Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
228
Reaction score
212
Points
63
அத்தியாயம் - 29

கவியிடம் பேசிவிட்டு அலுவலகம் வந்த ஸ்வாதிக்கு சிறிது நாட்களாகவே இங்கு வெறுமையாக தோன்றியது. எப்போதும் அவளை திட்டித்தீர்க்க, கடுகடுவென எரிந்து விழ யாதவ் இல்லை. அதட்டி வேலை வாங்க யவரும் முயவில்லை. அப்படி இருந்தும் மனம் நிம்மதி இல்லாமல், எதையோ தேடி அலைபாய்ந்தது.

வேலையே ஓடவில்லை. புதிதாக வடிவமைத்த ஆடைகளை எல்லாம் ஆண் பெண் மாடல்களுக்கு அணிவித்து விதவிதமாக புகைப்படம் எடுத்து, ஒவ்வொரு புகைப்படங்களுக்கும் தனி தனியாக இணைப்பு அமைக்க வேண்டும்.

ஆனால் ஸ்வாதி, மனதை எங்கோ அலைப்பாய விட்டு சம்மந்தம் இல்லாத இணைப்புகளை தயாரித்து, வெவ்வேறு படத்தில் இணைத்துக் கொண்டு இருக்கவும், அவள் செவியருகில் சூடான மூச்சிக் காற்று மோதியதில் கண்மூடிக் கொண்டாள்.

"என்ன மேடம் என்னை நினைச்சுகிட்டு இப்டி வேலைய கோட்டை விட்டா, சீக்கிரம் என் கம்பனிய இழுத்து மூடிட வேண்டியது தான் பரவால்லையா" எப்போதும் சிடுசிடுக்கும் குரல் குழைய அவள் காதில் கிசுகிசுத்தது.

மெலிதாக இதழ் பிரியா புன்னகை சிந்தி, "எனக்காக தான் இவ்ளோ சீக்கிரம் வந்தீங்களா சார்" என்றாள் முனங்களாக.

"உனக்கு எப்டி தோணுதோ அப்டியே வச்சிக்கோ ஸ்வாதி" என்றவனின் குரல் எங்கோ தூரமாக கேட்கவும், "சார்.. சார்.." என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டே சட்டென கண் திறந்தவளுக்கு அதிர்ச்சி.

காரணம் அங்கு அவள் எதிர்பார்த்தவன் இல்லாமல்,அவளுக்கு மிக நெருங்கி செந்தில் தான் நின்றிருந்தான். அதில் கோவம் கொண்டு கண்களை அழுத்தமாக மூடித் திறந்தவளாக, "சார் எதுக்கு இப்டி கிட்ட வந்து நிக்கிறீங்க, என்ன வேணும் உங்களுக்கு.." கடுப்பாக கேட்டு, சட்டென இருக்கையில் இருந்து எழுந்தே விட்டாள்.

அவளின் சிடுசிடு பேச்சில் முகம் கருத்த செந்தில் பின் இயல்பாகி, "இப்ப ஏன் ஸ்வாதி இவ்ளோ டென்ஷன் ஆகுறழ் ப்ளீஸ் சிட்.." என்று இருக்கையைக் காட்ட,

"இட்ஸ் ஓகே சீக்கிரம் சொல்ல வந்தத சொல்லிட்டு போங்க" எரிந்து விழுந்தாள் கடுப்பாக.

அதை எதுவும் பொருட்படுத்தாத செந்தில், "என்ன டிசைன் செஞ்சி இருக்க ஸ்வாதி, இது தான் நீ வேலைய சின்சியரா செய்ற லட்சணமா.." கோவமாக கேட்டதும் சிஸ்ட்டதை பார்த்தவளுக்கு, அப்போது தான் செய்து வைத்த தவறு புரிந்தது.

"சரி செய்து விடுகிறேன்" என்று சொல்ல வாயெடுக்கும் முன், "இப்டிலாம் உன்கிட்ட கோவப்பட்டு, எம்டி சார் மாதிரி கத்துவேன்னு என்ன நீ தப்பா எடுத்துக்காத ஸ்வாதி.. இதை எல்லாம் நான் பெருசு பண்ணி ஓவர் ஆட்டிட்யூட் பண்ண மாட்டேன்.." வழிசலாக சொல்ல,

"இதுக்கு கோவமாவே பேசித் தொலஞ்சி இருக்கலாம் டா பரதேசி.." காது முடியை ஒதுக்கியபடி, வாய் விட்டு சொன்னது நன்றாக அவன் காதில் விழுந்தது. அப்படி இருந்தும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாதவனாக,

"ஸ்வாதி நான் உன்கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசணும், கேன்டீன் வரியா.." என்றிட,

"சாரி சார்.. மனசு விட்டு பேசுற அளவுக்கெல்லாம் நமக்குள்ள ஒன்னும் இல்ல, இங்க நான் வேலை மட்டும் தான் பாக்க வரேனே தவிர்த்து, தேவை இல்லாத அர்த்தமற்ற பேச்சிகளை வளக்க இல்ல.. வேலைல ஏதாவது குறையா.. நிறையா.. அதை மட்டும் சொல்லுங்க" படபடவென தன் பேச்சை முடித்துக் கொண்டாள் ஸ்வாதி.

செந்திலுக்கு இம்முறை அவள் மேல் அளவுகடந்த கோவம் வந்தது. வேலை நேரத்தில் இதற்கு மேல் இவளிடம் பேச வேண்டாம் என்று நினைத்து, "உன்கிட்ட நான் சொல்ல வேண்டியத சொல்லியே ஆவேன் ஸ்வாதி, நீ அதை கேட்டு தான் ஆகனும்.. கூடிய சீக்கிரம் மீட் பண்ணலாம்"

அழுத்தமாக கூறி அங்கிருந்து செல்ல, போகும் அவனை கண்டு கொள்ளாது அலட்சியமாக விட்டது தான், இனி வரும் காலங்களில் பெரும் துன்பத்திற்கு அவள் ஆளாகப் போவதோடு, தோழியின் வாழ்க்கையும் சேர்ந்தே திசை மாற போவதை அறியாது போனாள்.

*****

மதியம் ஆனது, கடந்த மூன்று தினங்களும் உடல் நலம் சரியில்லாது உரகத்திலே இருந்தவளுக்கு, இத்தனை நாளும் வேலைக்கு சென்று அங்கு அனைவரோடும் நேரம் செலவழித்து விட்டு, இப்போது ஹாஸ்டல் அறையில் தனித்துக் கிடப்பது என்னவோ போல் இருந்தது கவிக்கு.

வெளியே எங்காவது காற்றோட்டமாக சென்று வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றவே, அன்று விஷாலை சந்திக்க சென்ற பூங்காவிற்கே சென்று வரலாம் என லூசான ஒரு சுடிதாரை எடுத்து அணிந்துக் கொண்டவளாக, உச்சியில் கூந்தலை அள்ளி சிறிய ரப்பர்பேண்ட் வைத்து, போனிடைல் போட்டுக் கொண்டு வெளியே வந்தாள்.

கழுத்தை ஒட்டி முறுக்கிப் போட்ட பிங்க் நிற துப்பட்டாவின் வழியே தெரியும், அவளின் வெள்ளியை குழைத்து தடவிய கழுத்தில், மூன்று நாட்களாக சரியாக உண்ணாமல் எலும்புகள் துறுத்துக் கொண்டு தெரிய, போனிடைல் போட்ட கூந்தல் அவள் நடைக்கு ஏர்ப்ப தலைக்கு மேல் நடனமாடிக் கொண்டே வரும் அழகை, கண்ணிமைக்காமல் ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

உடல் லேசாக இளைத்து இருந்ததில் தொளதொளவென அவள் அணிந்திருந்த உடைக்கும் அவளுக்கும் எங்கோ இருந்தது. இருந்தும் அவன் கண்களுக்கு மட்டும் அழகாக தெரிந்ததோ என்னவோ!

அலுவலகம் கூட செல்லத் தோன்றாமல் கண்களை திறக்க முடியாமல் இருந்த தலைவலியையும் பொருட்படுத்தாமல், இன்று அவளை பார்த்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில், காலை ஒன்பது மணிக்கெல்லாம் அவளின் ஹாஸ்டல் எதிரில் காரை நிறுத்தி விட்டான். விட்டால் அங்கேயே ஒரு டீ கடையை திறக்கும் நோக்கில்.

தேவியின் தரிசனம் கிடைத்த பிறகு தலைவலி எல்லாம் எங்கு மாயமாகி பறந்து சென்றதோ! கோவ முகம் பளிச்சிட்டுப் போனது. அவள் துள்ளி குதித்து செல்லும் திசையை பார்த்தவன் தானும் இறங்கி அவள் பின்னோடு சென்றான்.

"டேய் சித்து என்ன ஸ்கூல் போகலயா.." அங்கிருந்த சிறுவனின் தலை கலைத்துக் கேட்க,

"இல்ல கவி ஹோம்வர்க் பண்ணாம போனா கணக்கு டீச்சர் அடிப்பாங்க, அதான் உடம்பு சரியில்லனு பொய் சொல்லி லீவ் போட்டேன்.." அவன் கள்ளமாக சிரிக்க, அடப்பாவி என வாயில் கை வைத்துக் கொண்டவள்,

"வர வர நீ சரியில்ல டா ரொம்ப பேட் பாயா மாறிட்ட.. ஆமா நேத்து ஈவினிங் ஸ்கூல் விட்டு வந்தியே ஹோம்வர்க் முடிக்க வேண்டியது தானே.."

"அடப்போ கவி நீயும் எங்க அம்மாமாறியே கேள்வி கேட்டு தொல்லை பண்ற, போ நான் விளையாடப் போறேன்.." அதற்கு மேலும் பதில் சொல்ல முடியாமல், ஒரே ஓட்டமாக ஓடி விட்டான் சிறுவன்.

அவன் சென்ற திசையை வாய் பிளந்து பார்த்து பின் மௌனமாய் சிரித்துக் கொண்ட கவி, "சரியான வாயாடிப்பையன்.." என முணுமுணுத்தபடி அங்கிருந்து நகரப்போனவளின் கரம், இரும்பு கரத்தினுள் சிறைப் பட்டு போனது.

திடுக்கிட்டளுடன் திரும்பியவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிய, "நீயா..?" என்று கேட்க துடித்த உதடுகள், உளர்ந்து போய் பிரியாமல் சதி செய்தது.

"என்ன எனக்கு பயந்துட்டு வேலை விட்டு நின்னுட்டியா". அதுவரை அவளை கண்டால் போதுமென நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு, அவளை நேரில் கண்டதும் துறைக்கு திமிரும் ஒட்டிக் கொண்டது போலும்.

அவன் கையில் இருந்து தன் கரத்தை பிரித்துக் கொண்ட கவி, "உங்களுக்கு யாரு அப்டி சொன்னது.." என்றாள் நுனி மூக்கு சிவக்க.

சிவந்த மூக்கியின் மூக்கு சிவந்தால், ஆடவனின் புத்தியும் சேர்ந்தே மாறி விடுகிறதே! தற்போது இருக்குமிடம் உணர்ந்து தன்னை கட்டுக்குள் கொண்டு வந்த ஆத்வி, "அதான் நாலு நாளா அங்க வராம ஊர் சுத்திட்டு இருக்கியே.." என்றான் வேண்டுமென்றே வம்பு வளர்க்க.

"இந்த கதையெல்லாம் இங்க வேணாம், நான் சொல்ல வேண்டியவங்ககிட்ட காரணம் சொல்லிட்டேன்.. தனியா உங்ககிட்ட சொல்லவேண்டிய அவசியம் இல்ல, அதோட உங்களுக்கு என்ன இந்த பக்கம் வேலை.." என்றாள் முன்னால் நடந்தபடி.

தளர்ந்த உடை குலுங்குவதை பார்த்தபடி அவள் பின்னே சென்றவன், "என் உரிமைய நிலைநாட்டுற வேலையா வந்தேன்" என்றான் பூடகமாக.

அதில் சட்டென அவள் திரும்பவும், ஆண் நெஞ்சில் பூங்கொத்தாய் மோதியதில் அதிர்ந்த கவி, உடனே சுதாரித்து பின்னே ரெண்டடி எடுத்து வைத்தவளாக அவனை முறைக்க,
அவனோ ரணம் கொடுக்காத முற்கள் குத்திய இடத்தை சுகமாக தேய்த்துக் கொண்டு, "என்ன முறைக்கிற.." என்றான் கண்கள் எல்லாம், ஒரு வித மயக்கத்தில் சிவந்த நிலையில்.

"நீங்க பேசுற விதமும், என்கிட்ட நடந்துக்குற முறையும் எனக்கென்னவோ எதுவும் சரியா தோணல.. இனிமே என்கிட்ட இப்டியெல்லாம் பேசிட்டு வராதீங்க,

இல்ல நீங்க முதல்ல சொன்ன மாதிரி, உங்க வீட்டுக்கு வேலைக்கு வராம நிக்க வேண்டியதா தான் இருக்கும்" காரமாக உரைத்து அவ்விடத்தை விட்டு செல்ல முயல, இறுக்கமாக அவள் கை மணிக்கட்டை அழுத்திப் பிடித்துக் கொண்டவன் கண்கள், மயக்கம் தெளிந்து கோவம் கொப்பளித்தது.

"என்ன டி ஆளாளுக்கு எனக்கு ரூல்ஸ் போட்டுட்டு இருக்கீங்க.. என் லைஃப்ல நான் என்ன நினைக்கிறேனோ அதை மட்டும் தான் செய்வேன்.. நீ என்ன டி அதை செய்யாதே இதை செய்யாதேன்னு சொல்றது, இப்ப சொல்றேன் கேட்டுக்கோ இனிமே இப்டி தான் அடிக்கடி வருவேன்..

வர்றது மட்டுயில்ல இப்டி கட்டிப்பிடிப்பேன்.." கோபம் குறையாமல் அவளை இறுக அணைக்க, அவன் அணைப்பில் இருந்து திமிறியவளின் இதழை வன்மையாக சிறை செய்தவனாக, தங்களை மறைத்திருக்கும் புதருக்கு அருகில் நின்று, திணறத் திணற முத்தத்தில் முக்குளித்த ஆத்வி,

"எனக்கு தோணும் போதெல்லாம் இப்டி முத்தம் குடுப்பேன்.." என்று முத்தமிடும் போது மூக்கும் மூக்கும் முட்டி போர் தொடுத்ததில், அவள் மூக்கு மட்டும் ரத்த சிவப்பாகிப் போக, சட்டென அந்த மூக்கு நுனியை நாவால் துடைத்து லேசாக பற்கள் பதியக் கடித்து,

"இங்கயும் இப்டி செய்வேன்.." என்றவன் சிவந்த ஆப்பிள் கன்னங்களில் அவன் கன்னம் கொண்டு அழுத்தமாக உரசி, அதரம் கொண்டு வருடியவன்,
"இதுவும் தான், அப்புறம் இதுக்கு மேல என்னென்ன தோணுதோ அதை எல்லாமே செய்வேன்.. உன்னால என்ன டி பண்ண முடியும்.." அவளை பிரிந்து நின்று நக்கலாக கேட்டு, வீட்டில் நடந்த பிரச்சனைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கவி மேல் காட்டி விட்டான்.

கன்னம் தாண்டும் கண்ணீரை துடைத்தபடி அவனை கண்ட கவி, "நீயெல்லாம் மனுஷனே இல்ல கேவலமான சைக்கோ, இனி என் கண்ணு முன்னாடி வராதே.. உன்ன பாத்தாலே எனக்கு அப்டியே உடம்பெல்லாம் பத்தி எரியிது"

கோவத்தில் அவனிடம் கத்தி விட்டு, காதில் இருந்து கழண்டு விழுந்த ஹியரிங் பாட்ஸை கூட கவனிக்கும் நிலை இல்லாது, வேகமாக அவ்விடம் விட்டு ஓடியவள் சாலையை அடைந்திருந்தாள்.

கவி பேசி சென்ற வார்த்தைகளே அவன் காதில் ரீங்காரமிட்டு மேலும் கோவத்தை கிளப்பி விடவே, அவள் சென்ற திசையைக் கண்டு, "ஏய்..நில்லு டி.." என அவளை பிடிக்க ஓடிய ஆத்வி,
லோட் ஏற்றி செல்லும் பெரிய லாரி ஒன்று, அவசரத்தில் பிரேக் பிடிக்காமல், பயங்கரமான ஹாரன் சத்தத்தை கிளப்பியபடி அந்த நெடுஞ்சாலையின் நடுவே வந்ததை கண்டு உறைந்து போனான்.

அழுதுகொண்டே சாலையில் ஓடி வந்த கவியை ஓரம் போக சொல்லி, லாரி ஓட்டுநர் கையசைத்துக் கத்துவது, ஹாரன் சத்தம் எதுவும் கேளாதவலாய் கண்ணீரை துடைத்துக் கொண்டே ஓட,

அவளை துரத்தி வந்த ஆத்வியோ, செய்வதறியாது கலங்கி, "ஏய்.. கவிஇஇ.. ஓரம் போ டிஇஇ.." என உயிர் போவது போல் கத்திக்கொண்டே கைகளை தளர்த்தி மின்னல் வேகத்தில் ஓடி வந்தவன், "ஏய்.. பைத்தியமே தள்ளி போ டி.." மீண்டும் உயிர் துடிக்க கத்திய ஆத்வியின் கண்ணை மறைத்தது கண்ணீர் திரைகள்.

அது எதுவும் காதில் விழாமல் பித்து பிடித்தை போல் ஓடியவளை, எமனாக மாறி தூக்கி வீச வந்த லாரியில் இருந்து நொடியில் உயிர் தப்பி இருந்தாள், ஆத்வி சரியாக அவளை இழுத்து விட்டதில்.

அதிவேகத்தில் வந்த லாரியோ கடைசி நேரத்தில் போஸ்டர் ஒன்றில் லேசாக மோதி பிரேக் பிடித்து நின்றது.

சாலையின் ஓரத்தில் ஆத்வியின் உடலும் உள்ளமும் தான் நடுங்கியது என்றால், கவியின் நிலையோ மிகவும் மோசம்.

முற்றிலும் நடுங்கிய கோழிக்குஞ்சாக பயத்தில் உடல் உதறி, தன் நெஞ்சில் புதைந்திருந்தவள் முகத்தை கையில் ஏந்திய ஆத்வி, அவள் முகம் முழுக்க முத்தமிட்டனுக்கு இதயம் வெடிப்பதை துடித்து, அடுத்து என்ன என்பதை யோசிக்க முடியாதபடிக்கு, மூளை எல்லாம் எப்போதோ வேலை நிறுத்தம் செய்து விட்டு இருந்தது.

நொடியில் அவள் உயிர் தப்பிய நிகழ்வு மட்டுமே அவன் கண்விழியில் காட்சி பின்பங்களாக தெரிய, கண்மூடி இறுக்கமாக தன்மேல் படுத்திருந்தவளை, எத்தனை நேரம் இறுக்க கட்டிக் கொண்டிருந்தானோ!

தானாகவே பித்து தெளிந்து அவன் மீதிருந்து கடினப்பட்டு எழுந்து நின்ற கவி, சுற்றி நடப்பது எதுவும் கேட்காமல் இருப்பதை உணர்ந்தவளாக, காதில் இயர் பாட்ஸை எடுத்து மாட்டிய நொடி, ஆத்வி அடித்த அடியில், அவள் கன்னம் ரெண்டும் பன்னாக வீங்கி தீயாக எரிந்தது.

அடி வாங்கிக் கொண்டு ஒன்றும் புரியாத நிலையில் கலங்கியக் கண்களோடு அவனை நிமிர்ந்து பார்க்க, மேலும் ஒரு அடி சப்பென்ற சத்தத்துடன் விழுந்தது.

அடி தாங்க முடியாமல் தை கிறுகிறுத்து தள்ளாடி, மீண்டும் சாலையில் விழப்போனவளை தாங்கி, இறுக அணைத்துக் கொண்ட ஆத்வி, "செவிட்டு முண்டமே.. கொஞ்சம் விட்டுருந்தா இந்நேரம் செத்து தொலஞ்சி இருப்ப டி, முன்னாடி பின்னாடி என்ன வருதுனு கூட தெரியாத அளவுக்கா பைத்தியம் மாறி ஓடுவ..

இனிமே இப்டி லூசுத்தனமா ஏதாவது பண்ண, நானே உன்னைய கொன்னு புதச்சிடுவேன் டி.." ஆக்ரோஷமாக உரைத்தவனின் ஒரு சொட்டுக் கண்ணீர், அவள் தோள்ப்பட்டையை நனைக்கத் தவறவில்லை.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 29
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top