New member
- Messages
- 18
- Reaction score
- 1
- Points
- 3
அசுரன் 9
தன் முகத்திற்கு இவ்வளவு நெருக்கத்தில் வந்து நின்ற சுடரிகாவை கண்கள் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தான் உக்ரானந்த். அவளின் உதடுகள் பயத்தில் நடுங்கியபடியே இருக்க "வாவ் பிங்க் லிப்ஸ்" அவனையும் அறியாமல் உதடுகள் முனுமுனுத்தன.
இன்னும் சிறிது நேரம் இப்படியே இருந்தால் எங்கே அவளது இதழில் தான் முத்தம் கொடுத்து விடுவோமோ? என்ற பயம் அவனுக்குள் விழுந்ததோ என்னவோ? யாருக்குத் தெரியும் திடீரென அவளின் முகத்திற்கு நெருக்கமாக நிறுத்தியதில் உக்ரன் கொஞ்சம் தடம் புரண்டு போனான் என்றுதான் உண்மையாகவே சொல்ல வேண்டும்.
அவள் போட்ட மெலிதான சத்தத்தில் அவனின் நினைவலைகள் கொஞ்சம் இடபெயர்ந்து அவன் பக்கம் திரும்பி வர திடீரென அவளை பிடித்திருந்த கரத்தை விடுவித்தான். கோபமாக அவளை முறைத்து பார்த்தான். கூர்மையான கண்களை இன்னும் கூர்மையாக அவளிடம் பார்த்தபடியே,
"உனக்கு என்ன அவ்வளவு கொழுப்பா கூப்பிட கூப்பிட நீ பாட்டுக்கு போற, ஆமா முதல்ல எதுக்கு கார்ல இருந்து கீழே இறங்கின?" என்கவும் அவள் விழி விரித்து அவனையே பார்த்தாள்.
"சொல்லு கேள்வி கேட்கிறேன்ல எனக்கு பதில் வரணும் கேள்வி கேட்டு பதில் வராம போனா என்ன நடக்கும்னு அப்புறம் எனக்கே தெரியாது" கோவத்துடன் பொங்கி எழுந்தவனை என்ன சொல்லி சமாதானம் செய்ய முடியும்.
கட்டிய மனைவி நான் உன் கூட இருக்கும் போதே இன்னொரு பெண்ணுடன் சல்லாப பேச்சு பேசும் போது எந்த பெண்ணுக்கு தான் அதை தாங்கிக் கொள்ள முடியும். அதிலும் கூடவே இவள் அவனை ஒருதலையாக காதலித்திருக்கிறாள், காதலித்தும் கொண்டிருக்கிறாள். காதலித்த மனம் அவனை இன்னொரு பெண்ணுடன் இணைத்து வைத்து பார்ப்பதற்கு கூட அவளால் முடியவில்லை. அதற்காகதான் சுடரிகா வண்டியில் இருந்து வேகமாக கீழே இறங்கி அவள் பாட்டுக்கு நடந்து போனது.
"நான் பாட்டுக்கு சிவனேனு பஸ் புடிச்சு வீடு போய் சேர்ந்திருப்பேன் தேவை இல்லாம என்னைய கூட்டிட்டுபோறேன்ற பேர்வழில தேவையில்லாத வார்த்தை எல்லாம் கேட்கணும்னு என் தலையெழுத்து போல. இன்னிக்கி யார் முகத்தில் முழிச்சேனோ?" அவளுக்குள் ஒரே கோபமும் எரிமலையும் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அதை வெளியே காமிக்க முடியாமல் திணறித்தான் போனாள் பெண்ணவள். இருந்தாலும் அவனிடம் அதை அடக்கி கொண்டு மெல்லமாக அவள் செவ்விதழ் திறந்து பேச ஆரம்பித்தாள்.
"சார் வீடு கிட்ட வந்துடுச்சு சோ நான் நடந்தே போறேன்" அவள் மெல்லினமாக சன்னமான குரலில் சொல்ல, அவனோ புரியாமல் அவளை விசித்திரமாக பார்த்து வைத்தான்.
"வாட்! என்ன உளர? நீ என் வீட்ல தானே இருக்க போற சோ நான் வந்து ட்ராப் பண்றதுல உனக்கு அப்படி என்ன வந்துச்சு? வீட்டு கிட்ட வந்ததும் நீ பாட்டுக்கு காரை விட்டு இறங்கி கீழே போற"
"நமக்குள்ள நடந்த இந்த கல்யாணம் யாருக்குமே தெரியாது. தெரியவும் கூடாது. உங்க அம்மா, உங்க அப்பா, அந்த கோவிலோட புரோகிதர், ஜோசியர், உங்க நண்பர் இவங்கள தவிர வேற யாருக்குமே தெரியாத இந்த கல்யாணம் வீட்டில் சுத்தி இருக்கிறவங்களுக்கும், ஆபீஸ்ல இருக்குறவங்களுக்கும் தெரியப்படுத்தக் கூடாதுல்ல அதுக்காக தான் வீடு பக்கம் கார் வந்ததும் இறங்கிட்ட" புரியாமல் அவன் கேட்ட கேள்விக்கு புரியும்படி பதிலை சொன்னதில் அவன் கண்கள் அகல விரிந்தது.
அவள் சொன்னதிலும் சரியாகத்தான் இருக்கிறது என யோசித்த உக்ரன் அவளை பார்த்த வண்ணமே இருக்க
"சரி நீ முன்னாடி போ" என்றான். அவன் சொன்ன பதில் அவளுக்கு பெரிதாக ஆச்சரியத்தையோ, அதியத்தையோ, அதிர்ச்சியையோ ஏற்படுத்தவில்லை. நினைத்ததுதானே! அடுத்த நிமிடம் அங்கு அவள் இருக்கவில்லை.
காரின் கதவை திறந்தான். அவவ்ளவு கோபம் கண்களை மூடி சீட்டில் சாய்ந்தான். நிச்சயமாக அவள், தான் வேறொரு பெண்ணுடன் பேசியதை நினைத்து அவள் கோவப்பட்டு எழுந்து போனாள் என்றுதான் நினைத்தான். ஆனால் அதற்கு நேர்மாறாக அவள் சொன்ன பதிலில் சற்றே ஆடித்தான் போனான் உக்ரன்.
******
வீட்டுக்குள் நுழைந்தவளுக்கு அவளுக்கு காட்சியாக விளங்கியது அங்கு சோபாவில் வேலை ஆட்களை வேலை ஏவியப்படியே, கால் மேல் கால் போட்டு ஜம்பமாக அமந்திருந்த மித்ராதேவி இருக்க, அவளை பார்த்த அடுத்த நிமிடம் அவள் மென்மையாக புன்னகைக்க, அவளோ அவளை கோபமாக முறைத்தாள். தேவையில்லாம சிரிச்சது தப்பா போச்சு யோசித்தவளாக மெல்லமாக அவள் படிக்கட்டுகளில் ஏறி போகும் போது,
"ஏய் ஒரு நிமிஷம் இங்க வா" என்றாள் மித்ரா.
"உன்கிட்ட பேசி தீர்க்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கு பேசணும்" சொன்னவர் வேகமாக அவனின் அறைக்குள் சென்றுவிட , சுடரிகாவோ என்ன சொல்ல போகிறாரோ என பதட்டத்துடனே அவரின் பின்னாடியே நிழல் போல தொடர்ந்து அவளின் அறையை கூட அடைந்திருக்கவில்லை சடார் என கதவு மூடப்பட்டது. அதை திடுக்கிடலுடன் அவளை நிமிர்ந்து பார்த்தாள் சுடரிகா.
"உனக்கே தெரியும் என் பையன் உன் கழுத்துல தாலி கட்டுனது எதுக்காகன்னு? அதை மறுபடி மறுபடியும் உனக்கு நான் ஞாபகப்படுத்தனும்னு அவசியம் இருக்காதுன்னு நினைக்கிறேன்" என ஆணித்தரமாக அது உன் மனசுல பதிஞ்சு இருக்கணும் பதியனும் புரியுதா எனவும், அவள் சரியென தலையாட்டினாள்.
"இங்க பாரு என் பையன கல்யாணம் பண்ணிக்கிட்டங்கிறதுக்காக என் பையன் கிட்ட நீ அட்வான்டேஜ் எடுத்துக்க கூடாது புரியுதா?"
"ம்..."
"நெக்ஸ்ட் , முக்கியமானது ஆனந்த் ரூம்ல ஜஸ்ட் ரூம் மேட்டா மட்டும் தான் இருக்கணும் நான் சொல்ல வந்த அர்த்தம் உனக்கு புரியும்னு நினைக்கிறேன் புரிஞ்சதா
"ம்... புரிஞ்சது மேடம்."
"இப்ப எப்படி இருக்கியோ அதே மாதிரி தான் இன்னும் 12 மாசத்தையும் நீ கடக்கணும் புரியுதா அதுக்கப்புறம் பணத்தை வாங்கிட்டு நீ யாரோ அவன் யாரோன்னு போய்க்கிட்டே இருக்கணும்ல அண்ட் ஒன் மோர் திங் இந்த ஒரு வருஷம் கழிச்சு நீ எங்க ஆபீஸ்ல ஒர்க் பண்ண கூடாது புரியுதா?"
"ம்... ஓகே மேம் நல்லாவே புரிஞ்சது" என்றாள் சுடரிகா.
"சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லியாச்சு இப்ப நீ போகலாம்" அறையின் கதவை திறந்தாள். அறையின் கதவை திறந்தார் மித்ரா. எதுவுமே பேசாமல் அவளும் அழகை விட்டு கடக்கும் வேலை வீட்டிற்குள்ளே காலடி எடுத்து வைத்தான். உக்ரன்.
"அம்மாவோட ரூம்ல இருந்து இவள் எதுக்கு வெளிய வரான்" என அவன் யோசனையில் திளைத்துக் கொண்டிருக்க பின்னாடியே வந்த மித்ரா தேவியை பார்த்தான் உக்ரன்
"ஹாய் மாம்" என்றான் அவரும் பதிலுக்கு வாடா கண்ணா" என தன் மகனை ஆசையோடு வாஞ்சையோடு அழைத்தவர்,
"வா வந்து இப்படி கொஞ்சம் உட்காரு" என சொல்லவும்,
"மாம் ஒரு பத்து நிமிஷம் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வரேன் இன்னிக்கு உங்ககிட்ட நிறைய விஷயம் பேசணும். ஆபீஸ்ல பல விஷயங்கள் நடந்தது. அது எல்லாமே ஷேர் பண்ணனும்" என்று அவன் சொல்லியபடி மேலே இருக்கும் வேகமாக போக அவள் அவன் பின்னாடியே போனாள்.
அவன் அறைகுள் நுழைந்ததும் கதவை படீரென சாத்த தன் பின்னே, ஒருத்தி வருகிறாள் என்று கூட அவன் நினைக்கவே இல்லை அப்படியே நினைத்தாலும் அது பெரிய பொருட்டாக எடுத்துக் கொள்ளவும் இல்லை. அவளின் முகத்தின் முன்னே கதவை படீரென என அடித்து சாத்தவும், அவளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
உள்ளே போகலாமா வேண்டாமா எனும் யோசனையில் தெளித்துக் கொண்டிருந்தாள் இந்த திருமணமே அவர் கண்டத்தில் இருந்து தப்பிப்பதற்காக நடந்த ஒரு திருமணம் அப்படி இருக்க எனக்கு ஏன் இவருடன் இருக்க வேண்டும் என்று மட்டும் சொல்கிறார்கள் அதுவும் ஒரே அறையில் இந்த வீடு எவ்ளோ பெருசா இருக்கு இதுல ஒரு சின்ன ரூம் அட்லீஸ்ட் ஒரு ஸ்டோருமாவது எனக்கு கிடைக்காதா?" இப்படியாகத்தான் அவளின் எண்ண போக்கும் இருந்தது.
இவ்வாறு அவள் நினைத்துக் கொண்டிருக்கையில் கதவு திறக்கப்பட சுடரி நிமிர்ந்து பார்க்க, அவன் தான் இடுப்பில் கைவைத்து ஒரு காலை நிலத்தில் ஊன்றி இன்னொரு காலை அதற்கு மேலே வைத்து படு ஸ்டைலாக நின்று அவளுக்கு காட்சியளித்தான். அவளை கூர்மையாக நோக்கியவன் அவளின் உயரத்திற்கு சற்றே கீழே குனிந்தவன், தலையை மட்டும் சாய்த்து,
"என்ன மேடம் உள்ளவர ஐடியா இல்லையா? இப்படியே வெளியே எத்தனை நேரம் இருக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கீங்க?" அவன் அவளுக்கு தக்க மரியாதைையுடன் பேச அல்ல நக்கல் பேச்சில் அவளோ நிமிர்ந்து பார்த்துவிட்டு எதுவுமே பேசாமல் அவனைத் தாண்டி உள்ளே போகையில் அவளின் நீண்டமான கூந்தலை மீண்டும் ஒரே இழுவையாக இழுத்தாள். அதில் அவள் வழியில் முகம் சுணங்க,
"ஒன்னும் இல்ல இது ஒரிஜினல் ஹேர்தானானு செக் பண்ண அவ்வளவுதான் நீ போ" சொன்னவன் அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை வேக வேகமாக கீழே இறங்கி போய் விட்டான்.
அவனின் செய்கை அவளுக்கு ஒரு பக்கம் சிரிப்பை உதிர்த்தாலும் அவன் கிட்டே நெருங்கையில் அவன் மேல் வீசும் ஆண்மை வாசமும் அவனுக்கு என்றே பிரத்தியேகமாக இருக்கும் சென்டின் மனமும் அவளின் உணர்வும் மெல்ல எழும்பியது. அவனின் இந்த தொடுகையும் தொடுதளின் உணர்வும், பெண்ணின் மென்மையை கொஞ்சம் அசைத்து பார்க்கத்தான் செய்தது.
எத்தனையோ நாட்கள், மாதங்கள், தூரத்தில் இருந்தே அவனை அதிக அளவுக்கு ரசித்து பார்த்து இருக்கிறாள் தான் ஆனால் என்றைக்கு திருமணமானதோ அன்றிலிருந்து அவனின் நெருக்கமும், அவன் பழகும் விதமும், அவன் அவளிடம் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் அவளின் மனப் பெட்டகத்தில் நல்லவையோ அல்லது தீயவையோ பதிந்து போனது.
அறைக்குள் நுழைந்தவளுக்கு அவன் இழுத்து பிடித்த முடியை ஒருமுறை அவளாகவே தொட்டு பார்த்தாள். புன்னகை உதிர்த்தபடி நிற்க, ஆனால் சிறிது நேரத்திலே நீ கொண்ட சிறு புன்னகை தொலைந்து போகும் என தெரியாமல் அதற்குமேல் அவள் அப்படியே நிற்க முடியவில்லை. அடுத்தடுத்துஅவளது வேலைகளையும் பார்க்க சென்று விட்டாள்.
"மாம் இன்னைக்கு ஆபீஸ்ல புது ப்ராஜெக்ட் ஒன்னு எடுத்திருக்கேன். பிடிஎஸ் குரூப் பிரதர்ஸ் கம்பெனி இருக்காங்களே அவங்கள ஏற்கனவே உங்களுக்கு தெரியும்தானே? இவன் சொல்ல அவளும் ஆமாம் என்று தலையாட்டு ஆட்டம் அவங்க கிட்ட தான் நம்ம இப்ப பிசினஸ் டீல் பண்ணிருக்கோம். 50% ஷேர் இருக்குறதுனால நியாயப்படி நடந்துக்க வேண்டாமா? அவங்களுக்கு ரொம்ப பிடிச்சு போயிடுச்சு சோ அதையே அவங்க வேற பிரண்டா மாத்தி செய்யலாம்னு முடிவு பண்ணி இருக்காங்க நம்ம பிராண்ட்டோட நேம் இதுல எந்த விதத்திலும் கெட்டுப்போகாதுமாம் அதுக்கு உங்களுக்கு நான் கேரண்டி கொடுக்கிறேன் இது முழுக்க முழுக்க வேற ஒரு பிரான்ஞ்சா நம்ம பண்ண போறோம். என்ன பிராண்ட்டோட நேம் மட்டும் கொஞ்சம் மாறுது. அதுலயும் அவங்களும் இன்வால்வாக இருக்கிறதுனால நம்மளோட பிராண்ட் நேம் அவங்களோட பிராண்டு நேம் கெட்டுப் போகாமல் நியூ பிராண்டா நம்ம லாஞ்ச் பண்ண போறோம். இது சக்சஸ் ஆகும்னு நினைக்கிறேன்" அவன் பாட்டுக்கு அலுவலக விஷயங்களை பேசிக்கொண்டே போக மித்ராவின் எண்ணங்கள் ஒவ்வொன்றும் தாறுமாறாக போய்க் கொண்டிருந்தது.
இவன் பேசுவது எதுவும் அவர் காதை அடைந்து மனதை சென்றடையவில்லை எங்கோ எதிலோ ஒரு யோசனை இருந்தபடி இருக்க இதை கண்டு கொண்டான் உக்ரானந்த் அம்மாவின் தோள்பட்டையை மெல்லமாக பிடித்து அழுத்த,
"மாம் நான் உங்ககிட்ட தான் பேசுறேன் நீங்க எதுவுமே பேசாம இப்படி அமைதியா இருக்கீங்களே நான் பேசுவது எதுவும் உங்க காதிற்கு விழுந்ததா? இல்லையா?" என்றான்.
"என்ன சொல்லுப்பா" என்று இவர் தூக்கத்திலிருந்து எழுந்து வந்தவள் போல கேட்க,
"மாம் அப்ப நான் இதுவரைக்கும் பேசுனதுக்கு எதுவுமே நீங்க காது கொடுத்து கேட்கவே இல்லையா" என்று கேட்டான்.
"என்ன கேட்ட வேற ஒரு திங்கிங்ல இருந்த ஆனந்த் சாரிடா."அவனுக்கு பியூஸ் போன பல்பு போல புஷ் என்று ஆகிவிட்டான்.
"ஓகே மா நீங்க எங்கேயோ இருக்கீங்க நான் கொஞ்சம் வெளியே போகணும் போயிட்டு வந்துடறேன்" என அவன் எழ போகும் போது அவனின் கையைப் பிடித்து இழுத்து மீண்டும் தன் பக்கத்தில் உட்கார வைத்தவள் "ஒரு நிமிஷம்" என்றார்.
"வாட் மாம்"
"ஒரு அம்மாவா உன் கிட்ட இது நான் சொல்லக்கூடாது தான் ஆனா உன்கிட்ட இத சொல்லாம என்னால இருக்க முடியல" தயங்கியபடி வார்த்தைகள் ஒவ்வொன்றும் உதிர்த்துக் கொண்டிருந்தார் மித்ரா தேவி.
"என்னனு சொல்லுங்க மாம்?"
"அது வந்து ஆனந்த் ரெண்டு பேரும் கணவன் மனைவி என்கிறது இந்த ஒரு வருஷம் மட்டும் தான் அதாவது உனக்கு கண்டத்தில் இருந்து தப்பிக்கிறதுக்காக மட்டும் தான் இந்த கல்யாணம் அது உனக்கு தெரியும் தானே?"
"ஓ மை காட்... மறுபடியும் முதல்ல இருந்தா அதான் தெரிஞ்ச விஷயமாச்சே. இப்ப மறுபடியும் அத ஞாபகப்படுத்துவதற்கு தான் இதை என்கிட்ட சொல்றீங்களா?" கடுப்பாக பேசியவனை கொஞ்சம் புன்னகையுடன் பார்த்து வைத்தாள் மித்ரா.
"சரி சரி நான் விஷயத்துக்கு வரேன் நடந்த கல்யாணம் எப்படிப்பட்ட கல்யாணங்கறது உனக்கு நல்லாவே தெரியும். சோ இத அட்வான்டேஜா நீ எந்த விதத்திலும் யூஸ் பண்ண கூடாது புரியுதா?" என சொன்னவர் தன் மகனையே கூர்மையாக பார்த்திருக்க, தன் அன்னை என்ன சொல்ல வருகிறார் என்பதை நன்றாக புரிந்து கொண்டவனோ,
"மாம் அவளெல்லாம் ஒரு ஆளுன்னு என்னை பத்தி நீங்க என்ன நினைச்சுக்கிட்டீங்க? நீங்க நினைக்கிறது ஒரு நாளும் நடக்காது. என் ஸ்டேட்டஸ்க்கும், என்னோட அழகுக்கும் கொஞ்சமாவது ஈடாவாளா அவள்? அவகிட்ட போய், என்ன மாம் இது? இதை மட்டும் மேனகா கேட்டானா அவ மனசு என்ன பாடுபடும் பாவம் அவ... என்னைக்குமே என் வாழ்க்கையில மேனகாவுக்கு மட்டும்தான் முதலும் கடைசியுமாய் இடம். இவள் ஒரு பாசிங் க்ளவுஸ் மாதிரி" சொன்னவன் அடுத்த நிமிடம் நிற்காமல் வேகமாக வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட அவன் சொன்ன வார்த்தைகள் யாவும் சுடரிகாவின் காதில் அப்படியே விழுக, நிலை குலைந்து போய் நின்று விட்டாள் சுடரிகா.
அசுரன் தொடர்வான்.

Author: shakthinadhi
Article Title: அசுரன் 9
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.