- Messages
- 226
- Reaction score
- 211
- Points
- 63
அத்தியாயம் - 25
"குட் மார்னிங் எவ்ரி ஒன்.." என்ற ஆருவை அங்கு குழுமி இருந்த ஸ்டாப்ஸ் டீலர்ஸ் அனைவரும் ஆவென பார்த்திருக்க, ஸ்வாதியின் அருகில் இருந்த செந்தில் கூட ஆருவை பார்த்து விட்டு, பின் ஸ்வாதியை நோட்டம் விட தொடங்கி விட்டான்.
பெரிய மேஜையை வட்டமிட்டு அனைவரும் அமர்ந்திருக்க, நடுநாயக்கமாக போடப் பட்டிருந்த இருக்கையில் அமர்ந்த ஆரு, "ஹெலோ கைஸ், ஐ அம் ஆருத்ரா அஜய்.. உங்கள்ள நிறைய பேர்க்கு என்ன தெரியாது அதனால இந்த அறிமுகம்..
இங்க எதுக்கு நம்ம எல்லாரும் கூடி இருக்கோம்னு உங்க எல்லாருக்குமே தெரியும்னு நினைக்கிறேன்.." ஒவ்வொரு வார்த்தையும் பிசுரு தட்டாமல் வந்தது நுனி நாக்கு ஆங்கிலத்தில்.
அனைவரும் ஆம் என தலைசைக்க, குட் என்றதும் டீலர் பேசத்துவங்கினர்.
"மேடம் உங்க மத்த கம்பனிஸ் ப்ராடக்ட் லான்ச் சேம்பிள் பாத்ததும் எங்களுக்கு ரொம்ப பிடிச்சி போச்சி, எங்க ப்ராடக்ட்க்கும் உங்க கம்பனி பொறுப்புலே விட்டா நல்லா வரும்னு நம்பிக்கை வந்துடுச்சி.. உங்க முடிவை சொன்னா திருப்தியா கிளம்புவோம்" என்றார் டீலர்.
அவர் கொண்டு வந்த சேம்பிளை நன்றாக ஆராய்ச்சி செய்து பார்த்த ஆரு, "ஐ அம் சாரி mr. உங்க ப்ராடக்ட்ஸ்க்கு விளம்பரம் கொடுக்க நான் விரும்பல" என்றதும் அந்த டீலர் மட்டுமின்றி கம்பனி ஸ்டாப்ஸ் கூட அதிர்ந்து போயினர். எத்தனை கோடி டீலை போய் வேண்டாம் என்கிறாளே என்ற எண்ணத்தில்.
"எங்க கம்பனி ஒரு ப்ராடக்ட்ட லான்ச் பண்ணனும்னா, அதுக்கு அந்த ப்ராடக்ட் வர்த்தானதா இருக்கனும்.. அப்டி இல்லனா எங்க கம்பனிக்கு தான் கெட்ட பேர்" என்றதும் கோவமான அந்த டீலர்,
"அப்போ எங்க ப்ராடக்ட் மட்டமானதுனு சொல்ல வரீங்களா, mrs.அஜய்"
"எஸ் அஃப்கோர்ஸ் இதுல என்ன சந்தேகம் உங்களுக்கு" அவள் சாதாரணமாக சொன்னது கூட அந்த டீலர்க்கு பெரும் கோவத்தை ஏற்படுத்தியது.
இத்தனை பணியாட்கள் முன்னால் தன் பொருட்க்கலை எல்லாம் தரமற்றது என்று சொல்லி அவமானம் செய்ததாக உணர்ந்தவர், கோவமாக இருக்கையை விட்டு எழுந்து,
"mrs. அஜய் எத்தனையோ கம்பனிங்க எங்க ப்ராடக்ட்ட லான்ச் செய்ய கேட்டும் கொடுக்காம, உங்க கம்பனிய தேடி வந்த எங்கள அவமானப் படுத்தீட்டீங்க இல்ல.. இதுக்கான பதிலை நீங்க சொல்லியே ஆகனும்.." கோபத்தில் எச்சரித்த டீலர் அங்கிருந்து சென்றார்.
அதை எதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாத ஆரு, அமைதியாக அங்கிருந்து ஸ்டாப்ஸை நோட்டமிடவும், ஸ்வாதியின் அசோகர்யமான நிலையை உணர்ந்துக் கொண்டாள் போலும்.
விட்டால் அழுது விடும் நிலையில் இருந்த ஸ்வாதியை, தோளை உரசுவதும், அவள் காலை காலால் சீண்டுவதும், மடியில் கை போட்டுக் கொண்டு வைற்றை உரச முனைவதும் என்று பல சேட்டைகளை ரகசியமாக செந்தில் செய்துக் கொண்டு இருக்க, நூறுக்கும் மேற்ப்பட்டோர் இருக்கும் கூடத்தில் எப்படி இவனை சமாளிப்பது என்ற எண்ணத்தில், சகிக்க முடியாமல் அமர்ந்திருந்தாள் ஸ்வாதி.
அதை உணர்ந்த ஆரு, "ஹேய்..Mr.." என்று உரக்கக் கத்தவும், மொத்த கூட்டமும் அவள் பார்வை கோவமாக செல்லும் இடத்தை தான் மையல் கொண்டது.
செந்திலோ யாரை அழைக்கிறாள் என திரும்பி திரும்பி பார்க்க, "ஹெலோ உங்கள தான்" என்றாள் ஆள் காட்டி விரலால் சுட்டிக் காட்டி.
அதில் எதற்க்காக அழைக்கிறாள் என்ற யோசனையில், அவசரமாக செந்தில் எழ, "உரசியாச்சா.." என்ற கேள்வியில் புரியாமல் விழித்தான்.
"உங்க பக்கத்துல உக்காந்து இருந்த பொண்ண உரசி முடிச்சாச்சானு கேட்டேன்" அழுத்தமாக சொல்ல மிடரு விழுங்கியவன்,
"மேடம் அது.. வந்து" என இழுக்கும் போதே, "ஷெட்டப்ப்.." ஹால் அதிர கத்தி ஆரு,
"எங்ககிட்ட வேலை செய்யறவங்க உங்க வேலைய சரியா செய்யறீங்களோ இல்லையோ, ஆனா கூட வேலை பாக்குற பெண்களுக்கு உங்களால எந்த ஒரு இடைஞ்சலும் மனக்கசப்பும் வராதபடிக்கு நடந்துக்கணும்..
நானும் அப்போதுல இருந்து பாக்குறேன் உங்க பார்வையும் செயலும் ரொம்ப தப்பா இருக்கு, அடுத்த முறை இப்டி நிக்க வச்சி பேசிட்டு இருக்க மாட்டேன், மைண்ட் இட்.." கர்ஜனையாக சொன்னவளின் நெஞ்சில் மித்ராவின் குணத்தை போல சிறிது ஈரம் இருந்தது போலும், எச்சரிக்கையோடு நிறுத்திக் கொண்டாள்.
ஸ்வாதியை மட்டும் அவள் தனியாக அழைத்துக் கொண்டு போக, செந்திலின் முகம் அவமானத்தில் கருத்து போனது. அங்கிருந்த மொத்த பேரின் பார்வையும் அவன் மீது ஏளனமாக விழுவதை போல் தோன்ற, 'ஒரு பெண் தன்னை இத்தனை பேரின் முன்னே, விரல் நீட்டி எச்சரிக்கை செய்து மிரட்டி விட்டாளே' என்று நினைக்க நினைக்க ஆத்திரம் மூண்டு, அங்கிருந்து சென்றான்.
"ரொம்ப தாங்க்ஸ் மேடம்.." ஸ்வாதி தான் தலை குனிந்து நின்றவளாக, கண் கலங்கி சொன்னது.
சிறு புன்னகையோடு அவளை கண்ட ஆரு, "தப்பு செஞ்சவங்க தான் தலை குனிஞ்சி நிப்பாங்க, நீ தப்பு செஞ்சியா.." சற்றே கடினக் குரல் எழுப்ப, அவசரமாக 'இல்ல மேடம்" என தலை உயர்த்தி சொன்னாள்.
"ஹ்ம்.. குட், உன் பேர் என்ன?"
"ஸ்வாதி மேடம்.."
"ஃபைன் ஸ்வாதி, இனிமேலாவது யாருக்கும் பயந்து ஒதுங்காம தைரியமா இரு, ஏதாவது பிரச்சனைனா உடனே மேனேஜ்மெண்ட்ல கம்ப்ளைன்ட் பண்ணு, மத்ததெல்லாம் அவங்க பாத்துப்பாங்க சரியா.." அமைதியாக கூறி அங்கிருந்து செல்ல, ஸ்வாதிக்கு ஆருவை மிகவும் பிடித்து விட்டது, அவளின் இயல்பான நட்பு பேச்சில்.
பார்மல் உடையில் கருப்பு கூலிங் க்ளாஸ் விகிதம், ஸ்டைலாக காரில் சாய்ந்து நின்றிருந்த கணவனை கண்டு கொண்ட ஆரு, "இவர் எப்போ வந்தார்" என்ற யோசனையோடு தன்னோடு வந்த மேனேஜரை போக சொல்லி விட்டு உற்சாகமாக ஓடி வந்த ஆரு,
"அஜய் என்ன அதிசயமா நீங்க வந்து இருக்கீங்க, ஆபிஸ் போகலையா.." என்றாள் புன்னகையோடு.
கூலிங் கிளாஸ் வழியே மனைவியின் அசாத்திய அழைகை பருகிய அஜய், "போகாம இருப்பேனா ஆரு, அங்கிருந்து தான் நேரா இங்க வரேன்" என்றவன் சுற்றி முற்றி பார்வையை செலுத்தி, அங்கு யாரும் இல்லை என்றதும் சட்டென அவள் இடை வளைத்து இழுக்க, பூங்கொத்தாய் அவன் மேல் சரிந்தவள்,
"அச்சோ என்ன பண்றீங்க அஜய், நம்ம ஆபிஸ்க்கு வெளிய இருக்கோம் யாராவது பாக்க போறாங்க.." என்றாள் கணவன் கையில் நெளிந்துக் கொண்டு.
"இங்க நம்மள தவிர வேற யாரும் இல்ல ஆரு டார்லிங் டோன்ட் ஃபியர்.." என கண்ணடித்து, "எங்கயாவது லாங்கா ட்ரைவ் போலாமா பேபி" என்றான் போதை ஏற்றும் குரலில்.
"இன்னைக்கு என்ன சார் ஒரு மார்க்கமா இருக்கீங்க, சீக்கிரம் ஆபிஸ் விட்டுடும் வந்தாச்சு போலயே.."
"பின்ன என்ன பண்றது ஆரு, எப்பவும் உன் நினைப்பாவே என்ன வச்சிருக்கியே, அடிக்கடி உன் நியாபகம் வந்து போகுது.. அதுவும் இன்னைக்கு அவ்வளவா வேலை இல்ல, அதான் என் பொண்டாட்டி கூட டைம் ஸ்பென்ட் பண்ண ஓடி வந்துட்டேன்.." என்றவன் காதல் பொங்க அவள் நெற்றி முட்ட, கணவனின்பால் உருகும் மனதை அவளால் மட்டும் தடுக்க முடியுமா என்ன!
"எங்க போலாம்" என்றாள் காதலில் கசிந்துருகும் குரலில்.
"எது வரைக்கும் போகனும்னு தோணுதோ, அது வரைக்கும் போலாம்.. உனக்கு வேலை முடிஞ்சிதா டி.."
"உங்கள விட வேலை முக்கியமா அஜய்.." என்று கண் சிமிட்டி சிரிக்கவும் அவள் அழகில் சொக்கிப் போனான் காதல் கணவன்.
இருவரும் கொஞ்சிக் கொண்டு காரில் ஏறி சிரித்த முகமாக செல்வதை, செந்திலும் பார்த்தான், ஆருவிடம் கோவமாக பேசிய அந்த டீலரும் பார்த்தான் கண்கள் பளபளக்க.
≈≈ ≈≈ ≈≈
மாலை மங்கும் நேரம் தன் வேலைகளை முடித்து விட்டு மித்ராவிடம் வந்த கவி, மேடம் என அழைக்க,
"சொல்லுமா ஏதாச்சு வேணுமா.." தன்யாக்கு மில்க் ஷேக் செய்துக் கொண்டிருந்த மித்ரா கேட்க,
"இல்ல மேடம், அது ஊர்ல இருந்து என் சின்ன வயசு பிரண்டும் அவங்க அம்மாவும் வராங்க, நான் இன்னைக்கு மட்டும் சீக்கிரம் கெளம்பட்டுமா" என்றதும்
"தாராளம போய்ட்டு வாமா.." என்ற மித்ரா, "ஆமா கவி உன்கிட்ட ஒன்னு கேக்கணும்னு நெனச்சேன், நீ ஏன் ஹாஸ்டல்ல தங்கி இருக்க, உன் அம்மா அப்பா எல்லாம் ஊர்ல இருக்காங்களா என்ன.." என்றாள் எதார்த்தமாக.
அதில் முகம் சுருங்கிய கவி, "எனக்கு நான் யாருன்னே தெரியாத போது, என் அப்பா அம்மா எங்க இருக்காங்கனு எப்டி தெரியும் மேடம்.." விரக்தியாக கேட்டிட, மனம் படபடக்க புரியாமல் பார்த்த மித்ரா,
"என்ன கவி சொல்ற.."
"ஆமா மேடம், எனக்கு சின்ன வயசுல நடந்த எதுவுமே நியாபகத்துல இல்ல.. எட்டு வயசிருக்கும், மயக்கம் தெளிஞ்சி நான் கண் திறக்கும் போது ஒரு ஹாஸ்பிடல்ல இருந்தேன்.. எல்லாமே புதுசா இருந்துச்சி, யாரையுமே தெரியாம, யார் பேசுறதையும் கேக்க முடியாம, உடம்பு முழுக்க அடிபட்டு அங்கங்க கட்டோட இருந்தேன்..
என்ன தெரிஞ்சவங்க யாரும் என்னை தேடி வரல, அப்டியே வந்தாலும் எனக்கு அடையாளம் தெரிஞ்சி இருக்காது.. ஏன்னா என் குடும்பத்துல இருக்கவங்க ஒருத்தர் முகம் கூட எனக்கு நியாபகத்துக்கு வரல.. எனக்கு எப்டி ஆக்சிடென்ட் நடந்து ஹாஸ்பிடல் வந்தேன் இப்டி எதுவுமே எனக்கு தெரியாது..
காயம் ஆறினதும் மார்த்தாண்டம்ல உள்ள ஆசிரமத்துல சேத்து விட்டாங்க. அவங்க பேசுற பாஷை புரியாம, எனக்கு என்ன வேணும்னு கூட சொல்ல தெரியாம எப்பபாரு அழுதுட்டே இருப்பேன், அப்ப தான் எனக்கு எல்லாவுமா கிடைச்சா என் ஸ்வாதி.. இப்பவரை என்ன ஒரு அம்மாவா தோழியா கவனிச்சிக்கிறது எல்லாமே அவதான்.." தோழியை பற்றி பெருமையாக சொன்ன கவி,
விஷாலும் அவன் அம்மாவும், அவங்க அப்பாவோட ஒவ்வொரு நினைவு நாளுக்கும் எங்க ஆசிரமத்துக்கு வருவாங்க, எங்களுக்கு என்னென்ன தேவையோ வாங்கி கொடுத்துட்டு, எங்களோட டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு போவாங்க..
அப்போ தான் விஷால் எங்ககூட பழக்கமானான்.. அவனுக்கு எங்களுக்கு ஒரே வயசு வேறயா ஈஸியா ஒட்டிக்கிட்டோம், வருச வருஷம் எங்கள பாக்கவே ஆண்டிய கூட்டிட்டு சரியா வந்துடுவான்.
நாங்க காலேஜ் முடிக்கிற வரை ஆசிரமத்துல இருந்துட்டு, இப்போ ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் இங்க வேலை தேடி வந்தோம் மேடம்.. " தன் கதையை அவள் சுருக்கமாக சொல்லி முடிக்க, மித்ராவின் மனதில் நெருடல் ஏற்பட்டது.
சமீப காலமாக கவியின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாள்.
'இவளையும் இவள் செய்கைகளையும் எங்கேயோ பார்த்து பழக்கப்பட்டதை போலவே உள்ளதே' என்ற எண்ணமே மித்ராவின் மனதில் ஏதேதோ நினைவுகள் ஆட்க்கொண்டு உளுக்கிக் கொண்டு தான் இருந்தது.
ஆனால் இப்போது கவி சொன்னதை எல்லாம் கேட்ட மித்ராக்கு, கவி சொன்ன ஊர் பெயரை கேட்டதும், தலை சுற்றி படபடப்பாக வந்து, நெஞ்சை பிடித்துக் கொண்டு தரையில் சரியவிருந்தவளை கவி கவனிக்கவில்லை. ஆனால் விரைவாக வீடு வந்து சேர்ந்த ஆத்வி,
"ம்மாஆஆ.." என்ற அலறலோடு நொடியில் தாங்கி இருந்தான்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 25
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.