- Messages
- 270
- Reaction score
- 234
- Points
- 43
அத்தியாயம் - 56
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்த பிறகு, காஷ்மீரில் ஏற்கனவே தயாராக மதன் பார்த்து வைத்திருந்த ஒரு அளவான சிறிய வீட்டினில் தற்காலிகமாக குடி பெயர்ந்தான் ருத்ரன்.
சிறிய கிட்சன், சிறிய ஹால், சிறிய படுக்கை அறை என தாராளமாக ஒற்றை நபர் வசிக்கக் கூடிய அளவுக்கு இருந்தது அவ்வீடு.
வந்ததும் அசதியாக படுத்து கண்களை மூடியவன் எப்போது உறக்கத்திற்கு சென்றானோ! தன்னையும் மீறி ஆழ்ந்த நித்திரை. அந்த நித்திரையிலும் அவனது கயல்விழி கண்மணி எழிலாக கனவில் வந்து இம்சை செய்ய, கசந்த புன்னகை இதழில் தோன்றி மறைந்தது.
சமைக்க தேவையானவற்றை வாங்கி வந்த மதன், ஆடு கோழி மீன் என்று அவனுக்கு தெரிந்த அசைவ உணவினை சமைத்து முடித்து ருத்ரன் விழிப்பதற்காக காத்திருந்த சில நிமிடங்களில் இறுகிய முகத்துடன் வந்த ருத்ரன் தரையில் சம்மணம் இட்டு அமர்ந்தான்.
சிறிது நேரநித்திரை கூட அவனுக்கு நிம்மதி அளிக்கவில்லை போலும். கனவிலும் அவனது உயிர் கொல்லி பிசாசே ஆட்சி செய்தால் எப்படி. கடுப்பாக முகம் கழுவிக் கொண்டு வந்து விட்டான்.
"அண்ணையா எல்லாமே உனக்கு பிடிச்ச ஐட்டமா ரெடி பண்ணி இருக்கேன், உனக்கே தெரியும் நேனு செஞ்சது அவ்வளவு டேஸ்டா எல்லாம் இருக்காது ஆனா சாப்பிடற மாதிரி இருக்கும். நல்லா சாப்டு அப்பதான் பழைய மாதிரி உடம்பு நல்லா கின்னுன்னு தேறும்" வாழைஇலை விரித்து அசைவங்களை பரிமாற, மறுப்பு சொல்லாமல் உணவில் கை வைத்து நன்கு பிசைந்து, பெரிதாக ஒரு உருண்டை எடுத்து விழுங்கியவன் தொண்டைக்குழி அடைத்து சிவந்த கண்கள் கரித்துக்கொண்டு வந்தது.
"என்னாச்சி அண்ணையா காரம் அதிகம் போட்டுட்டேனா" பதட்டமாக தண்ணீரை அவன் முன்பு நீட்டிய மதனை கண்டு சிறு புன்னகை உதிர்த்த ருத்ரன், தண்ணீரை வாங்கிக் குடித்து தன்னை ஆசுவாசம் செய்து கொண்டான்.
"ஆந்திராகாரனுக்கு காரம் பெருசாடா" என்றான் மெல்லிய சிரிப்போடு. பொய்யாக சிரித்து பேசி நடிக்கத் தெரியாதவனுக்கு கூட காதல் நடிப்பைக் கற்றுக் கொடுத்துவிடும் போலும்.
"அப்புறம் ஏன் அண்ணையா உன் கண்ணு கலங்குது?" தயக்கமாக அவன் முகம் பார்த்த மதன், இரண்டடி பின் நகர்ந்து கொண்டான் முன்னெச்சிரிகையாக.
"என்னடா பம்முற அவ்வளவு பயமா டா எம்மேல" நக்கலாக கேட்டவனுக்கு தெரியாதா அது பயம் அல்ல அவன்மீதுள்ள அளவுகடந்த மரியாதையும் அன்பும் என்று.
ருத்ரனின் நக்கலை பொருட்படுத்தாது, அவனது கூர்ந்த விழிகளில் பிரதிபலித்த வேதனையினை கவலையாக ஆழ ஏறிட்டான் மதன்.
"என்ன டா குறுகுறுன்னு பாக்குற. இதுக்காக தான் காலாகாலத்துல கல்யாணம் பண்ணனும்னு சொல்றது" தன் உணர்வினை மறைக்க அவனுக்கு சம்மந்தமே இல்லாமல் கேலிப் பேசும் வார்த்தையினை ரசிக்க முடியாத மதன்,
"என்ன அண்ணையா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம ஏதேதோ பேசி சமாளிக்கப் பாக்குற" என்றான் சோகமாக.
அதில் மெல்லச் சிரித்தவன் "யானைக்கும் அடி சறுக்கும், நாக்கு என் விதியே சறுக்கி விட்ருச்சேடா அப்புறம் கண்ணு கலங்காம என்னடா செய்யும். இந்நேரம் பொண்ணோ பையனோ என் ஜாடையில பிறந்து என் கைல தவழ்ந்து இருக்கும்ல மதனு"
இரண்டு கைகளையும் முகத்திற்கு நேராக உயர்த்தி தன்னையும் மீறி நடுங்கும் உள்ளங்கையினை வெறுமையாக பார்த்து கேட்டவனின் குரல் முதல்முறையாக கரகரத்து, உதிரமாகவே கலைந்து போன குழந்தையை எண்ணி ஆண்மனம் உள்ளுக்குள் மௌனமாக கதறித் தவித்தது.
"அண்ணையா.. இல்ல.. அது.. வதினாக்கு" மதன் நடந்தவற்றை சொல்ல வரும் முன்,
"மச்.. பேசாதே மதனுஉ..நேனு யாரை பத்தியும் பேச விரும்பல. என்னோட ரத்தம் என்னை விட்டு பிரிஞ்சி போன துக்கம் மட்டும் தான் என் நெஞ்சை கவ்வுதே தவிர, வேற யாரோட நினைப்பும் கவலையும் நாக்கு லேது.
தனிமை பிறந்ததில் இருந்தே நாக்கு பழகிய ஒன்னுதான். சொந்தபந்த உறவுகளை தேடி நேனு ஏங்கி இருந்தா ராணுவம் அப்படின்ற பெயரை கூட என் நாவால நான் உச்சரிச்சிருக்க மாட்டேன்.
பழியும் இழப்பும் இலக்கை இழக்கவச்சி வாழ்க்கைய வெறுக்க வச்சிது. 34 வருஷமா ஒரே நேர்கோட்டுல தடுமாறாம பயணிச்ச மனசு பலவித ஏமாற்றங்களையும் இழப்புகளையும் சந்திச்சி மரத்து போச்சி.
இதையெல்லாம் மீறி மனசு தடுமாறி காதல் வளைல விழுந்து, அந்த காதலால எந்த ஒரு ஆம்பளையும் ஏற்கமுடியாத பெருத்த அவமானத்தையும் துரோகத்தையும் அனுபவிச்சுட்டேன்.
இதுக்குமேல முடிஞ்சி போன விஷயத்தை பத்தி பேச ஒன்னுமே இல்ல. மீறி பேசினா.." முகத்திற்கு நேரே விரலை ஆட்டிய ருத்ரன், இருந்த கோபத்தில் ராட்சசன் போல் உணவை கைநிறைய அள்ளி உண்டு முடித்து, பக்கத்தில் இருந்த கிண்ணத்தில் கை கழுவியவன் மீண்டும் அறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டான்.
பட்டென கதவடைக்கும் சத்தத்தில் பெருமூச்சு விட்ட மதனுக்கு, விட்ட மூச்சி தொண்டையோடு நின்று விடும் அளவிற்கு வாசலில் நின்றவளை கண்டு திகைத்து விழித்தான்.
"ஐயோ ராமா கன்னிபையனாவே என்னை பரலோகம் அனுப்ப முடிவு செஞ்சிட்டியா" ருத்ரனின் மூடிய அறைகதவையும், கண்ணீரோடு பரிதவிப்பாக கையை பிசைந்து நின்றவளையும் மாறி மாறி கண்டு எச்சில் விழுங்கியவன், அவசரமாக வெளியே வந்து கதவை சத்தம் வராமல் சாற்றிவிட்டு அண்ணன் தங்கை இருவரையும் ஒருசேர முறைத்தான் மதன்.
"இங்கேயும் என் அண்ணையாவோட நிம்மதி குலைக்க ரெண்டு பேரும் கிளம்பி வந்தாச்சா" உள்ளே சத்தம் கேட்டிடாமல் கேலியாக கேட்டதும்,
"வாய் இருக்கேன்னு இஷ்டத்துக்கும் பேசாதே மதன்" வெங்கட் எகிற,
"உங்க அளவுக்கு எல்லாம் அதிகம் பேசலைனு என்னை நானே நம்புறேன் போலீஸே.." நக்கலாக உரைத்தவன் பதட்டமாக பார்த்த காவேரியைக் கண்டு அமைதியாக நிற்க, வெங்கட் பார்வையாலே அவனை பொசுக்காத குறைதான்.
"ஏற்கனவே அவா மனசொடஞ்சி பேசினது எல்லாம் கேட்டு என் உயிரே போற மாதிரி இருக்கு. நீங்களும் சண்டை போட்டுக்காதேள் ப்ளீஸ்" இருவரையும் கண்டு கலங்கிய குழலி தன்னவனின் மனம்படும் வேதனைக்கு தாமே காரணமாக அமைந்து விட்டோமே என்ற குற்றஉணர்ச்சியில் ஜீவன் நடுங்கித் துடித்தாள்.
"குழலி இந்த நேரத்துல நீ இங்கன வந்திருக்குறது கொஞ்சமும் சரி இல்ல. உன் வீட்டுக்காரர் உம்மேல கோவமா இருந்தா கூட சமாளிச்சிடலாம் ஆனா இம்புட்டு வெறுப்பா பேசிட்டு போறத பாத்தா எனக்கே பயமா இருக்கு. இந்த நிலைமைல எப்டி அவரோட உன்னைய தனியா விட்டு போறது. பேசாம நீ எங்ககூடவே வந்திடு அவர் கோவம் குறைஞ்சதும் வரலாம்"
ருத்ரனின் வெறுப்பு உமிழும் பேச்சினை கேட்டதும் காவேரிக்கு, குழலியை எண்ணி படபடப்பு வந்துவிட்டது.
"நேக்கும் அதை நினைச்சு பயம் இல்லாம இல்ல அண்ணி. அதுக்காக அவாக்கு பயந்து ஒதுங்கியே இருந்திட முடியுமா. அவா என்ன சொன்னாலும் சரி எப்படியாவது அவா மனசை மாத்த முயற்சி பண்றேன், அதுக்கு நான் அவா கூட இருக்கனும்." குழலியின் தீர்க்கத்தில், கணவன் முகம் பார்த்தாள் காவேரி.
"சரி தேனு இதுக்கு மேற்பட்டு உன் முடிவு. அதுக்காக நீயா ஓவரா கீழ இறங்கி கெஞ்சாத, ரெண்டு மூணு முறை பொறுமையா பேசிப்பாரு அவன் ரொம்ப பண்ணா பொறப்பட்டு வந்துட்டே இரு. அண்ணே உன்ன காலத்துக்கும் கண்கலங்காம பாத்துக்குறேன்"
இத்தனை தூரம் கெஞ்சி போராடி, அவனிடம் ஏச்சிப் பேச்சிகள் வாங்கிதான் இத்தகைய வாழ்க்கையை தன் தங்கை வாழ வேண்டுமா? அதற்கு பதில் தன்னோடு தன் தங்கையாகவே இருந்தாலே குழலி நிம்மதியாக இருப்பாளே என்று அவள் மீதுள்ள பாசத்தில் அண்ணனவன் அற்ப எண்ணங்கள் உழல, மனைவியின் முறைப்பில் அசட்டையாக மீசையை முறுக்கிக் கொண்டான்.
"ம்க்கும்.. இதுக்கு ஒன்னும் குறைச்ச இல்ல. நீ பக்குவமா பேசி அவளுக்கு ஆறுதல் சொல்லலைனாலும் பரவால்ல மச்சா, இந்த திமிரா பேசி அவள செல்லம் குடுத்து கெடுக்குறத மொதல்ல நிறுத்திட்டு கம்முனு நில்லு" நரநரத்த காவேரி,
"பாத்து சூதானமா நடந்துக்கோ குழலி. அவைய ஏதாவது பேசினா கொஞ்ச நாளுக்கு வாய அடக்கி வச்சிக்கோ, கூடகூட எதையாவது பேசி பிரச்சனைய வளர்த்தி விட்டுடாத. முடிஞ்ச அளவுக்கு உன்னோட அன்பையும் காதலையும் அவையலுக்கு புரியவை. மத்தது எல்லாம் போக போக சரியாகிடும்"
வயதில் சிறியவளாக இருந்தாலும் அறிவிலும் பக்குவத்திலும் சிறந்தவளாக அழகாக தங்கைக்கு எடுத்து சொல்லி, அவளை கணவனோடு மங்களமாக வாழ வேண்டும் என நினைக்கும் மனைவியின் தூய்மையான அக்கறையில் மெய்மறந்து அவளை ரசித்திருக்க, மதன் மென்சிரிப்பு சிரித்துக் கொண்டான்.
"நமக்கும் இதுபோல ஒரு மனைவி குடும்பம்னு சந்தோசமான வாழ்க்கை கிடைக்குமா!" மனதில் கேட்டுக் கொண்டவனுக்கு சிறிது காலகமாக தான் இத்தகைய ஆசையெல்லாம் அலை அலையாய் அடித்துக் கொள்கிறது.
ஆனா அவனுக்கு நான் எப்டி சொல்ல இந்த கதைல இவனுக்கு ஹீரோயின் லேதுனு.
"கள்வனே! கள்ளும் தேனடா!" டைட்டில் எப்டி இருக்கு. நம்ம மதனும் ஒரு ரொமான்டிக் ஹீரோவா விரைவில் கலக்க வரான் காத்திருந்து படிங்க drs.
காவேரி சொன்ன அனைத்திற்கும் மண்டையை மண்டையை ஆட்டிக் கொண்ட குழலி தயக்கமாக வீட்டினுள் செல்லப் போனவள் அப்படியே திரும்பி விட்டாள்.
"என்னாச்சி தேனு" தங்கையை புரியாமல் பார்த்தான் வெங்கட்.
"அண்ணா நேக்கு உள்ள போகவே பயமா இருக்கு. ஏதோ சிங்கத்து குகைல காலெடுத்து வைக்கிற பீல். நீயும் அண்ணியும் கூட வாங்கோளேன்" தனியாக சிக்கினால் கண்டிப்பாக அவன் கோபத்தால் பஸ்பமாக்கி வீட்டை விட்டு துரத்தி அடிப்பான் என்று உறுதியாக உணர்ந்தவளாய் இருவரையும் துணைக்கு அழைத்தாள் குழலி.
பாவமாக முகத்தை வைத்து படபடப்பாக கெஞ்சும் தங்கையை தனியே விட்டு செல்ல மனமின்றி, மனைவியை அழைத்துக் கொண்டு வெங்கட்டும் உள்ளே வந்தான்.
மூவரும் உள்ளே சென்றதும் வெளியே நின்ற மதனுக்கு தான் ருத்ரங்கனை எண்ணி பயப்பந்து உருண்டோடியது.
"அண்ணா அவா வந்து என்னை ஏதாச்சி சொன்னா அமைதியா இருந்திடு. பதிலுக்கு நீ கோபப்படாத சரியா" கிசுகிசுக்குரலில் சத்தம் வராமல் வெங்கட்டிற்கு சொல்ல, அவளை ஒரு மார்க்கமாக பார்த்து குழலி சொன்னதிற்க்கெல்லாம் தலையாட்டி வைத்தான்.
மதியம் உள்ளே சென்றவன் கண்களை விட்டதை வெறிக்கவிட்டு மனதில் குடிகொண்ட வெறுமையுடன் படுத்திருந்த ருத்ரன் மனதில் ஏதேதோ எண்ணங்கள் உழல, எதற்கும் பிடிக்கொடுக்காமல் தள்ளாடித் தவித்தது.
கட்டுதேகம் என்றாலும் சிறிது நாட்களாக அசைக்காது ஒரே இடத்தில் நினைவின்றி படுத்திருந்த தாக்கம் நீங்காமல், கை கால்கள் உடல் முழுவதும் தெம்பின்றி தோய்ந்து இருக்க, காஸ்மீர் குளிர் வேறு நோவு கொண்ட கட்டுதேகத்தை நடுங்க வைத்தது.
"மச்.. சூடா கடுங்காப்பி குடிச்சா இந்த குளிருக்கு நல்லா இருக்குமே" தனக்குள் சொன்னபடி மெல்ல எழுந்த ருத்ரன், ஸ்வெட்டரை மாட்டிக் கொண்டு வெளியே வந்தவன் முகம் கடுமையில் சிவந்து துடித்தது.
"மதனுஉஉஉஉஉ" வீடே அதிர கத்திய கத்தில், வீட்டின் மேற்கூரையில் படிந்திருந்த பனிக்கட்டிகள் யாவும் தடதடவென உருண்டு நாலாபுறமும் விழுந்ததே தவிர மதன் வந்தபாடு இல்லை. எப்போதோ அங்கிருந்து எஸ்ஸாகி இருந்தான்.
"மாம்ஸ் உன் ஆளு நாங்க வந்ததும் சூடா வெஜ்சூப் வாங்கி குடுத்து உபசரிச்சிட்டு, அவசரமா பொறப்பட்டு போயாச்சி" வெங்கட் நக்கலாக சொல்ல, காவேரி கணவனை முறைத்தாள்.
"டேய் யார் நீ, வீடு திறந்திருந்தா கண்டதையும் கூட்டிட்டு உள்ள நுழைஞ்சிடுவியா" தப்பித் தவறிக் கூட குழலியின் பக்கம் பார்வையை திருப்பாமல் ஆங்காரமாய் உருமிய கணவனின் கோபத்தைக் கண்டு மிரண்டு விழித்தாள் தேன்குழலி.
"பூட்டி இருந்த எங்க வீட்டுக்குள்ள சன்னல் வழியா குதிக்கும் போது நீங்க அதை யோசிக்கலையே மாம்ஸ். அன்னைக்கு தேனா இனிச்சவ இன்னைக்கு பாகற்காயா கசக்க வேண்டியது அவளோட தலையெழுத்து. அதான் இப்போ கண்டவளா உங்க கண்ணுக்கு தெரியிரா"
விரக்தியாக சொன்னவனை ஆழ நோக்கிய ருத்ரன், "இந்த செண்டிமெண்ட் ட்ராமா எல்லாம் எங்கிட்ட வேணாம், கொலைகாரனுக்கு பாவம் பரிதாபமெல்லாம் தெரியாது ஒழுங்கா இடத்தை காலி பண்ணுங்க"
தாடை இறுக கத்தியவன் காலில் பொத்தென விழுந்து விட்டாள் குழலி.
"ப்ளீஸ் ண்ணா.. என்னை மன்னிச்சிடுங்கோ.. உங்கள தப்பா புரிஞ்சிண்டு நிறைய முட்டாள்த்தனம் செஞ்சிட்டேன். அதெல்லாம் எவ்வளவு பெரிய தப்புனு காலம் கடந்து புரிஞ்சி, நிறைய துன்பங்களை நீங்க இல்லாம அனுபவசிக்கிடேன். இனிமேலும் உங்கள பிரிஞ்சி வாழுற சக்தி நேக்கு இல்லைண்ணா..
மீறி உங்கள பிரியிற நிலை வந்தா நான் செத்தே போய்டுவேன்.."
அவனது கால்களைக் கட்டிக் கொண்டு கதறி அழுத பாவையின் மீது பரிதாபம் தோன்றவில்லை, மாறாக தன்னை பழி வாங்குவதற்காக உலகை காணாத தன் சிசுவை வயிற்றிலேயே அழித்துக் கொன்ற கொடூரக்காரியாகவே அவன் கண்களுக்கு தெரிந்தாள்.
அவள் கண்ணீர் துளிகள் அவன் கால்களை நனைக்க நனைக்க ருத்ரனின் கோபம் எல்லைக் கடந்து, கொத்தாக அவள் தலைமுடியினைப் பற்றியவன் அவள் கெஞ்சிக் கதறுவதை எல்லாம் பொருட்படுத்தாமல், தரதரவென இழுத்து சென்று வெளியே தள்ளி இருக்க, அவனை தடுக்க பின்னாலே பதறி வந்தவர்களையும் வெளியே தள்ளி கதவை அடைத்து இருந்தான்.
தொடரும்.

Last edited:
Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 56
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.