• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
270
Reaction score
234
Points
43
இதழ் - 11

குளிர்ந்த நீரை சூர்யா மேல் ஊற்றி விட்டு ரதி ராதா இருவரும் ஒரு அறைக்கு பக்கத்தில் ஒளிந்து கொண்டு அவனை பார்த்து கொண்டு இருக்க, சூர்யா குளிரில் நடுங்கிக் கொண்டே அவர்களை தேடி ஒய்ந்தவன் ‘முதல்ல போய் ட்ரெஸ மாத்திட்டு வந்து உங்க ரெண்டு பேத்தையும் வச்சிக்கிறேன் டி...’ கறுவிக்கொண்டே வேகமாக அவன் அறைக்கு செல்ல எத்தனிக்க, அவன் எதிரே இயர் போனை காதில் மாட்டி கொண்டு யாரிடமோ எதையோ தீவிரமாக பேசிக்கொண்டே வந்த ரிஷி மீது சூர்யா இடித்து கொண்டு இருவரும் நிலை தடுமாதிரி கீழே விழுந்து விட்டனர்.

ஜில் ஜில்லென சொத சொதவென ரிஷி மேல் ஐஸ் பாறை மோதியது போல உணர்ந்தவன் கிழே விழுந்ததில் இருவருமே கண்கள் மூடிய நிலையில் இருந்ததால் குளிரில் என்ன நடக்கிறதென்றே உணராமல், இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக கட்டி பிடித்து குளிருக்கு இதமாக அப்படிப் படுத்திருக்க,

இதை ஒளிந்து இருந்து ஆஆவென பார்த்த ராதா ரதி வாயில் கை வைத்து ஒருவரை ஒருவர் பார்த்து பின் இருவரும் சத்தமில்லாமல் வாயை மூடி வயிற்றை பிடித்து கொண்டு சிரித்துக் கொண்டு இருந்த நேரம் பார்த்து, ஹாலுக்கு ஒவ்வொருவராக பிரவேசித்தனர்.

இவர்கள் இருவரும் நடு கூடத்தில் இப்படி கட்டி பிடித்து படுத்திருப்பதை கண்ட குடும்பத்தினர், என்ன நடக்கிறதென்று ஒன்றும் விளங்காமல் அதிர்ச்சியில் கண்கள் விரிந்து, பின் முகத்தை சுளித்தனர்.

பாட்டி தலையில் அடித்து கொண்டு “ஐயோ, இந்த அசிங்கத்தை நான் எங்க போயி சொல்லுவேன். யாருக்கிட்ட போயி முறையிடுவேன். கடவுளே என் பேரன் இப்படி மாறிப் போவான்னு நான் என்ன கனவா கண்டேன். அவன் பொண்டாட்டி பிள்ளை குட்டிகளோட நூறு வருஷம் சந்தோசமா வாழுவான்னு நினைச்சி கனவெல்லாம் கண்டேனே. இப்படி இந்த எடுப்பட்ட பயலோட சேந்து என் கனவுல மண்ணு விழுந்து நாசமாபோச்சே...” என்று அது பாட்டுக்கு ஒப்பேரி வைக்க,

இதை கேட்ட இளசுகளுக்கு ஓரளவுக்கு என்ன நடந்திருக்கும் என யூகித்து குப்பென்று சிரித்து விட, பெரியவர்கள் இருப்பதை உணர்ந்து, கார்த்தி வேகமாக ரிஷி சூர்யாவிடம் சென்று “அடேய், எடுப்பட்ட பயலுகளா முதல்ல எந்திரிங்கடே. நடு கூடத்துல ரெண்டு பேரும் என்னத்தல அசிங்கம் பண்ணிட்டு இருக்கீய..?”
சத்தமாக கத்தியதெல்லாம் எங்கே அவர்கள் காதில் விழுந்தது. அப்போதும் குளிரில், பற்கள் டைப் அடித்து கொண்டு இருவரும் எதோ பஞ்சி மெத்தைல் படுத்து இருப்பதை போல அதே நிலையில் இருக்க, அர்ஜூன், ரிஷியை ஏகத்துக்கும் முறைத்துத் தள்ளியவன் ‘இந்த காக்ரோச் மண்டையன் மானத்த வாங்கி தொலையிறானே...’ என்று நினைத்தைவன் வேகமாக குனிந்து ரிஷியையும் சூர்யாவையும் தூக்கி விட்டு பிரிக்க,

இருவரும் பசுமரத்து ஆணி போல ஒட்டிக்கொண்டு பிரிவேனா என்று இருக்கமாக ஸ். உஉஉ, உஉஉ, ஆஆஆ என உதரல்களுடன் கட்டிக் கொண்டு இருக்க, அவர்களை தொட்டவுடன் அர்ஜூனையும் இழுத்து சேர்த்தே இருவரும் கட்டிக்கொண்டனர்.

இதை எதிர்பாக்காத அர்ஜூன் “அடேய் விடுங்கடா. நான் உங்கள பிரிக்க வந்தா என்னையும் ஏன்டா உங்க கூட்டுல சேக்கறீங்க...” என்று அவர்களிடமிருந்து திமிறிக் கொண்டு கத்தவும், மகி பூஜா ராதா ரதி அனைவரும் அர்ஜூன் பரிதாபமாக அவர்களிடம் மாட்டி கொண்டு கத்துவதைக் கண்டு சிரிப்பு வந்து விட்டது.

அடுத்து, கார்த்தி போயி அவர்களை பிரித்து விடும் நோக்கில் வேகமாகச் செல்ல, கத்த கத்த அவனையும் அதில் இழுத்து கட்டி அணைத்து நால்வருமாய் சுற்ற, இது சரிவராது என நினைத்த குரு “அடேய், என்னங்கடா அசிங்கம் பண்றீய...” என்று அவனும் பிரிக்கப் போக, அவனையும் உள் இழுத்துக் கொண்டு சுற்ற,

“அடேய், அறிவு கெட்ட முண்டங்களா விடுங்கடா..” என கதிர் கத்தி கொண்டுப் போக, அவனையும் அமுக்கி பிடித்து ஆறு பேருமாய் சேர்ந்து ஏதோ கோவிலுக்கு நேர்த்தி கடன் செலுத்துவதை போல, ஒரே இடத்தையே மயக்கம் வருமளவுக்கு சுற்றி கொண்டு இருக்க,

“ஐயோ தலை வேற சுத்துதே அட நாசமா போறவயலா. விட்டு தொலைங்கடா என்னைய. முருகா உன் பக்தன நீதேப்பா இவைக கிட்டருந்து காப்பாத்தம். கந்தனுக்கு அரோகரா...” என்று குரு பாட,

அவனை தொடர்ந்து கார்த்தியும், "என்னையும் சேர்த்தே காப்பாத்து முருகா "முருகனுக்கு அரோகரா..." பாட,

அதுவரை அழுது ஒப்பேரி வைத்து கொண்டு இருந்த பாட்டியும் உக்கார்ந்த இடத்திலேயே, தலைக்கு மேல் கும்புடு போட்டு “முருகா.. என் பேரனை நல்லபடியா பழைய மாதிரி குடுத்துடுய்யா. அந்த (ரிஷி) ரிச்சி பயலுக்கு உனக்காக வேண்டிக்கிட்டு மொட்ட போட்றேன் ப்பா வேலனுக்கு அரோகரா.." பாட.

வானதியும் தலைக்கு மேல் கும்பிட்டு போட்டு “ஐயா முருகா, உனக்கு நான் என்ன பாவம் பண்ணேன். என் புள்ளைக்கு என்ன ஆச்சின்னு தெரியலையே. நீ தான் அவனுக்கு தொன இருக்கனும். குமரனுக்கு அரோகரா..." பாட,

மீனாட்சியும் தலைக்கு மேலே கும்பிட்டு போட்டு “ஐயோ, ரிஷி கண்ணா உனக்கு என்னப்ப்பா ஆச்சி. என்கூட என்னை நம்பி அனுப்பி வச்ச உன்ன பெத்தவங்களுக்கு நான் என்ன சொல்லுவேன். முருகா நீதான்ப்பா எல்லா பயலுகளையும் காப்பாத்தணும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..." என்று பாட,

இதன் இடையில் குடும்பத்து தலை பெண்கள் அனைவரும் ஒரு படி மேலே சென்று தரையில் உருண்டு பிரண்டு "அரோகரா" பாடிக்கொண்டு இருந்தனர்.

மகி, பூஜா, ராதா, ரதி நால்வரும் இவர்கள் செய்து கொண்டு இருக்கும் கூத்தை பார்த்து வயிறு வலித்து கண்ணில் நீர் வரும்வரை சிரித்து கொண்டு இருந்தனர்.

அருவர் கூட்டத்தில் உள்ள அர்ஜூனின் முகமோ கோவத்தில் சிவந்து போய் அவர்கள் அவனை விடாமல் வேறு சுற்றி அவன் கடுப்பை கிளப்பி கொண்டு இருக்க, அதில் மகியின் கலகலவென வேகமாக சிரிக்கும் சத்தத்தில் சுற்றி கொண்டே அவளை கண்டான்.

குலுங்கி குலுங்கி சிரித்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க முத்து பற்கள் தெரிய இடுப்பில் ஒரு கையை வைத்துக் கொண்டும், நெஞ்சிலும் வயிற்றிலும் மாறி மாறி கை வைத்து சிரிப்பதை பார்த்த அர்ஜூன்,
கொஞ்சம் அவன் கோவம் மட்டுப்பட்டு அவளின் இந்த அருவி கொட்டும் சத்தம் போல இருந்த சிரிப்பை கண்டு அவன் முகத்திலும் சிறு புன்னகை அரும்ப தான் செய்தது.

“ப்பா! என் ஏஞ்சல் என்னமா சிரிக்கிறா. உன் முகத்துல இப்ப இருக்க இந்த சிரிப்பு நிலைச்சி இருக்க நான் என்ன வேணும்னா செய்யலாம் ஏஞ்சல்..." மனதில் நினைத்துக் கொண்டு இருக்கும் போது, கதிருக்கு வந்ததே ஆத்திரம்.

யாரும் அறியாதவாறு ரிஷி சூர்யா இருவரின் இடுப்பிலும் ஆளுக்கு ஒரு குத்து விட, அதில் வலி தாலாமல் பிடித்து இருந்தவர்களை விட்டுவிட்டு இடுப்பில் கை வைத்து “ஐயோ அம்மா...” என கத்தவும், அப்போது தான் அவர்களிடமிருந்து விடுபட்ட நால்வருக்கும் மூச்சே வந்தது.

கார்த்தி, தலையில் கை வைத்துக் கொண்டு “ஏன்டா பரதேசி பயலுகளா உங்களுக்கு நாங்க என்னடா பாவம் பண்ணோம். உங்கள பிரிக்க வந்தது ஒரு குத்தமாடா...” அவர்களிடம் மாட்டி சின்னாபின்னமான வருத்தத்தில் கேட்க,

“டேய், நான் என் பொண்டாட்டிய கூட இப்படி கட்டிப்புடிச்சி சுத்தினதில்ல டா. போயும் போயும் உங்கள சீ.. த்து" குரு முகத்தை சுளிக்க, அர்ஜூனும் கதிரும் ரிஷி சூர்யாவை முறைத்துக் கொண்டு நின்றனர்.

ரிஷி அவ்வளவாக நனையாததால் இப்போது குளிர் கொஞ்சம் அடங்கி போயிருக்கவே சூர்யாவை எட்டி ஒன்னு விட்டு “ஏன்டா என்னக் கருமத்தடா மேல ஊத்திட்டு வந்து என்னை வான்டடா வந்து கட்டிப் புடிச்சிட்டு இருந்த. பாருடா உன்னால எவ்வளோ அசிங்கமா போச்சி பாரு...” சுற்றி இருப்பவர்களை இருவரும் பார்க்க, இன்னும் தாய்மார்கள் "அரோகரா..." பாடிக் கொண்டு இருந்தனர்.

அப்போதும் சூர்யாக்கு குளிர் அடங்காமல், உடல் உதறி, ரிஷி உதைத்த இடத்தை தேய்த்து கொண்டே அவனை பாவமாக பார்த்து “அட போண்ணே நான் ஒன்னும் வேணும்னே உன்னை கட்டிப் புடிக்கலண்ணே...” என்று சுற்றி கண்களை சுழல விட்டு, அந்த இரு மூட்டை பூச்சிகளையும் தேட, அவன் கண்ணில் வசமாக இருவரும் சிக்கிக் கொண்டனர்.

அவர்களை பார்த்து சிரித்து கொண்டு இருந்தவர்களுக்கு சூர்யா மேல் ஐஸ் தண்ணி ஊற்றியது மறந்திருக்கவே, சத்தம் இல்லாமல் மெதுவாக வந்து, இரு மூட்டை பூச்சி தலை முடியையும் கொத்தாக பிடித்துக் கொண்டான். வலியில் அப்போது தான் தாங்கள் சூர்யாவிடம் நன்றாக மாட்டிக் கொண்டதை உணர்ந்தவர்கள் “சூர்யா சூர்யா ப்ளீஸ் டா. எங்கள விட்டுடு டா. நாங்க ஒன்னும் வேணும்னு பண்ணலடா. தெரியாம கைத் தவறி உன்மேல தண்ணி கொட்டிடுச்சி...” என்று இருவரும் கோரசாக பொய் சொல்லிக் கெஞ்ச, மகி பூஜா இருவருக்கும் புரிந்து போனது இதுங்க எதுக்கு சூர்யா மேல தண்ணி ஊற்றினார்கள் என்று.

அங்கு இருந்தவர்களும் அவர்கள் சண்டையை சுவாரஸ்யமாக பார்க்க, ரிஷி மாட்டி கொண்டு முழிக்கும் அவனின், மார்டன் ரதியை ரசனையாக பார்த்துக் கொண்டு இருந்தான்.

"அரோகரா கும்பல்" இப்போது தான் எழுந்து நடப்பதை பார்த்தது.

சூர்யா இருவர் தலையிலும் நன்கு கொட்டி “ஏன் டி நீங்க பண்ணது தப்பு அதைத்தானே டி நான் அக்காக்கிட்ட சொன்னன். அதுக்கு என் மேல இப்படித்தே தண்ணி ஊத்துவியலா. இதுல தெரியாம கொட்டிடுச்சின்னு பொய் வேற...” மீண்டும் கொட்டவும்

மகி பூஜா இருவரையும் பாவமாக பார்த்து “அக்கா, அண்ணி, இவன்கிட்ட சொல்லுங்க இனிமேல் நாங்க எந்த தப்பும் பண்ண மாட்டோம்...” கெஞ்சிட,

“சூர்யா பாவம்டா இந்த தடவ போனா போகட்டும் விடு...” மகியை தொடர்ந்து,
“ஆமா சூர்யா அடுத்த முறை இப்படி பண்ணா பெருசா பாத்துக்கலாம் விடு...” பூஜாவும் சொல்ல,

பாட்டி வந்து இருவர் குமட்டியிலும் குத்தி “ஏன் டி, பொம்பள பிள்ளைகளா டி நீங்க. என் பேரன் மேல தண்ணிய ஊத்தி இல்லாத கூத்து பண்ண வச்சிட்டு பாவமா முழிக்கிறத பாரு போங்க டி மொதல்ல...” அவர் பங்குக்கு திட்டினார்.

பாட்டியை முறைத்து விட்டு யாருக்கும் தெரியா வண்ணம் சூர்யாக்கு நாக்கை துருத்தி அழகு காட்டவும், அவர்களை முறைத்தவன் “அக்காவும், அண்ணியும் சொன்னதால விடுறேன். இல்ல மூட்ட பூச்சிய நசுக்குற மாதிரி நசுக்கி இருப்பேன்...” என்று கத்தி விட்டு அவன் அறைக்கு சென்று உடை மாற்றி வந்தான்.

பெரியவர்கள் இவர்களை சாடி விட்டு செல்ல, இளசுகள் ஒன்றாக அமர்ந்து நடந்த கலவத்தை பற்றி கலகலத்து பேசி கொண்டு இருக்க, காயுவும் இவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டு அரட்டை அடித்து கொண்டு இருக்க, அப்படியே என்னென்னவோ பேசி இப்போது பழைய நினைவுகளில் நடனத்தில் வந்து நின்றது.

இதில் எதிலும் கலந்து கொள்ளாமல், சிரித்து பேசும் மகியையே பார்த்து கொண்டு இருந்தான் அர்ஜூன்.

‘மகி அக்கா நீ ஆடுக்கா. நீதான் சூப்பரா ஆடுவியே...” என்று ராதா சொல்ல,
“ஏய்ய் போடி இப்ப என்னால ஆடலாம் முடியாது. எனக்கு நிறைய வேலை இருக்கு...” மகி தப்பித்து ஓடப் பார்க்க,

பூஜா அவள் கையை பிடித்துக் கொண்டு “ஏய்! மகி ஆடு டி. நீ தனியால்லாம் ஆட வேணா கதிரண்ணா கூட ஆடு. நீயும் அண்ணனும் சேந்து ஸ்கூல்லலாம் எம்புட்டு சூப்பரா ஆடுவீங்க...” என்றிட, இப்போது அர்ஜூனுக்கு வந்ததே ஒரு கோவம் பூஜாவை முறைத்தான்.

சுற்றி இருந்தவர்களும் இதையே சொல்ல “வா மகி நாமலும் ஆடி எத்தனை வருஷமாச்சு வா...” என்ற கதிர் அவளிடம் கையை நீட்ட, கதிர் கூப்பிட்டவுடன் அவளும் அவன் கையை நீட்டி பிடித்து ஆட தயாரானாள்.

இதைப் பார்த்த அர்ஜூனுக்கு கண்கள் சிவந்து கோவத்தில் உஷ்னமான மூச்சு காற்று வேகமாக வெளியே வந்தது “நான் தொட்டா அப்படியே என்கிட்ட சண்டகோழியா மாதிரி சீரிக்கிட்டு வர. இப்ப அவன் கைய நீட்டுறான் இளிச்சுக்கிட்டே போறியா. ஏஞ்சல் இதுக்கெல்லாம் சேத்து வச்சி இருக்கு டி உனக்கு...” என்று கறுவிக் கொண்டு இருக்க, பாடல் ஒலிக்க இருவரும் ஆரம்பித்து இருந்தனர்.

தொடரும்.
 
Top