Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
229
Reaction score
212
Points
63
அத்தியாயம் - 30

சாலையில் சென்றவர்கள் போனவர்கள் யாருவரின் பார்வைகளும் அவர்கள் இருவர் மீதே இருந்தது.

சண்டைக்கோழிகளோ, சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் மக்கள் கூட்டத்தைக் கணக்கில் கொள்ளாது, இருவரும் இறுக்கமாக கட்டிய நிலையில், தங்களின் அணைத்து உணர்வுகளையும் ஒருவருக்கொருவர் காட்டிக்கொண்டு இருந்தனர்.

ஆத்வியின் அதிரடியில் கவி தான் நிலைக்குலைந்து போனாள். இன்னும் அவன் அடித்த அடியே கண்ணில் பூச்சி அவன் அணைப்போ, பெரிய சைஸ் மலைப்பாம்பு ஒன்று இறுக்கமாக தன்னை சுற்றி இருப்பதை போன்ற உணர்வில், மூச்சிவிட சிரமமாகி அவனிடமிருந்து விடுபட முயற்சிக்கும் வேளையிலே சிலயாகிப் போனாள், ஆத்வியின் சூடான கண்ணீர் துளியின் ஈரம், தன் தோள்ப்பட்டையை நனைத்ததும்.

"என்ன விதமான உணர்விது..?" என புரிந்துகொள்ள முடியாத கடுமையான சூழ்நிலை. அவன் முகம் பார்க்கத் துடித்த மனநிலை. முரடன் கண்ணில் கண்ணீரா? ஏன் தனக்காகவா? என்ற கேள்வியே கவியை தவிக்க வைத்திட,

இறுகிக் கொண்டே போன ஆடவனின் திண்ணிய மேனி, தன் பொன்மேனியை ஆரத்தழுவி இருப்பதுவேறு அவஸ்த்தையாகிப் போனது.

"வ்.விடு..விடு என்ன.." என சுற்றி வேடிக்கை பார்ப்பவர்களை கண்டு அவனிடமிருந்து பிரிந்து நிற்க முற்படும் வேளையில், தானாக பிரிந்து நின்றான் உணர்ச்சி துடைத்த இறுகிய முகத்துடன்.

ஆத்வியின் முகத்தை உற்று நோக்கியவளுக்கு, இவன் கண்ணீர் தான் தன்னை நனைத்ததா? அல்லது வான்மேகத்தில் இருந்து தூறல் துளி தன் மேல் எதர்ச்சியாக விழுந்து விட்டதா? என்ற ஆராய்ச்சி பார்வையோடு அவனை காண,

"இன்னும் கொஞ்ச நாளைக்கு உனக்கு எப்டி தோணுதோ அப்டி உன் லைஃப என்ஜாய் பண்ணிக்கோ.. ஏன்னா என் கண்ணுல வந்த ஒரு சொட்டு கண்ணீருக்கும், உன்னால நான் பட்ட அவமானத்துக்கும், நீ காலம் முழுக்க கண்ணீர் விட்டு பதில் சொல்ல வேண்டிய நாள் சீக்கிரத்துல இல்ல..

அதுக்குள்ள செத்துகித்து போய்டாத சரியா..." அவள் கன்னம் தட்டி இறுக்கமான சொன்ன வார்த்தையில், கண்களை உருட்டி வீங்கிய கன்னத்தோடு அவனை கண்டவளின் மனம் நெருப்பாக கொதித்தது.

தன்னை முறைத்த கண்களையும், சிவந்த மூக்கையும், தனது ஆழ்துளை பார்வையில் உள்நிரப்பிக் கொண்டு, ஏதோ ஒரு முடிவெடுத்தவனாக அங்கிருந்து சென்றான்.

எதற்கு வந்தான்? என்ன பேசினான்? பேசினதோடு விட்டானா, அதற்கு மேலும் என்னென்னவோ செய்து தன்னை முற்றிலுமாக குழப்பத்தில் ஆழ்த்தி விட்டு சென்று விட்டானே!
பரிசாக அடிகள் வேறு கொடுத்து கன்னத்தை வீங்க வைத்து விட்டான். அடிக்கடி உரிமையை பற்றி வேறு பேசுகிறான் எந்த எண்ணத்திலாக இருக்கும்?

இப்படி பல சிந்தனைகளோடு ஹாஸ்டல் அறைக்கு வந்த கவி, கண்ணாடியில் தன் முகம் பார்த்தவளாக, ஸ்வாதி வருவதற்கு முன்பே அவன் கை தடத்தை போக்க களிம்பு பூசி, கட்டில் மேல் படுத்தவளுக்கு மனமும் உடலும் பாரமாக அழுத்தியது, ஆத்வியின் நினைவில்.

******

மதியம் உணவுண்ண கேன்டீன் சென்று அங்கிருந்த இருக்கையில் ஸ்வாதி அமரவும், அவள் எதிரில் இருந்த இருக்கையில் வந்தமர்ந்தான் செந்தில்.

அவனை கண்டதும் எரிச்சலாக முகத்தை சுளித்து, வாங்கி வந்த தயிர் சாதத்தை எடுத்து வாயில் வைக்க, "ஏன் ஸ்வாதி தயிர் சாதத்தை சாப்பிடற, என்கிட்ட சொன்னா நான் பிரியாணி வாங்கி தரமாட்டேமா.. சரி இரு நான் போய் உனக்கு பிரியாணி வாங்கி வரேன்" அக்கறையாக கேட்டு எழப் போனவனை தடுத்த ஸ்வாதி,

"எனக்கு தயிர் சாதமே போதும் சார், நீங்க உங்க வேலைய மட்டும் பாத்தா நல்லா இருக்கும்.. அப்டி பிரியாணி தான் வாங்கிக் கொடுக்கணும்னு முடிவு பண்ணிட்டீங்கன்னா, சுத்தியும் பாருங்க, நிறைய பேர் தயிர் சாதம் தான் சாப்பிடுறாங்க, அவங்ளுக்கு வாங்கிக் கொடுங்க.." கடுப்பாக உரைத்து, வேகவேகமாக உணவவை உண்டு முடித்து சென்று விட்டாள் அங்கிருந்து.

ஆனால் செந்திலுக்கோ அவமானமாகிப் போனது. ஸ்வாதி பேசியது அங்கிருக்கும் பலர் காதுகளில் விழுந்து விட, அனைவரும் அவனை கண்டு சிரித்து விட்டனர். அதுவே அவனுக்கு கோவத்தை கிளப்பிவிட்டு இருந்தது.

ஸ்வாதி அவன் டீமில் சேர்ந்த நாளில் இருந்து அவளை விரும்பத் தொடங்கி விட்டான் செந்தில். ஆனால் அவன் விரும்பும் பெண்களில் இவள் எத்தனாவது பெண் என்று தான் கணக்கில்லை.

அவன் காதல் வலையில் விழாத பெண்களே இல்லை. செந்தில் கண்ணசைத்தால் போதும் அவன் மடியில் மட்டுமில்லை, அவன் மெத்தையிலும் மயங்கி விழுந்த பெண்கள் ஏராளம். அதற்காக அவன் பார்க்கும் அனைத்துப் பெண்களும், அப்படியே இருந்து விடுவார்களாக என்ன!

ஸ்வாதி ஒருத்தி தான் அவன் என்ன செய்தாலும் பிடிக் கொடுக்காமல் நழுவி செல்வது. அவனும் அவளை விடுவதாய் இல்லை. அவளும் இவனை என்ன செய்தாலும் விரும்பப் போவதும் இல்லை. இவன் செய்யப் போகும் குலருபடிகளில் பல மாற்றங்கள் நிகழப் போவது உறுதி.

*****

"ஏய்.. மித்துபேபி.. இங்க பாரு, என்ன டி ஓவரா பண்ற, என்ன பாருனு சொன்னேன்.. இப்ப என்கிட்ட பேசப் போறியா இல்லையா.." இரவில் இருந்து சமாதானம் செய்ய மனைவியை கொஞ்சி கெஞ்சி திட்டிப் பார்த்தும், மித்ரா மனமிறங்குவதாய் இல்லை.

இதுவரை அவளின் செல்லக் கோவங்களை மட்டுமே பார்த்து ரசித்து வந்த ஆதி, முதல் முறையாக மனைவியின் உறுதியானக் கோவம் கண்டு லேசாக திகைத்துப் போனான்.

"இதெல்லாம் எப்ப வரவேண்டியக் கோவம் தெரியுமா மித்துபேபி.. ஆனா இப்ப வந்து இவ்ளோ கோவத்தை காட்றியே, இது உனக்கே நியாயமா படுதா.." பாவமாக கேட்ட கணவனை ஏகத்திற்கும் முறைத்தாள்.

"நீங்க எப்ப என் பையன நம்பாம அவன் விஷயத்துல நீங்களா முடிவெடுத்தீங்களோ, அப்பவே என் மனசு விட்டு போச்சி.. உங்கமேல வச்சிருந்த அழிக்க முடியாத நம்பிக்கைய கொஞ்ச நேரத்துல மொத்தமா தூக்கி வீசுர மாறி செஞ்சிடீங்களே..

என் பையன் ஒன்னும் முறை தவறி நடக்குறவன் இல்லைங்க, அவனுக்கும் அந்த பொண்ணுக்கும் நடுவுல ஏதாவது ஒன்னு இருந்திருந்தா, என்கிட்ட அவன் சொல்லாம இருந்திருக்க மாட்டான்..

நீங்க பாட்டுக்கு ஈஸியா கல்யாணம் நடக்கும்னு சொல்லி தட்ட மாத்திட்டீங்க, அப்ப ஆத்வியோட முகம் எப்டி இருந்துச்சி தெரியுமா.. பாவம் பிள்ள, பெத்த தகப்பனே தன்ன நம்பலையேன்னு மனசொடிஞ்சி போயிருப்பான்..

நீங்க எது செஞ்சாலும் சரியா தான் இருக்கும்னு, இத்தனை வருஷமா உங்க முடிவுக்கு கட்டுப்பட்டு இருந்தது தவறனோன்னு காலம் கடந்து யோசிக்கிற மாறி செஞ்சிடீங்கலே.. நீங்க என்ன சொன்னாலும் இந்த ஒரு விஷயத்துல என் மனசு ஆறவே ஆறாது.." கோவமும் கண்ணீருமாக கத்திக் கொண்டிருந்தாள் மித்ரா.

எதற்கும் இதுவரை தன்னை எதிர்த்து ஒருவார்த்தை பேசிடாத மனைவி, தான் தவறே செய்தாலும் அது சரியாகதான் இருக்கும் என்று அடித்துக் கூறும் மனைவி, இன்று தன்னிடம் கோவம் கொண்டு 'நீ செய்தது தவறு' என்று கோவம் கொள்கிறாள் என்றால், அது மகன் மீது அவள் வைத்திருக்கும் முழு நம்பிக்கையும் பாசத்தையும் பறைசாற்றுவதை, ஆதி உணர்ந்துக் கொள்ளாமல் இல்லை.

பெற்ற மகன் மேல் உள்ள பாசம், கணவன் மேல் உள்ள நம்பிக்கையை வென்று முதலிடம் பிடித்து விட்டதென்னவோ உண்மை தான். அதில் பொறாமை எட்டிப் பார்க்கவும் தவரவில்லை. எப்போதும் விளையாட்டுக்கு செல்லமாக கோவம் கொண்டால் கூட அவளை அதட்டி உருட்டி அவன் வழிக்கு கொண்டு வரும் ஆதி, இன்று உண்மை கோவத்தை அடக்க வழி தேடாமல், மனைவியை பேச விட்டு அமைதியாக வேடிக்கைப் பார்த்தான்.

அதுவேறு மித்ராக்கு இன்னும் கோவத்தை அதிகரிக்க செய்ய, "இங்க பாருங்க என் பையன் அவன் மனசுக்கு பிடிச்ச பொண்ண தான் கல்யாணம் பண்ணிப்பான்.. நீங்க மட்டும் வயசுல என்னென்ன அராஜகம் செஞ்சி என்ன கல்யாணம் செஞ்சீங்க.. உங்களுக்கு ஒரு நியாயம் அவனுக்கொரு நியாயமா..

நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது, இந்த கல்யாணம் வேண்டாம்னு அந்த லிங்கம் வீட்ல போய் சொல்லிட்டு வாங்க.." நிறுத்தாமல்க் கத்திய மனைவியை, என்ன செய்து தற்போது வாயை அடைக்கலாம் என்ற யோசனையில் மூழ்கி இருந்தவனை மித்ரா உளுக்கி எடுத்து,
"பதில் சொல்லுங்க.." என்றாள் மீண்டும் கத்தி.

"பதில் தானே, என் வழிலே சொல்லிட்டா போச்சி.." என்றவன் பார்வை மாறி தனது பாணியில் பதில் சொல்ல தொடங்கி விட்டான் ஆதி.
ஆனால் மித்ரா சமாதானம் ஆனாளா?

*****

அழகான காலை பொழுது புலர்ந்தது. நேற்று இருந்த இறுக்கம் தற்போது கவியை சந்தித்து வந்ததில் இருந்து ஆத்வியிடம் இல்லை. எப்போதும் போல அலுவலகம் செல்ல தயாராகி கீழே வந்தவன் கண்கள், தனது சிவந்த மூக்கியை தான் தேடி அலைப்பாய்ந்தது.

விக்ரம் அறையை எட்டிப்பார்க்க, இன்னும் அவள் வந்திருக்கவில்லை. 'சொன்னது போல வேலையை விட்டு நின்று விட்டாளோ..' என்ற யோசனையோடே ஹாலுக்கு வந்தவன், அங்கு போட்டது போட்டபடி முகம் சோர்ந்து அமர்ந்திருக்கும் தாயை கண்டவனாக,

"மாம்.. ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க, உடம்பு அதுவும் சரியில்லயா..' அக்கறையாக கேட்ட மகனை கவலையாக நோக்கிய மித்ரா,

"உங்க அப்பா எடுத்த முடிவு உனக்கு சரியாப் படுதா ஆத்வி, அந்த பொண்ண உனக்கு கட்டிக்க சம்மதமா.." என்றவள் குரலும் சோர்ந்து தான் வந்தது.

"இங்க பாருங்க மாம், பெத்தவங்க உங்க ரெண்டு பேர் மேலையும் எனக்கு அன்பும் பாசமும் சொல்லிக்க முடியாதபடி ரொம்பவே அதிகமா இருக்கு, அதுக்குனு என் சம்மதம் இல்லாத எந்த ஒரு விஷயத்துலையும் முடிவெடுக்குற உரிமைய நான் யாருக்கு விட்டுத்தர மாட்டேன்..

எனக்கு என்ன செய்யணும்னு தோணுதோ அதை தான் செய்வேன், மை லைஃப் மை ரூல்..

ஒரு பிள்ளையா என்கிட்ட நீங்களும் டாடும் எல்லா உரிமையும் எடுக்கலாம், அதுக்குன்னு என்ன அதை செய், இதை செய்னு என் வாழ்க்கை மாத்தி அமைக்கிற உரிமைய இதோட விட்ருங்க.." காட்டமாக சொன்ன ஆத்வி, உண்ணகூட மனமின்றி வெளியேறி விட்டான்.

மித்ராக்கு அவன் பேசிய வார்த்தைகள் ஒன்றும் புதிதில்லை. அவளுக்கு நன்றாக தெரியும் ஆதியை போல் தான் மகனும் என்று. எப்படி ஆதி எந்த முடிவெடுத்தாலும் சரியாக தான் இருக்கும் என்று நினைப்பாளோ, அதே போல தான் ஆத்வியின் முடிவும் நம்பிக்கையானதாக இருக்கும்.

ஆனால் அவன் பிடிவாத குணம் நினைத்து தான் உள்ளுக்குள் பயம் தோன்றியது. வாயிலை வெறித்தபடி அமர்ந்திருந்த மனைவியின் அருகில் நெருங்கி அமர்ந்த ஆதி,

"எப்டி சும்மா சிங்கக்குட்டி கணக்கு சீறிட்டு போறான் பாத்தியா டி.. அப்டியே என்ன வயசுல பாக்குற மாறியே இல்ல.." பெருமையாக சொல்லிக் கொண்ட கணவனை ஆராய்ச்சி பார்வை பார்த்த மித்ரா,

"அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து அப்டி என்ன என்கிட்ட உண்மைய மறைக்கிறீங்க" மனைவியின் திடீர் கேள்வியில் அவளை மெச்சும் பார்வை பார்த்தவனாக,

"இவ்வளவு தூரம் கண்டு பிடிக்க தெரிஞ்ச உனக்கு, அது என்ன உண்மைனு கண்டு பிடிக்க தெரியலயே டி, என் செல்லப் பொண்டாட்டி.." அவள் கன்னம் பிடித்து கொஞ்சிய ஆதி,

"பொறுத்தது தான் பொறுத்துட்ட இன்னும் கொஞ்சம் நாள் மட்டும் தானே, அமைதியா நடக்கப் போறதை மட்டும் வேடிக்கை பாரு.. அதுக்கு முன்னாடி வா வந்து சாப்ட்டு பிபி டேப்லெட் போடு, எனக்கு மீட்டிங் இருக்கு.." அதிகாரமாக சொன்னான், தற்போது மனைவியிடம் இருந்து தப்பிக்க வேண்டி.

பணியாட்க்கள் செய்து வைத்த உணவை கொண்டு வந்து மனைவிக்கு ஊட்டி விட்ட ஆதி, மருந்துகளையும் போட வைத்து விட்டு அலுவலகம் சென்று விட்ட சில நிமிடங்கள் கழித்து, கவி வந்தாள்.

மிரண்ட விழிகள் யாரையோ தேடி அலைந்திட, தேடியவன் கிடைக்கவில்லை என்றதும் நிம்மதிப்பெருமூச்சு விட்டபடி உள்ளே வந்தவளை, மலர்ந்த முகமாக வரவேற்றாள் மித்ரா.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 30
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top