- Messages
- 300
- Reaction score
- 215
- Points
- 63
இறுதி அத்தியாயம் - 76
ஒரு வருடதிற்கு பிறகு,
"கவிஇ.. கதவ தொற எவ்ளோ நேரம் கிளம்புவ, அங்கே கல்யாணமே முடிஞ்சிடும் போல, கதவ தொற டி.." அறைக்கு வெளியே நின்ற ஆத்வி வெகுநேரமாக கதவை தட்டிக் கொண்டிருக்க.
ஜரிகைபட்டு சலசலக்க, மல்லிகை மனமனக்க, வழுக்கும் வெண்ணிடை தெரிய சேலைக்கட்டி, லோ நெக் பிளவுஸில் வெளீரென்று நட்சத்திரமாக மின்னிய கழுத்தும் முதுகும் ஆடவன் கண்களை பறித்துக் கொள்ள, அதை எல்லாம் அடித்து தூக்கும் விதமாக நாணத்தில் சிவந்த அந்த அழகு வதனம் ஆளையே மயக்கி விட்டதே!
"பல்லவன் சிற்பிகள் அன்று..
பண்ணிய சிற்பத்தில் ஒன்று..
பெண்ணென வந்தது இன்று சிலையே..
உந்தன் அழகுக்கில்லை ஈடு.."
"ஏய்.. என்ன ஜில்லு, எப்பவும் நான் கெஞ்சி கேட்டா கூட இப்டி ட்ரெஸ் பண்ண மாட்டியே.. இன்னைக்கு என்ன டி கண்ணுக்கு குளிர்ச்சியா கிளாமர்க்கே டஃப் கொடுக்குற போஸ்ல வந்து நிக்குற.." மனைவியின் அழகில் கவர்ந்து கவிழ்ந்தவனாக, எதற்கு வந்தானோ அந்த வேலையை மறந்து விட்டு, அவளின் வழுக்கும் இடை பிடித்து இழுக்க, அழகிய பூமாலையாக கட்டியவன் நெஞ்சில் வந்து விழுந்தாள்.
"என் புருஷன் எனக்காக நிறைய விஷயம் விட்டு கொடுத்து என்ன அன்பா பாத்துக்கிட்டா மட்டும் போதுமா.. அவருக்காக அவருக்கு பிடிச்ச விஷயங்களை நானும் செய்ய வேண்டாமா.. அதான் உங்களுக்கு பிடிச்ச மாதிரி ரெடியாகி வந்தேன், பிடிச்சி இருக்கா மாமா.." ஆசையாக கேட்டதோடு இல்லாமல் கண்ணனின் இதழில், கண்மணியின் இதழுரசி இதமாக காவியம் வரைந்தாள் பாவை.
மனைவியின் இதழ் முத்தத்தில் ஜிவ்வென்று உடலில் மிம்சாரம் பாய்ந்து, அவள் பொன்மேனியில் எல்லை மீறி கோலமிட்டவன்,
"ரொம்ப ரொம்ப பிடிச்சி இருக்கு பேபிஇ.. அப்டியே டால் மாறி இருக்க.. ஆமா இது ஏன் மேல தூக்கி இருக்கு.." தொப்புலை லேசாக மறைத்து இருந்த சேலை கொசுவத்தில் நான்கு விரலை உள்ளே விட்டு, மெது மெதுவாக கீழே இறக்கி விடவும், அவன் விரல் தீண்டலின் குறும்பு தாங்காமல் சுகமாக வாய் பிளந்து அவளும் அவன் விரலோடு மெல்ல மெல்ல கீழே இறங்கி,
"ஸ்ஸ்ஸ்.. கல்யாணத்துக்கு கண்டிப்பா போயாகணுமா மாமா.." மோகம் குளித்த விழிகளில் கணவன் மீது போதையாகிப் போனாள் வண்ணமலர்.
"வர வர ரொம்ப கெட்டு போய்ட்ட டி.." பொய்யாக சலித்துக் கொண்டவனின் விழிகளும் மது உண்ட வண்டாக, மனைவி போதையில் முக்குளித்து இருந்தது.
"அதுக்கு முழு காரணமே நீங்க தானே மாமா.." அவன் காது மடலை கடித்து இழுவையாக கிசுகிசுத்தவள், மன்னவனின் சட்டைக்கு விடுதலை கொடுக்க,
காதல் ஓவியன் அதற்கு மேலும் சும்மா இருப்பானா என்ன! சேலைபூவை கையில் அள்ளி, மெத்தையில் புரட்டும் போதே பெண்ணழகின் முழு தேகமும் அவன் பார்வைக்கு விருந்தாகிப் போக, பின் அவன் கட்டுடல் மேனிக்கும் விருந்தாகிப் போனாள் செம்மைமலர். ஒருவரை ஒருவர் தங்களை மறந்து அளவில்லாமல் இல்லறம் கொண்டு, மெய் காதலில் ஜீவசுகம் கண்டனர்.
"புயலென்று நினைத்தேன் என்னை..
புயல் கட்டும் கயிறாய் வந்தாள்..
மலை என்று நினைத்தேன் என்னை..
மல்லிகையால் மலையை சாய்த்தாள்..
நெற்றி பொட்டில் என்னை உருட்டி வைத்தாளே..
பிரம்மா.. ஓபிரம்மா.. இது தகுமா.. இது தகுமா.. அய்யோ இது வரமா.. சாபமா.."
******
"என்னங்க உங்க திங்ஸ் எல்லாம் பேக் பண்ணி வச்சிட்டேன், அப்புறம் வேற ஏதாவது எடுத்து வைக்கணுமானு பாத்து சொல்லுங்க.." மும்புரமாக கணவனின் உடைகளையும், அவனுக்கு தேவையான வற்றையும் சரி பார்த்து எடுத்து வைத்துக் கொண்டு இருந்த மனைவியை பின்னால் இருந்து அல்லேக்காக கட்டிக் கொண்டான் யாதவ்.
ஸ்வாதி சுகமாய் அதிர்ந்த சமையம், குழந்தை பேரின் செழுமையில் குளிங்கிய பூந்தோட்டம் மேய்ந்தவனை தேகம் சிலிர்க்க முறைத்தவள்,
"அச்சோ.. என்னங்க பண்றீங்க, விடுங்க கதவு திறந்து இருக்கு, யாராவது வந்திட போறாங்க..." அவனை விலக்க வாய் வார்த்தையில் சொல்பவள் தான், கணவனோடு ஒன்றி அவன் செய்யும் லீலையில் கண் சொக்கினாள் போலும்.
"ம்ஹ்ம்.. மேடம் கொஞ்சம் கண்ண திறந்து பாத்திருந்தா கதவு திறந்து இருக்கா, இல்ல மூடி இருக்கானு தெரிஞ்சி இருக்குமே.." குறும்பாக அவள் காதை கவ்வ, உடல் சிலிர்த்து இதழ் கடித்து நாணம் கொண்டவள்,
"அப்போ உங்களுக்கு பிளைட்க்கு நேரம் ஆகலையா.." சட்டென திரும்பி கணவனின் கழுத்தை கட்டிக் கொண்டாள் கண்கள் மின்ன.
"ப்ச்.. அதைபத்தி மெதுவா சொல்றேன், இப்போ வா இருக்க நேரத்தை ரெண்டு பேருமா சேந்து ஜாலியா என்ஜாய் பண்ணுவோம்.." என்றவன் தன்னவள் இதழ் கவ்வி மெத்தை பாடத்தில் திளைத்துப் போனான்.
இளவட்டம் ரெண்டும் நேரம் காலம் இல்லாமல் தம் தமது இணையோடு இணைத்து, காதல் புரிந்துக் கொண்டிருக்க, அவர்கள் பெற்ற ரெண்டு வாண்டுகளும் பாட்டிகளின் மடியில் எத்தனை நேரம் தான் துயில் கொண்டு இருக்கும், வயிறு பசிக்க செய்யாதா என்ன!
ஆத்வி கவியின் ஒரு வயது மகன் ஆதேஷ் முதலில் கண் விழித்து கத்தத் தொடங்க, அவனை தொடர்ந்து அவன் போட்ட சத்தத்தில், யாதவ் ஸ்வாதியின் ஐந்து மாத குழந்தை யாதேஷ் வீரிட்டுக் கத்த தொடங்கி விட்டான்.
இரு பாட்டிகளும் குழந்தைகளை சமாளிக்க முடியாமல் திணறிப் போயினர்.
"குழந்தைங்க அழறது கூடவா உன் பசங்க காதுல விழல, அப்படி என்ன டி பண்றானுங்க ரெண்டு பேரும்..." ஆதி மித்ராவின் காதில் கோவமாக கிசுகிசுக்க,
"இதையே ஒரு முப்பது வருஷத்துக்கு முன்னாடி நீங்க என்ன பண்ணுவீங்கனு யோசிச்சி பாருங்க.. என் பிள்ளைங்கள அழ வைக்கும் போது பொங்காத ஆளு, பேர பசங்க அழறாங்கன்னதும் கோவம் வர்றத பாரு.." அவன் கன்னம் இடித்து முறிக்கி சென்றவளை இப்போதும் ரசித்து முறைத்தான் ஆதி.
விக்ரம் சுபி சண்டை இல்லாத அன்பான தம்பதி. இப்போதும் அதே தான் ஆதேஷ்க்கு விக்ரம் விளையாட்டுக் காட்டிக்கொண்டிருக்க, சுபி புன்னகையோடு வேக வைத்த ஆப்பிளை மசித்து குழந்தைக்கு ஊட்ட, பொக்கை வாய் திறந்து திறந்து மூடி, புர்.. புர்.. என வாயில் கார் ஓட்டி கைகாலை ஆட்டி வாயில் வாங்கி கொண்டது.
விஷாலும் வீட்டில் இருக்கும் நேரம், குழந்தைகளோடு குழந்தையாக மாறி விடுவான்.
ஆரு அஜய் தங்கள் பிள்ளைகளோடு அடிக்கடி பிறந்த வீடு வந்து குடும்பத்தோடு அன்பாக நேரம் செலவிட்டு செல்வர்.
"அச்சோ போச்சி.. என்ன மாமா பண்ணி வச்சிருக்கீங்க, நான் தான் ஏதோ விளையாட்டுக்கு சொன்னேன்னா நீங்களும் இதுதான் சான்ஸ்னு பிரிச்சி மேஞ்சிடீங்களே.. இந்நேரம் கல்யாணமே முடிஞ்சிருக்குமே இப்ப நான் என்ன பண்ணுவேன்.. எப்டி கிளம்புவேன்.."
கூடல் முடிந்ததும் சிறிது நேரம் தங்களையும் அறியாமல் கண்ணயர போன நேரம், சட்டென விழிப்புதட்டி எழுந்த கவி, அவனையும் அடித்து எழுப்பி, மூக்கை சிந்தி ஒப்பேரி வைக்க, கன்னத்தில் கை வைத்து அவளை ஆயாசமாக கண்ட ஆத்வி,
"ஏன் டி.. நீதானே கல்யாணத்துக்கு கிளம்பி ரெடியா வந்தவன பேசி மயக்கி கட்டில் விளையாட்டுக்கு கூப்ட்டு எல்லாத்தையும் தொடங்கி வச்ச.. எல்லாம் முடிஞ்சி இப்ப வந்து அழுது வடிஞ்சா என்ன டி அர்த்தம்.."
"ம்ம்.. நான் தொடங்கினா என்ன, நீங்க சீக்கிரம் முடிக்க வேண்டியது தானே.. இப்ப மறுபடியும் குளிக்கணும், முதல்ல இருந்து புடவை கட்டணும், எவ்ளோ கஷ்டம் எப்டி முடியும் சொல்லுங்க..
கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல மாமா உங்களுக்கு.." பாவமாக மூக்கை உறுஞ்சி தன்னையே குற்றம் சாடியவளை கண்டு,
"எதே.. எனக்கு பொறுப்பில்லையா.." என்ற திகைப்போடு சேர்த்து சிரிப்பும் வந்தது, மோகமும் வந்தது.
நிலைமை உணர்ந்து மோகத்தை கடினப்பட்டு அடக்கிக் கொண்டு சிரிப்பை மட்டும் உதிர்த்தவன், "யாம் இருக்க பயமேன் பேபிஇ.. கம் நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்.." என்ற ஆத்வி, மனைவி சொன்ன பொறுப்போடு சேர்த்து பல குறும்புகள் செய்து மனைவியை கிளப்பி விட்டு, தானும் கிளம்பி அவள் தோளோடு அணைத்தபடி கீழே வந்தான்.
அவன் பெற்ற பிள்ளையோ நன்றாக உண்டு விட்டு, கெக்கபெக்க.. கெக்கபெக்க.. என்று விஷாலோடு சிரித்து கால்களை உதைத்து விளையாடிக் கொண்டு இருந்தவன், தந்தையை கண்டதும் அவனிடம் தாவி குஷியாக அவன் முகத்தை எச்சில் செய்ய, புன்னகையோடு மகன் செய்யும் சேட்டையில் எச்சிலில் நனைந்தான் ஆத்வி.
இன்னும் மற்றொரு ஜோடி அறையை விட்டு வராத நிலையில், மித்ராவிடம் அழுதுக் கொண்டிருந்த யாதேஷை வாங்கிய கவி,
"அச்சோ.. என் செல்ல பிள்ளைக்கு பசிக்குதா தங்கம்.." கொஞ்சி கொஞ்சி அழுகையை மட்டுப்படுத்தி குழந்தைக்கு தானே பசியாற்ற தொடங்கினாள். இரண்டு பிள்ளைகளும் பசி வந்தால் இரண்டு அன்னையில் எந்த அன்னை இருக்கிறாளோ, அவளிடம் சமத்தாக பால் குடித்து குதூகளித்து குஷியாகி விடும்.
கவியும் நிறைய மாறி விட்டாள், இப்போதெல்லாம் விளையாட்டுத்தனத்தை குறைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு நல்ல தாயாக, அவர்களை பார்த்துக் கொண்டும், கணவனுக்கு பிடித்த மாதிரி பக்குவமான குடும்பப் பெண்ணாகவும் மாறி இருக்கிறாள்.
ஆத்வி கிட்சன் பக்கம் செல்லாதே என்று சொல்லியும், கவி ஆசைக்காக மாமியர்களிடம் விதவிதமாக சமைக்கக் கற்றுக் கொண்டு, ஓரளவுவுக்கு நன்றாகவே சமைத்து வளவி குலுங்கும் கரங்களால் ஆசையோடு கணவனுக்கு பரிமாற, "நீ சமைத்த உணவு நல்லா இல்லை போடி.." என்றா சொல்லப் போகிறான!
தனக்காக ஆசையாக செய்துக் கொடுக்கும் உணவை அவளையே ஊட்ட வைத்து, ஊட்டி விட்டு உண்டு மகிழ்வான்.
ஸ்வாதி கவியின் நட்புக்கு ஈடு இணையே இல்லை. இப்போதும் எப்போதும் ஸ்வாதியின் பெறாத மகள் கவி. இருவரும் நிறைய விடங்களில் தங்களை பக்குவப் படுத்திக் கொண்டு,குடும்பத்தை அனுசரித்து, கணவன் மற்றும் குழந்தைகளை அன்பாக அழகாக பார்த்துக் கொள்கின்றனர்.
தாமதமாக வெளியே வந்த ஸ்வாதி சங்கடமாக உணர்ந்து கணவனை முறைக்க, அவனோ ஒன்றும் அறியாத பிள்ளை போல விஷால் அருகில் சென்று அமர்ந்தவன்,
"அப்புறம் டா நீ இன்னும் எத்தனை நாளைக்கு சிங்கிளாவே சிங்கியடிக்கப் போற.. பொறுப்பா அண்ணன மாறி லவ் பண்ணி கல்யாணம் பண்ணி எப்ப வாழ்க்கைல செட்டில் ஆகுறது.." மனைவியை பார்த்தபடி அவன் தோளில் கை போட்டான்.
அவனை மேலும் கீழும் பார்த்த விஷால்,
"ஏண்ணே இது உனக்கே நியாயமா இருக்கா, நீ மட்டும் 28 வயசுல கல்யாணம் பண்ணி புள்ள பெப்ப, நான் மட்டும் 25 வயசுக்கு எல்லாம் கல்யாணம் பண்ணி கஷ்டப்படணுமா.. கொஞ்ச நாள் சிங்கிளா ஜாலியா இருந்துட்டு கல்யாணம் பண்ண ஆசை வரும் போது சொல்றேன்..
ஆனா இந்த தோள்ல கை போடுற வேலையெல்லாம் உன் பொண்டாட்டியோட நிறுத்திக்கோ, ஒரு முறை உன் கையில சிக்கி நான் பட்டதே போதும்.." முறைத்தபடி சொன்னவனோ யாதவ் கையை தட்டி விட்டான்.
"இன்னும் அந்த சம்பவத்தை மறக்கலயாடா நீ.." என்றான் வந்த சிரிப்பை அடக்கியபடி.
"மறக்குற மாதிரியா டா சம்பவம் பண்ணீங்க.." முறைப்பாக கேட்டவனை கண்டு சம்பவம் செய்த இருவரும் சிரித்து, அதற்கு காரணமான மனைவிகளை பார்வையாலே வருடி காதல் புரிந்தனர்.
"டேய்.. ரெண்டு பேரும் உங்க லவ்ஸ ஓட்டினது எல்லாம் போதும், சீக்கிரம் வாங்க கல்யாணத்துக்கு நேரமாச்சு.." என்ற ஆதி, ஆத்வியிடம் இருந்த குட்டிப்பையன் ஆதேஷை வாங்கிக் கொண்டு, மகனை பார்த்த பார்வையில் தான் எத்தனை கர்வம். எத்தனை எத்தனை அர்த்தம்.
பின்னே ஆதி நினைத்தது போலவே அவன் பேரன் வந்து பிடிவாதமாக இருந்த மகன் மனதை மாற்றி விட்டானே! கவி ஜாடையிலும் ஆத்வி ஜாடையிலும் பொக்கை வாய் திறந்து தாத்தாவின் காதை பிடித்து ஆட்டிய பேரனை முத்தமிட்டு, கொஞ்சியபடியே சென்ற தந்தையை கண்டு, தலையாட்டி புன்னகைத்தான் ஆத்வி.
அசோக் ஆசை பட்டது போலவே வெள்ளைக்காரி ஒருத்தியை காதல் செய்து திருமணம் வரை வந்து விட்டான். ராகுல் தன் மனைவியோடு சேர்ந்து ஆதியின் குடும்பத்தை இன்முகத்தோடு வரவேற்க, நண்பனின் திருமணத்தில் கலந்துக் கொண்டு அவனுக்கு வாழ்த்து கூறி பல அரட்டைகளுக்கு பின்பு, இளம் ஜோடிகள் இரண்டும் ஒரு காரில் தனியாக செல்ல, மற்ற ஜோடிகள் வீடு நோக்கி பயணம் செய்தது.
"என்ன வீட்டுக்கு போகாம வேற எங்கேயோ போறீங்க.." ஸ்வாதி சாலையை கவனித்து கேட்வும், அப்போதே கவியும் கவனித்து,
"அத்தான் வீட்டுக்கு போகலையா.." என்றாள்.
"போலாம் போலாம் கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் அமைதியா வந்தா, உங்களுக்கே எங்கே போறோம்னு தெரிஞ்சிடும்.." என்றவன் காரை ஓட்டுவதில் கண்ணாக இருந்தான்.
"மாமா, உங்களுக்கு தெரியும் தானே நீங்க சொல்லுங்க, எங்கே போறோம்.."
"அதை ஏன் நான் சொல்லனும், என்கிட்டயா கேட்ட அதுல கூட்டிட்டு போக சொல்லி, அவன்கிட்ட தானே கேட்ட.. அப்போ அவன்கிட்டயே கேட்டுக்கோ.." என்றவன் சன்னல் புறம் திரும்பிக் கொள்ள,
"ம்க்கும்.. ரொம்பத்தான் பண்றாரு.." உதட்டை சுழித்தவள், 'அப்டி நான் எங்கே கூட்டிட்டு போக சொல்லி கேட்டேன்' என்ற யோசனையாக வந்தவள், கார் நிற்கவும் அந்த இடத்தை கண்டு விழி விரித்த கவி,
"ஹேய்.. ஜாலி.. அப்போ நம்ம எல்லாரும் பிளைட்ல போக போறோமா.. இதை முன்னாடியே சொல்லி இருந்தா என்னவாம்.. அதோட பிளைட்ல கூட்டிட்டு போக சொல்லி நான் எப்போ கேட்டேன் ஹான்.." இடையில் கை வைத்து யாதவை முறைக்க,
"முன்னாடியே சொல்லி இருந்தா அதுக்கு பேர் சர்ப்ரைஸ் இல்லையே கவி.. அப்புறம் நீ பிளைட்ல கூட்டிட்டு போக சொல்லி கேட்டதுல இருந்து, உன் புருஷன் என்னென்ன அலம்பல் பண்ணானு கொஞ்சம் நினைச்சி பாரு.." என்றதை மட்டும் பாவமாக அவளுக்கு ரகசியம் சொன்ன யாதவ், மனைவிகளுக்கு தெரியாமல் பேக் செய்து வைத்திருந்த லக்கேஜை எடுத்து வந்தான்.
"இதுக்காக தான் நான் உங்களுக்கு பேக் பண்ணும் போது கண்டுக்காம போனீங்களா.." ஸ்வாதி முறைக்க, ஈ.. என இளித்து வைத்தவன்,
"ஹனிமூன் போகும் போது முறைச்சிட்டே வந்தா ரெண்டை பிள்ளை பிறக்குமாமே உண்மையா ஸ்வாதிமா.." சீரியஸாக கேட்ட யாதவை கண்டு கவி சிரிக்க, ஸ்வாதி முறைக்க என்று கலகலப்பாக அவர்களின் விமான பயணம் கலைகட்டியது.
இரவு நேரம் அனைவரும் தங்கள் அறையில் நன்றாக உறக்கத்தில் இருக்க, ஏதோ பயங்கரமாக அதிரும் சத்தத்தில் உறங்கிக் கொண்டு இருந்தவர்களின் புருவம் தூக்கத்தில் சுருங்கி விழிப்புதட்டி எழுந்தவர்கள், அந்த சத்தம் வரும் திசையை பின் தொடர்ந்து செல்ல, அனைவரும் ஆத்வியின் அறை வாயிலில் தான் ஒன்று கூடி நின்றனர்.
"ஏய்.. என்ன டி இவ்ளோ சத்தமா உள்ள என்ன பண்றான் அவன்.. குழந்தைங்க எல்லாம் முழிச்சிக்கிட்டு கத்தும் டி.." ஆதி பற்களை கடிக்க,
"ஏன் இப்டி பண்றான்னு ஒன்னும் புரியலயே ஒரு நிமிஷம் இருங்க நான் பாக்குறேன்.." பதட்டமாக மித்ரா கதவை திறக்க, அனைவரும் அதிர்ந்து நின்றனர், அங்கு நடக்கும் சேட்டையைக் கண்டு.
இரண்டு தோளிலும் நான்கு பிள்ளைகளையும் மாறி மாறி தூக்கி வைத்து, மார்க் ஆண்டணி படத்தில் வந்த வைப் சாங்கிற்கு குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தான்.
"பஞ்சு மிட்டாய் சேலை கட்டி..
பட்டுவண்ண ரவிக்கை போட்டு..
அடி பஞ்சு மிட்டாய் சேலை கட்டி.. பட்டுவண்ண ரவிக்கை போட்டு...
கஞ்சி கொண்டு போறவளே.. நெஞ்சுக்குள்ள நீ வரியா..
தும்ப பூவு, மல்லு வேட்டி..
ஆஹா
தொட தெரிய, ஏத்தி கட்டி..
ஓஹோ
வம்பு பண்ண வாறவரே.. வழி விடுங்க
நேரமாச்சு..
அப்டி போடு.." பாடலை அதிர விட்டு, மெத்தையில் குதித்து குத்தாட்டம் போட, அவனுக்கு ஏற்றது போல தன்யாவும் அவளின் மூன்று குட்டி தம்பிகளும் வாய்க்கு வந்ததை பாடி, சத்தமாக சிரிக்கும் மழலைகளும் இடுப்பை ஆட்டி ஆடிக் கொண்டிருப்பதை தான் குடும்பமே வேடிக்கைப் பார்த்தது.
கவிக்கு டான்ஸ் ஆட தெரியாத சோகத்தில் ஒரு மூலையில் அமர்ந்து, அவர்கள் செய்யும் சேட்டையை ரசித்துக் கொண்டிருக்க, மித்ராக்கோ கால்கள் நிற்க்கவில்லை தரையில்.
சேலையை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு, "உன் கண்ணு ரெண்டும் லவாப் பழம்.. காச்சிருக்கு கொய்யா பழம்..
மூடி வைக்காதே திங்காம வீணடிக்காதே..
அட புல் அறுக்க போகையிலே..
புள்ள வரம் கேட்க வந்தேன்..
தள்ளி நிக்காதே.. மனச கிள்ளி வைக்காதே.."
செம்ம மாசாக பாட்டு பட்டையைக் கிளப்ப, மகன் மற்றும் பேரக் குழந்தைகளோடு மித்ராவும் சேர்ந்து ஆட, அவளை தொடர்ந்து சுபி, ஆரு, ஸ்வாதி சிங்கிள் பீஸ் விஷால் என்று மொத்த பட்டாளமும் சேர்ந்து, அடுத்தடுத்து ஹோம் தியேட்டரில் அதிர்ந்த குத்து பாடல்களுக்கு ஆடுவதை கண்டு, ஆதி, விக்ரம், யாதவ், அஜய், கவி அனைவரும் தங்களை மீறி சிரித்து, கமென்ட்றி கொடுத்தபடி மகிழ்ச்சியாகி தம் தமது இணைகளை ரசித்து நின்றனர்.
மகிழ்ச்சியான குடும்பம் ஆனந்தத்தில் திளைத்து இருக்க. "தென்றலாக வந்து புயலின் மனதை வருடிவள்" குடும்பத்திற்கே இதம் வீசி மகிழ்ச்சியில் உறைய வைத்து விட்டாள்.
இவர்கள் இன்று போல் என்றும் வாழ வாழ்த்தி நாமும் விடைபெறுவோம்
நன்றி
புயல் கதைக்கு ஆதரவு கொடுத்த அனைத்து நட்புகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இந்து

Author: Indhu Novels
Article Title: இறுதி அத்தியாயம் 76 (ஞாயிறு இரவு கதை நீக்கம்)
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.