நீ தைரியமான ஆம்பளதான்னு.."
அவன் பல்லைக் கடித்துக் கொண்டு சொல்லும் போதே, ஏதோ வில்லங்கமாக தான் இருக்கப் போகிறது என நன்றாக உணர்ந்த ஆத்வி, சட்டென காரை விட்டு இறங்கப் போன நேரம், அவனை போக விடாமல் இறுக்கமாக அவன் கைகளை பிடித்திருந்தாள் கவி.
அவள் அப்படி செய்வாள் என்று சற்றும் எதிர்ப்பாக்காதவன், அவள் கையை தட்டி விட்டு இறங்கப் பார்க்க, அதற்குள் அவன் போனை பிடுங்கி ஸ்பீக்கரில் போட்டிருக்க. தீபக் சொல்லிய வார்த்தைகளை கேட்டு, "டேய்ய்.." என ஆவேசமாக ஆத்வி கர்ஜிக்க, பின் சீட்டில் தளர்ந்து போய் பொத்தென சாய்ந்தவளுக்கு வாழ்க்கையே வெறுத்த நிலையில், அமிலத்தை கரைத்து உடல் முழுக்க துடிக்க விட்டு ஊற்றிய உணர்வானது.
"என்ன டா சவுண்டு ஓவரா விடுற.. ஆம்பளயா இருந்தா அந்த ஊ**க்கூட இருக்க வீடியோவ எனக்கு எடுத்து அனுப்பு.. உங்க ரெண்டு பேரோட பர்ஃபாமென்ஸ் எப்டி இருக்குனு பாத்துட்டு ஸ்டெப் ஸ்டெப்பா விளக்கி சொல்றேன், எப்படி என் சேலஞ்.."
அவன் நக்கலடிக்கவும், கை முஷ்டிகள் இறுக்கி கண்களை அழுத்தமாக மூடித் திறந்த ஆத்விக்,
"தப்பித் தவறிக் கூட இனி நீ என் கண்ணுல பட்டுடாத தீபக்.. மீறிப்பட்ட அன்னைக்கு தான் உனக்கு கடைசி நாளா இருக்கும்.." மீசை துடிக்க அவன் உறுதியாக சொன்னதை சிறிதும் காதில் வாங்காமல் அலட்சியமாக விட்டவன்,
"பாப்போம் டா யாரு யாருக்கு கடைசி நாளை குறிக்கிறதுன்னு.. ஆல்ரெடி உனக்கு நான் நாள குறிச்சி வச்சிட்டேன் மாப்பி.. புது மாப்பிளை வேற இன்னும் அஞ்சி மணி நேரம், உன் புது பொண்டாட்டிக் கூட நீ எப்படியெல்லாம் வாழணும்னு நினைச்சியோ அப்படியெல்லாம் வாழ்ந்து முடிச்சிக்கோ..
ஏன்னா ஆறு நாள் நடக்கப் போற இந்த ரெய்டுல, எந்த நாள் எந்த நேரம் வேணும்னாலும் நீ செத்துப் பொணமா போய்டுவ டா.." வெறிகொண்டு அவன் சொன்ன நொடி இதயமே நின்று விட்ட அதிர்ச்சியில் கண்ணீரோடு ஆத்வியைப் பார்த்தாள் கவி.
ஆனால் ஆத்வியோ உதட்டை குவித்து உஃப்.. என மேல் நோக்கி ஊதி நக்கலாக சிரித்தவன், "டேய் உனக்கு தான் காமெடி சீனெல்லாம் சுத்தமா வரலையே, அப்புறம் ஏன் வராத சீன வெட்டியா அளந்துட்டு இருக்க.. எவ்ளோ பட்டாலும் தேடி தேடி வந்து என்கிட்ட அடி வாங்கிட்டு போறதே உனக்கு வேலையா போச்சி டா..
அதான் உன்னால என்ன ஒன்னும் பண்ண முடியலைல்ல, அப்புறம் ஏன் உனக்கு இந்த வேண்டாத அவமானம்.. ஏற்கனவே அடிவாங்கினது எல்லாம் நினைச்சி பாத்து உன் கோமாளித் தனத்தை இதோட நிப்பாட்டிட்டு, ஓரமா வீட்ல உக்காந்து ஷின்ஷான் பாத்து காமெடி கத்துக்கோ.." என்றதும் பொத்துக் கொண்டு வந்தக் கோபத்தோடு,
"டேய்.. ஆத்வி.. என்ன நீ சாதாரணமா நெனச்சி எடைப்போட்டு ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட.. இப்ப சொல்றேன் கேட்டுக்கோ, நடக்கப் போற இந்த ஆறு நாள் ரெய்டுல உன்ன பொணமாக்கி, எந்த ஒரு சந்தோஷத்தையும் அனுபவிக்காமலே உன் பொண்டாட்டிய விதவையாக்கி, அவளை நடுத்தெருவுல பிச்சை எடுக்க வைக்கல நான் தீபக் இல்ல டா.." சவாலாக கத்த,
"சரி டா.. அப்ப நானே ஒரு நல்ல பேரை யோசிச்சி வைக்கிறேன், மாத்திக்க ரெடியா இரு.." அதீத கோபத்தில் அழைப்பை துண்டித்த ஆத்வி, தீபக் கவியை பேசிய வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் அந்த கோவத்திலே அதிவேகமாக காரைக் கிளப்பினான்.
தன்னைப் பற்றி பேசிய வார்த்தைகள் யாவும் மறந்தவளாக, கடைசியாக சொன்ன தீபக்கின் வார்த்தைகளே கவியின் மனதையும் மூளையும், கலவரமாக ஆக்கிரமிப்பு பண்ணியது.
"இப்போ உனக்கு நிம்மதியா டிஇஇ.." புயல் வேகத்தில் காரை ஓட்டியபடி ஆத்வி கத்த, அதில் திடுக்கிட்டு அவன் பக்கம் திரும்பியக் கவி, எதுவும் பேசாமல் கண்ணீரில் கரைவதை எரிச்சலாக பார்த்தவன்,
"நல்லா அழு டி இன்னும் நல்லா அழு, பெரிய இவ மாதிரி ஃபோன பிடுங்கி ஸ்பீக்கர்ல போட்டெல்ல, இதுக்காகவே இன்னும் கூட கத்தி அழு.. அதிங்கப்ரசங்கித் தனமா நடந்துகிட்டா இப்படிதான் அழனும்.." என்றபடி அவன் காரை அசுர வேகத்தில் செலுத்த, அதை எல்லாம் எங்கே அவள் கவனிக்கும் நிலையில் இருந்தாள்.
"நீ.நீங்க ரேஸ்க்கெல்லாம் போக வேண்டாம் வீட்லே இருங்களேன்.." தடுமாற்றமும் அழுகையுமாக சொல்லி முடிக்க, மீண்டும் சட்டென காரை நிறுத்தியவன்,
"என்ன டி நான் செத்தா பிச்சை எடுக்கனும்னு அவன் சொன்னானே, எங்கே உண்மையா அந்த நிலை வந்துடுமோன்னு பயத்துல சொல்றியா..' பகடியாக கேட்கவும் வெடுக்கென அவனை முறைத்த கவி,
"எங்கயாவது போய் தொலைங்க, நீங்க இல்லைனா நான் இன்னும் ரொம்ப ரொம்ப நிம்மதியா சந்தோஷமா தான் இருப்பேன்.. நீங்களாச்சி அந்த ஆளாச்சி..
நீங்க எங்கிட்ட பேசாம ஒதுங்கி இருந்தாலே போதும்.." கோவமாக பேசியப்போதும், நடுங்கி வந்த வார்த்தையும், தொண்டைக் குழியில் எச்சில் கூட்டி விழுங்க சிரமப்படுவதையும், ஆத்வியின் கூர் விழிகளில் விழாமல் இருக்குமா என்ன!
மின்னல் வேகத்தில் அவளிடம் நெருங்கி மல்லிகை சூடி இருந்த கூந்தளோடு பின்னங்கழுத்தை பிடித்து, தன் முகத்துக்கு நேராக அவள் முகத்தை கொண்டு வந்தவன்,
"நான் தொலைஞ்சா உனக்கு அவ்ளோ சந்தோஷமா ம்ம்.. கூடிய சீக்கிரம் அந்த சந்தோஷத்தை நீ அனுபவிப்ப, அப்ப சொல்லு எவ்ளோ சந்தோஷமா இருந்தேன்னு..
அதுக்காக உன்ன சும்மா விடுவேன்னு நினைக்காத, ஈவினிங் லடக் கிளம்புறதுக்குள்ள, எனக்கு தேவையானதை உங்கிட்ட அனுபவச்சிட்டு தான் போவேன்.. எல்லாத்துக்கும் தயாரா இரு.." என்றவன் அடுத்த நொடியே அவள் செவ்விதழின் மென்மையை, தன் இதழுக்குள் பூட்டி இருந்தான்.
கவியின் திகைப்பு தெளியும் முன்னவே, நாகத்தின் விஷத்தை அதிவேகமாக உறிஞ்சி இழுப்பதை போல, அவனை அதிகபடியாக போதை ஏற்றி ஆண்மையை கட்டி இழுக்க காரணமாக இருக்கும் அவளின் இதழின் இனிமையான விஷத்தை, உறிந்து குடித்தான் போதை ஏற்றும் விஷஅமிர்ததை.
விட்டால் இருவரும் மூச்சி முட்டி இறந்துவிடும் நிலை. ஆனால் அவனும் விலகவில்லை, அவளும் விலக்கவில்லை. இருவருக்குமே வெவ்வேறு எண்ணங்கள்.
ஆத்விக்கோ தீபக் மேல் இருக்கும் கொலை வெறியும், கேட்டக் கூடாத விடயங்களை கேட்டு விட்டாளே என்ற கோவமெல்லாம் ஒருசேர அவள் இதழில் காட்ட,
கவிக்கோ எப்படியாவது இந்த ரேஸ் கேன்ஸலாகி விடக் கூடாதா..? ஆத்வி எங்கும் செல்லாமல் வீட்டிலே இருந்துவிடக் கூடாதா..? என்ற எண்ணத்தில், அவனுக்கு தன் இதழை இறையாக விட்டு, கண்மூடி அவனுக்காக கடவுளிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள்.
வீடு வரும் வரை இருவரும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக் கொள்ளவில்லை. இருவரும் வெவ்வேறு மனநிலையில் இறங்கி வீட்டு வாசலில் நிற்கவும், மித்ரா அவர்களுக்கு ஆரத்தி எடுக்க, குடும்பத்தினர் இன்முகத்தோடு அவர்களை வரவேற்று அழைத்து சென்றனர்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 43
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.