- Messages
- 245
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 42
மணப்பெண் யார் என்ற கிசுகிசுப்போடு வந்திருந்த விருந்தினர்கள் யாவும் ஒவ்வொரு மனநிலையில் அமர்ந்திருக்க, வேறு ஒரு பெண் கழுத்தில் தாலிக் கட்டுவதை பார்க்க முடியாமல், எதையோ பறிகொடுத்ததை போல, தன்னை மீறியும் கலங்கும் விழிகளோடு சாலையின் ஓரம் நடந்து கொண்டிருந்தாள் கவி.
மண்டபத்திற்கு சற்று தூரத்தில் உள்ள கடற்கரையில் நின்று இலக்கில்லாமல் கடலை வெறித்தவளுக்கு, ஆத்வி மீது உள்ளது காதலா, ஈர்ப்பா அல்லது கோவமா வெறுப்பா என்றெல்லாம் நிதானமாக யோசித்து முடிவெடுக்கும் சூழல், இதுவரை அமையவில்லை.
காரணம் அவள் மனதில் ஆழ்துளை கிணராக, அவளது மாமா மட்டுமே முழுக்க முழுக்க துளையிட்டு நிறைந்திருக்க, ஆத்வி யார் என்ற குழப்பம் தான் அதிகமாக அவள் மூளையை ஆட்டிப்படைத்தது.
அவள் உள்மனம் இவன் தான் அவன் என்று அடித்துக் கூறி உண்மையை புரிய வைத்தாலும், 'எப்படி சாத்தியம்..? தன்னை ஊனம் என்று அடிக்கடி குத்திக்காட்டி மனதை கிழிப்பவனா என்னைப் போன்ற ஒருவளை ஏற்றுக் கொண்டு காலம் முழுக்க வாழப் போகிறான்' விரக்தியாக நினைத்துக் கொண்ட கவி,
ஹரிதாவின் வயிற்றில் வளரும் பிள்ளை ஆத்வியோடது என்றே முழுமையாக நம்பியும் இருந்தாள். தன்னிடம் அவன் அத்து மீறி நடந்துக் கொண்டதை எல்லாம் வைத்து, அவனை தவறாகவே நினைக்கத் தொடங்கிய கவி, மண்டபத்தில் நடந்த விடயங்கள் யாவும் அறியாமலே போனாள்.
எப்படியோ, மனைவி குழந்தை என குடும்பமாக நன்றாக வாழ்ந்தால் சரி என்று நினைத்தாலும், மனதின் ஓரம் அழுத்தும் வேதனை ரணமாக வலித்ததேனோ!
எத்தனை நேரம் ஒரே இடத்தை வெறித்துக் கொண்டு நின்றாளோ! "கவிஇஇ.." என கோரசாக அழைத்தக் குரலில் சட்டென திரும்பினாள்.
"என்னமா இங்க வந்து நிக்கிற உன்னய எங்கெல்லாம் தேடி அலையிறது.." அவசர தொனியில் அஜய் கேட்டதில்,
"ஏன் அஜய் அண்ணா என்னாச்சி.." தானாக பதட்டம் உண்டாகி, அவனையும் அவனோடு இருந்த அசோக்கையும் புரியாமல் பார்த்தாள்.
"அதெல்லாம் சொல்ல இப்ப டைம் இல்ல கவி, நீ சீக்கிரம் எங்களோட வா.." என அசோக்கும் அவசரப்படுத்த,
"ஏன் அண்ணா ரெண்டு பேரும் ஏதோ மாதிரி பதட்டமா இருக்கீங்க, ப்ளீஸ் சொல்லுங்களேன்.." அதே பதட்டம் அவளுக்கும் ஒட்டிக் கொண்டது
"போற வழில சொல்றோம் நீ வாமா.." அவளை பேச விடாது காரில் ஏற்றி மண்டபதிற்கு அழைத்து வந்திருக்க, ஸ்வாதிக்கு ஏதாவது ஆகிவிட்டதோ, மித்ராக்கு எதுவும் பிரச்சனையோ, என்ற எண்ணங்களில் உழன்றபடி அவர்களோடு வந்தவள் கழுத்தில் மாலையைப் போட்ட மித்ரா,
"கவி என் மேல மரியாதை இருந்தா இன்னும் கொஞ்ச நேரத்துக்கு எதுவும் பேசாம அமைதியா இருக்கனும்.. நாங்க உனக்கு எப்பவும் நல்லது தான் நினைப்போம், அதை நீ நம்பினா, என்கூட வா.." புதிராக பேசி அழைத்து சென்று அமர வைத்த இடமோ, மனமேடையில் அமர்ந்திருந்த ஆத்வியின் அருகில்.
பெரும் அதிர்ச்சியில் ஒன்றும் செய்ய முடியாத சூழலில் திகைத்து போன கவி, சட்டென முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் ஸ்வாதியை பார்க்க, முகம் முழுக்கப் பூரிப்புடன் தோழிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையப் போவதை எண்ணி, ஆனந்தக் கண்ணீருடன் அமர்ந்திருந்த ஸ்வாதி,
"சந்தோஷமா சிரிச்சிட்டு இரு டி, அழாதே.." என சைகையால் சொல்ல, 'என்ன இவளும் இப்படி சொல்றா..' நடப்பது எதுவும் புரியாமல், அதிர்ச்சியில் இருந்து அவள் மீள்வதற்கு முன்னமே, ஆத்வி சூடிய பொன்தாலி அவள் மார்பை ஆறத் தழுவி இருந்தது.
தாலிகட்டியவனையும் தாலியையும் அவள் மாறி மாறி பார்த்திருக்க, நெற்றி வகுட்டில் அவள் தோள் சுற்றி குங்குமம் வைத்தவன், "பத்து லட்சம் சலிச்சி போற வரை தான் நீயும் இந்த தாலியும்.." வில்லங்கமாக அவள் காதில் கிசுகிசுத்து கண்ணடிக்க, மேலும் அதிர்ச்சியாகி, விழி நீரோடு அவனோடு சேர்ந்து சம்பரதாயங்களை செய்து முடித்தாள்.
ஆதி மித்ராவின் காலில் இருவரும் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, இருவருக்கும் தங்களது மகிழ்ச்சியின் அளவை சொல்லவா வேண்டும்!
மனநிறைவோடு ஆசிர்வதித்து, கவியின் கலங்கிய முகத்தை பார்த்த மித்ரா, "கவி ஏன்டா உன் முகம் இப்டி இருக்கு, உனக்கு ஏன் பையன பிடிக்கலையா என்ன.." வருத்தமாக அவள் தாடை பிடித்துக் கேட்கவும்,
"நக்கல பத்தியாடி உங்க அம்மாவுக்கு, கல்யாணம் கட்டி வைக்கிறதுக்கு முன்னாடி கேக்க வேண்டிய கேள்விய, எல்லாத்தையும் முன்ன நின்னு நடத்தி வச்சிட்டு கேக்குறத.." அஜய் ஆருவின் காதில் கிசுகிசுக்க,
"சும்மா இருங்க எங்க அம்மா ஒரு வெகுளி.." என்றவளை ஏற இறங்கப் பார்த்தவன்,
"ஆமா ஆமா ரொம்ப வெகுளி தான், ப்பா... என்னாமா இந்த கவி பொண்ண கூட்டிட்டு வர பிளான் போட்டு கொடுத்தாங்க இந்த அத்த, எல்லாம் மாமனார் ட்ரைனிங் போல.." உதட்டை பிதுக்கி எண்ணி அமைதியாக நின்றான்.
மித்ரா கேட்டதுக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழித்த கவி, "அ.அப்டிலாம் இல்ல ஆண்டி, திடீர்னு நடந்த கல்யாணம் இல்லையா அதான், ஒரு மாதிரி நர்வஸா இருக்கு.." என்றவளுக்கு தானே தெரியும் ஆத்வியின் சுயரூபம் என்ன என்று.
"உன் மனநிலை இப்ப எப்டி இருக்கும்னு என்னால நல்லா புரிஞ்சிக்க முடியிது கவிமா.. ஆனா எல்லாமே சரியாகிடும், ஆத்வி ரொம்ப நல்லவம்மா உன்ன ரொம்ப நல்லா பாத்துப்பான்.."
மகனின் சூட்சமம் அறியாமல் மித்ரா பெருமையாக வாக்களிக்க, அரைமனதாக தலையாட்டி வைத்தவள், அளவுகடந்த மகிழ்ச்சியில் தன்னையே பார்த்திருந்த ஸ்வாதியை தாவிக் கட்டிக்கொண்ட கவி, வெளியே சொல்ல முடியாத மனபாரத்தை எல்லாம் அழுகையில் இறக்கி வைத்தாள்.
"கவி.. அழாதே கவி.. நான் நெனச்ச மாதிரியே உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சிடுச்சி, எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா.. சரியான இடத்துல வந்து சேந்திருக்க கவி, என் சந்தோஷத்தை வார்த்தையால வெளிப்படுத்த முடியல டி..
ஆத்வி சார் ரொம்ப நல்லவர், உன்ன நல்லா பாத்துப்பார் கவி.. அந்த நம்பிக்கைல தான் ஆண்டியும் அங்கிளும் உன்ன என்கிட்ட வந்து பொண்ணு கேக்கும் போது, நானும் அதுக்கு ஒத்துக்கிட்டேன் தெரியுமா.." பெரிய மனுஷியாக ஸ்வாதி சொல்லி சிரிக்க, இது எப்போ எனும் விதமாக விழி விரித்தாள் கவி.
ஆத்வியின் நடவடிக்கைகளை சிறிது காலமாக கவனித்துக் கொண்டு இருந்த ஆதி, அவனுக்கு கவிமீது ஆர்வம் இருப்பதை அறிந்துக் கொண்டான். கூடவே கவியைப் பற்றிய ரகசிங்களை அலசி ஆராய்ந்தவனுக்கு, கவியை தன் மருமகளாக்கிக் கொள்ள கசக்கவா செய்யும்!
மனைவியிடம் கவியைப் பற்றி எதுவும் சொல்லாமல், அவளை தன் மகனுக்கு கட்டி வைக்கப் போவதாக வெறும் தகவலாக சொல்ல, மித்ராக்கும் முழு விருப்பம். இருவரும் ஹரிதாவைப் பற்றிய விடயங்களை ஸ்வாதியிடம் கூறி, தன் மகனைப் பற்றிய அருமை பெருமைகளை விளக்கி விட்டு, அவளின் வளர்ப்பு மகளை பெண் கேட்க, அத்தனை ஆனந்தம் அவளுக்கு.
"ரெண்டு நாளா இந்த ஆரு மேடம் பட்டு சேலைக்கட்டி விட்டு, அலங்காரம் பண்ணி அழகுப் பார்த்ததுக்கு இதான் காரணமா.. ஆக மொத்தம் என் ஒருத்திய தவிர மத்த எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு எனக்கு கல்யாணம் நடக்கப் போறது..
எல்லாம் இவரோட ப்ளானா தான் இருக்கும்.." மனதில் கருவியபடி கணவனை முறைக்க, அவள் காதருகில் குனிந்தவன்,
"நானே பயங்கர வெறில இருக்கேன் ரொம்ப முறைக்காத டி, அப்புறம் மூக்க கடிச்சி வச்சிருவேன்.." அவள் மூக்கை கடிப்பது போல் செய்ய, வெடுக்கென முகத்தை திருப்பிக் கொண்டாள் கவி.
ஆரு அஜய் அசோக் நண்பர்கள் என்று பலரும் இருவருக்கும் வாழ்த்துக் கூறி, அவர்களை தனிக் காரில் ஏற்றி அனுப்பி வைக்க, கவிக்கு தான் தன் எதிர்காலத்தை நினைத்து மனது படபடவென அடித்துக் கொண்டது.
அவர்கள் பின்னே ஆதியும் தன் குடும்பத்தோடு இல்லம் நோக்கி கிளம்பி இருந்தான்.
குழப்ப ரேகைகள் இழயோடும் முகத்துடன் சாலையை வெறித்தவளை, மிதமான வேகத்தில் காரை இயக்கியபடி அவளையும் ஒரு பார்வைப் பார்த்துக் கொண்டு வந்தவன்,
"ஏய்.. கவி.. உன்ன தான் கூப்பிடுறேன்.. ஏய் கேக்குதா இல்லையா டி.." அவள் தோள்ப்பட்டையை பிடித்து இழுக்கவும், அவன் இழுத்த வேகத்தில் ஸ்ஸ்.. என முகம் சுளித்த கவி, அவனை முறைத்து விட்டு மீண்டும் முகத்தை திருப்பவும் காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தி இருந்தான்.
திருப்பிய அவள் மதி முகத்தை அழுத்தமாக பற்றி அவன் புறம் திருப்பிய ஆத்வி, கழண்டு கிடந்த அவளின் காது கருவியை எடுத்து ஜிமிக்கி ஆடிய சிவந்த காதில் சொருகி விட்டவன், "என்ன திமிரு டி உனக்கு, அடிக்கடி முகத்தை திருப்பிட்டு இருக்க.. இனி நான் கூட இருக்கும் போது, இது உன் காதுல இல்லாம இருக்கக் கூடாது.. கேட்ட கேள்விக்கு பதில் வரணும், புரிஞ்சிதா.." சினமாக உரும,
'நீங்க பேசுறது என் காதுல கேக்கக் கூடாதுன்னு தான் வேணும்னே இதை கழட்டிப் போட்டேன்.. அப்புறமும் ஏன் என்ன சும்மா தொந்தரவு பண்றீங்க, அதான் நீங்க நினச்சபடி எல்லாமே நடத்தி முடிச்சிடீங்களே,
இன்னும் என்ன வேணும்.." அனைவரும் தன்னை முட்டாளாக்கி திருமணம் செய்து வைத்தக் கோபம். திருமணத்தின் முன்பு ஆத்வி விட்ட சவாலில், அவன் ஜெயித்து விட்ட ஆதங்கம் எல்லாம் ஒன்று கூடி, கோவத்தில் சிடுசிடுத்தாள் கவி.
அவளை நக்கலாக பார்த்த ஆத்வி, "இந்த ரெண்டு வாரத்துல நான் சொன்ன மாதிரியே நடத்திக் காட்டிட்டேன்.. ஆனா நீ கொடுத்த வாக்க மீறிட்டியே பேபி.." பூடகமாக சொல்லவும், புரியாமல் விழித்தவளின் செவ்விதழை பெருவிரல் கொண்டு அழுத்தி தேய்த்து நசுக்கி எடுக்க, அதில் இமைகள் படபடக்க இதயம் துடிதுடிக்க, மிரட்சியாக கார் கதவை ஒட்டி நகர்ந்தவளை கோணல் சிரிப்போடு கண்டவனாக, தானும் அவளோடு நெருங்கிய ஆத்வி,
"நீயா உன் விருப்பத்தோட எனக்கு உன்ன தரணும்.. இல்லனா பத்து லட்சத்தை திருப்பி தரணும், இதானே நம்ம டீல்.. ஆனா நீ என்ன பண்ணிட்டு இருக்க, இன்னும் நான் சொன்னதுக்கு உன் வாய் வார்த்தையா கூட சம்மதம் கிடைக்கல எனக்கு..
ஆனா உன் பார்வை இருக்கே, நூறு சதவீகிதம் சொல்லிடுச்சி உன் சம்மதத்தை.." என்றவன் அவள் முகத்தருகே தன் முகத்தால் நெருங்க, மேல் மூச்சி கீழ் மூச்சி வேகமாக எடுத்து, இறுக்கமாக கண்களை மூடியவளுக்கு மூச்சி விடவே சிரமமாகிப் போனது.
அவளின் அவஸ்தையான அழகிய உணர்வுகளை அடிஆழம் வரை உள்வாங்கிக் கொண்ட ஆத்வி, காய்ந்து இருந்த தனது தடித்த அதரத்தில் நாவை சுழட்டி எச்சில் வைத்து ஈரப்படுத்திக் கொண்டவன், ஈரம் காயாத எச்சில் உதடுகளை குவித்து, பாவையின் மூடி இருக்கும் இமைகளில் ஊத, சில்லென்ற பனிப்புயல் தாக்கிய உணர்வு அவளுக்கு.
அவளின் உள்ளங்கைகள் அந்த ஏசிக் காரிலும் வியர்த்துப் போக, அவள் கன்னத்தோடு சேர்த்து அவளின் இதழையும் பிடித்திருந்த தன் கரத்தின் மீது, அவளின் வியர்வை படிந்த மிருதுவான உள்ளங்கையை வைக்கவும், ஆடவனுக்குள் மிம்சாரம் பாய்ந்த உணர்வு.
மெது மெதுவாக பெண்ணவளை நெருங்கி, அவளது பஞ்சி இதழை பிச்சி தின்னும் வெறியோடு அவன் குனிந்த வேளையிலே கரடியாக அழைப்பு மணி அடிக்கவும், சட்டென அவனை விளக்கி தள்ளிவிட்டவளுக்கு, ஆத்வியின் முகத்தை பார்க்க முடியாமல் நாணி சிவந்துப் போனாள்.
உணர்வுக்குவியலாக இருந்த ஆத்வி, அவளது பூமுகம் பார்த்தபடியே, போன் செய்த கரடியை வகை வகையாக கருவியபடி, அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தான்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 42
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.