Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
245
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 44

ஸ்வாமி அறையில் விளக்கேற்றி பூஜைகளை முடித்ததும், வாடிக்கிடக்கும் மனைவியின் முகம் பார்த்து விட்டு அறைக்கு சென்று விட்டான் ஆத்வி.

அவன் போனதைக் கூட நிமிர்ந்துப் பார்க்காமல், சோகமாக இருந்த கவியின் முகத்தை நிமிர்த்திய மித்ரா,

"எனக்கு உன் மனநிலை நல்லா புரியிது கவி, அதுக்காக இப்டி சோகமா இருந்தா சரியாகிடுமா சொல்லு, நாளாக நாளாக எல்லாம் சரியாகிடும்டா.. என்னவோ தெரியல உன்ன பார்த்த நாளுல இருந்தே என் மனசு நீ எனக்கு ரொம்ப நெருங்கின உறவா இருப்பியோன்னு மனசு அடிச்சிக்குது. இதுக்கு பேர் என்ன உணர்வுனு..

சொல்லத் தெரியல, ஆனா உன்ன கூட வச்சுக்கணும்னு ரொம்ப ஆசை.. விதிவசத்தால நீ என் மருமகளாவே வந்துட்ட.." ஆசையாக அவள் கன்னம் வருடவும், கவி மனதில் மேலும் தான் குழப்பம் அதிகரித்தது.

"சரிடா நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு, நான் உனக்கு சூடா பால் கொண்டு வரேன், ஸ்வாதி நீயும் கவிகூட போய் ரெஸ்ட் எடுமா, ஒரே இடத்துல உக்காந்து இருந்தது முதுகு வலிக்கும்.." இருவரையும் ஓய்வு எடுக்க அறைக்கு அனுப்பும் நேரம்,

கவிஇஇ.. என்ற உரிமையான அழைப்புக் குரல், மாடியில் இருந்து சத்தமாக அனைவரின் செவிகளையும் தீண்டியது.

மிரண்டு போன முயல்க்குட்டியாக ஸ்வாதியின் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, கால் பாதத்தை அழுத்தமாக பதித்து நின்ற கவியின் இதயம், அதிவேகத்தில் துடித்தது கணவனின் கனீர் குரலில்.

அனைவரும் சத்தம் வந்த திசையை பார்த்து விட்டு கவி புறம் பார்வையை செலுத்தவும், மித்ராவின் பார்வை மட்டும் முறைப்பாக கணவன் புறம் இருந்தது.

ஆதியின் பார்வையும் அவளின் மீது தான், "இங்க என்ன டி லுக்கு.." புருவம் ஏற்றி இறக்க,

"இந்த விஷயத்துல மட்டும் அப்பனும் பிள்ளையும் எப்டி ஒரே மாதிரி இருக்காங்களே.." அவள் மனதில் நினைப்பது கடவுளுக்கு கேட்குமோ இல்லையோ, அவள் கள்வனுக்கு சரியாக கேட்டு விடும்.

"ஆமா அதுக்கென்ன இப்ப வரியா ரெண்டுல ஒன்னு பாக்கலாம்.." விரைப்பாக அவன் எழுவதை போல் பாவ்லாக் காட்ட,

"இப்போதைக்கு நான் எதுவும் பாக்க வேணாம் சாமி, அப்டியே அமைதியா உக்காருங்க.. பிள்ளைங்க முன்னாடி மானத்தை வாங்காம.." கையெடுத்து கும்பிட்டு சைகையில் சொல்ல, உதடு பிதுக்கி பாவமாக அழும் சிறுவனாக மாறிப் போனான்.

"கவிஇஇ.. இப்ப வரியா இல்லையா.." முரட்டுக் கள்ளன் தான் விடாமல் கத்துவது. அவள் பயந்து நிற்பதை கண்டு சங்கடமாக உணர்ந்த மித்ரா,

"கவி பயப்படாம போம்மா, ஏதாவது உன்கிட்ட பேசனுமா இருக்கும்.." என்றாள் மென்மையாக.

இறுக்கமாக தன் கையை பற்றி இருக்கும் அவள் கரத்தை எடுத்து விட்ட ஸ்வாதி, "போ கவி, அதான் ஆண்டி சொல்றாங்ள்ள, இனி ஆத்வி சார் உன் ஹஸ்பண்ட் அவர் கூப்ட்டா உடனே என்னனு போய் கேக்கணும்,

ஏதாவது அவசரமா இருக்கும், அதான் விடாம கூப்பிட்றார் போல, போ.." என அவள் முதுகை பிடித்து தள்ளி விட, மித்ராவையும் அவளையும் மாறி மாறி பார்த்தபடியே, கலவர மனதோடு படியேறி சென்றாள்.

சீறும் சிறுத்தை போல அந்த விசாலமான அறையில் வேகமாக நடந்து வட்டமடித்துக் கொண்டிருந்தவனுக்கு, அப்படி ஒருக் கோவம் பொங்கியது. அறைக்கு வந்ததும் அவளும் தன் பின்னாலே வருவாள் என்று எதிர்ப்பார்த்திருக்க, அவன் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் விதமாக, இத்தனை நேரம் அவன் வாய் ஓயாமல் கத்தியும், அவள் வருவது போல் தெரியவில்லை.

எப்படி வருவாள், அவள் தான் அவன் அறைக்கு வெளியவே பட்டா வாங்கி அழுத்தமாக நின்று விட்டாளே!

"ஏய்ய்ய்.. கவிஇஇ.." மீண்டும் அதிரும் குரலில் அவன் கத்திய கத்தில், நெஞ்சிக் கூடு ஏறி இறங்க அடுத்த நொடியே உள்ளே ஓடி வந்தாள் கவி.

அவள் வந்ததை பார்த்ததும் வேகமாக அவளருகில் நெருங்க, ரத்த அழுத்தம் அதிகரிக்கும் அளவுக்கு மூச்சி வாங்கியபடி, பின்னால் அடியெடுத்து வைக்கும் சமையம், சடாரென அவள் இடையில் கைவிட்டு தன்னோடு ஒட்டி இழுத்திருந்தான் ஆத்வி.

விட்டால் அழுது விடும் நிலை அவளுடையது. அவனோ விட்டால் அவளை முழுதாக விழுங்கி ஏப்பம் விட அல்லவா காத்திருந்தான்.

கொஞ்சம் கூட பழகாத சேலையைக் கட்டிக்கொண்டு, அவள் படும் அவஸ்தைகளை சொட்டு விடாது ரசித்து போதை ஏற்றிக் கொண்டவனுக்கு, இத்தனை அருகில் ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் பொன்மேனி அழகோடு, ஆண்மேனியை ஒட்டி உறவாடியவளை கண்டதும், தொண்டைக் குழி ஏறி இறங்கியது.

வெகுநேரமாக அவன் கைவளையில் சங்கடமாக நெளிந்து கொண்டிருந்தவளுக்கு, ஆடவனின் பார்வை அம்புகள் செலுத்திய இடமெங்கும் குறுகுறுத்து, கன்னங்கள் இரண்டும் செந்தூரமானது.

அவன் இருந்த கோவத்தில், காரணமின்றி அடிப்பான் திட்டுவான் என எதிர்பார்த்து அவள் பயந்திருக்க, அதற்கு மாறாக பார்க்கும் பார்வையாலே, பெண்ணவளின் மனதில் சில்லென்ற தென்றல் வீச வைத்தான்.

"ஏன் மேடத்துக்கு நான் கூப்பிடாம வரத் தெரியாதா.. அப்டி கத்துறேன் காதுல விழுந்துச்சா இல்லையா.. ஓஹ்.. மறந்துட்டேன், உனக்கு தான் காது கேக்காதே, அப்போ நான் எவ்ளோ கத்தினாலும் செவிடன் காதுல சங்கூதுற கதை தான் இல்ல.."

தான் அழைத்ததும் மனைவி வரவில்லையே என்ற கோவத்தில் வேண்டுமென்றே அவளை காயப்படுத்த வார்த்தைகளை விட, தென்றலாக வீசிய உணர்வுகள் யாவும், சட்டென வடிந்து போயின.

இதுவெல்லாம் பலமுறை பலதரப்பட்ட ஆட்களால் கேட்டு எளிதாக கடந்து வந்த ஒன்று தான் என்றாலும், அடிக்கடி மனதுக்கு நெருங்கியவர்கள் குத்திக்காட்டி இகழ்ந்து பேசும் போது தான், தீக்கங்குகளை வாரிக் கொட்டுவது போல பாவப்பட்ட மனம் எரிகிறது.

"என்ன டி எது சொன்னாலும் அமைதியா இருக்க, மெஷினும் வேலை செய்யலையா.." மீண்டும் நக்கலாக கேட்க, முகம் சிவக்க முறைத்த கவி,

"அப்டி ஒன்னும் இந்த காது கேக்காதவளை கல்யாணம் பண்ணி கஷ்டப்படணும்னு உங்களுக்கு எந்த ஒரு அவசியமும் இல்லையே.. நீங்களா தானே குடும்பமா பிளான் போட்டு கல்யாணம் பண்ணிக்கிடீங்க..

ஒரு வார்த்தை என்கிட்ட உனக்கு விருப்பமானு கேட்டா செஞ்சீங்க, நாய இழுட்டு போயி அது கழுத்துல பெல்ட்ட மாட்டி விடுற மாதிரி, என்ன பழி வாங்க தானே என் கழுத்துல இந்த தாலிய கட்டினீங்க..

இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல, என்ன விட்டுட்டு உங்க தகுதிக்கு ஏத்தவளா பாத்து உங்க வாழ்க்கைய வாழுங்க.. எந்த விதத்துலவும் உங்க வாழ்க்கைக்கு குறுக்க நான் வரவே மாட்டேன், உரிமை கொண்டாடிட்டு..

ஏற்கனவே ஒருத்தி வயித்துல குழந்தைய கொடுத்து கல்யாணம் வரை வந்து, துரத்தி விட்டவர் தானே நீங்க, இதையும் செய்ங்க.." என்றது தான் தாமதம், மீண்டும் கோபத்தில் திளைத்த ஆத்வி, அவள் கழுத்தை பற்றி, சுவரோடு ஒட்டி அந்திரத்தில் தூக்கி இருந்தான்.

"ஏய்ய்.. இங்க பாரு இந்த எடுத்தெறிஞ்சி வாய்க் கொழுப்பா பேசுற வேலையெல்லாம் என்கிட்ட வச்சிக்காத.. எப்பவும் பொறுமையா போயிட்டு இருக்க மாட்டேன், ஒரே அழுத்து தான் நேரா பரலோகம் போயிடுவ..

ஆமா நீ சொன்ன மாதிரி உன்ன பழி வாங்க தான் தாலி கட்டினேன், அதுக்கு என்ன இப்போ.. நீ எனக்கு கொடுத்த அவமானங்களை ரெண்டு பங்கா திருப்பிக் கொடுக்க வேண்டாமா.." கண்கள் சிவக்க அவன் சன்னமாக சொல்லிய விதத்தில் அச்சத்தில் ஒடுங்கிய கவி, கழுத்தை விட்ட வேகத்தில் தரையில் மடிந்து விழுந்தாள்.

கைக்கட்டி நின்று, இரும்பும் அவளை நிதானமாக வேடிக்கைப் பார்த்தவன், அடிமேல் அடியெடுத்து வைத்து ட்ராயரை திறந்த ஆத்வி, அதிலிருந்த சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்தவனாக, புகையை இழுத்து விட்டு மீண்டும் ஸ்லோமோவில் நடந்து வந்து கவி முன்பு மண்டியிட்டவாறே, அவள் கன்னம் பற்றியவன்,

"இப்ப சொல்றேன் கேட்டுக்கோ, உன்ன பழி வாங்க தான் இந்த கல்யாணத்தை பண்ணிக்கிட்டேனே தவிர்த்து, உன்மேல எனக்கு எந்த ஒரு ஆசையும் இல்ல, ஒரு மண்ணும் இல்ல.. ஏற்கனவே சொன்ன மாதிரி,

எனக்கு எப்ப நீ சலிச்சி போறியோ, அன்னைக்கே உன்ன தூக்கி வீசிடுவேன்.." முரட்டுத்தனமாக அவள் கன்னம் உளுக்கி சொன்ன விதத்தில், தாமதமாக தான் விட்ட வார்த்தைகளுக்காக அர்த்தங்கள் விளங்கி மனதை கலங்க வைத்தது.

அவன் இழத்து விடும் புகையின் வாசம் கவிக்கு கொமுட்டளை ஏற்படுத்த, ஆத்வியின் பிடி விலகியதும் வேகமாக எழுந்தவளாக, கண்ணீரை துடைத்தபடி அங்கிருந்து ஓட போன சமையம், மீண்டும் அவள் இடையினை பிடித்து தன்னிடம் இழுக்கவும், மென்பாகங்கள் மோதியதில் அவன் கோவங்கள் தனிந்து, பாவையின் ரகசிய அழகுகளை வஞ்சனையின்றி ரசித்துப் பார்த்தான் ஆத்வி.

தன்னிடமிருந்து விடுபட திமிறியவளின் மெல்லிடை உடையும் அளவிற்கு, தன்னோடு இறுக்கிப் பிடித்தவன்,

"இன்னும் கொஞ்ச நேரத்துல நான் லடக் போறேன், உன் ஆசைப்படி நான் திரும்ப வராம அப்டியே தொலைஞ்சி போனா ரொம்ப நிம்மதியா தானே இருப்ப.." அவள் விழிகளில் தன் விழிகளை கலக்கவிட்டு, பெண் முகத்தில் தெரியும் பலவிதமான உணர்ச்சிப் பெருக்குகளை உள்வாங்கியபடி கேட்டான்.

தொண்டைக் குழி அடைக்கும் உணர்வோடு, அவனை வேதனையாக கண்ட கவி, பதிலுக்கு எதுவும் பேசாமல் அவன் கையில் இருந்தும் விட்டு விலக நினைக்காமல், அமைதியாக தலை குனிந்துக் கொண்டாள்.

அவளின் அந்த அமைதி தான் அவனை சாந்த்த படுத்தியது போலும். இதுவே பதிலுக்கு பதில் பேசி, "ஆமா நிம்மதியா இருப்பேன்.." என்று மட்டும் சொல்லி இருந்தால் கடோஜகனாக மாறி இருந்திருப்பான் நிச்சயமாக.

பாவையின் மென்மையில் பதிந்த கண்கள் கள்ளுண்ட வண்டாக கிறக்கத்தில் சிவந்திருக்க, ஏதோ வீரியம் வாய்ந்த பூச்சி ஒன்று அவள் மூக்கில் அமர்ந்து கடித்து வைத்ததை போல, செக்கசெவேலென்று அந்த மூக்கு நுனி சிவந்து இருப்பது தான் எத்தனை அழகு.

மெல்ல தன் முகம் நோக்கி அவன் குனியவும் முரண்டு பிடிக்க எண்ணாதவள், இதயம் படபடக்க கருமணிகளை உருட்டி விழித்தாள் கவி.

நா கொண்டு அவள் நுனி மூக்கில் கோலம் வரையவும், உடல் சிலிர்த்து கண்களை இறுகமூடி கால் பாதத்தை அழுத்தமாக தரையில் பதித்து, பொம்மையாக மனைவி நின்றவிதம், ஊருக்கு செல்ல வேண்டியவனை பித்தனாக்கியது அவள் மீது.

சூடான மூச்சிக் காற்றுடன் சில்லென்ற எச்சில் காற்றும் சேர்ந்து பாவையில் முகத்திலும் சுவாசத்திலும் கலந்து, இதமான உணர்வை தோற்றுவிற்றது.

இருவரும் நாக்கு மூக்கு எச்சில் கோலத்தில் உணர்வுகள் மூலம் வர்ணஜாலம் தீட்டிக் கொண்டிருக்க,
"தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே.. வெச்ச கண்ண எடுக்கலையே மயக்கிட்டியே.."

என்ற பாடல் காதை கிழிக்கும் சத்தத்தில் ஹோம் தியேட்டரில் அதிரவும், இருவரும் அவசரமாக பிரிந்து நின்று ஒன்றும் புரியாமல் விழித்த சமையம்,

திடீரென இருவரின் காலுக்கு கீழ் இருந்து எலிக் குட்டி ஒன்று ஊர்ந்து வெளிவரவும், பயத்தில் முகத்தை மூடிக் கொண்டு "ஆஆ..அம்மாஆ.".என கவி கத்த, ஊர்ந்து வந்த எலியை லபக்கென கையில் தூக்கி இருந்தான் ஆத்வி.

"ஏய்.. வாலு.. உன் வேலை தானா இது.." ஆத்வியின் பேச்சி சத்தம் கேட்டு மூடிய கையை முகத்தில் இருந்து எடுத்து, கண் திறந்து பார்த்த கவிக்கு இப்போது தான் மூச்சே சீரானது.

"எவ்ளோ நேரம் உன்னையும் நர்ஸ் ஆண்டியும் கூப்பிட்றது மாம்ஸ்.. அதுக்குள்ள நீ நர்ஸ் ஆண்டிய பேட் டச் பண்ணிட்டு இருந்த, தான் பாட்டுப் போட்டு விட்டு நர்ஸ் ஆண்டிய காப்பாத்தினேன்.." குட்டி வாண்டு பெருமையாக சொல்லவும் கவிக்கு சிரிப்பு வந்து விட, ஆத்வியோ இருவரையும் மாறி மாறி முறைத்து வைத்தான்.

"இப்ப நானும் அவளும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப், நான் ஒன்னும் அவளை பேட் டச் பண்ணல பாப்ஸ்.." முகம் சுருக்கி முறைப்பாக பதில் சொன்னவன்,

"அப்புறம், அவ ஒன்னும் உனக்கு நர்ஸ் ஆண்டி இல்ல, வெறும் ஆண்டி தான்.." இம்முறை கவியை முறைத்தபடி சொல்லவும், அவளது மையல் பார்வையில் சிக்குண்டு, "அப்டி பாக்காத டி கண்ட்ரோல் இல்லாம போதை ஏறுது.." கிறக்கமான வாயசையில், அவள் கோபத்தை கூட தூசாக்கி இருந்தான்.

"ஓஹ்.. அப்போ எங்க அம்மா அப்பா மாதிரியா.. ஆனா இதே தானே அன்னைக்கு நான் கேட்டேன், ஆனா நீதானே மாம்ஸ் இல்லனு சொன்ன.. இப்ப திரும்பவும் மாத்தி சொல்ற.." குழப்பமாக தன்யா கேட்டதில், இது எப்போ எனும் விதமாக பார்த்தாள் கவி.

"இந்த குட்டி பிசாசு வேற நேரம் காலம் இல்லாம கேள்வி கேட்டு அட்டகாசம் பண்ணுது.. இதுக்குதான் அஜய் மாமா இவள என்கிட்ட தள்ளி விட்டாரு போல.." வெகுவாக மனதில் நொந்த ஆத்வி,

"அன்னைக்கு நீ கேட்டப்போ உங்க ஆண்டிய நான் மேரேஜ் பண்ணலையே, இன்னைக்கு மார்னிங் தானே எங்களுக்கு மேரேஜ் ஆச்சி.. அதான் அன்னைக்கு நீ கேட்டபோது நோனு சொன்னேன்..

இன்னைக்கு எஸ் தான், இனி எப்பவும் எஸ் தான்.." கடைசி வரியை அழுத்தம் கூட்டி குழந்தைக்கு தான் சொன்னானோ! அல்லது வளர்ந்த குழந்தைக்கு சொன்னானோ!

ஆறு நாட்கள் பிரிவு இருவருக்குமே பெரிய போராட்டமாக இருந்தது. என்னதான் மனதை காயப்படுத்தி வார்த்தை எனும் ஈட்டி வைத்து, தன் இதயத்தை குத்திக் கிழித்தாலும், கணவன் என்று வந்து விட்ட பின்பு மானம்கெட்ட மனம் அனைத்தையும் மறந்து, அவன் காலடியில் சரண்புகுந்து கொள்கிறதே!

மூடி இருந்த தனது Benelli TRK 503X பைக்கை அவன் திறக்க, பீஸ்ட் முகம் கொண்டு பார்க்கவே மிரள வைக்கும் விதமாக இருந்த பைக்கிள் ஸ்டைலாக ஏறி அமர்ந்து, உதைத்து அவன் உயிர்பித்த அழகே அழகு தான்.

புது மனைவியை விட்டு பிரிந்து செல்ல மனமில்லை என்றாலும் சென்று தானே ஆக வேண்டும். ஹெல்மெட்டால் மூடிய முகத்திலோ, அத்தனை ஆசை மனைவி மீது மண்டிக்கிடந்தது.

ஏக்கம் நிறைந்த பார்வையை அவள் மேல் வழியவிட்டு, மனைவியின் வாடிய வதனத்தை கண்ணில் நிரப்பிக் கொண்ட ஆத்வி, மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்திருந்தான், வெகு தூர பயம் மேற்கொள்ள.

போகும் கணவனை கண்ணில் இருந்து மறையும் வரை நின்று பார்த்தவளுக்கு உள்ளுக்குள் பெரிதாக பயம் கவ்வியது.

கடைசி நிமிடங்கள் வரை அவனிடம் ரெய்டுக்கு செல்ல வேண்டாம் என சொல்ல முயற்சித்த கவி, அவன் கோவ விழிகள் கண்டே வாயை மூடிக் கொண்டாள்.

நல்லபடியாக அவன் பயணம் மேற்கொண்டு வரவேண்டும் என்று வேண்டாத தெய்வங்கள் இல்லை அவள்.

ஆனால் அவள் வேண்டுதல்களுக்கு ஏதாவது ஒரு தெய்வமாவது செவி சாய்க்க வேண்டுமே!
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 44
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top