Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
New member
Messages
6
Reaction score
4
Points
3
அத்தியாயம் 3


ரதி அலுவலகத்தினுள் நுழையும் போது அங்கே இருந்த வீரராகவனை பார்த்து அவள் கோபமாக வெளியே போங்க என கத்த ஆரம்பித்தாள். அவள் பின்னால் விடயம் அறிந்து வந்த ராகவனோ அவளிடம் அமைதியாக இருக்கும்படி கூறி அவர்கள் நால்வருடன் ஆர். எம். பேலஸ் நோக்கி மகிழுந்தில் சென்றான்.

அவர்கள் அந்த மாளிகையில் நுழையும் போது வரவேற்றது இரண்டு கல்லறைகள் தான். அதில் ராஜதேவ பாண்டியன் மற்றும் மலர்க்கொடியி னியாள் என பெயர் போடப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே ஹாலில் பெரிய அளவில் இரண்டு படங்களுக்கு சந்தன மாலை போடப்பட்டு இருந்தது. ஒன்று இளம் தம்பதிகளின் படமும் இரண்டாவது படம் பார்க்க ரதியை போல ஒரு பெண்ணின் படமும் இருந்தது. Screenshot_20250702_154452_Google.jpg
ராஜதேவ பாண்டியன் மலர்க்கொடியினியாள்

இதை பார்த்த வீராவின் நினைவு பின்னோக்கி சென்றது. அந்த படத்தில் உள்ள பெண் நிலவொளியினியாள். பார்க்க நிலவு போல பிரகாசமான முகமும், அமைதியான குணமும் கொண்டவள். ரதியின் சித்தி. மலர்க்கொடியின் தங்கை. வீரராகவன் மற்றும் மீனாட்சியின் இளைய மகள்.

ரதி பிறந்தவுடன் அவள் அம்மா மலர்க்கொடி இறந்து விட அன்று முதல் ரதியை நிலா தன் வளர்த்தாள். அவள் தன் ரதிமலர் என்ற பெயரை வைத்தாள். ரதியின் பதினாறு வயதில் அவள் தந்தை ராஜதேவ பாண்டியனும் இறந்து விட அதன் பின் நிலவே ரதிக்கு அனைத்துமாகி போனாள்.

ரதியும் நிலவும் பார்க்க இரட்டை சகோதரிகள் போலவே இருப்பர். நிலா சந்திரதேவன் என்பவரை காதலித்தாள். அவர்களின் காதலுக்கு வீரராகவன் சம்மதிக்கவில்லை. பின் சில மாதங்களில் சந்திரதேவன் விபத்து ஒன்றில் இறந்து விட அதற்கு காரணம் வீரா என நினைத்து அவரிடன் பேசுவதை தவிர்த்தாள். பின் தவறான தூக்க மருத்துகளை உபயோகம் படுத்தியாதால் புற்று நோய் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் முன் இறந்து விட்டாள்.

இறக்கும் முன் ரதியிடம் வீரா மற்றும் மீனாட்சியை பார்த்துக்கொள்ளும் படி கூறி அவள் உயிரை துறந்தாள். ரதியும் நிலாவை தன் அன்னை போலவே நினைத்து வளர்ந்ததாள் நிலா கூறியப்படி வீரா மற்றும் மீனாட்சியை நன்றாக பார்த்து கொள்கிறாள் ஆனால் வீரா விடம் மட்டும் கோபமாக இருக்கிறாள். காரணம் கேட்டால் நிலவின் சாவிற்கு அவர் தான் காரணமாம் அதனால் அப்படி இருக்கிறலாம் மற்றவரும் அவர்ககளை அப்படியே விட்டு விட்டனர்.

Screenshot_20250702_153836_Google.jpg
நிலவொளியினியாள் ரதிமலர்
நிகழ் காலம்..

ரதி குழந்தையோடு அங்கே இருந்த சோபாவில் அமர்கிறாள் அவள் அருகில் ராகவனும் எதிரே ருத்ரனும் வீரவும் அமர்ந்து இருந்தனர். ருத்ரன் சற்று வித்தியாசமாக அனைத்தையும் பார்க்கிறான்.இவர்களுக்காக உள்ளே இருந்து மீனாட்சி பழ ரசத்துடன் வந்தார்.
அனைவரும் அந்த பலரசத்தை பருகினர் பின் மீனாட்சி ரதியிடம் இரண்டு வருடமாக நிலாவிற்கு படையல் போடவில்லை அதனால் நீ ஊருக்கு வந்து படையல் போடா வேண்டும் என கேட்கிறார்.


ரதியும் அவர் வார்த்தைக்கு மறுப்பு தெரிவிக்கமாள் சம்மதிக்கிறாள்.
மறுநாள் அனைவரும் ஆந்திர மாநிலத்தில் உள்ள மச்சுப்பள்ளி என்ற ஊருக்கு செல்கின்றனர். இவர்களுடன் ருத்ரனும் காரியத்தைரிசி என்ற முறையில் செல்கின்றான். வீட்டை அடந்ததும் அனைவரும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று குளித்து விட்டு வந்தனர்.


பின் அனைவரும் இரவு உணவினை உண்டு பயண களைப்பின் காரணமாக உறங்கி விட்டனர். ரதியும் குழந்தையை ராகவனிடம் கொடுத்துவிட்டு வீட்டின் பின் பக்கம் உள்ள தோட்டம் நோக்கி சென்றாள். அங்கே தான் நிலாவின் கல்லறை இருந்தது. அங்கே சென்று கல்லறையின் மேல் தலை சாய்த்து படுத்துக்கொண்டாள். அவள் கண்கள் நிலாவுக்காக கண்ணீர் சிந்தியது.

இதை தொலைவில் இருந்து உறக்கம் வராமல் தவித்த ருத்தரனும் அறையில் இருந்து ராகவனும் பார்த்து கொண்டு தான் இருந்தனர். மறுநாள் காலை மீனாட்சி வந்து தன் ரதியை எழுப்பி வீட்டுக்கு போக சொன்னார். அப்போது தான் ரதிக்கு துணையாக இரவு முழுவதும் இருந்த ருத்தரனும் அவன் அறைக்கு சென்றான். பின் அனைவரும் நிலாவின் கல்லறையின் முன் படையல் போட்டு சாமி கும்பிட்டனார்.

மீனாட்சியும் குழந்தையின் உடல் நிலை சிறப்பாக இருக்க அந்த ஊரினின் சிறப்பு வாய்ந்த ஸ்ரீ ரேணுகா தேவி கோவிலுக்கு ராகவன் மற்றும் ரதியை சென்று வர கூறினார். ராகவன் வேலை காரணமாக ருத்தரணை ரதி மற்றும் குழந்தையோடு அனுப்பி வைத்தான்..


மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தை ருத்ர வீர் ? கோவிலில் நடந்தது என்ன?.. அடுத்த பக்கத்தில்...
 
Last edited:
Top