- Messages
- 226
- Reaction score
- 211
- Points
- 63
அத்தியாயம் 7
முக்தா சிரிப்பதை கண்டு வெறியாக முறைத்த மதன், "ஏய் என்ன சிரிப்பு.." என்றான் கடுப்பாக.
அச்சத்தில் கப்பென வாய் மூடிக்கொண்டாலும், மாமி பேசிய வார்த்தையே காதில் ரீங்காரமிட, 'அரை கிழவனா..' தலை குனிந்துகொண்டவளுக்கு தானாக சிரிப்பு வந்தது. சிலுசிலு தென்றல் காற்றில் வண்ண ரோஜா மலர்கள் தலையசைப்பதை போன்ற உணர்வை அளித்தது, முத்தப்பெண்ணின் மெல்லிய சிரிப்பு.
"இங்க உன்ன கடத்தி தூக்கிட்டு வந்து வச்சிருக்கேன், அந்த பயமே இல்லாம எப்டி உன்னால சிரிக்க முடியுது, ஹான்.." மதன் இருக்கும் கடுப்பில் சிடுசிடுவென எரிந்து விழ, தலை நிமிரவே இல்லை அவள்.
"திமிரு.." உதட்டசைவில் சத்தமாக முனங்கியவனுக்கு, நெஞ்சமே பாரமாய் போனது.
இரு கையாளும் தலையினை தாங்கி அமர்ந்திருந்த மதன், திருமண வாழ்க்கை எண்ணி உள்ளூர சற்று நடுக்கம் பரவி, ஆழ்ந்த மூச்செடுத்தவனாக, அவசரமாக வெண்சுருட்டை எடுத்து பற்ற வைத்து இழுக்க, அந்த நெடியில் தலை நிமிர்ந்து முகம் சுணங்கிய முக்தா.
"ஒரு நாளைக்கு எத்தனை.." சலிப்பாக எண்ணி, பிரிக்காது வைத்திருந்த உணவை பிடிக்காமல் பார்த்தாள்.
இம்மாதிரி நேரத்தில் உணவுக்கு பதில், இளஞ்சூட்டிலுள்ள கஞ்சி போன்ற ஆகாரம் தான் வயிற்றுக்கு இதத்தை தரும் அவளுக்கு. மதன் எடுத்து வந்ததோ கோழிக் குழம்பும், தலை பிரட்டலும். அதனை சோர்வாக காண்பதை புகையினை இழுத்து விட்டவாறு கண்ட மதன்,
"என்ன உருண்டை பிடிச்சி ஊட்டி விடணுமோ.." என்றான் எரிச்சல் தொனியில்.
"பேஜ் நாஹி கா ரே..?" மெல்லமாக கஞ்சி கேட்டவளை உற்று நோக்கிய மதன்,
"இருக்க வெறிக்கு, துப்பாக்கி எடுத்து உன் வாய்லே சுட்டு போட்ருவேன்.. பாகா தமிழ்லோ செப்பு.." கடுங்கோபத்தில் கத்த, நெஞ்சி பதறிய முக்தா, அவசரமாக வெள்ளை சாதத்தை கையிலெடுத்து, கை நடுக்கத்துடன் அதில் வெந்நீரை ஊற்றி அவன் முன்பு காட்டவும், யோசனையாக அவளை பார்த்த மதன்,
"கஞ்சி கேட்டியா.." என்றான்.
"ஹான் ஹோய்.." ஆம் என வேகமாக தலையாட்ட, தலையில் அடித்துக்கொண்ட மதன்,
"தின்னு தொலை.. இதெல்லாம் மட்டும் உனக்கு புரியும்" பற்களை கடித்தவனாக, "எதுக்கு தண்ணி ஊத்தி சாப்பிடுறா.." என்ற குழப்பத்தில் புருவம் உயர்த்தியவனின் விழிகள், முக்தாவின் ஒற்றை கரம் அடிக்கடி வயிற்றை தடவி நெளிவதை கூர்ந்தது.
"ஓய், ஜன்னி வச்சி சாக பிளானா.. இந்தா முதல்ல தலைய துவட்டு, அப்புறம் சாப்டு.. நாக்கு பதில் சொல்ற வரைக்கும், நீ உயிரோட இருக்கணும்.." அவள் தூக்கி போட்ட அதே துண்டினை எடுத்து, மதனும் யோசிக்காமல் அவள் மீது போட, குப்பென வீசிய கள்வனின் மணம், பெண்ணவளின் நாசி மட்டுமல்லாது, பாவையின் முகத்தையும் மூடி, நெஞ்சி உதற செய்தது.
முகத்தை மூடிய துண்டினை அவசரமாக விலக்கி, முட்டை கண்களை விரித்த முக்தா, அந்த துண்டையும் தன்னையும் மாறி மாறி பார்க்கும் செய்கையில், சில கணம் வரை தானும் புரியாமல் பார்த்த மதன், பின் தான் அவளது பார்வையின் பொருளை உணர்ந்தான் போலும்.
"ஓஹ்.. மேடம் தனி துண்டுல துடைக்கிற வர்கமோ.. இத்தனை நாளா என் சட்டைய போட்டு உக்காந்து இருந்தியே, அப்ப மட்டும் நல்லா இருந்துதோ.." நக்கலாக கேட்டிட, பதில் சொல்லாமல் முறைப்பாக கண்ட முக்தா, தன் இயலாமை எண்ணி பெருமூச்சு விட்டாள்.
சுவாசக் குழாய் முழுக்க கள்ளனின் வாசமே நிறைந்திருக்க, அவன் கூர் பார்வை தன்னை துளைப்பதை உணர்ந்து, என்ன செய்வதென புரியாமல் உணவை உண்ண தொடங்கியவளை விடாமல் பின் தொடர்ந்தது, மதனின் பெயர் அறியா பார்வை.
ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான வதனம், அடிக்கடி வலியில் சுணங்கி மீளும் அவளது நடுங்கும் உருவம் என முகம் சோர்ந்து உண்ணும் அன்னமயிலை ஆழமாக பார்த்தான் மதன்.
"பொண்ணுங்க பாக்க தான் அழகு, உள்ளுக்குள்ள என்னா ஒரு அழுத்தம்..
பயமே இல்லாம சாதிக்கிறாளே.. எப்படி இவள நம்ம வழிக்கு கொண்டு வந்து உண்மைய போட்டு வாங்குறது.." என்ற யோசனையில் இருந்த மதன்,
"நாளைக்கு ஊருக்கு வேற போகணுமே, இவள எப்டி தனியா விட்டு போறது.." குழப்பநிலையில் மல்லாக்க படுத்தவன் அலைபேசி அதிர்ந்தது.
"செப்பு ரா.."
"பசங்க எல்லாரும் சேர்ந்து இன்னைக்கு பார்ட்டி பண்ண போறானுங்க மதனு, நைட் நம்ம இடத்துக்கு வந்துடு சரியா.." கூட்டாளி ஒருவன் சொல்லி வைக்க, உடல் கிளுகிளுத்து உற்சாகம் கொண்டான் மதன்.
மாதத்தில் இரண்டு மூன்று முறை இதுபோல மொத்த கூட்டாளிகளும் சேர்ந்து, சரக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என தங்களை மறந்த பரவச நிலைக்கு செல்வது வழக்கம். அதற்கு தான் இன்றும் அழைத்திருப்பது.
இரவை எட்டும் மாலை வேளையில் மதன் வெளியே செல்ல தயாராக இருக்க, முக்தா உறக்கத்திக்கு கண்கள் சொருகினாள்.
"இவளுக்கு தான் ஒன்னும் சரிப்பட்டு வரல.." சலிப்பாக எண்ணிய மதன், "ஓய் நைட் தனியா மேனேஜ் பண்ணிப்பியா.." உரக்கக் கேட்ட சத்தத்தில், சொருகிய தூக்கமெல்லாம் எங்கு பறந்து போனதோ!
"ம்.." மட்டும் கொட்ட, அந்த சோர்ந்த ம்'மில், கவலையே இல்லாத நாயகனின் மனன் கூட நிலையின்றி தடுமாறியது.
** ** **
"ஏண்ணா எங்க கிளம்பிட்டேள்.." சாக்லேட் நிற சட்டையினை மாட்டிய கணவன் பின்னே குரல் கொடுத்தாள் குழலி.
"பசங்க பார்ட்டிக்கு கூப்பிட்டானுங்க குயிலு, பத்திரமா இரு போய்ட்டு வந்திடுறேன்.." என்ற ருத்ரன் கண்ணாடி வழியே மனைவியின் மதிவதனம் கண்டான்.
கோபமும் இயலாமையும் போட்டி போட, பதில் சொல்லாது திரும்பி செல்லப் போனவளை பின்னிருந்து அணைத்திருந்தான் ருத்ரங்கன்.
"பதில் சொல்லாம திருப்பிட்டு போனா, என்ன டி அர்த்தம் குயிலு.." பெண்ணவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து, அவள் வாசத்தை உள்ளிழுத்தான் ஆழமாக.
"என்ன பதில் சொல்லணும்.."
"நீங்க போய்ட்டு வர்ற வரைக்கும் பத்திரமா இருக்கேன்னு, செப்பாலி டி.."
"சரி நீங்க போய்ட்டு வர்ற வரைக்கும் பத்திரமா இருக்கேன்.." ரோபோ போல் சொன்னவளை தன்னை நோக்கி திருப்பிய ருத்ரன்
"என்னாச்சி உனக்கு.." என்றான் கனீர் குரலில்.
"நேக்கு என்ன, நன்னா தானே இருக்கேன்.."
"நீயா சரிதான்.. சரி செப்பு, நேனு போறது உனக்கு புடிக்கல அப்டிதானே.." தீர்க்கமாக கேட்டவனை அண்ணார்ந்து பார்த்தாள் குழலி.
"ஆமானு ஒத்துண்டா போகாம இருப்பேளா.. இல்ல தானே, போங்கோ.. போயி மூச்சி முட்ட குடிச்சிட்டு வாங்கோ.. நீங்க குடிச்சி கெடுறது போதாதுனு மத்தவா எல்லாரையும் சேர்த்து கெடுங்கோ.." மூக்கு நுனி கோபத்துடன் உரைத்து விட்டு விலகி செல்லப் போன குயிலை, இடையில் கைவிட்டு தன்னோடு சேர்த்து அணைத்த ருத்ரன்,
"என்னவோ நான் தான் அவனுங்களுக்கு புட்டி போட கத்து குடுத்த மாறி ஓவரா சிலுத்துக்குற, ஒவ்வொருத்தனுக்கும் எருமகடா வயசாச்சு டி.. அவனுங்க குடிச்சா, நேனு ஏமி சேஸ்தானு.." இறுக்க முகம் தளராமல், பாவமாக பேச இவனிடம் தான் பயிற்சி எடுக்க வேண்டும்.
"அச்சோ பாவம்ம்.. அதான் இன்னசன்ட்டா பேச வரலையே, அப்புறம் எதுக்கு இந்த பேச்சி.." அவன் தாடி இழுத்து, கோவமாக கொஞ்சிய குழலி,
"அவா எல்லார்க்கும் நீங்க ஒருத்தர் தான் ஒட்டுமொத்த சொந்தமுமா இருக்கேள், நீங்களே பொறுப்பில்லாம அவா கூட சேர்ந்து கொட்டமடிச்சா எப்டிண்ணா..
அவாளுக்கு எல்லாம் ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்க வேண்டியது, உங்க பொறுப்பு தானே.." முறுக்கலாக சொன்ன மனைவியை, லேசான முறுவலோடு கண்டான் ருத்ரன்.
"ஏன் குயிலு, நீயே என் தம்பிகள பத்தி இவ்வளவு தூரம் யோசிக்கும் போது, நேனு எதுவும் யோசிக்க மாட்டேன்னு நினைச்சியா.." அழுத்தமாக கேட்ட கணவனைப் பற்றி தெரியாதா! வெறும் வார்த்தையால் அல்லாது, உயிராய் அவர்களை நேசித்து காப்பது இவன் தான் என்று.
"உங்கள பத்தி நேக்கு தெரியும்ண்ணா, ஆனாலும் அவா எல்லாரும் தனக்கான வாழ்க்கைய வாழாம, இப்டியே தனிச்சி இருந்திடுவாங்களோனு ஒரு ஆதங்கத்துல சொல்லிட்டேன்" வருத்தமாக கூறிய மாமியின் மினுமினு செவ்விதழை கொத்தித் தின்றது ஆண் உதடு.
"ச்சோ.. பேசிட்ருக்கும் போது என்ன பண்றேள்.." கணவன் தந்த வன்முத்தத்தில் சிவந்து போனாள் குழலி.
"அதுவா, எப்டி கடிச்சி தின்னாலும், இந்த உதடு மட்டும் பளபளப்பா மின்னி, சாறு குடிக்க வைக்கிதே, அதான் டேஸ்ட் பாத்தேன்.." கண்ணடித்து கூறிய கள்வனை, வெட்கத்துடன் நோக்க, அவள் நெற்றி முட்டிய ருத்ரன்,
"15, 20 வருஷமா ஒண்ணுமண்ணா கூட இருக்கானுங்க டி, அவனுங்களுக்கு ஒரு அடிப்பட்டா என் நெஞ்சில ரத்தம் வரும்..
நம்ம நாட்டுக்கு எதிரா செயல்படுற ஒவ்வொருத்தனையா தேடி கண்டுபிடிச்சி, சத்தமில்லாம அவனுங்க கதைய முடிக்கும் போது எத்தனை நிம்மதியா இருக்குமோ, அதே அளவுக்கு எங்கூட போராடுற என் தம்பிகளோட வாழ்க்கையும், துப்பாக்கி கத்தி ரத்தம்னே முடிஞ்சிடுமோனு கவலையாவும் இருக்கும்..
இதுவரைக்கும் நீங்க போராடி பண்ண உயிர் தியாகமெல்லாம் போதும் போங்கடா, எஞ்சி இருக்க கொஞ்ச வாழ்க்கையாவது, உங்களுக்காக வாழ்ந்து பொண்டாட்டி, புள்ள குட்டினு சந்தோசத்த அனுபவைங்கடான்னு அடிச்சு விரட்டினாலும், அண்ணய்யானு என் கால சுத்தி ஓடி வர என் தம்பிங்க ஒவ்வொருத்தம், இந்த ருத்ரனுக்கு கிடைச்ச தங்கங்க டி..
பயலுங்க எல்லார் உடம்புலயும் ராணுவ ரத்தம் ஓடுதுல்ல, அவ்வளவு சீக்கிரத்துல மனச மாத்தி, கல்யாண வாழ்க்கைக்குள்ள தள்ளிட முடியாது.."
"அப்புறம் வேற என்ன பண்ணா மாத்த முடியும்.." இடை புகுந்து சந்தேகம் கேட்டவளின் மின்னும் இதழில், மீண்டும் மோகம் வந்தது காளையனுக்கு.
"என்ன பண்ணா தானா வழிக்கு வருவானுங்களோ, எல்லாத்தையும் பண்ணிட்டேன்.. இனி ஒவ்வொருத்தனா ஜோடி சேருறது தான் பாக்கி.." வில்லங்கமாக கூறிய கணவனை இமை சிமிட்டாமல் பார்த்தாள் குழலி.
"ஏமி டி அப்படி பாக்குற.." அக்னிக் கண்களால் விழுங்கினான், தனது மிட்டாய் குயிலை.
"ஏதோ வில்லத்தனம் பண்ணிருக்கேள், கேட்டா சொல்லவா போறேள்.. சரி சரி கிளம்புங்கோ, நைட் ரொம்ப நாழியாக்காம
சீக்கிரம் ஆத்துக்கு வந்திடனும்.. முக்கியமா மூச்சி முட்ற அளவுக்கு தண்ணி போட கூடாது சரியா.."
தொடக்கத்தில் அலுத்தவளின் குரல் மெல்லத் தேய்ந்து ஒலிக்க, மனைவி சொல்லுக்கு சம்மதம் கூறிவனாக, மீண்டுமொருமுறை இதழ் தேனை ருசித்த பின்னே, அங்கிருந்து சென்றான் ருத்தன்.
ருத்ரன் வைத்த முதல் கன்னிவெடி தான், மதனின் வீட்டில் குறுகளாக படுத்துக் கிடக்கிறதோ!
அனைவரும் மதுநீரில் மூழ்கி, உளறலான பாடல் பாடி ஆட்டம் பாட்டமாய் உற்சாகத்தில் மூழ்கி இருக்க, இரண்டு பாட்டில் காலி செய்தும், முத்தப்பெண்ணின் நினைவில் போதை ஏறாது குழம்பி நின்றான் மன்மதன்.
தொடரும்.

Last edited:
Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 7
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.