- Messages
- 349
- Reaction score
- 250
- Points
- 63
அத்தியாயம் - 15
மாய உலகத்தில் இருந்து விடுபட்ட நேத்ரா, வேக மூச்சிகள் விட்டபடி உடல் முழுக்க வியர்வையில் குளித்த நிலையில் ராமை கண்டது தான் தாமதம், ஓடி சென்று பாய்ந்து அவனை இருக்கமாக அணைத்துக் கொண்டவளின் உடலோ அப்பட்டமாக நடுங்கிக் கொண்டிருந்தது.
வேலை முடித்து வீடு திரும்பியதும் நேத்ரா வீட்டில் இருந்தாள், முதல் வேலையாக எப்படியாவது அவளை கழுத்தை பிடித்தாவது வெளியே தள்ளி விட வேண்டும் என்ற முடிவான உறுதியில் வந்தவனுக்கு, அவன் அறையில் திரும்பி நின்று பலமாக மூச்சி விட்டபடி இருந்தவள் திடீரென ஓடி வந்து தன்னை இவள் அணைப்பாள் என்று எதிர்ப்பார்த்திடாதவன், அவளின் அணைப்பு அத்தனை கோவத்தை உண்டு செய்தது.
“ஏய்.. ச்சீ.. தள்ளி போ..” ஏதோ அசிங்கம் பட்டதை போல் அவளை உதறித் தள்ளியவனுக்கு, அவள் தேகம் பட்ட அவன் தேகம் அருவருப்பில் கொலுந்து விட்டு எறிந்தது. அவன் தள்ளிய வேகத்தில் ஆஆ.. என பொத்தென ரெண்டடி தள்ளி போய் தள்ளாடி கீழே விழுந்தவளின் முகம் பயத்தில் துடித்து, சுற்றி முற்றி பார்வையை சுழல விட்டவளின் பார்வை சுவற்றில் மாட்டி இருந்த தீஷாவின் புகைப்படத்தில் நிலைக்க. ‘என் தாலிய குடு டிஇஇ..’ ஆக்ரோஷமாக அந்த புகைப்படத்தில் இருந்து வெளிவந்த உருவத்தைக் கண்டு, ஆஆஆ... என அலறி காதுகளை மூடியவள், கண்களையும் இருக்கமாக மூடிக் கொண்டு முடியாது உஉ.. என அவள் தனியாக அனாத்திக் கொண்டு இருக்கவும், அவளின் பயந்த முகம் அவள் செய்கை எல்லாம் துளியும் அவன் மனதை கரைக்காமல், அவள் தன்னை மயக்க திட்டமிடுவதாக எண்ணி அவள் மேல் மேலும் வெறுப்பு கூடிப் போனது.
“ஏய்.. இங்க என்ன நாடக ஷூட்டிங்கா நடக்குது, அநியாயத்துக்கும் நடிச்சி காட்டிட்டு இருக்க. உன் நடிப்ப பாக்க சகிக்கல, மரியாதையா சொல்ற உன் மூட்டை முடிச்ச எல்லாம் தூக்கிட்டு இப்பவே நீ இந்த வீட்ட விட்டு வெளிய போகணும். இல்ல நான் மனுஷனாவே இருக்க மாட்டே சொல்லிட்டே, எழுந்து வெளிய போடிஇஇ..” அறை அதிர அவன் கத்திய கத்தில், அதுவரை தெளிவில்லாமல் இருந்த அவள் முகம் இப்போது தெளிவாகி நிதானமாக எழுந்து நின்ற நேத்ரா.
ஒரு முறை அந்த அறையை சுற்றி பார்த்து விட்டு, “நீங்க என்னை கொன்னே போட்டாலும் சரி ராம். நான் உங்கள விட்டு போக மாட்டேன். அப்டி நான் போய் தான் ஆகணும்னு நீங்க உறுதியா இருந்தீங்கனா நான் சொல்றத நீங்க செய்யணும்” கை கட்டி நேர் பார்வை வீசி டீல் பேசுபவளை வெறியாக முறைத்தவன், “என் காலை சுத்தின பாம்பு என்ன விட்டு மொத்தமா ஒழிஞ்சா சரி, சொல்லு நீ இந்த வீட்ட விட்டும் என்ன விட்டும் ஒரேடியா போக நான் என்ன பண்ணனும்” தீர்க்கமாக கேட்டவனை வெறித்து பார்த்த நேத்ரா.
“நீங்க என்கூட ஒரு நாள், ஒரு இரவு மட்டும் என்னோட புருஷனா வாழணும் ராம்” என்றது தான் தாமதம் அவள் கன்னம் தீ பொறியாக அனல் பறந்தது. “ஏய்.. என்ன டி.. பேசிட்டு இருக்க என்றவன் கண்கள் சிவக்க அவள் முகத்துக்கு நேராக விரல் நீட்டி கர்ஜிக்க” கலங்கிய கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு ஐவிரல் பதிந்த கன்னத்தை பிடித்தபடி மீண்டும் அவனை நேர் கொண்டு பார்த்தவள் “என் முடிவு இதுதான், நீங்க என்னோட ஒரு நாள் வாழ்ந்தா, அதுவும் என்மேல காதலோட ஒன்னு சேரணும். அதன் பிறகு நான் நிரந்தரமா உங்கள விட்டு போய்டுவேன், நீங்களே என்ன பாக்கணும்னு நினைச்சாலும் பாக்க முடியாது” திரும்பவும் அதையே அவள் உறுதியாக சொன்னாள். ஆனால் அவள் வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் உள்ளர்த்தங்களை அவன் கண்டு கொள்ளாது விட்டது தான் பின்னாளில் அவன் செய்யவிருக்கும் செயல்களுக்கு பிள்ளையார் சுழியை வலுவாக போட்டது.
அவளை அர்ப்ப பார்வை பார்த்தவன், “நீயெல்லாம் உண்மையாவே பெண் இனத்தை சேர்ந்தவ தானா டி.. கேவலமா இல்ல உனக்கு. ஒரு ஆம்பள கிட்ட வந்து ஒரு நாள் மட்டும் ஒன்னா வாழணும்னு சொல்ற, அப்டி ஆம்பள மோகம் கொண்டு திரியரவளுக்கு நிறைய இடம் இருக்கே அங்கெல்லாம் போகாம குடும்பம் பண்ற வீட்ல வந்து இவ்ளோ சீப்பா பிஹேவ் பண்ற” அவளை கேவலமாக பார்த்து முகத்தை சுழித்து அவன் சொன்ன விதத்தில் நேத்ராக்கு அவமானம் பிடிங்கி தின்ன, கோவம் ஒரு புறம் சுல்லென எகிறியது.
“ராம்.. பொறுமையா போறேன்னு என்ன நீங்க ரொம்ப அசிங்கமா பேசி இன்சல்ட் பண்றீங்க. நான் அப்டி பட்ட பொண்ணு இல்ல, நீங்க என் புருஷன் அந்த ஒரு எண்ணத்துல மட்டும் தான் உங்களோட ஒரு நாளானாலும் ஒன்னா வாழ நினைக்கிறேன். அதுக்காக இவ்ளோ சீப்பா பேசி என் கேரக்டர கேவலப் படுத்தாதீங்க. அப்பறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்” அவனை போலவே விரல் நீட்டி கோவத்தில் முகம் செந்தனலாக மாறி கர்ஜனை செய்தவள்.
“ஏன் ஆம்பளைங்க மட்டும் தான் எப்பவும் பொண்ணுங்க கிட்ட செக்ஸ்வல் லைஃப பத்தி வெளிப்படையா பேசணும்னு சட்டம் இருக்கா. அதுவே ஒரு பொண்ணு பேசினா அவ கேடு கெட்டவன்னு, நீங்களே அவ கேரக்டர டிசைட் பண்ணிடுவீங்களா, உங்களுக்கு உள்ள அதே உணர்ச்சிகள் ஆசை மோகம் தாபம் எல்லாம் பொண்ணுங்களுக்கும் தனக்கு உரிமை உள்ளவங்க மேல இருக்கும். ஆனா நாங்களா உங்கள நாடினா ஆம்பள சுகம் தேடி அலையிறேன்னு ஆபாண்டமா பேசி அவ மனச நோகடிக்க வேண்டியது. அதுவே நீங்களா எங்கள தேடி வந்தா என் பொண்டாட்டி எனக்கில்லாத உரிமையான்னு நியாயம் புகட்ட வேண்டியது. எப்பவும் ஆண்களுக்கு ஒரு நியாயம் பெண்களுக்கு ஒரு நியாயம், எப்ப தான் உங்கள மாதிரி ஆளுங்களோட சீப்பான மென்டாலிட்டி மாறும் ராம்” என்றாள் ஆவேசமாக.
அவள் பேசுவதை கேட்டு சுட்டு விரல் கொண்டு காதை குடைந்தவன். “நல்ல வசனம், ஆனா இந்த வசனத்தை பேசி கேட்க வேண்டிய ஆள் நான் இல்லமா. ஏன்னா என் பொண்டாட்டிய நான் எப்டி ட்ரீட் பண்ணேன்னு உனக்கு தெரியாதே. என் தீஷா கண்ணசைவ வச்சே அவளுக்கு என்ன தேவைனு அவளுக்கு முன்னாடி செஞ்சி முடிப்பேன். அவ நில்லுனா நிப்பேன் உட்காருனா உட்காருவேன், அவளுக்கு என்மேல ஆசைனா ஒரு வெட்க சிரிப்பு சிரிச்சி என்கிட்ட நெருங்குவா பாரு, அந்த சமையம் அவளோட நான் இருந்த ஒவ்வொரு நொடியும் பொக்கிஷமான நினைவுகளா இன்னுமும் எனக்குள்ள அவ மூச்சிக்காத்தோட கலந்து இருக்கு” என்று கண்மூடி ஆழ ஸ்வாசித்தவன் நாசியில் பாவையின் நறுமணம் உள் புகுந்து அவன் இதயத்தை வேகமாக துடிக்க செய்தது.
அந்நினைவில் இருந்து மீள முடியாதவன் காதில், ராம்.. என்ற மெல்லிய அலைப்பொலி கேட்பது போல் இருக்க, சட்டென கண்களை திறந்து, தீஷு... என மனதில் சத்தமாக அழைத்துக் கொண்டு சுற்றிலும் தன்னவளை தேட, எங்கும் அவளை காணாமல், எங்கே டி.. போன அதுக்குள்ள தலையை பிடித்துக் கொண்டு தரையில் முட்டிக்காலிட்டு அமர்ந்துக் கொண்டவனை, கல் போன்று சாய்ந்து நின்று தன் உணர்வுகளை பிரதிபலிக்காமல் வெறித்துப் பார்த்தாள் நேத்ரா.
ராம் பேசியது அனைத்து வார்த்தைகளும் ஒன்று விடாமல் அவள் மூளையில் மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டு கத்திக் கொண்டு இருக்க, அவள் மனதில் அடித்துக் கொண்டிருக்கும் சூறாவளியை எதைக் கொண்டு தடுப்பது என்று ஒன்றும் புரியாமல், ‘எது நடந்தாலும் சரி, ராமுடன் ஆன இல்லற வாழ்க்கையை தான் நினைத்த நேரத்தில் எப்படியாவது நடத்தி விட வேண்டும்’ என்றதில் மட்டும் உறுதியாக இருந்தவள், அதுவரை ராம் கக்கும் கோபங்களை எல்லாம் பற்களை கடித்து பொறுத்து கொள்ள தான் வேண்டும் என நினைத்துக் கொண்டு இருக்கும் போதே, ராம் திரும்ப உணர்வு பெற்று எழுந்து, வெளியே போ என தாம் தூம் என குதிக்க தொடங்கவும், கண்ணிமைக்காமல் அவனை பார்த்துக் கொண்டே மெல்ல அடி எடுத்து வைத்து அவனை நெருங்கியவளை கண்டு எரிச்சலாகி, “ஏய்.. இப்ப ஏன் கிட்ட வர தள்ளி போ” என கத்திக் கொண்டே அவன் பின்னால் செல்ல.
எதற்கும் அசராதவளோ, “நீங்க உங்க மனசுல என்னை என்ன நினைச்சாலும் பரவாயில்ல ராம். ஆனா என் மனசுல நான் உங்கள பத்தி மட்டும் தான் நினைச்சிட்டு இருக்கேன். அதனாலஆ..” என்று ஒரு மார்க்கமாக அவனை பார்த்து இழுத்துக் கொண்டே அவனை நெருங்க “ச்சீ.. வெக்கமே இல்லையா டி.. உனக்கு” அவன் வெறுப்பை உமிழ.
“தெரியலயே ராம், என் வெக்கமெல்லாம் இருக்கா இல்லயான்னு நீங்க தொட்டா தானே தெரியும். வேணும்னா ஒரு டெஸ்டு பண்ணி பாருங்களேன், உடலை முறுக்கிக் கொண்டு நெளிந்து நெருங்கியவளை, வெறியாக முறைத்தவன். “நீ பொண்ணே இல்ல டி..” என்றவனை சட்டென இடைமறித்து 'தேவதைனு சொல்ல வரீங்களா' என்றாள் குழைந்த குரலில் அவன் சட்டை பொத்தானை திருகிக் கொண்டு.
“ஐயோ.. இம்ச டா..” என தலையில் அடித்துக் கொண்டவன், “ச்சீ.. இந்த தொட்டு பேசுற வேலை எல்லாம் வேணாம் தள்ளு டிஇஇ..” அவன் உரும.
“ஏன் ராம் நான் தொட்டா, உள்ளுக்குள்ள அப்டியே கிளுகிளுப்பா இருக்கா என்ன”, ஹஸ்கியாக சொன்னபடி இன்னும் அவனிடம் நெருங்கி நின்றாள்.
“கிளுகிளுப்பு இல்ல டி..” உடம்பு பத்தி எரியிது, அவள் கரத்தை வேகமாக தட்டி விட்டு விலக போனவன் சட்டையை பின் பக்கமாக இழுத்து பிடித்ததில், தடுமாறி போனவனை திருப்பி முன் பக்க சட்டையை இறுக பற்றியவள், அவன் கண்களை நேராக பார்த்து சட்டென அவன் இதழ் கவ்வ, கண்களை அகல விரித்தவன் அவளை விட்டு விலகப் போக, அவனை விலக விடாமல் பிடரி பற்றி அழுத்தமாக அவளோடு இழுத்தவள் கண் மூடி அவன் சிவந்த அதரத்தில் அவள் இதழ் கொண்டு சுவைத்து, அவன் நிதானம் வரும் முன்பே இதழ் போரை முடிவுக்கு கொண்டு வந்தவள், அவன் கண்களை நொடிநேரம் உற்று பார்த்து விட்டு அடுத்த தாக்குதலாக அவனை இருக்கமாக அணைத்துக் கொண்டவள், அணைத்த வேகத்திலே அவனை விட்டு பிரிந்து இதயம் துடிக்க கதவை திறந்துக் கொண்டு வெளியே ஓடி இருந்தாள்.
என்னடா இங்க நடந்துச்சு என்ற ரீதியில் ஷாக் அடித்ததை போன்று நின்றிருந்தவனுக்கு, அவள் செய்த செயலில் கட்டுக்கடங்கா கோபம் தலைக்கேரி கை முஷ்டியை இருக்க மூடி சுவற்றில் ஓங்கி குத்திக் கொண்டவன், ச்ச.. இடியட்.. சரியான சைக்கோ.. என கத்தியவன், அவள் எச்சில் ஈரம் காயாமல் அவன் இதழில் இருப்பதை உணர்ந்தவன் தோள் பட்டையில் அழுத்தமாக துடைத்துக் கொண்டவன், கோவத்தில் என்ன செய்கிறோம் என்று ஒன்றும் புரியாமல், அவன் தேகம் தொட்ட சட்டையை கழட்டி வீசி குளியலறை புகுந்து கொண்டான்.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 15
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.