- Messages
- 270
- Reaction score
- 234
- Points
- 43
இதழ் - 10
மாடிக்கு வந்த மகி “அப்படி என்னத்தே பெருசா மாமா இந்த ராதா புள்ளைக்கு குடுத்து இருக்கும்...” என புலம்பி கொண்டே காய போட்ட துணிகளை எடுத்து கொண்டு இருக்க, அவள் பின்னால் வந்த அர்ஜூன் மகி காதருகில் “ஏய்! ஏஞ்சல்...” என்று மெதுவாக அழைக்க,
அவள் கிட்டத்தில் கேட்ட சத்தத்தில் பயந்து போய் வேகமாக திரும்ப கையில் எடுத்த துணிகளையும் தவற விட்டு அவள் முன்னாள் இருந்த கல்மேடையில் கால் தடுக்கி கீழே விழப்போக,
அவள் விழாதபடி அர்ஜூன் அவள் இடையில் கை கொடுத்து தாங்கி பிடித்தான். எங்கே விழுந்து விடுவோமோ என்று பயத்தில் கண்களை இறுக மூடிக் கொண்ட மகி கையில் கிடைத்த அவன் சட்டையை இருக்கமாக பற்றிக் கொண்டாள்.
அவன் கையில் இருந்த மகியை இமை வெட்டாமல் பார்த்தவன், அவள் வெற்றிடையில் கை வைத்து இருந்தவனுக்கு, மகியின் இடுப்பு சங்கிலி தட்டு படவே நூறு வாட்ஸ் பல்பை போல அவன் முகம் பிரகாசமாக மாறியது. சிறிது நேரம் கழித்து, என்ன கீழ விழுந்தும் கொஞ்சம் கூட வலிக்கல நினைத்து மெதுவாக மகி கண் திறக்க, அர்ஜூன் முகத்தை இவ்வளவு அருகில் கண்டவளுக்கு இதயம் வேகமாக துடித்து மூச்சு முட்டியது. அவனிடம் இருந்து வேகமாக விலக முயன்று அவன் மார்பில் கைவைத்து தள்ள முயல, ஆணி அடித்ததை போன்று அசையாமல் அதே இடத்தில் நின்றவன், சிறு குழந்தைகள் பலப்பலக்கும் அழகான வழவழப்பான பொருட்களை எப்படி தொட்டு தடவி அததன் கைக்குள்ளே வைத்து கொள்ள ஆசை கொள்ளுமோ, அர்ஜூனும் அப்படித்தான்.
அவள் இடையில் இருந்த சங்கிலியயும், அவள் வழவழப்பான மிருதுவான மெல்லிடையில் ஒரு முறை, இடை சங்கிலியை விரல் கொண்டு வருடி, அடுத்த முறை, இடையை தடவி அதற்கும் அடுத்த முறை, சங்கிலியோடு சேர்த்து இடையையும் தழுவி, அழுத்தி, கிள்ளி என ஏதேதோ செய்து அவள் இடுப்பில் விளையாடி ஆராய்ச்சி செய்தான் ஆடவன்.
அர்ஜூனின் செயலில் உடல் கூசி போன மகி அவன் நெஞ்சில்
"பட்... பட்..." என அடித்து
“சீ... என்னைய விடுங்க. என்ன வேலை பாக்குறீய...” அவள் கத்த ஆரம்பிக்க, அதுவரை அவள் இடையில் கை கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தவன், மகி அடித்ததில் சுயம் பெற்று மற்றொரு கையால் அவள் கைகளை பிடித்து கொண்டு மகியை ஆழ பார்த்த அர்ஜூன்
“ஏன் ஏஞ்சல் பிடிக்கலையா..." என்றான் கிறக்கமாக.
அவன் கேட்டது அவளுக்கு புரியாமல் போகவே, அவனை மலங்க மலங்க விழித்து "என்ன பிடிக்கலையா?" இவளும் கேட்க,
அவளின் இதழ்கள் இரண்டாக பிளந்து பேசும் அழகையும் இங்கும் அங்கும் உருண்டோடும் மை தீட்டிய கண்களுக்குள் உள்ள கருவிழிகளை வெகுவாகவே ரசித்தவன் “இல்ல ஏஞ்சல் கொடிலருந்து எடுத்த துணிய பிடிக்கலயான்னு கேட்டேன்..." என பேச்சை மாற்றினான்.
“ஓ! அதுவா ஏதோ சத்தம் கேட்டுச்சேன்னு பயந்து அவசரமா திரும்பும் போது கால் தடுக்கி கீழ விழ போனேனா, அப்படியே எடுத்த துணியெல்லாம் கீழ விட்டுட்டேன். ஆனா நல்ல வேல நீய என்னைய கீழ விழாத பிடிச்சிட்டீய...” என்றவளுக்கு அப்போது தான் இத்தனை நேரமும் அவன் கைவலைவு குள்ளேயே நின்றிருப்பது நியாபகம் வர, அதுவரை அவள் அருகாமையில், இவ்வளவு கிட்டத்தில் மகியை ரசித்து பார்த்து கொண்டு அர்ஜூன் இருக்க, அவன் உடற்பயிற்சி செய்து நன்றாக முறுக்கேரிய அவன் புஜத்தில் வலிக்கும் படி நன்கு மகி கிள்ளி விட்டாள்.
வலியில் பட்டென கையில் இருந்தவளை உதறி விட்டு அவள் கிள்ளிய இடத்தை “ஸ்ஸ்! ஆஆ!” என்று தேய்த்துக்கொண்டே “ராட்சசி ராச்சசி ஏன் டி என்ன கிள்ளி விட்ட...” என்று அவளை முறைத்துக் கொண்டே கேட்க,
அதே முறைப்போடு “சாரு இம்புட்டு நேரம் இங்க என்ன செஞ்சீரு...?” இடுப்பை காட்டி நக்கலாக கேட்க “அது உன்னை விழாதபடி பிடிச்சதுல தெரியாம கை பட்டுடுச்சி அதுக்குன்னு நீ கிள்ளி விடுவியா. நல்லதுக்கே காலம் இல்ல போல...” என்று புலம்பினான்.
“ஓ! உங்க ஊருல தெரியாம கை பட்டா இப்படிதே அழுத்தி, கிள்ளி, மாவு பிசைஞ்சி சப்பாத்தி போடுவியலோ. இன்னொரு முற நீய என்கிட்ட இப்படி நெருங்கி வந்து ஏடாகூடமா ஏதாவது செஞ்சிய?” என்று அவனிடம் விரல் நீட்டி பேச,
ஒரே எட்டில் அவள் விரலை அவன் கை கொண்டு பிடித்து "பண்ணா என்ன ஏஞ்சல் பண்ணுவ?” புருவம் உயர்த்தி கேட்டு அவளிடம் நெருங்க,
அவன் அருகாமையில் வேகமாக இதயம் துடிக்க “இத பாருங்க நீய என்கிட்ட இப்படி நடந்துக்கிட்டா நான் வீட்ல எல்லார் கிட்டயும் சொல்லிப்புடுவேன் பாத்துக்கோங்க...” என்றாள்.
“ஹா ஹான். சொல்லு ஏஞ்சல்...” என்றவன் அவளிடம் இன்னும் நெருங்க, அவள் ஏதோ பேச வாயெடுக்கும் முன் “கார்த்தி ராதாக்கு என்ன குடுத்தான்னு உனக்கு தெரிஞ்சிக்க வேணாமா...?” என்று அவள் இதழ்களை பார்த்துக்கொண்டே ஒரு மாதிரியான குரலில் கேட்க,
மகி கண்கள் பளப்பளத்து “உங்களுக்கு மாமா என்ன குடுத்துச்சின்னு தெரியுமா?” கண்கள் விரிய ஆர்வமாக கேட்டாள்.
“ஹ்ம்ம். நல்லாவே தெரியும் ஏஞ்சல். ஆனா அது சொல்றதை விட செஞ்சி காட்டினா தானே உனக்கு புரியும்...” என்றவனின் குரல் மாறுபட்டு குழைந்தது.
அவன் பேச்சும், கண்கள் குறுகுறுவென அவள் இதழ்கள் மேல் மையல் கொண்டுள்ளதையும் ஓரளவு அவர்களுக்குள் என்ன நடந்திருக்கும் என யூகித்த மகி, அவனை அவளிடமிருந்து வேகமாக தள்ளி விட்டு கோவமாக முறைக்க, அவள் செய்கையில் அர்ஜூன் தலை கோதி சிரித்துக் கொண்டே “புரிஞ்சிடுச்சா ஏஞ்சல்...” என்று மீண்டும் அவள் இதழை அவன் கண்கள் தீண்டியது.
அவன் பார்வையில் என்ன உணர்ந்தாளோ, அவனை பாராமல் மீதம் கொடிகளில் இருந்த துணிகளை எடுக்க ஆரமிக்க.
அர்ஜூனே அவள் முன்பு வந்து “ஏஞ்சல் இனிமே அவன் ஏதாவது உன் தங்கச்சிக்கு கொடுத்தா, அதப் போய் எனக்கும் வேணும்னு அவன்கிட்ட கேக்காத. உனக்கு எது வேணும்னாலும் இந்த அத்தான கேளு ஏஞ்சல். உனக்காக பஞ்சமே இல்லாம அள்ளி தர நான் தயாரா இருக்கேன்...” என்றான் நெஞ்சில் கை வைத்துக் கண்ணடித்து.
இதைக் கேட்ட மகி இம்முறை ரொம்பவே கோவமாக “இங்க பாருங்க நீங்க போற போக்கே சரி இல்ல சொல்லிட்டேன். இதேமாதிரி என்கிட்ட நீய மறுபடியும் நடந்துக்கிட்டிய அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன். சொல்லிப்புட்டேன். ஏதோ நீங்க என் அத்தை மயனாச்சேன்னு சும்மா விட்டுப்போறேன். எதா இருந்தாலும் ரெண்டடி தள்ளி நின்னே பேசுங்க...” என்று அவனிடம் சீரிவிட்டு துணிகளை அள்ளிக் கொண்டு கீழே சென்று விட்டாள்.
இதுவரை அர்ஜூனிடம் யாரும் இப்படி முகத்துக்கு நேராக இத்தனை திமிராக பேசியதில்லை. தொழில் சுற்று வட்டாரங்களில் கூட அர்ஜூனை கண்டால் படையும் நடுங்கி விடும்.
எத்தனை பெண்கள் அவனை முழுதாக தனதாக்கி கொண்டு அவன் ஆண்மையையும், பணத்தையும் அடைய பேராசை கொண்டு சுற்றி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் சிறு பெண் அர்ஜூனை பற்றி எதுவும் தெரியாமல் ஆணவனின் கோவத்தை சீண்டி விட்டு சென்று விட்டாள்.
அவள் பேசிவிட்டு சென்றதில் வெகுவாக கோவம் கொண்டவன், தன்னை நிதானித்து கோவத்தை கட்டுக்குள் கொண்டு வந்து ஏதோ ஒன்றை மனதில் நினைத்தவனாய் அங்கிருந்து கீழே சென்றான்.
ஹாலில் சூர்யா சோஃபாவில் படுத்து காலாட்டி கொண்டிருக்க, அவனையே குறுகுறுவென இரண்டு ஜீவன்கள் பார்த்து கொண்டு இருந்தது. வேற யாரு நம்ம ராதா ரதி தான்.
கண் திறந்து பார்த்த சூர்யா அவர்களை பார்த்ததும் “ஹா ஹா கொல்லி வாய் பிசாசுங்க எதுக்கு நம்மள இப்படி பாக்குதுங்கன்னு தெரியலையே. டேய் சூர்யா வேணாம்டா இவளுங்கக்கிட்ட மாட்டிக்காத டா. ஏதோ பெருசா வச்சிருப்பாளுங்க...” மனதுக்குள் நினைத்து படக்கென்று மீண்டும் கண்களை மூடி கொள்ள,
அதுவரையிலும், அவனையே ஒருவர் மாத்தி ஒருவர் கண் கொத்தி பாம்பு போல பார்த்து கொண்டு இருக்க, அவன் லேசாக கண்ணை திறந்ததை பார்த்து விட்டு, ரதியும் ராதாவும் ஒருவரை ஒருவர் பார்த்து ஒருசேர மௌனமாக சிரித்துக் கொண்டே தலையாட்டி அவர்கள் அருகிலேயே வைத்திருந்த, ஐஸ் கட்டிகள் நிறைந்த தண்ணீரை எடுத்து அவன் மேல் மொத்தமாக கொட்டி விட்டு ஆளுக்கொரு பக்கம் ஓடி ஒளிந்து கொண்டனர்.
அதில் தொபுக்கடீர்ரென்று அடித்து பிடித்து எழுந்த சூர்யா ஜில் தண்ணீர் கொட்டியதில் உடல் நடுங்க தலையில் இருந்து தாடை வரை கைகளால் துடைத்து “ஏய்ய் மூட்டை பூச்சிங்களா விடமாட்டேன் டி உங்கள...” என்று கத்தி அவனும் அவர்களை துரத்திக்கொண்டு பிடிக்க வெறியோடு ஒவ்வொரு இடமாக தேட,
எங்கேயும் இல்லாமல் போகவே மூச்சு வாங்க ஒரு இடத்தில் நின்று நெஞ்சை பிடித்து கொண்டு இருக்க, அவன் தேடுவதை இருவரும் சிரித்து கொண்டே ஹைபை அடித்து “எங்களேவா நீ அக்காகிட்ட மாட்டி விடுற. எப்படியெல்லா மூணு பேரும் ரவுண்டு கட்டி திட்டினாளுங்க தெரியுமா...” என்றனர்.
காயு ராதா ரதி மூவரும் சென்னையில் ஒரே வீட்டில் தான் தங்கி இருந்தனர். இதில் காயு எப்போதும் டிரடிஷனல் தான். ஆனால் இந்த ரெண்டு மூட்ட பூச்சிகளும் அப்படியே காயுக்கு நேர்மார் தான். காயு திட்டி பார்த்தும் கேட்கவில்லை. அதுவும் காயு ரொம்பவே பயந்த சுபாவம் வேறு.
அவளை மிரட்டி உருட்டி இருவரும்
“வீட்டில் இதை யாருக்கும் சொல்லக் கூடாது. மீறி சொன்னா, கதிர் மாமாவை விட்டுட்டு, இங்க நீ வேற ஒரு பயல சைட் அடிச்சி உஷார் பண்ண பாக்குறன்னு மாமாக்கிட்ட சொல்லிப்புடுவோம்பாத்துக்கோ. என்று மிரட்டல் விடுக்க,
“அடிப் பாவிகளா...” எனும் ரீதியில் பார்த்து வைத்து “ஐயோ வேணாமா தாய்களா நீய என்ன கருமத்தை வேணும்னா போட்டுட்டு சுத்துங்க. ஆனா என் வாழ்கைல ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்து கும்மி அடிச்சிட்டு போய்டாதீய ஆத்தா...” என விட்டுவிட்டாள்.
காயுக்கு கதிர் தன்னை சந்தேகம் கொள்வானோ என்ற பயம் எல்லாம் இல்லை. காயுவை பற்றி கதிருக்கே நன்றாகத் தெரியும் காயு வீட்டு ஆட்களை தவிர வேறு யாரிடமும் பேச அத்தைனை பயம் கொள்வாள் என்று. அவனும் காயு பிறந்ததிலிருந்து அவளை பார்க்கிறானே.
காயுவின் இந்த எதற்கடுத்தாலும் சிறுபிள்ளை தனமான பயத்தை வெகுவாவே ஈர்த்து தானே அவளை உயிருக்கு உயிராய் காதல் செய்து இப்போது திருமணம் வரை வந்திருக்கிறான்.
இருந்தும் அவளின் இந்த குணமே கதிர் செய்யும் வேலை மேல் அத்தனை பயம் கொண்டு இன்று வரையிலும் அவனை நினைத்து அழுது கரைகிறாள். அவனும் எத்தனையோ முறை அவளை தேற்ற முயன்று தோற்று போவான்.
இங்கு இருந்தால் எங்கே தனிமையில் தன்னை நினைத்தே, தன்னை தானே வருத்திக் கொள்வாளோ என்ற பயத்தில் தான். ரதி ராதாவுடன் இருந்தால் கலகலப்பாக இருப்பாள் என்றுதான் அவளை அனுப்பி வைத்தான்.
காயுவும் இத்தனை வயதாகியும் இன்னும் சிறு பிள்ளைகள் போல மகிழ்ச்சியாக சுற்றி திரியும் இருவரையும் பார்த்து ரசித்து, இந்த வயதில் இதெல்லாம் போடாமல் பாட்டியான பிறகா போடமுடியும் என விட்டு விடுவாள். இருந்தாலும் மகி பூஜாவுக்கும் தெரிந்தால் பிரச்சனையாகும் எனவும் தெரிந்தே வைத்திருந்தால்.
மகி பூஜா காயு மூவரும் சிறு வயதிலிருந்தே உறவுகளையும் தாண்டி நெருங்கிய தோழிகள். மூவரும் பள்ளி படிப்புகளை ஒன்றாகவே முடித்து இன்றளவும் ஒரே குட்டையில் குளித்து ஒரே தட்டில் திங்கும் ரகம்.
காயு பயந்த சுபாவம். எந்த அளவுக்கு குறும்புத் தனம் செய்வாளோ அதே அளவு கோவமும் வரும். மகி பயம், கோவம், தைரியம், சேட்டை, இப்படி எல்லா வகையிலும் ஒன்றி போகும் ரகம்.
ஆனால் காயுவின் நல்ல நேரமோ இல்லை, ராதா ரதியின் கெட்ட நேரமோ, அன்றைக்கு என்று பார்த்து சூர்யா காயுக்கு வீடியோ கால் செய்ய, காயு அழைப்பை ஏற்கும் போது தவறுதலாக கை பட்டு பேக் கேமரா ஓபன் ஆகிவிட, சூர்யா கண்ட காட்சியில் பாவம் பயபுள்ள மிரண்டு போனான்.
அப்படி என்ன பார்த்துவிட்டான் தெரியுமா. வேற ஒன்னும் இல்லங்க ரெண்டு பேரும் குட்டி குட்டி பாப்பா டிரஸ் போட்டுக்கிட்டு முகம் முழுக்க இருக்க க்ரீம், பௌன்டேஷன், ஐலைனர், காஜல், லிப்ஸ்டிக்னு இப்படி இருக்க மேக்கப் ஐட்டம்ஸ் எல்லாத்தையும் மூஞ்சில போட்டுட்டு பேய் மாதிரி இருந்ததை தான் பயபுள்ள பாத்து பயந்து போச்சி.
“அடி பாவிங்களா அங்க ஊருல என்னென்னா நல்லா இழுத்து பொத்திகிட்டு குடும்ப குத்து விளக்குன்னு ஊரெல்லாம் நம்ப வச்சி ஏமாத்திட்டு. இங்க இப்டியா அட்டுழியம் பன்னிறீங்க இருங்க டி உங்களுக்கு இருக்கு...” என அதை அவன் போனிலும் ரெகார்ட் செய்து கொண்டவன், வீட்டிற்கு வந்த மறுநாளே அவன் ரெகார்ட் செய்த வீடியோவை மகி மற்றும் பூஜாவிடம் காட்டி கொடுத்து எக்ஸ்ட்ரா ரெண்டு பிட்டு சேர்த்து கோர்த்து விட்டான்.
அதில் கோவம் கொண்ட இருவரும், காயுவையும் இழுத்துக் கொண்டு, முப்பெரும் தேவிகளாக படையெடுத்து ராதா ரதி இரு தேவியயும் எண்ணெய் இல்லாமலே நல்லா முறுவலாக வறுத்து எடுத்து விட்டனர். அதில் தான் சூர்யாவை பிளான் செய்து, பழி வாங்கி விட்டனர்.
தொடரும்.
படிக்கிறவங்க கொஞ்சம் கமெண்ட் பண்ணுங்க drs