New member
- Messages
- 16
- Reaction score
- 1
- Points
- 3
கள்வன் 4
குழலி ஒரு வழியாக ரிஷியிடம் அனுமதி வாங்கி கொண்டு அவளது தம்பி பாலுவை பார்க்க காரில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டாள். ஆனால் ரிஷி சொன்னது போல் அவளை பின் தொடர அவளுக்கு என்று இரண்டு பாடிக்கார்ட்ஸ் பின்னே வர... மருத்துவமனை உள்ளே போகும் போதும் அவர்களும் வரவே... ச்சே... இவனுங்க வேற... என அவர்களை வசை பாடியப்படியே விவரம் அறிந்து கொண்டு பாலு இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள் குழலி.
"தாத்தா..." என கண்ணீருடன் அவரை கட்டிப்பிடித்து கொண்டாள் குழலி.
"குழலி வந்துட்டியாமா..."
"தாத்தா பாலு எங்க நான் அவனை பார்க்கணும். அவன் எந்த ரூம்ல இருக்கான் சொல்லுங்க? நான் இப்பவே அவனை பார்க்கணும்" என கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோட பாவம் அம்மாவையும் பறிக் கொடுத்தவள் எங்கே தம்பியையும் பறிக் கொடுத்து விடுவாளோ என்ற பயமும் ஒன்று சேற... அவளையே இரக்கமாக பார்த்த தாத்தா... "கண்ணு நீ பயப்படாதம்மா அவனுக்கு ஆப்ரேஷன் நடந்துட்டு இருக்கு."
"ஆப்ரேஷனா எப்படி? பணம் பத்து லட்சமுன்னு சொன்னாங்களே எப்படி தாத்தா யாருகிட்டையாவது கடன் வாங்குனீங்களா?" மனதில் சிறு நப்பாசை அவளிடம் எட்டி பார்த்தது. அப்படியாவது அந்த ரிஷி என்னும் சிங்கத்திடமிருந்து தப்பிக்கலாம் என நினைத்து கேட்டாள்.
"இந்த வயசான கிழவனை நம்பி யாரும்மா எனக்கு பத்து லட்சம் கடன் தர போறான். நம்ம பெரியவீட்டு பிள்ளை ரிஷிவேந்தன் அய்யா சொல்லித்தான் அவனுக்கு ஆப்ரேஷன் நடந்துட்டு இருக்கு. பணம் அவரே கட்டிடாறாம். அதான் இவ்ளோ வேகமா எல்லாம் நடக்குது. உனக்கு அங்க வேலை கிடைச்சதுனால... இங்க உன் தம்பிக்கு ஆப்ரேஷன் நடந்துட்டு இருக்கு."
"ஹும்... ஆமா தாத்தா அது என்னவோ உண்மைதான். அவருக்கு நான் ஒரு உயிரை கொடுப்பதற்காக எனக்காக இருக்கும் உயிரை காப்பாற்ற வேறு வழியில்லாமல் என் கர்ப்பையும், மானத்தையும் இழந்து இச்செயலை செய்ய போறேன். இன்னும் எத்தனை கஷ்ட்டங்களை அனுபவிக்க போறேனோ தெரில... என மனதில் பேசி கொண்டவள் அவள் தாத்தா சொன்னதற்கு "ம்ம்ம்ம்...." என்னும் பதிலே உதிர்த்தாள்.
சில மணி நேரங்களுக்கு பிறகு ஆப்ரேஷன் நல்லபடியாக முடிய...வெளியே வந்த மருத்துவர் "பாலுவுக்கு இப்போது எந்த பிரச்சனையும் இல்லை. சரியான நேரத்துல இதை சரி செய்ததுனால அவன் உயிருக்கும் எந்த ஆபத்தும் இனி வராது. கொஞ்சம் நல்லா கவனிச்சுக்கோங்க" என சொன்னவர் மேலும் பல விவரங்களை எடுத்து சொல்லிவிட்டு சென்று விட்டார்.
பாலு மயக்கத்தில் இன்னும் இருக்க... எப்போது எந்திரிப்பான். அவனை பார்த்து இரண்டு வார்த்தை பேசிவிட்டு போவோம் என காத்திருந்தாள். மணி ஒன்பதை தாண்ட... இரண்டு பாடிகார்ட்ஸில் ஒருவன் குழலியை தேடியே வந்து விட்டான்.
"மேடம் உங்களை சார் கூப்பிட்டு வர சொன்னார்" என்றான் மொட்டையாக.... அவளுக்கும் புரிந்தது. ஆனால் தாத்தாவிற்குத்தான் ஒன்றும் புரியவில்லை.
"நீங்க போங்க நான் வரேன்" என அவள் சொல்ல.. "இல்ல மேடம் இப்பவே வாங்க.... உங்களை கையோடு அழைத்து வர சொன்னார்"
என ரோபோவை போல பதில் உரைத்தான் அவன்.
இனி இதற்கு மேல் நின்றால் என்னை அப்படியே தூக்கி போனாலும் அதிசயபட ஒண்ணுமில்ல என நினைத்து கொண்டு தாத்தாவை பார்த்தாள்.
"தாத்தா நான் போயிட்டு வறேன்."
"எங்காத்தா போறவ? ஓ பெரிய வீட்டு வேலைக்கா "
"ஆமாமா" என அவளும் தலையாட்ட...
"எங்கே போகணும் நீ அதான் வேலையில சேர்த்தாச்சே... இப்ப நைட்டு ஆகுது எங்கேயும் போக வேண்டாம். நானே நாளைக்கு வேலைக்கு கொண்டு போய் விடுறேன்."
"இல்லை தாத்தா வேலை இங்க இல்ல..."
"பொறவு எங்காத்தா வேலைக்கு போக போற...."
"சாரோட கம்பெனியில... அவரோட கம்பெனி இங்க இல்ல... சென்னை போகப்போறேன் தாத்தா" என பொய் சொன்னாள்.
"அவ்ளோதூரம் நீ போய்தான் ஆகணுமா தாயி... பேசாம நீ இந்த வேலைய வேணாம்னு சொல்லிட்டு வந்துருத்தா."
"அயோ இல்ல தாத்தா அது மட்டும் முடியாது. நான் ஒரு வருஷம் அக்ரீமெண்ட்ல கையெழுத்து போட்ருக்கேன். நானே போறேன்னு சொல்லிட்டு போகாம விட்டேனா அப்புறம் என் மேல கேஸ் போடுவாங்க... அது நமக்கு தேவை இல்லாத பிரச்சனை ஏற்படுத்தும் அது மட்டுமில்லாம அவர் பாலுவுக்காக எவ்ளோ பெரிய உதவி பண்ணிருக்காங்க. நாமளும் அதுக்கு விசுவாசமா இருக்கணும்ல தாத்தா... ஒரு வருஷம் தானே கண்ணை மூடி கண்ணை திறக்கறதுக்குள்ள நாள் போயிடும்."
"என்னென்னமோ சொல்ற... சரி பார்த்து சூதானமா இருந்துக்கமா... நான் பாலுவை பார்த்துக்குறேன்."
"சரிங்க தாத்தா இன்னும் ஒரு மணி நேரத்துல போகணும். நான் வீட்டுக்கு போய் துணியெல்லாம் எடுத்து வச்சுட்டு கிளம்புறேன். நீங்களும், பாலுவும் பத்திரமா இருங்க நான் வரேன்" என சொல்லிவிட்டு தாத்தாவின் கையை பிடிக்க... மீண்டும் அவளின் அருகே வந்த பாடிகார்ட்ஸ்.... "மேடம் வண்டி ரெடியா இருக்கு போகலாம்" என்றான்.
"சரிங்க தாத்தா நான் வரேன்" கண்ணில் கண்ணீர் மல்க அவரிடமிருந்து விடை பெற்றாள் குழலி.
கார் அந்த பெரிய வீட்டின் முன் நின்றது. குழலி அவ்வீட்டையே பார்த்துக் கொண்டு கீழே இறங்கினாள். உள்ளே நுழையும் போது "ஏய் யார் நீ?" என்னும் பெருங் குரல் ஒன்று ஒலித்தது.
சற்று பருத்த உடல் வாகு கொண்ட ரிஷி வேந்தனின் தாய் கற்பகவள்ளி அவளையே பார்த்து கொண்டிருந்தாள். அவளுக்கு பக்கத்தில் அதீத மேக்கப்பில் இருபது அல்லது இருபத்தி இரண்டு வயதுடைய இளம் யுவதியும் நின்று கொண்டிருக்க... அவர்களை என்ன என்பது போல பார்த்து கொண்டிருந்தாள் குழலி.
"மேடம் நான் உங்கள் வீட்டுக்கு தோட்டத்து வரவு செலவு கணக்குகளை பார்க்க வேலைக்கு வந்தவள்" என்றாள் சற்று நடுங்கிய குரலுடன்.
"ஓ... நீதான் என் ரிஷி அத்தானுக்கு குழந்தை பெத்து கொடுக்க வந்தவளா..." என ஏளனத்துடன் ஒலித்தது படு கேவலமாக மேக்கப் போட்டிருந்த கற்பகத்தின் ஒரே அண்ணன் மகள் வர்ஷினி. படிப்பு சரியாக வரவில்லை என படிப்பை பாதியிலே விட்டுட்டு ஊர் சுற்ற ஆர்மபித்தாள். அந்த கிராமத்துக்கே தான்தான் பேரழகி என்னும் விதமாக வழியில் போகும் ஒரு இளைஞர்களையும் விட மாட்டாள். வேண்டும் என்றே வம்புக்கு இழுப்பாள் போர் அடித்தால் தன் தோழிகளுடன் ஊர் சுற்றுவாள். அவளை தட்டி அதட்ட அவளது பெற்றோர்கள் இருந்தாலும் அதுவும் வீண்தான். ஏனெனில் அவளுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வைத்து விட்டனர். பத்தாததுக்கு என் அண்ணன் பொண்ணு என கற்பகமும் பாசம் காட்ட... அடடா என்ன ஒரு அத்தை என்று அவளும் அவள் அத்தை மீது பாசமாக இருந்தாள். ஒரு வேலையும் செய்ய தெரியாது. சுத்த சோம்பேறி. முதலில் இவளை விதுரனுக்கு மணமுடித்து கொடுப்பதாக பேச்சு இருந்தது. பின் அவனின் நிலை கருதி பெரியவன் ரிஷிக்கு கல்யாணம் செய்யலாம் என யோசித்தனர். அவனோ அவளை நான் கல்யாணம் செய்றதுக்கு பதிலா எங்காவது கண் காணாத இடத்துக்கு போயறேன். அவளுக்கு மேக்கப் வாங்கி கொடுத்தே என் சொத்து அழிஞ்சுடும் என நக்கலாக சொல்லி விட்டு கடந்து விட்டான். சும்மா உன்னை கிண்டல் பண்றான் என கற்பகம் அவளை சமாதானம் செய்து மீண்டும் மகனிடம் தீவிரமாக பேச...
"அம்மா அவளை சின்ன பிள்ளையில இருந்து பார்க்கிறேன். படிப்பு சுத்தமா வரல சரி வேற எதுலையாவது திறமையை வளர்த்துக்கிட்டாளா
நல்லா தின்னுட்டு சோத்து பன்னியாட்டம் உடம்பை வளர்த்து வச்சிருக்காளே தவிர எந்த பிரயோஜனமும் இல்ல அவளால... அவளும் அவள் மூஞ்சியும்... பார்த்தாலே கடுப்பா வருது. ஒரு குண்டா பவுடரை தூக்கி முகம் பூரா போட்டுக்கிட்டு பேயாட்டம் இருக்கா... இனி அவளை கல்யாணம் பண்ணிக்க சொல்லி என்கிட்ட கேட்ட அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்" என அவனும் அவன் பங்கிற்கு உரும்பிவிட்டு போக பேசிய அனைத்தையும் ஒட்டு கேட்டு கொண்டிருந்த வர்ஷினி என்னை வேண்டாம்னு சொல்லிட்டு போறிங்கள்ள இனி வேறு எவளையும் உங்களை கிட்ட கூட நெருங்க விட மாட்டேன் மாமா. பார்க்கிறேன் என்னை மீறி இவனுக்கு எப்படி கல்யாணம் ஆக போகுது என அவளின் மனதில் நஞ்சை புகுத்தினள்... அதற்க்காகத்தான் இப்போது அவள் குழலியை எறிக்கும் விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"ஓஹோ..." என ரீங்காரத்துடன் இழுத்த கற்பகம் குழலியை பார்த்து பெரிதாக அவளின் மேல் நல்ல அபிப்ராயம் வரவில்லை. அற்ப புழுவை பார்ப்பது போல பார்த்தாள். "இங்க பாரு நீ எதுக்கு வந்த ஏன் வந்தேன்னு எனக்கு நல்லாவே தெரியும். வந்தியா உன் வேலை முடிந்ததும் சத்தம் போடாம கிளம்பி போயிட்டே இருக்கணும். உன் தகுதி என்னனு புரிஞ்சு நடந்துக்கோ
அப்படியே என் மகனை உன் கைக்குள்ள போடலாம்னு மட்டும் நினைக்காத... என்ன புரியுதா?" என்றாள்.
"ம்.... புரியுது மேடம். என் வேலை முடிந்ததும் நானே இங்கிருந்து போயிடுவேன் அவள் சொல்ல... அப்போது மிஸ் குழலி..." என்று கத்தி கூப்பிட்டான் ரிஷி.
படிகட்டில் ஒரு காலை கீழேயும் மற்ற காலை மேலேயும் வைத்து அவன் நின்றிருந்த தோரணை பார்த்து வர்ஷினி ஜொள்ளு ஒழுகாத குறையாக பார்த்து கொண்டிருக்க... குழலியோ ஐயோ காமூகா.... வந்துட்டானே... எப்படி தப்பிக்கிறது என அவள் நினைக்கும் பபோது அடி வயிற்றில் சுரீரென வலி வர அதை வெளியே காட்டி கொள்ளாமல் முகத்தை சுழித்து கொண்டாள். ஆனால் அவனோ வேறொரு பொருளில் புரிந்து கொண்டான் ரிஷி. கோபம் தலைக்கேற... "ஏய் மேல வா" என்றான்.
"கருமம் கருமம்... இதை எல்லாம் பார்க்கணும்னு என் தலை எழுத்து தாலி கட்டி நடக்க வேண்டிய காரியமெல்லாம் இப்படி கேவலமாவா நடக்கணும். பணத்துக்காக எந்த எல்லைக்கும் போகுதுங்க இந்த காலத்து புள்ளைகளுக்கு எப்படித்தான் மனசு வருதோ... கடவுள்தான் இதை பார்க்கணும்" என கற்பகம் தலையில் அடித்துக் கொண்டே சொன்னாள்.
அவளின் பேச்சில் நிலைகுலைந்து போனாள் குழலி. அவளிடம் என்ன பேசி புரிய வைப்பது. பணம் இருப்பவர்களுக்கு தெரியுமா ஏழைகளின் கஷ்டம். அது என்னமோ தெரியவில்லை. அவர்களுக்கே என்று லட்சம் கணக்கில் செலவு வைக்கவே சில நோய்களும் வந்து சேர்கிறது. ஒரு ஜீவனின் உயிருக்காக அவளின் கர்ப்பை விலை கொடுக்க வந்திருக்கிறாள். நடப்பவையை சொல்லி புரியவைத்தாலும்... பணத்தின் செலுப்பில் மிதக்கும் செல்வந்தர்களுக்கு சொல்லி புரியவைக்க முடியுமா? சொன்னால்தான் நம்புவார்களா என்ன? என அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.
"குழலி" என அவன் மீண்டும் கத்த... மிரண்டு போய் அவள் மேலே பார்க்க... கற்பகமோ... "ஏய் உன்னையவா அவன் கூப்பிட்டான் என்னமோ நீ அங்க போற வாடி" என வர்ஷினியை இழுத்துக் கொண்டு போனாள் கற்பகம். மீண்டும் அவன் கூப்பிடுவதற்குள் போய் விடுவோம் என நினைத்து அவள் முன்னேறி அவனது அறைக்கு போனாள்.
கன்னத்திலேயே பளார் என அரை விழ... குழலியின் காலின் வழியே வந்த ரத்த போக்கை கண்டவன் அதிர்ந்தே போனான்.
கள்வன் தொடர்வான்.

Author: shakthinadhi
Article Title: கள்வன் 4
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.