Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
65
Reaction score
8
Points
8
முரடனின் மகிழம் பூ அவள் 🌼

எபி 16

ராவணனோ " என்னடி விளையாடுறியா கொஞ்ச நேரம் முன்னாடி தான் உங்க பழைய வாழ்க்கைய பத்தி சொல்லுங்கன்னு தொந்தரவு பண்ண.. இப்ப என்ன ஒண்ணுமே நடக்காத மாதிரி சாப்பிட சொல்ற...

சரி நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு உனக்கு என் மேல சந்தேகம் இருக்கா இல்ல... " என அதற்கு மேல் வார்த்தை வராமல் பெண் அவள் முகத்தை காண....


அவளோ " அதான் ஏற்கனவே சொன்னேனே உங்கள நம்புறேன்னு அப்பறம் இதுல புதுசா சொல்ல என்ன இருக்கு.. நீங்க ராவணனா இருந்தாலும் குணத்துல ராமன்னு எனக்கு தெரியும்.. எனக்கு நீங்க எப்படி இருந்தாலும் பிடிக்கும்... அதுவும் இந்த முரட்டு மாமூ மேல எனக்கு கொள்ளை பிரியம் காதல் எல்லாம் இருக்கு...

என் மாமூ எனக்கு கிடைக்க தான் இப்படி எல்லாம் நடந்து இருக்கோ என்னவோ?? இனிமே பழசை பத்தி பேச வேணாம்.. " என அழகாக கண்களை சிமிட்டி கூற

பெண் அவளை இருக்கி அணைத்து கொண்ட ஆடவனோ " இந்த ஒன்றரை மாசத்துல உனக்கு என் மேல எப்படிடி நம்பிக்கை வந்துச்சு... " என்றான்

அவளோ " என் அப்பா போனதுக்கு அப்பறம் என்ன யாரும் சாப்டியான்னு கூட கேட்டது இல்ல.. அதுவும் என்ன எதோ தீண்ட தகாத ஆள் மாதிரி தான் பாப்பாங்க.. ஆனா நீங்க தான் என்னையும் சக மனுசியா மதிச்சு என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தீங்க..

சத்தியமா நீங்க தப்பு பண்ணி இருப்பிங்கன்னு எனக்கு தோணல.. இதுவரை எத்தன தடவ நாம தனியா இருந்தோம் ஆனா ஒரு வாட்டி கூட என்கிட்ட நீங்க தப்பா நடந்து கிட்டதே இல்லையே.. அப்பறம் எப்படி நீங்க மத்த பொண்ணுங்கள எல்லாம் தப்பான கண்ணோட்டத்துல பார்த்து இருப்பிங்க...

நீங்க ரொம்ப நல்லவர் அதனால எதையும் யோசிக்காதிங்க... " என்றாள்

அவனோ " ஏண்டி பத்து வருஷத்துக்கு முன்னாடியே என் வாழ்க்கையில நீ வரல.. " என்றான் அவள் கழுத்தில் முகம் புதைத்து இத்தனை நாள் சோகத்தை எல்லாம் கண்ணீராக வெளியே இறக்கி வைத்த படி

அவளோ கழுத்தில் சூடான நீர் இரங்குவதை உணர்ந்து " என்ன ராவணா அழறிய... " என்றாள் அவன் முடியை வருடிய படி

" ஏய்!!... பெயரை சொன்ன வாய கடிச்சுடுவச்சிடுவேண்டி... அமைதியா இரு ராட்சசி.. " என்றான் கரகரத்த குரலில்...

அவளோ அப்போதும் அடங்காமல் அன்று போன்யில் கேட்ட பாடலை பாட ஆரம்பிக்க...

🎶 உனக்காக வருவேன்…
உயிா்கூட தருவேன்…
நீ ஒரு பாா்வை பாா்த்திடு போதும்…
உனக்கு எதையும் நான் செய்வேன்🎶

அவனோ " ஏய்!!... " என கத்த அவள் பாட பாட அவனுக்கு தான் மூச்சு முட்டியது.. உடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில்.. அவளை வலிக்கும் அளவு இரும்பாக இறுக்கினான்..

🎶ஞாபகம் முழுதும் நீ வந்து நிறைய…
உனது நிலையென இருப்பேன்…
நீ யாரா இருந்தாலும்…
உன்னை ஏற்றுக்கொள்கிறேன்…
எனைப் பிாிந்தால் அந்த நொடியே…
நான் இறந்துபோகிறேன்🎶

இத்தனை நாட்களாக எங்கே இருந்தாள் இவள்.. நான் தனிமையில் தவித்த போது.. அழுத போது.. ஆறுதல் தேடிய போது.. எனக்காகவே ஒருத்தி வருவாள்.. என்னை நம்புவாள்.. தாயாக மடி சாய்த்து ஆறுதல் கூறுவாள்.. தோழியாக என்னை அரவணைப்பாள்..

காதலியாக என்னை அவள் அசுர காதலில் மூழ்கி மூச்சு முட்ட வைப்பாள்.. என்று யாரேனும் கூறி இருக்க கூடாதா... நம்பிக்கையோடு என் தேவதைக்காக காத்து இருப்பேனே..


ஆடவனின் வேகமாக மூச்சே அவன் உணர்ச்சி வசப்படுகிறான் என்பதை காட்ட மெதுவாக அவன் முதுகை நீவி விட்டு அமைதி படுத்தினாள்..

" இப்பவும் என்ன கொல்றடி ராட்சசி.. ஸ்வீட் பெயின்.. தாங்க முடியலடி.. " அவன் தலையை நிமிர்த்தவே இல்லை..

சில கணங்கள் பேர் அமைதி.. சட்டென அவளை விலகிய ராவணனோ அவளை நன்றாக அமர வைத்து அவள் மடியில் முகம் புதைத்து படுத்து கொண்டான்.. பெண் அவளோ மென்மையாக அவன் தலையை வருடி விட சுமைகளை இறக்கி வைத்த நிம்மதியில் சுகமாக உறங்க ஆரம்பித்தான் ராவணன்..

யாருக்கும் அடங்காத ராவணனோ அவன் பூனைக்குட்டியின் தூய்மையான அன்பில் குழந்தையாக மாறி போனான்..


---

மாலை போல வீடு வந்த அப்பத்தா கண்டதோ மனைவியை அமர வைத்து பூக்களை தொடுத்து கொண்டு இருக்கும் ராவணனை தான்.. அவரோ சிரித்த படி " டேய்! ராவணா என்ன பண்ற " என்றார்

அவனோ " பார்த்தா தெரியல அவ பூ வேணும்னு கேட்டா அதான் அவளுக்காக பூ கட்டிட்டு இருக்கேன்.. ஆமா நீ எங்க போற அடிக்கடி உன்ன வீட்ல பாக்கவே முடியுறது இல்ல.. " என்றான்

அவரோ " எவ்வளவு நேரம் தான் வீட்டுக்குலயே இருக்குறது அதான் கொஞ்சம் நேரம் கோவில், தோப்பு, வயக்காடுன்னு சுத்தி பார்த்துட்டு வேலை எல்லாம் சரியா நடக்குதான்னு பார்த்தேன்..

ஆமா, ஊருக்குள்ள எதோ புதுசா கம்பெனி வர போகுதாமே உனக்கு தெரியுமா??... " என்றார் கேள்வியாக அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு

அவனோ " தெரியும் உன்ற புள்ளை தான் அங்க திறப்பு விழா பண்ணி வைக்க போறாராம்... நம்ப நிலத்த கூட அந்த கம்பெனி காரன் கிட்ட தான் வித்து இருகாங்க.. " என்றான் வெறுமையாக

அப்பத்தாவோ " எதுக்கு டா இப்படி சோறு போடுற நிலத்தை போய் கம்பெனி கட்ட வித்து இருக்கான்.. இதுலாம் எங்க போய் முடிய போகுதோ எனக்கு தெரியல... " என்றார்

அவனோ " எதுக்கு இப்ப சலம்பிகிட்டு இருக்க.. நாம போய் சொன்னதும் அவங்க அப்படியே கேப்பாங்களா என்ன?? விடு பட்டாதான் சிலருக்கு புத்தி வரும்.. ஆமா இந்த வருஷம் திதிக்கும் என்ன வாங்கிட்டு வரணும்னு சொல்லு நான் நாளைக்கி வாங்கிட்டு வரேன்... " என்றான்

அவரோ " வழக்கம் போல தான் உன்ற தாத்தாக்கு பிடிச்ச பலகாரம், பழம், புது துணி, பூமாலை, சமையளுக்கு காய்கறி... அப்பறம் போகும் போது உன் பொண்டாட்டியையும் கூட்டிட்டு போ... அவளும் வந்த நாளா வீட்டுக்குள்ளயே அடைஞ்சி கிடக்குற.. " என்றார்

சரி, நாளைக்கு ஒரு முறை நியாபகமா சொல்லு... என்றான்

---

இங்கு ஆகாஷ் அறையில்...


வாணி ஜன்னல் வழியே வானில் தெரியும் நிலவை பார்த்து கொண்டு இருக்க... " பேபி... " என அவளை பின் இருந்து அணைத்து முத்தமிட்டான் ஆகாஷ்..

" பச்! தள்ளி போ அக்கி... பிரியட்ஸ்... " என்றாள் அவனை விலக்கிய படி

உடனே அவன் முகம் கோணிய படி.. " வந்ததும் சொல்லி தொலைக்க வேண்டியதான டி.. நான் எக்ஸ்பெக்ட் பண்ணுவேன்னு உனக்கு தெரியாத.. " என எரிந்து விழ..

சுர்ரென கோபம் மண்டைக்கு எற விருட்டேனா அவனை திரும்பி பார்த்தவளோ " சோ உனக்கு உன் சந்தோசம் தான் முக்கியம் இல்ல.. என்னை பத்தி உனக்கு கவலை இல்ல.. என் வலி உனக்கு ஒரு பிரச்சனையே இல்ல.. அப்படித்தானே.. என்றாள் ஆத்திரத்துடன்..

உன்ன பத்தி கவலை பட என்ன இருக்கு.. வீட்ல உக்காந்து மூணு வேல நல்லா மூக்கு பிடிக்க தின்றல அப்பறம் என்ன உன்ன பத்தி கவலை பட இருக்கு.. உன்னால எனக்கு நிம்மதி இருக்காடி.. வெளிய போனாலே என்னப்பா கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆகுது விசேஷம் இல்லையான்னு பாக்குறவன் எல்லாம் கேக்குறான்..

இதுல இந்த அம்மா வேற ஆவுனா குழலியா கட்டிக்கோ கட்டிக்கோன்னு உயிர வாங்குது.. உன்ன காதலிச்சு தொலச்சதால சரி நம்ப வேதனைய காட்ட கூடாதுன்னு உன்ன தேடி வந்தா நீயும் ஏண்டி என்ன கொல்ற.. " என கத்த

அவளோ கோபமாக " கடைசியா ஹாஸ்பிடல் போன அப்ப உனக்கு தான பிரச்சனை இருக்குன்னு சொன்னாங்க.. அப்பறம் எதுக்கு என்ன குத்தி காட்டி பேசுற அக்கி.. நான் என்னைக்காவது உன்ன அப்படி பேசி இருக்கேனா.. " என்றாள்

அவனோ " ஏய்... என்ன வாய் நீளுது.. சும்மா பிரியட்ஸ் காமிச்சு சீன் போடாம போய் தூங்கு.. என் தலையெழுத்து நான் அனுபவிக்கணும்னு இருக்கு.. நான் அனுபவிக்குறேன் போடி.. " என வெளியே சென்று விட்டான்..

திருமணம் ஆனா போது யோசிக்காத வாணி இப்போது தான் யோசிக்கிறாள்.. அதுவும் இந்த ஆறு மாதமாக இப்படி தான் எதற்கு எடுத்தாலும் சண்டை... எப்போது பார்த்தாலும் குழந்தை தான்... வேறு பேச்சே இல்லை..

அப்போது நான் வெறும் உடல் தேவைக்கு மட்டும் தான.. அப்போது என் மனம்.. என் உணர்வு.. என் காதல்.. எல்லாமே வெறும் உணர்ச்சியற்ற பொருளா...

தொடரும்...
 

Author: Nithya
Article Title: முரடன் 🌼16
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top