• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

அத்தியாயம் 17

Administrator
Staff member
Messages
349
Reaction score
250
Points
63
அத்தியாயம் - 17

ரேஷ்மாவை அவள் வீட்டில் இறக்கி விட்டு, ஸ்ருதியின் வீட்டை நோக்கி அவன் காரை செலுத்த கடுப்பாகிப் போனது அவளுக்கு. “ஹெலோ.. இங்க என்ன ஸ்லோ ரேஸா நடக்குது காரை உருட்டிட்டு போறீங்க, வேகமா போங்க இல்ல காரை நிறுத்துங்க, நீங்க கார் ஓட்ற ஸ்பீடுக்கு நான் நடந்தே என் வீட்டுக்கு போய் சேர்ந்திடுவேன்” என்றதும் நடுவீதி எனும் பாராமல் கார் சடன் ப்ரேக் போட்டு நின்றது.

அவனை புரியாமல் பார்த்த ஸ்ருதி “இப்ப என்ன ஆச்சி” என்றாள் வெறுப்பாக. “ம்ம்.. இன்னையோட உனக்கும் எனக்கும் இருக்க கணக்க மொத்தமா தீர்த்துக்க தான் கார் ஸ்டாப்பாச்சி” அவன் குரல் மாறுதலை கண்டு, “என்ன நரேன் உங்க பேச்செல்லாம் ஒரு மாதிரி மாறுது.”
“ஆமா டி.. அப்டி தான் மாறும். உன்ன நான் என் கண்ணுல படக் கூடாதுனு தானே சொல்லி இருந்தேன். திரும்ப திரும்ப எதுக்கு என் முன்னாடி வந்த” அதுவரை இருந்த இயல்பான முகம் மறைந்து அவள் மீது உள்ள வெறுப்பில் கோபத்தை தத்தெடுத்தது அவன் முகம். அவன் முகம் மாறுதலை உணர்ந்த நொடி எச்சில் விழுங்கியவளுக்கு ‘இந்த நேரத்தில் இவனிடம் வந்து தெரியாத்தனமாக மாட்டிக் கொண்டோமே’ என்று நொந்து போனவள், இதற்கெல்லாம் காரணமான ரேஷ்மாவை மனதில் நன்கு திட்டித்தீர்த்து, “நானா உங்க முன்னாடி வரல mr. நீங்க தான் நான் எங்க போனாலும் அங்க வரீங்க. எனிவே காரை நிப்பாட்டியதுக்கு ரொம்ப தேங்க்ஸ். நான் இங்கிருந்து நடந்தே என் வீட்டுக்கு போய்ப்பேன்” என்றபடி கார் கதவை திறக்க முயற்சிக்க, அதுவோ நரேன் புண்ணியத்தில் லாக்கில் இருந்தது.

“என்ன ஓபன் பண்ண முடியலயா” அவன் நக்கல் கேள்வியில் முறைத்த ஸ்ருதி, “உங்களுக்கு என்ன தான் பிரச்சனை நரேன். எதுக்காக என்கிட்ட அடிக்கடி இப்டி வம்பு பண்றீங்க. நான் தான் உங்கள கண்டாலே ஒதுங்கி போறேனே. திரும்ப திரும்ப ஏன் என்ன தொந்தரவு செய்றீங்க” கோவத்தில் வெடித்தவளின் தாடையை இறுக பிடித்து அவன் முகத்துக்கு நேராக இழுத்து, “ஏன்னா கேக்குற, ஏன்னா நீ என்மேல சுமத்தின பழிய என்னால மறக்க முடியல டி.. எப்டி எப்டி நான் உன்ன பலவந்த படுத்த முயற்சி செஞ்சேன்னு தானே அன்னைக்கு அந்த ஹோட்டல் முழுக்க கத்தி கலாட்டா செஞ்சி, என்ன அத்தனை பேர் முன்னாடி அசிங்கப் படுத்தின. என்கூட பிசினஸ் பேச வந்த டீலர்ஸ் எல்லாம் என்ன கேவலமா பாத்துட்டு போனாங்க. எத்தனை முறை சொன்னேன் நான் அதை செய்யலன்னு, காது கொடுத்து கேட்டியா டி.. நீ. உன்ன ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது அப்டியே கொண்ணு போடற வெறி வருது டி..” அத்தனை கிட்டத்தில் கோவத்தில் குதித்த அவன் முகத்தை கண்டு பயத்தில் உடல் நடுங்கினாலும், இன்னுமும் அன்று அவளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தது அவன் தான் என்று அவள் உறுதியாக நம்பி, அவன் கையை முழு வீச்சில் தட்டி விட்டவள்.

“எனக்கு நல்லா தெரியும் நரேன் அன்னைக்கு நீங்க தான் என்கிட்ட போர்ஸ் பண்ணி தப்பா நடந்துக்க பாத்தது. கூட்டம் கூடினதும் எங்கே மாட்டிக்கப் போறோம்னு பயத்துல நான் இல்லன்னு நாடகமாடி தப்பிக்க பாத்ததும் கூட” அவள் சொல்லி முடிக்கவில்லை ஏய்ய்.. என்ற உருமலில் பயந்து கார் கதவோடு ஒட்டிக் கொண்டவளை கண்கள் சிவக்கக் கண்டவன். “நான் அத செய்யல.. நான் அத செய்யலன்னு எத்தனை முறை சொல்றது, உன் காதுல விழுதா இல்லையா டிஇஇ..” வெறி கொண்ட சிறுத்தையாய் உருமாரி கத்தியவன், “என் கண்ணசைவுக்காக எத்தனை பொண்ணுங்க க்யூக்கட்டி நிக்கிறாங்க தெரியுமா. ஆனா எனக்கு அதுல எல்லாம் துளி கூட விருப்பம் இருந்ததில்ல, ஏன்னா எனக்கே எனக்குன்னு சொந்தமான ஒருத்தி எனக்காக வருவானு அவளுக்காக காத்திருக்கேன் டி.. அப்படி பட்டவன் விருப்பம் இல்லாத பொண்ண போர்ஸ் பண்ணனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல” அவன் குரலில் அத்தனை உறுதியும் அனல் பறக்கும் அவன் கண்ணில் இருந்த உண்மையும் கண்டு ஆடிப் போன ஸ்ருதிக்கு குழப்பமே மிஞ்சியது.

≈≈≈≈≈ ≈≈≈≈≈ ≈≈≈≈≈
ராமை முத்தமிட்டு கட்டி அணைத்து விட்டு வெளியே ஓடி வந்த நேத்ரா ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து ஏதோ யோசனையில் இருந்தவளின் மடியில் பாரம் தோன்றவே குனிந்து பார்க்க, வரிசையாக மேலும் கீழும் நான்கு நான்கு பற்கள் முளைத்த குட்டிப் பையன் மொத்த பற்களையும் காட்டி அவள் மடியில் ஏறி அமர்வதற்காக முயற்ச்சித்துக் கொண்டிருக்க, கூடவே அவன் குட்டி தங்கையும் மருப்பக்கம் அண்ணனுக்கு போட்டியாக நேத்ராவின் மடியில் ஏற போட்டியிட்டுக் கொண்டிருந்தது.

இரு குழந்தைகளையும் என்ன உணர்வில் பார்க்கிறாள் என்றெல்லாம் அவளுக்கே புரியாத ஒன்று. இதுவரை அவளுக்கு நினைவு தெரிந்து எந்த ஒரு குழந்தைகளையும் தூக்கியது என்ன ஆசையாக பார்த்தது கூட இல்லை. அப்படி இருக்க இரு வாண்டுகளும் அவள் உடையை கசக்கி ஜொள்ளு விட்டபடி, ஆய்.. ஒய்.. என மழலைக் குரலில் சத்தமெழுப்பி ஒற்றைக் காலை வேறு தூக்கி தூக்கி அவள் மடியில் வைத்து சரிக்கி விட்டபடி விளையாடிக் கொண்டிருக்க, அதை கண்டு ச்சீ.. என முகத்தை அஷ்டகோணலாக்கி “ஏய்.. ஷூ.. போ.. என் ட்ரெஸ்ஸ பிடிச்சி அழுக்கு செய்யாத தள்ளு” என இரு பிள்ளைகளின் கைகளையும் சேர்த்து பிடித்து அவளை விட்டு தள்ளி நிறுத்தியவள், ‘ச்சீ.. என் ட்ரெஸ்ஸ இப்டி ஸ்பாயில் பண்ணிடுச்சிங்களே குட்டி சாத்தானுங்க’ வாய் விட்டே புலம்பியவள், “ஏய்.. இனிமே ரெண்டு பேரும் என் பக்கத்துல வரவேக் கூடாது. முக்கியமா என்ன டச் பண்ண கூடாது புரிஞ்சிதா” என்னவோ பெரிய பிள்ளைகளிடம் சொல்வதை போல, குழந்தைகளிடம் விரல் நீட்டி கோவமாக எச்சரித்து விட்டு மீண்டும் ராம் அறைக்கே சென்று விட்டாள்.

குழந்தைகளுக்கு பால் எடுத்துக் கொண்டு வந்த பனிக்கு, மிரட்டிப் பேசிய நேத்ராவின் சத்தம் நன்றாக கேட்டு விட, கோவமும் அழுகையும் ஒருசேர வந்து விட்டது. இதுவரை இரண்டு குழந்தைகளையுமே அவளோ இல்லை வேறு யாரோ விளையாட்டாக கூட அதட்டி பேசியது இல்லை. அப்படி இருக்க நேத்ரா குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொண்டது மனதுக்கு மிகவும் கஷ்டத்தை கொடுத்தது.

ஓடி சென்று பிள்ளைகளை தன்னோடு கண் கலங்க அணைத்து முத்தமிட்ட பனி, “என் தங்கக் குட்டிங்க, நேத்ரா திட்டிட்டாளா உங்கள” என மிரண்டு போய் இருந்த குழந்தைகளிடம் கொஞ்சி கேட்க. அவர்களுக்கு என்ன புரிந்ததோ நேத்ரா சென்ற திசையைக் காட்டி ஏதேதோ மழலையில் மொழிய, பிஞ்சி கைகளை பிடித்து முத்தம் வைத்தவள். “சரி சரி அம்மா உங்களுக்கு பால் கொண்டு வந்திருக்கேன் குடிச்சிட்டு தூங்கலாமா” என்று இரு பிள்ளைக்கும் பால் கொடுத்து உறங்க வைத்து தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்க, பெரிய பிள்ளையை வலிய கரம் வளைத்துக் கொண்டது.

“விழிமா என்ன டி.. யோசனையில இருக்க நான் வந்தது கூட தெரியாத அளவுக்கு” அவளை ஒட்டி படுத்து அவள் காதில் கிசுகிசுக்க. “வருஉஉ.. நீயா.. நான் பயந்தே போய்ட்டேன். ஏன் எப்பவும் இப்டி திருடனாட்டும் நைசா வந்து கட்டிபிடிக்கிற” மூக்கு விடைக்க அவனிடம் மல்லுக்கு நின்ற விழியை சிறு சிரிப்போடு கண்டு, “என்னத்த என்கிட்ட மறைக்க இந்த ட்ராமா விழி” அவன் துளையிடும் பார்வையில் தடுமாறிப் போனவள். “ஒ..ஒன்னு..ஒன்னும் இ..இல்லையே வரு..” என்றவளை ஆழ் பார்வை பார்த்து, ‘எனக்கு எல்லாம் தெரியும் விழி. உனக்கு தெரியாத பல விஷயங்களும் கூட’ என்பதை மட்டும் மனதில் நினைத்து, அவள் அதிர்ந்த முகத்தை கண்டு, “நேத்ரா குழந்தைங்க கிட்ட நடந்துகிட்ட விதம் ரொம்ப தப்பு. எனக்கே அவ்ளோ கோவம் வந்துச்சி, என்ன இருந்தாலும் இப்ப அவ ராம் மனைவி, அந்த ஒரு விஷயத்துக்காக மட்டும் தான் பல்லைக் கடிச்சிட்டு பொறுத்துட்டு வந்தேன். இல்லனு வையிஇஇ..” அவள் இடையில் இருந்த அவன் இரும்பு கரம் இருக்கமாவதிலேயே அவன் கோவம் உணர்ந்த பனி, “வரு.. இப்ப ஏன் இவ்ளோ கோவப்படர, அவளுக்கு இதெல்லாம் புதுசா கூட இருக்கலாம் இல்லையா. அவ நார்மலாவே சிடுசிடுன்னு தான் இருப்பா, அதனால இதையெல்லாம் நினைச்சி கோவப்படாத வரு..” கணவனை சமாதானம் செய்ய அவளையும் அறியாது அவனோடு நெருங்கிப் படுத்து அழுத்தமாக அவன் கன்னம் தடவி சொல்லவும், எங்கே போனதோ அவன் கோவம்.

கோவம் தடம் தெரியாது அழிந்த அவன் முகத்தில் மோகம் ஒட்டிக் கொள்ள, அதை உணர்ந்து வெட்கி போன பனிவிழியின் பனியிதழை முற்றுகையிட்டு அவனுக்கு அடிமையாக்கியவன், அவன் கைகள் கோலமிட, அவள் வெண்மேனி முழுக்க சிவப்பு நிற வண்ணக் கோலமாய் மாறி ஆடவனை கிறக்கமேற்றியது.

இன்னும் ராம் குளித்துக் கொண்டு இருப்பதை பார்த்த நேத்ரா, அவன் வருவதற்குள் படுத்து விடலாம் என நினைத்து படுக்கையில் விழுந்தவளுக்கு உறக்கம் தான் வருவேனா என்றிருந்தது. நிம்மதியாக இரவில் படுத்துறங்கி ஒரு வருட காலம் ஆகிவிட்டது. தினம் இரவில் அவளை தூங்க விடாது செய்கிறது பயங்கரமான பேய் குரல். அப்படியே அவள் உறங்கி விட்டாள் கழுத்தில் ஏறி மிதிக்கும் கொடூர உருவம் ஒன்று.

எப்போதாவது ஓவர் குஷியில் நண்பர்களோடு இருக்கும் சமையம் மட்டும் ஒரு ஜாலிக்காக ஒரு பெக் அடிப்பவள், நாளடைவில் உறக்கத்திற்காகவும் அந்த பேய் குரல் தன் காதில் விழக் கூடாது என்பதற்காகவும் குடியைப் பழகிக் கொண்டாள். ராம் வீட்டுக்கு வந்ததில் இருந்தே குடிக்கவில்லை, உறக்கமும் வரவில்லை, மீறி உறங்கினால் துரத்தி வரும் துயரம் விடாமல் அவளை துரத்தி வருகிறதே. போர்வையை கழுத்து வரை போர்த்திக் கொண்டு வெறுமனே கண் மூடி படுத்திருப்பவளுக்கு நிம்மதி என்பது துளிக் கூட இல்லை.

எதற்காக இந்த திருமண நாடகம் என்பது அவள் மனதுக்கு மட்டுமே அறிந்த உண்மையும் கூட. இன்னும் மூன்று மாதகாலத்திற்குள் ராமுடன் தான் முழுதாக இணைய வேண்டும். எப்படி? என்ற கேள்வி மட்டுமே அவள் மூளையை குடைந்துக் கொண்டிருக்க.
"ஏய்.. என் பெட்ல எதுக்கு நீ படுத்திருக்க" ராமின் கோபக் குரலில் பதட்டம் இல்லாமல் கண் திறந்து அவனை கண்டவள். "இனி உங்களோட பெட்ல உங்ககூட தான் படுப்பேன் ராம், கல்யாணம் ஆகி இன்னும் நம்ம தனி தனியா பிரிஞ்சி இருக்குறது எனக்கென்னவோ சரியா படல. அதனால இனியாச்சி என்னோட சேர்ந்து வாழப் பாருங்க, அட்லீஸ்ட் என்கூட ஒரே பெட்ல படுக்கவாச்சி செய்ங்க, அது தான் ஒரு நல்ல புருஷனுக்கு அழகு" கண்சிமிட்டு அவள் சொல்ல.

எரிச்சல்.. எரிச்சல்.. எரிச்சல்.. அத்தனை எரிச்சல் அவள் மீது வந்தது. இதுவே அவன் மனதில் அவள் மீது சிறு மதிப்பு இருந்திருந்தால் கூட அவள் அழகாக செய்யும் சிறு சிறு முகபாவனைகளையும் ரசிக்கத் தோன்றி இருக்கும். ஆனால் இவளைப் பார்த்தால் என்ன நினைத்தால் கூட கோபமும் எரிச்சலும் அதை விட அதிகமாக வெறுப்பும் அல்லவா வருகிறது.

“ஏய்.. என்ன ரொம்ப ஓவரா போற. நீ இந்த வீட்ல என் கண்ணு முன்னாடி இருக்குறதே எனக்கு பிடிக்கலனு சொல்றேன். இதுல உன்னோட சேர்ந்து வாழ வேற சொல்ற, உன்கூட எல்லாம் வாழ நான் ஒன்னும் அவ்ளோ கீழ்த்தரமானவன் இல்ல. எப்பவும் போல ஹால்ல போய் படுத்தா படு இல்ல முடியாது இங்க தான் படுக்க போறேன்னு லூசு மாதிரி உளறிட்டு இருந்த கழுத்த பிடிச்சி வெளிய தள்ள வேண்டியதா வரும்” பால் முகம் கோவத்தில் சிவந்து துடித்தது அவனுக்கு.

சுண்டி விட்டாள் ரத்தம் வரும் வெண்மை நிறமுடையவன் கோவத்தை, கன்னத்தில் கை கண் சிமிட்டாமல் பார்த்த நேத்ரா. “ராம்.. நீங்க எப்டி இவ்ளோ ப்ரெஷ்ஷா கலரா இருக்கீங்க, அப்டியே உங்கள கடிச்சி சாப்பிடலாம் போல இருக்கு” என்றபடி அவனிடம் நெருங்கி வந்தவள் சட்டென அவன் கன்னம் பிடித்து ஆட்டி 'சோ க்யூட் மில்கிபாய்' எம்பி அவன் கன்னத்தில் முத்தம் வைத்த மறு நொடி ஒரு மூலையில் விழுந்து கிடந்தால் ராம் அடித்த அடியில்.

கன்னத்தில் கை வைத்து நிலைக்குத்திய பார்வையால் எந்த உணர்வையும் வெளிக்காட்டாது அவனையே அவள் பார்த்திருக்க அற்பப் பார்வை அவள் மீது வீசியவன். ஒற்றை விரலை அவள் முகத்துக்கு நேராக நீட்டி சீரும் சிறுத்தையாக கோபத்தில் கண்கள் துடிக்க கண்டவன். “இதுதான் உனக்கு கடைசி, திரும்ப திரும்ப என்கிட்ட இப்டி கேவலமா நடந்துகிட்ட வெட்டி போட்டுருவேன்” தாடை இறுக கர்ஜனை செய்தவன் மெத்தையில் சற்று நேரம்முன் அவள் படுத்திருந்த மெத்தை விரிப்பை இழுத்து தரையில் போட்டு வெறும் மெத்தையில் படுத்து கண்களை மூடிக் கொண்டவனுக்கு நேத்ராவால் நாளுக்கு நாள் நிம்மதி பறிபோனது.

ஆனால் அவனுக்கு தெரியாத ஒன்று. அவன் பறிபோன நிம்மதி முழுதாக அவனுக்கே திருப்பிக் கொடுக்கவே, எந்த பெண்ணும் செய்யத் துணியாத மாபெரும் செயலை நேத்ரா அவனுக்காக செய்யத் துணிய போகிறாள் என்று தான்.

அவன் கொட்ட கொட்ட குனிந்து வாங்கிக் கொள்ளும் ரகம் இல்லை அவள். மீறி வாங்கிக் கொள்கிறாள் என்றால் காரணம் என்னவோ மிகபெரிது என்பதால் மட்டும் தான். இத்தனைக்கும் அவன் மீது காதல், அன்பு, அக்கறை எல்லாம் இருக்கிறதா என்று கேட்டாள் நிச்சயம் இல்லை.

சர்வேஷை காதல் செய்தாள். ஆனால் அதுவும் சிறிது நாளிலே பட்டுபோய் விட்டது, அவள் தோழிகளுடன் உடலளவில் அவன் நெருங்கிப் பழகியதை பார்த்த பின்பு, சுதந்திரப் பறவை அவளுக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற பாலிசி நன்கு தெரியும், அதனால் அவனை எளிதில் மறந்து விட்ட பிறகு தான் தெரிந்தது உண்மையான காதல் என்றால் இத்தனை எளிதில் காதலிப்போரை மறந்து விட முடியாதென்பதை.

இமைமூடிய விழிகளில் கண்மணிகள் உருல ஒற்றைக் கையை பாதி முகத்தை மறைத்தது போல் வைத்து வெகு நேரம் உறங்காமல் படுத்திருந்தவன், நெஞ்சில் பாரம் கூட, என்ன நினைத்தானோ தன் நெஞ்சில் இருந்தவளை இறுக அணைத்து அவள் வாசம் இழுத்தவன், தீஷு.. என்று தானாக அவன் உதடுகள் முனுமுனுத்து அவள் நெற்றியில் மென் முத்தம் பதித்தவன். "எங்கே டி.. போன என்ன விட்டு, நீ இல்லாம ரொம்ப கொடுமையா இருக்கு தங்கோ இப்டியே காலம் முழுக்க என்னோட இருந்துடு தீஷூமா.. இனிமே என்ன விட்டு எங்கேயும் போகாதே டி.." என்று மனைவியின் மீதிருந்த காதல் குறையாமல் அவள் இறந்தும் அவன் உள்மனம் நம்பமுடியாத நிலையில் இன்னுமும் அவள் உயிருடன் அவனுடன் தான் அவள் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறாள் என்று நினைப்பு மாறாமல் அவன் நெஞ்சில் கிடந்தவளின் இதழை சிறைப்பிடித்து உறிந்து இழுக்க, வாகாக அவனுக்கு வளைந்து இசைந்துக் கொடுத்தாள் தீஷாவாக அவள் இடத்தில் இருந்த நேத்ரா.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 17
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top