Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 74

உள்ளே வரும் போதே ஆதியின் கோபவிழிகளை கண்டு ஆத்வி தலை குனிந்துக் கொள்ள, மற்ற யாருக்கும் அவன் கேடி வேலை தெரியாது போனதால் அன்போடு உபசரித்து கொஞ்சுவதை கண்டு, ஆத்திரமாக ஆதி முறைக்க,

"என்ன டாட் வழக்கத்தை விட இவ்ளோ பாசமா பாக்குறாரு, ஒருவேளை அங்கே நடந்த எல்லாத்தையும் அந்த பக்கிப்பைய போட்டுக் கொடுத்துட்டானா.."என்ற சந்தேகத்தோடு யாதவை தேட, அவனோ அங்கிருந்து எப்போதோ எஸ்ஸாகி விட்டான் மனைவியை தள்ளிக் கொண்டு.

"பிராடு தெரியும் டா இது உன் வேலை தான்னு.." மனதில் கறுவியவன் மனைவியை வேறு வந்ததில் இருந்து காணமல் இருப்பதால், அம்மாமார்கள் ஊட்டி விட்ட உணவை அவசரமாக விழுங்கிக் கொண்டு அங்கிருந்து செல்லப் போனவனை,

"ஆத்விஇஇ.." அழுத்தமான குரல் தடுத்தது.

"அச்சோ போச்சி, இன்னைக்கு என்ன அட்வைஸ் பண்ண போறாரோ இந்த டெரர் பாய்.." முணுமுணுத்தபடியே தந்தைபுறம் திரும்ப, இளங்காளை வேதத்தோடு சட்டையை இழுத்து விட்டபடி எழுந்த ஆதி,

"என் ரூம்க்கு வா.." அழுத்தமாக உரைத்து செல்லவும்,

"ஏன் உன்ன மட்டும் தனியா கூப்பிடுறார்.." சந்தேகமாக கேள்வி கேட்டு துளைத்த அனைவரையும் சமாளித்து விட்டு வருவதற்குள், ஒரு வழியாகிப் போனான் ஆத்வி.

உள்ளே வந்ததும் தந்தையின் இறுக்கமாக அணைப்பில் உடல் குலுங்கி நின்றவன் "டாட்.." என அழைக்க,

"பேசாத டா.. சொல்ல சொல்ல கேக்காம போயி குண்டடி பட்டு வந்துருக்கியே உன்ன என்ன பண்றது ஆத்வி.." அவன் சட்டையை கழட்டி கட்டுப் போட்டிருந்த காயங்களை மென்மையாக வருடி கலங்கி விட்டான் ஆதி.

"நேத்து தான் நீ பிறந்து உன்ன கைல தூக்கி கொஞ்சின மாதிரி இருக்கு டா, அதுக்குள்ள என் புள்ள வளந்து பெரிய பெரிய வேலையெல்லாம் செய்றானானு நினைக்கும் போதே நெஞ்செல்லாம் பதறுது ஆத்வி..

எனக்கே இப்டினா உன் அம்மா பொண்டாட்டி நிலைமை எல்லாம் நினைச்சி பாத்தியா.." வேதனையாக கேட்ட வார்த்தைகள் ஆத்விக்கும் வருத்ததை தான் கொடுத்தது. ஆனால் அவன் பிடிவாத குணம் அதை ஏற்க மறுக்கிறதே!

"டாட்.. ப்ளீஸ்.. இப்டி எமோஷனலா பேசி என்ன லாக் பண்ண நினைக்காதீங்க.. முதல்ல என்ன சின்ன பையனா நினைக்கிற தாட்ட மாத்திக்கோங்க டாட், நானும் வளந்துட்டேன்.. எனக்கு நானே தனியா கேர் பண்ணிக்கிற பக்குவம் இருக்கு டாட், என்ன பத்தி யோசிச்சி டென்ஷன் ஆகுறத நிறுத்துங்க..

இதனால உங்க உடம்பும் மனசும் வீக்காகுறத என்னால பாக்க முடியல, என் டாட் ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங், நானும் என் டாட் மாதிரி ரொம்பவே ஸ்ட்ராங் தான்.. எனக்கு ஒன்னும் ஆகாது, ப்ளீஸ் ஃபீல் பண்ணி என்னையும் டவுன் பண்ணாதீங்க டாட்.." என்றவன் தந்தையின் கரத்தை ஆறுதலாக பற்றி கெஞ்சுதலாக முறையிடவும், தொழில் உலகத்தை ஒற்றை பார்வையால் அடக்கி ஆல்பவன், மனைவியையே மிரட்டி உருட்டி காரியம் சாதிக்கும் ஆதிக்கு, பெற்ற மகனிடம் எதுவும் செல்லுபடியாகாமல் போனது.

மனைவியை காணவேண்டி ஆசையாக அறைக்கு வந்த ஆத்வி, முதுகு காட்டி ஒருக்களித்து படுத்திருந்தவளின் அருகில் படுத்து, மெல்ல அவள் பிள்ளை உண்டான வயிற்றில் கரம் பதிக்க, எவ்வித அசையும் இல்லை அவளிடம்.

'என்ன தூங்கிட்டாளா' என்ற யோசனையில் அவளை மெல்லமாக திருப்ப, ரப்பர் பொம்மையாக இழுத்த இழுப்பிற்கு வந்தவள் உறங்காமல் வெறுமெனே கண்களை மூடி இருப்பதை கண்ட ஆத்வி,
"பேபிஇ.. பேபிஇ.." என்று அழைத்தும் பதில் வராமல் போகவே, மேஜையில் கழட்டி வைத்திருந்த செவிகருவியை அவளுக்கு மாட்டி விட்டவன்,

"பேபி.. முழுச்சிட்டு தானே இருக்க, அப்புறம் ஏன் நான் வந்தது தெரிஞ்சும் கண்டுக்காத மாறி படுத்திருக்க.." மென்மையில் கரைந்து, ஆசையாக அவள் கன்னம் வருட,

"இந்த முறை எந்தெந்த இடத்துல எல்லாம் அடிபட்டு வந்து இருக்கீங்களோ.. நான் கேள்வி கேக்க போயி நீங்க என்ன கண்டபடி திட்டி, அப்புறம் நீங்களாவே வந்து சமாதானம் பேசி, எதுக்கு வம்புனு தான் அமைதியா படுத்திருக்கேன் போதுமா.." என்றவளுக்கு நன்றாக தெரியுமே அவனுக்கு குண்டடி பட்ட விடயம். யாதவ், ஆதிக்கு அழைத்து போனில் பேசிய அனைத்தும் ஆதியை பார்க்கப் போன கவி கேட்டு விட்டாளே!

"ஏய்.. இப்ப எதுக்கு ஏதோ மாதிரி பேசுற, நான் நல்லா தான் டி இருக்கேன் எனக்கு ஒன்னு இல்ல.. இப்ப தான் டாட சமாளிச்சிட்டு வந்தேன், திரும்ப நீயும் ஆரமிக்காத, தலை வலிக்குது.." சலிப்பாக சொன்னவனை கண்டு, பொங்கி வரும் கோபத்தையும் அழுகையையும் கட்டுப் படுத்திக் கொண்ட கவி,

"இதுக்கு தானே நான் வாய திறக்காம படுத்திருந்தேன், நீங்க ஏன் எதுக்குனு கேள்வி கேட்டுட்டு தலைவலிக்குதுன்னா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது.." வெடுக்கென பேசி மீண்டும் அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக்கொள்ள, வந்த கோபத்தை அடக்கிக் கொண்ட ஆத்வி,

"சரி அந்த டாப்பிக்கே வேண்டாம் இதோட விட்டுடலாம் ஓகே, உன்ன பாத்து எத்தனை நாளாச்சு எப்டி இருக்க கவிஇ.. உள்ள என் குட்டி பேபி என்ன பண்ணுது.." மனைவி வயிற்றை வருடி, சிவந்த அதரம் கவ்வி தேன் ருசித்து அவள் முகம் பார்க்க, புறங்கையால் உதட்டை துடைத்துக் கொண்டவளிடம் பதிலே இல்லை அத்தனை கோபம் அவன் மீது.

"ப்ச் கவிஇ.. உன்ன பாக்க தானே டி ஆசை ஆசையா ரெஸ்ட் கூட எடுக்காம ஓடி வந்தேன், நீ இப்டி முகத்தை திருப்பிட்டு இருந்தா நல்லாவா இருக்கு.. என்ன பாரு டி, என்கிட்ட பேசு.." அவள் முகத்தை திருப்ப, அதற்கு மேலும் பொறுமை காக்க முடியாத கவி சூறாவளியாக கொந்தலித்து விட்டாள்.

"எப்டி எப்டி என்ன பாக்க ஆசையா ஓடி வந்தீங்களா, அதுவும் குண்டடிப் பட்ட காயத்தோட.. அப்டி யாரும் உங்கள அவசரமா பாக்க ஓடி வர சொல்லல, போயி உங்களுக்கு விருப்பமான அந்த பைக்கயும் காரையும் கட்டிக்கிட்டு படுங்க..

எங்கள விட அந்த உயிரில்லாத மோட்டாருங்க மேலதானே நீங்க உயிரையே வச்சி இருக்கீங்க, நாங்க எக்கேடு கெட்டா உங்களுக்கு என்ன.. வயித்துல பிள்ளையோடு இருக்கவள தனியா தவிக்க விட்டு போனீங்கல்ல, நீங்களும் தனியாவே கிடந்து உங்க காயத்துக்கு எல்லாம் மருந்துப் போட்டுக்கோங்க..

எனக்கு ஒன்னும் இல்ல நல்லா இருக்கேன் நல்லா இருக்கேன்னு என்கிட்ட கெத்தா சொல்ல வேண்டியது.. நைட்டானா வலி தாங்காம நீங்கபடுற கஷ்டம் உங்களுக்கு எங்கே தெரிய போகுது.. நைட்டெல்லாம் கண் விழிச்சி உக்காந்து மருந்து போட்டு விடுற எனக்கு தானே தெரியும், உங்க வலியும் வேதனையும்..

இனியும் உங்களோட பேசவோ, உங்கக்கூட ஒன்னா ஒரே ரூம்ல தங்கவோ என்னால முடியாது.." ஆவேசமாக கத்தி விட்டு நடக்க,

"கவிஇ.. நில்லு டி. இப்ப எதுக்கு ஒன்னு இல்லாத விஷயத்தை இப்டி கத்தி பெருசு பண்ற.." என்றபடி அவள் பின்னே போக,

"அதான் நீங்களே சொல்லிடீங்களே ஒன்னு இல்லாத விஷயம்னு, அப்புறம் ஏன் அதை பத்தியே பேசிகிட்டு என் பின்னாடி வரீங்க.." மேடு தட்டிய வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஓட்டம் பிடிப்பவளுக்கு தானே அவனது அடியின் வீரியம் தெரியும். அதிகமாக பேசினால் கணவனிடம் வாங்கிக்கட்டிக் கொள்வது உறுதி என்றே, அவன் கையில் சிக்காமல் சென்று யாதவின் அறைக் கதவை தட்ட,

"ஏய்.. இப்ப எதுக்கு டி இவன் ரூம் கதவ தட்டுற.." கோபத்தில் பற்களை கடித்து உருமியவன் பக்கம் திரும்பவில்லை கவி.

மனைவியை முத்தமிட்டு கண்டமேனிக்குக் கொஞ்சிக் கொண்டிருந்த யாதவோ, 'இந்த நேரத்துல எந்த கரடி கதவ தட்டுது' சலிப்பாக வந்து கதவை திறக்கவும், அங்கு கவியைக் கண்டு அவன் யோசனையாகப் பார்க்க,

"யாருங்க.." என்று பின்னால் வந்த ஸ்வாதியும் கவியை பார்த்து முழித்து நின்றாள்.

யாதவை முறைத்துப் பார்த்த கவி,
'நீயும் தானே அந்த ரேஸ்க்காரனுக்கு கூட்டு..' மனதில் கறுவியவவளாக,

"நீங்க போயி உங்க அண்ணனோட படுங்க, நான் இனிமே ஸ்வாதிக் கூட தான் தூங்க போறேன்.." கவியின் விளியில் அதிர்ந்து விழித்த யாதவ், அவளுக்கு பின்னால் இருந்த தமயனை பாவமாக காண, அவனோ அதற்கு மேல் முகம் கனியாமல் நின்றிருந்தான்.

"திடீர்னு என்னாச்சி உனக்கு, சும்மா விளையாடம போய் தூங்கு கவி, அண்ணே நிக்குது பாரு.."

"உங்க நொண்ணன் நின்னா நான் போகணுமா, என்னால அவர்கூட எல்லாம் போக முடியாது அத்தான்.. நீங்க தள்ளுங்க எனக்கு தூக்கம் வருது.." அவனை தள்ளி விட்டு அறைக்குள் போனவளை, மித்ராவின் குரல் தடுத்தது. ஏற்கனவே இவள் போட்ட சத்தத்தில் மொத்த குடும்பமும் அங்கு தான் கூடி இருந்தனர்.

"ஏம்மா நீ என்கூட வந்து படு.." என்ற மித்ராவின் இடைகிள்ளி யாரும் அறியாமல் துள்ள வைத்த ஆதி,
"ஒழுங்கா வாய மூடிட்டு நிக்கணும் இல்ல அடுத்து பேச வாயிருக்காது.." மகன் மேல் இருக்கும் கோவத்தில், சரியான நேரத்தில் பழி வாங்கினான், மனைவியை அடக்கி.

"அம்மாடி என்கூட படுத்துக்குறியா.." என்ற சுபியின் காதில்,
"நம்மளே இப்ப தான் ஒன்னு சேந்து இருக்கோம், ஏன் சுபிமா.." பாவமாக விக்ரம் கிசுகிசுக்க, சங்கடமாக கணவனை கண்ட சுபி, அதோடு வாய் மூடிக் கொண்டாள்.

அஜயோ, ஆரு வாய் திறப்பதற்கு முன்னவே அவளை அறைக்கு கடத்தி விட்டான். ஒவ்வொருவரின் செயலையும் சிரிப்பை அடக்கியபடி கண்ட கவி, அவர்களுக்கு சிரமம் கொடுக்க எண்ணாதவளாக,

"இல்ல நீங்க எல்லாரும் போயிட்டு தூங்குங்க, ஸ்வாதி கூட தூங்கி ரொம்ப நாளாச்சு, என்னவோ அவ கூட தூங்கணும்னு ஆசையா இருக்கு.. போங்க" என்றதும் ஆத்வியின் முகம் கடுகு போட்டால் படபடவென பொறியும் பக்குவத்தில் இருப்பதை வைத்தே, கணவன் மனைவி ஊடல் என நன்றாக புரிந்துக் கொண்ட பெரியவர்களும் நேக்காக கழண்டு கொண்டனர்.

அவர்கள் சென்றதும் பட்டென கதவடைத்த கவியை வெறியாக முறைத்த ஆத்வி வேகமாக தனறைக்கு சென்று விட. ஸ்வாதியோ குழப்பமாக அவள் செயல்களை நோட்டம் விட்டாள்.

இதில் பாவப்பட்ட ஜீவனாக தனித்து நின்ற யாதவோ, இடையில் கை வைத்து சலிப்பாக விட்டத்தை பார்த்து ஊதியவன், "இதுங்க ரெண்டும் சண்டை போட்டுக்கிட்டதுக்கு, நான் ஏன் டா என் பொண்டாட்டிய பிரிஞ்சி இருக்கணும்.." பாவமாக நினைத்தபடி ஆத்வியின் அறைக்கு வந்தான்.

அங்கு ஆத்வி கணக்கின்றி சிகரெட்டை ஊதி தள்ளுவதை பார்க்கவே பயமாக இருந்தாலும், வேறு எங்கு சென்று படுப்பது என்ற நினைப்பில் அடியெடுத்து வைத்தவனை முந்திக் கொண்டு ஓடிய விஷாலை கடுப்பாக முறைத்தவன்,

"டேய்.. கண்ணு தெரியாதா டா உனக்கு, இப்டியா இடிச்சி தள்ளிட்டு ஓடுவ.." இடித்த இடத்தை தேய்த்தபடி கத்த,

"ஐயோ அண்ணே ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற, நீங்க ரெண்டு பேரும் ஜாலியா தூங்க போறதா கவி சொன்னா.. அதான் இதுதான் சான்ஸ்னு உங்களோட நானும் தூங்கலாம்னு ஆசை ஆசையா ஓடி வந்தேன், இதுக்கு போயி இம்புட்டு கோவப்பட்டா தம்பி பாவம் இல்லையாண்ணே.." பொய்யாக கண்ணை கசக்க,

"அட யார்றா இவன் நாங்களே பொண்டாட்டிங்க இல்லாம டென்ஷன்ல இருக்கோம்.. ஜாலியா இருக்கோம் போலியா இருக்கோம்னு இவன் வேற தனியா வந்து பெர்ஃபார்மென்ஸ் பண்ணிட்டு இருக்கானே.." பாவமாக நொந்துக் கொண்ட யாதவ,

"போடா போய் படுத்து தொல.." என்றதும் ஆத்வியின் புறம் திரும்பிய விஷால்,

"அண்ணே உனக்கு லவ் ஃபெயிலியரா என்ன, காதல் தோல்வி ஆனவங்க தான் புண் பட்ட நெஞ்ச புகை விட்டு ஆத்துவாங்க, நீ அவங்களுக்கே டஃப் கொடுக்குற விதமா இவ்ளோ புகையை டிசைன் டிசைனா விட்டுட்டு இருக்க..

போதும் போதும் அதையெல்லாம் தூக்கி போட்டு வந்து படுத்து, ரெண்டு பேரும் எனக்கு கதை சொல்லி தூங்க வைங்க.." என்றவன் ஆத்வியின் உதட்டின் இடையில் சிக்கி இருந்த சிகரெட் துண்டை புடுங்கி போட்டு, அவனை தூக்கி செல்லாத குறையாக இழுத்து சென்று மெத்தையில் புரட்டிவிட,

"அடப்பாவி அவன் என்ன உன் லவ்வரா டா மெத்தைல உருட்டி விட்டு விளையாடுற.. இதுல எருமகடா உனக்கு கதை வேற சொல்லி தூங்க வைக்கணுமா.." அவன் முதுகில் ரெண்டு வைத்தான் யாதவ்.

"ஐயோ ஆஆ.. அம்மாஆ.. அண்ணே.. வலிக்குது அடிக்காத, அங்கே பாரு ஆத்வி அண்ணனே சிரிக்குது, நீ என்ன இப்டி அடிக்கிற இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லண்ணே.." பாவமாக சொன்னவனை கண்டு இருவருமே தங்களை மீறி சிரித்து, கலகலப்பாக பேசியபடி இருவருக்கும் நடுவில் விஷால் படுத்துக் கொள்ள, மூவரும் எப்போது துயில் கொண்டனரோ!

நடுசாமம் இருவருக்கும் நடுவில் படுத்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்த விஷாலுக்கு ஏதோ வித்தியாசமாக தோன்ற, உடலை நெளித்தபடி மெல்ல கண் விழித்தவனுக்கு ஏகபோக அதிர்ச்சியில், கண்கள் இரண்டும் வெளியே விழுந்து விடும் அளவிற்கு பேரதிர்ச்சியாகியது.

இருவரும் ஆளுக்கு ஒரு காலை விஷால் மீது போட்டு, இருகன்னத்தையும் ஈரப்படுத்திக் கொண்டு உறக்கத்தில் மனைவி என நினைத்து அவன் இடையை பிடித்து அழுத்துவதில், வலி தாங்காமல் முகம் சுணங்கியவன்,
"அடக்கொடுமையே என்னடா பண்றீங்க ரெண்டு பேரும் என்னைய.." பீதியாக நினைத்துக் கொண்டு எழப் போக,

"ஏய் கிட்டே நெருங்கி வாடி.. கர்லா கட்டை உடம்புக்காரி..
பட்டா எழுதி தாடி.. பஞ்சாமிர்த உதட்டுக்காரி.." யாதவ் உளறலாக பாடியபடி, வலிய கரத்தால் விஷுவின் இடையை இறுக்க, "அம்மாஆ.." என கத்தி முடிக்கவில்லை,

"பொத்தி வச்ச புயலா நீ.. தங்கம் கொட்டி வச்ச வயலா நீ..
ஆக்கி வச்ச பிரியாணி.. உன்னை திங்கப்போறேன் வரியா நீ.." கவியோடு கனவில் டூயட் ஆடிய ஆத்வியோ, அவன் கன்னத்தை நருக்கென கடித்து விட்டான்.

"ஆஆஆ.. அம்மாஆஆ. காப்பாத்துங்க.." விஷால் அலறியடித்து கத்திய கத்தில், டூயட் பாடிய இருவரும் வாரி சுருட்டி எழுந்து,
"டேய்.. இந்த நேரத்துல போய் பேய் மாதிரி கத்தி ஏன்டா ஊரக் கூட்டுற.." அறைகுறை உறக்கத்தில் ஆளுக்கு ஒரு பக்கம் அவன் தலையில் தட்ட,

"பாவிங்களா, தூக்கத்துல கொடூரமா குத்தி கொலை பண்ணி இருந்தா கூட நிம்மதியா செத்து போயிருப்பேன் டா..
ஆனா எப்ப ரெண்டு பேருமா சேந்து ஐட்டம் சாங் பாடி, என்ன ரேப் பண்ண பாத்திங்களோ, இனிமே உங்ககூட படுக்குறது இல்ல டா, நீங்க இருக்க திசை பக்கம் கூட தலை வச்சி படுக்க மாட்டேன்.."
கடித்த கன்னங்களை தேய்த்தபடி ஒரே ஓட்டமாக வெம்பலோடு ரூமை விட்டு ஓடியவனை கண்டு, இருவரும் வெட்கமாக சிரித்துக் கொண்டனர்.

இங்கோ கணவன்மார்களை பிரிந்து உறங்க முடியாமல், ஆளுக்கு ஒரு பக்கம் இரு பெண்களும் படுத்திருந்தனர்.

வெகு நேரமாக கவியை அமைதியாக பார்த்திருந்த ஸ்வாதி, அதற்கு மேலும் பொருக்க முடியாமல் அவள் புறம் திரும்பிவளாக,

"ஏய் கவி.. இப்ப எதுக்கு டி உன்வீட்டுக்காரர் கிட்ட வீம்புக்கு சண்டை போட்டு துரத்தி விட்டு, தூக்கம் வராம கஷ்டப்பட்டுட்டு இருக்க.. இதுல என் புருஷனையும் கூட சேத்து துரத்தி விட்டுட்ட, உனக்கு என்ன பிரச்சனைனு கேட்டாலும் சொல்ல மாட்டேங்குற.." சலிப்பாக கேட்டும் பதில் இல்லாமல் போகவே பெருமூச்சு விட்ட ஸ்வாதி, மனம் கேட்காமல் எழுந்து அமர்ந்தவளாக,

"என்னாச்சி கவி எங்கிட்ட கூட சொல்ல மாட்டியா.." மென்மையாக அவள் தாடை பிடித்து கேட்கவும், அதுவரை தன் மனதில் உள்ளதை யாரிடமும் கொட்டித்தீர்க்க முடியாமல் நெஞ்சடைப்பது போல் சிரமப்பட்டுக் கொண்டிருந்த கவி, ஸ்வாதி பாசமாக கேட்டது தான் தாமதம், தாயை தேடும் சேயாக, "ஸ்வாதி.." என அவளிடம் தாவி கண்ணீர் விட்டவளின் தலையை ஆறுதலாக வருடிய ஸ்வாதி,

"இங்க பாரு கவி, வயித்துல பாப்பாவ வச்சிக்கிட்டு இப்டிலாம் அழக் கூடாது.." என்றாள் பரிவாக அவள் கண்ணை துடைத்து விட்டு.

அழுகை நிறுத்தி தன்னை சற்று ஆசுவாசம் படுத்திக் கொண்ட கவி, ஆத்வி ரேஸ் செல்லும் விடயங்களை கூற, ஸ்வாதிக்கும் என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை.

'ஆபத்துகள் நிறைந்திருக்கும் இந்த விளையாட்டில் அப்படி என்ன உள்ளது..' என்று தோழியின் நிலையை எண்ணி வருத்தம் கொண்டவளாக,

"சரி கவி, அதுக்காக இப்டி அவர்க்கு உடம்புக்கு முடியாத நேரத்துல சண்டை போட்டு தனியா விட்டு வரலாமா.. உன்ன பாக்க தானே முடியாத நேரத்தில கூட அவ்ளோ தூரத்துல இருந்து ஓடி வந்து இருக்காரு..

ரேஸ் அப்படின்ற விஷயம் சின்ன வயசுல இருந்தே அவர் மூளைல மட்டும் இல்ல, ரத்தத்திலயும் ஊரி போய் இருக்கு.. இதை ஒரேடியா வார்த்தையால சொல்லி எல்லாம் மாத்திட முடியாது கவி, மெது மெதுவா பக்குவமா எடுத்து சொல்லி அதுல உள்ள ஆபத்துக்களை உணர வைக்கணும்..

நீ வேணும்னா பாரு, உன் புருஷன் உனக்காக மனசு மாறி ரேஸ மறந்துட்டு உன் பேச்சை கேட்டு நடப்பாரு.. அதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும் கவி, அதுவரைக்கும் இப்டி அவசரக்குடுக்கையா கோவப்படாம, நல்லபடியா பிள்ளைய பெத்து என்கைல கொடுத்துட்டு, அப்புறம் நீங்க தனியா போய் சண்டைப் போட்டுக்கோங்க, இல்ல கொஞ்சிக்கோங்க யாரும் கேக்க மாட்டோம்.."

அவள் மூக்கை ஆட்டி குறும்பாக கூறி கண்ணடிக்கவும், வெட்கம் கொண்டு கண்ணீரோடே சிரித்த கவி, போர்வையை விளக்கிக் கொண்டு எழுந்ததில்,

"ஏய்.. இப்ப ஏன் எந்திரிக்கிற, என்னாச்சி.." சுவாதி புரியாமல் கேட்க,

"ஹான்.. என் புருஷனுக்கு துணையா இருக்க போறேன்.." உதட்டை சுழித்து தோழிக்கு பழிப்பு காட்டி செல்ல, பொய்யாக முறைத்து தனியாக சிரித்துக் கொண்டாள் ஸ்வாதி.

மீண்டும் கதவு தட்டும் ஓசையில் கடுப்பான யாதவ், "அடேய்.. ஒரு இடமா நிம்மதியா படுக்க விட மாட்டீங்களா டா என்ன.." வெளிப்படையாக கத்தியபடி கதவை திறக்கவும், பாவமாக வெளியே நின்றாள் கவி.

"இப்ப என்ன உன் கோவம் போயிடுச்சி, நானும் உன் ரூம் விட்டு வெளிய போகணும் அப்டிதானே.." சிடுசிடுத்தவனை கண்டு ஆம் என தலையாட்ட, அவளை மூச்சி வாங்க முறைத்த யாதவ்,

"எல்லாம் என்நேரம், இனிமே நீ என் ரூம் பக்கம் வந்த, அப்புறம் நான் என் பொண்டாட்டிய கடத்திட்டு போய் தான் குடும்பம் நடத்துவேன் பாத்துக்க.." கோவமாக கத்தி சென்றவனை ஆஆ.. என வாய் பிளந்து பார்த்து நின்ற கவியை முரட்டுக்கள்ளன் ஓங்கி முத்தமிட்டிருந்தான்.

மிட்டாயாக கணவனிடம் கரைந்து போனவளின் கன்னம் ஏந்திய ஆத்வி,
"பெரிய இவளா டி கூப்பிட கூப்பிட மதிக்காம அப்டி முறிக்கிட்டு போற, என்ன எல்லாரும் சப்போர்ட்க்கு இருக்காங்கனு திமிரா..
இன்னொரு முறை என்கிட்ட கோவப்பட்ட, இன்னைக்கு உன் பின்னாடி தொங்கிட்டு வந்த மாதிரி எல்லாம் வரமாட்டேன், சரிதான் போடினு விட்டு என் வேலைய நான் பாட்டுக்கு பாப்பேன் நியாபகம் வச்சிக்கோ.."
சற்றே கோவம் குறையாமல் சொன்ன வார்த்தைகளில் மறைந்திருக்கும் வீரியம் அறியாமல் உரைத்தவன், நீர் திரைகள் மின்னும் தன்னவளின் வெள்ளிக் கண்களை மென்மையாக துடைத்து விட்டான்.

"இப்டி முறைச்சி முறைச்சி பாத்தே உடம்ப சூடாக்காம, உன் பிரண்ட் சொல்லி அனுப்பின அட்வைஸ மனசுல வச்சி புருஷன்கிட்ட அன்பா பேசு டி.." ஏக்கமாக அவள் நுனி மூக்கில் முத்தமிட்டு லேசாக கடித்து இழுத்தான், சிவந்த மூக்கியின் சிவந்த மூக்கை. ஸ்ஸ்.. என்ற முனகலோடு அவன் உடலில் உள்ள காயங்களை எல்லாம் கரம் நடுங்க ஆராய்ந்து, கணவனை முறைத்த கவி,

"நல்லா இருந்த உடம்ப ரணகளமா ஆகிட்டு வந்துட்டு உங்ககிட்ட அன்பா வேற பேசணுமா . நீங்க என்ன அடிச்சே கொன்னாலும் சரி, இனிமே நீங்க ரேஸ் அது இதுனு போயிட்டு வந்திங்க, அதுவே என்ன பாக்குறது கடைசியா இருக்கும்.. இதுக்கப்புறமும் உங்களுக்கு நான் முக்கியமா, இல்ல ரேஸ் முக்கியமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.. என்றதும் ஆத்விக்கு கோவமே வந்தது.

"ஏய்.. திரும்பவும் ஆரமிக்காத கவி, நீ பேசவே வேணாம் அமைதியா படு.." 'இவள எல்லாம் திருத்தவே முடியாது..' கடைசி வரியை தனக்குள்ளே முனகியபடி மறுபுறம் திரும்பி படுத்தவனின் பின்னோடு, வயிறு இடிக்க கட்டிக் கொண்ட கவி,

"நான் இந்தமுறை விளையாட்டுக்கு சொல்றேன்னு மட்டும் நினைக்காதீங்க மாமா, நிஜமா சொல்றேன் திரும்ப ரேஸ் போனா இந்த கவிய வேற மாதிரி பாப்பீங்க சொல்லிட்டேன்.." அழுத்தம் திருத்தமாக உரைத்தவள்,

"ஒவ்வொரு முறையும் உங்கள ரத்த கிளறியா பாத்துகிட்டு, நீங்க இங்கிருந்து கிளம்பினது முதல் வீட்டுக்கு திரும்பி வர வரைக்கும், நீங்க நல்லபடியா இருக்கணும்னு சோறு தண்ணி இறங்காம, தூக்கம் இல்லாம பைத்தியக்காரி மாதிரி உங்க நினைப்பாவே உக்காந்து, கடவுள்கிட்ட வேண்டி ஒவ்வொரு நொடியும் நான் படுற வேதனை உங்களுக்கு புரியாது மாமா..

இப்டி என்ன கொஞ்சம் கொஞ்சமா கொல்றதுக்கு பதிலா, பேசாம நீங்களே என்ன மொத்தமா கொன்னுட்டா கூட நல்லா இருக்கும்.." தேம்பியவளின் கண்ணீர் துளிகள் ஆத்வியின் முதுகை நனைக்கவும், மனைவியின் வேதனையாக பேச்சில் மனம் கனத்து அவள் புறம் திரும்பியவன், தன்னவளை நெஞ்சில் கிடத்திக்கொண்டான்.

"கவி காம் டவுன், இதை பத்தி இப்ப பேச வேண்டாம், ப்ச் அழாத டி.. அதென்ன வயித்துல குழந்தைய வச்சிக்கிட்டு எப்பப்பாரு கொன்னுடு செத்திடுறேன்னு அசால்ட்டா வார்த்தை வருது.. இனிமே அப்டி உன் வாயில இருந்து வார்த்தை வந்துச்சி அடுத்து பேச வாயே இல்லாம பண்ணிடுவேன்.."

வில்லங்கமான பார்வை பார்த்து தன்னவளின் இதழுக்கு பலத்த தண்டனைகள் வழங்கியபடி ஆடை கலைந்து, மோகம் துளிர்ந்த அழகு பெண்ணை விதவிதமாக சித்ரவதைகள் செய்ய, சோகம் மறந்த கவி, கணவன் அளிக்கும் இன்ப சித்திரவதைகளை இன்பமாக பெற்று, தன்னவனின் காயங்களுக்கும் மருந்தாகிப் போனாள்.

'ஆயிரம் ஜன்னல் வீடு, இது அன்பு வாழும் கூடு' என்பதற்கு எடுத்துக்காட்டாக அடுத்து வந்த நாட்கள் எல்லாமே, மகிழ்ச்சியாக தான் கடந்தது.
குடும்பமாக அனைவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்போடு வாழ, ஆருக்கு அஜயின் ஆசைபடியே ஆண் குழந்தை பிறந்து விட்டது. கவி நிறைமாத கர்பிணியாக வளம் வர, ஸ்வாதிக்கு இப்போது ஐந்தாவது மாதம் நடந்துக் கொண்டு இருக்கிறது.

யாதவ், மனைவி மற்றும் குடும்பத்தை கவனித்துக் கொண்டு, அலுவலகமும் ஒரு பக்கம் பார்த்தபடி, பைலட் வேலையும் சிறப்பாக பணியாற்றி வருகிறான்.

விஷாலை ஏமாற்றி அவன் சொத்துக்களை அபகரித்து சென்ற நபரை கண்டு பிடித்து, அவனை பிரித்து மேய்ந்து பரிபோன சொத்துக்கள் அனைத்தையும் விஷாலிடம் ஆத்வி ஒப்படைத்து விட, சுபிக்கு தான் அதில் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.

இன்னும் பதினைந்து நாட்களே குழந்தை பிறக்க எஞ்சி இருக்க, அதற்குள் மகாராஷ்டிராவில் நடக்கவிருக்கும் ரேஸில் கலந்துக் கொண்டு வந்துவிடலாம் என்ற எண்ணத்தில், இம்முறை மிகவும் பாதுகாப்பாக தந்தைக்கும் மனைவிக்கும் எந்த விதத்திலும் தெரியக் கூடாது என்று வேலை விடயமாக வெளியூர் செல்கிறேன் என பொய்யுரைத்து விட்டு, நண்பனின் உதவியோடு மகாராஷ்டிரா கிளம்பி சென்றான் ஆத்வி.

கடவுளை கூட ஏமாற்றி விடலாம், ஆனால் மனைவியை ஏமாற்ற நினைப்பது தான் மிகப்பெரிய முட்டாள்தனம் என்று ஆத்வி உணராது போனானே!

கணவன் மீது சந்தேகம் கொண்ட கவி, நேராக அலுவலகம் சென்று கணவன் எந்த வேலைக்காக வெளியூர் சென்று இருக்கிறான் என்று விசாரித்தத்தில், 'அப்படி ஒன்றும் வெளியூர் செல்லும் அளவிற்கு பெரிதாக எந்த வேலையும் இல்லை' என பணியாளர்கள் சொன்னதில், சந்தேகம் வலுபெற்று போக மனதில் ஏதோ தீர்க்கமான முடிவெடுத்தவளாக அங்கிருந்து புறப்பட்டாள்.

போட்டியில் எதிரிகளுக்கு பஞ்சமே இல்லையே! ஒருவன் ஜெயிக்க வேண்டுமென்றால் மற்றொவன் தோற்க வேண்டும், அல்லது அழிக்க வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் தான் போட்டி உலகில் அதிகம் உள்ளனர்.

ஆத்வியின் மீது பொறாமை கொண்டவர்கள் அவனை ஜெயிக்க விடக் கூடாது என்று பல தந்திர வேலைகள் செய்து ஜெயிக்க நினைக்க, எப்போதும் போல் நேர் வழியில் சென்று தடைகளை தகர்த்தெரிந்து ரேஸில் வெற்றி பெற்று, அடிபட்ட காயங்களுக்கு மருந்திட்டுக் கொண்டு வீட்டிற்கு வர, காளி அவதாரம் எடுத்து அவனுக்காக காத்திருந்த மனைவியை கண்டு மிடரு விழுங்கினான் ஆத்வி.

"திருட்டுத்தனமா ரேஸ்க்கு தானே போயிட்டு வந்தீங்க, அப்போ உங்களுக்கு என்ன விட ரேஸ் தான் முக்கியம்னு சொல்லாம சொல்லிட்டீங்கல்ல.."

"ஏய்.. கவி.. அப்டிலாம் இல்ல சொல்றத ஒரு நிமிஷம் கேளு டி.." எனும் போதே கை நீட்டி தடுத்தவள்,

"எதுவும் பேசாதீங்க. அப்டி அந்த ரேஸ் தான் உங்களுக்கு முக்கியம்னா என்ன ஏன் கல்யாணம் பண்ணீங்க, அந்த காருக்கு பைக்குகும் தாலிய கட்டி அதோட குடும்பம் நடந்த வேண்டியது தானே.." என்றாள் அதீத கோபத்தில்.

"ஏய்.. கவி ஓவரா பேசுற டி, கொஞ்சம் அமைதியா பேசு.. கீழ எல்லாரும் இருக்காங்க, மாம்க்கு இதை பத்தி எதுவும் தெரியாது நீயே கத்தி காட்டிக் கொடுத்துடாத.."

"நான் அப்டி தான் கத்துவேன், எல்லாருக்கும் கேட்டா கேட்டுட்டு போகுது.. ஒவ்வொரு முறையும் நீங்க ரேஸ்க்கு போயிட்டு வரும் போது நான் தவிச்சு போய் உயிர கைல பிடிச்சிட்டு உக்காந்து இருக்கலாம், உங்க அம்மா மட்டும் சொகுசா இருக்கணுமா..

இனிமே அவங்களும் ஒவ்வொரு முறையும் கஷ்டப்படட்டு சாகட்டும், நானும் இந்த வீட்டை விட்டு போறேன்.." கோவம் தாலாமல் அவள் வார்த்தைகளை விட்டுவிட,

"ஏய்ய்..என்ன டி சொன்ன..." என கத்தி அடிக்க கை ஓங்கி ஆத்வி, அவளின் நிறைமாத வயிற்றை கண்டு அடிக்காமல் கையை முறிக்கி,

"போடி போ.. தயவு செய்து என்ன விட்டும் என் வீட்டை விட்டும் ஒரேடியா போயி தொல.. என் முகத்துல முழிக்காத, அடிக்கடி சண்டை சந்தேகம், உன்கூட எல்லாம் மனுஷன் வாழுவானா..

உன்ன மாதிரி ஒன்னுதுக்கும் லாயக்கி இல்லாத ஒருத்திய கட்டி என் வாழ்க்கைய நானே வீணாக்கிகிட்டேன்.. உன்ன பாக்குறதுக்கு முன்னாடி வரைக்கும், என் இஷ்டப்படி சந்தோஷமா சுதந்திரமா போயிட்டு இருந்த என் வாழ்க்கை, உன்ன பாத்த நாளுல இருந்து என் தலை மேல சனி உக்காந்து ஆடிட்டு இருக்கு டி..

ஆமா டி எனக்கு உன்ன விட ரேஸ் தான் முக்கியம்.. நேத்து வந்த உனக்காக எல்லாம் என்ன மாத்திக்கிட்டு, எனக்கு பிடிச்ச விஷயத்தை விட்டு கொடுத்து பொய்யா என்னால வாழ முடியாது..

இஷ்டம் இருந்தா வாய மூடிட்டு அமைதியா ஒரு ஓரமா இரு, கட்டின பாவத்துக்கு என்ன செய்யணுமோ செஞ்சி தொலைக்கிறேன்.. இல்ல முடியாது நான் இப்டி தான் இருப்பேன்னா தாராளமா கிளம்பி போயிட்டே இரு.." அன்னையை பற்றி பேசியதும், கோவத்தில் கண்மண் தெரியாமல் கத்தி விட்டவன் பின்னால் திரும்ப, அங்கு அவன் மனைவி இல்லை.

"ச்ச ராட்சசி.. என்ன கோவப்படுத்தி பாக்கலைனா இவளுக்கு தூக்கமே வராது.. சொல்லாம போனது தப்பு தான், அதுக்காக என்னெல்லாம் பேசுறா..

அதெப்படி சின்ன வயசுல இருந்தே பிடிச்ச ஒரு விஷயத்தை, செய்ய மாட்டேன்னு உறுதியா சொல்ல முடியும்.. நான் இப்டி தான் இருப்பேன், நானா கெஞ்சிக்கிட்டு அவ பின்னாடியே போறதால தானே ஓவரா பண்றா.. இந்த முறை அவளா எப்ப வராளோ வரட்டும், நான் போக மாட்டேன் அவ பின்னாடி.."

தலையை அழுந்த கோதி கீழே கிடந்த தலையணையை எட்டி உதைத்து, பாக்கெட்டில் இருந்து சிகரெட்டை எடுத்து பற்ற வைக்கப் போக, கீழே ஒரே அழுது கூச்சலிடும் அலறல் சத்தம் பலமாக கேட்டதில், இதயம் அதிவேகத்தில் துடிக்க உதட்டில் வைத்த சிகரெட் நழுவி தரையில் விழுந்ததை கூட உணராது,

'யாருக்கு என்னானது..' என்ற பதற்றத்தோடு ஓடிய ஆத்வி, அங்கு அவன் மனைவி ரத்தக்கிளறியாக, வெறும் உடலாக தலைதொங்கிக் கிடப்பதை கண்டு, நின்ற இடத்திலேயே உயிர் துறந்தான் ஆடவன்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 74
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top