Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
New member
Messages
22
Reaction score
4
Points
3
இதழ் மழை🌧️14


கண்முன் கண்ட மலர் வனம் சொர்க்கம் பூமியோ என வாய் பிளந்தாள் இதழினி... கொத்துக் கொத்தாக பூத்துக்குலுங்கும் மலர்கள் அம்மாடியோ... எம்பட்டு ரோசாப்பூ.
.. கலர்கலரா எம்புட்டும் இருக்கு... கண்களை விரித்து விரித்து அவள் பார்ப்பதே வேடிக்கையாக தான் இருந்தது..

டேய் அண்ணா நா செத்து சொர்த்துக்கு வந்துட்டான..

இல்ல தங்கச்சி இன்னும் இங்கதான் இருக்க... இந்தா தொடப்பம் போய் பெருக்கு.


கோட்டைக்குள் தான் திரும்பும் திசையெல்லாம் கேமரா வைத்திருக்கிறான்.. மேடம் மேடம் என்று இவன் அழைக்க ஒனக்குதானாடா கட்டிப்பாடு எனக்கு இல்லையே உரிமையாக அண்ணன் என அழைக்க பாசம் தந்த உரிமையோ டேய் அண்ணா என குறும்பாக இவள் அழைக்க உறவுகளை விட்டுவந்து தனிகட்டையாக உழைக்கும் நந்தனுக்கு இந்த பாசமே நெஞ்சுக்கு நெருக்கமாகி போனது... அதன் தாக்கம் தான் இந்த தங்கச்சி என்ற விளிப்பு...

அவனை திரும்பி பார்த்த இதழினி... உன்ன மாதிரி எனக்கு ஒரு அண்ணன் இருந்தா இப்டி கஷ்டப்பட விட்டீருக்க மாட்டான்..

சந்தோசமாகதான் சொன்னாள் அந்த குரலில் தெரிந்த வருத்தமே அவன் இதயத்தை தாக்கி இருக்க வேண்டும்... இதழினின் தலை வருட பரபரத்து தூக்கிய கையை பாதியிலே நிறுத்திவிட்டான்...

இங்கேயும் கேமரா இருக்கா அண்ணா...

இவனும் லைட்டாக புன்னகைத்து ஆமா என்றான்..

என்னை பாப்பாரா... மனதில் எழுந்த எண்ணம்.. ஆமா உன்னை பாக்குறது தான் அவருக்கு முழு நேர வேலை பாரு மனசாட்சி கொட்டுவைத்தது...

ப்ச் என தலையை உலுக்கியவள்...

ஏ ண்ணே.... எல்லாமே ரோசாப்பூ செடியாவே இருக்கு....

சாருக்கு ரோஸ் ஃப்ளவர் தான் பிடிக்கும்.. இங்க எல்லா நாட்டு ரோஸ் செடியுமிருக்கு மா...

உண்மையாவா... மரத்தின் உயரத்திற்கெல்லாம் ரோஜா செடி வளருமா யப்பா.. தாமரை பூ அளவுக்கு பெரிது பெரிதாக பூத்துக்குலுங்கி சிரிக்கும் பூக்களுக்கு நடுவே பட்டாம்பூச்சியாக கண்களை அலைய விட்டு எதையோ இதழினி தேட...

என்ன மேடம் தேடுறீங்க..

அது.. எல்லா கலர்லையும் ரோசாப்பூ இருக்கு இந்த தோட்டத்துல கருப்பு கலர்ல மட்டும் ஏன் ரோசாப்பூ இல்ல...

"அதான் நீ இருக்கியே டி"... அரக்கனின் குரல் காதருகே கேக்க.. ஆத்தாடி ஆத்தா வந்துட்டானா.. சுற்றிமுற்றி அவனை தேட... ப்ச் பிரம்மையா..பைத்தியமாதான் ஆகல அதையும் ஆக்கிவிட்ருவான் போல.... மனசிகமாக தலையிலடித்துக்கொண்டாள்...

அந்த கலர் பூவு இருக்கானு தெரியல சாருக்கு ஒரு வேலை தெரிஞ்சதுனா எம்புட்டு பணம் கொடுத்தாவது வாங்கிட்டு வந்து இங்க வெச்சிடுவாரு...

ஆமா... வரமாட்டேனு மக்கர் பண்ணாலும் புல்டோசர் வச்சி வேரோட பிடுங்கிட்டு வந்து இங்கே வச்சுடுவாரு அதான...

சரி மேடம் டைம்மாகுது வேலைய பாருங்க...

இதுல மட்டும் கரெக்டா இருங்க அமைச்சரே...

இருபக்கமும் மதில் சுவர் போல வளர்ந்து நின்ற ரோஜாசெடியும் பூக்களும் அடித்த புயல்காற்றுக்கும் மழைக்கும் தப்பி அதன் இதழ்களை வழி நெடுக்க ஒற்றையடி பாதையில் உதிர்ந்த மலர் தூவி வரவேற்பது போல் பாதைகள் நீள... கோட்டை பின் புறம் ஐம்பது ஏக்கர் ரோஸ் கார்டன் அது... கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மலர்க்கடல்தான் தனி தனியாக அதன் ரகங்கள் பிரித்து வகைதொகையில்ல மலர்கள்... அவளுக்கு ரோஸ் பூ தாண்டி வேற எந்த மலர் பெயரும் தெரியவில்லை இதில் கூட அரக்கனின் பேராசை தான் தெரிந்தது...

பெயரை பாரு அரக்கன் ரோஸ் கார்டனாம்...என் இந்த வருணு சும்மா தான கிடக்குது வச்சா ஆகாதோ மரபெயர்பலகையை குத்துவது போல் கைகாட்டி விட்டு உள்ளே நடந்தாள்


ம்...உலத்துல இருக்க அம்புட்டு ரோசாப்பூவையும் கொல்லையடிச்சுடு வந்து இங்கே கொட்டி இருக்காரு... ம்ம்ஆஆம்... இந்த வாசம் கூட அவனை தான் நினைவுப்படுத்துகிறது..... அவள் மீது தூவும் பூக்களை தட்டிவிட கூட மறந்து கால் போக்கில் மலர்வனத்தை ரவுண்டடித்தாள் இதழினி..

மழை சீசன் என்பதால் தண்ணீர் விட தேவையில்லை... கொட்டி உதிர்ந்த மலர்களின் இதழ்கள் காய்ந்த இலைகளையும் தான் பெருக்கி தள்ள வேண்டும்.. இவளை யாரும் அங்கே கண்டுக்கொள்ளவில்லை அங்கொன்றும் இங்கொன்றுமாக வேலையாட்கள் தங்கள் வேலைகளில் கருத்தாக இருந்தனர்.. ம்... இந்த விஷயத்துல அவரை அடிச்சிக்க ஆளே கிடையாது... யாராவது நிமிர்ந்து என் முகத்தை பாக்கறாங்களா பாரு

இந்த பயம் தானே வேலைய சரியாக செய்ய வைக்கிறது என்றவளே... தோளில் விளக்குமாறை தூக்கிக்கொண்டு மலர்வனத்தில் உலாவந்த இளவரசி போல கெத்தாக சுத்தி வந்தாலே தவிர ஒரு வேலையும் செய்யவில்லை..

ஓடி ஓடி ஓவ்வொரு மலரையும் ஆசை தீர தொட்டு தொட்டு நலன் விசாரித்தாள்... பிடித்த இளஞ்சிவப்பு நிற பீங்க் ரோஸ்பூவை சுத்தி சுத்தி வந்தவள் அரக்கனின் உதட்டை நினைவுபடுத்த யாரும் அறியாது இச் இச்செயென திருட்டுதனமாக பல முத்தங்கள் வாங்கியது அந்த ஆஸ்திரேலியா இளஞ்சிவப்பு பிங்க் ரோஸ்..

இவளுக்கே வெட்கம் வந்தது அச்சோ இது என்ன புது திட்டுதனம்.. வெட்கத்தில் அவள் முகம் மூட முத்தங்கள் வாங்கிய அந்த ரோஸ் செடியோ காற்றில் ஆடி என்ன செய்தி சொன்னாதோ....

யாரும் தன்னை பார்க்கவில்லை என இதழினி இதமாக வெட்கத்தில் பூத்திருக்க.. சிசிடிவி கேமரா அவள் அசைவுகளை கூர்மையாக கவனிப்பதை அறியாது மடந்தை.. வண்ணத்துப்பூச்சிகளை பிடிக்க மான்குட்டியாக துள்ளி துள்ளி ஓடிக்கொண்டு இருந்தாள்... இதழினி..

ஓடி விளையாடி மூச்சுவாங்கி தோட்டத்துக்கு நடுவே வட்டமான சிமெண்ட் தரையில் போட்டப்பட்ட மரபெஞ்சில் அமர்ந்தாள்... ஒவ்வொரு செடியும் அரக்கனை மட்டுமே நினைவுப்படுத்தியது.. அந்த முள்ளோடு இணைந்த ரோஜாமலர் போல தானும் அவனோடு இணைந்திருப்பது போல தான் மனகண்முன் வந்து போனது...

மாலை போய் இரவானது.... மனமும் உடலும் அங்கிருந்து நகர்ந்தால் தானே..

நந்தன் வந்து... பேசி பேசியே எப்படியோ இழுத்துவந்துவிட்டான்...

வேடன் வருவதற்குள் ஓடிப்போய் குளித்துவிட்டு வந்து வேடனை கடுப்பெத்தா..

ஒரு நாள் உன்னோட நல்லி எலும்பை கடிச்சி குதறன் இரு இவன் பதிலுக்கு உறும்ப...

முடிஞ்சா கடிடா பாப்போம் கருவாயா... இப்போதெல்லாம் வேடனை பார்க்க கொஞ்சம் பயம் குறைந்து தான் போய் இருக்கிறது கூடவே இருக்க போற ரூம்மேன்ட்டாச்சே...இவனை பாத்து எதுக்கு பயப்படணும்..பொடி பய

வவ்வுஊஊ என்றது அது...

வவ்வாவ என்றாள் இவள் வாய்ல் பழிப்புக்காட்டி

சரி சரி ரெண்டு பேரும் சண்டை போடாதீங்க..

வேடனுக்கு உணவை வைத்து விட்டு நந்தன் நகர..

அண்ணா எனக்கு..

இன்னைக்கி நீங்க கார்டன்ல வேலை செய்யலையாம்...

அதனால சாப்பாடு தர கூடாதுனு சொல்லிட்டாரா...

இல்ல மேடம் நைட்டு ரெண்டு மணிக்கு கொடுக்க சொல்லிருக்காரு மேடம்.. நான் அலாரம் வெச்சி எழுந்து வந்து தரேன் மேடம் குட் நைட் என்றுவிட்டு அவள் கடித்து குலைப்பதற்குள் ஓடி விட்டான்..

பேய் கூட ரெண்டு மணிக்கு லைட் ஆப் பண்ணிட்டு தூங்க போய்டும் அந்த டைம் ல ஒரு கிளாஸ் பாலுக்கும் அஞ்சு காஞ்சி போன பிரெட்டுக்கும் மிட் நைட்டு வரைக்கும் முழிச்சிக்கிடக்கணுமா ஏன்டா வேடா உன் அண்ணனை கடவுள் ஸ்ட்ரைட்டா கொரியர்ல பூமிக்கு அனுப்பி விட்டு இருப்பாரோ எனக்கு மட்டும் எப்படித்தான் ரூம் போட்டு டிசைன் டிசைனா..யோசிச்சு பனிஷ்மென்ட் தருவானோ கடங்காரன்..

வவ் வவ் என்று குலைத்தது வேடன்

ஆமா உங்க அண்ணனை சொன்னா உனக்கு கோவம் பொத்துக்கிட்டு வருமே என்ன லெட் பீஸா திங்குறீயா இவள் எட்டிப்பார்க்க.. தட்டை இழுத்து மறைத்து அவளுக்கு முதுகுக்காட்டி உக்கார்ந்து தின்றது வேடன்..

திங்கறது பச்சைக்கறி அதை நான் வேற பிடிங்கி தின்னுடுவேனு பயம் வேற.. இவள் கிளுக்கென சிரித்து தலைக்கு கைக்கொடுத்து மல்லாக்க படுத்து விட்டாள் கருநிற வான்வெளியில் மழைமேங்கள் வான்மீன்களை மறைத்து விளையாட்டி போக்கு காட்ட ஜில்லுஜில்லென்று வீசும் ஊதா காற்று..

அதற்கு எதிர்பதமாக இதோ கொதிக்க ஆரம்பித்து விட்டதே.. காலையில் இருந்து மனம் எதையோ பேயாக தேடுகிறது... யோசிக்க உக்கார்ந்து விட்டால் அவ்வளவு தான் அரக்கன் கைமா பண்ணிவிடுவான்..மனம் தேடுவது அவன் வாசம் தான் பதில் தெரிந்த விடைதானே..

தினம் மிரட்டுறேன் அடிக்கிறேன் என அருகே அணைப்பாக உரசும் போது.. கோவத்தில் இழுத்து கையை முறுக்கும் போது...அப்படிஇப்படி என ஏதோ ஒரு விதத்தில் அரக்கனின் ப்ரித்யோக பாரின் சென்ட் வாசம் நாள் முழுவது சட்டையில் வருமே... வேலைசெய்து சோர்ந்து வேர்வையில் வடிந்து ஒவ்வொரு முறையும் சோல்டரின் முகத்தை துடைக்கும் போது.. புருஷனின் பிரித்யோக ஆண்வாசம் மழலை அவளை மங்கையாடி நீ என கிரங்கடித்த கதை எல்லாம் உள்மனம் மட்டுமே அறிந்த ரகசியம் அல்லவா...

உங்க வாசம் இல்லாமல் தூக்கம் வரமாட்டேங்குது நீங்க நல்லா தூங்குறீங்களா... தீண்டிபோகும் காற்றோடு பேதை பிதற்றினாள்..

வேகமா கலையும் கார்மேகங்கள் அவரிடம் போகுமோ...இவளுக்கு சந்தேகம் வந்தது..

அடியேய் இதழு இப்படி தனியா புலம்பிகிட்டு கிடக்க என்னடி காதலா...

காதலா காதலா... அய்யய்யோ காதாலே கேட்க முடியலயே அந்த ஆளு கேட்ட தகுதி தகர டப்பானு பாட்டு பாடுவனே.. பக்கத்துல இருந்தா நாலு மீதி கூட வாங்கிடலாம் இப்படி தூரத்துல இருந்துக்குனு இப்படி நித்தம் நித்தம் பெலம்ப விடுறானே...

இன்னிக்கும் தூக்கம் போச்சா..

ஆமா நைட்டு சாப்பாடு கட்டாகிபோச்சே.. அப்போ ஆளு நம்மள வாட்ச் பண்ணுதோ... ஐயோஓ.. அப்போ தோட்டத்துல நானு பண்ணின சேட்டை எல்லாம்...

ஆஆஆ..... போச்சி போச்சி மொத்தமா சேர்த்து ஆளை முடிச்சி விட்டுட போறான்..

பங்காளி என்னை காப்பாத்துடா... உன் நொண்ணகார வந்தா எனக்கு கொல்லிவச்சுடுவான்...ப்ளீஸ் ஹெல்ப் மீ

அவள் புலம்பல்களை நீட்டிய முன்னங்கால்களுக்கு நடுவே தலை வைத்து படுத்துக்கேட்டுக்கொண்டிருந்தான் வேடன்.... சாவு எனக்கு தூக்கம் வருது அரக்கன் மாடுலேஷனில் ஒரு லுக்கு விட்டு புரண்டு குப்புற படுத்தது...

சாகுறதுக்கு முன்னாடி எனக்கு ஓரு ஆப்பர் மட்டும் குடு கடவுளே மனசாட்சி இல்லாத இவனுங்க ரெண்டு பேரையும் கதற கதற வெச்சி செய்வேன்..

யாரு நீயா... வேடன் தலை தூக்கி அவளை நக்கலாக பார்த்துவிட்டு படுத்தது...


என்னடா லுக்கு கண்டிப்பா செய்வேன்.. இல்லையான நான் செழிங்காட்டு வீரமங்கை இல்லடா.. என்ற ஒன்னு வுட்ட அக்கா மங்கம்மா இல்லாடா...எங்க பக்கத்து வூட்டு அக்கா நாச்சியார் இல்லடா..

வீர ஆவேசமாக இதழினி கத்த...

குட் மார்னிங் மேடம் சாரி மேடம் அலாரம் வைக்க மறந்து தூங்கிட்டேன்...

ஏதே பொழுது விடிஞ்சிடுச்சாஆஆ... ரெண்டாவது நைட்டு தூக்கமும் ஸ்வாகா..இவள் தலையில் கை வைக்க..

மேடம் சீக்கிரம் வேடன் ரூமுக்கு போய் பூட்டிக்குங்க...நான் வேடன் சங்கிலிய கழட்டி விட்டுடு ஓட போறேன்...

ஐயோ இதோ போறேன் இரு ண்ணே.. விழுந்தடித்து உள்ளே ஓடிவிட்டாள்...

சீக்கிரம் ரெடியாகி வாங்க மேடம் ப்ரேக்பாஸ்ட் எடுத்து வைக்கிறேன் என்றவன்... உடல் கிடுகிடுவென நடுங்கியது இதழினிக்கு சொன்னது போல் உணவை கொடுக்கவில்லை அரக்கன் தண்டனை என்னவோ?!..இப்போதே ஈரகொலை டிங்டிங்கென ஆடியது.. முகத்தில் முத்து முத்தாக பயத்தில் வேர்வை..பூத்து தரையை நனைத்தது...


இதழ் மழையில் நனைந்திடுமா❣️...
 

Author: vinnarasi novels
Article Title: இதழ் மழை🌧️14
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top