Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
New member
Messages
22
Reaction score
4
Points
3
இதழ் மழை🌧️15

குளித்து முடித்து மெல்ல கதவை திறந்து வெளியே எட்டி பார்த்தாள் இதழினி அப்பாடா வேடன் பைய இல்ல.. நாம பேசுனா பேச்சுக்கு பயபுள்ள கண்ணுல பட்டா..கண்டம் பண்ணிபுடும் ஜாக்கிரதையா இருந்துக்க இதழு..

காலையிலே தெம்பாக சாப்பிட்டுவிட்டு வேலைகளை பரபரப்பாக செய்தவள் மாலை வந்ததும் ஓரே ஓட்டமா ரோஸ் கார்டன் நோக்கி ஓடிவிட்டாள்...

நேத்து போல தொடப்பத்தை தூக்கி தோளில் வைத்து அனுமானுக்கு தங்கச்சியாக வலம் வந்தவள் ""எங்க இருந்து பெருக்கலாம் .. என யோசித்துக்கொண்டு நடந்தே ஒரு ரவுண்டு அடித்து விட்டாள்..

இப்டி சுத்திகிட்டே கிடந்தா நைட்டு சோத்துக்கு ஆப்பு வெச்சிடுவான் இதழு கொஞ்சமாவது வேலை செய்றா மாறி நடிக்காவது செய் இதழு.. மனசாட்சி கெஞ்ச..

"ப்ச் இங்கே வந்தா எங்க வேலை செய்ய தோணுது ஓடி வெளையாட தான் தோணுது.. நான் சும்மா இருந்தாலும் இந்த பட்டாம்பூச்சி எல்லாம் என்னை சீண்டி சீண்டி விளையாட கூப்பிடுது.. செல்லமாக சலித்தாள் இதழினி"..

நந்தன் அருகே வேலையாட்களிடம் வேலைகளை சொல்லிக்கொண்டு இருக்க.. இதழினியை கண்டதும் அங்கிருந்து நகர போக

"அண்ணா" ...

'எஸ் மேடம்...

"ஆமா காலையில இருந்து ஒங்க முகம் ஏன் டல்லா இருக்கு சாப்டீங்களா அண்ணா "

இந்த ரெண்டரை வருடத்தில் யாரும் தன்னிடம் கேட்டிடாத வார்த்தை விலுக்கென நிமிர்ந்து அவளை பாசமாக பார்த்தான் தலை நானாக இல்லையென்றது..

"இன்னும் சாப்பிடாம என்ன பண்றீங்க போய் சாப்பிடுங்க அண்ணா..

"அது மேடம் சார் பனிஷ்மென்ட் கொடுத்திருக்காரு மேடம்"..

'எதுக்கு ணா?!...

"அதான் நைட்டு உங்களுக்கு டின்னர் கொடுக்க மறந்துட்டேன் இல்ல அதுக்கு தான் இன்னிக்கும் நாளைக்கும் பச்ச தண்ணீ கூட குடிக்க கூடாதுனு...பனிஷ்மென்ட் கொடுத்து இருக்காரு மேடம்"..

'அச்சோ அண்ணா... சரியான விகாரம் பிடிச்சவன் நானே மறந்துட்டேன் எப்படி நியாபகம் வச்சி தண்டனை குடுக்குறாரு பாருங்க.. வேற்றுக்கிரகவாசிக்கு மனுஷ வேஷம் போட்டு பூமிக்கு அனுப்பி விட்டுட்டாரு போல இந்த கடவுள் .. அதுக்கு பேசாம இங்கேயே இருந்திருக்கலாம் எதுக்கு பாரின் போகணும்..

'மேடம் விடுங்க இது சின்ன பனிஷ்மென்ட் தான்..

அட என்ன ஆளாளுக்கு இதையே சொல்றீங்க அப்போ பெரிய பனிஷ்மென்ட்டுனா குழி தோண்டி உயிரோட புதைச்சிடுவாரா...

"ஆமா மேடம் ஆனா நாலு அஞ்சு விஷ பாம்புங்களை உள்ளே போட்டுதான் குழிய மூடுவாரு ரொம்ப நல்லவர் மேடம்...

"ஆஆ... நினைத்துப்பார்த்து இவள் அலறினாள்..

சரி சரி மேடம் வேலையா பாருங்க..

திரும்பியவள்.. '"அண்ணாஆஆ... என இன்னொரு முறை அலறி அழைக்க

என்னாச்சு மேடம்...

'இங்க இருந்த என் புருஷன் பிளவர் காணும்...

அரை ஏக்கர் நிலத்தில் பரவிக் கிடந்த இளசிவப்புநிற ரோஸ்செடிகள்.. கொத்து கொத்தாக பூததுக்குலுங்கி சிரித்த இடத்தில் இப்போது தடயமே தெரியாமல் அழித்து வெறுமையாக கிடக்க அங்கே வேறு மலர்கள் நடும்பணி நடந்துக் கொண்டிருந்தது...

புருஷன் பிளவரா?!...நந்தன் தலை சொறிய..

நேற்று பார்த்து ரசித்து மனதை தொலைத்த மலர்கள் இன்று இல்லாமல் இருக்க மனம் வலிக்க கண்ணில் கண்ணீர் முட்டி நிக்க... நந்தன் கேட்டதில் ஹான்.. என விழித்தவள் அது அது... என் புருஷன் வாங்கி வச்சது தான...

அவள் வாய் புருஷன் என முதல் முறை வர.. நந்தன் தயக்கமாக கை நீட்டிய திசைப்பக்கம் பார்த்தாள்... ஒதுக்கு புறமாக காலியாக கிடந்த உயர்ந்த மண்மேட்டின் மீது தோட்டத்தின் பதறுக்களோடு அவள் பார்த்து ரசித்து முத்தமிட்ட மலர்கள் தலை துண்டிக்கப்பட்டு பூவும் செடியும் தனி தனியாக கிடந்தது... அதை தேடிதான் இன்று ஓடி வந்திருந்தாள்...

இதயம் விரிசல் விட்டு ரெண்டாக பிளப்பது போல வலித்தது..

"இதுதான் உன் காதல் இதழினி நல்லா பாரு..தகுதி என்பவன் உன் இடம் எதுனு காட்டி இருக்கான் பாரு"...

'எங்களை கொன்னுட்டீயே உன் விரல் எங்களை தொடாமல் இருந்திருக்கலாம் உன்னோட பார்வை எங்களை ரசிக்காமல் இருந்திக்கலாம் நாங்க உயிரோட இருந்திருப்போம் எங்களை கொன்னுடீயே உன் இதழ் தீண்டிய சாபத்தை பார்..அவள் முத்தமிட்ட மலர் மண்புழுதியில் நசுங்கி கிடந்தது..ஒவ்வொரு பூக்களும் இவளை குற்றம் சொல்வது போல் இருக்க..

விம்மி துடித்த இதயம் அடக்க முடியாமல் காதை பொத்திக் கதறி அழுதே விட்டாள் இதழினி...

மேடம் ப்ளீஸ் அழாதீங்க எழுந்து வேலைய பாருங்க சார் பாத்தா அவ்வளவு தான்...

கண்ணீரை துடைத்து எழுந்தவள் தொடப்பத்தை எடுத்து பெருக்க ஆரம்பித்தாள்... கண்ணீர் மட்டும் நிக்காமல் சொட்டு சொட்டாக தரை நனைத்துக்கொண்டே இருந்தது...

இரவு...மூலையில் முடங்கி சுருண்டு படுத்திருந்த இதழினியை.. தலையை இடமும் வலமுமாக சாய்த்து சாய்த்து வினோதமாக பார்த்துக்கொண்டு இருந்தான் வேடன் எந்நேரமும் நிறுத்தாமல் லபலபனு புலம்பும் இந்த ஏலியன் பொண்ணுக்கு என்னாச்சு என தன் தட்டில் இருக்கும் கறியை கூட தின்னாமல் வேடன் அவளையே பார்த்துக்கொண்டு உக்கார்ந்திருக்க...

நேரம் செல்ல செல்ல... வேடன் என்ன நினைத்தானோ.. கறி இருந்த தட்டையை தன் காலால் நகட்டி அவள் பக்கம் தள்ளி விட...

அசையாமல் இருண்ட வானத்தை வெறித்துக்கொண்டு கிடந்தாள் இதழினி...அவள் மனதை போலவே மழை தந்து மகிழ்வித்த கார்மேகங்கள் இன்று ஏனோ வெட்டவெளியில் வெறுமையாக அசையாது நிலைகொண்டு கிடந்தது..

" எங்கே என் காதலுக்கு உரமூட்டி என்னை கொதிக்க வைத்த குளிர் காற்று... இலை கூட அசையாது பூக்கள் இங்கே வாடி வதங்க எங்கே போய் தொலைந்தது தென்றல் காற்று..

தடகத்தில் தண்ணீர் வற்றி தாமரை இதழ்கள் ரெண்டும் கண்ணீர் வடிக்க வெம்பி தவிக்கும் என் மனதை ஆற்ற வழிதான் என்னவோ..ஐயோ இவ்விரவை எப்படி கடப்பேன் ...

புதிது புதிதாக வலிக்கிறது... இதுக்கு பெயர்தான் தெரியவில்லை.. மனதை ஆற்றவாவது வழிசொல்லுங்களேன்.. ஆறுதல் சொல்ல தான் யாருமில்லை என அவர்களுக்கே தெரியுமே.. கண்ணீர் விட்டு கரைந்தாள் இதழினி..

"ரொம்ப வலிகுதே காயம் காச்சல் வந்தால் கூட இத்தனை வலிக்காதே.. ஒரு வேளை இதுக்கு பெயர் தான்.. "காதலா"?!.. இல்லை.. இல்லை இது காதல் இல்லை அவர் மேல் வரவே கூடாது..

மனிதர்களை கேட்டா இங்கே காதல் வருகிறது?!..

அய்யோ அவர் தான் வேணும்.. பாக்கணும் போல இருக்கு பேசணும் போல.. அவர் கிட்ட போகணு..ஆஆஆ....

இருண்டா உலகிற்குள் சிக்கிய சிறுமியாக எல்லா திசையிலும் ஓடி ஓடி சத்தமாக கத்தி அழுதாள்...மனதுக்குள்..

மேடம்.. மேடம்...எழுந்திருங்க... உங்களுக்கு என்னாச்சி... டாக்டர் வர சொல்லவா... ஒங்கி ஒலித்த நந்தன் குரல் வவ்வு வவ்உஉ.. என்ற வேடன் குளைக்கும் குரலும்... கடலுக்கு அடிமட்டத்தில் உறக்கத்தில் இருந்தவள் போல படக்கென இமைக்காது வெறியத்த கண்களை உணர்வு வந்தவளாக சிமிட்டி எழுந்தமர்ந்தாள்...

இப்போது தான் நந்தனுக்கு மூச்சே வந்தது... எ.. என்னாச்சி மேடம் உடம்பு ஏதாவது பண்ணுதா... டாக்டரை வர சொல்லவா..

இல்லை வேண்டாம் என்றாள் தலையாட்டி..

ஏம்மா ரொம்ப அழுற எதுவா இருந்தாலும் சொல்லுமா..

அ..அவரு வேணும்...

யாரு மா..

அவருக்கு போன் போட்டு தரீங்களா..

சும்மா போட்டா திட்டுவரே மேடம்.. அவளின் சோர்ந்து தொங்கிய முகம் கண்டு மேற்கொண்டு மறுக்க தோண்றாமல் திட்டினா வாங்கிப்போமென.. நந்தன் அரக்கனுக்கு போன் போட்டு இதழினியிடம் கொடுக்க... முழு ரீங் போயும் எடுக்கவில்லை... அடுத்த முறை போன் போட்டுக்கொடுத்தான்...

இப்டியே பத்து இருபது முறை போன் கால் எடுக்கபடவில்லை... அழுது அழுது விழிகள் ரெண்டும் சிவந்து இதழினியை பாக்கவே பாவமாக இருந்தது... இத்தனை முறை போன் போட்டதற்கு என்னை கொன்றுப் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை..

அது வந்து மேடம் சார் ஏதாவது மீட்டிங்ல இருப்பாரு.. அதான் இத்தனை முறை போன் போட்டு இருக்கோமில்ல பாத்துட்டு கூப்பிடுவாரு அப்போ தரேன்... சாப்பிட்டு தூங்குங்க மேடம்..

எனக்கு சாப்பாடு வேண்டாம் ணா..

இதை பார்த்துட்டு சொல்லுங்க மேடம்..பக்கத்தில் சுட சுட பிரியாணி ஆவிபறக்க இருந்தது...சார் தான் உங்களுக்கு கொடுக்க சொன்னாரு உங்களுக்குனு ஸ்பெஷலா செஞ்சது..

இதழினி இதழில் கேலி புன்னகை வந்து போனது.. அடிச்சுட்டு சோறு போட்டா பரவாயில்ல இவன் கொன்னுட்டு பிணத்துக்கு சோறு போடுறனே.. இவன் தான் வேணுமா இதழு...

அதை கூட முடிவு பண்ண எனக்கு தகுதி இருக்கா.. பார்த்த தானே.. என்கிட்ட பேச கூட ஒரு தகுதி வேணும்டின்னு சொல்லாம சொல்லிட்டாரு நான் அழுறதெல்லாம் பாக்காமலேயா இருந்திருப்பாரு..

எனக்கு சாப்பிட பிடிக்கல அண்ணா இதை கொண்டு போங்க..

நீயாமா சொல்ற...நந்தன் அதிர்ச்சியாவது போல் கேட்க..

ஒரு நாள் சாப்பிட்டால் தினமும் சாப்பிட தோணும் எனக்கு வேணாம் ணா...

அது இல்ல மேடம் நீங்க சாப்பிடாலான சாரு என்னை...

சரி ணா வழக்க போல பால் பிரெட் தாங்க சாப்டுறேன்...

அவனும் கொண்டு வந்து கொடுத்தான்..

நடுயிரவு தாண்டியும் மனம் பிராண்டி உறங்க விடவில்லை பொழுதுபுலர்ந்து போனது... சரியாக உறக்காமல் நாளுக்கு நாள் உடல் தளர்ந்து கண்ணில் சிவப்பேறி ஏனோதானவாக வலம் வந்தாள்.. உற்சாகமும் குறும்புத்தனமும் சுத்தமாக வடிந்துப் போனது..
வலி தந்தவனையே கண்கள் வெறிக்கொண்டு தேடுகிறது.. இரவுகள் அழுகையிலே கரைகிறது...

பெற்றவர்களை கூட மறந்து விட்டாள்... இங்கே வந்த விஷயம் அது சுத்தமா நினைவிலே இல்லை.. ஒரு முறை ஒரே ஒரு முறை என நந்தனிடம் கெஞ்சியே பல ஆயிரம் முறை போனில் அழைத்துவிட்டாள்...ஒரு முறை கூட அவள் அழைப்பை அரக்கன் ஏற்றதில்லை..

நந்தனுக்கு தனிப்பட்ட முறையில் தனியாக பல போன் கால் வரும் நந்தனுக்கு மனம் வருந்த தான் செய்தது... புள்ளிமானாக சுற்றி வந்த தங்கை கால் உடைந்த கிள்ளையாக எப்போது சோர்ந்த முகத்தோடு பார்க்க முடியாது தளர்ந்து நடந்து வரும் இதழினியை நெருங்கி ஆறுதல் சொல்ல கூட முடியவில்லை...

சாப்பாடு..சாப்பாடு.. என்று ஆளாக பறப்பாள்.. ஒரு இட்லி... அரை கிளாஸ் பால்... அதை சாப்பிட கூட வேப்பங்காயாக முகத்தை சுழிக்கிறாலே.. காதல் நான்கு நாளில் ஒருத்தியை இத்தனை மாற்றுமா..

ஏனோதானோவா சொல்லும் வேலைகளை.. ரோபோட்டாக செய்கிறாள்...இரவுகளில் விழி மூட மறுக்க எங்கிருந்து உறங்குவது உயிரில்லா பிணமாக படுத்து வானை வெறிப்பவளை..

'எதாவது பேச மாட்டாளா என் பக்கம் திரும்ப மாட்டாளா...என இவளை பார்த்து ஏங்கியது இன்னொரு ஜீவன்..அவளை பார்த்துக்கொண்டே படுத்து கிடந்தான் வேடன்...


அவளுக்கு புரியாமல் இல்லை தானும் இப்படி தானே வதைத்தவன் ஒரு வார்த்தை பேச மாட்டானா என ஏங்கி தவிக்கிறோம்... இவனிடம் செல்லம் கொஞ்சி பேச போய் வேடனையும் எதாவது செய்து விட்டால்.. போதும் தன்னை சுற்றி இருக்கிறவர்கள் தன்னால் படும் வேதனை.. கண்ணை இறுக்க மூடினால் கண்ணுக்குள் அரக்கன் நிப்பான்...

கண்ணை திறந்தாலும் எதிரே அவன் பிம்பம் தான்... நிம்மதியாக சுவாசிக்க கூட மூச்சு திணறிப்போய் கிடக்கிறாள்.. அடிக்கடி அவன் அறையை சுத்தம் செய்கிறேன் என போய் அங்கேயே டேரா போட்டுவிட்டு தான் வருகின்றாள்.....

நாட்கள் அதான் போக்கில் கடந்ததோ இல்லையோ மனதுக்குள் அழுதழுது செல்லரித்த உடல் ஓய்ந்து நடைபிணம் போல ஒவ்வொரு நாளும் உந்தி தள்ளிக் கொண்டு இருந்தாள் இதழினி..


ஒரு வாரத்தில் வருகிறேன் என்றவன் இரு வாரங்கள் கடந்தும் வந்து சேரவில்லை போன் அடித்து ஓய்ந்து போனாள் இதழினி... வேலை சரியாக செய்யவில்லை இப்போதெல்லாம் மூன்றுவேளைக்கும் உணவு கொடுக்க சொல்லி இருக்கின்றானாம் ? யாருக்காம் இந்த அக்கறை!..

இவளுக்கு தான்...தொண்டையில் முள்ளை விழுங்குவது போல் சாப்பிட திணறுகிறது...

ரெண்டு வாரங்களா மழையில்லை அவளை போலவே அவள் தோழி வானமும் மப்புலயே சுற்ற....மலர்கள் வாடி நிக்க..

இன்று தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச தான் வந்தாள்...ஏனோ மனம் நகராது அப்படியே மரபெஞ்சில் அமர்ந்து வானை வெறித்தாள்..

"என் மேல அப்படி என்னங்க கோவம் ஏழையா பிறந்தது என் தப்பா.. என் தகுதிக்கு உங்களை ஆசைப்படுறது தப்பா.. கலர் கூட இல்ல இல்லா..

மழையே நீ கூட அவரை போல என் மேல வஞ்சகம் வெச்சிருக்கியா.. அதான் கூட்டு சேர்ந்து என்னை தவிக்க விட்டுட்டு போய்ட்டீங்களா..


"இல்லை" என்பது போல்...

வானில் இருந்து ஒற்றை வைரத் துளி... அவள் இமைகளின் பட்டு சிதறி.. பூமியை முத்தமிட்டு நனைத்தது..


இதழ் மழையில் நனைந்திடுமா❣️...
 

Author: vinnarasi novels
Article Title: இதழ் மழை🌧️15
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top