Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
New member
Messages
7
Reaction score
1
Points
3
கள்வன் 2

வாசகர் பெரு மக்களே இப்போது நான் சொல்ல போகும் ஊரின் பெயர் உண்மை. ஆனால் அதில் வரும் கிராமம் பொய். அனைத்தும் கற்பனையே... போய் ஆராய்ச்சி செய்யாதீங்கோ...

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி என்னும் ஊரில் அழகாபுரி என்னும் கிராமம் சுத்தி பதினெட்டு பட்டி கிராமத்தை தனக்குள் அடக்கி கொண்டுள்ளது. அதை முழுதாக கிராமம் என்றும் சொல்லிவிட முடியாது. அதற்க்கென்று முழுதும் நகரம் என்றும் சொல்லிவிட முடியாது. ஆளவந்தான் கமல் சொல்வது போல மனிதன் பாதி மிருகம் பாதி போல காட்சி தரும் அக்கிராமம். பல பல ஓட்டு வீடுகளும் சிமெண்ட் சீட் வீடுகளும், அதற்கும் குறைவாக ஓலை குடிசை வீடுகளும் இருக்கும். அதே போல் சில சில மச்சு வீடுகளும் அங்கு இருக்கும். அதில் மிகவும் பிரசித்தி பெற்றது பெரிய வீடு என அழைக்கப்படும் ஜமின் வீடு. ஜமின் வீடு... ஜமின் வீடு என அழைக்கப்பட்டவர்கள் பிறகு நாள் போக்கில் பெரியவீடு என அழைக்க படுகிறார்கள்.

"இப்ப என்னதான் சொல்ல வரீங்க?"

"இந்த வீட்டுக்குன்னு ஒரு வாரிசு வேணும் ரிஷி. நீ கல்யாணம் பண்ணித்தான் ஆகணும்."

"அதுக்கு வாய்ப்பே இல்ல...."

"ரிஷிஇஇ...."

அவர் அதிர்ச்சியின் உச்சஸ்தாணியில் நிற்கட்டும் இப்ப நாம யார் அப்படி பேசுனது. ரிஷி ஏன் வாய்ப்பில்லை என சொன்னான் என கொஞ்சம் பார்த்துட்டு வந்தரலாம் வாங்க போலாம்.

ராஜமனோகரன் கற்பகவள்ளி இருவருக்கும் பிறந்தவர்கள்தான் ரிஷி வேந்தன். நம் கதையின் நாயகன். தம்பி விதுர வேந்தன். இரு மகன்கள். இருவரும் மெத்த படித்து நல்ல வேளையில் உள்ளனர். ரிஷி மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றவன் அங்கேயே நல்ல வேலையும் கிடைக்க... சொந்த ஊரையே மறந்து போனான். ஆனால் தற்போது தந்தையின் தொழில்களை பார்த்துக் கொண்டு உள்ளான். ராஜமனோகரன் பிரத்தியேகமான சொந்தமாக தங்க நகை கடை வைத்திருக்கிறார். அந்த ஊரிலேயே அவரின் கடை மிகவும் பிரசித்தி பெற்றது. பாரம்பரியமாக அவர்கள் நடத்தும் தொழில் அதுதான். அது போக அவர் துணி கடை. பல கட்டிடங்கள் கட்டி அதை வாடகைக்கு விட்டும் உள்ளார். சில நிலம் இருப்பதால் அதையும் ஏன் விட்டு வைப்பானே என்று தோப்பாகவும், தோட்டமாகவும் மாற்றி விட்டார். தற்போது உடல்நிலை சரியில்லாததால் இதை சரி வர பார்க்க முடியாமல் போக... மகனின் உதவியை நாடினார். ரிஷி பொறுப்பை கையில் ஏற்றுக் கொண்ட பிறகு நிறைய மாற்றங்களை கொண்டு வந்தான். சம்பளத்தை அதிக படுத்தினான். ஆட்களை கூட்டினான். இப்போது புதிதாக மால் ஒன்றை கட்ட தொடங்கி உள்ளான். அந்த வேலையும் நடந்து கொண்டிருக்கிறது.

"ரிஷிஇஇ... என்னடா சொல்ற?" அதிர்ச்சியில் கத்தியே விட்டார் ராஜமனோகரன்.

அவரின் கத்தல் அவனுக்கு எந்த விதமான பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. வெற்று பார்வை பார்த்தவன் அவனது அறைக்கு செல்ல...

"கொஞ்சம் நில்லுடா... நீ உன் மனசுல என்னதான்டா நினைச்சுட்டு இருக்க... உனக்கும் கல்யாணம் ஆகணும். குழந்தை குட்டிகளோட பார்க்கணும்னு எங்களுக்கு எண்ணம் இருக்காதா? ஏண்டா இப்படி இருக்க?" என ஆதங்கத்துடன் பேசினார்.

"லுக் டேட் எனக்கு இந்த கல்யாணம், குழந்தை, வாரிசு... பிளா... பிளா... இதுல எல்லாம் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை. என்னை இப்படியே விட்ருங்க..." தோல்களை குலுக்கி அலட்சியமான பதில் சொன்னான்.

"போதும் நிறுத்துடா உன் பேச்சை. படிச்சு தொழில் பண்ணா மட்டும் போராது. உனக்குன்னு ஒரு வாழக்கையை உருவாக்கனும். இது உன் வாழக்கையின் ஒரு பகுதி. அதே போல கல்யாணங்கிறதும் வாழ்க்கையின் ஒரு பகுதி ரிஷி. அதை முதல்ல தெளிவா புரிஞ்சுக்கோ... ஓரளவு நீ யாரையாவது லவ் பண்றியா?"

"லவ்வா... ஹும்... என்ன நானும் என் தம்பியை போல ஆக வேண்டுமா? அவன் இப்ப இருக்குற நிலைமைக்கு காரணம் காதல்தான்..." கோவத்தில் இரு கண்களும் சிவந்து போயிருந்தது ரிஷிக்கு.

"டேய் அவன் கதை வேற உன் கதை வேற... அவன் தெரியாம போய் அந்த படுபாவியை காதலித்தான். எங்க சொல் பேச்சு கொஞ்சம் கூட கேக்கவே இல்லை அவன். அவளும் வேற ஒரு பணக்காரனா வாட்ட சாட்டமா பார்த்ததும் மயங்கி அவன்கிட்ட போயிட்டா. உன் தம்பியையும் ஏமாத்திட்டு போயிட்டா அந்த ஓடுக்காலி." சிறிது இடைவெளி வந்தது அவரின் பேச்சில் இருந்து.... "இங்க பாரு ரிஷி இது உனக்கு தேவை இல்லாதது. பழையதை பத்தி பேச வேணாம். இப்ப நீ சொல்லு நாங்க பாக்குற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு. பொண்ணு கூட ரெடியா இருக்கு."

"நோ வே பா... நான் ஏற்கனவே சொன்னதுதான். எனக்கு கல்யாணம் வேண்டாம். என் தம்பி இப்படி படுத்த படுக்கையா இருக்கும் போது நான் மட்டும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருக்க சொல்றிங்களா... அவனுக்கு ஏற்பட்ட நிலைமை எனக்கும் வரணுமா... வேணாம் என்னை போர்ஸ் பண்ணாதீங்க..." என்றான்.

மனோகரன் எவ்வளவோ எடுத்து சொல்லி பார்த்து விட்டார். அன்னை கற்பகமும் சொல்லி சலித்தே விட்டாள். ஆனால் அவன் பிடிக்கொடுக்கவே இல்லை. தம்பியின் வாழக்கை இப்படி ஆகி விட்டதே என்னும் மன உழைச்சளுக்கு ஆளானான் ரிஷி. அவன் ஒரு வருடம் கழித்து வரும் போது அவன் பார்த்தது விதுரன் படுத்த படுக்கையாக கோமா நிலையில் இருப்பதை பார்த்து மனமுடைந்து போனான். பிறகு குடும்பத்தில் உள்ளவர்கள் சொன்ன விஷயம் கேட்டு அவன் காதல், கல்யாணம், குழந்தை போன்றவைகளை வெறுத்தே விட்டான்.

விதுர வேந்தனை சென்னைக்கு அனுப்பி படிக்க வைத்தனர். அவனுக்கு மருத்துவம் மிகவும் பிடிக்கும் என்பதால் அவனை அங்கு சென்று படிக்க வைத்தனர். அங்கேதான் அவனுக்கு காதலும் வளர்ந்தது. அவளும் நல்லவிதமாய்த்தான் காதலித்தாள். நீ இல்லாமல் நான் இல்லை. நான் இல்லாமல் நீ இல்லை என்னும் காவிய காதலை போல இருவரும் காதலித்தனர். கடைசியாக படிப்பு முடியும் தருவாயில் இருவரும் ரகசியமாக பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் படிப்பும் முடிய... ட்ரைனிங்கிற்க்கு பலத்தரப்பட்ட ஊர்களுக்கு அனுப்ப பட்டனர். அப்போது பேட்ச் வைசாக அனுப்ப இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதில் அவன் காதலிக்கு வேறொரு பெரிய பணக்கார தொழில் அதிபருடன் பழக்கம் ஏற்பட்டு அவனுடன் சென்று விட்டாள். விதுரனும் போய் அவளை கூப்பிட்டான். ஆனால் அவளோ நாயை அடித்து விரட்டாத குறையாக விரட்டி அடித்துவிட்டாள். அதில் மனமுடைந்து போன விதுரன் காரை ஓட்டிய வேகத்தில் லாரியின் மீது மோதி உயிர் தப்பி போய் கோமா ஸ்டேஜக்கு சென்றிருந்தான். இத்தோடு ஒரு வருடம் ஆகி விட்டது. அவன் இன்னும் கண்களை திறக்கவே இல்லை. பரிசோதனை செய்த டாக்டர்ஸ் அனைவரும் சொல்லும் ஒரே பதில் "அவருக்கு ஒன்னும் இல்லை எப்பவேணாலும் கண் திறப்பார்" என்ற பதில் வந்ததால் அவர்களும் மகனை சிறு குழந்தையை பார்ப்பதை போல பார்த்துக் கொண்டனர்.

நடந்த நிகழ்வுகள் அனைத்தும் கண் முன்னே காட்சியாய் வர மூச்சு சூடாக பெற்றோர்களை கோபமாக பார்த்தான் ரிஷி.

"சரி ரிஷி கல்யாணமும் பண்ணிக்க மாட்ட... எங்களுக்கு இந்த குடுபத்துக்கு ஒரு வாரிசு வேணும். உன் தம்பியால் இப்போது முடியாது. அவன் உயிருடன் திரும்பி வருவானா என்பதே சந்தேகம். எங்களுக்கு இருக்கும் ஒரே மகன் இப்போது நீ மட்டும்தான் உன்னிடமே இதற்கு தீர்வு கேக்கிறேன். என்ன பண்ணலாம்" என்றார் மனோகரன்.

"சரிங்கப்பா... நான் ஒரு ஐடியா சொல்றேன்."

"என்ன?"

அவன் சொல்ல சொல்ல...

"ரிஷி இது கிராமம் ரிஷி பஞ்சாயத்தை கூட்டிடுவாங்கப்பா நீ நினைக்கிற மாதிரி சிட்டி கிடையாது."

"சோ வாட் ஒத்து வருமான்னு பாருங்க... இல்லைன்னா வேற வழி சொல்றேன்."

"அது என்னடா?"

"இப்போதைக்கு இது. அப்புறம் பார்க்கலாம்பா... ஓகே இதை மூவ் பண்ணுங்க. Msg பாஸ் பண்ணுங்க..." என்றவன் அவனது அறைக்கு சென்று விட்டான்.

நேற்று தந்தையிடம் பேசியது இன்று அவனுக்கு மனதில் ஓட... அசட்டு சிரிப்பு ஒன்றை உதிர்த்தவன்... "ஓகே இன்னைக்கு இன்டர்வியூ முடிஞ்சது போலாம்" என கீழே வந்த போதுதான் குழலியை பார்த்தான்.

குழலி ரிஷியின் அறைக்கு சென்றாள். மரியாதைக்காக "குட் மார்னிங் சார்" என்றாள்.

கார்குழலியை பார்த்தவன் ஒருநிமிடம் கண்ணை எடுக்காமல் அவளது அழகை ரசிக்க தோன்றியது அவனுக்கு. அவன் பார்க்காத பெண்களா... ஆனாலும் அவளை கண்ணை அகற்றாமல் பார்க்க தோன்றியது அவனுக்கு...

"குட் மார்னிங் சார்."

"ம்.. சிட். பைல் கொடுங்க..."

குழலி கொடுக்க அதை முழுவதுமாக பார்த்தவன். "மிஸ் கார்குழலி இங்க என்ன வேலை பார்க்க வந்துருக்கீங்கன்னு தெரியுமா?"

"ம்... தெரியும் சார் தோட்ட கணக்கு வழக்கு வேலைகள் தானே..."

"அது இல்ல. உங்களை நாங்க வெறும் கணக்கு வேலைக்கு மட்டும் ஆள் எடுக்கலை" நாற்காளியில் அசைந்தாடிய படியே பதில் சொன்னான்.

"பிறகு எதற்கு சார்?" புரியாத விழிகளுடன் கேக்க...

"இந்தாங்க இதை படிங்க... என்று ஒரு பத்திரதை எடுத்து கொடுத்தான். அவளும் அதில் உள்ளதை படித்த பின் ருத்ரகாளியாய் பொங்கி எழுந்து விட்டாள்.

அதில்....

இந்த வேலை உங்களை கணக்கு வேலை பார்க்கவோ மற்றும் பல வேலைகளை பார்க்க வைக்கவோ விண்ணப்பித்த செய்தி இல்லை. இது முற்றிலும் வேறுப்பட்டது. எங்கள் குடும்பத்துக்கு வாரிசு ஒன்றை பெற்று தர வேண்டும். அதுவும் ஒரு கணவன் மனைவிக்குள் நடக்கும் தாம்பத்தியம் போல் நடந்து குழந்தை பெற்று கொடுக்க வேண்டும். இதற்க்காக உங்களுக்கு எதிர்பார்க்க முடியாத அளவுக்கு பணம் கொடுக்கப்படும். குழந்தை பிறந்தவுடன் அதை உரிமை கொண்டாடவோ, அல்லது இங்கேயே தங்கி விடவோ எந்த அனுமதியும் இல்லை. குழந்தை பெற்று கொடுத்துவிட்டு நீங்கள் போகும் போது... எதிர் பார்க்க முடியாத அளவுக்கு உங்களுக்கு பணம் நிறைய கொடுக்கப்படும்" என எழுதி இருப்பதை பார்த்ததும் குழலி வெகுண்டெழுந்தாள்.

"ஏன் சார் உங்க குடும்பத்துக்கு வாரிசு வேண்டும்மென்றால் ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே..." என்றாள்.

"அந்த ஈர வெங்காயம் எங்களுக்கும் தெரியும். எனக்கு நீ அட்வைஸ் கொடுக்க சொல்லல. உன் முடிவு சொல்லிட்டு போ... ரொம்ப ட்ராமா போடாத" என்றவன் காதில் விரலை வைத்து குடைந்தான்.

"ஹ்ம்ம்... எனக்கு இதுல சம்மதம் இல்ல" சொன்னவள் கோபமாக அவனை வெறிக்க வெறிக்க பார்த்துவிட்டு அங்கிருந்து போனவள் மீண்டும் அவனிடமே சரணடைகிறாள். அது எதற்கு வாங்க பார்க்கலாம்.

கோபமாக வெளியே வந்தவள் சாலையில் நடந்து போய் கொண்டிருக்க அவளது தாத்தா போன் செய்தார். அதை எடுத்து பேசியவள்.... "என்ன தாத்தா?"

"குழலி நம்ம பாலு திடீர்ன்னு மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தான்மா... பொறகு ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டு போனோம். ஒரு டாக்டர் பார்த்துட்டு ஏதோ அவனுக்கு இதயத்துக்கு போற ரத்தம் சரி வர போகாம இருக்காம். ஏற்கனவே கால் ஊனமான பையன் கவனிக்க மாட்டிங்களான்னு சொல்றாங்க. ஆப்ரேஷன் பண்ணணும்னு சொல்றாங்க. பத்து லட்சம் செலவாகும்னு சொல்றாங்க. குழலி நீ கொஞ்சம் வாம்மா எனக்கு இருப்பு கொள்ளல..."

"இதோ வரேன் தாத்தா" என பதறி அடித்து கொண்டு ஹாஸ்பிட்டல் போக அங்கே ஐ சீ யூ பிரிவில் ஆக்சிஜன் மாஸ்க்குடன் இருந்தான் பாலு. கதறி அழுதாள். பிறகு மருத்துவர் இருக்கும் அறைக்கு போனாள்.

"சார் என் தம்பிக்கு என்ன ஆச்சு?"

"நீங்க" என அவர் கேள்வியுடன் வினவ...

"நான் அவன் அக்கா..."

"அவனுக்கு இதயத்து போற ரத்த குழாயில அடைப்பு ஏற்பட்டிருக்கு. இது பொதுவா வயதானவர்களுக்கு வரும். ஆனால் இந்த இளம் வயதில் வருவது ரொம்ப ரேர்தான். ஆப்ரேஷன் செய்தால் சரி செய்து விடலாம்."

"அப்டின்னா கண்டிப்பா பண்ணுங்க டாக்டர்."

"சரிம்மா நீங்க கேஷ் கவுன்டர்ல பத்து லட்சம் கட்டிருங்க... நாங்க ஆப்ரேஷனை ஸ்டார்ட் பண்ணிறோம்."

பத்து லட்சமா அதுக்கு நான் எங்க போவேன். என்கிட்ட ஏது அவ்வளவு பணம். யார்கிட்ட போய் நான் கடன் கேப்பேன். அப்படி இருந்தாலும். நம்மை நம்பி கொடுக்க முன் வருவார்களா என பலவித யோசனைகளில் சுழன்று கொண்டிருந்தவள்... இன்டர்வியூ ஞாபகம் வர... வேகமாக பெரிய வீட்டை நோக்கி நகர்ந்தாள்.

"கர்ப்பா..." கை கொட்டி சிரித்தான் ரிஷி.

"சார் சிரிக்கிறதுக்கு நேரம் இல்லை. நான் ஒரு இக்கட்டான சூழ்நிலையில மாட்டி இருக்கேன். எனக்கு இப்பவே பணம் தேவைப்படுது. என் நிலைமையை கொஞ்சம் புருஞ்சுக்கோங்க. எனக்கு இதுல பரிபூரண சம்மதம்" தவிப்புடன் அவள் சொல்ல... அவனின் நக்கலான பேச்சு அவளுக்கு அந்நேரத்தில் கோபத்தை கொடுத்தாலும் பொறுத்து போனாள். இமைகளை மூடி திறந்து பெரு மூச்சை இழுத்து விட்டவள் அவனையே பார்த்திருக்க...

"ஓகே மிஸ் கார்குழலி கம் டு மை ரூம்" என சொல்லியவன் அவளை தாண்டி அவனது அறைக்கு செல்ல அவளும் அவன் பின்னாடியே போனாள்.

"இந்தா இந்த பேப்பர்ல சைன் பண்ணு."அவளும் அதை வாங்கி கையெழுத்து போட்டு விட்டு அவனிடம் தர... அடுத்த நிமிடமே அவனின் கைவளைவுக்குள் இருந்தாள் குழலி. இதழோடு இதழ் பொருத்தினான். குழலியின் விழிகள் அகல விரிந்து அவனின் பூஜங்களை இறுக்கமாக பிடித்தாள். உண்மையை சொல்ல போனால் அவள் அதிர்ச்சியின் விளிம்பில் இருந்தாள்.

கள்வன் தொடர்வான்.

மக்களே படிச்சுட்டி உங்கள் விமர்சனத்தை போடுங்க...
 
Top