- Messages
- 226
- Reaction score
- 211
- Points
- 63
அத்தியாயம் - 5
தன் மீது பூ செண்டாக தவழ்ந்து கிடந்தவளை ஒரே அடியில் சீற்றமாக தூக்கி வீசி இருந்தான் மன்மதன்.
"பொண்ணு தானே நீ.. தூங்குற ஆம்பள மேல வந்து விழுந்து, அசிங்கமா நடந்துக்க உனக்கு வெக்கமா இல்ல" சீறிச் சிதறிய வார்த்தைதனில், கூனிக் குறுகிய முக்தா, கதறி அழக் கூட திராணியற்றவளாக பெருகும் விழி நீரோடு தரையில் நடுங்கிக் கிடந்தாள்.
"பொம்பள மூச்சி பட்டதும் மயங்கிடுவான் இந்த மதன்னு பாத்தியா.. உன் பாட்சாலாம் இக்கட பணிக்கிறது லேது" கடுமையிலும் ஏலனம் வழிய அழுத்தமாக அவளை பார்க்க, தேகம் கூசி கதறினாள் பாவை.
"அழுகையில் துடிக்கும் செவ்வரி இதழ்கள் சற்று நேரம் முன்னர், தனது பட்டை உதட்டை எத்தனை மிருதுவாக தீண்டியது" என்றெண்ணும் போதே, திண்மை உடலில் இளஞ்சூடு பரவி ஆணை சிலிர்க்க வைத்தது.
புதிதாக உள்ளம் கொண்ட கிறக்கத்தை மறக்க, வெண்சுருட்டை அவசரமாக பற்ற வைத்து, அடர் பழுப்பு நிறமான தன் உதட்டின் நடுவே கொண்டு செல்லும் முன்னவே, இதமான கனம் ஆணிதழை தாங்கி நா உளர செய்திட,
"சும்மா தான உதட்டை வச்சி எடுத்தா, இன்னும் எதுக்கு அவ உதடு என் உதட்டு மேலையே ஒட்டிட்டு இருக்க உணர்வை தருது.." தரிக்கெட்டு ஓடும் மனதை ஒருநிலை படுத்திக்கொண்டு, மீண்டும் அச்சுருட்டினை உதட்டின் நடுவே கட்டாயமாக வைத்து வேகமாக இழுக்க,
இச்சென அவள் இதழ்கள் நச்சென மோதிய சம்பவம் தான், இருதயத்தை அதிர வைத்தது.
"கிருபயா மலா இதுன் ஜாவ் தியா.." என்ன இங்கிருந்து போக விடு என வேதனை குரல் நடுங்க சத்தமில்லாது சொன்னவளை, புகையினை வெளிவிட்டவாறே அமைதியாக பார்த்தான்.
"என்ன காரணத்துக்காக என்னை இங்க பிடிச்சி வச்சிருந்தாலும் சரி, நீங்க நினைக்கிற மாதிரி எனக்கு ஒன்னும் தெரியாது.. எப்டி கேட்டாலும் இதுதான் என் பதில், உங்ககிட்ட உள்ள சாவிய எடுக்க வந்து அவமானப்பட்டும் உக்காந்து இருக்கேன், இதுக்கு மேல என்னால இதெல்லாம் தாங்க முடியாது, ப்ளீஸ் என்ன இங்கிருந்து போக விடுங்க.."
இத்தனை தெளிவாக தமிழில் சொல்லி இருந்தால் கூட பாவம் பார்த்து விட்டிருப்பானோ என்னவோ! தெளிவாக மராத்தியில் கூறி மதனை மதம் பிடிக்க வைத்தாள் காரிகை.
"நீ பேச பேச காது வலிக்குது டி.." சுட்டு விரலை காதில் விட்டு ஆட்டி, சலிப்பாக கத்திய மதன், கேரியர் கொண்டு வந்த பையில் இருந்து பிரிக்காத ஒரு உணவு டப்பாவை எடுத்து அவளிடம் வைத்தவனாக,
"நீயும் எவ்வளவு தூரம் தான் போறேன்னு நானும் பாக்குறேன், விட்டா பசில துவண்டு செத்திடுவ போல, முதல்ல சாப்ட்டு தெம்பாகு" புகையினை ஊதியபடியே அவளை பார்க்க, நிமிர்ந்தும் நோக்கவில்லை அவனை.
"ஏய்.. உன்னைத்தான், சாப்பிடுறியா இல்லையா.." ஒரே அதட்டலில் திடுக்கிட்டு நிமிர்ந்தவளின் கரம் நடுங்க டப்பாவை திறந்து வைத்து, சில கணம் வரை அதனை வெறுமையாக பார்த்தவளுக்கு பெரும் தயக்கம், அவன் கொடுத்த உணவை உண்ண.
"போதை பொருளும் கலக்கல, மயக்க மருந்தும் கலக்கல.. அப்டி இதெல்லாம் கலந்து தான் உன்னைய ஏதாவது பண்ணனும்னு இந்த மதனுக்கு எந்த அவசியமும் லேது, நம்பி தின்னா தின்னு தின்னாட்டி சாவு.."
கடுப்பாக உரைத்த மதன், புகைந்த சுருட்டை காலில் போட்டு நசுக்கியவனாக, மெத்தையில் அமர்ந்து அவளையே ஊடுருவும் பார்வை பார்த்தவனும் நன்றாக உணர்ந்தே இருந்தானே, முக்தா எதற்காக தன்னை நெருங்கி வந்திருப்பாள் என்று.
கேடி பாய் தலையணைக்கு அடியில் சாவியை வைத்திருப்பது அறியாமல், பேண்ட் சொக்காவை சோதனையிட்டு பாவம், தானே சோதனை எலியாக மாறுவோம் என கனவா கண்டிருப்பாள்!
மனம் ரணிக்க பேசினாலாவது வாய் திறந்து உண்மை கூறுவாள் என பார்த்தால், இத்தனை கமுக்கமாக வாய் திறவாமல் அமர்ந்திருப்பவளை காணக் காண வெறுப்பு தான் வந்தது.
தான் அவளை பார்க்கும் வரை உணவில் கை வைக்க மாட்டாள் என்பதை மன்மதன் உணர்ந்தானோ! கண் மூடி உறங்குவதை போல் பாவலா காட்டியவனை எட்டி பார்த்த முக்தா, பசியில் துவண்ட வயிற்றை மென்மையாக தடவிப் பார்த்தாள்.
வேறு வழியின்றி ஒரு கவளம் சோறை அள்ளி வாயில் வைக்க, குழலியின் கைப்பக்குவம் சகலமும் மறக்க தான் வைத்தது.
அவசரமாக அவள் உண்ணும் செயல் மதனின் உள்ளுணர்வு திரையிட்டு உணர்த்தியது போலும்.
"நல்லா சாப்டு டி, உனக்கு இருக்கு.." மனதில் கருவியவன், உண்டு முடித்த முக்தா கை அலம்பி வந்தவளாக, அமர்ந்தவாக்கிலே சுவற்றில் தலை சாய்த்து உறங்கிப் போனதை, சலனமின்றி பார்த்திருந்தான் மன்மதன்.
** ** **
"ஏண்ணா.." அருகில் படுத்திருந்த கணவன் நெஞ்சை சுரண்டிய குழலிக்கு,
"ம்" மட்டும் பதிலாக கொட்டி கண்ணுறங்க,
"ம்னா என்ன புரிஞ்சிக்க.." பதில் வராமல் போகவே, "ஏண்ணா உங்களத்தான் கேக்குறேன்" ஆறடி மாமிச உடலை உளுக்கி எடுத்தாள் குழலி.
"ப்ச், என்ன டி செப்பு.."
"ம், இது ஓகே.. ஏண்ணா என்ன பண்றேள்.." நெஞ்சி ரோமத்தை விரலில் சுருட்டி, மீண்டும் கேட்டிட,
"தூங்கிட்டு இருக்கவனை நைய நையனு சுரண்டி என்ன பண்றேனு கேட்டா, என்ன டி சொல்றது.." தூக்கத்தில் கண் விழித்து, பெரிதாக அலுத்தான் ருத்ரங்கன்.
"இப்டி அலுத்து ஒன்னும் சொல்ல வேண்டா, தூங்குங்கோ.." மனைவியவள் கோபம் கொண்டு திரும்பிப் படுக்க, அவளது வடிவான இடையில் கை நுழைத்து, பின்தேகம் தன்மேனி உரச நெருங்கி படுத்த ருத்ரன்,
"இப்ப எதுக்கு இந்த கோவம்" கூர் மூக்கு நுனி, பெண்ணவளின் பின்னங்கழுத்தை சுகமாய் தீண்டியது.
"இப்டி கேட்டா எப்டி பதில் சொல்றதாம்.." இப்போதெல்லாம் அரிதாக கிடைக்கும் கணவனின் நெருக்கத்தில் உருகித் தவித்தாள் குழலி.
"எப்டியோ சொல்லு, வாய் சும்மா தானே இருக்கு.." என்றவனின் தடித்த உதடு, குட்டி குட்டி முத்தம் வைக்கும் வேலையில் ஓவர் பிஸி.
"நாளைக்கு ஏகாதசி"
"அதுக்கு என்ன இப்போ.."
"இல்ல சொன்னா க்.கோபப்பட மாட்டேளே.." இத்தனை நெருக்கத்தில் பேச்சி திக்கி தவித்த கோதைக்கு, இனி சொல்லவிருக்கும் விடயத்திற்கு, என்ன பதில் கூறுவானோ என்ற படபடப்பு வந்துவிட்டது.
"என்ன சோறு தண்ணி இல்லாம பட்டினி கிடக்க போறியா.." என்றான் இறுக்கமான குரலில்.
"அப்படி சொல்லாதேள் அது விரதம் ண்ணா, விஷ்ணு பகவானுக்கு ரொம்பவும் விஷேஷம்.."
"விரதமோ விஷேஷமோ, நீ ஒன்னும் பண்ண கூடாது.. ஒழுங்கா கைய கால அடக்கிட்டு கெட.." உருமலாக சொல்லி, இப்போது இவன் முதுகுக்காட்டி படுத்துக்கொள்ள, கணவனின் முறுக்கிய முதுகு புறத்தை அமைதியாக வெறித்தாள் குழலி.
பிரிந்த கணவன் மனைவி இருவரும் மனதளவில் ஒன்று சேர்ந்து ஒன்றாக வாழத் தொடங்கி இருந்தாலும், பிரியப்பட்டு இல்லற வாழ்விலும் சேர்ந்து வாழ்வது மிகவும் அரிதாகி போனது.
இருவருக்குள்ளும் நெருக்கங்கள் உண்டு. முத்தங்கள் உண்டு. சிறு சிறு சீண்டல் கோபம் தாபம் அனைத்தும் இருக்கிறது.
ஆனால்.. ஆனால்.. அந்த இணக்கமான காதல்? காதலில் சகலமும் மறந்து அவன் தன்னோடு கலந்த நிகழ்வுகள். தனக்குள் அவன் வெட்டித் துடிக்கும் உருமலான உணர்வுகள் எதுவும் இல்லையே!
பாதுகாப்பு கவசத்துடன் தன்னை நாடுவதும், உணர்வுகள் வெடித்த பிறகு மெல்லிய அணைப்போடு உறங்கிப் போவதும் கணவனின் வழக்கமாகிப் போக, பெண்ணவளின் உறக்கம் தான் நெஞ்சடைக்கும் கலக்கத்தில் பரிப்போனது.
முன்பு சிந்திக்காமல் செய்த பாவத்தின் செயலால், தனது ஏக்கங்களை யாவும் கணவனிடம் மனம் விட்டு பேச பெரும் தயக்கம் கொண்டு, தனக்குள் உருவாகும் துயரங்களை எல்லாம் தெய்வத்திடம் கொட்டித் தீர்க்க தொடங்கி விட்டாள்.
ஆனால் அதற்கும் கணவன் முட்டுக்கட்டை போட, மன சோர்வில் கலங்கிய விழிநீரோடு உறங்கிப் போனவளின் நெற்றியில், ஆழ்முத்தம் வைத்த ருத்ரன், மனைவியவளை தன் நெஞ்சத்தில் புதைத்துக்கொண்டு சுக நித்திரை கண்டான்.
குளுமையான விடியல் தந்த இதத்தில், நித்திரை கலைய மனமின்றி போர்வைக்குள் சுருண்டு கிடந்த குழலி, கடினப்பட்டு கண் திறந்து பார்க்க, கணவனை காணல.
"ஒரு வார்த்தை எழுப்பி சொல்லிட்டு போனா என்னவாம்.." எழும் போதே முணுமுணுத்த குழலி, இன்றைய தினத்தில் குளிர்ந்த நீரால் நீராடிவிட்டு, பெருமாளுக்கு உகந்த நிறமான மஞ்சள் வண்ணத்தில் காட்டன் சேலையினை கட்டிக்கொண்டவளாக, தன் விரத்தை தொடர்ந்தாள் தேன்குழலி.
என்ன சொன்னாலும் அடங்க மாட்டாள் என்பதை தெரிந்தே தான், தலைவிதியே என நொந்தபடி சென்று விட்டான் ருத்ரங்கனும்.
வீட்டையும் பூஜை பொருட்ககளையும் சுத்தம் செய்து அலங்கரித்த குழலி, காலை உணவினை சமைத்து வைத்தவளாக, ஸ்டண்ட் பள்ளியில் இருந்து கணவன் வருவான் என காத்திருக்க, வந்தது என்னவோ மதன் தான்.
"அவா வரலையா.." வரமாட்டான் என தெரிந்தே கேட்டவளுக்கு, இல்லை என்று தலையசைக்க, மன சுணக்கம் கொண்டாள் பேதை.
"சரி உள்ள வாங்கோ, சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.." என்றவளும் அவனுக்கு சாப்பாட்டை பரிமாற, மதன் பார்வை அவளது சோர்ந்த முகத்தை தான் உள்வாங்கியது.
"அண்ணய்யாக்கு தான் இந்த விரதம், லொட்டு லொசுக்கு எல்லாம் புடிக்கலைனு தெரியிதே, அப்புறம் எதுக்கு அதுக்கு பிடிக்காததை செய்யணும்.." முழுக்க சைவ உணவாக இருந்ததை வைத்தே கண்டுகொண்ட மதன், மெதுவாக கேட்டிட, மௌனப் புன்னகையை பதிலாக தந்த குழலி,
"அவாளும், அவாளை சுத்தி இருக்க எல்லாரும் நன்னா இருக்கணும்னு பகவானை சேவிச்சி காக்குற விரதம் இது..
முக்கியமா என் மன திருப்திக்காகவும் தான்..
ஒவ்வொரு நாளும் ஆபத்துகளை கடந்து வெளிய போய்ட்டு அவா ஆத்துக்கு வர்றதுக்குள்ள, இங்க நான் பரிதவிச்சி காத்து கிடப்பேனே, அந்த வேதனைய எல்லாம் யார்கிட்ட சொல்ல, சொல்லுங்கோ..
அதான் பகவானை துணைக்கு அழச்சிக்கிட்டேன்.." உள் வேதனை மறைத்தவளாக சிரிக்க, மதன் நெஞ்சிலும் அவள் நிலை எண்ணி பாரம் குடிகொண்டது.
ஒருகாலத்தில் ருத்ரனை கண்டு திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை எழுந்தது என்னவோ உண்மை தான்.
ஆனால் ஒவ்வொரு நாளும் ருத்ரன் வெளியே சென்று வீட்டிற்கு வருவதற்குள் குழலி படும் வேதனையை உடன் இருந்து பார்ப்பவனுக்கு, திருமணத்திற்கு பிறகு, தன் மனைவியும் தன்னை நினைத்து இப்படி தான் கதிகலங்கி போவாளோ என்ற கவலை வந்தததும் தான், இனி திருமணமே செய்துகொள்ள கூடாது என்ற முடிவுக்கு வந்திருந்தான்.
அமைதியாக உணவை அள்ளி வாயில் வைக்க போனவன், "ஒரு வாய் சாப்பிட்டா கூடவா உன் பகவான் கோச்சிப்பார்.." நக்கலாக கேட்டிட, மீண்டும் ஒரு மெல்லிய புன்னகை தந்த குழலி,
"சாஸ்திரப்படி ஒவ்வொரு மாச ஏகாதசி தினத்தப்போ, கண்டிப்பா அரிசி உணவுகள சாப்பிடக் கூடாது" என்றதும்,
"ஏன் அரிசி சாப்பிட்டா பாவம் சேருமோ.." இடையில் குறுக்கிட்டு நக்கல் செய்தான் மதன்.
"நீங்க கேலியா சொன்னாலும் அதுதான் உண்மை.. வெறும் தண்ணீர் பழங்கள் சாப்ட்டு, சுத்தபத்தமான மனசோட ராத்திரி முழுக்க கண் விழிச்சி பகவான் நாமம் பாடி, மனசார விஷ்ணு பெருமானை சேவிக்கனும்..
அப்டி நம்ம பகவானை மனமுருகி வழிபடும் போது, நம்ம ஏழேழு ஜென்மங்களுக்கான பாவ தோஷங்கள் நீங்கி, துன்பங்கள் விலகும்னு, விஷ்ணுபுராணத்திலே இருக்கு..
அதுவும் வைகுண்ட ஏகாதசினா எம்பருமானுக்கு ரொம்பவே விஷேஷமான நாள்.. விடியற்காத்தால சொர்க்க வாசல் திறக்குறச்ச, பெருமாளை செவிச்சா பகவானோட பூரண அருளும் கிடைக்கும்.."
விழிகள் விரித்து ஆர்வமாக இவள் சொல்லிக் கொண்டிருக்க, மதனின் அலைபேசி வாயிலாக ருத்ரனின் செவிதனில், மனைவியின் மந்திரப்பேச்சிகள் மயக்கிக் கொண்டிருப்பதை அறியாது போனாளே!
"மதன் அண்ணா, நோக்கு ஒன்னு தெரியிமோ.." மீண்டும் ஆவலாக கேட்டிட,
"என்னனு கேளுடா.." அப்பக்கத்திலிருந்து ப்ளூடுத் வழியாக மிரட்டல் வரவும், உள்ளே நொந்தபடி "என்ன வதினா" என்றான் மதன்.
"நன்ன பிராமணனாக வாழ்ந்த அஜாமிளன், பெண்ணாசையால நிறைய தீய செயல்களை செய்து பெரும்பாவியாகி, மரணப் படுக்கையில கிடந்த போது, நாராயணா'னு பகவான் நாமம் சொன்னதால, விஷ்ணுதூதர்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து அந்த எமதூதர்கள் கிட்ட இருந்து அவாளை காப்பாற்றினாங்கலாம்..
ஒருத்தன் எவ்வளவு தான் பாவம் செய்திருந்தாலும், இறக்கும் தருவாயில இறைவன் நாமம் சொன்னா, பாவநிவர்த்தியாகி மோட்சம் கிடைக்கும்னு, இதுவும் விஷ்ணுபுராணத்திலே குறிப்பிட்ருக்குனா பாத்துக்கோங்கோ.."
கிடைத்த வரைக்கும் லாபம் என்று கணவனுக்கும், அங்குள்ள பிள்ளைகளுக்குமாக உணவை கட்டியபடியே, மதனிடம் புராணக் கதைகளை கூறிக்கொண்டிருக்க,
"இது என்ன டா நாக்கு வந்த சோதனை" மனதில் புலம்பிய மதன், "இவள் இப்போது ஓய மாட்டாள்" என்று நன்கு அறிந்தவனாக,
"வதினா தண்ணி காலி.." சொம்பை கொடுத்து அவளை உள்ளனுப்பி விட்ட கையோடு,
"அண்ணய்யா இன்னும் கொஞ்ச நேரம் இங்கிருந்தாலும் நாக்கு மயக்கமே வந்திடும் போலிருக்கு, மீதி புராணத்தை நீயே நேர்ல வந்து வதினாட்ட கேட்டுக்கோ, நான் போறேன்" அவசரமாக ப்ளூடுத் வழி உரைத்த மதன், ருத்ரன் பேசும் முன்னவே அழைப்பை துண்டித்தவனாக, குழலி கட்டி வைத்திருந்த உணவுக் கூடையை தூக்கிக் கொண்டு ஓடியே விட்டிருந்தான்.
சொம்பு நீரோடு வெளிவந்த குழலி, மதனையும் காணாமல், உணவு கூடையும் காணாமல் சில கணம் முழித்தவள், பின் தனியாக சிரித்துக் கொண்டவளாக அன்னைக்கு போனை போட்டு, பேச தொடங்கிவிட்டாள்.
இங்கு அப்போதே கண் விழித்த முக்தா, தன் முன்னே இருந்தவற்றை கண்டு அரண்டு விழித்தாள்.
என்னவா இருக்கும்!? யோசிச்சி கமெண்ட் காரு drs
அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்💐

Last edited:
Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 5
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.