Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
245
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 41

"ஸ்வாதிக்கு தனியா சல்வார் இருக்கு, நீ இந்த புடவையக் கட்டிக்கிட்டு ரெடியாகு கவி.." ஆரு அவளிடம் அரக்கு நிற பட்டுசேலையைக் கொடுக்க, அதை தயக்கமாக வாங்க மறுத்த கவி,

"ஆரு மேடம் எனக்கு இந்த புடவை எல்லாம் வேண்டா, எனக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல, நேத்துல இருந்தே லேசான தலைவலி பிடிச்சி இப்ப அதிகமாகிடுச்சி, அதுனால நீங்க எல்லாரும் மட்டும் கல்யாணத்துக்கு போயிட்டு வாங்களேன்.."

எப்படியாவது அந்த திருமணத்திற்கு செல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்கு காரணம் கூறியவளுக்கு, விடிந்தால் வேறு பெண்ணுக்கு ஆத்வி கணவனாகப் போவதை காண, துளியும் விருப்பம் இல்லை.

அவள் மனநிலையை புரிந்துக் கொள்ளாத ஆரு, "இங்க பாரு கவி நடக்க போறது என் தம்பி கல்யாணம், அதுக்கு கண்டிப்பா நம்ம வீட்ல இருந்து ஒருத்தர் கூட மிஸ்ஸாகாம எல்லாரும் போயே ஆகனும்..

தலைதானே வலிக்குது சாப்ட்டு டேப்லெட் போட்டு சரிப்பண்ணிடலாம், அதோட நானே உனக்கு புடவைக்கட்டி விடுறேன்.. அங்க வந்து நீ சும்மா உக்காந்து இருந்தா மட்டும் போதும், கிளம்பு.." அவளை வற்புறுத்தி தயாராக்கி மண்டபம் அழைத்து வந்தாள் ஆரு.

இரவு பெண்ணழைப்பு முக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் நல்லபடியாக நடந்து முடிந்தது. ஆத்வியின் பக்கத்தில் பல்லைக் காட்டிக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்தாள் ஹரிதா. அவள் குடும்பத்தினர் அதற்கு மேல் தலைகால் புரியாத சந்தோஷத்தில் வளம் வந்தனர்.

ஓரமாக நின்று தன்னை பார்ப்பதும், முந்தானையை கையில் சுற்றிக் கொண்டு கலங்கிய விழிகளை மறைக்க, தலை குனிந்துக் கொள்வதுமாக இருந்தவளை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான் ஆத்வி. அதுவும் முதல்முறையாக சேலையில் இருந்த வெள்ளி சிலையை கண்டவன், ப்ஃளாட்டாகிப் போனான் என்று தான் சொல்ல வேண்டும்.

சேலையைக்கட்டிக் கொண்டு வேகமாக ஒரு அடி எடுத்து வைத்தாலும் தடுக்கி விட்டு, சேலையை பிடித்தபடி தடுமாறும் அழகு, ஆத்வியை வெகுவாக அவள் பக்கம் ஈர்த்து விட்டது.

சேலை விலகினால் அதை சரி செய்கிறேன் என்ற பெயரில், எசக்கு பிசக்காக இழுத்துவிட்டு, அந்த புடவையோடு போராடும் அழகோடு, பளிச்சிடும் அவள் வெண்ணிடையில் வழுக்கிக் கொண்டு விழுந்தது, ஆடவனின் கிறங்கிய கண்களும் மனமும்.

தன் அருகில் ஒருத்தி மேக்கப்பில் மூழ்கி இருப்பதெல்லாம் எங்கே அவன் ஏரெடுத்தும் பார்த்தான். மின்னல் இமையழகியின் அஞ்சனை தீட்டிய விழிகள், அடிக்கடி தன்னை கண்டு கலங்குவதையும், கண்ணாடியை மேலேற்றி கலங்கும் கண்களை விரல் கொண்டு ஒற்றி எடுப்பதையும் அல்லவா, விழிகள் கொஞ்ச ரசித்துக் கொண்டிருந்தான்..

இப்போது மனமேடையில் புதுமாப்பிளை தோரணையாக அமர்ந்திருக்க, அதைக்காணப் பிடிக்காதவல் தேங்கிய கண்ணீரோடு வெளியே சென்று விட்டாள் கவி. அவள் செல்வதை ஆத்வியின் கூர் விழிகள் கவனிக்காமல் இல்லை

சாங்கிய சம்பிரதாயங்கள் அமோகமாக ஆரம்பமாக, நேரம் நெருங்க நெருங்க மித்ராவுக்கு தான் மனது படபடவென அடித்துக் கொண்டு இருந்தது.

ஏனோ ஹரிதாவை கொஞ்சமும் மித்ராக்கு பிடிக்கவில்லை. ஆருவுக்கும் அதே எண்ணம் தான், ஆனால் என்ன செய்ய, இருவராலும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில், தங்களுக்குள்ளே ஏதேதோ பேசிக்கொண்டனர்.

"பொண்ண அழைச்சிட்டு வாங்கோ.." என்ற ஐயரின் குரலில் ஹரிதாவின் குடும்பம் கண்ணீரும் கம்பளியுமாக கதறியடித்து ஓடி வந்தனர்,

"ஐயோ எங்க மானத்தை இப்டி சந்தி சிரிக்க வச்சிட்டு ஓடிட்டாளே படுபாவி.." தலையில் அடித்துக் கொண்டு லிங்கத்தின் மனைவி அழ, லிங்கம் செய்வதரியாது கையை பிசைந்து நின்றார்.

எந்த ஒரு அதிர்ச்சியுமின்றி நிதானமாக சட்டையை இழுத்துவிட்டுக் கொண்டு எழுந்த ஆதி, "கல்யாணத்துக்கு அப்டி ஒரு அவசரமா றெக்கை கட்டிட்டு பறந்தீங்களே லிங்கம், இப்ப திடீர்னு என்னாச்சி.. எங்க போனா உங்க பொண்ணு.." ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தமாக வெளிவந்தாலும், கடுமையில் நிறைந்திருந்தது.

"ஆதி என் பொண்ணு கடைசி நேரத்துல இப்டி பண்ணுவான்னு நான் நெனச்சிக் கூட பாக்கல.. என்ன இருந்தாலும் என் பொண்ணு வயித்துல உங்க மகனோட வாரிசு வளருது, அதுக்காகவாது கொஞ்சம் பொறுமையா இருங்க.. அவ எங்க போனானு தேடி கண்டுபிடிச்சி கூட்டிட்டு வந்து உங்க மகனுக்கு கட்டி வைக்கிறேன்.." லிங்கம் அவசரமாக சொல்ல,

"உங்க பொண்ணு வர வரைக்கும், என் பையன் இதே கோலத்துல உக்காந்து காத்திருக்கணும்னு தலையெழுத்தா.." அதியின் திமிரான பேச்சில், தலை குனிந்தார் லிங்கம்.

ஆனால் மனமேடையில் நடக்கும் கூத்தே வேறு.

அக்னிக் குண்டத்தின் முன்பு மாலையும் கழுத்துமாக அமர்ந்திருந்த ஆத்வி, திருமணம் நின்று விட்டதே என்ற பதட்டமெல்லாம் சிறிதுமின்றி, பொண்ணக் காணல என்றதும் மந்திரத்தை நிறுத்தி விட்ட ஐயரை, மீண்டும் மந்திரத்தை தொடங்கக் கூறி மிரட்டியவன்,

கீழே நடக்கும் கூத்தை கருத்தில்க்கொள்ளாமல், கண்ணும் கருத்துமாக அக்னிக் குண்டத்தில் பொறுப்பாக பொறி போட்டு, நெய் ஊற்றியவனை கண்ட சிலர்,
"கல்யாணம் தான் நின்னு போச்சே இவன் எதுக்கு தனியா உக்காந்து மந்திரம் ஓதிட்டு இருக்கான்.." தங்களுக்குள்ளே கிசுகிசுத்து குழப்பமாக பார்த்து வைத்தனர்.

சட்டென யோசனையான லிங்கம், "இந்த கல்யாணம் நடக்கலைனா என்ன ஆதி, அதான் ஏற்கனவே உங்க பையனுக்கும் என் பொண்ணுக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் ஆகிடுச்சே.. சட்டப்படிப் பாத்தா போன மாசமே என் பொண்ணு உங்க வீட்டு மருமகளாகிட்டா..

அதனால வந்தவங்க எல்லாரையும் திருப்பி அனுப்பிடலாம், என் பொண்ணு கிடைச்சதும் நேரா உங்க வீட்டுக்கு அனுப்பி வச்சிடுறேன்.." அப்போதும் மீசையில் மண் ஒட்டாத கதை அவருடையது.

"வந்தவங்கள நான் ஏன் திருப்பி அனுப்பனும், நியாயப்படி பாத்தா உன்னையும் உன் குடும்பத்தையும் தான் கழுத்தை பிடிச்சி வெளிய தள்ளனும்.." என்றவன் இரண்டு கைகளையும் அவர் முகத்துக்கு நேரே நீட்டி முறித்து நெட்டை முறிக்கவும் கோவம் கொண்ட லிங்கம்,

"என்ன ஆதி மரியாதை எல்லாம் தேஞ்சி, பேச்சி ஒரு தினுசா இருக்கு, நான் உங்க சம்மந்தி நியாபகம் இருக்கட்டும்.." என்றவரை ஏற இறங்கப் பார்த்தவன்,

"ஹேய்.. ஹெஹேய்.. யாரு யாருக்கு சம்மந்தி, உன் சம்மந்தி எவனோ அவன்கிட்ட போய் பேசு..
இப்ப நீ இடத்தை காலிப்பண்ணா நான் என் பையனுக்கு நல்லபடியா கல்யாணத்தை பண்ணி வைப்பேன்.." என்றதும் அதிர்ந்து போன லிங்கம்,

"ஆதி அது எப்டி முதல் மனைவி என் பொண்ணு இருக்கும் போது, உங்க பையனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க முடியும்.. என் பொண்ணுக்கு ஒரு நியாயம் கிடைக்காம நான் இந்த கல்யாணத்தை நடக்கவிட மாட்டேன்.." ஆவேசமாக உரைத்தவர் பின் யோசனை வந்தவறாகழ் அப்ப கூட பொண்ணு எதுவும் இல்லையே எப்டி இந்த கல்யாணம் நடக்கும் என்றார் கேலியாக.

"டாட்.. ஓவரா பேசுறான் ராஸ்கல், சட்டுபுட்டுனு நீங்க முடிக்கிறீங்களா இல்ல நான் வரவா.." மனமேடையில் இருந்து லிங்கத்தை முறைத்தபடி எழப்போனவனை தடுத்த ஆதி,

"என்ன நடந்தாலும் தாலிக்கட்டுற வரை அங்கிருந்து நீ எழக் கூடாது ஆத்வி உக்காரு.." தந்தையின் கட்டளையான குரலுக்கு கட்டுப்பட்டு அமர்ந்தவன்,

"யோவ் நீ என்னய்யா அடிக்கடி மந்திரத்தை நிப்பாட்டி அதிர்ச்சியாகிட்டு இருக்க, ம்ம்.. அடுத்த மந்திரம் சொல்லு.." கோவத்தில் அவரிடம் கடுகடுக்க, பயத்தில் தப்பு தப்பாக உளறி வைத்தார் ஐயர்.

"அப்பனும் புள்ளையும் சேந்து ஏதோ கேம் ஆடுறீங்க.. எனக்கு இப்ப நல்லா புரிஞ்சி போச்சி, நீங்க தான் என் பொண்ண மிரட்டி இங்கிருந்து அனுப்பி வச்சிருக்கணும்.. உண்மைய சொல்லு ஆதி, எங்க என் பொண்ணு.."ஆவேசமாக ஆதியின் சட்டைக் காலரை பிடித்த லிங்கத்தின் கரத்தில், புல்லட் சீறிப் பாய்ந்து துளையிட்டு சென்றது.

அனைவரும் அதிர்ச்சியில் திகைத்துப் போக, மகனிடம் பார்வையை செலுத்திய ஆதி, "என்ன டா இது.." என்பது போல் பார்வையாளே வினவ,

"நீங்க தானே டாட் இங்கிருந்து எழக் கூடாதுனு சொன்னீங்க அதான்.." கண் சிமிட்டி சொல்லவும், மெல்லமாக புன்னகைத்துக் கொண்டான்.

ஸ்ஸ்... ஹாஆஆ.. என்ற அலறளோடு அவன் சட்டையில் இருந்து கையெடுத்த லிங்கம், "டேய்..என்னையே ஷூட் பண்ணிட்டல்ல, உன்ன நான் சும்மா விட மாட்டேன் டா..

என்கிட்ட உங்க ரெண்டு பேருக்கும் சட்ட ரீதியா கல்யாணம் ஆனதுக்கு ஆதாரம் இருக்கு, அதை வச்சே என் பொண்ணு வாழ்க்கைய கெடுத்து நாசம் பண்ணதுக்கும், என்ன சுட்டதுக்கும் உன்ன தூக்கி நான் ஜெயில்ல வைக்கல நான் சிவலிங்கம் இல்லடா.." குருதி வழியும் கையோடு அவர் வசனம் பேச,காதை குடைந்த ஆத்வி,

"என் டாட் சட்டைல கை வச்சதுக்கே உன்ன கொன்னு போட்ருக்கணும், கல்யாணம் நடக்கற இடத்துல எதுக்கு வீணா ஒரு பொணம்னு தான் வெறும் கையோட நிறுத்திகிட்டேன்.. நீ சொன்னியே ஆதாரம் அதை வச்சி நீ ஒரு மண்ணும் செய்ய முடியாது.."

மனமேடையில் இருந்தபடியே நக்கலாக ஆத்வி சிரிக்கவும், ஒன்றும் புரியாமல் அழுதுக் கொண்டிருந்த அவர் மனைவிக்கு கண்ணைக் காட்டி, ஹரிதா அவரிடம் கொடுத்த டாக்குமெண்ட்டுகளை எடுத்து வர சொல்லிப் பார்த்தவர் அதிர்ந்துப் போனார்.

"இல்ல இல்ல இதெல்லாம் பொய்.. என் பொண்ணு உன்கிட்ட சைன் வாங்கின டாக்குமெண்ட்ஸ் இதில்ல.. ஏதோ ஃபோர்ஜெரி பண்ணி இருக்கீங்க.." ஆத்திரத்தில் அவர் கத்த,

"ஃபோர்ஜெரி பண்ணது நீயும் உன் குடும்பமும் தான் லிங்கம்.." ஆதியின் கர்ஜனையில் வெலவெலத்து போனவர்,

"ஆதி தேவை இல்லாம ஏதேதோ பேசி எங்க குடும்பத்தை அசிங்கப்படுத்திட்டு இருக்க.." அப்போதும் லிங்கம் எகிறவும்,

"உன்னயெல்லாம் ஆளா மதிச்சி இவ்ளோ நேரம் பேசினதே எங்களுக்கு தேவைஇல்லாத வேலை தான், இனிமே நேரத்தை கடத்தாம விஷயத்துக்கு வரேன்..

உன் பொண்ணுக்கு ஏற்கனவே ரெண்டு கல்யாணம் முடிஞ்சி, ரெண்டு முறையும் விவாகரத்து ஆகி, முதல் புருஷனுக்கு ஒரு பிள்ளையும், ரெண்டாவது புருஷனுக்கு ரெண்டு பிள்ளையும் அபாஷன் பண்ணி இருக்கா..

விவாகரத்து வாங்கும் போது அந்த ரெண்டு அப்பாவி பசங்களோட சொத்தையும் சேத்து மொட்டை போட்டு நடுத்தெருவுல நிறுத்திட்டு, இப்ப மூணாவதா ஒருத்தன் கூட லிவ்வின்ல இருந்து பிரகனண்ட் ஆகிட்டா.. ஆனா அது அவளுக்கே தெரியாம விட்டதால, அபாஷன் பண்ற கட்டத்தை தாண்டி ஒன்னும் பண்ண முடியாம போச்சி..

அவக் கூட லிவ்வின்ல ஒருத்தன் இருந்தானே, அவன் உன் பொண்ணுக்கு மேல பெரிய ஃபிராடு.. அவ அவளோட புருஷனுங்ககிட்ட அடிச்ச சொத்தயெல்லாம் ஒட்டுமொத்தமா அவன் சுருட்டிட்டு போய்ட்டான்.. இதனால உங்க பிசினஸ்ல பெரிய பெரிய லாஸ், பிசினஸ எப்டி முன்னுக்கு கொண்டு வரணும்னு நீங்க நினைக்கும் போது தான், என் பையனை வச்சி கேம் ஆட தொடங்கி இருக்கீங்க.."

ஏற்கனவே என் பொண்ண உன் பையன்னு நான் கட்டிக் கொடுக்க மாட்டேன்னு சொன்னத மனசுல வச்சி, என் பையன் மூலமா சொத்தை ஆட்டையப் போட்டு, எங்களுக்கு நாமத்தை போட நெனச்ச..

ஆனா என்ன செய்ய, உங்க பிளான் எல்லாம் எங்க என் சட்டை பாக்கெட்ல லிங்கேசா.." கெத்தாக மீசையை முறுக்கி விட்ட ஆதி,

"எப்டியும் இப்படி ஒரு கிறுக்கு வேலை பார்த்து, டாக்குமெண்ட்டும் கையுமா உன் பொண்ணு வருவான்னு ஒரு கெஸ்ஸிங் இருந்துது.. அதான் சும்மா அதுல என் பையன் கிறுக்கிப் பாத்து விளையாண்டு இருப்பான்.." நக்கலாக கூறவும், அதனை பிரித்துப் பார்த்த லிங்கம், ஆத்வியின் கிறுக்களை கண்டு அதிர்ந்து போனார்.

"எல்லா உண்மையும் தெரிஞ்சி எப்டி கல்யாணம் வர வந்த காரணம், உன் பொண்ணுக்கும் என் பையனுக்கும் கல்யாணம் பண்ணி வைச்சி ஆசீர்வாதம் பண்ணனு நினைச்சியா..

என் பையனுக்கும், அவன் மனசுக்கு பிடிச்ச பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க.. அதை பாத்து நீ, ஐயோ வட போச்சேன்னு தலைல முக்காடு போட்டு ஓடணும்..

நீயும் உன் பொண்ணும் தப்பானவங்களா இருந்தாலும், உன் குடும்பம் தப்பானது இல்ல.. அந்த ஒருக் காரணத்துக்காக மட்டும் தான், இப்ப நீ என் முன்னால உயிரோட நின்னு பேசிட்டு இருக்க.."

சிம்மக் குரலில் ஒவ்வொரு உண்மையும் ஆதி பிட்டு பிட்டு வைக்கவும், மூச்சி விட மறந்த லிங்கம்,

"நீ.நீ.. சொல்ற மாறி எதுவும் இல்ல, எந்த ஒரு திட்டத்தோடவும் நாங்க வரல.. இதெல்லாம் அப்பட்டமான பொய்.. வீணா என் பொண்ணு மேல பழிப் போடறீங்க.." மாட்டிக் கொண்ட பயத்தில் அவர் தெளிவாக உளற,

"யோவ் லிங்கு.. கொஞ்சம் நேரம் அப்டி ஏதாவது ஒரு மூலைல போய் உளறிட்டு இரு, முகூர்த்த நேரம் முடியப் போகுது.. கல்யாணம் முடிஞ்சதும் பொறுமையா உன் பிரச்சனைக்கு வரோம்.." ஆத்வி கை கடிகாரத்தை பார்த்தபடி சொல்ல, இரண்டு பெரிய பாடிகார்ட்ஸ் வந்து லிங்கத்தை குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர்.

பயத்திலே மந்திரம் சொல்லிக் கொண்டு இருந்த ஐயரோ, "தம்பி நேக்கு தெரிஞ்ச எல்லா மந்திரத்தையும் வாய் வலிக்க சொல்லி முடிச்சிட்டேன், இதுக்கு மேல சொல்ல ஒன்னும் இல்லப்பா.. பொண்ணு வந்தா தாலிக்கட்றது தான் பாக்கி.." என்றார் பாவமாக.

அவரின் பயந்த முகத்தை பார்த்த ஆத்வி, "பொண்ணு ஆன் தி வே, அதுவரைக்கு சும்மா உக்காந்து ஓப்பி அடிக்காம நீ திரும்ப முதல்ல இருந்து மந்திரத்தை ஸ்டார்ட் பண்ணு.." என்றதும் ஆஆ.. என வாய் பிளந்த ஐயருக்கு, அவரே வாய் கொடுத்து வம்பில் மாட்டிய நிலையானது.

ஆத்வியின் அருகில் ஒன்றும் புரியாத நிலையில், மலங்க மலங்க விழித்துக் கொண்டு கழுத்தில் மாலையோடு அமர்ந்திருந்த கவியின் கழுத்தில், இமைக்கும் நொடிதனில் மூன்று முடிச்சிட்டு, அவனின் சரிபாதியாக மாற்றி இருந்தான் ஆத்விக்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 41
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top