Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
44
Reaction score
8
Points
8
அத்தியாயம் 37

அதே நேரம் நிலாவின் போன் அடிக்க அதில் பல்லவி என காட்டியது. சூர்யாவோ அழைப்பை ஏற்று " சொல்லுங்க அம்மா " என்றான்

எதிர் பக்கம் என்ன சொல்ல பட்டதோ ' இல்ல அம்மா எலி குட்டிக்கு உடம்பு சரி இல்ல அதனால நாங்க வரல ' என்று அழைப்பை துண்டித்து விட்டான்.

நிலாவோ ' என்னாச்சு மாமா ' என்றாள் சூர்யாவோ ' ஒன்னும் இல்ல எலி அம்மா சும்மா தான் பண்ணாங்க ' என்று சொல்லி சமாளித்து விட்டான்.

---
அன்று மாலை....

நிலாவிற்கு அழைத்த ஆத்யாவோ " என்ன மேடம் ரொம்ப பிஸியா இருக்கியா " என்றாள்

நிலாவோ ' அப்படி எல்லாம் இல்ல அதி ' என்றாள்

அவளோ " அப்ப என்டி ஊருக்கு வரலைன்னு சொல்லிட்ட சூர்யா கூட உனக்கு உடம்பு சரி இல்லனு சொன்ன என்ன விசியம் நிலா " என்றாள்

நிலாவோ ' ஒன்னும் இல்ல அதி பிரியட்ஸ் அதன் வர முடியல ' என்று கூறினாள் பின் இருவரும் பொதுவாக பேசி விட்டு அழைப்பை தூண்டிதனர்.

---

நிலாவோ நேராக சூர்யாவின் அறைக்கு சென்று அவன் மூன் நின்றாள். அவனோ கணினியில் பார்வை வைத்து கொண்டே " என்ன வேணும் எலி " என்றான்

அவளோ ' ஏன் மாமா என்கிட்ட கவிமா ஊருக்கு கூப்பிட்டத சொல்லல. நான் அவங்க எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்றேன் மாமா இங்க வந்து ரெண்டு மாசம் ஆக போகுது ஆனா என்ன ஒரு வாட்டி கூட நீங்க வீட்டுக்கு அனுப்பல இப்ப ஊருக்கு கூட அனுப்ப மட்டிக்குறிங்க என்ன தான் உங்க மனசுல இருக்கு ' என கோபமாக கேக்க

சூர்யாவோ ' இதோ இப்படி நீ அலறத பாக்க ரொம்ப நல்லா இருக்கு எலி. உன்னால தாண்டி என் கதிர் அங்க ஜடம் மாதிரி இருக்கான் ஆனா நீ மட்டும் சந்தோஷமா இருப்பியா, நெவெர் நீயும் நல்லா அனுபவி ' என்றான்

அவளோ அழுது கொண்டே அவள் அறைக்கு சென்று விட்டாள். குடும்பத்தை காணாத ஏக்கத்தில் இரவு முழுவதும் அழுத படியே உறங்கி விட்டாள்.
மணிக்கணங்களாக அழுது, மனம் உடைந்து கிடந்தவளின் உடல் தான் இறுதியில் சோர்ந்து அவளை பிடித்து இழுத்தது.

அடுத்த நாள் காலை, சூரியன் சாளரத்தில் இருந்து தங்க வெளிச்சம் பரவ, நிலா மெதுவாகக் கண்களைத் திறந்தாள்.
உடம்பெல்லாம் கனமாகவும், மூளைக்குள் வலி ஊறியதுபோலவும் இருந்தது.ஆனால், அவளுடைய மனமோ அவள் மாமுவை தான் தேடியது.
எந்தக் கணமும் அவன் வந்து அவளை பார்த்துவிடுவானோ என்று எதிர்பார்த்தாள். ஆனால், உண்மை என்ன வேனில் அவன் பாதங்களின் சத்தம் கூட அவள் அறைக்கு வரவில்லை.

அங்கே சூர்யாவோ...

அவன் காரில் வேகமாக மருத்துவமனை நோக்கி சென்று கொண்டு இருந்தான். அவன் மனமோ அவன் எலி குட்டியை தான் தேடியது.
அவன் கண்களை மூடிய போதும், நிலா அவன் முன்னால் வந்து, அந்தக் கண்களில் கண்ணீர் வடிக்கிற காட்சி தான் தெரிந்தது.ஆனால் அவன் பிடிவாதமோ அவனை விட்டுவிடவில்லை.

---

இங்கே வீட்டில்...

நிலாவோ அறையில் தலை வரை பெட்ஷீட் போர்த்தி படுத்து இருக்க அப்போது வெளியே கால்லிங் பெல் சத்தம் கேட்டு எழுந்து சென்றாள் நிலா. அங்கோ வெளியே ஆத்யா மற்றும் வீர் நின்று இருந்தனர். நிலாவின் வீங்கிய கண்களையும் சோர்ந்த முகத்தையும் பார்த்த வீர் " என்னாச்சு பாப்பா " என்றான்

அவளோ வரவழைக்க பட்ட புன்னகையோடு ' ஒன்னும் இல்ல வீர் லைட் ஹா பிவேர் ' என்றாள்

வீரோ " சரி பாப்பா, சூர்யா எங்க நீ மட்டும் தனியா இருக்க " என கேக்க

அவளோ ' அவன் வெளிய போய் இருக்கான் வீர் ஈவினிங் வந்துவிடுவான் ' என்றாள்

வீரோ " சரி நீ உக்காரு பாப்பா நான் போய் உனக்கு ஜூஸ் கொண்டு வரேன் " என கூறி சென்று ஜூஸ் போட ஆரம்பித்தான்.

சோபாவில் நிலாவும் ஆத்யாவும் அமர்ந்து இருந்தனர். வீரோ கையில் ஆரஞ்சு ஜூஸ் கொண்டு வந்து இருவருக்கும் கொடுத்தான். ஜூஸ்யை ஒரு வாய் குடித்த நிலா வேகமாக சென்று வாந்தி எடுக்க ஆத்யா சென்று அவள் தலையை பிடித்து கொண்டாள். பின் அவள் முகம் கழுவி வந்ததும் ஆத்யாவோ " என்னாச்சு நிலா குட்டி " என்றாள்

நிலாவோ ' ஒன்னும் இல்ல அதி காலையில இருந்து சாப்டாம இருந்தேனா அதான் வோமிட் வந்துடுச்சு ' என்றாள்

இருவரும் அவள் சொன்ன பதிலை கேட்டு விட்டு அமைதியாக இருந்தனர்.

----

இங்கே ஹாஸ்பிடல்...


கதிர் கண் விழித்து விட்டான் என்ற செய்தி கேட்டு மருத்துவமனைக்கு விரைந்து சென்றான் சூர்யா. நேராக கதிர் இருந்த அறைக்குள் சென்ற அவன் கண்டதோ கண்களை திறந்து மருத்துவருடன் உரையாடும் கதிரை தான். வேகமாக சென்று நண்பனை அணைத்து கொண்டவனோ " என்ன டா இப்படி பண்ண இத்தனை மாசமா நான் இப்படி தவிச்சு போய்ட்டேன் தெரியுமா " என அவன் பயத்தையும் இத்தனை நாள் தவிப்பையும் அந்த ஒற்றை அணைப்பில் கதிர்ருக்கு உணர்த்த

கதிரோ " அதான் திரும்ப வந்துட்டேன்ல இனிமே உன் கூடவே தான் இருப்பேன் சரியா " என்றான் மீண்டும் அவனே ' எங்க மச்சான் நிலா வரலையா ' என்றான்

அவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவன் நண்பனின் கேள்வியில் கோபமாகி " இப்ப எதுக்கு அவள பத்தி கேக்குற " என்றான்

கதிரோ ' என்னடா இப்ப கோப படுற ' என்றான்

'பின் வேற என்ன பண்ணனும், அவளால தான நீ ஏழு மாசம் இப்படி கோமால இருந்த ' என்றான்

கதிரோ " லூசு மாதிரி பேசாத நான் இப்படி இருக்க நிலா ஒன்னும் காரணம் இல்ல அந்த கார்த்திக் தான் காரணம் " என்றான்

சூர்யாவோ ' புரியல மச்சான், அன்னக்கி என்ன தான் நடந்துச்சு சொல்லு ' என்றான்

கதிரோ அன்று நடந்த சம்பவத்தை கூற ஆரம்பித்தான். கதிர் நிலா இருவரும் மொட்டை மாடியில் நின்று கொண்டு இருந்தனர். நிலவோ ' என்ன கதிர் எதோ பேசணும்னு சொன்ன ஆனா ஒன்னும் சொல்ல மாட்டேங்கிற ' என்றாள்

கதிரோ " அது எப்படி சொல்றதுன்னு தெரியல நிலா என் கூட நீ கடைசி வரைக்கும் வருவியா என் காதலியா மனைவியா தோழியா " என்றான்

நிலாவோ அவன் வார்த்தையில் அதிர்ந்து " கதிர் அது முடியாது நான் உன்கூட கடைசி வர தோழியா ஒரு சகோதரியா வேணா இருப்பேனே தவிர உன்ன நான் அப்படி பாக்கல அண்ட் நான் சூர்யாவை தான் லவ் பண்றேன் " என்றாள்

கதிரோ தன் உடந்தை மனதை மறைத்து கொண்டு " யாரும் இல்லாத எனக்கு நீங்க ரெண்டு பெரும் தான் உலகமே நிலா பரவாயில்ல நீ அவன் கூட சந்தோசமா இரு " என கூறி சென்று விட்டான். அதன் பின் இருவரும் சந்திக்கவே இல்லை.

இதனை எல்லாம் பின்னால் இருந்து மறைந்து கேட்டு கொண்டு இருந்த கார்த்திகேயனோ தனியா கீழே சென்று கொண்டு இருந்த கதிர்யின் பின் மண்டையில் கட்டையால் தாக்கி விட்டு மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டான்.
அதில் உயிர் தப்பியா கதிர் கோமாவிற்கு சென்று விட்டான்.

நடந்த அனைத்தையும் சூர்யாவிடம் கூறிய கதிர் " அன்னக்கி நான் மயங்குறதுக்கு முன்னாடி தான் அந்த கார்த்திக் முகத்தை பார்த்தேன் அண்ட் அங்க வேற யாரவது இருந்தாங்களான்னு தெரியல " என்றான்

சூர்யாவோ ' இன்னும் அதிர்ச்சி குறையாமல் அப்ப நிலா உன் விபத்துக்கு காரணம் இல்லையா ' என்றான்

கதிரோ நண்பனின் அதிர்ச்சியை கண்டு " நிலாவா... அவ என்ன பண்ண சூர்யா " என்றான்

சூர்யாவோ ' சாரி டா மச்சான் உன் நிலைமைக்கு அவ தான் காரணம்னு அவள பழிவாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டேன் என திருமணம் முதல் அவர்களின் கடைசி சண்டை வரை கூறினான் அவன் '.

கதிரோ கோபமாக ' நீ இப்படி பண்ணுவேன்னு நினைக்கலடா.... லூசு டா நீ உன் மேல உசுரையே வச்சு இருந்தாடா.... அவளால சின்ன ஊசி குத்துன கூட தாங்கிக்க முடியாது.... ஆனா உனக்காக அந்த டாட்டூ போட்டுக்கிட்டா கடைசியில நீயே அவள வார்த்தையால கொன்னுட்டியே டா ' மேலும் பல கெட்ட வார்த்தைகளை சேர்த்து திட்ட.....

சூர்யாவோ வெறித்த பார்வையோடு நின்று இருந்தான். இந்த உண்மை நிலாவிற்கு தெரிந்தால் என்ன ஆகும்? கார்த்திகேயனுக்கும் நிலாவிற்கும் அப்படி என்ன பிரச்சனை?

அடுத்த பாகத்தில்...

தொடரும்...
 
Top