Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
37
Reaction score
8
Points
8
அத்தியாயம் 25


அந்த அறைக்குள் நுழைந்தவுடன் ரதியின் இருதயம் துடிப்போடு கலங்கி விட்டது. மெல்ல கதவை பூட்டிக் கொண்டு உள்ளே சென்றாள். அறையின் சுவர்கள் அனைத்தும் வெள்ளை நிறத்தில் இருந்தாலும் அதன் நடுவில் இருந்த அந்த படுக்கை தான் அவளின் பார்வையை கட்டிப்போட்டது.

படுக்கையில் நீண்ட நாட்களாக மருத்துவ சாதனங்களின் உதவியோடு உயிர் வாழ போராடிக் கொண்டிருந்த அந்த நிழல்— ருத்ரதேவன்.

அவனின் முகம் முழுதும் தாடியும் உடல் மெலிந்து போனாலும், கண்களின் ஓரம் இன்னும் பழைய காதலின் பாசத்தை தாங்கியது போலவே இருந்தது. அவனின் மூச்சுகள் ஆக்ஸிஜன் குழாயின் உதவியோடு நடந்துகொண்டிருந்தன. அவனைப் பார்த்தவுடன் ரதியின் கண்களில் நீர்த்துளிகள் துளிர்த்தன.

மெல்ல அவள் வயிரை பிடித்து கொண்டு நடந்து தேவ் அருகில் சென்றாள். தேவ்வின் ஒரு கையை எடுத்து அவள் வயிற்றின் மீது வைத்து " தேவ், நான் பேசுறது உனக்கு கேக்குதா, பாரு உன் பொண்ணு உன்ன மாதிரியே பிடிவாதமா என் கிட்ட பேச கூடாதுனு இருக்க, ஏன்டா இப்படி ரெண்டு பெரும் சேர்ந்து என்ன கொஞ்சம் கொஞ்சமா கொல்றிங்க,

முடியல தேவ் ப்ளீஸ் திரும்பி வந்துடுடா தேவ் மாமா, உன் அம்மு பாப்பா பாவம் ல எப்பவும் என் கூடவே இருப்பேன்னு சொன்ன இப்ப ஏன்டா தனியா விட்டு போன, எனக்கு நீங்க ரெண்டு பெரும் வேணும், தேவ் " என அவள் கண்களில் கண்ணீரோடு இத்தனை நாள் வேதனையும் காலையில் டாக்டர் கூறியதும் சேர்த்து அழுது புலம்ப அதை துடைக்க வேண்டியவனோ அசைவின்றி கிடந்தான்.


பெண் அவளோ கண்ணீரோடு " தேவ் நீ இல்லாம இந்த உலகம் எனக்கு இல்ல. நீ பிழைக்கணும். நம்ம பசங்களோட உன் கைய பிடிச்சிகிட்டே நான் வாழனும்," எனச் சொல்லி அவனின் நெற்றியில் முத்தமிட்டாள். அப்போது அவள் வயிற்றில் மெல்லிய உணர்வு தோன்ற வயிற்றை பிடித்து கொண்டாள்.

தேவ்வின் கை மேல் தன் கையை வைத்து வயிரோடு அணைத்து பிடித்து இருந்தாள் ரதி. உள்ளே இருந்த அவளின் செல்ல இளவரசி தன் இருப்பை உணர்த்தி உதைத்து காண்பிக்க ரதியோ " தேவ், உன் பொண்ணு உதைக்குற " என அவள் காதல் தேவனிடம் கூறினாள். அங்கே தேவ் கண்களில் நீர் வழிந்து அவன் உடலியும் மெல்லிய அசைவு தெரிந்தது. கோமாவில் இருந்த தந்தையவனும் அவன் பெண்ணரசியின் இருப்பை உணர்ந்தான் போல அவனும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தான்.

அதே நேரத்தில் கதவு திடீரென திறந்தது. உள்ளே வந்த டாக்டர்கள் குழு, ரதியை வெளியே அனுப்பினார்கள்.

அவள் நடந்து வெளியே செல்லும் போதும் அவன் முகத்தை விட்டுப் பார்வையை மாற்ற முடியவில்லை.

அவளின் உள்ளத்தில் மட்டும் ஒரே வாக்குறுதி—
தேவ் திரும்ப வருவான். நிச்சயமாக.

அவள் வெளியே வந்ததும் மருத்துவமனை முற்றத்தில் மெல்லிய காற்று அடித்தது. அது கூட தேவனின் உயிர் மூச்சாய் அவளைத் தழுவியது போல உணர்ந்தாள்.


மருத்துவமனையின் நீண்ட வழிச்சாலையில் மெதுவாக நடந்து கொண்டிருந்த ரதியின் மனம் ஒரு பக்கம் கவலையாலும், இன்னொரு பக்கம் நம்பிக்கையாலும் இரண்டாக பிளந்தது.

அவளது கண்களில் இன்னும் தேவனின் பலவீனமான முகம் மிதந்துகொண்டே இருந்தது.
“தேவ் … உனக்காக நான் எதையும் செய்யத் தயாரா இருக்கேன்,” என அவள் உள்ளத்திலேயே உறுதி கொண்டாள்.

அவள் வெளியே வந்து அமர்ந்திருந்த நாற்காலியில் சற்றே சாய்ந்தாள். அப்போது பக்கத்தில் இருந்த முதன்மை மருத்துவர் ரதியிடம் நெருங்கினார்.

" மேடம் … ஒரு விஷயம் உன்னிடம் சொல்லணும். தேவ் உயிரோட இருக்குறது இப்போ முழுக்க முழுக்க அவனோட மனசாட்சி முயற்சி தான். மருந்து, சிகிச்சை எல்லாம் நாங்க பண்ணிட்டு தான் இருக்கோம். ஆனா ஒரு அதிசயம் நடந்தா மட்டும்தான் அவன் முழுசா குணமாக முடியும்," என்றார்.

ரதி கண்களை விரித்து பார்த்தாள்.
"அதிசயம்…? என்ன சொல்லுறீங்க டாக்டர்?" என எட்டு மாதம் கழித்து அவள் காதில் விழுந்த தேன் துளி போன்ற வார்த்தை அல்லவா அது..

டாக்டர் சற்று தயக்கத்தோடு,
"அவனோட உயிர் நரம்பு ஒரே ஒரு விஷயத்துக்குத்தான் பிடிச்சு கிடக்குது. அவனுக்கு அவன் மிகவும் நேசிக்கும் நெருங்கியவரின் உறுதி, நம்பிக்கை, காதல் தான் பெரிய மருந்து. உன்னால்தான் அது சாத்தியமாகும், ரதி," என்றார்.

---

இரவு 11 மணி…

மருத்துவமனை மாடித்தளத்தில் நின்று கொண்டிருந்த ரதி. மேலே வானம் கரிய மேகங்களால் மூடப்பட்டிருந்தது. அங்கேயும் அவள் இதய வேதனை பிரதிபலித்தது போலிருந்தது.

அவள் கையில் பிடித்திருந்தது ஒரு சிறிய தாலி கொடி முகப்பில் ஆர். ஆர். என பொறிக்க பட்டு இருந்தது. —தேவ் அவளுக்குக் கட்டித் தந்த நினைவுச் சின்னம். அதை மார்பில் அணைத்துக் கொண்டு அவள் வயிற்றை பிடித்த படி நின்று கொண்டு இருந்தாள்.


பெண் அவளின் மனமோ ' இந்த மறுபடியும் என் கழுத்துல போட்டு எப்பவும் உன் கூடவே இருப்பான்னு சொன்னால இப்ப எங்க டா போன தேவ் ' என புலம்ப அதை கலைக்கும் வித மாக அவளின் போன் அடித்தது.


அந்த நேரத்தில் பல்லவி அழைத்தாள்.
"ரதி… எங்க இருக்க? வீட்டிலிருந்து பாட்டிமா தாத்தா எல்லாம் உன்ன கேட்டுகிட்டே இருகாங்க , எப்ப வீட்டுக்கு வர " என்றாள்.

ரதி மெதுவாக சிரித்து,
"கவிமா… எனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் வேணும். நீ வீரை பாத்துக்க. நான் சீக்கிரமே வர்றேன்," என்றாள்.

பல்லவி ஏதோ சொல்லப்போகும் முன், ரதி அழைப்பை நிறுத்திவிட்டாள்.


அதே நேரத்தில்… மருத்துவமனை ஐ சி யூ -வில் திடீரென அலாரம் ஒலித்தது. சிவப்பு விளக்குகள் மின்னின.
"கோடு ப்ளூ!" என்று ஓடினார்கள் செவிலியர்கள்.

ரதி பதறி ஓடி உள்ளே செல்வதற்கு முன் மருத்துவர் அவளை தடுத்தார்.
"ரதி! பயப்படாதே… நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்!"

ஆனால், அவளின் இதயம் அதிர்ந்து கொண்டே இருந்தது.

அடுத்த சில நிமிடங்கள் அவளது வாழ்க்கையே தீர்மானிக்கும் கடிகாரம் போல நகர்ந்தது…

தேவ்… உயிரோடு திரும்புவானா?
அல்லது அவளது உலகமே சிதறி போகுமா?

தொடரும்....
 
Top