• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
270
Reaction score
234
Points
43
இதழ் - 12


“அண்ணே என்ன பாட்டுக்கு டான்ஸ் ஆட சொல்றது” ராதா தாடையில் கைவைத்து யோசனையாக குருவை பார்த்து கேட்க,

“அட ராதா, மகியும் மாமாவும், ஸ்கூல் படிக்கும் போது ஒரு ப்ரோக்ராம்ல அந்த பாட்டுக்கு ஒன்னா சேந்து ஆடினாங்கன்னு நீங்க எல்லாரும் கூட அத பாத்துட்டு வந்து, ஆஹா, ஓஹோன்னு பாராட்டிட்டு இருந்தீங்களே அதுவே ஆடட்டும். அப்ப எனக்கு காய்ச்சல் வந்த ஸ்கூல்க்கு வரமுடியாததால என்னாலட்தே பாக்க முடியாம போச்சி...” வருத்தமாக காயு சொன்னதை கேட்ட அர்ஜுன்,

“இவ என்ன அவ கட்டிக்க போறவன் வேற ஒருத்தி கூட ஆடுனதை பாக்கலன்னு இப்படி பீல் பண்ணி சொல்றா...” காயுவை கோவமான லுக் விட்டான்.

“காயுக்கா இதுக்கு போயா மூஞ்சிய உம்முனு வச்சி சொல்ற...” என்று சூர்யா கேட்க,

“அண்ணி, நீ ஒரு வார்த்தை ஆடுன்னு சொன்னா, மகி அண்ணியும் அண்ணாவும் மறுக்கவா போறாக" காயுவிடம் ஆரம்பித்து “சரி சரி சீக்கிரம் அண்ணா அண்ணி நான் பாட்டு போடுறேன்... ரெண்டு பேரும் ஆட ஆரம்மிய...” என்று அந்த பாடலை அவளது போனில் ஓட விட்டாள் ரதி.

தன் பாவாடையை எடுத்து தூக்கி இடுப்பில் சொருகிய மகி, பாடல் ஒலிக்கு ஏற்ப அழகாக ஆடத் தொடங்கி இருந்தாள்.
"நறுமுகையே நறுமுகையே.. நீயொரு நாழிகை நில்லாய்..
செங்கனி ஊறிய வாய் திறந்து.. நீயொரு திருமொழி சொல்லாய்..
அற்றைத் திங்கள் அந்நிலவில்..
நெற்றித் தரள நீர்வடிய..
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா..
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித் தரள நீர்வடிய..
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா.."
மகி, கதிர் முன் கைகளை அசைத்து ஆட, கதிர் அவள் கை பிடித்து சுற்றி, இருவரும் ஒருசேர ஒற்றை கால்களை தூக்கி ஆடி.


"திருமகனே திருமகனே.. நீ ஒரு நாழிகைப் பாராய்..
வெண்ணிற புரவியில் வந்தவனே.. வேல்விழி மொழிகள் கேளாய்..
அற்றை திங்கள் அந்நிலவில்.. கொற்றப் பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைய பார்த்தவனும் நீயா..
அற்றை திங்கள் அந்நிலவில்.. கொற்றப் பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைய பார்த்தவனும் நீயா.."
கதிர் மகி இடையில் கை வைத்து நிற்க. மகி அவன் முகம் தொட்டு நிமிர்ந்து கண்களை பார்த்து, வெட்கம் கொள்வதை போல் பாவனை செய்து.
அவன் நெற்றியில் உள்ள தலை முடியை, ஒற்றை விரல் கொண்டு ஆட்டி, அவள் முகத்தையெ அவள் கைகளை கொண்டு மூடி. கைகளை மாற்றி மாற்றி முகத்தை மூடி எடுத்து. ஒரு கை அவள் பாதி முகம் மூடி இருக்க, மற்றொரு கை கதிர் புறம் நீட்டி, நீயா செய்து ஆட,

"மங்கை மான்விழி அம்புகள்..
என் மார்துளைத்ததென்ன..
மங்கை மான்விழி அம்புகள்..
என் மார்துளைத்ததென்ன..
பாடி நாடனைக் கண்ட என் மனம்..
பசலை கொண்டதென்ன..
நிலாவிலே பார்த்த வண்ணம்..
கனாவிலே தோன்றும் இன்னும் நிலாவிலே பார்த்த வண்ணம்.. கனாவிலே தோன்றும் இன்னும்..
இளைத்தேன். துடித்தேன்.. பொறுக்கவில்லை. இடையில் மேகலை இருக்கவில்லை.."

இப்போது, கதிர் ஒற்றை கால் ஊன்றி முட்டி போட்டு, கைகளை கொண்டு அவன் மார்பில் அம்பு பாய்வதை போல் காட்டி, மகி முகத்தை கையில் ஏந்தி, ஒருவிரலால் அவள் கன்னத்தில் கோடு போட்டுக் காட்ட, வெட்கம் கொண்ட பாவனை செய்வதை போல், அவனிடம் இருந்து பிரிந்த மகி, பின் இருவரும் சேர்ந்து ஆட, இருவரும் ஆடுவதை பார்க்க பார்க்க. அர்ஜூன் முகம் பச்சை மிளகாய்யை கடித்து மென்று தின்றதை போல் அத்தைனை காரசாரமாக இருந்தது.

"யாயும் யாயும் யாராகியரோ..
நெஞ்சில் நின்றதென்ன..
யாயும் யாயும் யாராகியரோ..
நெஞ்சில் நென்றதென்ன..
யானும் நீயும் எவ்வழி அறிதும்..
உறவு சேர்ந்ததென்ன..

ஒரே ஒரு தீண்டல் செய்தாய்..
உயிர் கோடி பூத்ததென்ன..
ஒரே ஒரு தீண்டல் செய்தாய்..
உயிர்க்கொடி பூத்ததென்ன..

செம்புல்லம் சேர்ந்த நீர்த்துளி போல்..
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன..

திருமகனே திருமகனே..
நீ ஒரு நாழிகைப் பாராய்..
வெண்ணிறப் புரவியில் வந்தவனே..
வேல்விழி மொழிகள் கேளாய்..

அற்றைத் திங்கள் அந்நிலவில்..
நெற்றித் தரள நீர்வடிய..
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா..
அற்றைத் திங்கள் அந்நிலவில்.. நெற்றித் தரள நீர்வடிய..
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா.."

கடைசியாக இருவரும், ஒருவர் வயிற்றில் ஒருவர் கை வைத்து, மற்றொரு கையை காற்றில் பறக்க விட்டு, இருவர் தலையும் வெளிப்புறம் வைத்து, வேகமாக சுற்றி கைகளை அசைத்து ஆடி முடிக்க, சுற்றி இருந்தவர்கள் தங்களை மறந்து, இருவர் நடனத்தை பார்த்து மகிழ்ந்து “ஏஏஏ...” என கத்தி, உற்சாகமாக கைகளைத் தட்டி, சூப்பர் என்று கத்தி பெண்கள் மகியை கட்டி துள்ளி குதித்து புகழ்ந்து தள்ள, ஆண்கள் கதிரின் கை குளிக்கி அணைத்து “சூப்பர் டா...” என சொல்ல,

கோவம், ஆத்திரம் என பல்வேறு வெறியோடு “ஏன்டி நான் உன் இடுப்புல கை வச்சேன்னு என்னெல்லாம் பேசுன. நான் உன்கிட்ட ரெண்டடி தள்ளி நின்னு பேசணும்.

இப்ப அவன் உன் கை புடிக்கிறான். கன்னத்தை தொடுறான். இடுப்ப புடிக்கிறான். அவனோட மட்டும் இளிச்சிக்கிட்டு வளஞ்சி வளஞ்சி ஆட்ற உன்னை இதுக்காகவே நான் என்ன பண்ண போறேன்னு பாத்துட்டே இரு டி. எனக்குன்னு நேரம் கிடைக்காமயா போய்ட போது...” என்று எண்ணிக் கொண்டு இதற்கு மேலும் அங்கு இருக்க பிடிக்காமல் தன் அறை நோக்கி வேகமாக சென்றான் அர்ஜூன்.

அழகான மாலைப் பொழுதில் சமையல் அறையில், மகி அனைவருக்குமாய் பிடித்த மாதிரி பால், டீ, காபி தனித் தனியாக காய்ச்சி கலந்து போட்டு கொண்டு இருக்க.

அதன் அருகில் உள்ள திட்டில் சாய்ந்து அமர்ந்து இருந்த பூஜா.
“ஏன் மகி, இப்படி எல்லாருக்கும் தனி தனியா பாலை பிரிச்சு போட்டுட்டு இருக்க உனக்கு கஷ்டமா இல்லையா டி...” என்றாள்.

“அதுக்கு என்ன டி பண்றது. நியாயமா பாத்தா நீதே, பாலை தயிராக்கி அதுலிருந்து வெண்ணையை பிரிச்சி மோர் எடுக்கணும். ஆனா இங்க நடக்குற கூத்தை பாரு. வீட்டுக்கு வந்த மருமக காலாட்டிட்டு உக்காந்துக்கிட்டு, அவ நாத்தனாரையே வேலை வாங்கிட்டு கஷ்டமா இல்லையான்னு வைக்கனையா கேக்குறா பாரு...” காயு சலித்துக் கொண்டாள்.

“அது என்னமோ தெரியல டி, சின்ன வயசுல இருந்து இந்த அடுப்படி பக்கம் வந்தாலே ஏதோ ஒரு அலர்ஜி மாதிரி படபடப்பு வந்து தொலையுது டி. நான் என்ன பண்றது சொல்லு..” பூஜா பாவமாக சொல்ல,

“அதுக்குதே உன்கிட்ட ரெண்டு பேரும் நாங்க சமையல் கத்துக்கும் போதே கத்துக்கோடீன்னு தலைப்பாடா அடிச்சிக்கிட்டோம். எங்க பேச்சை நீயி அப்பவே கேட்டு இருந்தின்னா இந்நேரம் நீ சமையல்னு பேரு சொல்லி நீ ஒவ்வொரு தடவை செஞ்சி கொடுக்குற விசத்துல இருந்து, என் குரு அண்ணே தப்பிச்சி இருக்கும்ல” காயு சிரிக்காமல், சீரியஸாக பூஜாவை கேலி செய்தாள்.

அதுவரை இருவர் சம்பாஷனைகளை கேட்டு கொண்டே டீ போட்டு கொண்டு இருந்த மகி, காயு சொன்னதை கேட்டு கலகலவென சத்தமாக சிரித்து விட்டாள். காயுவை முறைத்து பார்த்த பூஜா “ஏய்! மகி நிறுத்து டி, இப்ப அவ என்னத்த சொல்லிப்புடான்னு நீ இப்படி மழை கொட்றாப்புல சிரிக்கிறவ” என்றாள் மூக்கு விடைக்க.

“ஏய் காயு, உன்னால மட்டுந்தே புள்ள சீரியஸா பேசியே சிரிப்பு வர வைக்க முடியும்..” மகி சொல்லவும் , காயுவும் சிரித்து விட்டாள்.

சற்று சிரிப்பு அடங்கி காதுகளில் கை வைத்து மன்னிப்பு கேட்பதை போல் பூஜாவிடம் மகி சமிக்கை செய்ய “ஹ்ம்ம்.. போடி சிரிக்கிறதையும் சிரிச்சிட்டு, மன்னிப்பு கேட்டா நான் மன்னிக்கணுமா” அவள் முறிக்கிக் கொண்டு, உடனே இருவரையும் பாவமாக பார்த்து,

“நான் என்ன புள்ள பண்ணட்டும். நானும் என் மாமனுக்காகதே ஆசை ஆசையா எனக்கு வராத சமையலை கூட கத்துக்கிட்டு இருக்கே. ஆனா பாரு நான் எம்புட்டுதே கஷ்டப்பட்டு அவருக்காக பாத்து பாத்து பண்ணாலும் சொதப்பிடுது" என்றாள் சோகமாக.

“அட அண்ணியாரே, இதுக்கு போயி மூஞ்சிய இப்படி சோகமா வச்சிக்கலாமா. அவள் கன்னம் பற்றி கிள்ளி அதே நானும் காயுவும் இருக்கோமே டி. நாங்க உனக்கு ஒவ்வொண்ணா கத்து கொடுக்குறோம் பூஜா. அதுக்காக திருவிழால தொலஞ்சி போன குழந்தையாட்டம் இப்படி மூஞ்சிய வசிக்காத டி அப்புறம் என் அண்ண வந்து என் பொண்டாட்டிய யாரோ மாத்திபுட்டாங்கன்னு சத்தம் போடும்...” என்று பாவமாக மகி சொல்ல,

“ஆமா ஆமா அண்ணன் வெறும் சத்தம் மட்டுமா போடும். உடனே உன்னைய உள்ள தூக்கிட்டு போயி நீயி உண்மையாவே அவரு பொண்டாட்டி தானான்னு பிரிச்சு மேஞ்சி ஆராய்ச்சி பண்ணிப்புடும் பாத்துக்க” காயு குறும்பாக கண்ணடித்து கூற,

காயு சொன்னதை புரிந்து கொண்ட பூஜா வெட்கம் கொண்டு சிணுங்களுடன் “சீ போடி இப்போல்லா நீயி ரொம்ப பேசர புள்ள. இரு உன்னை கதிர அண்ணங்கிட்ட போட்டு குடுக்குறேன்” விளையாட்டாக மிரட்டியதை கேட்டு,
“ஐயோடா, அப்படியே உன் அண்ணே என்னய..." என்று ஆரம்பிக்க,
"உன்னைய?" என சமையல் கட்டு வெளியே இருந்து சத்தம் கேட்க, மூவரும் வெளியே எட்டி பார்க்க, கதிர் தான் கைகளை கட்டி கொண்டு காயுவை ரசனையாக பார்த்துக் கொண்டு இருந்தான்.

கதிரை பார்த்ததும் காயு நாக்கை கடித்து கொண்டு வேகமாக தலை குனிந்து கொள்ள, அவன் பார்வை அவள் மேல் ரசனையாக படிவதை, பார்த்த மகியும் பூஜாவும் இருவரும் அர்த்தமாக தலையாட்டி கொண்டு சத்தமில்லாமல் மகி போட்ட, டீ, பால் காபியை ஆளுக்கொரு தட்டை கையில் எடுத்து கொண்டு இடத்தை காலி செய்தனர்.

சமையல்க் கட்டுக்குள், மெது மெதுவாக காயுவை பார்த்து கொண்டே கதிர் நடந்து வர, அவன் வருவதை கவனித்த காயு இதயம் படபடக்க “மா... மாமா இப்ப ஏன் நீயு கிட்ட வர. இ... இது... கிட்சன் யாராவது நீயி இப்படி பண்றத பாத்தாங்கன்னா...” என்று இழுத்தாள்.

“பாத்தா இப்ப என்ன லட்டு பொண்ணே. என் பொஞ்சாதிகிட்ட தானே வரேன். அதை எவன் டி வந்து என்னை கேட்பான்” புருவம் உயர்த்தி காதலாக அவளை நோக்க, அதில் வெட்கம் கொண்டு காயு ஏதோ பேச வாய் எடுப்பதற்குள்,

"அத நான் கேப்பேன் டா..." மீண்டும் வெளியெ இருந்து குரல் வந்தது. குரு தான் கதிரை நக்கலாக பார்த்து முறைத்து கொண்டு இருந்தான்.

குருவை பார்த்த காயு “ஐயோ அண்ணே..” என பயம் கலந்த கூச்சம் கொண்டு கிடைத்த இடைவெளியில் கதிர் பிடிப்பதற்குள் ஓடி இருந்தாள்.

“அடேய் நல்லவனே என்னடா நான் உன் கல்யாணத்துக்கு முன்னாடி என் தங்கச்சி கூட பழக விடலன்னு இப்ப உன் தங்கச்சிய வச்சி என்ன பழி தீர்க்கரியாலோ..” கைக்கு கிடைத்தது வாய்க்கு எட்டாமல் போன வருத்தத்தில் குருவை முறைத்தான்.

கதிர் தோளில் கை போட்ட குரு “பின்ன என்ன மச்சா, நீயி எனக்கு கொஞ்ச நஞ்ச வேலையாலே பாத்த. அதுல நான் இன்னும் கால் வாசி கூட ஆரமிக்கலையே டா...” நக்கலாக சொன்ன குரு,
கதிர் வெறி கொண்டு முறைப்பதை கண்டுகொள்ளாமல் பேச்சை மாற்றி “அட வாலே, கல்யாண வேலை எம்புட்டு கெடக்கு. அத உட்டுபுட்டு வெட்டி கதை பேசிக்கிட்டு...” என்று அங்கு கதிரை இருக்க விடாமல் கையோடு இழுத்துச் சென்றான்.

மகி, வீட்டினர் அனைவருக்கும் டீ குடுத்து முடித்தவள், இப்போது அர்ஜூன் அறைக் கதவை தட்டிக் கொண்டு இருந்தாள்.

மகி, கதிருடன் ஆடியதை கோவமாக பார்த்து விட்டு மதியம் சாப்பிடாமல் கூட அறைக்கு சென்றவன், பொழுது சாய்ந்தும் எதுவும் சாப்பிடாமல் கீழே வராமல் இருந்தான். வேகமாக தனதறைக்கு வந்த அர்ஜூன், ஏழு எட்டு பாக்கெட் சிகரெட்டுகளை புகைத்துத் தள்ளியும் அவன் கோவம் தனியாமல் மது பாட்டிலை எடுத்து குடித்து கொண்டு இருந்த நேரம் தான், மகி அவன் அறைக் கதவை தட்டியது.

கடுங்கோவத்தில் இருந்தவனுக்கு, கதவை தட்டுவது எரிச்சலாக இருக்க, ரிஷி தான் கதவை தட்டுகிறான் என எண்ணி வேகமாக சென்று கதவை திறந்து விட்டு வெளியே யார் நிற்பது என்று கூட பார்க்காமல், திரும்பவும் கட்டில் மேல் வந்து அமர்ந்தவன் மது பாட்டிலோடு வாயில் சரிக்கத் தொடங்க, மகி அவன் அறைக்குள் ஏதோ ஒரு யோசனையாக வந்தாள்.

அவளின் ஜல் ஜல் கொலுசு சத்தத்தில், மது பாட்டிலை கையில் வைத்து கொண்டே அவன் கதவு பக்கம் திரும்ப அவளை பார்த்ததும், கதிர் அவளை தொட்டு தொட்டு ஆடியது நினைவுக்கு வர, கண்கள் சிவக்க கோவத்தை அடக்க முயன்று, தோற்றுக் கொண்டே அமர்ந்திருந்தான்.

அது வரை யோசனையில் இருந்த மகி, தன்னை தானே நிலை படுத்தியவள் அர்ஜூனைப் பார்க்க, கையில் மதுவுடன் கோவமாக கண்கள் சிவந்து, முகம் இறுகி அமர்ந்து இருந்த தோரணையில் மகிக்கே சற்று, கை கால் நாட்டியம் ஆடியது.

அவன் அறையை கண்களால் சுழல விட, தரை முழுவதும் கால் வைக்கும் இடமெல்லாம் புகைத்து போட்ட சிகரெட் தூண்டுகள் இருக்க, அதையும் அவன் கையில் உள்ள பாட்டிலையும் பார்த்து அதிர்ச்சியானாள் மகி.

பின் என்ன நினைத்தாளோ, அவனிடம் எதுவும் பேச தோன்றாமல், அர்ஜூன் எப்போதும் அவளிடம் கேட்கும், பாதம் பிஸ்தா முந்திரி கலந்த பாலை, அருகில் உள்ள மேஜையில் வைத்து விட்டு, அவனை பாராமல் "உங்களுக்கு பால் வச்சிருக்கேன். குடிச்சிடுங்க.." என்று சொல்லிவிட்டு திரும்பச் செல்லப் போக, அவளை போகவிடாமல் அவள் கரத்தை அழுத்தமாக பிடித்து இருந்தது மற்றொரு வலிய கரம்.

என்ன என்று அவள் திரும்புவதற்க்கு முன்னமே, அர்ஜூனின் அணைப்பிற்குள் இருந்தாள் மகி.

ஒரு நிமிடம் என்ன நடந்தது என்றே புரியாமல், அவன் அணைப்பிற்குள் கோழிக்குஞ்சாக மகி கட்டுண்டு இருக்க, அர்ஜூன்கோ ஏதோ சொல்ல முடியாத உணர்வில், அவன் மனம் தத்தலித்தது.

அத்தனை கோவத்தில் அவளிடம் இனிமேல் நீ கதிருடன் பேச கூடாது, பழக கூடாது, அவ்வளவு ஏன், முதலில் அவன் இருக்கும் திசை பக்கமே நீ இருக்க கூடாது என்று இன்னும் பல சொல்லி அவளை திட்டி தீர்க்கவே அவளிடம் வந்து அவள் கையை பிடித்தான்.

ஆனால் அவனையும் மீறி அவளை கட்டி அணைத்ததும் அதுவரை அவனுக்குள் எரிந்து கொண்டு இருந்த கோவத் தீ முற்றிலுமாக அனைந்து போய் முதன்முதலில், ஒரு பெண்ணை அதுவும் தன்னவள் தனக்கு மட்டுமே சொந்தமானவள் எனும் மனதுடன் மகியை அணைத்திருந்தான். எந்த பெண்ணிடமும் உணராத மென்மையை, மகியிடம் உணர்ந்தவனுக்கு, சொல்லுன்னா உணர்வுகள், அவன் மனதில் ஏதேதோ எண்ணங்கள் சூறாவளியாய் சுழட்டி அடித்தது.

மேலும் முன்னேரி, அவளின் தாவணி நலுங்கிய வெற்றிடையில் அவன் கையை படர விட்டு, இடுப்பு சங்கிலியை வருடி இடையோடு சேர்த்து பிடிக்க அவளையும் அறியாமல், அவன் இடை தொடும் கை மேல் அவளின் கையையும் வைத்துக் கொண்டாள்.

அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து, அங்கேயெ தஞ்சம் புகுந்து கொள்ளவும். ஆடவனின் சூடான மூச்சு காற்று அவளின் கழுத்து வளைவில் மோதி பெண்ணவளை உடல் நடுங்கி, கூச செய்து கண்கள் மூடி அதில் லயித்து இருந்தவள், இப்போது அவனின் எச்சில் படிந்த ஈர இதழ் அவளின் கழுத்தில் ஜீல்லென்று உரசி கொண்டு இருக்கவும் ,
அதுவரை ஏதோ ஒரு மயக்கத்தில் ஆட்கொண்டு இருந்தவள், அந்த ஈரம் பட்டவுடன் கண்களை பட்டென திறந்த மகி அப்போது தான் அவன் மூச்சு காற்றில் இருந்து, மது வாடையும் சேர்ந்தே அவள் நாசியில் ஏறி, அது அவளின் மூளை வரை சென்று குடலைப் பிரட்டியது.

வேகமாக அவளிடமிருந்து அவனை விளக்க முயற்சி செய்ய, அவனோ அசையாது இரும்பு பிடியாக அவள் இடையை பிடித்து இருந்தான். அவள் நினைத்திருந்தால், அர்ஜூன் இப்படி அவளிடம் எல்லை மீறுவதற்கு கத்தி கூச்சலிட்டு, வீட்டில் உள்ளவர்களை கூப்பிட்டு ஒரு பஞ்சாயத்தே நடத்தி இருக்கலாம். ஆனால் ஏதோ ஓன்று அவளை தடுத்து மீண்டும் அவன் அணைப்புகுள்ளேயே இருந்தவளுக்கு, தான் ஏன் இப்படி அவனுக்கு இசைந்து கொடுக்கிறோம் என்று ஒன்றுமே விளங்கவில்லை.

தலை வலியே வந்து விட்டது அவளுக்கு. என்ன நடந்தது என கண் மூடி ஒரு நொடி யோசித்தவளுக்கு ‘அவன் கைய பிடிச்சி இழுத்து கட்டி புடிச்சா, நீயும் வெக்கமே இல்லாம அவனோட கச்சிதமா அடங்கி இருக்கியே டி மகி' தன் மீதும் தவறு உள்ளதை அவள் மனம் எடுத்துச் சொல்ல,

ஏனோ அவன் மேல் அவளுக்கு இம்முறை கோவம் வராமல் ‘அவன் எதற்காக குடித்தான், இத்தனை சிகரெட் பிக்கிற அளவுக்கு இவனுக்கு அப்படி என்ன கஷ்டம். நான் இவன் அறைக்கு வெளிய நிக்கும் போது ஏதோ கெட்ட வாடை வருதேன்னு யோசிச்சிட்டு இருந்தனே, கடைசில சிகரெட் வாடை தான் வந்துச்சா...’ என பலவாறு சிந்தனைகள், அர்ஜூனுக்கு சப்போர்ட் செய்து , அவள் மண்டைக்குள் ஓடி கொண்டு இருக்கும் ஏதோ ஒரு நரம்பு சதி வேலை செய்து கொண்டு இருந்தது.

இதையே யோசித்துக் கொண்டு இருந்தவளுக்கு "யாழு" என்ற குரல் அவள் காதில் ஒலிக்க,
அவள் அதை என்னவென உணரும் முன்னமே மீண்டும் "யாழு என்னை விட்டு எங்கயும் போகாத டி..." என்று அவனின் ஒவ்வொரு பேச்சுக்கும் அவள் கழுத்தில் ஈர உதடு உரசியது.

மகி தான் பேச்சிழந்து போனாள். நிச்சமாக அவன் பேச்சில் தாபம், கோவம், தப்பான எண்ணம் என்று எதுவும் இல்லை. அவன் குரலில் ஏதோ ஒரு பயமும் ஏக்கமும் இருந்ததை உணர்ந்து கண்கள் விரிய அர்ஜூனை பார்த்தவளாக, வேறு ஏதோ தவறு இருக்கிறது என்று அவள் மனம் எடுத்து சொல்ல, வேகமாக அவனை தன் பலம் கொண்டு அவளிடம் இருந்து தள்ளி விட்டு மூச்சு வாங்க நின்றாள்.

அவள் தள்ளியதில், அர்ஜூனும் ஒரு நிமிடம் என்ன நடந்ததென்று விளங்காமல் அவளை பார்த்து கொண்டே நிற்க, அதுவரை அவன் மேல் கோவம் இல்லாமல் இருந்தவள், இப்போது அவள் மனம் மீண்டும் முருங்கை மரம் ஏறிக்கொண்டது.

அவனை கோவமாக பார்த்து “என்ன நினைச்சிட்டு இருக்கீய உங்க மனசுல இப்படித்தே ஒரு பொண்ணோட சம்மதம் இல்லாம அவளை கட்டி பிடிப்பீயலா. என்ன மனுஷன் நீங்களாம்... ச்ச...
நீங்க மதியத்திலிருந்து சாப்பிடாம இருக்கீயன்னு பாவம் பாத்து, சரி பாலையாவது குடிக்கட்டும்னு எடுத்துட்டு வந்தேன் பாரு என்னை சொல்லணும். இங்க வந்து பாத்த பிறகுதே தெரியுது, சாரு நல்லா ஜாலியா தண்ணியும் கூத்துமா இருக்கியன்னு...” அவள் கோவமாக கத்த .

அவள் திட்டியதற்கு எதுவும் பதில் சொல்லாமல், அவளை கூர்ந்து பார்த்து கொண்டே மீண்டும் அவளை நெருங்கி வர ‘அடியாத்தி என்ன இவக திட்டினா ஒதுங்கி போவாகண்ணு பாத்தா, இப்டி என்னைய முழுங்குற மாதிரி பாத்துட்டு மறுபடியும் என்கிட்டக்க வராக...’ வெளியே தைரியமாக காட்டிக் கொண்டாலும், உள்ளுக்குள் மகிக்கு குளிரெடுத்தது.

இருவர் உடலும் உரசி கொள்ளும் அளவு, அவர்கள் நடுவில் அரை இன்ச் இடைவெளி விட்டு அவளை அவன் மிகவும் நெருங்கி நிற்க, மகிக்கு மூச்சே வரவில்லை. எதையோ பேச வந்ததை மறந்து இமை அசையாமல் அவன் முகத்தையே பார்த்து கொண்டு இருக்க,
"ஏஞ்சல், உனக்கு ஒன்னு தெரியுமா..?" என்று அவன் பேசும் போது அவளின் முகத்தில் அவன் சுவாசம் படும்படி, ஏதோ ரகசியம் பேசுவதை போல பேச, அதற்கு பதில் சொல்ல திராணி இல்லாமல் கண்களாலே என்ன என்றாள்.

அதில் சொக்கி போனவன், அவளை பார்த்து ரசித்துக்கொண்டே. "என்ன பாத்து நீ பேசுன பேச்சுக்கு உன் இடத்துல வேற யாராவது பேசி இருந்தாங்கன்னு வையேன், அடுத்த முறை அவங்க யாரு கிட்டயுமே காலத்துக்கும் பேசமுடியாதபடி நாக்கை அறுத்து விட்டிருப்பேன்.
ஆனா பாரு ஏஞ்சல் உன்னை நான் எதுமே செய்யல பாத்தியா. அது ஏன்னு உனக்கு தெரியுமா...” என்றதும், மகி அவனை அதிர்ச்சி கலந்த ஒரு வித பயத்தோடு கண்டு
“ ஏ...ஏன்?” என்று கேட்க, வெறும் காற்று தான் வந்தது.

அவளின் செயலை பார்த்து அழகாக அர்ஜூன் சிரிக்க, ஆடவனின் வசீகர சிரிப்பில் கண்கள் விரிய அவளை அறியாமல் ரசித்து பார்த்தவள், பின் உடனே தன்னை சமாளித்து அவனை கேள்வியாக நோக்கவும் சிரித்துக்கொண்டான்.

"அது ஏன்னா ஏஞ்சல், இந்த அர்ஜூனை கேள்வி கேட்க "அவன் பொண்டாட்டியா வரப்போற உனக்கு மட்டும் தான் உரிமை இருக்குன்னு அர்த்தம்..." என்று அவள் காதருகில் கிசுகிசுப்பாக, நேரடியாக அதே சமயம் உறுதியாகவும் அவன் விருப்பத்தை சொல்லிவிட்டான்.

அவன் சொல்லியது முதலில் அவளுக்கு புரியாமல் விழித்தவள் பிறகு புரிந்ததும், அவனை வேகமாக தள்ளி விட்டு மூச்சு வாங்க வெளியே ஓடி வந்து, ஒரு முறை அவனை பின்னால் திரும்பி பார்த்து முறைத்து கொண்டே “இங்க பாருங்க இதுதே உங்களுக்கு கடைசி, இன்னொரு முறை என்கிட்ட இப்படி கண்டதையும் நினைச்சுக்கிட்டு வராதீய. எனக்கு உங்கள பாத்தாலே ஏன்னு தெரியல சுத்தமா பிடிக்கமாட்டிக்குது. இந்த தடவை சும்மா விட்ட மாதிரி, அடுத்த முறை நான் சும்மா இருக்க மாட்டேன். யோசிக்காம எல்லாரையும் கூப்பிட்டு அசிங்கப்படுத்திப்புடுவேன்" கோவமாக திட்டி விட்டு, திரும்பி பார்க்காமல் அவளது அறைக்கு ஓடி வந்தவள், கதவடைத்து கொண்டு படுக்கையில் போய் குப்பற விழுந்து எதையோ யோசித்து கொண்டே கண்ணீர் கோடுகளுடன் உறங்கியும் போனாள்.

இங்கே அறையில், குட்டி போட்ட பூனை போல குறுக்கும் நெடுக்குமாக ஒரு கையை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டும் மற்றொரு கையால் புகைத்துக் கொண்டே நடந்து “என்ன டி சொன்ன, யோசிக்காம நீ எல்லாரையும் கூப்பிட்டு என்னை அசிங்கப்படுத்திடுவியா. கூப்பிடு டி, எல்லாரையும் கூப்பிடு. அசிங்கப்படுத்து உன் மிரட்டலுக்கெல்லாம் பயபடுறவன் இந்த அர்ஜூன் இல்ல டி. மத்தவங்களை பயப்பட வைக்கறவன் தான் இந்த அர்ஜூன்.
இந்த அர்ஜூனையே பிடிக்கலன்னு சொல்லிட்டல்ல ஏஞ்சல், நீ என்ன பிடிக்கலன்னு சொன்ன அதே வாயாலே, என்னை மட்டும் தான் பிடிக்கும்னு சொல்ல வைக்கிறேன் டி. ஏஞ்சல்.. இத்தனை நாள் நான் தப்புனு தெரிஞ்சும் தரிகெட்டு அலஞ்சேன் டி, கண்டவகிட்டயும் போய் ச்ச...” தலையை உதறி காலால் சுவரை உதைத்து

“உன்னை பாத்ததும் எனக்கே தெரியாம நீ எனக்குள்ள வந்துட்ட ஏஞ்சல். இனிமே நீ இல்லாம என்னால இருக்க முடியுமான்னு தெரியல டி. உன்னை எப்படியாவது நான் என் மனைவியா ஆக்கிக்குவேன் ஏஞ்சல். உனக்கு புடிக்குதோ புடிக்கலையோ, நீ ஏன்கூட தான் இருக்கனும் ஏஞ்சல். உன்னோட அந்த பார்வை இருக்கு பாரு, ப்ப்பா! முழுசா ஆளையே முழுங்குற பார்வை டி.

நீ எனக்கு கிடைக்க, எந்த எல்லைக்கும் போவான் டி இந்த அர்ஜூன். நான் இங்க இருந்து போகும் போது நீயும் என்கூட என் மனைவியா என்னோட வரணும்...” தீர்மானமாக அவனுக்குள் ஒரு திட்டம் வகுத்து கொண்டு ஒரு வெற்றி புன்னகை சிந்தினான்.

அந்நேரம் சரியாக அவன் கைபேசி அலற, அவன் இருந்த டென்ஷனில் யார் என்றெல்லாம் பாராமல் காலை அன்டன் செய்து காதில் வைத்தான். அந்த பக்கம் என்ன சொல்ல பட்டதோ அருகில் இருந்த பூந்தொட்டியை உடைத்து “ஹொவ் பிளடி! யாரு இந்த வேலைய பாத்தது...?" என்று கோவத்தில் கர்ஜனையாக மொழிய, அந்த பக்கம் பேசி கொண்டு இருந்தவருக்கே கால்கள் ஆட்டம் பிடித்தது.


“சார், இது எல்லாம் பண்ணது ‘ப்ளசென்ட் ஆப் ஹோட்டல் எம்.டி மிஸ்டர். ரகுவேந்தன் தான் சார்...” திக்கித் திணறி அர்ஜூன் ஹோட்டலில் பணி புரியும் ஒரு ஊழியன் சொல்ல, அதை கேட்டவன் நெற்றி சுருக்கி எதையோ நினைத்து, தன் தலையை கோதி சற்று நிதானம் அடைந்தவன்,
“ஓகே. ரைட். நீங்க உங்க வேலைய பாருங்க. இதை எப்படி டீல் பண்ணனும்னு எனக்குத் தெரியும்...” என்று போனை வைத்தான்.

அடுத்து வேறு ஒருவருக்கு அழைத்து, எதையோ சொல்லி ஒரு அரைமணி நேரமாக போனில் பேசி கட்டளை பிறப்பித்தவன், ஆழ மூச்செடுத்து விட்டு, மீண்டும் அவன் ஏஞ்சலை பற்றிய நினைவில், எப்படியாவது அவளுக்கு தன்னை பிடிக்க வைத்து திருமணம் செய்து, தன் மனைவியாக அழைத்து சென்றே ஆகவேண்டும் என்ற நினைவோடே கட்டிலில் உக்கார்ந்த படியே சாய்ந்து தன்னை மறந்து உறங்கி போனான்.

அர்ஜூன் எடுத்து வைத்துள்ள முடிவு, மகிக்கு தித்திக்கச் செய்யுமா? இல்லை கசக்கக் செய்யுமா என்று போக போக தான் தெரியும்.

தொடரும்.
 
Top