முரடனின் மகிழம் பூ அவள் 🌼
எபி 8
ராவணனின் வார்த்தைகளில் என்ன நினைத்தாளோ வேகமாக " இல்ல.. நான் அப்படி சொல்லல " என்றாள்
அவனோ " அப்பறம் வேற எப்படி ??.. என்ன என்னைய பார்த்த உனக்கு உடம்புக்கு அலையுறவன் மாதிரி இருக்கா... சொல்லு டி... " என்றான்
அவளோ " இல்ல... அது உங்களுக்கு நான் வேணாம் நீங்க நான் இதுவரை பார்த்த வங்க மாதிரி இல்ல ரொம்ப நல்லவரு அதனால உங்களுக்கு ஏத்த மாதிரி வேற பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க... நான் உங்க வாழ்க்கையில குறுக்கே வர மாட்டேன்... " என கூற
அவனோ எதோ புரியாத மொழியை கேட்பது போல " என்ன சொல்ற நான் நல்லவனா... " என ஏளனமாக சிரித்து " நான் ராவணன் டி யாருகும் நல்லவன் கிடையாது.. இப்ப என்ன உனக்கு பதிலா நான் வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கணுமா சரி... அப்ப நீ என்ன பண்ண போற... " என்றான்
மகிழினியோ பின் விளைவை யோசிக்காமல் வார்த்தைகளை அம்பு போல ஆடவனின் மேல் தொடுக்க... அதில் கோபமான ராவணனோ " ஏய்... இனிமே உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல இந்த பொண்டாட்டி... போண்டா... டீன்னு கிட்ட வந்த மவளே உன்ன நானே கொன்னுடுவேன்... " என விரல் நீட்டி கர்ஜித்து விட்டு வெளியே சென்று விட்டான்..
அவளும் ஆடவன் சென்ற திசையை கண்டு அழுத படி அப்படியே உறங்கி போனாள்..
மறுநாள் காலை எழுந்த அவளோ வழக்கம் போல வீட்டு வாசலில் கோலம் போட... பக்கத்து வீட்டில் இருந்த வாணியோ வேண்டும் என்றே மகிழினி முன்னாள் அவள் கணவன் ஆகாஷ் கன்னத்தில் முத்தமிட்டு அனுப்பி வைத்தாள்.. அதை கண்ட செண்பகமோ " என்னடி இப்படி வாசல்ல நின்னு அவன் கிட்ட ஒட்டி ஒரசி கிட்டு இருக்க... எவளாவது பார்த்து கண்ணு வைக்க போற.. " என்றார்
வாணியோ " இல்ல சித்தி இங்க சில பெரு எல்லாம் புருஷான கைக்குள்ள வச்சிக்க தெரியாம ஊர் மேய விட்டு வேடிக்கை பாக்குறாங்க... ஆனா என் புருஷன் அப்படி இல்ல எப்பவும் நான் மட்டும் தான் அவர் கண்ணனுக்கு தெரியவேன்.. " என பெருமையாக கூறி உள்ளே சென்றாள்
மகிழினியோ தன்னை தான் குத்தி காட்டி விட்டு போகிறார்கள் என தெரிந்தும் அதை கண்டு கொள்ளாமல் உள்ளே சென்று விட்டாள்..
எப்போதும் காலை உணவை உண்டு விட்டு செல்லும் ராவணனோ இன்று உண்ணாமல் வெளியே சென்று விட அதை கண்ட அப்பத்தாவோ " என்ன மகிழினி எதுக்கு அவன் சாப்பிடாம இப்படி அவசரமா போறான்... உன் கிட்ட எதாவது சொன்னா... " என்றார் கேள்வியாக
அவளோ " இல்ல அப்பத்தா அவர் ஒன்னும் சொல்லல... எதோ முக்கியமான வேலையா இருக்கும் அதான் சீக்கிரமே கிளம்பிட்டாங்க போல... " என்றாள்
அவரோ " சரி, நீ கிளம்பி இரு சாயங்காலமா சந்தைக்கு போய்ட்டு அப்படியே கோவிலுக்கும் போகலாம்... " என்றார்
அவளும் " சரிங்க அப்பத்தா... " என உள்ளே இருக்கும் வேலைகளை எல்லாம் பார்க்க ஆரம்பித்தாள்...
மாலை போல இருவரும் சந்தைக்கு செல்ல அங்கே ராக்காயி பாட்டியும் வந்து இருந்தார்... ரக்காயியோ " என்ன பார்வதி இது தான் உன் பேரன் பொஞ்சாதியா... பாக்க மஹாலஷ்மி மாதிரி இருக்கா... " என்றார் உடன் இருந்த மகிழினியை கண்டு..
அப்பத்தாவோ " ஆமா ரக்காயி, இது என் பேத்தி பெரு மகிழினியா... " என்றார்
ரக்காயியோ " அப்பறம் எங்க இந்த பக்கம்... " என்றார்
" ம்ம்... சந்தைய விலைக்கு வாங்க வந்தேன்... கேள்விய பாரு வீட்ல ஜமான் எல்லாம் தீர்ந்து போச்சு அதான் வாங்கிட்டு போலாம்னு வந்தேன்... " என கூற
அதை கேட்ட அவரோ " நீ வாங்குனாலும் வாங்குற ஆளு தான்... சரி அந்த மேட்டு தெரு கோவில் திருவிழா வருதாமே... அப்பறம் ஊருக்கு எதோ புதுசா கம்பெனி வர போகுதாம் என இருவரும் ஊர் கதை எல்லாம் பேசிய படி மளிகை சாமான், காய்கறி என வாங்கி கொள்ள
ரக்காயியோ " சரி புள்ள நான் புறப்படுறேன் நேரம் ஆச்சு... " என விடை பெற்று சென்றார்.
---
கோவிலுக்கு சென்ற இருவரும் சாமி தரிசனம் செய்து விட்டு அங்கே உள்ள மண்டபத்தில் அமர மகிழினியோ அங்கே ஒரு தந்தை அவர் மகளுக்கு பிரசாதத்தை பொறுமையாக ஊதி ஆற வைத்து ஊட்டி விடுவதை கண்ட அவள் நினைவோ அன்று ராவணன் அவளுக்கு இதே போல உணவை ஊட்டி விட்டத்தை எண்ணி பார்த்தது...
இரண்டு நிகழ்ச்சியிலும் மறைந்து இருப்பது என்னவோ தூய்மையான அன்பு மட்டுமே...
பெண் அவள் நினைவோ அவள் முரடனை சுற்றியே இருக்க... அருகில் இருந்த அப்பத்தாவின் அழைப்பு கூட பெண் அவளின் செவியை எட்ட வில்லை... அவரோ சட்டென அவளின் தோளை பிடித்து உழுக்க அதில் சுய நினைவு வந்த பெண் அவளோ " என்னாச்சி அப்பத்தா... " என்றாள் பதட்டமாக
அவரோ சிரித்து கொண்டே " ஒன்னும் இல்ல தாயீ.. இருட்ட போகுது வா வீட்டுக்கு போகலாம்... " என இருவரும் பேசிய படியே வீட்டிற்கு சென்றனர்..
இரவு அறையில் படுத்து கொண்டு இருந்த மகிழினியோ உறக்கம் வராமல் வாசலை பார்த்து கொண்டே இருந்தாள்... நேரம் தான் கடந்ததே தவிர அவள் தேடலுக்கு சொந்தக்காரனோ இன்னும் வீடு வந்து சேரவில்லை...
அவளும் காத்து இருந்து தூக்கம் கண்ணை கட்ட அப்படியே உறங்கி போனாள்... மறுநாளும் இதே கதை தொடர அவள் மனமோ அவளின் முரடனை எண்ணி வேதனை கொள்ள தொடங்கியது...
இப்படியே ஒரு வாரம் செல்ல... அன்று இரவு உறக்கம் வராமல் மெத்தையில் புரண்டு கொண்டு இருந்தவளின் நினைவு மொத்தமும் கடைசியாக ஆடவனோடு சண்டை போட்ட தருணமே வந்து சென்றது... என்ன மாதிரியான உணர்வு இது காதலா?? இல்லை ஈர்ப்பா?? தாலி கட்டி விட்டான் என்பதினால் உடனே ஒருவரை பிடித்து விடுமா என்ன??
எப்படி அந்த முரடனுக்கு என்னை பிடித்தது?? இங்கு நான் புலம்புவதை போல அங்கும் அவர் என்னை பற்றி நினைத்து கொள்வாரா... என பல விதமான கேள்விகள் மூளையை போட்டு குடைய... அந்த அறைக்குள் இருக்கவே மூச்சு முட்டிய உணர்வு... எங்கு பார்த்தாலும் அவன் பிம்பமே தோன்ற... கண்ணை மூடினாலும் அவள் முரடனின் காட்டு குரலே செவியை தீண்டி சென்றது...
சற்று வெளியே சென்றால் கொஞ்சம் நன்றாக இருக்குமேன வீட்டின் கொள்ளை பக்க கதவை திறந்து துணி துவைக்கும் கல்லின் மேல் அமர்ந்து கொண்டாள்... சுற்றி முற்றி வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தவளின் நினைவோ இன்று காலை நடந்த சம்பவத்திற்கு சென்றது...
காலை வழக்கம் போல சமைத்து விட்டு பின் பக்கமாக அமர்ந்து பாத்திரம் எல்லாம் கழுவி கொண்டு இருந்தாள்.. அப்போது பக்கத்து வீட்டில் இருந்த தேவகியோ கீரையை கிள்ளிய படி " என்ன அண்ணி பக்கத்து வீட்ல ஒருத்தன் கல்யாணம் பண்ணா திருந்தி வீட்டோட இருப்பான்னு அந்த தாய் கிழவி சொல்லுச்சு... இப்ப எங்க துரைய ஆளவே காணோம்... " என்றார் நக்கலாக
அதை கேட்ட செண்பகமோ " இந்நேரம் எந்த ஆட்டக்காரி வீட்ல இருக்கனோ... யாருக்கு தெரியும் அண்ணி... அவன் எல்லாம் திருந்துற ஜென்மமா இருந்த எப்பவோ திருந்தி இருப்பான்... " என கூற
தேவகியோ " ஆமா ஆமா அது திருந்தாத ஜென்மம் இப்படி ஒருத்திய கட்டிட்டு வந்து வீட்ல வச்சிக்கிட்டு ஒரு வாரமா எவ வீட்ல எப்படி இருக்கானோ... " என்றார்
செண்பகமோ " அட என்ன அண்ணி நீங்க வேற வீட்டுக்கு வந்தவ ஒழுங்கா அவன திருத்தமா இப்படி ஊரு மேய விட்டு நிம்மதியா வீட்ல இருக்கா போல... அதுக்கு தான் சொல்றது தகுதி தராதரம் பார்த்து பொண்ணு எடுத்து இருக்கனும் இப்படி ஒன்னும் இல்லாத வீட்ல இருந்து பொண்ணு எடுத்தா வேற எப்படி இருக்கும்...
அவளே ஒரு ராசி கெட்டவ இதுல இங்க வந்தும் மட்டும் எப்படி இருப்ப... அதான் அவ பெரியப்பானே இவள தொரத்தி விட்டா போதும்னு அந்த முரடனுக்கு கட்டி வச்சிட்டாரு " என வார்த்தைகளை விஷ அம்பு போல எரிந்து கொண்டு இருந்தார்..
இதை எல்லாம் எண்ணி கொண்டு இருந்த மகிழினியோ கண்களில் நீர் வழிய என்ன பிடிக்காம தான் விட்டுட்டு போய்ட்டீங்களா மாமூ??.. அன்னக்கி எதோ குழப்பத்துல வார்த்தைய விட்டுட்டேன்... ரெண்டு அடி போட்டு சொல்லி இருக்கலாமே... ஏன் இப்படி நீங்களும் பாசத்தை காட்டி தனியா விட்டுட்டு போனீங்க... " என மனதோடு புலம்பி கொண்டு இருந்தாள்..
அப்போது தூரத்தில் பக்கத்து வீட்டு வழியாக யாரோ வருவதை போல தெரிய அவளோ பயந்த முகத்தோடு இருளில் மங்களாக தெரியும் கருப்பு உருவத்தையே பார்த்து கொண்டு இருந்தாள்.. அவள் மனமோ ஒரு வேலை அந்த சேதுவாக இருக்குமோ என அச்சம் கொள்ள...
பெண் அவள் நினைத்தது போலவே அங்கே வந்த உருவத்தை கண்டு அதிர்ந்து தான் போனாள்...
அங்கே வந்தது யார்??...
தொடரும்...

Author: Nithya
Article Title: முரடன் 🌼 8
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.