Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

இறுதி அத்தியாயம் 25

Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
இறுதி அத்தியாயம் 25

வெளியே ஜோவென மழை பெய்துக் கொண்டிருக்க.. இருசக்கர வாகனத்தில் இரவின் தனிமையில் மழையில் நனைந்துக் கொண்டே நன்றாக நீண்ட தூரம் பயணம் செய்து முடித்து நடுஜாமத்தில் வீடு திரும்பிய இருவருகுள்ளும் மோகதீ பற்றி எரிந்தது.

வேறு உடைக்கும் அங்கு தேவை படாமல், அணிந்து இருந்த ஈர உடைகளுக்கும் அங்கு வேலை இல்லாமல் ஒவொன்றும் ஒவ்வொரு மூளையில் கிடக்க, இருவரும் இரு நாகங்களை போன்று பஞ்சி மெத்தையில் பின்னி பிணைந்து, முத்தத்திற்கு லக்ஜனையின்றி வரம்பு மீறிய தீண்டல்களுடன், விடியல் விடிந்தது கூட தெரியாத அளவுக்கு இருவரும் சற்றும் கலைத்து போகாமல், இருவர் மனமும் உடலும் ஒன்றிணைந்து அங்கு அழகான தாம்பதித்தியம் நடந்தேறின.

"சார் ப்ளீஸ் போதுமே, இதுக்கு மேல என்னால முடியாது, ப்பா பாக்கத்தான் ஜெண்டில்மென் ஆனா நீங்க சுத்த மோசம் தெரியுமா..." கணவனின் மார்பில் தலை வைத்து படுத்து, மார்பில் உள்ள ரோமங்களை விரலால் சுற்றியபடி சிணுங்களோடு சொன்னதை கேட்டு சத்தமாக சிரித்தான் அரவிந்த்.

"ஏன் டி முல்ல, என் பொண்டாட்டிகிட்ட ஜெண்டில்மென்னா இருந்து நான் என்ன டி பன்ன போறேன்.. இல்லை உன்கிட்ட நான் ஜெண்டில்மென்னா நடந்துகிட்டா உனக்கு தான் பிடிக்குமா சொல்லுடி என் ஆசை பொண்டாட்டி" என்றவன் அவளை புரட்டிப் போட்டு அவள் மேல் படர்ந்து இருக்க. கணவனுக்கு தாராளமாக தன்னை கொடுத்து மகிழ்ந்தாள்.

எண்ணில் அடங்காத கூடலை கூடி கழித்தும் மனைவியை விட்டு விலக மனம் வராமல் அவள் மார்பில் குழந்தையாகி படுத்துக் கிடந்த அரவிந்த், "முல்ல நான் இப்ப எப்டி பீல் பண்றேன்னு உனக்கு தெரியுமாடி.." என்றான்.

" எப்டி சார்" தானும் அவன் தலை கோதி ஆவலாக கேட்டாள்.

"ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் முல்ல.. அதுவும் உன்னால நம்ம குழந்தைங்களால.. இதுவரை குருடனா இருந்தவனுக்கு வெளிச்சமா கிடைச்ச வசந்தமுல்லை டி நீ எனக்கு" அவள் கன்னம் கிள்ளிக் கொஞ்சி,
"உனக்கு ஒன்னு தெரியுமா முல்ல"

"என்ன சார்..

"எனக்கு வர போற என் மனசுக்கு பிடிச்ச மனைவிக்கு, நானும் அவளும் மனக்கோலத்துல ஜோன்னு பொழியற மழையில நின்னு அந்த இடி சத்தம் மேலதாலமாவும், மின்னல் அக்னி சாட்சியாவும், மழை அர்ச்சதையாவும் தூவ.. எனக்கு பிடிச்சவளோட கண்களை பார்த்து கொட்டும் "ஒரு மழை நாளில்" தாலி கட்டணும்னு என் பல வருஷ கனவு, உன் மூலமா அது நிஜமாச்சி தெரியுமா டி.. ஆனா கொஞ்சம் டிஃபரென்ட்டா" அவன் ஆசையை சொல்லவும்,

"என்ன சார் சொல்றீங்க, நிஜமாவா" என்றாள் வியப்பாக.

"ஆமா முல்ல.." என்றவன்.. அவன் கல்லூரி கால ஆசை முதல் அவன் மொத்த வாழ்க்கையும் அவளிடம் ஒப்புவைக்க.. அவன் சொல்ல சொல்ல அனைத்தையும் ரசித்து சிரித்து அழுது வருத்தப்பட்டு என அனைத்து உணர்ச்சிகளையும் வெளி படுத்தி, அவன் நெற்றியில் இதழ் பதித்தவளாக,

"பாவா".. என்றாள் ஆசையாக. சார் என்ற அழைப்பில் இருந்து அவளின் பாவா என்ற மென்மையான அழைப்பில் உருகி போனவன்..

"அப்பாடா இப்பயாவது உனக்கு புத்தி வந்துச்சே.. எத்தனை முறை உன்கிட்ட கெஞ்சி இருப்பேன், சார்னு கூப்பிடாத வேற ஏதாவது பேர் சொல்லி கூப்பிடுன்னு,, இப்ப என்ன டி திடிர்னு.." அவளின் நெஞ்சி குழியில் சந்தோஷத்தில் எச்சில் செய்து, திக்குமுக்கு ஆட வைத்தான் குறும்பன்.

அவன் செயலில் தேகம் சிலிர்த்து போனவள்.. "அதெல்லாம் நாங்க ஏற்கனவே யோசிச்சி வச்சது தான் பாவா.. எங்க அம்மா கூட அப்பாவை பாவா'ன்னு தான் கூப்பிடுவாங்க தெரியுமா.. எனக்கும் உங்களை அப்டி தான் கூப்பிடனும்னு ஆசை, ஆனா நான் அப்டி உங்கள பாவா'ன்னு கூப்பிடும் போது, நான் உங்களுக்கு மொத்தமா சொந்தமாகி இருக்கணும்னு நினைச்சி தான் இத்தனை நாளா உங்களை அமைதியா இருந்தேன்" அழகாக புன்னகையில் இன்னும் அழகு கூடினாள் முல்லைமலர்.

"அப்டியா முல்ல" குறும்புடன் கேட்டவனாக மீண்டும் அவளை இறுக அனைத்துக் கொள்ள....

"அச்சோ போதும் பாவா விடுங்க, விடிஞ்சி ரொம்ப நேரம் ஆகுது, பசங்க முழிச்சி இருப்பாங்க.." அவனை விளக்கியபடி நாணி சிவந்தாள்.

"நல்லா இருக்கு டி.." என்றவன் மீண்டும் அவளை இழுத்து அணைக்க..

"எது பாவா..? "

"நீ வார்த்தைக்கு வார்த்தை பாவா பாவான்னு கூப்பிடறது.." என சொல்லிக் கொண்டே அவள் இதழை கவ்விக் கொள்ள..
ஐயோ என்றானது அவளுக்கு...

******

அனுக்குட்டி, மழைலை மொழியில் பேசி வீர் பையனுடன் சமத்தாக விளையாடிக் கொண்டிருக்க.. அவர்களை பார்த்துக் கொண்டு பாட்டி பூரிப்புடன் அமர்ந்திருக்க.. அந்நேரம் குளித்து முடித்து முகம்கொள்ளா புன்னகையுடன் தலை குனிந்தபடி வந்தாள் முல்லை.

அவள் முகத்தில் உள்ள செம்மை படர்ந்த வெட்கமே பாட்டிக்கு எல்லாம் வெளிச்சம் போட்டு காட்ட.. மனதார அவர்கள் நன்றாக இருக்கும்படி வாழ்த்திக் கொண்டார்..

"அம்மா நான் தூங்கும் போது நீங்க எங்க போனீங்க" முல்லையை கண்டதும் ஓடி வந்து அவள் கால்களை கட்டிக் கொண்டாள் அனு.

பாட்டி வேறு அவளை பார்ப்பதை கண்ட முல்லை, குழந்தையிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் xஅது அனு, நான்.. " என வார்த்தைகள் தந்தியடிக்கவும்,. அவளை புரிந்து கொண்ட பாட்டி வாய் திறக்கும் முன்...

அவள் பின்னாலே வந்த அரவிந்த், "ஹே ஸ்வீட்டி" என அனுவை தூக்கி, கொஞ்சிக் கொண்டே உயரத்தில் தூக்கி தூக்கி போட்டு பிடிக்க, அனுகுட்டி தாயிடம் கேட்ட கேள்வியை மறந்து தந்தையிடம் கலகலவென சிரித்து விளையாட ஆரமித்து விட்டால்..

அன்று முழுக்க வேலைக்கு செல்லாமல் மட்டம் போட்டு, மனைவியை சீண்டி சிவக்க வைத்துக் கொண்டும் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டும் என அழகாக மகிழ்ச்சியாக சென்றுக் கொண்டு இருந்தது..

அந்த மகிழ்ச்சியை கெடுக்கவே அவர்கள் முன் வந்து தோன்றினால் கீதா.. அவளை யாரும் அங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது பாட்டி அரவிந்த் முகத்தில் நன்றாக தெரிய..
முல்லை அவள் யார் எனும் விதமாக வீர் பையனை கையில் வைத்து நின்றிருந்தால்...

"என்ன அரவிந்த் என்னை நீ எதிர்ப்பாக்கலள்ள, அதான் உன் முகத்துலே தெரியிதே.." ஏலன சிரிப்புடன் கேட்டாள் கீதா.

"ஏய் உன்ன யாரு ஜெயில்ல இருந்து வெளிய எடுத்தது.." கேட்டவனின் வெறுப்பு உமிழ்ந்த பார்வை கீதாவை கூரு போட்டது..

"நான் தான் தம்பி.." குரல் நடுங்கி சொன்ன வயதான பெரியவர் உடல்நலகுறைவால் நடக்க முடியாமல் முன் வந்தார்.

அவரை பார்த்த அரவிந்த், "ஓஹ்.. உங்க பொண்ணுன்னு நீங்க சட்டதுக்கு புரம்பா ஒரு கொலைகாரிய செலவு பன்னி வெளிய எடுத்து இருக்கீங்க அப்டி தானே", குறையாத கோவத்தில் கடுமையாக கேட்டான் அரவிந்த்.

"அப்டி இல்ல தம்பி, எனக்கு வயசாகிடுச்சி.. வேலை வேலைனு ஓடி பெத்த பொண்ண ஒழுங்கா வளக்காம விட்டு பெரிய தப்பு பண்ணிட்டேன்.. இருந்தாலும் இப்ப நான் கடைசி காலத்தை நெருங்கிட்டு இருக்க இந்த நேரத்துல, நான் சேத்து வச்ச பணத்தை தவிர எனக்குன்னு ரத்த உறவு யாரும் இல்லை தம்பி, அதான் எங்கே அனாதை பொணமா போய்ட போறேன்னு பயத்துல இவள வெளிய கொண்டு வந்தேன்.."
அவர் கை எடுத்து கும்பிட்டவராக,

"ஆனா அவ உங்களுக்கு பண்ணது எல்லாம் மன்னிக்க முடியாத தப்பு தான்.. அதுக்காக கோடி மன்னிப்பு கேட்டா கூட மிகையாகாது.." என்றவர் கண் கலங்க... "இருந்தாலும் உங்ககிட்ட நான் சாகுறதுக்குள்ள ஒரு தடவையாவது மன்னிப்பு கேக்கணும் தான் இப்ப இங்க வந்தேன்" என விளக்கம் தந்தார்.

அங்கு இருக்கும் அனைவருக்கும் அவரின் நிலை எண்ணி பரிதாபத்தோடு பார்க்க.. ஆனால் அவர் யாரை மகளாக எண்ணி அவள் நடிப்பை நம்பி திருந்தி விட்டால் என்று மனது கேளாமல் சிறையில் இருந்து வெளிக் கொண்டு வந்தாரோ,..
தனக்காக தானே தன் தந்தை மன்னிப்பு வேண்டிக் கொண்டு இருக்கிறார் என்ற வருத்தம் சிறிதுமின்றி அரவிந்த் கையை உரிமையாக கோர்த்தபடி, கையில் குழந்தையுடன் தேவதையாக நின்றயிருக்கும் முல்லையை பொறாமை எண்ணம் கொண்டு எரித்துவிடுவதை போல் பார்த்தாள்.

"அப்போது அம்மா என்ற துள்ளளுடன் ஓடி வந்த அனுவையும் பார்த்தாள். என்ன இருந்தாலும் அவளை ஈன்று எடுத்தவள் அல்லவா அனுவை பார்த்ததும் அவளையும் மீறிய அந்த தாய் பாசம் வெளி வந்தாலும், அது சற்று நேரத்தில் எல்லாம் வடிக்காலாகி போனது, முல்லையின் கால்களை கட்டிகொண்டு செல்லம் கொஞ்சியதை கண்டதும்...

"பாவா, இவனை பிடிங்க" என்றவள் அரவிந்த் கையில் வீர் பையனை கொடுத்து, அனுவை தூக்கி இடுப்பில் வைத்த முல்லை, "என்ன தங்கம் பாப்பாக்கு பசிக்கிதா அதான் அம்மாவை தேடி ஓடி வந்தீங்கலா" என அவளை கொஞ்சிக் கொண்டே டைனிங் டேபிள் மீது அமரவைத்து தாயம்மா செய்து வைத்த உணவை போட்டு பிசைந்து அன்பாக கதை சொல்லி ஊட்ட.. அனுவும் அவள் சொல்லும் கதைகளை ஆர்வமாக கேட்டுக் கொண்டே வயிறு நிறைய உண்டு முடித்திருந்தால்...

அதை எல்லாம் ஒரு வித ஏக்கம் நிறைந்த கண்களோடு, அனைத்தையும் தாம் தான் கெடுத்துக் கொண்டோமோ, என்று கீதா நினைத்தாலும், அவளின் வக்கிர புத்தி மட்டும் அவளை விட்டு நீங்காமல், அரவிந்த் முல்லை அனு வீர் என வெறித்து பார்த்துக் கொண்டு இருக்க... அவளின் அப்பா அனுகுட்டியை ஆசையாக கண்டு கண்களில் நிறைத்துக் கொண்டார்..

வேறு ஒன்றும் அவரால் செய்ய இயலாதே, அவரும் தன் மகளின் செயல்களை அவள் வாயால் கேட்டுத் தெரிந்துக் கொண்டவர் தானே.. மனம் வெறுத்த ஒரு வாழ்க்கை...

அரவிந்த் கற்சிலை போல் இறுக்கமாக இருக்கவும்.. அதுவரை அமைதியாக இருந்த பாட்டி, இப்போது பேச துவங்கினார்..

"இங்க பாருங்க இப்ப தான் என் பேரன் பழசை எல்லாம் மறந்துட்டு அவனுக்கு ஒரு புது வாழ்க்கைய ஏற்படுத்திக்கிட்டு அவன் பொண்டாட்டி பிள்ளை குட்டிகளோட நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கையை வாழ தொடங்கி இருக்கான்..

அதே போல என் பேத்தி அவளும் அவனுக்கு தங்கமா அமஞ்சிட்டா, இனிமே என் பேரன் பேத்தி வாழ்க்கையில் இந்த பாவி கண்ணு படவே கூடாது.. இவளால என் பேரனும் நாங்களும் இழந்து பட்ட கஷ்டம் எல்லாம் போதும்,, மன்னிப்பு கேக்க வந்தீங்க, கேட்டுடீங்க தயவு செய்து இங்கிருந்து கிளம்புங்க.. அதுவே எங்களுக்கு நீங்க பண்ற பெரிய நல்லது.. " என்றவர் கை எடுத்து கும்பிட்டு, வாசலை நோக்கி கை காட்டினார்.

கீதாவின் தந்தை அவர் சொல்வதும் சரிதான் என்பது போல் அங்கிருந்து. செல்ல போக, சட்டென அரவிந்திடம் சென்ற கீதா,
"அரவிந்த் நீ எனக்கு வேணும், நீ நம்ம பொண்ணு எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம், இனிமேல் நான் உன்ன தவிர வேற யார் கூடவும் போகமாட்டேன்.." கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல், முல்லையை அவனிடம் இருந்து பிரித்து விட்டு, அந்த இடத்தில் இவள் வாழ்ந்து திருந்தாமல் இன்னும் பல தவறுகளை செய்ய திட்டம் தீட்டி.. அவன் கையை பற்ற..
தீ சுட்டதை போன்று பட்டென அவளிடம் இருந்து அவன் கையை விளக்கிக் கொண்ட அரவிந்த்.

"ஒற்றை விரலை நீட்டி கண்கள் சிவந்த நிலையில், "ஏய்.. ச்சி தள்ளி போ.." என அசிங்கத்தை தொட்டதை போல் விலகி விட்டான்.

அதற்க்குள் குழந்தைகளை கொண்டு போய் தாயம்மா விடம் விட்டு வந்த முல்லை.. "ஹெலோ எஸ்க்யூஸ் மீ.." என அரவிந்தின் தின்னிய புஜத்தை உரிமையாக அவளின் கைகளால் சுற்றிக் கொண்டு, கீதாவை திமிர் பார்வை வீசிவளாக,

"இவரு என் புருஷன், எனக்கு மட்டும் தான் புருஷன்.. அப்புறம் அனு எங்க பொண்ணு, அவளுக்கு நான் தான் அம்மா.. ஆல்ரெடி நாங்க எல்லாரும் குடும்பமா சந்தோஷமா தான் வாழ்ந்துட்டு இருக்கோம், என் புருசனுக்கு ஒரு நல்ல மனைவியா அவருக்கு தேவையானதை செய்ய நான் இருக்கும் போது.. கண்டவ எல்லாம் என் புருஷன உறவு கொண்டாடிட்டு இனிமேல் இந்த வீட்டுப் பக்கம் கூட இல்லை, எங்க யாரு கண்ணுலயும் படக் கூடாது புரிஞ்சிதா.."

முல்லையின் பேச்சியில் அவளை சாதாரணமாக எடை போட்டவலுக்கு, அவளின் ஆளுமை நிறைந்த கடுமையான குரலில் அவள் மட்டுமில்லை அங்கிருந்த அனைவரும் அவளை ஆவென தான் பார்த்து வைத்தனர்.

அரவிந்த் முகத்தில் இறுக்கம் தளர்ந்து, குறும்பு புன்னகை மிளிர, முல்லை தோள் மீது கை போட்டு தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டவன்.. "என் பொண்டாட்டி சொன்னது காதுல விழுந்துச்சா.." கீதாவை ஏலனமாக பார்த்தவனாக,

"முல்ல கதவை ஏன் திறந்து வைக்கற, பாரு கண்டது எல்லாம் வீடு திறந்து இருக்குன்னு நேரா வந்து நிக்கிது, சீக்கிரம் அத துரத்தி கதவை சாத்திட்டு நம்ம ரூம்க்கு வா" என்றவன்.. அவள் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு அறைக்கு சென்றான்.

"என்ன என் புருஷன் சொன்னது காதுல விழாலையா கிளம்பு, எங்க ரெண்டு பேருக்கும் நிறைய வேலை இருக்கு.." முல்லை வெட்கதோடு சொல்ல.. இருவர் மேலும், மனதில் வஞ்சகம் கொண்டு இனிமேலும் திருந்தி வாழ முயற்சி செய்யாமல், பழி உணர்வோடு அங்கிருந்து சென்றால் கீதா...

இவள் மட்டுமல்ல இவளை போன்று எத்தனை பேர் வந்தாலும், எங்கு உண்மையான அன்பு பாசம் காதல் நம்பிக்கை புரிதல் இருக்கிறதோ அங்கு அவர்களால் ஒரு அனுவை கூட அசைக்க முடியாது என்பது பாவம் கீதாவுக்கு தெரியாமல் போனது...சிலர் இப்படி தான் என்ன செய்தாலும் அவர்களை திருத்த முடியாது, அவர்களாக திருந்தினால் தான் உண்டு.. திருந்துவாளா கீதா?...

அதே போல் அள்ளியின் வாழ்க்கையை நாசம் செய்து முல்லையின் பெற்றோரை கொன்றதிற்கும், பல இளம் பெண்களை கட்டாய படுத்தி பாலியல் தொழிலுக்கு ஈடு படுத்தி சிலரை கொன்றது என பல வழக்குகளை பதிவு செய்து அகரன், துருவன், சந்திரன் மற்றும் அவர்களுக்கு துனை போன இன்னும் சிலரை, இனிமேல் காலத்துக்கும் வெளி வர முடியாத படி அரவிந்த் அவர்களுக்கு சிறையில் முடிவு கட்டிருந்தான்...

பத்து வருடங்கள் கழித்து..

"பாவா, இன்னும் பாஸ்டா போங்க" அரவிந்த் பைக் ஓட்ட அவன் பின்னால் அமர்ந்து கத்திய முல்லை, அரவிந்தின் ஆடையை அணிந்திருந்தவளாக குளிரில் நடுங்கும் தேகத்தை கணவனோடு இறுக கட்டிக் கொண்டு ஜோவென்று கொட்டும் மழையில் இருவரும் நனைந்துக் கொண்டே நீண்ட பயணம் செய்தனர்.

அன்று போல் இன்றும் மனைவியின் கரத்தில் அவன் கரத்தை வைத்திருந்த அரவிந்த், "இதுக்கு மேல பாஸ்டா போனா நாம முழுசா வீடு போய் சேர முடியாது பொண்டாட்டி.. ஒழுங்கா வா" என செல்லமாக அதட்டி மிதமான வேகத்தில் ஓட்டி சென்றான்.

மனைவியுடனான தனிமையில், கொட்டும் மழையில் நனைத்துக் கொண்டே இன்பமாக கழித்து, கடைசியில் வீடு வந்து சேர, இருவர் முகம் திருட்டுத்தனத்தை காட்டியது.

இப்போதெல்லாம் முன்பு போல் சுதந்திரம் பறிபோனது அதுவும் இன்பமாக. அரவிந்த் முல்லைக்கு குட்டி வாண்டுகள் அனுஸ்ரீ வீர்ஆதவ் வளர்ந்து அவர்களுக்கும் துணையாக அரவிந்த் முல்லையின் காதல் பரிசாக, ரெட்டை வால்கள் தனுஸ்ரீ ஆதவன் என நால்வரும் வாசலில் வரிசையாக அமர்ந்து, ஊர் சுற்றி வந்த பெற்றோரை முறைத்துக் கொண்டு இருக்க.. பாட்டி மனம் நிறைந்த நிறைவான புன்னகையுடன் அவர்களை தான் பார்த்துக் கொண்டு இருந்தார், துணைக்கு தாயம்மாவும்..

அவர்களை கண்டு அரவிந்த் முல்லை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.

பின்ன அவர்களின் வாழ்வில் இருவரும் ஒன்று சேர முக்கிய காரணமாக இருந்த கார்மேகக் கால மழையை அவர்கள் என்றும் மறக்காமல் ரசித்து பயணம் செய்வது வழக்கமான ஒன்றல்லவா..!

இருவேறு திசையில் வாழ்வே இருட்டாகி வெளிச்சம் இல்லாமல் இருந்தவர்கள், காலத்தால் இருவரையும் ஒன்றிணைத்து, இனிமேல் நீங்கள் ஒருவருக்கொருவர் தான் உங்கள் வாழ்வில் வெளிச்சம் என்று கடவுளால் ஆசீர்வதிக்கப் பட்டு... தித்திப்பாய் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் பிள்ளைக்குட்டிகலோடு ரசித்து வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்..

இவர்கள் வாழ்வில் இன்று போல் என்றும் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாமல் மனம் ஒத்த தம்பத்திகலாக வாழ வாழ்த்தி நாமும் விடைபெறுவோம்...
சுபம்
மீண்டும் அடுத்ததொரு சுவாரசியமான கதைகளத்துடன் சந்திப்போம்
இந்து
 

Author: Indhu Novels
Article Title: இறுதி அத்தியாயம் 25
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top