• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
309
Reaction score
251
Points
63
முரண் மஞ்சத்தில் திமிராடும் மன்னவனே!

அத்தியாயம் - 1

"வாக்கப்பட்டு வந்த வாசமலரே..
வண்ணம் கலையாத ரோசாவே..

தாழம்பூவுல வீசும் காத்துல..
வாசம் தேடி மாமா வா...

முத்து மணி மாலை..

என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட..

வெட்கத்துல சேலை..

கொஞ்சம் விட்டு விட்டுப் போராட.."

காலையிலேயே இனிமையான பாடல் ஒலித்து மனதிற்கும் உடலிற்கும் புத்துணர்ச்சியை கொடுத்தாலும், ஏதோ யோசனையில் மூழ்கி பரபரப்பாக சமைத்துக் கொண்டிருந்தாள் மதுபாலா.

முரட்டுக் கணவனின் காட்டுத்தனமான காதலில் சிக்கி, அவனுடனான திருமண வாழ்வில் வெற்றி வாகைசூடி இதோ முப்பது ஆண்டுகள் முடிந்தாயிற்று.
கொஞ்சமும் திகட்டாத முரட்டு காதலால் ஒவ்வொரு நாளும் திணறடித்து மதுவை தாங்கும் முரடன், பாட்டு சத்தத்தில் விழிகளை உருட்டி மெல்ல கண் திறந்தான்.

அப்ப்பா.. ஐம்பத்தி எட்டு வயதிலும் வியக்கவைக்கும் அளவிற்கு கரடுமுரடு கட்டுமஸ்து தேகம் மினுமினுக்க, நரைகள் மீட்டும் அடர்ந்த கேசத்தை கோதிய வீர்ப்புத்திரன், குளிர்ந்த நீரால் முகத்தை அலம்பிக்கொண்டு நீர் சொட்டும் முகத்தினை துடைக்காது அப்படியே வெளியே வந்தான்.

சமையல்கட்டில் இருந்து வரும் குழம்பின் வாசமே மனைவி இருக்கும் இடத்தை காட்டிக் கொடுக்க, பூனை நடையிட்டு வந்த வீர், முதுகு காட்டி நின்று மும்புரமாக சமைத்துக் கொண்டிருந்த மனைவியின் பின்னோடு ஒட்டி நின்றவன், முகத்தில் சொட்டும் நீர்திரள்களை அவள் கழுத்து வளைவில் முகத்தை தேய்த்து பிரட்டி துடைக்க, நரை வந்த பின்னும் கணவனின் உஷ்ன தீண்டலில் மேனி சிலிர்த்தாள் மதுபாலா.

"மாமாக்கு ரொம்ப அசதியோ.. இப்பதா எந்திரிச்சி வரீங்க" வாய் இன்னிசை இசைக்க, தங்க வளவி இசைக்கேற்ப உரசியபடி, கணவனுக்காக டீயை ஆற்றினாள் மது.

"முக்கியமான விசயமா காத்தால வெளிய போவணும். வெரசா எழுப்புனு தானே டி சொன்ன. என்னைய எழுப்பாம நீ மட்டும் குளிச்சி சீவி சிங்காரிச்சி உன் வேலைய தொடங்கிட்டியா.."
லேசாக நரைத்த பின்னலிட்டு முடிந்த கொண்டையை சுற்றிலும் பூ வைத்து, இலகுவான பருத்திப் புடவையில், ஐம்பதிலும் மேனி குலையாது தங்க சிலையாக நிற்கும் மனைவி வாசத்தை ஆழ சுவாசித்து, காலையிலேயே மது போதை ஏற்றிக்கொண்டான் வீர்ப்புத்திரன்.

"நல்லா அடிச்சி போட்டத போல அசதியா தூங்கின உங்கள எப்டி மாமா எழுப்புறது. வர்ற வர்ற சரியான தூக்கமும் இல்ல, அதா எழுப்பவே மனசு வரல" பதில் கொடுத்த மது திரும்பி, அவனது கையில் டீயை கொடுக்கவும், எதுவும் பேசாமல் வாங்கிய வீர், சமையல் திட்டில் அமர்ந்து அவளை பார்த்தபடியே டீயை உறிஞ்சி குடிக்க, இதற்கு பொழுது ஒரு வேலை ஓடுமா மதுவுக்கு.

வயது முதிர்ந்த பின்னும், அதே முரட்டு பார்வை மாறாது, நிற்காத ஊற்று போல பொங்கி பெருகும் காதலோடு, இமைக்காது தன்னையே பார்த்திருந்தால் என்ன செய்வது.

"இங்க ஒரே வெக்கையா இருக்கு மாமா. ஹால்ல போயி உக்காந்து டீ குடிங்களேன்" அக்கறையாக சொன்ன மனைவியை இதழ் கோணி பார்த்தவன்,

"நீயும் தானே வெக்கைல நின்னு தனியா வேல பாக்குற. செஞ்ச வரைக்கும் போதும் எங்கூட வா, ரெண்டு பேத்துமா சேந்து ஒன்னா டீ குடிப்போம்" அதே கரகரப்பு மாறாத குரலில் உரைத்து, மது இடையில் சொருகி வைத்திருந்த முந்தானையை உருவி கையில் சுருட்டிக் கொண்ட வீர், மெல்ல மெல்ல இழுக்க, வெடுக் வெடுக்கென காந்தம் போல ஈர்த்து அவனது கால்களுக்கு நடுவே இணை சேர்ந்தாள்.

"என்ன மாமா இது சேட்ட, இன்னும் இளமை துள்ளுதோ.. பசங்க யாராச்சி வர்ற போதுங்க" கூடத்தை படபடப்பாக பார்த்தபடியே அவசரமாக விலக முயன்ற மனைவியின் வாயில் வெதுவெதுப்பான தேனீர் இதமாக இறங்கிட, நயனங்கள் விரித்தாள் மது.

"ஒன்னா சேர்த்து குடிக்கலாம் வான்னு மரியாதையா தானே கூட்டேன். நீதே வீம்பு பண்ண நானும் டீயை ஒனக்கு என் வாயால ஊட்டி விட்டேன். கணக்கு சரியா போச்சி டி.

அப்புறம் எம்புட்டு வயசானாலும் என் பொஞ்சாதிகிட்ட மட்டும் இளமை துள்ளிக்கிட்டேதே இருக்கும். நீ தாங்கிதே ஆவணும் புரிஞ்சிதா" விறைப்பு மாறாது தன் காலால் அவள் பின்னழகில் கட்டிய வீர், ஒரு டம்பளர் டீயை பாதி மனைவிக்கும், மீதியை தனக்குமாக உறுஞ்சிவிட்ட பின்னே தொண்டை இனித்து கால்களை இளக்க, மஞ்சளில் குளித்த கன்னங்கள் சிவந்து போனது.

"ஆமா கறிகொழம்பா வச்சிருக்க, வாசம் தூக்குது" உதவி செய்கிறேன் பேர்வழியில், அவள் பின்னோடு உரசி நின்று, முழுங்கை தேய்த்து சில்மிஷம் செய்யும் கணவனின் செயலில், நெளிந்த மது,

"இது சாம்பார் மாமா" என்றாள் உதடு மடக்கி சிரிப்பை மறைத்து.

"சாம்பாரா.. ஆனா கவிச்சை மணம் வீசுதே டி.. இதோ இங்க.. இப்பவே திங்க சொல்லி அடி வயிறு பிசையிதே.." அவள் பின்னங்கழுத்தில் வாசம் இழுத்து கண் சொக்கிய கணவன் பேச்சி, பச்சை பேச்சி என தெரியாதா அவளுக்கு.

"கவிச்சை திங்க ராத்திரி வரை பொருக்கணுமே மாமா. வீட்டுக்கு குட்டி விருந்தாளிங்க வந்திருக்குறது மறந்து போச்சா" இவள் நமட்டு சிரிப்போடு கேட்கும் போதே,

"தாத்தாஆஆ.. பாட்டிஇஇ.." முத்து முத்தான மழலைகள் குரல் உற்சாகமாக எதிரொலித்ததில்,

"இதோ மூக்கு வேர்த்துடுச்சில்ல உன் பேர பசங்களுக்கு" முணுமுணுத்தபடியே அவசரமாக மனைவியை விட்டு பிரிந்த வீர், தங்களை நோக்கி ஓடி வந்த ரெட்டை கதிர்களை ஆசையோடு இரு கைகளிலும் தூக்கிக் கொண்டு முத்தம் வைத்தவன், மனைவியை முரட்டு காதல் பார்வை பார்த்து வைத்தான்.

காதலுக்கும் அன்புக்கும் வயது பெரும் தடையா என்ன? காலம் கடந்தாலும், வயது முதிர்ந்தாலும், வீருக்கு மட்டும் இப்போதுமே அவள் அதீத போதை வஸ்து கொண்ட, போதைபெண் தான்.

குடும்ப ரீதியாக ஆயிரம் போராட்டங்கள், கவலைகள், சிக்கல்கள் என பலதும் மனதில் உழன்றாலும், உயிர் பிரியும் தருவாயில் கூட மனைவி ஒருத்தியை அருகில் வைத்து, சலைக்காது அவளை ரசித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

கொஞ்சமும் குறையாது அமிர்தம் போல் இனிக்கும் கணவனின் காதலில் கரைந்து உருக, மதுவுக்கும் கசக்குமா என்ன! விரும்பியே அவன் முரட்டு காதலில் மூழ்கி தொலைகிறாள் மது.

"தாத்தா.. ந்நா சொல்றத கேளு.. அவந்தா பெட்ல சுச்சூ போய்த்தான்" வீர் கன்னத்தை ஒரு பிஞ்சி கை வெடுக்கென திருப்ப.

"இல்ல இல்ல தாத்தா இவ பொய் சொல்றா.. ந்நா சுச்சூ போல இவதான் சுச்சூ போயி எம்மேல பழி போதுறா.." இந்த பக்கம் இன்னொரு கை தாத்தன் கன்னத்தை திருப்பி, காலையிலேயே உச்சா சண்டை வீர் தலைமையில் பலமாக நடந்துக் கொண்டிருக்க, கிட்சனில் இருந்து எட்டிப் பார்த்த மதுவுக்கு கணவனின் முகத்தை கண்டு ஒரே சிரிப்பாக வந்தது.

வெண்ணிலாவின் மூன்று வயது இரட்டை குழந்தைகள் ஆதவன், ஆதிரை. இரண்டும் தாத்தா செல்லம் தான். அது என்னவோ இந்த முரட்டு முகத்தை பார்த்து அன்று தொடங்கி இன்று வரை ஊரில் உள்ள அத்தனை பேரும் பயந்தாலும், குழந்தைகளுக்கு மட்டும் விதி விளக்கு போல. வீரை பார்த்து குழந்தைகள் பயந்தது என்று அகராதியிலேயே இல்லை.

பேரப் பிள்ளைகளின் சேட்டைகளை ரசிக்க நேரமே போதாது வீர் மது இருவருக்கும். தாத்தா தாத்தா தாத்தா.. என வாய் ஓயாமல் அழைத்தே வீரை அசதியாக்க, இந்த சேட்டைக்கார குட்டிகள் போதும்.

எந்த வயதிலும் மனைவியிடம் மட்டும் கட்டுப்பாடு இன்றி காட்டுப்பயலாக பாயும் வீருக்கு, பிள்ளைகள் வளர வளர பெரியமனிதனுக்கே உண்டான தோரணை தானாக வந்துவிட்டது.

மதுரையில் ஃபுட் பேக்டரி ஒன்றை சிறிதாக ஆரமித்து, தனி ஒருவனாக அயராத உழைப்பில் முன்னுக்கு வந்த ஆதிகேசனை பற்றி நன்கு விசாரித்து, வெண்ணிலாவை அவனுக்கு கட்டிக் கொடுத்த வீர், இதோ பேரப் பிள்ளைகளோடு பாதி செட்டில் ஆயாச்சு.

மீதியும் செட்டில் ஆக மகனுக்கும் நல்ல பெண்ணை பார்த்து கட்டி வைத்து விட்டால் போதும் என்றிருக்க, நம்ம அடுத்த நாயகன் தான் முகம் கொடுக்க மாட்டேங்குரானே!

"வீரா.. வீரா.. வீட்ல இருக்கியாய்யா.." பெரிய மனிதரின் அவசர அழைப்பில், பிள்ளைகளை தோளில் வைத்துக்கொண்டு வெளியே வந்தான் வீர்.

"என்ன விசயம் கந்தசாமி" என்றவனை தொடர்ந்து மதுவும் அவசரமாக வெளியே வந்தாள்.

"உன் மவன் மேல பஞ்சாயத்துல பிராது வந்திருக்குய்யா.." மேல்மூச்சி கீழ் மூச்சி வாங்க சொன்னவரை கண்டு புருவம் நெளித்த வீர்,

"யாரு அவங்கிட்ட ஏல்ரைய இழுத்தது" என்றான் கரடான குரலில்.

"இந்த தரம் உன் மவங்கிட்ட யாரும் எந்த வம்பும் பண்ணல வீரா, இவந்தே அசலூர் புள்ளைய பலவந்த படுத்தி கெடுத்துபுட்டதா எல்லாரும் பேசிக்கிறாய்ங்க. முக்கியமா அந்த புள்ளையே நேர்ல வந்து பிராது குடுத்து இருக்காம்யா" என்றதும் சற்றே வீரின் மனமே அசையத்தான் செய்தது.

"அய்யோ.. என்னெண்ணே சொல்றீங்க. என் புள்ளைய பத்தி உங்களுக்கு தெரியாதா.. எந்த பொண்ணையும் ஏரெடுத்து பாக்காத சொக்கத்தங்கம். நாங்களே அவனுக்கு நல்ல எடத்துல பொண்ணு பாத்துட்டு தானே இருக்கோம். அவன் ஏண்ணே இப்டி ஒரு காரியத்தை பண்ண போறான்.

யாரோ எங்களுக்கு வேண்டாதவங்க, என் புள்ள மேல பழி போட்டு இருக்காங்க" நெஞ்சம் கலங்க கூறிய மது, வீர் முறைப்பை கண்டு கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

"நிலா.." தந்தையின் அழைப்பில் நல்ல உறக்கத்தில் இருந்தவள்,

"இதோ வரேன் ப்பா" என குரல் கொடுத்தபடி வந்த மகளிடம் பிள்ளைங்களை கொடுத்தவன்,

"குழந்தைகள பத்திரமா பாத்துக்க, நானும் அம்மாவும் வெளிய போயிட்டு வந்திடறோம்" என்றவன் மனைவியை அழைத்துக் கொண்டு பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு விரைந்தான்.

ஊரில் உள்ள மொத்த கூட்டமும் அங்கு தான் கூடி இருந்தது. நடுவில் நடுநாயக்கமாக நெடுநெடுவென ஆறடியில் முறுக்கிய தேகத்துடன், பின்க்கை கட்டியபடி தெனாவடு தோரணையில் நின்றிருந்தான், வீரேந்திர ரகுபதி.

முகம் பார்க்க மது ஜாடையில் சாதுவாக இருந்தாலும், உடல் மொழியில் இருந்து பேச்சிக் குரல், குணம், திமிர் அனைத்தும், தந்தையின் குணாதிசயமே நிறைந்திருக்கும் 27 வயது கட்டிடம் காளை அவன்.

"வாய்யா வீரா.. ஒனக்காகதே இம்புட்டு நேரமும் காத்திருந்தோம். உன் மவன் என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்கான் தெரியுமா.. அநியாயமா ஒரு பொண்ண கெடுத்துப்புட்டு வந்ததும் இல்லாம, நாங்க என்ன கேட்டாலும் வாயவே தொறக்காம எம்புட்டு தெனாவட்டா நிக்கிறான் பாரு. நீயே உன் மவன்ட்ட கேட்டு சொல்லுய்யா"

தவறு வீர் மகன் பெயரில் தானே என்ற மிதப்பில், குரல் உயர்த்திய நாட்டாமையை எரிக்கும் பார்வை பார்வை பார்த்த வீரை கண்டு, சட்டென வாயடக்கிக் கொண்டார் நாட்டாமை.

மகனை பார்த்ததும் அவனிடம் ஓடி வந்த மது, "ரகு.. என்னப்பா நீ ஏதோ பொண்ண கெடுத்துப்புட்டதா சொல்றாங்க. நெசமில்ல தானே" அப்பாவியாக கேட்ட தாயை, கண்கள் இடுங்க குனிந்து பார்த்த ரகுபதி, நிமிர்ந்து தன் தந்தையை பார்த்தான்.

"நீ என்ன ப்பா நினைக்கிற.. ந்நா கெடுத்து இருப்பேனா, மாட்டேனா?" வீர் தோளில் கைப்போட்டு ஒற்றை காலை ஆட்டியபடி கேட்ட மகனை, சீரான பார்வை பார்த்த வீர், அப்படியே திரும்பி, தங்களுக்கு நேர் எதிரில் கலைந்த ஓவியமாக நின்றிருந்த அந்த சிறு பெண்ணை பார்த்தான்.

"டேய் ரகு.. அப்பாகிட்ட கேக்குற கேள்வியா இது.. தப்பு பண்ணியா பண்ணலையா அதுக்கு மட்டும் பதில் சொல்லு" மகன் மீது தவறு இருக்காது என உறுதியாக நம்பிய மதுவுக்கு கூட, உடலில் பல காயங்களும் கண்ணீருமாக நிற்கும் பெண்ணை பார்த்ததும், மனதில் கிலி பரவ தான் செய்தது.

"ஏய் என்னங்கடா குடும்பமா சேந்து நாடகமா போடறீங்க.. என் பொண்ண என் வீட்டுக்குள்ளே புகுந்து உன் மவன் கெடுத்தட்டான்னு சொல்றேன். அதை கேக்காம, அந்த பொருக்கிப் பயல, செல்லம் தங்கோனு கொஞ்சிட்டு இருக்கீங்க.. உன் வீட்டு பொண்ண எவனாவது கெடுத்து போட்டு போனாலும், இப்படித்தான் வெக்கமே இல்லாம கொஞ்சிக்கிட்டு நிப்பீங்களாடா.."

பெண்ணின் தந்தை ராஜ்மோகன், ஆத்திரமாக கத்திய கத்தில், வீர் கை முஷ்டி இறுக்கி நின்ற நொடியில், "டேய்.. என பாய்ந்து அவர் மூஞ்சிலேயே அடுத்தடுத்து ஆக்ரோஷமாக குத்திய ரகுவை ஈரக்குலை நடுங்க பார்த்தனர் அத்தனை பேரும்.

தொடரும்.

முதல் அத்தியாயம் முட்டி மோதி விட்டாச்சி. எப்டி இருக்குனு மறக்காம சொல்லுங்க drs.
 
Last edited:

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 1
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Messages
64
Reaction score
53
Points
18
Aarambame amarkalama iruke.... Daily oru ud kuduthudunga ji. ... Aama ena velan ah aalaye kaanoam....? Velan um bairu vum epo varuvanga....?🤔🤔
 
Top