Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 67

தெரியாத பயணம் புரியாத நிலையில். கல்லாக இறுகி ரயில் ஒன்றில் ஏறி அமர்ந்தவள் தான், அந்த ரயில் எங்கு செல்கிறது என்றெல்லாம் தெரியாது. தொலைந்து கிடைத்த சொந்தங்கள், உயிர் தோழி, மனம் மயக்கிய காதல் மணாலன் என்று அனைவரையும் மொத்தமாக உதறி விட்டு, தனியாக செல்கிறாள் மனம் வெறுத்த நிலையில்.

தேவைக்கேற்ப்ப நான்கு செட்டு உடைகள், சர்டிபிகேட்ஸ், செலவுக்கு சிறிது பணம் அதுவும் திருமணத்திற்கு முன் அவள் சம்பாதித்தது. அவ்வளவு தான் அவள் கணவன் வீட்டில் இருந்து எடுத்து வந்தது என்று சொன்னால் தான் அபத்தம். வேறு என்னென்ன எடுத்து வந்தாளோ??

கடைசி ரயில் நிறுத்தம் வந்தும் ஜன்னல் கம்பியில் தலை சாய்த்து, கண்கள் மூடிய நிலையில் அமர்ந்திருந்தவளின் கண்களை லேசாக திறந்தாலும், காட்டாற்று வெல்லமாக கண்ணீர் பெருக்கெடுப்பது உறுதியே!

பயணிகளின் சத்தம் பெர்மளவு அதிகரிக்க, திடுக்கிட்டு கண் விழித்தக் கவி, ரயில் விட்டு இறங்கியதோ விஷால் வசிக்கும் ஊர் தான்.

எதார்த்தமாக தொடங்கியப் பயணம் மீண்டும் அவளை இங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்க, எதையும் உணராத நிலையில் கால்ப் போனப் போக்கில் நடந்தவளின் கண்களோ கண்ணீரை சொரிந்துக் கொண்டே இருக்க, மொட்டை வெயிலில் மெல்ல மெல்ல சாலை மங்கி, ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்த கவி மீண்டும் அவள் கண் விழிக்கையில், அவளெதிரில் இருந்தவர்களோ விஷாலும் அவன் அன்னையும்.

"கவி எப்டி இருக்கமா, தனியா இங்க எப்டி வந்த.. ஸ்வாதியும் வந்திருக்காளா உங்கூட.." பதட்டமாக கேட்டபடி அவள் தலை வருடினார்.

விஷாலும் அவன் அன்னையும் சொந்த ஊரை விட்டு வேறெங்கோ சென்று விட்டதாக செய்தி மட்டுமே கிடைத்திருக்க, இப்போது தொலைந்த இருவரையும் நேரில் பார்த்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதா? அல்லது வைரமாக வரமாக கிடைத்த சொந்தங்களை யாவும், தெரிந்தே தொலைத்து வந்த துக்கத்தை வெளிப்படுத்துவதா?

"வழில மயங்குற அளவுக்கு வீக்கா இருக்கியா காவி.. ஸ்வாதி எங்கே? நீ மட்டுமா இவ்ளோ தூரம் பிராயணம் செஞ்சி வந்த.. ஹேய்.. நான் உன்கிட்டதான் கேக்குறேன், பதில் சொல்லு.." விஷாலும் படபடத்ததில், இருவரையும் மாறி மாறி கலக்கமாக கண்ட கவி,

ஒரு கட்டத்தில் அழுகையை அடக்க முடியாமல் விஷாலின் அன்னையைக் கட்டிக் கொண்டவளாக, தங்கள் வாழ்க்கையில் நடந்து முடிந்த அனைத்தையும் கூறி, ஸ்வாதிக்கும் தனக்கும் திருமணம் முடிந்த வரை சொல்லி அழுது விட்டாள் கவி.

"ஐயோ.. என்னமா சொல்ற அப்போ உங்களுக்கு கல்யாணமாகிடுச்சா.."

"ஹ்ம்.. ஆமா.. ஆண்டி"

"அப்புறம் எதுக்கு எல்லாரையும் விட்டு வந்தே? உன் புகுந்த வீடு ஆட்கள் ரொம்ப நல்லவங்கனு சொல்ற, அப்புறம் ஏம்மா இப்டி ஒரு முடிவு எடுத்த.. இதனால உன் கணவர் உன்ன காணாம எப்படி தவிச்சு போவார், அதை எதையுமே யோசிக்கலையா நீ.." என்றார் கவலையாக.

மீண்டும் வெடிக்க தயாராக இருந்த அழுகையை இதழ் கடித்து அடக்கிக் கொண்ட கவி, "இப்போதைக்கு இதுக்கு மேல எதுவும் கேக்காதீங்க ஆண்டி, எதையும் சொல்ற நிலமைல நான் இல்ல..

எங்கே போறதுனு தெரியாம ஏதோ ஒரு ட்ரெயின்ல ஏறினேன், ஏதோ கடவுள் புண்ணியத்தால உங்க முன்னாடி இருக்கேன்.. ஆண்டி எனக்கு ஒரு உதவி மட்டும் செய்வீங்களா?" கண்ணீரோடு கேட்கவும், அவள் நிலை உணர்ந்து கண்ணீரை துடைத்து விட்டவர்,

"என்ன கவி உதவி அது இதுன்னு, என்ன செய்யணும்னு சொல்லு" என்றார் பரிவாக.

"எனக்கு ஒரு சின்ன வீடு வேணும் ஆண்டி, இங்கே எங்கயாவது உங்களுக்கு தெரிஞ்ச வீடு இருந்தா பாத்து விட முடியுமா.."

"எதுக்கு வேற வீடு, இங்க நம்மளோடே தங்கிக்கோமா.. உன்கூட ஸ்வாதி இருந்தாலும் பரவால்ல, உன்ன எப்டி தனியா விடுறது பாக்கவே ரொம்ப சோர்வா இருக்கியே.." கவலையாக தலைகோதியவர், "அப்புறம் எங்க வீடும் ரொம்ப சின்னது தான், அட்ஜஸ்ட் பண்ணிப்பியா கவி" என்றதும் தான் அவர்கள் இருக்கும் வீட்டை நோக்கினாள் கவி.

இரண்டு வத்திப்பெட்டி சைஸ் அறைக் கொண்ட சிறிய ஓட்டு வீடு. சிறு கூடத்திலே அடுப்பாங்கரை சிறிய குளியலறை, தேவைக்கேர்ப்ப சாமான்கள் அவ்வளவு தான் அந்த வீடு.

அதை கண்டு விழி விரித்த கவிக்கு அப்போது தான் அன்று போனில் பேசிய பெண்மணி, விஷால் அனைத்து சொத்துக்களையும் மொத்தமாக இழந்து சென்றதை பற்றி கூறியது நினைவில் வந்தது.

"ஆண்டி நீங்க ஏன் இதுமாதிரி ஒரு வீட்ல இருக்கீங்க, வீடு சொத்து எல்லாம் இழந்துட்டதா அந்த லேடி சொன்னாங்களே அப்போ அதெல்லாம் உண்மை தானா?" வருத்தமாக கேட்டளை கண்டு விரக்தியாக புன்னகைத்துக் கொண்டவர்,

"என்னம்மா பண்றது எல்லாம் நேரம், ஆரம்பத்துல இருந்தே நம்பிக்கைக்கு பேர் போனவனா கூட இருந்து எல்லா பிசினஸையும் பாத்துகிட்டவன், பணத்து மேல ஆசைப்பட்டு, எங்களுக்கே தெரியாம எல்லா சொத்தையும் அவன் பேர்க்கு மாத்திக்கிட்டு, எங்கள நடுதெருவுல விட்டுட்டான்..

நாங்களும் அவனுக்கு எதிரா எவ்வளவோ போராடிப் பாத்தோம், கடைசில ஒன்னும் வேலைக்கு ஆகல.. அதுக்கு மேல இழந்த சொத்துக்கள் எல்லாம் அந்த மோசக்காரன்கிட்ட இருந்து திரும்பக் கிடைக்கும்னு நம்பிக்கையும் இல்ல..

அவனை சமாளிக்க கைல பணமும் இல்ல.. காதுல கழுத்துல கிடந்த நகைய வித்து பணமா எடுத்துக்கிட்டு இங்கே வந்துட்டோம்.." கடினமான விடயத்தைக் கூட எளிமையாக சொன்னவரை வியந்துப் பார்த்த கவி,

"டேய் விஷு.. உனக்கு கூட இந்த விஷயம் கஷ்டமா இல்லையா டா.. எவ்ளோ பெரிய விஷயம், அவ்ளோ வசதியா வாழ்ந்தவங்க இப்போ இந்தமாதிரி இருக்கோமேன்னு.."

"ஏன் இல்லாம கவி, நல்லா வசதி வாய்ப்போட வாழ்ந்துட்டு திடீர்னு ஒன்னுமே இல்லாம நடுரோட்ல வந்து நிக்கும் போது கண்டிப்பா கஷ்டமா இருந்தது தான்.. ஆனா அந்த கஷ்டத்தையே நினைச்சி எத்தனை நாளைக்கு இருக்க முடியும்..

எனக்கு ஆறுதலா அம்மாவும், அவங்களுக்கு ஆறுதலா நானும்னு கஷ்டத்தை மறந்து வாழ முயற்சி பண்றோம் அதுல கடுகளவு வெற்றியும் கண்டாச்சி.. இனி வரப் போற காலங்களை எப்டி சந்தோஷமா வாழலாம்னு யோசிக்கிறேன்.." புன்னகையோடு சொன்னவனைக் கண்டு இதழ் விரித்தவள்,

"கண்டிப்பா விஷு உன் எண்ணம் போல நடக்கும், உழைச்சி சம்பாதிக்கிறதே நிலையா இல்லாத போது ஏமாத்தி பிடிங்கினவனுக்கு மட்டும் எப்படி நிலைக்கும்.. அது எல்லாம் நீயும் ஆண்டியும் கஷ்டப்பட்டு உழைச்சது, உன் கை விட்டு போன சொத்து எல்லாம் திரும்ப உன்கைக்கே வரும் விஷு கவலைப் படாதே.." அவனிடம் திடமாகக் கூறிய கவி,

"ஆண்டி இந்த சின்ன வீட்டில் உங்களுக்கே சிரமமா இருக்கும், இதுல நான் வேறு எதுக்கு சிரமமாயிட்டு.." என்றாள் சங்கடமாக.

"நோ கவி, நீ இங்கே தான் இருக்கனும்.. இதுக்கு மேல பேச ஒன்னும் இல்ல, நீ இரு நான் சாப்பாடு கொண்டு வரும்.." என்ற விஷாலின் அன்னை உணவை எடுத்து வந்து கவியிடம் கொடுக்க, வயிறு பசித்தும் உணவு தொண்டைக் குழியில் இறங்க மறுத்தது, கணவனின் நியாபகத்தில்.

நாட்கள் ஒவ்வொன்றும் முட்கள் மேல் நடப்பது போல, மிகவும் கடினமாக சென்றுக் கொண்டிருந்தது. அதிலும் ஆத்விக்கு சொல்லவே வேண்டாம் நடைபிணமாக இருந்தவனுக்கு, நம்பிக்கை துரோகம் செய்து சென்ற மனைவியை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் வெறுத்து மனம் வேதனைக் கொண்டவன், அவள் எங்கே சென்றாள் என்றெல்லாம் பெரிதாக தேடும் முயற்சிகள் எடுக்கவில்லை என்றே சொல்லாம்.

காரணம் அவள் எழுதி வைத்து சென்றக் கடிதம். ஒவ்வொரு முறையும் அதை படிக்கும் போதும் அவன் அடையும் வேதனையை வார்த்தைகளால் உணர்த்தி விட முடிந்திடுமா என்ன! அன்றில் இருந்து மனம் இறுகிப் போனவன் தான், உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இறுகிய பாறையாக வளம் வருபவன், தனது மொத்த கவனத்தையும் வேலையில் செலுத்தி வந்தாலும், இரவில் தனிமையில் தன்னவளின் நினைவில் அவள் இல்லாமல் உருகிக் கரைவதை, அவன் மட்டுமே அறிந்த ஒன்றல்லவா!

வீட்டில் இருந்தும் நச்சரிக்க தொடங்கி விட்டனர். கவி எங்கே? ஏன் அழைப்பை ஏற்று பேச மறுக்கிறாள்? அவளுக்கு என்ன ஆயிற்று? என்றெல்லாம். அவர்களுக்கு யார் புரிய வைப்பது, அவன் மனைவி அவன் மீது துளியும் நம்பிக்கையின்றி நீ வேண்டவே வேண்டாம் என்று மொத்தமாக உதறி சென்றக் கதையை.

கவி வீட்டை விட்டு போவதற்கு முன் நடந்தது என்ன?

இரவு வீடு வந்த ஆத்வி, அவனுக்காக ஆசையாக காத்திருந்த மனைவியை குழந்தையாக கையில் அள்ளிக் கொஞ்சிக் கொஞ்சி முத்தமிட்டு சிவக்க வைத்தவன், தன்னவளின் சிவந்த மூக்கை மிட்டாயாக சுவைத்து மெத்தையில் சரிக்கையில், ஏதோ ஒரு ஒவ்வாமை ஏற்பட்டு அவனை விளக்கிய கவி,

"மாமா.. இன்னைக்கு வேண்டாமே என்னவோ தெரியல உடம்பு முடியாத மாறி இருக்கு, காலைல இருந்தே தலை சுத்துது மாமா.." சோர்வாக சொல்லவும் பதறிய ஆத்வி,

"என்ன டி சொல்ற, காலைல இருந்து ஏன் என்கிட்ட சொல்லல.. இப்ப உடம்புக்கு என்ன செய்து கவி, வா உடனே ஹாஸ்பிடல் போலாம்.." தாமதிக்காமல் அவசரமாக அவளை தூக்கப் போக,

"மாமா கொஞ்சம் அமைதியா இருங்க, ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு ஏன் இப்டி பதறி போறீங்க.. அது லேசான தலை சுத்தல் தான் நல்லா ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும், நீங்க இப்டி வாங்க.." என அவனை இழுத்து மெத்தையில் சரித்தவள், கணவனின் இரும்பு நெஞ்சில் இதமாக தலை வைத்து, தன்னவனை இறுக்கி அணைத்து படுத்துக் கொண்ட கவி,

கலக்கத்தோடு தன்னையே பார்த்துக் கொண்டு இருந்தவனை கண்டு மெலிதாக புன்னகைத்தவளாக, அவன் கன்னத்தில் முத்தமிட்டு, "எனக்கு ஒன்னும் இல்ல மாமா, மூஞ்சிய இப்டி வருத்தமா வச்சிக்காதீங்க, காலைல ஃபிரஷ் ஆகிடுவேன்.." என்றவள் மீண்டும் அவன் கன்னத்தில் முத்தமிட,

கவியின் தெளிவான பேச்சில் சற்று முகம் இயல்பாகி, தன்னவள் இதழ் கவ்வி அழுத்தமாக ஒற்றை முத்தம் கொடுத்து, அவளை நெஞ்சில் அணைத்துத் தட்டிக் கொடுத்தவன் மனமோ ஒருவித தடுமாற்றத்தை உணர்த்தியது.

மறுநாள் அழகாக பொழுதாக தான் விடுந்தது, ஆனால் ஆத்வி கவிக்கு இல்லையே!

உறங்கி எழுந்தும் தலை சுற்றல் இருந்தது தான், ஆனால் எங்கே கணவனிடம் சொன்னால் தேவை இல்லாமல் பயம் கொள்ளப் போகிறானோ என்ற கவலையில் தன்னை இயல்பாக காட்டிக் கொண்டு, காலை உணவை இருவருமாக ஒருவர் மாற்றி ஒருவர் ஊட்டி விட்டு, சிறு சிறு முத்தங்களும், கொஞ்சமாக எல்லை மீறல்களும் என்று சிரிப்பும் வெட்கமும் கலந்த தங்களின் காலைப் பொழுதை காதலோடு கழித்து விட்டு, மனமேயின்றி அலுவலகம் சென்றான் ஆத்வி.

அதுவரை மனசோர்வையும் உடல் சோர்வையும் கணவனிடம் இருந்து மறைத்து, சகஜமாக இருந்த கவிக்கு இப்போது அதிகமாக தலை சுற்றல் ஏற்படவே, சந்தேகமாக நாட்க்கணக்கை கணக்கிட்டுப் பார்த்தவளுக்கு,இதை விட வேறு என்ன மகிழ்ச்சி கிட்டி இருக்கப் போகிறது!

"அப்போ அப்போ.. நான் அம்மாவாக போறேனா.. என் மாமா அப்பாவாக போறாரா. ஐயோ இவ்ளோ பெரிய மகிழ்ச்சியான விஷயத்தை என் மாமாகிட்ட சொல்லாம விட்டுட்டேனே..

முருகாஆ.. எவ்ளோ சந்தோஷமா இருக்கு.. அவருக்கும் தெரிஞ்சா எப்படி எக்சைட் ஆவரோ.. உடனே இந்த விஷயத்தை மாமாகிட்ட சொல்லணும்.." உற்சாகமாக அலைபேசியை எடுத்தவளுக்கு என்ன தோன்றியதோ!

'எதற்கும் மருத்துவமனை சென்று உறுதி படுத்திக்கொண்ட பிறகு, கோவிலுக்கு சென்று தங்கள் பெயர்களில் அர்ச்சனை செய்து விட்டு வந்த பின்பு கணவனிடம் கூறி, இருவருமாக சேர்ந்து மகிழலாம்' என்ற நினைப்பில் முகம் முழுக்க பரவசத்தோடு ஆசையாக கிளம்பி சென்றவளை பார்த்திருந்த ஹரிதா, அதன் பின் தன் தகிடுத்தத்தை தொடங்கி இருந்தாள்.

தீபக் எப்போதோ அவளை ஆத்வியின் வீட்டில் இருந்து வெளியேறி விட சொல்லி கட்டளையிட்டு இருக்க, அவனிடம் பெயருக்கு செல்கிறேன் என்று உரைத்திருந்தாலும், ஆத்வியை விட்டு செல்லும் முடிவில் இல்லை அவள். ஆனால் ஆத்வி இவளால் தேவை இல்லாமல் கவிக்கு எந்த ஒரு சங்கடமும் நேரக் கூடாது என்றே, யாதவ் திருமணம் முடித்து விட்டு வந்தபிறகு அவளை வேறு ஒரு பிளாட்டில் வலுக்கட்டாயமாக தங்க வைத்து விட்டான்.

மனைவியை எப்போதும் குழந்தையாக கொஞ்சிக் கொண்டு மகாராணி போல் உள்ளங்கையில் தாங்கும் ஆத்வியை காண காண, தன்னையும் அவன் இதே போல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை பெருக்கெடுத்தது.

அதுவே ஹரிதாக்கு கவி மீது வன்மத்தை கிளப்பி விட்டிருக்க, அவளின் மகிழ்ச்சியை குலைக்கவேண்டி நேரம் பார்த்துக் காத்திருந்தவள், ஆத்வியின் வீட்டை கண்காணித்துக் கொண்டு இருக்கும் வேளையிலே, கவி வீட்டை விட்டு வெளியேறுவதை கண்டு, திருட்டு எலியாக ஆத்வியின் வீட்டில் நுழைந்து இருந்தாள் ஹரிதா.

இங்கு தான் தாய்மை அடைந்ததை உறுதிப் படுத்திக் கொண்டு, அந்த மகிழ்ச்சியில் சுவாமிக்கு அர்ச்சனை பொருட்களோடு சேர்த்து பலவிதமான இனிப்புகளையும் வாங்கிய கவி, சுவாமியை மனம் உருக தரிசித்து விட்டு அங்கிருந்த குழந்தைகளுக்கு இன்முகத்தோடு இனிப்புகளை வழங்கியவள், வீடு வரும் போதே தனது மொத்த மகிழ்ச்சியும் தொலைத்து விட்டிருந்தவள், வீட்டில் வந்து அவள் கண்ட காட்சியில் மனம் வெடித்து கதறி விட்டாள் பாவை.

'நான் எப்பவும் உனக்கு தான் ஹரி.. என் குழந்தைய நீ சுமக்கும் போது நான் எப்டி போயும் போயும் ஒரு ஹாண்டிகேப்டு கூட என் வாழ்க்கைய வாழ்வேன்.. அவளால எனக்கு நோ யூஸ், என் தம்பி லவ் பண்ற பொண்ணுக்கு ஒரு பிரச்சனை, அதுக்காக நான் பணம் கட்டினத, அந்த லூசு அவளுக்காக கொடுத்ததா நினைச்சிகிட்டு தானா என் வலையில சிக்கினா..

விடுவேனா நான், என்ன அடிச்சி அவமானப் படுத்தினவளை பழி தீர்க்க இதை ஒரு வழியா பயன்படுத்திகிட்டேன்.. சும்மா அவமேல காதல் உள்ளத போல நடிச்சி பாத்தேன், என்னமா உருகுறா அந்த லூசு..

நான் சொன்னது போலவே அவமேல இப்போ எனக்கு சலிப்பு தட்டிப் போச்சி, என் தம்பிக்கும் எந்த தடையும் இல்லாம கல்யாணம் முடிஞ்சிடுச்சி, இனிமே என் இஷ்டப்படி தான் எல்லாமே நடக்கும்.. இன்னைக்கோ நாளைக்கோ நாய அடிச்சி விரட்டி விடுற மாறி, அவளை கதறக்கதற கழுத்த பிடிச்சி வெளிய தள்ளப் போறேன்..

அதுக்கு முன்னாடி கொஞ்சம் காதல் விளையாட்ட அவகிட்ட ஆடிப்பாக்க ஆசை.. அப்புறம் என்ன நீயும் நானும் சந்தோஷமா நமக்கு பிறக்கப் போற குழந்தையோட வாழலாம்.. " என்ற பேச்சிகள் நீண்டதோடு முத்தம் கொடுக்கும் சத்தமும் அறையில் இருந்து வெளிவர, இதயம் சுக்காகிப் போனாள் கவி.

உள்ளிருந்து வெளிவந்த ஆத்வியின் குரலுக்கு சொந்தக்காரனோ ஒரு மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட். ஆத்வியின் குரலை பிசுரு தட்டாமல் ஹரிதா கொடுத்த ஸ்கிரிப்டில் உள்ள அனைத்தையும் பக்காவாக பேசிட, இங்கு கவிக்கு சந்தேகம் வருமா என்ன!

தன் கணவன் தான் தனக்கு துரோகம் செய்து விட்டான் என முழுமையாக நம்பியவள், மனம் வெறுத்த நிலையில் கணவனுக்காக கடைசிக் கடிதம் எழுதினாள் கண்ணீரோடு.

"நம்பி வந்தவள இப்டி பச்சையா ஏமாத்துவீங்கன்னு நான் நினைச்சிக் கூட பாக்கல மாமா.. நீங்க என்ன மட்டும் இல்ல உங்களையே நம்பி இருக்க உங்க குடும்பத்தையும் சேத்து ஏமாத்திட்டீங்க.. ஹரிதா வயித்துல வளருற குழந்தைக்கு நான் காரணமே இல்லைனு என்கிட்ட எப்டிஎல்லாம் நாடகம் போட்டீங்க, ஆனா இப்போ எல்லா உண்மையும் உங்க வாயாலே தெரிஞ்சிக்க வேண்டிய சூழ்நிலை வந்துடுச்சி.." என்ற இடத்தில் கண்ணீர் சொட்டுகள் தெறித்து,

"நீங்க தான் ஹரிதா குழந்தைக்கு அப்பான்னு தெளிவா சொல்லிடீங்க,

கல்யாணத்துக்கு முன்னாடியெல்லாம் எம்மேல நீங்க வெறுப்பைக் காட்டினாலும் அதுல ஒரு உண்மை இருக்கும்.. ஆனா கல்யாணத்துக்கு பிறகு முழுக்க முழுக்க பொய்யா என்கூட வாழ்ந்து இருக்கீங்கனு நினைக்கும் போது தான், என் இதயத்தை உயிரோட பிடிங்கி எடுக்குற மாறி வலிக்குது மாமா.. ரொம்ப வலிக்குது" எழுதும் போதே கண்ணீரில் கரைந்தவள்,

"நீங்க எம்மேல காட்டின பாசத்தை இப்பவும் என்னால பொய்னு ஏத்துக்கவே முடியல.. அந்த அளவுக்கு தத்ரூபமா நடிச்சி என்ன ஏமாத்திடீங்களே.. பழி வாங்க உங்களுக்கு இந்த காதல் தான் கிடைச்சிதா மாமா.. ஏதாவது திருட்டுக் கேஸ் போட்டு சிறைல கம்பி எண்ண வச்சிருந்தா கூட இவ்ளோ வலி எனக்கு வலிச்சி இருக்காது, இந்த காதல் ரொம்ப ரொம்ப வலிய கொடுக்குது மாமா..

உங்ககிட்ட ஒரு சந்தோஷமான விஷயத்தை சொல்லலாம்னு ஆசைஆசையா இருந்தேன், ஆனா இனி அது எதுக்கும் நீங்க தகுதியானவர் கிடையாது எனும் போது எதையும் உங்ககிட்ட நான் சொல்ல விரும்பல, நான் போறேன்..

இத்தனை நாளும் உங்கள மாதிரி ஒரு நம்பிக்கை துரோகியோட வாழ்ந்து இருக்கேன்னு நினைக்கும் போது தான், என்ன நினச்சா எனக்கே அருவருப்பா இருக்கு.. இனிமே என் தொல்லை இல்லாம அவளோட சந்தோஷமா வாழுங்க" என்றதோடு கடிதம் நிறைவு பெற்றிருக்க, ஆத்விக்கோ உயிர் போகும் வலியை விட, மிக கொடூரமான தண்டனையாக இருந்தது, அவள் எழுதி இருந்த ஒவ்வொரு வார்த்தைகளும்.

'இத்தனை மாதங்கள் கடந்தும் தன்னோடு வாழ்ந்த வாழ்க்கையில் தன்னுடைய மெய்க்காதலை அவள் உணர்ந்ததே இல்லையா? நான் நம்பிக்கை துரோகியா?' தினம் தினம் அந்த கடிதத்தை கண்டு மனம் நொந்துக் கொண்டவன், இதற்கெல்லாம் காரணமான ஹரிதாவையும், அந்த மிமிக்கிரி ஆர்ட்டிஸ்டையும் ஒரு வழி செய்து விட்டான்.

இருவரின் பேரிலும் பொய் கேஸ் போட்டு கதற கதற உள்ளே தள்ளி விட்டான். சிறையிலே ஹரிதாக்கு பெண் குழந்தையும் பிறந்து இருக்க அவளுக்கு மயக்கம் தெளியும் முன்னவே, அந்த குழந்தையை எடுத்து வந்து, நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் தவித்த தனக்கு தெரிந்த தம்பதியினரிடம் கொடுத்து, நன்றாக வளர்க்கக் கூறி விட்டான்.

மயக்கம் தெளிந்து தன் குழந்தை எங்கே என்றெல்லாம் அவள் கேட்கவும் இல்லை, குழந்தை காணாமல் சென்ற துடிப்பும் இல்லை. எப்படியோ நாம் நிம்மதியாக தன்னந்தனியாக சுதந்திரமாக இருந்தால் போதும், அந்த குழந்தையால் தன் எதிர்காலம் கெட்டு விடக் கூடாது என்று நினைத்தவளுக்கு மனதின் ஓரம் பெரிய நிம்மதி என்னவென்றால், இப்போது கவி ஆத்வியோடு இல்லை.

அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள், இனிமேல் காலத்துக்கும் இருவரும் ஒன்று சேராதவாறு காய் நகர்த்தி விட்டு வந்து விட்டோம் என்ற மகிழ்ச்சியே போதுமானதாக இருந்தாலும், இனி சிறை விட்டு வெளியே செல்லுகையில், ஆத்வியை விட நல்ல பணக்காரனை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே புதிதாக உருவாகி இருந்தது.

ஹரிதா அவள் குழந்தைக்காகவாது மனம் திருந்தி வாழ்வாள் என்ற காரணத்தினால் தான், அவளை இத்தனை நாளும் தன் கண்காணிப்பிலே வைத்து இருந்ததற்கு காரணம். ஆனால் அவளோ நிச்சயமாக அந்த குழந்தை வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் இருந்து வந்தாள்.

அதை எல்லாம் கூர்மையாக உள்வாங்கிக் கொண்ட ஆத்வி மட்டும் அந்த குழந்தையை எடுத்து செல்லவில்லை என்றாலும், அவளே ஏதோ ஒரு அனாதை ஆசிரமத்தில் அப்பிஞ்சி குழந்தையை தூக்கி வீசுவது உறுதியே!
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 67
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top