- Messages
- 226
- Reaction score
- 211
- Points
- 63
அத்தியாயம் - 4
தானாக கதவு திறந்த வேகத்தில் பெண்ணவளின் இதயக்கூடே உறைந்து போகும் அளவிற்கு திடுக்கிட்டு நடுங்கி விழித்தாள் முக்தா.
கட்டழகு மேனிக்காரன் பூட்ஸ் சத்தமெழுப்ப விரைப்பாக நடந்து வந்த தினுசை கண்டு,
"அரே சார், மாலா காஹி சுதா சம்ஜட் நஹி.. மலா க்ஹரி ஜாய்ச ஆஹே, கிருபயா மாலா சோட்.."
'எனக்கு ஒன்னும் தெரியாது, நான் வீட்டுக்கு போகணும், தயவுசெய்து என்ன விட்டுடுங்க' என சுவற்றின் மூலையில் ஒன்றி நின்று பதட்டமாக மொழிந்தவளை, புகையினை இழுத்து விட்டபடி அமைதியாக பார்த்த மதன், பதிலேதும் பேசாது கதவை தாழிடுவதை கண்டு அடிநெஞ்சில் பிரலயம் உண்டானது.
"என்ன பண்ண போறான் இவன்.." புரியாமல் முழித்து நின்றவளை பார்த்தபடியே சட்டை பொத்தானை ஒவ்வொன்றாக கழட்டி மூலையில் விட்டெறிய, எச்சில் விழுங்கினாள் பேதை.
"க்.காய் கர்தாய?" என்ன பண்றீங்க? மிரட்சியாக கேட்டவளை நக்கலாக பார்த்த மதன், மேற்சட்டையின்றி வெற்று மேனியை முறுக்கியபடி ஒவ்வொரு அடியாக அவளை நோக்கி எடுத்து வைக்க, மிரலும் பன்னீர்க்கட்டி விழிகளில் அச்சத்தின் சாயல்.
"நோஓ.. இதெல்லாம் ரொம்ப தப்பு, ப்ளீஸ் இப்டி பண்ணாதீங்க.." அவள் மொழியில் காச்மூச்சென கத்த, அது மதனுக்கு புரியவில்லை என்றாலும், பெண்ணின் பயம் அப்பட்டமாக அவள் எண்ணத்தை உணர்த்தவே செய்தது.
பேண்ட் சிப்பில் கை வைத்து சர்ரென்ற சப்தத்துடன் கீழிழுக்க, ஆஆ... என்ற அலறலோடு முகத்தை மூடிக்கொண்டாள் முக்தா சம்ரித்தி.
காலடி சத்தம் மிக நெருகத்தில் கேட்க கேட்க தேக நடுக்கம் அதிகரித்து சுவற்றோடு சுவராக பின்னுடலை நசுக்கிக்கொண்டவளின் செயலை கண்டு, கேலிநகை பூத்த மதன், மூச்சுரசும் நெருக்கத்தை கூட்டி எத்தனை நேரம் அசையாமல் நின்றிருந்தானோ!
நெஞ்சிக்கூட்டில் பலமான கனம் கூடி உரு தெரியாத உருண்டைகள் அடைக்கும் உணர்வோடு, வேக வேக மூச்சோடு படபடப்பு குறையாமல் குறைக்கண் போட்டு பார்க்க, ஆண்மையின் வாசம் சுவாசத்தில் ஊடுருவி இதயத்தை அடைந்ததுவோ!
நீங்காத அச்சத்துடன் இமைகள் துடிக்க அவன் கீழ் பார்க்க, அம்மாடி உயிர் போய் உயிர் வந்த உணர்வு. இடை கவசம் பத்திரமாக இருந்தது அவனிடையில்.
தன் முகத்தின் நேரே சுருள் ரோமங்கள் நிறைந்த அவன் நெஞ்சி பகுதியை கண்டு, கீழ் மூச்சி வேகமிழுக்க அண்ணாந்து மதன் முகத்தை கண்டாள்.
சலனமற்ற ஆணின் நீள் விழிகள் தன்னை கூர்ந்து நோக்குவதை உணர்ந்து நடுங்கியவளின் தோளை தொட அவன் கை உயர்த்த, ஒதுங்கி ஒதுங்கி ஒடுங்கிய முக்தாவின் கண்கள் கண்ணீரில் பளபளத்தன.
"நீ என்னதான் காச் மூச்னு கத்தினாலும் நாக்கு ஒன்னும் புரிய போறது லேது.. பத்து நிமிஷத்துல குளிச்சிட்டு வர்றேன், ஒழுங்கா உண்மைய சொன்னா தப்பிப்ப இல்ல செதஞ்சி போவ.."
கடுமையாக உரைத்த மதன், அவள் பின்னிருந்த ஆங்கரில் மாட்டி இருந்த டவலை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்துகொள்ள, அப்போதும் அவனது நெருக்கத்தின் தாக்கம் நெஞ்சை விட்டு அகலாது, பரிதவித்து போனாள் முக்தா.
"பத்து நிமிஷத்தில வந்துடுவானா, அதுக்குள்ள தப்பிச்சி போய்ட்டா என்ன.." பெண் மூளை தவறாக சிந்தித்து தாவி ஓடி கதவை திறக்க முடியல, இன்ச் கூட அசைக்க முடியவில்லை.
"அய்யோஓ.." தலையில் தட்டிக்கொண்டவளின் நினைவோ, மதனின் செய்கையை அசைபோட்டது.
கதவை தாழிடும் போதே நீண்ட சாவி ஒன்றை பூட்டுக்குள் சுழற்றி எடுத்து, அதனை பேண்ட் பாக்கெட்டில் போட்டு கொண்ட நியாபகம் வந்ததும், மீண்டும் அடித்துக்கொண்டாள் தலையில்.
"இப்ப நான் இங்கிருந்து எப்படி போவேன், என் அம்மாவும் தம்பியும் என்ன காணாம பயந்திருப்பாங்களே.." நகத்தை கடித்தவாறு கலங்கி அமர்ந்திருக்க, குளியலறை கதவு திறக்கும் சத்தத்தில் அவசரமாக அப்பக்கம் பார்த்து விழிகள் தடுமாறினாள் மங்கை.
ஈரம் பூத்த கட்டுமஸ்து உடல் வெளிறி மின்ன, இடையில் மட்டும் துண்டை கட்டிக்கொண்டு, திடமான ரோமக்கால்கள் அதிர நடந்து வந்தவனை கண்டதும் முகத்தை வேறுப்பக்கம் திருப்பிக்கொண்டாள்.
"அய்ய ரொம்பத்தான்.." என சலித்த மதன், அவள் அணிந்திருக்கும் தன் சட்டையினை கவனித்தவனாக,
"யாரை கேட்டு என் சட்டைய எடுத்து போட்ட.." இன்னொரு துண்டை எடுத்து தலையினை துவட்டியபடியே உரும,
"எங்கே கழட்டி விடுவானோ" என்றஞ்சி சட்டையை இறுகிப் பிடித்துக்கொண்ட முக்தா,
"கப்டா பாட்ட்லா ஆஹே" உடை கிழிந்திருப்பதாக கூற,
"ஏதே பாட்டு பாடவா.." என்றான் புரியாமல்.
"நஹி.."
"அட ச்சீ போ.. சும்மா புரியாத பாஷையில கத்திகிட்டு.." அவனுக்கே சலித்து போக, டபுள் சொக்கா வச்ச கருப்பு சட்டையினை மேல் மாட்டிய மதன், அவள் உண்ணாமல் வைத்திருக்கும் உணவை பார்த்தான்.
"பசி இல்லையோ.." தாடியை நீவிய மதன், வரும் போதே குழலி கொடுத்து விட்ட பார்சலை பிரித்து வைத்து, சம்மணமிட்டு அமர்ந்து தான் பாட்டுக்கு உண்ணத் தொடங்கிட, கமகமக்கும் கறிக் குழம்பு வாசத்தில், பசி உயிர் கொல்ல வயிற்றை இறுக்கிப் பிடித்தாள் முக்தா.
"ஆஹா.. வதினா கை பக்குவமே பக்குவம் தான்.. என்னதான் ஐயர் வீட்டு பொண்ணா இருந்தாலும், எனக்காக என் வதினா கோழி கொழம்பு வச்சி தந்து அனுப்பி இருக்கே.. என்னா ருசி.." தேன்குழலி நேரிலிருந்தால் இப்படி வாய் வார்த்தையாக பாராட்டி இருப்பது சந்தேகம் தான். ஆனால் மனதில் மெச்சாமல் ஒரு பருக்கை கூட இறங்காது என்பதும் மெய்யே!
இப்போது முக்தாவை வெறுப்பேற்றவே ஆஹா.. ஓஹோ.. என்று புகழ்ந்து கோழி எலும்பை கடித்து உறிய, ஆரஞ்சி உதட்டை ஈரப்படுத்திக்கொண்டாள்.
"ஏய் எதுக்கு என் தட்டையே பாத்துட்டு இருக்க, உனக்கு தான் பசிக்கலைல அப்டி ஓரமா போயி உக்காரு, சாப்ட்டு தெம்பா வந்து என் இன்வெஸ்டிகேஷன ஸ்டார்ட் பண்றேன்.." திடமாக கவளம் சோறை அள்ளி வாயில் திணிக்க, ஹக்.. ஹக்.. பெரிதாக விக்கல் வந்து விட்டது.
தானே தலையினை தட்டிக் கொண்டு சோற்றை விழுங்கி பார்த்தும் விக்கல் நிற்காமல் தண்ணீரை தேடும் போதே,
"அரே தேவா.. ஹே பாணி ப்யா.." தனக்காக அவன் முன்னவே வைத்திருந்த தண்ணீர் போத்திலை எடுத்து வந்து, மதனிடம் நீட்டவும், வெடுக்கென பிடிங்கி மொத்த நீரையும் பருகியபடியே தன்னருகே நின்றிருந்த முக்தாவை பார்த்தான்.
பசியில் சோர்ந்த முகத்துடன், தலை ஒரு வேஷம் துணி ஒரு வேஷம் என்றிருந்த போதும், மேற்கு நாட்டுக்காரி பார்க்க என்னவோ நன்றாக தான் இருந்தாள்.
மூக்கில் அணிந்திருந்த அந்த மெல்லிய வளையம் அவள் அழகிற்கு மேலும் அழகூட்டிக் காட்ட, வரிவரியான செம்மஞ்சள் நிறத்து கனிந்த உதட்டை அடிக்கடி நாவை சுழற்றி ஈரம் செய்யும் மருளும் விழி அவளை கண்டபடியே நெஞ்சை நீவி தன்னை சமன் செய்த மதன்,
"என்ன தண்ணி குடுத்து உன்ன இன்னசென்ட்டா காட்டி இங்கிருந்து தப்பிக்க பாக்குறியா.." கடுமையாக கேட்டிட,
மதன் பேசும் அரையும் குறையுமான தமிழ் தனக்கு புரிந்தாலும், பதிலுக்கு பதில் பேசினால் தனக்கு தமிழ் மொழி புரிகிறது என்பதை அறிந்து கொள்வான் என்றே புரியாத பாவனை காட்ட, அதனை உணர்ந்த மதன் உதட்டில் ஏளன புன்னகை மிளிர்ந்தது.
"இன்னும் எவ்வளவு நேரம் தான் இந்த அறியா பார்வைய பார்த்தே, நேரத்தை கடத்துறேன்னு நானும் பாக்குறேன் இரு டி.." மனதில் எண்ணியபடி உணவு மொத்தமும் காலி செய்து, பெரிய ஏப்பம் விட்டவனை, பாவமாக பார்த்தாள் முக்தா.
"ஒரு பேச்சிக்கு கூட சாப்பிடுறியான்னு கேக்கலையே படுபாபி.." தனக்குள் முனங்கி வயிற்றை தடவியவளை, ஓரப் பார்வையால் கண்டு தனக்குள் நகைத்துக்கொண்ட மதன்,
"ஏய் நாக்கு தூக்கம் வருது, கொஞ்ச நேரம் தூங்குறேன், டிஸ்டர்ப் பண்ணாத சரியா.." அவளிடம் உத்தரவிட்டவனாக ஒற்றை நபர் படுக்கக்கூடிய கட்டில் மெத்தையில் கால்களை விரித்துக்கொண்டு, கைகளை தலைக்கு வைத்து விட்டத்தை நோக்கியபடி, விஸ்தாரமாக படுத்து கண்களை மூடியவனை கண்டு செய்வதறியாது நின்றாள்.
"அரே தேவா.. எனக்கு ஏன் இந்த சோதனை.. இந்த கடுவான்கிட்ட வசமா மாட்டிக்கிட்டு, பசியும் பட்டினியுமா இருந்து உடம்புல தெம்பில்லாம போச்சே.." உள்ளம் கலங்கித் தவிக்க,
"ஏய் " மதனின் திடீர் அழைப்பில் பதற்றமாக நிமிர்ந்தாள்.
"சும்மா தானே நிக்கிற, சாப்ட்டு போட்ட பத்திரமெல்லாம் அப்டியே இருக்கு பாரு, அதையெல்லாம் எடுத்து சுத்தமா கழுவி வையி" காலாட்டியபடியே நக்கலாக சைகை காட்டி சொல்ல,
"காய் சாங்கத்தாயி, சம்ஜ்ல நஹி" புரியவில்லை என்றாளே,
"உன் சங்காத்தமே வேணாம் தாயி.." படுத்தபடியே கும்பிட்டு போட்டவன்,
"நஹி நஹினு சொல்லியே தெளிவா இருக்கவன கூட பைத்தியம் புடிக்க வச்சிடுவா போல" உதடு குவித்து பெருங்காற்றை ஊதி தலையினை உளுக்கிக்கொண்ட மதன், சற்று நேரத்தில் உறங்கி போனான்.
அதுவரை அமைதியாக இருந்த முக்தா, குளியலறைக்குள் சென்று மதன் கழட்டி போட்ட பேண்டை நுனி விரலால் தூக்கி, அதன் சொக்காக்குள் கை விட்டு சாவியை தேட, சிகரெட்டும், செவ்வக வடிவிலான ஹிப் பிளாஸ்க் விஸ்கியும் தான் கைக்கு அகப்பட்டது.
"அய்ய ச்சீ.." முகம் சுளித்த முக்தா, "ஒருவேளை இப்ப போட்டிருக்க பேண்ட் பாக்கெட்ல வச்சிருப்பானோ..!" யோசனையாக வெளி வந்தவள், உறங்கும் மதனை பார்த்தாள்.
குர்.. குர்.. குறட்டை சத்தம் அதிகரிக்க, அடித்துப் போட்டது போல் நன்றாக உறங்கும் அவனை கூர்ந்து நோக்கியபடி பதட்டமாக நெருங்கி வந்த முக்தா, "இதை விட்டா வேற வழியே இல்ல, எப்படியாவது இவங்கிட்ட இருக்க சாவிய எடுத்தா தான், இங்கிருந்து தப்பிக்க முடியும்.."
அச்சம் கொண்ட மனதை திடப்படுத்திக்கொண்டு, எங்கே எழுந்து விடுவானோ என கவனமாக உறங்கும் அவன் தாடி முகத்தை பார்த்தபடியே, மெல்ல குனிந்து நடுங்கிய கரத்தை நுழைத்து வலப்பக்க பேண்ட் சொக்காவில் சாவி தேட, இன்னொரு வெண்சுருட்டு டப்பா வந்தது.
"இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல" நீண்ட சலிப்போடு அதை அப்படியே வைத்து விட்டு இடப்பக்கம் கைநுழைக்கும் போதே, குளிரில் அசைந்து படுத்த மதன் மெத்தையோடு சேர்த்து அவளது ரோஜா பூ கரத்தையும் சேர்ந்து நசுக்கியபடி தூக்கத்தை தொடர, நொந்து போனாள் முக்தா.
"அரேஏ.. போச்சி என் கையி.." பசியிலும் பயத்திலும் துவண்டு போன முக்தா, தன் கரத்தை எடுக்க முயல, எலிப் பொறியில் சிக்கிக் கொண்ட நிலையானது.
"என்ன இவ்ளோ வெயிட்டா இருக்கான்..
பின்ன நாலு ஆள் சாப்பிட வேண்டிய சாப்பாட்டை, ஒத்த ஆளா சாப்ட்டா அப்டித்தான் இருப்பான்.."
கடுப்பாக நினைத்து மறுகரத்தால் முகத்தில் விழும் முடியினை ஒதுக்கி விட்டவளாக, சற்றே பலம் கூட்டி கரத்தை இழுக்க, மீண்டும் புரண்டு நேராக படுத்தவனின் வேக அசைவில்,
நிலை தடுமாறி அவன் மீதே விழுந்தவளின் கோவைக் கனி உதடு, ஆணவனின் தாடி சூழ்ந்த கன்னத்தில் பதிந்த அதிர்ச்சியில் இருந்தே மீண்டு வரவில்லை. அதற்குள் நெஞ்சி பிளக்கும் மற்றொரு அதிர்ச்சியில் முற்றிலும் உறைந்து போனாள் பாவை.
உறக்கத்தில் கூட அலர்டாக இருக்கும் மதன், திடீரென தன் மீது தாங்கிய கனத்தில் பட்டென கண் திறந்தவன், தன் கன்னத்தையும் திருப்பி இருக்க, கன்னியின் கனியான இதழ் சுவை, காளையவன் முரட்டு இதழில் தேனாக ஊரியது.
இதுநாள் வரை பெண்ணின் வாசம் எப்படி இருக்கும் என்பதை கூட அறியாத காளையன், திடீரென ஒரு அந்நிய பெண்ணின் இத்தகைய நெருக்கமும், இதழ்கள் தீண்டிக்கொண்டிருக்கும் ஸ்பரிசமும், மதனே எதிர்பார்த்திருக்கவில்லை என்பது, ஆணவனின் திகைப்பு நீங்கா விழிகளிலும் பிரதிபலிக்கவே செய்தது.
இரண்டு நொடி இதழ் ஒற்றல், மூன்றாம் நொடி உதடு கிழிந்த நிலையில் கண்ணீரோடு தரையில் கிடந்தாள் முத்தப்பெண்.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 4
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.