- Messages
- 270
- Reaction score
- 234
- Points
- 43
அத்தியாயம் - 57
ருத்ரனின் செயலில் அனைவருமே ஸ்தம்பித்து போக, வெங்கட்டின் கோபம் உச்சி தொட்டது.
"இதுக்காக தான் சொன்னேன் கொஞ்ச நாள் போனதும் எதுவா இருந்தாலும் நிதானமா பேசிக்கலாம்னு, கேட்டாளா இவ.. இப்டிலாம் இவ வாழ்க்கை நாசமா போகும்னு தெரிஞ்சிருந்தா ஆந்திரா பக்கமே வந்திருக்க மாட்டேன். எல்லாம் என் தப்புதான்"
தலையில் அடித்துக்கொண்டு வேகமூச்சி எடுத்தவனுக்கு விட்டால் ருத்ரனை உண்டு இல்லை என்று ஆக்கிவிடும் கோபம் தான். ஆனாலும் ஒரு ஆண்மகனாக யோசித்தவன் மனம், இதைவிட அதிகமான அளவுக்கு தன் தங்கையால் அவன் மானபங்கம் படுத்தப்பட்டு இருக்கிறான் என்று நினைக்கும் போது நிதானமாக கண்மூடித் திறந்தான்.
இருந்தாலும் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டு கதறிய தங்கையை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டது எல்லாம் மிகவும் மோசமான செயல் என நினைத்தவன் சில கணங்கள் அமைதியாக அவளை பார்த்தான்.
"அழாதே குழலி. இதெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சி தானே இங்கன வந்தது பொறவு அழுதா எப்டி. இந்த அளவுக்கு அவைய கோபப்படுறத பாத்தா பழசை எதுவும் மறக்காம உள்ளுக்குள்ளே வச்சி புழுங்கிட்டு இருக்காவனு தோணுது.
முக்கியமா குழந்தை பரிபோன துக்கம் தான் அவைய கோவத்துக்கு முழு காரணமா இருக்கும்.
அதுவும் இல்லாம அவையலுக்கு நினைவு திரும்பி ரெண்டு மூணு நாளு தானே ஆவுது, நமக்கு வருஷம் கடந்த விசயம் அவையலுக்கு இப்பதே நடந்து முடிஞ்ச மனநிலைல இருக்கும். நீ கவலைபடாதே குழலி உன்னைய விட்டா அவையலுக்கும் வேறயாரு இருக்கா சொல்லு சீக்கிரம் உன்னைய மன்னிச்சி ஏத்துப்பாக"
காவேரி என்ன தைரியம் சொல்லியும் குழலியின் புத்தியில் ஏறவே இல்லை. தன்னை அணுஅணுவாக நேசித்த ஒருவனை இப்படி அதீத வெறுப்பை கக்கும் அளவிற்கு கொண்டு வந்து நிறுத்திய தன் நிலையை நொந்தவள், அவன் தள்ளிவிட்ட இடத்திலேயே கண்ணீருடன் அமர்ந்திருந்தாள்.
"தேனு எழுந்து வா ஆத்துக்கு போலாம்" வெங்கட் அவள் கரம் பற்ற, பற்றிய அவன் கரத்தை பிரித்து விட்டவளை புருவம் உயர கண்டான்.
"இந்த பனில உறஞ்சி செத்தாலும் பரவாயில்ல என்னை அவா மன்னிச்சி ஏத்துக்காம, நான் இந்த இடத்தை விட்டு எழ மாட்டேன் அண்ணா" தீர்க்கமாக சொன்ன குழலியை கண்டு இம்முறை கோவம் கொண்டது வெங்கட்டின் முறையானது.
"அப்டியே ஓங்கி அடிச்சேன்னா இந்த முறை நீ கோமால படுத்திடுவ. என்ன டி கொஞ்சம் உன் இஷ்டத்துக்கு வலைஞ்சி கொடுத்தா ஓவரா பண்ணிட்டு திரியிற.
சாகவா இத்தனை வருசமா உன்ன சீராட்டி வளத்தோம். உன் புருஷன் உயிரோட இருக்கான்னு தெரிஞ்சுதால மட்டும் தான் நோக்கு வேற கல்யாணம் பண்ணாம இருந்ததுக்கு காரணம். இல்லன்னு வையி என்ன ஆனாலும் சரின்னு எப்பவோ நோக்கும் என் பிரண்ட் ஜெய்க்கும் கல்யாணம் கட்டி வச்சிருபேன்.
இவ்ளோ தூரம் வந்தாச்சு, செஞ்ச தப்புக்கு காலுல விழுந்தும் மன்னிப்பு கேட்டாச்சி. அவா மனசு இறங்கி வந்தா வாழு இல்லையா கடைசிவரை நேக்கு தங்கச்சியாவே இருந்திடு, அதைவிட்டு இந்த பிடிவாதம் பிடிச்சிட்டிருந்த வேலையெல்லாம் வச்சுக்கிட்ட தொலைச்சிடுவேன் உன்ன"
எதற்கெடுத்தாலும் சாகிறேன் சாகிறேன் என்றால் சிறுவயதில் இருந்து பாசம் கொட்டி வளர்ந்தவன் மனம் துடித்து போகாதா! ஆக்ரோஷமாக கை ஓங்கி மிரட்டிய தமையனை வெம்பலுடன் குழலி பார்க்க,
"மச்சா கோபப்படாத கொஞ்சம் அமைதியா இரு" கணவனை சமாதானம் செய்தாள் காவேரி.
"நம்ம கூட இப்ப அவ வரப்போறாளா இல்லையா காவேரிஇஇ.." குழலியின் அமைதி வெறியேத்தியது அவனை.
"இ.. இரு.. மச்சா ந்நா கேட்டு சொல்ற" அவசரமாக சொன்ன காவேரி,
"சொல்லு புள்ள எங்க கூடவே வரதானே" நேரம் செல்ல செல்ல சூழ்நிலையின் விபரீதம் உணர்ந்து பிரச்சனையை சுமூகமாக தீர்க்க எண்ணிய அப்பாவி மங்கை தான் அண்ணன் தங்கை இருவர்களுகிடையே மாட்டிக்கொண்டு அல்லோல்ப்பட்டாள்.
"வ்.வரேன் அண்ணி" வேறு வழி இல்லாமல் சம்மதம் சொன்னவள், முட்டிக்கொண்டு வந்த அழுகையை இதழ் கடித்து அடக்க முயல, கோபம் அடங்காமல் முன்னால் நடந்த வெங்கட்டை இரு பெண்களும் பின் தொடர்ந்தனர்.
இங்கோ பூட்டிய கதவின் மீது சாய்ந்து நின்ற ருத்ரங்கனின் கழுத்து நரம்புகள் யாவும் புடைத்து நடுங்கியது, தன்னவளின் மீதுள்ள அதீத கோபத்தில்.
கொஞ்ச நஞ்ச வார்த்தை பேசியா அவனை நோகடித்தாள், சரி போ என சாதாரணமாக மன்னித்து அவளை நெஞ்சில் அணைத்துக் கொஞ்ச! கொடிய வார்த்தைகளை நெருப்புக் கங்குகளாக வாரி இறைத்ததை கூட மன்னித்துவிடலாம். ஆனால் தன்னோடு வாழ்ந்த வாழ்க்கையே பொய் என்று நினைக்கும் போது, அவள் இருக்கும் இடத்திலிருந்து வரும் சுவாசக் காற்றினை சுவாசிக்கக் கூட ஒப்பவில்லையே மனம்.
அன்று அவள் பேசிய வார்த்தைகள் யாவும் திரும்பத் திரும்ப அவன் செவிதனில் ஒலித்துக் கொண்டே இருக்க, ஆஆஆ.. என்ற உருமலுடன் வெறிப்பிடித்த மிருகம் போல் வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் தூக்கிப் போட்டு உடைத்தான்.
நினைவு திரும்பி கண்விழித்தவன் மனம் படபடத்து, வேகமாக காலண்டரையும் நாளையும் கண்டு இந்நேரம் தனக்கு குழந்தை பிறந்து இருக்குமே என்று முழுமனதாக நம்பி எப்போது சென்று அதன் முகத்தை பார்ப்போம் என ஆசையோடு ஆவலாக காத்திருந்தது. ஆனால் எதார்த்தமாக பேச்சிக்கொடுத்த மதன் வாயால் தன் சிசு எப்போதோ சிதைந்து விட்டது என்று அறிந்ததில் இருந்து துடித்துவிட்டான் மனதளவில்.
குழந்தை பிறந்திருந்தால் இந்நேரம் அதன் பொக்கை வாய் திறந்து, குண்டு கண்கள் விரிய அழகாக சிரித்து, குட்டி கால்கள் உதைத்து குப்புற படுத்து தலைதூக்கி, வேக நீச்சலுடன் தன்னை பார்த்திருக்குமே!!
நாட்டின் காவலுக்காக கத்தி துப்பாக்கி பிடித்த பாவத்திற்கா ஒருபாவமும் அறியாத தன் சிசுவின் உயிர் பறித்தான் படைத்தவன்.
அதுவும் உற்றவளே அதற்கு காரணம் என்பதை நினைக்க நினைக்க கட்டுக்கடங்கா கோபம் தலைக்கேறியது.
தான் அவளிடம் உண்மையை மறைத்து செய்யவிருந்த காரியமும் ஒருவகையில் மிகப்பெரிய தவறுதான். அதற்காக அவள் செய்த காரியம் பெரிதல்லவா!!
இனி என்ன நடந்தாலும் அவளோடு வாழ்வது தன் ஆண்மைக்கு தான் அவமானம் அருவருப்பு என்று எண்ணி விட்டானோ! குழலியின் எண்ணங்கள் அத்தனையும் புறம் தள்ளினான்.
பழைய ருத்ரங்கனாக எதைப்பற்றியும் கவலை இல்லாது, மீண்டும் மனதை இரும்பாக திடப்படுத்திக் கொண்டவன் தன் வேலையில் கவனம் செலுத்தவும் தொடங்கி விட்டான்.
சும்மாவே ஜம்மு காஸ்மீரில் டெரரிஸ்ட் அசால்ட்டாக உலா வரும் நாடு தான். அல்வா துண்டையே கையில் கொடுத்துவிட்டு உண்ணாமல் வேடிக்கைப் பார் என்றால் ருத்ரன் கேட்கும் ரகமா! ஒவ்வொரு நாளும் குருதி வெள்ளத்தில் தான் குளித்து எழுவான்.
***இப்போது கூட ஜம்மு காஷ்மீர் அக்னூர் பகுதியில் பயங்கரவாதிகள், ராணுவ வாகனம் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தி துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் நான்கு வீரர்கள் உயிரிழந்த நிலையில் இரண்டு வீரர்கள் படுகாயம் அடைந்த சோகம் நடந்தேறியதை தொடர்ந்து அடுத்தடுத்த தாக்குதலும் நடைபெற்றது.
அதில் பயங்கரவாதி ஒருவன் ராணுவவீரர்களால் சுடப்பட்ட செய்தியை தொடர்ந்து அடுத்த இரண்டு பயங்கரவாதியை ராணுவப்படையினர் சுட்டுத் தள்ளிய நிகழ்வும் நடந்துள்ளது***
(2024 அக்டோபர் மாதத்தில் நடந்த உண்மை சம்பவம்) இதற்கு மேல் நம்ம கற்பனை.
நாளுமொரு மேனி உயிரை கையில் பிடித்துக்கொண்டு நாட்டிற்காக போராடி உயிர் தியாகம் செய்யும் வீரர்களை மனதில் எண்ணி மெச்சிய ருத்ரன், துப்பாக்கி சூடு நடத்தி விட்டு காட்டிற்குள் தப்பி சென்ற பயங்கரவாதிகளை ரகசியமாக தூக்கி விட்டான். (கொஞ்சம் ஓவர் தான் கண்டுக்காதீங்க 😅)
"அண்ணையா.." தயக்கமாக அவன் முன்னால் வந்து நின்ற மதனை, மதுவை வாயில் சரித்தபடி முறைப்பாக நிமிர்ந்து பார்த்தான்.
அன்று குழலியை உள்ளே விட்டு உபசரிப்பு செய்ததில் இருந்தே மதனை கண்டால் முறைப்பாக தான் திரிகிறான். இதற்காக அவன் பலமுறை மன்னிப்பு கேட்டும் ருத்ரனிடத்தில் மன்னிப்பு இல்லை மாறாக திட்டும் கொட்டும் தான் பலமாக விழும்.
"ஒரு ஸ்லீப்பர் செல்ல பிடிக்க போனதுல நம்ம சுதர்ஷன்க்கு வலது பக்க நெஞ்சில குண்டடி பட்டுடுச்சி, டாக்டர் உடனே ஆப்ரேசன் பண்ண சொல்லிட்டாங்க. அதான் செலவுக்கு பணம் வாங்கிட்டு போக வந்தேன் அண்ணையா"
தயக்கமாக சொல்ல, கட்டு கட்டாய் பணம் கட்டுக்கள் அவன் கையில் வந்து விழுந்தது.
"அண்ணையா இவ்ளோ பணம் தேவை இல்ல. ஒரு நாளு லட்சம் மட்டும் எடுத்துக்குறேன்" என்றவன் தேவையான பணத்தை மட்டும் எடுக்கப் போக,
"அது எல்லாமே உனக்கு தான் மதனு.. கழுதை வயசாகுது இன்னும் சின்ன பையன் மாதிரி எல்லாத்துக்கும் என் கைய எதிர்பாத்துட்டு இருப்பியா அசிங்கமா"
கடுப்பாக கேட்ட ருத்ரனை, மென்னகையோடு பார்த்தான் மதன்.
"இதுல என்ன தப்பிருக்கு அண்ணையா, நாக்கு ஒரு அம்மாவோ அப்பாவோ இருந்தா அவங்ககிட்ட போய் என் தேவைக்கு நிக்க மாட்டேனா. ஒரு காலத்துல ஆசானா தெரிஞ்ச நீ இப்போ நாக்கு எல்லா உறவுமா இருக்க, அப்டி இருக்க உங்கிட்ட கேக்குறதால நாக்கு எந்த அசிங்கமும் இல்ல அண்ணையா"
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாக ருத்ரன் தனக்கு யார் என்பதை உருக்கமாக சொன்னவனை கண்டு, அவனுக்கும் பெருமிதமாக இதயம் கனிந்து இதழ் விரிந்தது.
எல்லா பயலும் இப்படித்தான் வரும் பணத்தை பங்கு பிரித்து கொடுத்தால், தேவைக்கு வாங்கிக் கொண்டு மீதியை அவனிடமே வம்பாக கொடுத்து சென்று விடுவர். ருத்ரனும் அதட்டி பார்த்துவிட்டான் துப்பாக்கி சூடும் நடத்தி பார்த்துவிட்டான், குடும்பம் குட்டகள் இருக்கும் சிலரை தவிர எவனும் மசியவில்லை. முக்கியமாக மதன்.
அவர்கள் பணத்தை எல்லாம் ஆடம்பர செலவு செய்யாமல் பத்திரமாக எடுத்து வைப்பவன், தன்னிடம் இருக்கும் வீரர்களுக்கு இதுமாதிரி உயிருக்கு ஆபத்து வரும் வேலையில் கணக்கு பார்க்காமல் செலவு செய்து விடுவான்.
ஏற்கனவே பல இழப்புகளை எதிர்கொண்டவன், இனியும் தன் வீரர்களை காக்க பணம் ஒரு தடையாக இருந்து விடக் கூடாது என்று தான் செய்யும் சம்பவத்திற்கு பணம் பெறுவதும் கூட.
அன்றும் சம்பவம் முடித்துவிட்டு வரும் வழியில் டீக் கடையை பார்த்தவன், குளிருக்கு ஏதுவாக டீ குடிக்க தோன்றவே ஜீப்பை நிறுத்திய ருத்ரன், சீட்டில் இருந்து எகிறி குதித்து சென்று, "பாய் ஒரு சாயி" என்றவன் அங்குள்ள பெஞ்சில் அமர்ந்து செய்திதாளை புரட்டிக் கொண்டிருந்தான்.
முன்பு போல் மீண்டும் கட்டுடல் காளையாக உடல் தேறி இருந்ததில், உடற்பயிற்சிகள் மேற்கொண்டு அந்த பழைய தெம்புகள் கூடி வயது நாற்பதை தொட்டும் வசீகரம் குறையாமல் திடகாத்திமாக இருந்தான் ருத்ரங்கன்.
என்ன ஒன்று கழுத்துவரை இருந்த தலைமுடி தான் ஆங்காங்கே நரைமுடியோடு காணப்பட்டது. ஆனாலும் அதுகூட அவனுக்கு அம்சமாகவே காட்சிபடுத்தியது.
காணும் இடமெங்கும் வெள்ளைக் கம்பளி போர்த்தினார் போல் பனி படர்ந்து கண்ணுக்கும் உடலுக்கும் மிகவும் குளுமை சேர்க்கும் விதமாக ரம்மியமாக காணப்பட்ட இடத்தை பார்த்தபடியே டீயை அருந்தியவன் பக்கத்தில் சலசலக்கும் உரசலில், ஸ்லோமோவில் தலைத் திருப்பிப் பார்த்த ருத்ரனின் கண்கள் தீப்பிழம்பாய் மாறியதை தொடர்ந்து சட்டென எழுந்து கொண்டவன் கரத்தை அழுத்தமாக பற்றிக்கொண்டாள் அவன் பத்தினி.
"ஏண்ணா போகாதேள் ப்ளீஸ்" பாவமாக கெஞ்சிய அவள் கண்களை பார்க்கமுடியவில்லை அவனால்.
எப்படியோ கரத்தை அவள் மென்கரத்தில் இருந்து உருவிக்கொண்டவன் முன்னால் அடியெடுத்து வைக்க, பாய்ந்து வந்து அவன் பின்னிருந்து இறுக்கி அணைத்துக் கொண்டவளின் ஸ்பரிசத்திலும் சூடான கண்ணீர் துளியிலும், தன்னை அறியாமல் இறுக்கமாக கண்மூடி நின்று விட்டான் ருத்ரங்கன்.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 57
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.