Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
77
Reaction score
8
Points
8
முரடனின் மகிழம் பூ அவள் 🌼

எபி 27

அதிகாலை நான்கு மணி போல.. நிசப்தமான அந்த வீட்டில் அலாரம் சத்தம் கேட்டு எழுந்த வாணி கண்டதோ குழந்தை போல அவளை அணைத்து கொண்டு உறங்கும் அவள் கணவனை தான்.. மெதுவாக நேரத்தை பார்த்து விட்டு ஆடவனின் தோள் தட்டி எழுப்ப...

உறக்கம் கலைந்து எழுந்த ஆகாஷோ " என்னடி எதுக்கு இப்ப எழுப்புன??... " என்றான் சிடு சிடுப்பாக...

வாணியோ " அது அதிகாலை நேரம் ஒன்னா இருந்தா... " என தயக்கமாக கூற...

தூக்கம் கெட்டு போனதில் கடுப்பானவனோ " ஏய்! என்னடி உனக்கு பிரச்சனை.. தெளிவா சொல்லு??... இல்லை நான் தூங்கவா??... " என்றான் வேண்டா வெறுப்பாக...

அவளோ " இல்லை.. அது நேத்து ஒரு டாக்டர் ஓட வீடியோ பார்த்தேன் அதுல ஏர்லி மார்னிங் ஒன்னா இருந்தா சீக்கிரம் பேபி பார்ம் ஆகும்னு சொன்னாங்க.. அதான் உன்ன எழுப்புனேன்... " என்றாள் விழியில் நீர் கோர்க்க..

அவனோ " இப்ப என்ன தீடீர்ன்னு?? அம்மா ஏதாவது சொன்னாங்களா??... " என்றான் கண்களை தேய்த்து எழுந்த படி..

மறுப்பாக தலை அசைத்தவளோ " உங்க மாமியார் உங்களுக்கு இன்னோரு கல்யாணம் பண்ணி பார்க்க போறாங்களாம்.. சோ எனக்கு ஆறு மாசம் டைம் கொடுத்து இருக்காங்க... " என்றாள் வேதனையாக

அவனோ " அப்ப நான் இன்னொரு கல்யாணம் பண்ணிப்பேன்னு என்கூட படுக்க வர ரைட்... " என்றான் கோபமாக

ஆமா.. இல்லை.. என நான்கு பக்கமும் தலை அசைத்தவளோ " என்னால முடியல அக்கி.. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு... கடைசியில நீ கூட இத ஒரு காரணமா சொல்லி தானே என்கிட்ட சண்டை போட்ட??.. " என்றாள் கண்ணில் நீர் வழிய..

அவளை மென்மையாக அணைத்து கொண்டவனோ " ஹேய்! பேபி சாரி டி.. அது அன்னக்கி எதோ டென்ஷன்ல திட்டிட்டேன் டி.. உன்ன ஹுர்ட் பண்ண எல்லாம் பேசல மா.. " என்றான் உண்மையாக வருந்திய படி..

அவளோ " பொய் சொல்லாத அக்கி.. மனசுல என்ன இருக்கோ அது தான் கோபத்துல கூட வார்த்தையா வெளி வரும்... " என்றாள்

" ஹேய்! லூசு பேபி... சொன்ன நம்பு டி.. இதுக்கு முன்ன எத்தனை வாட்டி இந்த மாதிரி சண்டை போட்டு இருக்கோம்.. அப்ப எல்லாம் இல்லாம இப்ப எப்படிடி உன்ன விட்டு போவேன்.. " என்றான்

" அப்ப நீ எப்பவும் என்ன விட்டு போக மாட்ட தானே??... " என்றாள் கேள்வியாக

அவனோ " ஏண்டி இந்த ஐஞ்சு வருசமா நம்பாமத்தான் என்கூட இருக்கியா சொல்லு??.. உன்ன விட்டு போகணும்னா எப்பவோ ஏன் நமக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே போய் இருப்பேண்டி.. ஆனா உனக்காக தாண்டி என் ஜாதகத்தையே மாத்தி உன்ன கட்டிகிட்டேன்.. சோ கண்டதையும் போட்டு யோசிக்காத...

அப்பறம் போர்ஸ் பண்ணி ரெண்டு பெரும் ஒன்னா வாழ்ந்தா மட்டும் குழந்தை பிறக்காது.. உண்மையான லவ் இருந்தாதாதான் பேபி கூட பார்ம் ஆகும்.. " என்றான்

" அப்ப நீ கூட தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்ன??... அப்பறம் எதுக்கு அந்த குழலி யோட கல்யாணத்தை நிறுத்துனீங்க??... " என பல நாள் மனதில் அரித்து கொண்டு இருந்த கேள்வியை கேக்க..

" ஏய்! அது அந்த மாப்பிளை சரி இல்லை.. அதனால தான் அந்த கல்யாணத்தை நிறுத்துனேன்.. அப்பறம் அவளை கட்டிக்குற ஐடியா எல்லாம் எனக்கு இல்லை... கட்டி பிடிச்சி.. உருண்டு பிரண்டு.. ரத்தம் வர அளவுக்கு சண்டை போட்டாலும் என் பொண்டாட்டி உன்கூட மட்டும் தான்.. வேற எவளுக்கும் நம்ப வாழ்க்கையில பங்கு இல்லை... " என்றான்

இவ்வளவு கூறியும் மனைவியும் முகம் யோசனையாக இருப்பதை கண்டவனோ " ஏய்!.. என் மேல நம்பிக்கை இருந்தா படுத்து தூங்கு இல்லைனா... இப்பவே உங்க அம்மா வீட்டுக்கு கிளம்பி போய்ட்டு ஆனா ஒன்னு எத்த காரணம் கொண்டும் அக்கி.. புருஷான்னு கிட்ட வந்தா கொன்னுடுவேன்.. " என்றவனோ சட்டென அவளை விட்டு விலகி கொள்ள...

அட்டை போல மீண்டும் அவன் மார்பில் ஒட்டி கொண்டவளோ " நம்பாம எல்லாம் இல்லை... ஆனா எனக்கு இந்த வீட்ல இருக்கவங்கள நினைச்சா தான் பயமா இருக்கு?? " என்றாள்

" பச்! இந்த டாபிக்கை விடுடி... இனிமே யாரை பத்தியும் யோசிக்காத நம்பல பத்தி மட்டும் யோசி... " என்றவனோ அமைதியாக உறங்க ஆரம்பித்தான்..

பாவம் பேதை ஒன்றை மறந்து விட்டாள்.. நாம் ஒருவருக்கு செய்யும் பாவமோ.. வரமோ.. தீங்கோ.. நல்லதோ.. கெடுதலோ.. நன்மையோ.. துரோகமோ.. சுகமோ.. அனைத்தும் ஒரு நாள் நம்மையும் திருப்பி வந்து சேரும்.. கர்மா இஸ் பூமேராங்...

---

இங்கு ராவணன் வீட்டில்...


காலை மனைவியோடு அமர்ந்து தியானம் செய்து கொண்டு இருந்தான் ராவணன்.. அவன் செல்ல பூனை குட்டியோ ஆடவனுக்கு டிமிக்கி கொடுத்த படி அமைதியாக தரையில் வேடிக்கை பார்க்க..

கண்களை திறந்து அதை கண்டவனோ இவள.. என பற்களை கடித்த படி..

ஏய்ய்ய்... என்றான் சத்தமாக..

தீடீரென கேட்ட சத்ததில் அதிர்ந்தவளோ தன் முட்டை கண்களை உருட்டிய படி விழிக்க..

அவனோ உள்ளே அதை ரசித்தாலும் வெளியே கோபமாக இருப்பதை போல " ஏய்.. என்னடி பண்ற??.. இது தான் நீ மெடிடேஷன் பண்ற லட்சணமா??.. " என்றான்

" இல்லை மாமூ.. அது வந்து.. " என இழுக்க..

" என்னடி வந்து போய்.. ஹான் உன்ன??... " என்றவனோ பூ போல அவளை தன் மடியில் அமர்த்தி கொண்டு " கொஞ்சம் கூட சொல்ற பேச்சை கேக்குறதே இல்லை டி.. " என குறை பட்டு கொள்ள...

அவளோ பாவமான முக பாவனையோடு " நான் இல்லை எல்லாமே உங்க பொண்ணு பண்ற வேலை தான்.. ரொம்ப தூக்கமா வருது.. ஒரு வேலையும் பண்ண முடியல.. " என்றாள்..

அதில் தன் மெல்லிய சிரிப்பை உதிர்ந்தவனோ " இந்த டைம்ல அப்படி தான் இருக்கும்.. மகிகுட்டி.. கொஞ்சம் ஆக்ட்டிவா இருங்க.. இல்லனா உன்ன மாதிரியே என் பொண்ணும் சோம்பேறியா தான் இருப்பா.. " என்றான்

மகிழினியோ " உங்க கிட்ட ஒன்னு கேக்கவா??... " என்றாள்

"ம்ம்.. ஒன்னு என்ன மொத்தமே கேளுடி.. " என இரட்டை அர்த்தத்தில் கூறியவனின் கரங்களோ அவள் டீ ஷர்ட்குள் நுழைந்து அவளின் மெல்லிய இடையை வருட..

அதில் கூச்சம் கொண்டு நெளிந்தவளோ " பச்! சும்மா இருங்க.. அப்பறம் நான் கேக்க வந்ததா மறந்துடுவேன்.. " என்றாள்

" சரி.. சொல்லு.. " என அவள் இடையை கட்டி கொள்ள...

" முரட்டு குணம் இருக்கவங்க.. எல்லாருக்கும் பையன் தானே பிடிக்கும் உங்களுக்கு ஏன் பொண்ணு பிடிக்குது??... " என்றாள்

ராவணனோ " எனக்கு என் அப்பத்தாவா ரொம்ப பிடிக்கும் டி.. என்னைய அவங்க கஷ்டம் தெரியாம வளர்த்த மாதிரி என் பொண்ணையும் வளர்க்கணும்.. அதுவும் என் தங்கச்சி கூட வாழ முடியாத இளமை பருவ நினைவு எல்லாம் என் மகளோட சேர்த்து திகட்ட தகிட்ட அனுபவிக்கணும்.. " என்றான் உணர்ச்சி பூர்வமாக..

" உங்க தங்கச்சி பத்தி நீங்க கண்டு பிடிச்சிட்டீங்களா மாமூ??.. அவங்களுக்கு உங்க மேல கோபம் எல்லாம் வரலையா??.. " என்றாள்

அவனோ " ஏன் வரல.. அவ இந்த ராவணனோட தங்கச்சியாச்சே.. குணத்துலயும் சரி.. உருவத்துலயும் சரி.. என்ன மாதிரியே இருப்பா.. அதுவும் என்ன பார்த்ததும் வச்சி செஞ்சி தான் விட்டா.. ப்பா அண்ணன் எனக்கே அந்த நிலைமைனா கண்டிப்பா அவ புருஷனை எல்லாம் தினமும் கதற வச்சி தான் அனுப்புவா... " என்றான் சிரித்த படி..

கணவனின் சிரிப்பை நிறைவாக கண்டவளோ " அப்பறம் ஏன் அவங்கள பிரிஞ்சி இருக்கீங்க??.. " என்றாள்

" இப்போதைக்கு அவ வெளி உலகத்துக்கு தெரியாம இருக்கறது தாண்டி நல்லது.. இன்னும் வெளி வர வேண்டிய உண்மை எல்லாம் வரட்டும்.. அப்புறம் பாரு இந்த மாமனோட ஆட்டத்தை.. " அவன் மீசையை முருக்கிய படி கூற...

ஆடவனின் அடர்ந்த கற்றை மீசையை இழுத்து முத்தம் வைத்தவளோ " ரொம்ப அழகா இருக்கீங்க... " என்றாள்

அவனோ " அப்படியா??... " என கேக்க

" ம்ம்.. முன்ன விட இப்ப தான் அழகா இருக்கீங்க.. அதுவும் இந்த தாடி.. தலை மூடி.. எல்லாம் எடுத்ததும் தான் என் புருஷன் பேரழகான மாறிட்டீங்க... " என்றாள் அவன் மேனி ரசத்தை ரசித்த படி..

ஆடவனின் மனமோ துணையின்றி வானில் பறக்கும் இறகு போல.. காற்றில் மிதக்க.. கண்ணில் வழியும் காதலும்.. பாவையின் நெருக்கத்தில் தோன்றும் மோகத்தையும் அவள் நிலை அறிந்து கட்டு படுத்தி கொண்டவனோ இதற்கு மேல் இருந்தாள் அவன் விரதம் கலைந்து விடும் என எண்ணியவனோ " போதும்.. சேட்டை எல்லாம்.. ஒழுங்கா போய் ரெஸ்ட் எடு.. பூனை குட்டி.. " என அவளை மெத்தையில் ஏந்தி சென்று படுக்க வைக்க..

பாவமாக முகத்தை சுருக்கி கொண்டவளோ " மறுபடியும் இந்த ரூம் குள்ளவே இப்படி பெட் ரெஸ்ட்ல தான் இருக்கணுமா??... " என்றாள் அயற்சியாக..

" ம்ம்.. கொஞ்ச நாள் டி.. இன்னும் உன் உடம்பு முழுசா சரி ஆகட்டும்.. அப்பறம் நாம ஊர் என்ன நாடு நாடா சுத்தி பாக்கலாம்.. இப்ப டேப்லெட்ஸ் போட்டுக்கோ.. " என அவளை கொஞ்சிய படி.. காலை வேலை அவள் உன்ன வேண்டிய மருந்துகளை எல்லாம் கொடுத்து விட்டு.. குளிக்க சென்றான்..

தொடரும்...
 

Author: Nithya
Article Title: முரடன் 🌼 27
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top