- Messages
- 308
- Reaction score
- 217
- Points
- 63
அத்தியாயம் - 7
ஏழு மாதங்கள் கழித்து,
அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டில் இருந்து பெரும் அலறல் சத்தம் தொடர்ந்து வந்து கொண்டே இருக்க, மருத்துவர்கள் சிலர் உள்ளே போவதும் வருவதுமாக பரபரப்பாக இருந்தது அவ்விடமே!
"நல்லா புஷ் பண்ணுமா.. முயற்சி பண்ணு கண்ண மூடாத. ம்ம்.. அப்படித்தான்.. நல்லா மூச்ச தம்கட்டி வயித்த புஷ் பண்ணு"
மருத்துவரின் வழிகாட்டுதலின்படி என்ன முயற்சித்தாலும் அதற்கு மேலும் முடியாது கால்கள் துடித்து கண்கள் சொருக, "எ.என்னால முடியல டா.க்.ட.ர்ர்.." என மயங்கியவளை பதட்டமாக கன்னம் தட்டி முழிக்க வைக்க முயல, அனைத்தும் தோல்வி.
"டாக்டர் இந்த பொண்ணு கூட அவ புருஷனும் இல்லை வேற யாரும் இல்ல, சரியா குழந்தை வெளிய வர நேரத்துல மயங்கியும் போச்சி இப்ப என்ன பண்றது" இன்னொரு மருத்துவர் ஆயாசமாக கேட்டிட, "இப்படி நாளுக்கு ஒரு கேச பாக்கணும்னு நம்ம விதி. யாரும் இல்லனா எதுக்கு குழந்தை பெத்துக்க ஆசை படுதுங்க இதுங்க எல்லாம். உயிருக்கு ஏதாவது ஆபத்தானா நம்ம தலை தான் இங்க உருளும்" இன்னொரு மருத்துவர் அலுத்துக் கொண்டார்.
"வேற வழி இல்ல வழக்கம் போல, நம்ம ஆளுங்க யார்கிட்டயாவது கையெழுத்து வாங்கிட்டு வாங்க உடனடியா ஆப்ரேசன் பண்ணனும் இல்லாட்டி ரெண்டு உயிருக்குமே சிக்கல் தான்" என்னதான் அவர் வாய்க்கு வந்ததை திட்டித்தீர்த்தாலும் தன் கடமையில் சரியாக இருந்தவர், அடுத்தடுத்த வேலைகளில் தீவிரமானர்.
நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு சிசரிங் செய்து ஒரு அழகிய ஆண் குழந்தையை வெளியே எடுத்த மருத்துவர்கள் அக்குழந்தையின் தோற்றம் கண்டு ஒருவர் முகத்தை மற்றொருவர் யோசனையாக பார்த்துக் கொண்டவர்களாக, உதிரத்தை சுத்தம் செய்து தையலிட்டனர்.
பிறந்ததும் குழந்தை அழுததோடு சரி அதன் பிறகு எந்த சத்தமுன்றி மயக்கத்தில் இருந்த அன்னையை தொல்லை செய்யாமல் வெள்ளைக்கார குழந்தை தன் குட்டி இமைகளை பிரிக்காமல் குட்டி பொம்மை போல் துயில் கொள்ளும் அழகினை திகட்டாமல் ரசிக்கலாம்.
முழுதாக பன்னிரண்டு மணிநேரம் கழித்து மயக்கம் தெளிந்து வலியில் முணுகியபடியே கண் திறந்தவளின் கை வளைவில் கை காலை உதைத்துக் கொண்டு கொழுகொழு அமுல்பேபியாக படுத்து இருப்பதை பார்த்ததும் வியப்பில் ஆழ்ந்தவள், சட்டென எழப் போக வயிற்றில் தையலிட்ட இடத்தை சுற்றிலும் வலி உயிர் கொன்றது.
ஸ்ஸ்ஸ்..ம்மாஆஆ... என்ற சத்தம் கேட்டதுமே அங்கிருந்து தாதி ஓடி வந்து "வயித்துல தையல் போட்டு இருக்கு உடனே எல்லாம் அவசரமா இப்படி எந்திரிக்கக் கூடாது" என கடிந்துகொண்டே நன்றாக அவளை படுக்க வைத்தாள்.
"இதுதா உன் குழந்தை நல்லா பாத்துக்கோ, கண்ண கூட முழுசா திறக்கல ஆனா இப்பவே உன் குழந்தை ரொம்ப அடம் தெரியுமா, ஐயோ பாவம் பிள்ளைக்கு தொண்டை காஞ்சி போகுமேனு மத்த மதர்ஸ் மில்க் வாங்கி கொடுத்தா பசிஇருந்தும் பிடிவாதமா வாய திறக்கல.
எவ்ளோ முயற்சிக்கு பிறகு சரி போகட்டும்னு மயக்கத்துல இருந்த உன்கிட்ட தான் பால் குடிக்க வச்சேன் பையன் பாஞ்சி வந்து லபக்குனு புடிச்சிக்கிட்டான்" அவள் மகனின் சேட்டையை செவிலியர் சிலாக்கித்து கூறுவதை ஏதோ புரியாத மொழியை புதிதாக கேட்பது போல் கண்களை உருட்டி கேட்டாள் யமுனா.
"சரி சரி லேசா ஒருகளிச்சு படுத்து குழந்தைக்கு பால் குடு," என்றதும் திருத்திருவென முழிக்க,
"என்னம்மா முழிக்கிற" அவளின் தயக்கமான கண்களே குழந்தைகளை தூக்கி பழக்கம் இல்லாதவள் என அனுபவசாலி செவிலிக்கு புரியவே, "சரி இந்த ஒரு முறை சொல்லி தரேன் அடுத்த முறைல இருந்து குழந்தைக்கு பசிக்கும் போதெல்லாம் நீயே பால் குடுத்து முதுகை தட்டி கொடுத்துடணும் சரியா" என்றபடியே யமுனாவின் பால் கட்டிய அளவான மார்பகத்தை வெளியெடுத்து குழந்தைக்கு வாட்டமாக பால்முனையை குட்டிவாயில் வைத்து, அவளின் கரத்தினை எடுத்து குழந்தையை அணைத்தார் போல் மெல்ல வைத்து "குழந்தைய அப்படியே அழகா புடிச்சிக்கோ" என்றார்.
இத்தனை நேரமும் செவிலியிடம் ஆட்டம்காட்டி சேட்டை பிடித்த குழந்தையா இவன் என்ற ரேஞ்சிக்கு தாயிடம் அப்படியே அடங்கி, ரோஸ் நிற மொட்டு வாய் துருத்தி எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்தில் அவசர அவசரமாக தாயமுதம் உறுஞ்சிக் குடித்த பிள்ளையைக் கண்டு வாய் மீது கை வைத்துக் கொண்டார் செவிலியே!
ஏற்கனவே ஒன்றும் புரியாத நிலையில் குழந்தையின் தோற்றம் கண்டு குழம்பி போய் இருந்தவள், அதற்குள்ளாக தன்னிடம் ஒன்றி முச்..முச்..முச்.. என்ற மிக மெல்லிய முணுகள் சத்தமிட்டு ரசித்து ருசித்து ஜாலியாக அமுதம் பருகும் குழந்தையின் ஸ்பரிசத்தில் மூச்சைடங்கி போனாள்.
அவ்வப்போது அந்த குட்டிக் கண்களை பாதியாக திறந்து மீண்டும் படக்கென மூடிக்கொண்டதை பார்த்து வேறு உள்ளுக்குள் பூகம்பம் உண்டாகி வெடித்து சிதறிய உணர்வு.
"ஐயோ கடவுளே என்ன ஒரு சோதனை. இத்தனை நாளும் என் வயித்துல உள்ள பிள்ளை நம்ம இந்திய நாட்டை சேர்ந்த ஒருத்தனோட குழந்தைனு நினைச்சிட்டு இருந்தா, இதென்ன வெள்ளைக்காரனுக்கு பிறந்த குழந்தை போலவே இருக்கு அதுவும் இந்த கண்கள் நீல நிறத்துல ரொம்பவே அழகா இருந்தாலும் சட்டுனு பாக்க உடம்பெல்லாம் நடுங்குது"
மனதில் கலக்கமாக நினைத்திருக்க, குழந்தையின் பிஞ்சி கை விரல்கள் அவளின் பால் சுரப்பியை பட்டும் படாமலும் உரசி பிடித்தபடி முகத்தை முட்டி முட்டி காம்பினை விட்டு மீண்டும் அவசரமாக கவ்விப்பிடித்து தாயின் கவனத்தை தன் புறம் திருப்ப குட்டிக்காலை லேசாக தூக்கி உதைத்துக் காட்டியதும், மனதில் ஆயிரம் கவலைகள் இருந்தும் தன்னையும் அறியாமல் குழந்தையின் அழகிய குரும்பினை ரசிக்கத் துவங்கினாள்.
"என்னமா அயல்நாட்டு ஆள லவ் பண்ணி கட்டிக்கிட்டியா, குழந்தை அப்படியே வெள்ளைக்கார பிள்ளையாட்டாமே இருக்கானே!" அங்கிருந்த சில புதிய தாய்மார்கள் சிலரும் ஆச்சரியமாக கேட்டதில், முகம் சுருங்கிய யமுனா வேறு வழியின்றி பொய்யாக தலையாட்டிக் கொண்டாள்.
அரசு மருத்துவமனை என்பதால் வேளாவேளைக்கு பத்திய உணவு, பால் பழம் அனைத்தும் வந்து விடும். ஆனால் அறுவைசிகிச்சை செய்த பச்சை உடம்புக்காரியை பாத்ரூம் அழைத்து செல்ல, உடை மாற்றி விட, தலை சீவ, அழும் குழந்தையை தூக்கி வைத்து கொஞ்ச என்று உடன் இருந்து கவனித்துக்கொள்ள யாரும் இல்லாமல் குழந்தையை தனியாக வைத்துக் கொண்டு மிகவும் சிரமப்பட்டுவிட்டாள்.
"என்னமா காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்ட அதனால உன் வீட்ல இருந்து யாரும் உன்னையும் குழந்தையும் பாக்க வரல சரி ஆனா குழந்தையோட அப்பா கூடவா வந்து எட்டிப் பாக்க கூடாது?"
"அதானே.. நம்ம ஊரு ஆம்பளைங்க பலருமே ஆச அறுபது நாளு மோகம் முப்பது நாளுனு துண்டக்காணோம் துணியக் காணோம்னு ஓடிப் போற காலத்துல, இந்த புள்ள கட்டிக்கிட்டதோ அயல்நாட்டுக்காரன அவன் எப்படி இருப்பான் சொல்லு, இந்நேரம் வேற ஏதாவது வெள்ளைக்கார குட்டிகூட கூத்தடிச்சிட்டு இருக்க கூட வாய்ப்பிருக்கு"
அவள் காது படவே தங்களுக்குள்ளே ஒவ்வொரு கதையாக திரித்துப் பேசிக் கொண்டே அவளுக்காக உதவி செய்தவர்களை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது அவளால்.
காலம் தான் எத்தனை கொடிது, பெற்றவர்கள் இருந்தும் யாருமற்ற அனாதையாய் வாழ வேண்டிய நிலையெல்லாம் எதிரிக்கும் வரக்கூடாது.
"ஒரு குழந்தையை ஈன்றெடுக்க ஒரு பெண் எத்தனை எத்தனை வலிநிறைந்த போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. தன்னையும் இப்படிதானே தன் தாயும் பெற்று எடுத்திருப்பார், அப்படிஇருக்க ஏன் தன் மீது சிறு பட்சாதாபம் கூட தன் தாய்க்கு இல்லாமல் போனது" அருகில் படுத்திருந்த குழந்தையின் குட்டிக் கைகளில் தன் விரலை கொடுத்து விளையாட வைத்து அழகு பார்த்தபடியே சிந்தனையில் உழன்றவளின் எண்ணத்தில் பல கசப்பான நினைவுகள் வந்து போனது.
ஏழு மாதங்களுக்குள்ளாகவே எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னென்ன நடந்தேறி விட்டது. அன்று அத்தனை குடும்பத்தாரின் முன்னிலையிலும் திலீப் உதட்டில் முத்தமிட்டுக் கொண்டிருந்த பெண்ணையும், கொஞ்சம் கூட கூச்சம் இல்லாது முத்தத்தை பெற்று நின்றிருந்தவனையும் மிகுந்த அதிர்ச்சியில் இயலாமையோடு கண்டு மயங்கியவளை, ஒரு மனிதாபிமானத்தின் அடிப்படையில் கூட யாரும் கண்டுகொள்ளவே இல்லை.
தானாக மயக்கம் தெளிந்து கண் விழிக்கும் போது கார் பார்க்கிங் ஏரியாவில் ஒரு தூண் அருகில் சாய்த்து அமர வைக்கப்பட்டு இருந்தாள்.
மனம் முழுக்க விரக்தி வேதனை ஏமாற்றம் துரோகம். வாழ்க்கையே வெறுத்துப் போன நிலையில் தலை குனிந்தவாறு தரையில் விழிநீர் சொட்ட அமர்ந்திருந்தவளின் எதிரில் ஒற்றை கால் ஊன்றி மண்டியிட்டு அமர்ந்த திலீப்பை மெதுமெதுவாக தலை தூக்கிப் பார்த்தவளின் கண்களில் அத்தனை வெறுப்பு.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் - 7
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.