அத்தியாயம் - 7
கருமேகம் விரிசல் விட்டு, விடாத மழை இடி மின்னலோடு பலமாக கொட்டி தீர்த்தது பூமித்தாயின் மீது.
அச்சோ சமைக்க வேண்டி வீட்ல எந்த பொருளும் இல்லையே, ஊருக்கு போய்ட்டு வந்து வாங்கிக்கலாம்னு நினச்சேன் கடைசில மறந்து போய்ட்டேன். காலைல இருந்தத வச்சி பாத்தாச்சு, இப்ப விஷ்வா வேற இருக்கானே...