Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
69
Reaction score
8
Points
8
முரடனின் மகிழம் பூ அவள் 🌼

எபி 20

நள்ளிரவு நேரம்.. நிலவுமகள் வானில் ஊர்வலம் போக.. ஜீவ நதி கிராமமே பல வண்ண அலங்கார விளக்குகளால் மின்னி கொண்டு இருந்தது.. பேய்கள் கூட உறங்கி இருக்குமோ?? என்னவோ?? ஆனால் நம் முரடனோ அப்போது தான் கொள்ளை புற வாசலின் வழியே வீட்டிற்குள் நுழைந்தான்..

சத்தம் வராமல் கதவை பூட்டி விட்டு அவன் அறைக்குள் நுழைய.. அங்கு அவன் ஆசை மனைவியோ தலையணையை தலைவன் என நினைத்து இருக்கி அணைத்த படி உறங்கி இருந்தாள்.. தான் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கும் தலையணை மேல் கோபம் கொண்டவனோ அந்த தலையணையை வேகமாக உருவி கீழே வீசி விட்டு அதற்கு பதிலாக இவன் சென்று பாவையின் நெஞ்சில் படுத்து உறங்கி போனான்..

வழமை போல அதிகாலை கண் விழித்த மகிழினி கண்டதோ தன்னை டெடி பியர் போல அணைத்து கொண்டு உறங்கும் அவள் முரடனை தான்.. மென்மையாக அவன் முகத்தில் இருந்த கூந்தலை விலகி விட்டு ஆடவனின் பிறை நெற்றியில் முத்தமிட..

அவனோ " உதட்டுல கொடுடி.. " என்றான் கண்களை முடிய படி..

அதில் அதிர்ந்தவளோ " நீங்க தூங்கலையா??.. " என்றாள்

" அப்ப தூங்குனா தான் முத்தம் கொடுப்பியா டி... " என விழிகளை திறந்து அதிர்ந்து இருக்கும் அவள் முகத்தை காண..

அவளோ " ராத்திரி எப்ப வந்திங்க?? சாப்பிட்டீங்களா??.. " என்றாள்

" ரொம்ப தாண்டி அக்கறை.. புருஷன் ஊருக்கு போனானே திரும்ப எப்ப வருவேன்னு எல்லாம் யோசிக்காம நல்ல தலைகாணிய கட்டிக்கிட்டு தூங்குற... உன்ன என்ன பண்ணலாம்... " என்றான் காட்டு குரல் அதிர

ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவளோ முரடனின் கத்தியத்தில் பயந்து அவன் மார்பில் ஒட்டி கொண்டு " மன்னிச்சிருங்க இனிமே தூங்க மாட்டேன்.. " என்றாள்

அதில் யோசனையாக பாவையை கண்டவனோ " ஒய்!.. பூனை குட்டி சும்மா தான் சொன்னேன்.. என்னாச்சி இப்பலாம் அடிக்கடி தூங்கிகிட்டே இருக்க.. என்னடி பண்ணுது.. " என்றான் மென்மையாக அவள் தலையை வருடிய படி

" தெரியலையே.. இப்பலாம் அடிக்கடி தூக்கம் வருது.. ஆனா என்ன பிரச்சனைன்னு தெரியல.. " என்றாள்

அவனோ " அதெல்லாம் ஒன்னும் இருக்காது.. போய் கிளம்பி வா கோவிலுக்கு போகணும்.. " என்றான்

அவளோ " நீங்க கோவிலுக்கு எல்லாம் போவீங்களா??.. " என்றாள் அதிர்ச்சியாக

" ஏன்?? நான் அங்க எல்லாம் போக கூடாத என்ன??.. " என்றான் ஒற்றை புருவம் உயர்த்தி

உடுக்கை போல மண்டையை ஆட்டியவளோ " இல்ல.. நான் அப்படி சொல்லல.. " என்றாள் வேகமாக

" வேற எப்படி??... குடிகாரன் கோவிலுக்கு எல்லாம் போவானன்னு நினைச்சிட்டியா??.. "

" இல்ல.. நீங்க கோவிலுக்கு போய் நான் பார்த்தது இல்ல.. அதான் கேட்டேன்.. " என்றாள்

" அதெல்லாம் எங்க ஐயா இருக்கும் போது போவோம்.. அதுக்கு அப்பறம் தான் அங்க போறத விட்டுட்டேன்.. ஆனா இன்னக்கி உன்கூட போகணும்னு தோணுது.. சீக்கிரம் கிளம்பு... " என கூறி வெளியே சென்று விட்டான்..

---

அவளிடம் இருக்கும் புடவைகளிலே ஒரு அழகிய புடவையை அணிந்து கொண்டவளோ.. அவள் நீண்ட கருங்கூந்தலை தளர்வாக பின்னி இரு புருவங்களுக்கு மத்தியில் சிறிய மரூன் நிற பொட்டை வைக்க.. கையில் எதோ பார்சளோடு அறைக்குள் வந்த ராவணனோ " ஹேய்! இங்க வாடி... " என அவளை அருகே அழைக்க..

எதோ யோசனையோடு அவன் அருகே சென்றவளின் சேலையை கலைய ஆரம்பிக்க.. அதில் அதிர்ந்தவளோ அவன் கரத்தை பற்றி கொண்டு " என்ன பண்றிங்க??... " என்றாள் மெல்லிய குரலில்..

அவனோ " புடவை கட்டிவிட போறேண்டி... " என்றானே பார்க்கலாம்..

அதில் முட்டை கண்கள் வெளியே தெறித்து விழும் அளவிற்கு அதிர்ந்து பார்க்க.. " இல்ல.. நானே கட்டிக்குறேனே... " என்றாள் கூச்சத்தில் நெளிந்த படி..

முடியாது என்பதை போல ஒரு பார்வை பார்த்தவனோ அதிரடியாக அவள் சேலையை கலைந்து அவள் எதிர்ப்புகளை எல்லாம் கண்டு கொள்ளாமல் அவன் கையில் இருந்த மெல்லிய எடை கொண்ட நுனுக்காமான வேலைபாடுகள் கொண்ட பட்டு புடவையை... விசிறி போல சிறு.. சிறு மடிப்புகள் எடுத்து கட்டி விட்டவணை இதுக்கா இந்த ஆர்ப்பாட்டம் என்பது போல பார்த்து வைத்தாள் பேதை அவள்...

அவனோ அலமாரியில் இருந்த நகை பெட்டியை எடுத்து அவளிடம் கொடுத்து " இதுல எது பிடிச்சி இருக்கோ போட்டுக்கோ... " என கூற

அவளோ திருவிழாவில் துளைந்த குழந்தை போல திரு.. திருவென விழித்த படி.. " இதுயெல்லாம் எனக்கு வேணாங்க... " என்றாள் மெல்லிய குரலில்..

மனைவியின் எண்ணவோடத்தை கணித்தவனோ " இதுயெல்லாம் உனக்காக நான் சொந்தமா சம்பாரிச்சு வாங்குனது தான்.. போட்டுக்கோ யாருக்கும் இதுல உரிமை இல்ல... " என்றான் மென்மையாக

இவனுக்கு மென்மையான குரல் வருமா என்றே இன்று தான் ஆச்சர்யமாக அவள் பார்க்க... " இன்னும் என்ன யோசனை??... " என்றான் ஆளை துளைக்கும் பார்வையோடு

அவளோ " இல்ல நீங்களே கஷ்டப்படும் போது இவ்வளவு செலவு தேவையா??... " என்றாள் மெல்லிய குரலில்

" உன்கிட்ட நான் சொன்னேனா டி.. எனக்கு உன்ன பார்த்துக்க கஷ்டமா இருக்குன்னு... இல்ல வாங்கி கொடுக்குறது பிடிக்காம கேக்குறிய??... " என்றான் கோபமாக

அதில் பயந்தவளோ " இல்ல நான் அப்படி சொல்லல.. இது எல்லாம் பாக்க ரொம்ப விலை ஒசத்தியா இருக்கும் போல.. இதுக்காக நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு வேலை செய்ஞ்சி இருப்பிங்கள.. அதைத்தான் சொன்னேன்.. " என்றாள் எங்கே அடித்து விடுவானோ என சுவரரோடு ஒட்டிய படி..

ஊர் எல்லாம் இது இல்ல.. அது இல்ல.. எனக்கு பணம் வேணும்.. நகை வேணும்... அது வேணும்.. என கேக்கும் சிலருக்கு மத்தியில் வாங்கிக்கொடுப்பதை வேண்டாம் என கூறும் மனைவியின் பேச்சை வித்தியாசமாக கேட்டவனோ " அடிக்க மாட்டேன் கிட்ட வாடி.. " என அழைக்க அடி மேல் அடிவைத்து அவன் அருகே சென்றாள் மகிழினி..

அவளை மெத்தையில் அமர வைத்தவனோ " உனக்காக செய்யுறது எதுவும் எனக்கு கஷ்டம் இல்லடி.. நான் சம்பாதிக்குறது எல்லாமே உனக்காகத்தான்.. அப்படி இருக்கும் போது உனக்காக எதுவும் வாங்கித்தர கூடாத.. " என்றான் ஒவ்வொரு நகையாக எடுத்து பார்த்து விட்டு...

ஒரு செட் ஜிமிக்கி... பாலக்காய் மாலை... சில தங்க வளையல்கள் என எடுத்து மாட்டி விட்டவனோ " உண்மையாவே ரொம்ப அழகா இருக்க.. கண்டிப்பா நைட் ஸ்வீட் வேணும்.. " என அவள் கன்னத்தில் எச்சில் முத்தம் வைத்து காதில் எதோ கூற...

அதில் தக்காளி பழம் போல சிவந்தவளோ " ச்சீ! என்ன பேசுறீங்க... " என அவன் வயிற்றில் முகத்தை புதைத்து கொண்டாள் ..

" ஏய்.. இப்பவே கிளம்புனினா வெளிய போகலாம்.. இல்ல நாளைக்கி தான் இந்த ரூம் விட்டு போக முடியும் எப்படி வசதி... " என்றான் அவன் காட்டு குரலில்..

அதற்கு மேல் அங்கு இருப்பாளா என்ன பூனை குட்டி போல வெளியே ஓடிவிட்டாள்...

---

கருநீல நிற சட்டையும் அதற்கு எடுப்பாக வெள்ளை வேட்டியும் அணிந்து அவன் அடங்காத கூந்தலை சற்று வாரி.. ஒரு கையில் வெள்ளி காப்பு மின்ன மறுகையில் வேட்டி நுனியை பிடித்து சிங்கம் போல நடந்து வருபனை இமை வெட்டமல் ரசித்து கொண்டு இருந்தாள் பாவையவள்...

அவளோ அவனுக்கு சற்றும் சலைத்தவள் இல்லை என்பது போல மஞ்சள் வண்ண பட்டில் கருநீல நிற பார்டர் வைத்த புடவையும் அதற்கு தோதாக கருநீல நிற ஆரி பிளவுஸ்யும் அணிந்து காதில் நடமாடும் ஜிமிக்கி.. கழுத்தில் உரசும் ஆரம்... கையில் தவழும் பொன் வளையல்கள்.. நெற்றியில் சிறிய பொட்டும் உச்சியில் குங்குமமும்... நீண்ட கூந்தலில் மணக்கும் மல்லி... என தேவலோக அழகி போல நிற்க...

அப்பத்தாவிடம் வெளிய செல்வதாக கூறிவிட்டு அவளோடு அவன் புல்லட் வண்டியில் கிளம்ப... செல்ல ஊரே அவர்களின் ஜோடி பொருத்தத்தை தான் வேடிக்கை பார்த்தது...

திருவிழா கூட்டத்தில் இவர்கள் மட்டுமே தனியே தெரிய... வண்டியை கோவில் மைதானத்தில் நிறுத்தியவனோ வண்டியில் இருந்த பையில் இருந்த பூஜை பொருட்களை அவள் கையில் கொடுத்தவனோ " எல்லாம் சரியா இருக்கா பார்த்துக்கோ.. " என்றான்

" ம்ம்.. சரியா இருக்குங்க... " என கூற

அவள் காரங்களோடு கரம் கோர்த்து கொண்டு உள்ளே கோவிலிற்குள் சென்றான்.. சுற்றி எங்கும் மேள தாளங்கள் இசை கதை கிழிக்க... உருமி மேளம்... செண்டை மேளம் சத்தம்... எட்டுதிக்கும் ஓங்கி ஒலிக்க...

இருவரும் ஜோடியாக சென்று சாமி கும்பிட... பூசாரியே அவன் கொடுத்த தட்சணையில் சற்று மிரண்டு தான் போனார்..

அப்படி என்ன கொடுத்து இருப்பான்??...

தொடரும்...
 

Author: Nithya
Article Title: முரடன் 🌼 20
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top