Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
226
Reaction score
211
Points
63
அத்தியாயம் - 26

ஆத்வி தன் தாயை தாங்கி பிடிக்கையில் மயங்கி இருந்தாள் மித்ரா. தாயின் நிலை கண்டு பயந்து போனவனோ, சில நொடிகள் வரை ஒன்றும் புரியாமல் திகைத்து நின்ற கவியின் புறம் சுட்டெரிக்கும் பார்வையை செலுத்தியவனாக,

"என்ன டி பண்ண என் மாம.." காரசார கோவத்தில் பற்களை கடிக்க, ஆத்வியின் அனல் பார்வையில் வெலவெலத்துப் போன கவி, அவன் கையில் தலை தொங்கி மயங்கிக் கிடந்த மித்ராவை அதிர்வாக பார்த்து,

"ஆன்ட்டிய இப்டி படுக்க வைங்க நான் என்னனு பாக்குறேன்" என்றாள் பதட்டமாக.

"ஆமா மேடம் அப்டியே டாக்டர்க்கு படிச்சி முடிச்சி இருக்க பாரு, சாதாரண நர்ஸ் தானே டி நீ, உனக்கு என்ன தெரியும் என் மாம்க்கு என்ன பிரச்சனைனு.." சுல்லென விழுந்து மருத்துவமனை தூக்கி செல்ல முனைய, அவன் பேச்சில் முகம் கன்றிப் போன கவி,

"முதல்ல ஆண்டிய இங்க படுக்க வைங்க, நான் டாக்டர் இல்ல தான், ஆனா எனக்கும் டாக்டர் அளவுக்கு இல்லைனாலும் ஓரளவுக்கு எல்லாமே தெரியும்.." முறைப்பாக சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, ஆதியும் வந்து விட்டான்.

மகன் கையில் மயங்கிக் கிடக்கும் மனைவியைக் கண்டு உள்ளம் துடித்துப் போனவனாக, "மித்துபேபி.." பரிதவிப்போடு அவள் பெயரை முணுமுணுத்து, "டேய் ஆத்வி அம்மாக்கு என்னாச்சி" என ஓடி வந்தவனும் விட்டால் மயங்கி சரியும் நிலை.

"தெர்ல டாட்.." என்றான் உள்ளடங்கிய குரலில்.

"அங்கிள் ஆண்டிய நான் பாக்குறேன் இங்க படுக்க வைக்க சொல்லுங்க.." கவி சொல்ல, அது எதுவும் ஆதி காதில் விழவில்லை. மித்ராவை இந்த நிலையில் கண்டு கை கால்கள் செயலிழந்தவனை போல, இதயம் அதிவேகத்தில் துடிக்க கால்கள் தடுமாறி அருகில் உள்ள சோபாவில் தளர்ந்து அமர,

"டாட் என்னாச்சி.." என்ற ஆத்வியோ இருதலை கொல்லி எறும்பாக தவித்துப் போனான், தாய் தந்தையின் நிலை கண்டு.

"சார் பேச நேரம் இல்ல சீக்கிரம் அவங்கள படுக்க வைங்க.." கவியின் உறுதியானக் குரலில் அவனும் வேறுவழியின்றி, ஒற்றை மெத்தை போன்றிருந்த சோபாவில் படுக்க வைக்க, மித்ராவின் கை பிடித்து பார்த்த கவி, கிட்சன் ஓடி சென்று சிறிது சக்கரையும் நீரையும் எடுத்து வந்தவளாக, அவள் வையில் கொட்டி தண்ணீரை பருகக் கொடுத்த சில நிமிடத்தில், மெல்ல கண் விழித்தாள் மித்ரா.

ஆதிக்கு உயிர் போய் உயிர் வந்த நிலையில், நிலைக்குத்திய பார்வையை தன் மனைவி மீது அழுத்தமாக பதித்தபடி அமர்ந்திருக்க, ஆத்விக்கு அப்போது தான் மூச்சே வந்தது.

"மாம் உங்களுக்கு ஒன்னும் இல்லையே.." தரையில் மண்டியிட்டு அமர்ந்து சிறு பாலகான மாறி, கரகரப்பாக வினவ, இல்லை என மெல்ல தலையாட்டிய மித்ரா, அவன் சிகை கோதி விட்டவளாக,

"பயப்படாதே கண்ணா லேசான மயக்கம் தான், வேற ஒன்னும் இல்ல.." என்றவள் தன் எதிரில் கலங்கி போய் அமர்ந்திருந்த கணவனைக் கண்டு கண்மூடி திறந்தவள், கவியின் கை பிடித்து தன் அருகில் அமர்த்தியவளாக,

"கவிஇ.. உன்ன மார்த்தாண்டம்ல உள்ள ஹாஸ்பிடல்லயா சேர்த்திருந்தாங்க, நீ யாரு என்னனு உனக்கு உண்மையாவே ஒன்னும் நியாபகம் இல்லையாமா.." ஏதோ ஒரு எதிர்பார்ப்போடு தொண்டைக்குழி அடைக்க, படபடப்பாக கேட்டாள் மித்ரா.

தனக்கு யாரும் இல்லை என்று சொன்னதும் மித்ரா பரிதாபம் கொண்டு கேட்கிறாள் போல என நினைத்துக்கொண்ட கவி, "எனக்கு எதுவும் நிபாகத்துல இல்ல ஆண்டி, இந்நேரம் நியாபகம் இருந்திருந்தா என் குடும்பத்தை தேடி நான் போயிருக்க மாட்டேனா..

சரி என்ன விடுங்க, நீங்க ரொம்ப பலவீனமா இருக்கீங்க கொஞ்ச நேரத்துல பிரஷர் கூடி மயங்கி விழுந்துடீங்க, உடம்ப பாத்து வச்சிக்கோங்க ஆண்டி.. பாருங்க உங்களுக்கு ஒண்ணுனதும் அங்கிளும் உங்க மகனும் எப்டி துடிச்சிட்டாங்கன்னு.."

கவி சிறு கண்டிப்புடன் சொன்னதும் இருவரையும் மாறி மாறி பார்த்த மித்ராவின் கண்கள், கடைசியில் கவியிடமே வந்து நின்றது.

"ஒருவேளை இவள் அவளாக இருக்க மாட்டாளா.." என்ற ஏக்கப் பார்வை அவள் மீது. ஆனால் நினைவில்லை என்கிறாளே என்ற போதுதான் மனம் குழம்பி தவித்துப் போனாள்.

"இருங்க ஆண்டி உங்களுக்கு ஆரஞ்சு ஜூஸ் போட்டு எடுத்துட்டு வரேன், அதை குடிச்சா கொஞ்சம் களைப்பு போய் சரியாகிடுவீங்க" என்றவள் தாமதிக்காமல் கிட்சன் பக்கம் எழுந்து ஓட, மித்ராவின் பார்வையும் அவளை தான் பின் தொடர்ந்தது. அதனை ஆதி ஆத்வி இருவருமே கவனித்துக் கொண்டு தான் இருந்தனர்.

ஐந்து நிமிடத்தில் ஜூசை மித்ராவிடம் நீட்டவும், அதனை வாங்கி பருகியவளை பதட்டமாக பார்த்த கவி, "ஏன் ஆண்டி ஜூஸ் நல்லா இருக்கா" என்றாள் பல்லிடுக்கில் நகத்தை கடித்துக் கொண்டு.

"ம்ம்.. நல்லா இருக்கு கவி, அதுக்கு ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற" கண்ணை சுருக்கினாள் மித்ரா.

"இல்ல ஆண்டி இதுதான் நான் ஃபர்ஸ்ட் டைம் போட்ட ஜூஸ், அதான் கேட்டேன்.." என்றதும் ஆத்வி அவளை முறைக்க, ஆதிக்கோ 'நீ முதல் தடவ ட்ரை பண்ணத டேஸ்ட் பண்ண, என் பொண்டாட்டி தான் கிடைச்சாளா.." என்ற செல்ல கோவம் கொண்டு கவியை பார்த்தான்.

"ஆனா இது முதல் தடவ போட்ட மாதிரி இல்லையே கவி.." என்றவளுக்கு தானே தெரியும் அவள் சர்க்கரையை அள்ளி போட்டு எடுத்து வந்ததன் சுவை.

"ஐயோ அப்டியா ஆண்டி . நான் கூட எங்க நல்லா இருக்கதோன்னு நெனச்சி ரொம்ப பயந்துட்டேன்.. நல்லவேலை நீங்க நல்லா இருக்குனு சொல்லிடீங்க" சந்தோஷத்தில் துள்ள, மௌனமாக சிரித்த மித்ரா,

"உனக்கு சமைக்க தெரியுமா கவி" அவளிடம் பேச்சி வளர்ப்பதற்க்காக இந்த கேள்வியை கேட்டு வைக்க,

"மச்.. அதெல்லாம் யாருக்கு தெரியும் ஆண்டி, எனக்கு அடுப்பு கூட பத்த வைக்க தெரியாது, இதுல எங்க சமைக்க.."என்று சொல்லி சிரிக்கவும், ஏனோ ஆத்விக்கு இதயம் வெடித்து சிதறிய உணர்வு.

நெஞ்சில் கை வைத்து தேய்த்துக் கொண்டவனாக, "எதுக்கும் ரெடியா இருடா ஆத்வி.." உள்மனம் வேறு சம்மந்தம் இல்லாததை கூற,
"அடச்சீ.. போ.. நேரம் காலம் தெரியாம லூசு மாதிரி உளறிட்டு.." மனதை திட்டி அடக்கும் போதே, அடுத்து கவி சொன்னதை கேட்டு கண்முழி பிதுங்கிப் போனான்.

"அதுக்கு என்ன கவி, இனிமே கத்துக்கோ அப்ப தானே உன் புருஷனுக்கும் பிள்ளைக்கும் வாய்க்கு ருசியா சமைச்சி போட முடியும்" மித்ரா சொல்லவும்,

"அச்சோ ஏன் ஆண்டி காமெடி பண்றீங்க, எனக்கு சமையல் அப்டினாலே பயங்கரமான அலர்ஜி, அதனால நானெல்லாம் சமைக்க கத்துக்க மாட்டேன்.. வேணும்னா எனக்கு புருஷனா வர்றவன், எனக்கும் என் புள்ளைகளுக்கும் சேத்து சமைச்சி போடட்டும், அதை விட்டா வரவனுக்கு என்ன வெட்டி முறிக்கிற வேலை.." என்றதும் மித்ரா திருத்திருவென முழிக்க,

"எப்டியோ எனக்கு உணவோடு சேர்ந்து அன்பையும் காதலையும் வச்சி ஊட்டி விடுற மனைவி கிடைச்சிட்டா, அது வரைக்கும் நான் தப்பிச்சிட்டேன்.." ஆதி நெஞ்சை தேய்த்துக் கொள்ள,

ஆத்வியின் முகமோ, ஏதோ கசப்பு மருந்தை குடித்தவன் போல அஷ்டகோணலாகி போனது.

"நான் தான் எதுக்கும் ரெடியா இருன்னு சொன்னேனே.." மீண்டும் உள்மனம் பழிப்புக் காட்ட, "மவனே கைல கெடச்ச பொளந்துடுவேன் மரியாதையா ஓடி போ.." என விரட்டி விட்டவனாக, "மாம்.. இப்ப தானே மயக்கம் போட்டு விழுந்தீங்க, இப்டி தொணத்தொணனு பேசிட்டு இருந்தா, திரும்பவும் மயக்கம் தான் வரும்.. வாங்க உங்கள ரூம்ல விட்டு வரேன்" என்றான் கவியை முறைத்தபடி..

'இவன் எதுக்கு சம்மந்தமில்லாம நம்மள முறைச்சிட்டே இருக்கான்..' குழப்பமாக எண்ணிய கவி அமைதியாக இருக்க,

"எனக்கு ஒன்னு இல்ல ஆத்வி, நான் கொஞ்ச நேரம் கவி கூட பேசிட்டு இருக்கேனே.." என்றபடி எதார்த்தமாக கணவனை பார்க்க, வந்ததில் இருந்து தன்னிடம் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் இருப்பதை உணர்ந்த மித்ரா, அவன் முகம் வேறு செவ்வானமாய் சிவந்திருப்பதை கண்டு,

"ஹாஹா புயலுக்கு முன் அமைதியோ.." என பதறிய மித்ரா, "சரி டா நீ இரு, நான் அப்பாகூட ரூம் போறேன், அப்புறம் கவி அவ பிரண்ட பாக்க சீக்கிரம் போகனும்னு சொன்னா, என்னால தான் அவளுக்கு லேட்டாகி போச்சி, நீ கொஞ்சம் அவளை கூட்டிட்டு போய், அவ சொல்ற இடத்துல விட்டுட்றியா.." என்றாள் அவசரமாக.

"இல்ல ஆண்டி பரவால்ல நானே போயிய்டுறேன்" என்று அவள் வாய் திறக்கும் முன்னே, கவியை அழுத்தமாக பார்த்த ஆத்வி, சரி என்ற பதிலை உரைத்திருந்தான்.

ஆதி மித்ராவும் இருக்கவே மறுப்பு கூற முடியாமல் மனமேயின்றி கவி ஆத்வியோடு சென்றது தான் தாமதம், மித்ராவின் கன்னம் தக்காளி பழமாக வீங்கி இருந்தது.

எத்தனை வயது ஆனாலும் ஆதியின் முரட்டுத்தனம் மனைவியிடம் மட்டும் மாறாமல் அப்படியே இருக்க, கன்னத்தில் கை வைத்தபடி கண்ணீரோடு தலை குனிந்து அமர்ந்திருந்த மித்ராவை கோவம் பொங்க பார்த்த ஆதி, "பிபி ஏறி மயக்கம் போடுற அளவுக்கு உனக்கு என்ன டி பிரச்சன, என்கிட்ட சொன்னா நான் சரி பண்ண மாட்டேனா..

கண்டதையும் நெனச்சி பதட்டமாகி, அடிக்கடி ஏதாவது பண்ணி என்னைய பயம்புறுத்தி வச்சிருக்குறதே உனக்கு வேலையா போச்சில்ல.." கோவத்தில் காச்மூச்சென கத்திக் கொண்டு இருந்தாலும், ஆதியின் இத்தகையான முரட்டு அன்பை மித்ரா ஒருத்தியால் மட்டும் தானே புரிந்து கொள்ள முடியும்.

அடித்த அடியில் தன்னையும் மீறி கலங்கிய கண்கள், குழந்தை போல் தன்னை நினைத்து பயத்தில் புலம்பிக் கொண்டிருக்கும் கண்டு, தன்னை மீறி சிரித்து வைத்தாள்.

"என்னடி சிரிப்பு.." கர்ஜித்த ஆதி அடுத்த நொடி மழலையாய் அவள் மடியில் இருக்க, தாரமாக அவனை தாங்கி இருந்தாள் மித்ரா.

*****

அமைதிபடையாக காரை ஓட்டிக் கொண்டிருந்த ஆத்வியை, அடிக்கடி ஓரப்பார்வை பார்த்துக் கொண்டே வந்தாள் கவி. அவன் பட்டாசாய் வெடிக்கும் போது கூட வராத பயம், அவன் அமைதியை கண்டு வந்தது மெய்.

அந்நேரம் பார்த்து அழைப்பு வரவும், அதனை ஏற்று காதில் வைக்க, "கவி வந்துட்டியா" என்றான் அந்த பக்கம் விஷால்.

"இதோ வந்துட்டே இருக்கே விஷு, ஸ்வாதி வந்துட்டாளா.." என்றதும்,

"ஏய்.. கவி நான் வந்து ரொம்ப நேரம் ஆகுது டி, நீ தான் லேட்" ஸ்வாதி, விஷால் போனை பிடுங்கி சொல்ல,

"ஓஹ்.. சரி ஸ்வாதி இன்னும் கொஞ்ச நேரத்துல நான் வந்திடுறேன், அதுவரைக்கும் ஆண்டிய பாத்துக்கோ.." என்று அழைப்பை வைக்கவும், கார் ஆளறவமற்ற சாலையில் நிற்கவும் சரியாக இருந்தது.

"ஹா.. ஹா.." அமைதிபடை சரவெடியா மாறிடுச்சு போல, மனதில் எண்ணியபடி கலவரமாக அவனை பார்க்க,

"என்ன டி, என் மாம்கிட்ட தேவை இல்லாததையெல்லாம் பேசி சிம்ப்பத்தி கிரியேட் பண்ண பாக்குறியா.. இன்னைக்கு உன்னால தான் என் மாம் மயக்கம் போட்டு விழுந்தாங்க, அவங்க மயங்கி விழுற அளவுக்கு என்னத்த டி சொன்ன.." என்றவன் கரம் அவள் தாடை இறுக்கியது, கவி நீதானிக்கும் முன்.

"கைய எடு வலிக்குது.." வலியில் முனங்கியவளை நெருங்கி,

"என் மாம் கண் மூடி கிடந்தத பாத்து எனக்கும் இப்டி தான் டி வலிச்சுது, அம்மாவோட பாசம் எப்டி இருக்கும்னு ஆதரவு இல்லாதவ உனக்கு எங்கே டி புரியப் போகுது.." அவளுக்கு வலிக்க வேண்டுமென்றே சொன்ன வார்த்தையில், கவி துடித்து போனதை ஆத்வி உணராது தான் போனான்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 26
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top