- Messages
- 270
- Reaction score
- 234
- Points
- 43
இதழ் -15
“சரிலே அவைய குளிக்கட்டும். நாம எல்லாம் போயி வயக்காட்ட சுத்தி பாத்துட்டு, சரியா வேல நடக்குதான்னு பாத்துட்டு வருவோம்” குரு சொல்ல,
“மாமா, என்னன்னு தெரியல காலையில இருந்து வயிறு சரியில்ல எனக்கு வயத்த கலக்குற மாதிரி இருக்கு. நான் அப்படியே ஓரமா ஒதுங்கிட்டு வரேன்” என்ற கார்த்தி நாசுக்காக கழண்டு கொண்டான்.
“டேய், மச்சி எனக்கு வெயில்ல நடந்து வந்தது தல வலிக்கிர மாதிரி இருக்கு நான் அப்படி ஓரமா உக்காந்து இருக்கேன். நீங்க போய்ட்டு வாங்க” அர்ஜூன் ரிஷியிடம் சொல்லி சென்றுவிட்டான்.
“அண்ணே, அவனுக்கு இது மாதிரி இடத்துக்கெல்லாம் வந்து பழக்கமில்ல. அதனால நானும் போய் அவனுக்கு துணையா இருக்கேன்” என்ற ரிஷியும் அர்ஜூனிடம் சென்று விட்டான்.
“என்னலே, இவனுங்க ஆளுக்கு ஒரு காரணத்தை சொல்லிபுட்டு எஸ்கேப் ஆயிட்டானுவ. பய புள்ளைங்க நம்மளவிட கேடியா இக்காணுவலே" கதிர் அவன் தாடியை தேய்த்து கொண்டே சொல்ல,
“அமாடே எனக்கு ஒரு சந்தேகம், கார்த்தி பய போனா சரி. ஆனா இந்த அர்ஜூன் ரிஷி ரெண்டு பயலுவலும் போயி இருக்குறத பாத்தா, ஏதோ சரி இல்லையே" குரு சரியாக பாயிண் பிடித்தான்.
“அடேய், நீ இந்த அர்ஜூன் பயல கவனிக்கிறியா அவன் சரி இல்லடே" என்றான்.
“ஏன் அவனுக்கு என்னடா. நல்லாத்தானே இருக்கான். அவன் இப்பதே நம்மளோட இங்கன இருக்க தொடங்கிருக்கான். அதே உனக்கு அப்படி தோணுது"
“அடேய், மாங்க. அதில்லடே. அவன் நம்ம மகிய பாக்குறத கவனிச்சியா?” என்றான் கதிர்.
“இல்லையே மச்சா...”
“அவன் இங்க வந்ததுலருந்து நானும் பாக்குற. மகிய பாக்குறதுக்கு முன்னாடி வரைக்கும் அவன் மூஞ்சில கடுகு போட்டா வெடிக்கிற அளவுக்கு அப்படி சூடா இருந்தவன். மகிய பாத்ததுல இருந்து, தம்பி மூஞ்சி மரத்துலருந்து ப்ரெஷா பரிச்ச ஊட்டி ஆப்பிள் மாறி மின்றான் டே”கதிர் சொன்னதை கேட்டு கண்கள் இடுங்கினான் குரு.
“என்னடே சொல்ற எனக்கு புரியலையே. பேச்சு கொடுத்தா ஒன்னு ரெண்டு வார்த்தையோட முடிச்சிக்கிறான். சரி அவனே பேசுவான்னு அவன் மூஞ்சியே பாத்தா, அப்படி யாருமே அவன் முன்னாடி இருக்க மாதிரி காட்டிக்காம சுத்திமுத்தி பாப்பானே ஒழிய, தப்பி தவறி கூட எதிர்ல இருக்கவன் மூஞ்சிய பாக்க மாட்டான்டா. அவனா இப்டி" நொந்து சொல்லியவன் “இதான்டே எனக்கு தெரியும். ஆனா நீ சொல்றது புதுசா இருக்கே மச்சா” என்றான் குரு.
“என் யூகம் சரியா இருந்தா இப்ப மகிய பாக்கதே அவன் தல வலின்னு பொய் சொல்லிபுட்டு போயிருப்பான்லே. ஆனா இந்த ரிஷி பய எதுக்கு போனான்?”
“டேய் கதிரு, நம்ம கூட வர சங்கடப்பட்டு ஒருவேள அவன் தனியா கூட இந்த இடத்த சுத்தி பாக்க போயி இருக்கலாம்ல”
“ம்ம் இருக்கும்...” கதிர் தலையாட்ட,
“ஆமா நீ, எப்படிடே சரியா அர்ஜூன் மகிய பாக்கதே போயி இருப்பான்னு சொல்ற" யோசனையாக கேட்டான் குரு.
“ஆமா மச்சா, நானும் ஆரம்பத்துல சரியா கவனிக்கலத்தே. ஆனா இப்பலாம் அவன் மகி இருக்க இடத்துலதே அதிகமா இருக்கான். அவ இருக்கும் போது அவளையே பாத்துட்டு இருக்கவன், மகி போயிட்டா அவனும் அவன் அறைக்கு போயிருவான். அப்புறம், மகி வர நேரத்துக்கு சரியா அவனும் வந்துருவான். இதெல்லாம் நான் கூட எதேர்ச்சயா நடக்குதுன்னுதே கண்டுக்காம விட்டேன்.
ஆனா நேத்து நான் மகியோட ஆடினேன்ல, அப்பதே மச்சா நான் அவன பாத்தேன். நான் மகி கூட ஆடினப்ப அவன் மூஞ்சி போன போக்க பாக்கலயே நீயி. தக்காளிக்கே டப் குடுக்குற மாதிரி, அப்படி செவ செவன்னு செவந்து இருந்துச்சுலே அவன் மூஞ்சி. அவன உட்டுருந்தா என்னைய கண்ணாலே எரிச்சி சாம்பலாக்கி இருப்பான்லே. நான் மகி கூட ஆடுனதுக்கு.
அதுலதே நான் அவன கண்டு புடிச்சேன். அப்பதே எனக்கு ஒரு விசயம் புரிஞ்சிது, ரெண்டு நாளா என்னை யாரோ குறுகுறுன்னு பாக்குற மாதிரியே தோணிட்டு இருந்துச்சி. கடைசில இந்த அர்ஜூன் பயதே என்னைய அவளோ பாசமா சைட் அடிச்சிருக்கன்னு" கை தட்டி சிரித்து கொண்டே கதிர் சொல்ல,
“என்னவோ டே, அர்ஜூனுக்கு மகிதான்னு சின்ன வயசுலே அவய ரெண்டு பேரு விருப்பம் இல்லாமலே பெரியவயலா சேந்து ஒரு முடிவெடுத்துடாக. அவ மனசுல கண்ட என்னைத்தையும் போட்டு விதைக்காம, ஏன் இதுவரைக்கும் அர்ஜூன் பத்தி கூட அவக்கிட்ட நாம சொல்லாம,
நாம நம்மளால முடிஞ்ச அளவுக்கு மகிக்கிட்ட வேற எவனையும், காதல் அது இதுன்னு நெருங்க உடாம பாத்துக்கிட்டோம். எதுக்குன்னு உனக்கு சொல்லி தெரிய வேண்டியதில்ல மச்சா. அப்படி நாம சொல்லி அவள வளத்து இருந்தா அவ மனசுல அப்போதிலிருந்தே, அர்ஜூன்தே புருசனா நினைச்சி வளந்து இருப்பா.
அதுல எந்த மாத்தமு இல்லதே .ஆனா இந்த அர்ஜூன் பயலோட அப்பாவை பத்தி நமக்கெல்லாம் முழுசா தெரியலன்னாலும், ஓரளவுக்கு தெரியும். அப்படி இருக்கும் போது அர்ஜூனும் நம்ம பாப்பாவதே நினைச்சி வளந்துருப்பான்னு எப்படிடே நம்புறது.
இப்ப அவன் நம்மக்கிட்டருந்து யாரோ மாதிரி ஒதுங்கி நடந்துக்கிறதுலேயே தெரியுது. இது வரைக்கும் அவன்கிட்ட நம்பள பத்தி யாரும் பேசினது கூட கிடையாதுன்னு. அவ்வளோ ஏன் நாம எல்லாம் யாருன்னு கூட அவனுக்கு தெரியல.
அப்படி இருக்கும் போது மகி மனசுலயும் தப்பான நினைப்பை வெதச்சிட்டு, மரமா வளந்து நிக்கும் போது, திடீர்னு வந்து இவதே உன் பொண்டாட்டின்னு அவன் கிட்ட சொன்னா அவன் ஏத்துக்குவானாடே...”
"ஒரு வேல, அவன் படிச்ச இல்ல வேளைக்கு போர இடத்துல, வேற பொண்ண யாரையாச்சம் விருப்பிருந்தா இல்ல வீட்டுக்கு தெரியாம கல்யாணம், அப்புறம் இப்பலாம் கல்யாணம் பண்ணாமலே ஆணும் பொண்ணு, லிவ்இன் போல இருந்தா? இன்னும் நிறைய இத மாதிரி எல்லா ஊர்ளையும் நடத்துட்டு இருக்கப்போ, இது எதுலயாவது அவன் சிக்கி அதனால மகிய அவன் வேணாண்டானா.
அப்ப அவன் மகிய வேண்ணான்னு சொன்னா கூட நம்ம மகிக்கு எந்த ஒரு மன வேதனையும் ஏமாத்தமும் வர போறது கெடயாது. நாம ஈஸியா அவளுக்கு வேற ஒரு வாழ்க்கைய ஏற்படுத்தி குடுத்திடலாம்.
அவன் நம்ம சொந்தமாவே இருந்தாலும், வெளி ஊர்ல வழந்தவனை நம்பி, நம்ம பாப்பா மனசுல அர்ஜூன்தே உன் புருசன்னு தூபம் போடறது தப்பில்லையா. இதனால பாதிக்கப்பட போறதும் நம்ம மகிதே. அதே இது எதுவுமே அவளுக்கு சொல்லாம இருந்துட்டோம்.
ஆனா, இப்ப நீ சொன்னத வச்சி பாத்தா. அர்ஜூன் மனசுல வேற எந்த பொண்ணு இல்ல போலயே? எப்படியோ, பெரியவங்க ஆசைபடி நம்ம பாப்பாவ அர்ஜூன் கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணா சரிதே...” துண்டை கழுத்தில் போட்ட படி பெருமையாக சொன்னான் குரு.
“எனக்கு ஒரு சந்தேகம் மச்சா...” என்றான் கதிர்.
“என்ன...?”
“இல்ல நீ உண்மையாவே மகி புள்ளைக்கு அண்ணன் தானா மச்சா..?”பட்டென கேட்டுவிட்டு நிக்காமல் கதிர் ஓட்டம் எடுக்க,
“அடிங்க, மவனே உன்ன மிதிக்காம விடமாட்டேன்டா. சிக்குன செத்தடி.” பற்களை கடித்த குரு, கத்திக்கொண்டே கதிரை துரத்தி ஓடினான்.
இவர்கள் பேசியது நூத்தில் என்பது சதவீதம் சிலர் வாழ்வில் சரியாக நடந்து இருக்கும். இன்னுமும் சிட்டி கிராம் என எந்த பாகுபாடும் இல்லாமல், சொந்தம் விட்டு போக கூடாது என்று, படிக்க வேண்டிய சிறு வயதிலேயே, புத்தகத்துடன் சேர்த்தே முறை மாமன்களை கணவனாக, முறை பெண்களை மனைவியாக எண்ணி, மனதில் சுமந்து கொண்டு தான் இருகின்றனர்.
அதில் இருவருமே ஒருவருக்கொருவர், மாமன்/அத்தை, மகளையோ/மகனையோ, கணவனாக/மனைவியாக மனம் ஒத்து நினைத்து வாழ்ந்தால், ஒரு பிரச்சனையும் இல்லை.
ஆனால், ஒவ்வொருவரும் வளரும் சூழலுக்கு ஏற்றார் போல், வளர்ந்ததும் வெவ்வேறு மனநிலையில் மாறி வேறு துணைகளை விரும்பிவிட்டால், சிறு வயதில் இருந்தே, கணவனாக/மனைவியாக எண்ணி வளரும், யாராவது ஒருத்தருக்காவது மனதில் எத்தனை காயங்கள் ஏற்படும்.
சிறு வயதில் இருந்தே ஒருவனை/ஒருவளை மனதார விரும்பி விட்டு, எப்படியும் கை பிடித்து விடலாம் எண்ணி கொண்டு இருக்கும் போது. பின், அவன்/அவள் உனக்கு இல்லை என்று தெரிந்தால், அந்த ஏமாற்றத்தில் வேறு துணையை ஏற்றுக்கொள்ள முடியாமல் எத்தனை தற்கொலைகள் நடந்துள்ளது.
சும்மா ஒரு ஆறு மாத காலங்களில் உண்மையாக காதலித்து பிரிந்து விட்டால் கூட, அவர்களை மறக்க முடியாமல், நம் மனது என்ன பாடு படும். அப்போது சிறு வயதில் இருந்து, கணவன் மனைவியாக நினைத்து வாழ்பவர்களின் நிலை?
அதில் அவர்களை சொல்லியும் குத்தம் இல்லையே. அது அவர்களின் மலராத பிஞ்சு மொட்டுகள் மனதில் உனக்கு இவன்/இவள் தான் என்று விதைத்தவர்களின் மேல் தான் முழு தவறுகளும் உள்ளது.
ஐந்து தேவதை பெண்களும் தொட்டியில் இறங்கி, வேகமாக இறைச்சும் மோட்டார் தண்ணீரில் சலங்கை ஒளியை போல சிரித்து பேசி, கும்மாளம் அடித்துக் கொண்டு குளிக்க,
பிரம்மன் செதுக்கி வரைந்த அழகிய ஓவியங்களை ஒளிந்து இருந்து பார்க்க இல்லை தரிசிக்க, ஒரு படையே தவம் இருந்தது.
“ஏன் மகிக்கா இதுமாதிரி நாம எல்லாம் இங்க சேந்து குளிச்சி ரொம்ப நாளாச்சில்ல” என்றாள் ராதா.
“ம்ம்! ஆமா ராதா. எப்படியும் ஏழு எட்டு மாசமாது இருக்கும்”
“ஏ! புள்ள மகி, நாங்க மூணு பேரும்தே ஊருலயே இல்லையே. நீயு பூஜாவும் வந்து போறது தானடி” என்று காயு கேட்க,
“ஏன் அண்ணி நீயி வேற, பூஜாக்காவ கொஞ்ச நேரம் காணான்னாலும், என்னமோ நடக்க தெரியாத குழந்தைய யாரோ தூக்கிட்டு போயிட்டா போல, வீட்டயே பொறட்டி போட்டு மாமா தேடும் பாரு. ஐயோ ஐயோ, என்ன சொக்கு பொடி போட்டு என் மாமன மயக்கினியோ? சுத்தமா மாமா என்னையே கண்டுக்கவே மாட்டுது" ஏக்கமாக சொல்லி. "இதுல வேற மகி அண்ணியோட எங்க நேரம் ஒதுக்கி வந்து குளிக்க முடியும்” ரதி கிண்டலாக சொல்ல,
“ஏய்! என்னடி ரதி ரொம்ப வாயி நீளுது. அவரு ஏன் டி நான் இருக்கும் போது உன்னைய கண்டுக்க போறாவ. என் புருசனுக்கு நான் சொக்கு பொடி போடனும்னுலாம் அவசியமே இல்லடி. என்னை பார்த்தாலே மயங்கிருவாரு" பூஜா சண்டை இட்டப்படியே வெட்கம் கொள்ள,
“ஆமா ஆமா, மயங்கிருவாரு. போவியா...” என்றாள் ரதி.
“உங்க கொழா அடி சண்டைய மொத நிருந்துங்க டி. எங்க அண்ணனோட தலையெழுத்த உங்க ரெண்டு பேத்து கைலயும் கோத்து விட்டுட்டு அந்த கடவுள் மேல சொகுசா உங்காந்து சுண்டல் திங்கிறாரு போல. அதுகூடவே நாங்களும் சிக்கிட்டு இல்ல அவதி படறோம்" மகி சலித்துக் கொண்டாள்.
“படுவீய டி படுவீய உங்கள...” என்று தண்ணீரை மகி முகத்தில் பூஜா அள்ளி தெளிக்க,
“என் மேலயே தெளிக்கிறியா டி?” என்று மகியும் பூஜா மேல் தெளிக்க, அது ராதா மேல் பட்டு “அக்கா, அண்ணி மேல தெளிக்கிறன்ற சாக்குல என் மேலயா தெளிக்கிற...” என்று திரும்ப மகி மேல் தெளிக்க, அது காயு மேல் பட்டது.
“நான் என்ன புள்ள பண்ணேன். என்மேல் தெளிக்கிரவ...” என்று திரும்ப ராதா மேல் தெளிக்க, இப்படியே மாறி மாறி தண்ணீர் தெளித்து விளையாடிக் கொண்டே குளித்தனர்.
கார்த்தி தொட்டியின் அருகே இருந்த பெரிய ஆலமரத்தின் அருகே நின்று, அவன் தேவதையை ரசித்துக் கொண்டு இருக்க,
ரிஷி, மோட்டார் அறையின் இடது பக்கத்தில் வரப்பு போன்ற அமைப்பில் உள்ள மறைவிடத்தில் நின்று, அவனின் மார்டன் ரதியை கண்கள் மின்ன பார்த்துக்கொண்டு இருந்தான்.
அர்ஜூன், மோட்டார் அறையின் வலது பக்கத்தில் சுவற்றில் சாய்ந்து நின்று கைகளை கட்டிக் கொண்டு நிதானமாக அவன் ஏஞ்சலை பார்த்தவன் கண்கள் ஆச்சிரியத்தில் அகல விரிந்தது.
மகி அவள் முதுகுவரை அளவான இருந்த முடியை விரித்து விட்டிருக்க, முழுதாக நீரில் நனைந்து, அவள் பளபளக்கும் முகத்தில் ஒட்டி, தலையில் இருந்து நீர் சொட்ட அவளின் வென்மேனி முழுவதும் நீர்கள் முத்துகளாக திரண்டு ஓடி பிடித்து விளையாடி கொள்ள. அவளின் வெள்ளை தாவணி நீரில் நனைந்ததில், அவளின் புடைத்து நிற்கும் அங்கங்கள் கேமரா இல்லாமலே ஆடவன் கண்னுக்கு படம் போட்டு காட்டியது.
இதற்கெல்லாம் மேலே சென்று, நெஞ்சை நிமிர்த்தி மேலே போட்டிருந்த தாவணியை கழட்டி இரு சுத்து சுத்தி காற்றில் பறக்க விட, தவணியோடு சேர்ந்து ஆடவனின் எண்ணங்களும் தாவணி இல்லா அவள் மேனியை பார்த்து எக்கு தப்பாக சிதறி பறந்தது.
இதுவரை அவளின் பளிங்கு முகத்தில் உள்ள ஸ்ட்ராபெர்ரி இதழ்களை கடந்து, அவள் மேனியில் அவன் கண்கள் அவளின் இடை சங்கிலி தழுவிய பொன்னிடையை தாண்டி பார்த்ததில்லை. ஆனால் இன்று ஆடவனின் ஹார்ட் பீட் வழக்கத்திற்கு மாறாக எகிறி குதித்து வெளியே வந்து விடும் போல இருந்தது. இப்போது அவன் கண்டு கொண்டு இருக்கும் காட்சி. ஆணவனின் மூளையை செயலிழந்து விடுமோ என்னவோ!
மேலும் அவனை சோதிக்கவே அந்த சம்பவம் நடந்தேற, கண்கள் சொக்கியவன் எங்கே இதயம் வெடித்து சிதறிவிட கூடுமோ என்ற பயத்தில், இருக் கைகளாலும் அவன் இதயத்தை பிடித்து அவன் உடலில் சிறு நடுக்கம் எடுக்க, நிலை குலைந்து போனான் ஆடவன்.
"எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்..
இப்படி என் மனம் துடித்ததில்லை.. இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு..
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை..
நீ வருவாயோ.. இல்லை மறைவாயோ.. தன்னைத் தருவாயோ.. இல்லை கரைவாயோ..
உன்னைப் பார்த்த பின்பு நான்.. நானாக இல்லையே..
என் நினைவு தெரிந்து நான்.. இதுபோல இல்லையே..
எவளோ எவளோ.. என்று நெடுநாள் இருந்தேன்..
இரவும் பகலும் சிந்தித்தேன்..
இவளே இவளே.. என்று இதயம் தெளிந்தேன்..
இளமை இளமை பாதித்தேன்..
கொள்ளை கொண்ட அந்த நிலா.. என்னைக் கொன்று கொன்று தின்றதே..
இன்பமான அந்த வலி..
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே.."
தொடரும்.