Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
New member
Messages
3
Reaction score
1
Points
3
அசுரன் 1

சோழிகளை உருட்டி பார்த்தும், ஜாதகத்தை தலைகீழா திருப்பி போட்டு பார்த்தும், ஏடுகளை புரட்டி பார்த்தும் ஒரே பதில்தான் கிடைத்தது மித்ராதேவிக்கு. அவருக்கு எதிரே இருந்த ஜோதிடர் மித்ராதேவியிடம் சொன்னதையேதான் சொல்லி கொண்டிருந்தார்.

"வேற வழியே இல்லையா ஜோதிடரே!" என்றும் எப்பொழுதும் மிடுக்குடன் இருக்கும் மித்ராவுக்கே இன்று தவிப்பும் கலக்கமுமாய் போனது ஜோதிடர் சொன்ன பதிலால்.

மித்ராதேவி மிகப்பெரும் சாம்ராஜ்யத்திற்கெல்லாம் தலைவி அவள். வழி வழியாக வந்த பணக்கார லிஸ்டில் மித்ராதேவிக்கும் அவளது குடும்பத்திற்கும் எப்பொழுதும் முதலிடம் தான்.

தமிழ்நாட்டில் உள்ள கவர்மெண்ட் கம்பெனிகளில் முதலிடம் வகிப்பது மித்ரா கார்மெண்ட்ஸ் கம்பெனி. சென்னையில் மட்டுமல்லாது இன்னும் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பல கிளைகளை தொடங்கி மிகப்பெரும் சாம்ராஜ்யத்தை நிறுவியுள்ளனர். அவர்களின் கார்ட்மென்ட்ஸ் கம்பெனியை... இது மட்டும் அல்லாது பெரிய பெரிய மால்களும், தியேட்டர்களும் அவர்களுக்கு சொந்தமாக இருக்கிறது. பல நில புலன்களை அடக்கி வைத்திருப்பவர்களும் இவர்களாகத்தான் இருக்க முடியும்.

பணக்கார லிஸ்டில் முதலிடத்தில் என்றும் எப்பொழுதும் முதலிடத்தை தக்க வைத்து கொண்டிருப்பதும் இவர்கள்தான் அப்படிப்பட்டவர் இன்றைக்கு கலக்கமாக இருப்பதற்கு காரணம் அவருடைய ஒரே மகன் உக்ரானந்த் மட்டும்தான்.

திருமணமாகி முழுதாக ஆறு வருடங்கள் கழித்து பிறந்தான் உக்ரானந்த். உக்கிரானந்த் இவன் தான் நம் கதையின் நாயகன் வழக்கமாக வரும் ஹீரோக்களில் இவன் கொஞ்சம் மாறுபட்டு இருப்பான் இப்போதைக்கு சிறு இன்றோடக்சஷன் போதும். கொஞ்ச நேரம் போகட்டும் சொல்றேன்.

அந்த ஹால்ல ஏசியால் நிரம்பி இருந்தாலும் நெற்றியில் சிறு வியர்வை துளிகள் சேர்க்காமல் இல்லை. மித்ராதேவி எதற்காக இவ்வளவு படபடப்பு ஆனது. காரணம் அவர் மகன் ஒருவனே ஆவான். மகனின் மேல் அத்தனை பாசம் வைத்திருக்கிறாள் மித்ராதேவி. பின்ன தவமிருந்து பெற்ற குழந்தை அல்லவா ஆனால் குழந்தை குழந்தையாகவே இருந்திருந்தால் இவ்வளவு சிரமம் இருந்திருக்காது போல. இப்பொழுது குழந்தை பிறந்து வளர்ந்து அவளுடைய முழு சாம்ராஜ்யத்தையும் கட்டி ஆண்டு கொண்டிருக்கிறான்.

இப்பொழுதுதான் மித்ரா தேவி கொஞ்சம் ஓய்வெடுக்கிறார். ஆனாலும் அலுவலகத்திற்கு போவதும் வருவதுமாக இருப்பார். எப்பொழுதும் அவர் நிறுத்தியது இல்லை. தினமும் ஒரு முறையாவது அவர்களுடைய அலுவலகத்திற்கு சென்று ஒரு பார்வை பார்த்து விட்டு வருவாள். அங்கு உள்ளவர்கள் நன்றாக வேலை செய்கிறார்களா? அலுவலகத்தின் நிர்வாகம் சரியாக நடந்து கொண்டிருக்கிறதா? என்று மேற்பார்வை பார்ப்பது உண்டு.

மகன் எவ்வளவோ சொல்லி பார்த்தான். ஏற்கனவே பிரஷர் உங்களுக்கு இதுல நீங்க வரணுமா? என்று கேட்பான். ஆனால் அவர் அதையெல்லாம் பெரும் பொருட்டாக நினைப்பதில்லை.

"ஏன் எனக்கு அப்படியே வயசாகிடுச்சுன்னு முடக்கி ரூம்ளையே அடைச்சு வைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கியா ஆனந்த்? என்று கேட்டால்,

"மா நான் அப்படி எல்லாம் சொன்னேனா " பெருமூச்சுடன் அவன் கேட்டுவிட்டு அதற்கு மேல் அன்னையின் பேச்சுக்கும் மறுபேச்சு பேசாமல் விலகி சென்று விடுவான் உக்ரானந்த்.

அன்னை என்றால் அவனுக்கு உயிர். தன் தாயின் அளவு கடந்த பாசம் வைத்திருந்தபடியால் அவன் தன் தாயின் சொல்லை தட்டாமல் நடப்பான். அவர்கள் காட்டும் வழியில் நடப்பவன் அவன். ஆனாலும் சுயபுத்தி என்று ஒன்று இருக்கிறது அல்லவா தொழிலில் சில நேரங்களில் தாயே முன்வந்து சில திட்டங்கள் சொன்னாலும் அதை அவன் காதில் கேட்டுக் கொள்வானே ஒழிய ஆபீஸ் போனதும் அலுவலகத்திற்குள் போனதும் அவனுடைய எண்ணங்களை இயற்றி விடுவான்.

இது சற்று மித்ராவுக்கு கொஞ்சம் எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தாமல் இல்லை. ஆனாலும் தொழிலில் அவனிடம் இருந்து இறுதியாக வரப்படும் செய்திகள் அனைத்தும் நன்றாக இருந்தப்படியால் பரவாயில்லையே என்று தன் மகனை தன் மனதிற்குள் நினைத்து பெருமை பட்டு கொள்வார்.

அதிலிருந்து மகனுடைய தொழிலிலும் அவர் தலையிடுவதில்லை. அவன் என்ன தொழில் யுத்தியை செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்து அவர் விலகி செல்வதும் உண்டு.

மித்ரா தேவி தன் மகனை அன்புடனும் பாசத்துடனும் வளர்த்து கூடவே அதிகப்படியான ஆணவத்தையும், அதிகாரத்தையும், தைரியத்தையும், பணம் இருப்பவர்கள் மட்டும் மதி பணம் இல்லாதவர்களை உன் காலுக்கு கீழே மிதி என்று சொல்லிக் கொடுத்த படியால் பணக்காரர்களுக்கே உண்டான மிடுக்குடனும், திமிருடனும் வலை வருவான் உக்ரானந்த்.

"என்ன ஜோசியரே! சோழிய போட்டு பாத்தாச்சு, ஜாதக நோட்டை திருப்பி திருப்பி பார்த்தாச்சு, சுவடிகளையும் பார்த்தாச்சு இதுக்கு மேல எதுவுமே வழி இல்லையா என் மகனுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த கட்டத்தில் இருந்து தப்பிக்கவே முடியாதா?" தாயின் உள்ளம் துடிக்காமல் இருக்குமா தன் மகனுக்கு கண்டம் என்று ஜாதகத்தில் இருந்ததும் அவளும் பதறிவிட்டாள்.

கடவுள் பக்தியையும், ஜாதகத்தையும் மிகவும் நம்புபவர் மித்ரா. உக்ரானந்தோ அதை நம்பவே மாட்டான். அது அவனுக்கு பிடிக்கவும் பிடிக்காது. கடவுளின் மேல் நம்பிக்கை இல்லை அது கூட ஓகே ஆனால் "ஜாதகமா அது எதுக்கு தேவை இல்லாம நம்முடைய வாழ்க்கையில அடுத்து என்ன நடக்க போகுதுங்கறதுதான் வாழ்க்கையினுடைய அடுத்த சுவாரசியமே இருக்கு இதை ஜாதகத்தை வச்சு தெரிஞ்சுக்கணுமா?" என்று கேலியாகவும் நக்கலாகவும் சொல்லிவிட்டு கடந்து போவான் உக்ரானந்த்.

"நீ வேணா கடவுள் மேலேயும் ஜாதகத்து மேலேயும் நம்பிக்கை இல்லாம இருக்கலாம் ஆனந்த் ஆனா என்னால அப்படி எல்லாம் இருக்க முடியாது. நான் நீ பிறந்ததிலிருந்து நேரம் குறிச்சு வச்சு நீ என்ன எல்லாம் பண்ணுவன்றது முதல் கொண்டு ஜோசியர் கிட்ட கேட்டு வச்சிருக்கேன் அதுல ஒன்னு கூட இதுவரைக்கும் நடக்காமல் இருந்ததே இல்ல. உனக்கு அஞ்சு வயசா இருக்கும்போது நீ காணாமல் போயிடுவேன்னு சொன்னாரு அதே போல நடந்தது ஆனால் எப்படியோ நாங்க கண்டுபிடிச்சு உன்னை கூட்டிட்டு வந்துட்டோம். அதேபோல உனக்கு எட்டு வயசு இருக்கும் போது உனக்கு ஒரு ஆக்சிடென்ட் நடக்கும்னு சொன்னாரு. அந்த கண்டத்திலிருந்து நீ தப்பிச்சு வந்துருவேன்னு சொன்னாரு. அதே போல நடந்தது என்னதான் நாங்க கண்ணுல விளக்கெண்ணைய ஊத்தி நாங்க அவ்வளவு தூரம் பார்த்து பார்த்து கவனிச்சுக்கிட்டாலும் ஜோசியத்துல உனக்கு சொன்னது ஏதாவது நடக்காம இருக்கா? சரி நான் கெட்டது எல்லாம் சொல்றேன் நினைக்காத. நல்லது சொல்லட்டுமா நீ பெரிய சாதனையை அச்சீவ் பண்ணுவேன்னு சொல்லி சொன்னாரு. பிளஸ் டூல நீதானடா தமிழ்நாட்டிலேயே ஃபர்ஸ்ட் மார்க். யோசிச்சு பாரு ஜாதகர் சொன்னது எல்லாமே கரெக்டா நடந்துகிட்டு தான் இருக்கு. நீ தேவை இல்லாம என்னுடைய வழியில குறுக்க வராத எப்படி உன்னுடைய தொழில குறுக்க வர மாட்டேனோ அதே போல என்னுடைய இந்த மாதிரியான விஷயங்கள்ள நீ குறுக்க வரவே கூடாது" அன்றைக்கு ஒரு நாள் கட்டன் ரைட்டாக பேசி விட்டார் மித்ரா தேவி.

அதிலிருந்து அவன் தன்னுடைய அன்னையின் இந்த மாதிரியான விஷயங்களில் எல்லாம் அவன் குறுக்கே போவதுமில்லை மூக்கையும் நுழைப்பதும் இல்லை. என்னவோ செஞ்சிட்டு போங்க என்னை விட்டால் போதும் என்று அவன் பாட்டுக்கு அவன் வேலைகளை செய்து கொண்டிருக்கிறான் இன்று வரையிலும். ஆனால் நாளைக்கே அதே ஜாதகத்தின் காரணமாக வைத்து தான் ஒரு பெண்ணை உனக்கு திருமணம் முடிக்க போகிறார்கள் என்று தெரிந்தால் என்ன செய்வாய் உக்ரானந்த் உக்கிரமாகி விடுவானோ?

"என்ன ஜோசியரே பார்த்துட்டே இருக்கீங்க எந்த பதிலும் சொல்லாம இருக்கீங்க வேற வழியே இல்லையான்னு கேட்டா இப்படி திருத்திருன்னு முழிக்கிறீங்களே இத்தனை வருஷமா நாங்க உங்ககிட்ட தான் ஜாதகம் பார்த்துட்டு இருக்கோம். நீங்களே இப்படி தடுமாறினா எப்படி?" தவிப்புடன் கேட்டவளை ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்த ஜோதிடரோ,

யோசனை வந்தவராய் "வேற ஒரு வழி இருக்குமா?" என்று சோழிகளையும் சுவடிகளையும் ஜாதகத்தையும் ஓரம் கட்டி ஜாதக நோட்டையும் ஓரம் கட்டி வைத்தவர் கையை கட்டிக் கொண்டு எதிரில் இருக்கும் மித்ரா தேவியை பார்க்க அவரோ அடுத்து அவர் என்னதான் சொல்ல வருகிறார் ஏதாவது நல்லது நடந்தால் சரி என்னும் ரீதியில் தான் அவருடைய பார்வை முழுக்க முழுக்க அந்த ஜோசியரின் மேல் பதிந்து இருந்தது.

"31 வயசுல உங்க பையனுக்கு ஒரு கண்டம் வரும் அதுவும் உயிருக்கே ஆபத்தான ஒரு கண்டம் வரும்னு சொல்லி இருக்கேன் இல்லையா?"

"ஆமா"

"அப்போ அதுக்கு மாங்கல்ய பாக்கியம் ரொம்பவும் ஸ்ட்ராங்கா இருக்கிற ஒரு பொண்ண தான் பார்த்து நாம உங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் நீங்க இப்ப கல்யாணம் பண்ணி வைக்க போற பொண்ணுடைய ஜாதகத்தையும் உங்க பையனுடைய ஜாதகத்தையும் இணைச்சு பாக்கும் போது அந்த பொண்ணுக்கு அவ்வளவா மாங்கல்ய பாக்கியம் இல்லம்மா. ஆனா திருமண பொருத்தத்தை பார்க்கும்போது ரெண்டு பேருக்கும் நல்லபடியான பொருத்தங்கள் பொருந்தி வந்திருக்கு. மாங்கல்ய பாக்கியம் இருக்கக்கூடிய பொண்ணா தான் உங்க பையனுக்கு திருமணம் முடிச்சு வைக்கணும் நீங்க பார்த்திருக்கிற இந்த பொண்ண திருமணம் முடிச்சு வைக்கிறது அவ்வளவு சரி இல்லை. அதையும் மீறி நீங்கள் இந்த கல்யாணத்தை பண்ணி வச்சீங்கன்னா உங்க பையனுடைய உயிருக்கு உத்திரவாதம் இல்லை. அவ்வளவுதான் சொல்ல முடியும்." என்று சொன்னவரும் எழுந்துவிட்டார். அவர் எழுந்ததும் அவருக்கே பதட்டம் ஆகி விட்டது.

"என்ன ஜோசியரே ஐயா இப்படி சொல்றீங்க?"

"வேற எப்படிமா என்ன சொல்ல சொல்றீங்க ஜாதகத்துல என்ன இருக்கோ அதே தான் சொல்ல முடியும். நீங்க ஜாதகத்தை கொடுத்த போதே அதை வாங்கி பிரிச்சு படிச்சு பாத்தாச்சு. எல்லாத்தையும் பண்ணி பாத்துட்டேன் ஏதாவது வழி கிடைக்குமான்னு பார்த்தேன் எந்த வழியும் கிடைக்கல சரி சோழிகளை உருட்டி பார்த்தேன். பதில் சொல்லும்னு பார்த்தேன் அதுவும் இதே பதில்தான் சொல்லுச்சு. சுவடிகளை பார்க்கும் போது ஏதாவது விடை தெரியுமான்னு பார்த்தேன் சுவடிகளை விட பெரிய ஒரு ஜாதகம் இந்த உலகத்திலேயே இல்லமா அதுவும் பாத்தாச்சு. அதுக்கும் வழி இல்ல நீங்க ஒன்னு பண்ணுங்க ஒரு நல்ல மாங்கல்ய பாக்கியம் இருக்கிற பொண்ணா பாத்து உங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி வையுங்க. அப்படிப்பட்ட பொண்ணு ஏதும் உங்களுக்கு கிடைத்தது என்றால் அந்த பெண்ணுடைய ஜாதகத்தை நீங்க என்கிட்ட எடுத்துட்டு வாங்க நான் பொருத்தம் இருக்கா இல்லையான்னு பார்த்து உங்களுக்கு சொல்றேன்" என்று அவர் சொல்லவும் மித்ராவுக்கு ஒரு நிமிடம் கலக்கமாகி போனது.

"இல்ல ஜோதிடரே எனக்கு நான் பார்த்த பொண்ணுதான் என் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் அதுக்கு ஏதாவது வழிவகை இருக்கான்னு மட்டும் கொஞ்சம் பார்த்து சொல்லுங்க" என்று சொல்லவும் ,

"சரி ஒரு நிமிஷம் இருங்க நான் மறுபடியும் ஒருமுறை பார்க்கிறேன்" என்று சொன்ன ஜோதிடர் மீண்டும் ஜாதகத்தை பார்த்தார். பின்பு ஏதேதோ கணக்கு பண்ணி பார்த்துவிட்டு,

"அம்மா ஒரு வழி இருக்கு வேணும்னா உங்க மகனுக்கு இரண்டு தாரம் அமைச்சு வைக்கலாம் இந்த பொண்ணுதான் நீங்க திருமணம் செஞ்சு வைக்கணும்னு நினைக்கிறீங்க அதாவது இந்த பொண்ணுதான் உங்க வீட்டுக்கு மருமகளா வரணும்னு நீங்க நினைக்கிறீங்க. அப்படி தானே?" என்று சொல்லிவிட்டு ஜோதிடர் இடையிலேயே வார்த்தைகளை நிப்பாட்ட அவர் ஆம் என தலையை ஆட்டவும்,

"அப்படின்னா நான் ஒரு யோசனை சொல்றேன் அது உங்களுக்கு சரியாக வருமானு பாருங்க இன்னையோட உங்க மகனுக்கு 30 வயசு முடிஞ்சு 31 வயசு ஆகப்போகுது. அதனால இந்த 31 வது வயசுல தான் உங்க மகனுக்கு கண்டம் இருக்கறதுனால நல்ல மாங்கல்ய பாக்கியமாக இருக்கிற ஒரு பொண்ண பார்த்து திருமணம் செய்து வைங்க 31 வயசு கடந்து முடிஞ்சதுக்கு அப்புறமா நீங்க நினைச்ச பொண்ணுகக்கே மீண்டும் ஒரு திருமணத்தை உங்க மகனுக்கு செய்து வைக்கலாம். உங்க மகனுக்கும் ரெண்டு தார அமைப்பு இருக்குமா? நான் சொன்னது ரொம்பவும் தவறான ஒரு விஷயம் தவறான ஒரு கருத்து ஆனா நீங்க ரொம்பவும் பிடிவாதம் பிடிக்கறதுனால என்னுடைய தொழிலுக்கும் நியாயமற்றதான யோசனையை சொல்ல வேண்டியதா போச்சு" என்று அவரும் சற்றே பயந்தபடியே மித்ராதேவியை பார்த்து சொல்லவும். அவருக்கு கண்கள் முழுவதும் பளிச்சென்று ஆகிவிட்டது.

ஜோதிடர் எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிவிட்டு போயிருக்கலாம் என்ன இருக்கிறதோ அதை மட்டுமே சொல்லிவிட்டு போயிருக்கலாம். ஆனால் மித்ரா தேவியின் மூலமாக அவர்களுக்கு வந்த வருமானம் பல பல. அதனால் உதவி செய்யும் நோக்கில் அவரும் இப்படி ஒரு யோசனையை சொல்லிவிட, தேவியின் மூளையில் உடனடியாக இதை செயல்படுத்தி விட வேண்டும் என்று மட்டும் தோன்றியது.

இருவரும் நின்று இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் அந்த வீட்டின் வாயிலின் வெளியில் கதவு தட்டும் ஓசை கேட்டது யார் என்று பார்க்க,

"மே ஐ கம்மின்" என்றாள் ஒருத்தி.

"நீயா நீ எதுக்கு ஆபீஸ் நேரத்துல இங்க எதுக்கு வந்த? உனக்கு இங்க என்ன வேலை?" கணீரென்ற குரல் அந்த அறையே அதிரும் அளவுக்கு சத்தமாக பேசினார் மித்ராதேவி.

"யப்பா என் காதே போச்சு" சிலிர்த்து பயந்து அடங்கினாள் பெண்ணவள்.

" மேம் சார் பைல வீட்லையே மறந்து வச்சிட்டு வந்துட்டாரு போர்டு மீட்டிங்ல இருக்காரு சோ என்ன எடுத்துட்டு வர சொன்னாங்க மேம்" பவ்யத்துடன் பேசிய பெண்ணை பார்க்கும் போது எரிச்சலும், கோபமும் தான் வந்தது மித்ராவுக்கு.

"சரி சரி மேல தான் அவனோட ரூம்ல பைல் இருக்கு போயி எடுத்துக்கோ" என்று சொன்ன மித்ராவும் அடுத்த நிமிடம் ஜோசியரின் பக்கம் பார்வையை திருப்பி மேற்கொண்டு ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார் திடீரென யோசனை வந்தவராக படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருந்த அந்த பெண்ணை திடுமென நிறுத்தினார் மித்ரா தேவி.

"ஏய் ஒரு நிமிஷம் நில்லு" அவள் சொன்னதும் பதட்டம் அடைந்து படிகளில் ஏறிக் கொண்டிருந்தவளின் கால்கள் அப்படியே நின்றுவிட,

"கீழே இறங்கி வா" என்று சொல்லவும் அவளும் மடமடவென கீழே இறங்கி வந்தாள்.

"நீ எதுக்கு ரூமுக்கு போகணும் ஒரு நிமிஷம் இரு நானே போயி எடுத்துட்டு வரேன்" அவளின் மேல் நம்பிக்கை இல்லை மித்ராவுக்கு. அறைக்குள் சென்று ஏதேனும் காஸ்ட்லியான பொருட்களை திருடிவிட்டால் என்ன செய்வது நம்பிக்கை அற்றவளாக அவராகவே உக்கிரானந்த் அறைக்கு சென்றார்.

சில நிமிடங்களிலேயே பைலுடன் வந்தவர் அவளிடம் அந்த பையிலை கொடுத்து போ என்று சொல்லவும் அவளும் அதை பெற்றுக் கொண்டு வேகமாக அங்கிருந்து கிளம்ப போக,

"ஒரு நிமிஷம்" என்று சொன்னார் ஜோதிடர்.

அவளுக்கோ யார் நம்மை அழைத்தது முன்னே போய்க்கொண்டிருந்தவள் பின்னே திரும்பி பார்த்தாள். ஜோதிடர் தான் அழைத்திருந்தார்.

"உன்னை தான் வா இங்கே" என்று அழைக்கவும் அவளும் என்னவோ ஏதோ என்று பயந்தபடியே போனாள். கலக்கமாக அவரின் முன்னே நிற்க ஜோதிடரோ,

"அம்மா இந்த பொண்ணுடைய சாமுத்திரிகா லட்சணத்தை வைத்து பார்க்கும் போது இந்த பொண்ணுக்கு மாங்கல்ய பாக்கியம் ஜொரூரமா இருக்கும்னு நினைக்கிறேன். ஏமா பொண்ணு கொஞ்சம் உன்னுடைய கையை கொடு" என்று சொல்லவும் அவளும் தன்னுடைய வலது கையை நீட்டினாள்.

"வலது கையில்லமா இடது கையை காமி" என்று சொல்லவும் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் மித்ராவை பார்க்க,

"என்ன ஜோதிடரே இதெல்லாம் என்று கேட்க,

"அம்மா பொறுங்க" என்று சொல்லிவிட்டு,

"ஏமா உன் இடது கையை கொடு" என்று மீண்டும் அவர் கேட்கவும் சரி என்று அவளும் நினைத்து கொடுத்தாள்.

கையை வாங்கி பார்த்த ஜோதிடரின் கண்கள் 1000 வாட்ஸ் பல்பு போல பளிச்சன மின்னல் கீற்றாய் மின்னிது.

"அம்மா இந்த மாதிரி ஒரு ரேகை கொண்ட ஒரு பொண்ணை பார்க்கிறது அபூர்வதிலும் அபூர்வம். உங்க பையனுக்கு இந்த பொண்ணுதான் சரிவரும்" என்று சொல்லிவிட்டு அவர் நிறுத்த அதைக் கேட்டுக் கொண்டிருந்த எதிரே இருந்த நாயகியான சுடரிகாவுக்கு கால்கள் எல்லாம் நடுக்கம் காண ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே சுடரிகாவை பார்த்தால் அவ்வளவாக பிடிக்காது மித்ரா தேவிக்கு. இப்பொழுது இவனையே தன் மகனுக்கு கட்டி வைக்கும்படி ஜோதிடர் சொல்வது எல்லாம் கேட்டு கொதித்தே போய்விட்டார் மித்ரா.

இனி அடுத்து என்ன நடக்கும் நாயகனுடன் நாயகியை நம் மித்ரா சேர்த்து வைப்பாளா? இல்லை இவர்களின் விதியோ, மதியோ அல்லது ஜாதகமோ சேர்த்து வைக்குமா? அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாமா?

தித்திக்கும்...
 
Administrator
Staff member
Messages
230
Reaction score
213
Points
63

Super sia welcome 🥰
 
Top