• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

அத்தியாயம் - 16

Administrator
Staff member
Messages
349
Reaction score
250
Points
63
அத்தியாயம் - 16

"அம்மா.. எவ்ளோ நேரம் உங்களுக்காக வெயிட் பண்றது. இவ்ளோ நேரம் வீட்டுக்கு வராம எங்க போயிட்டு வர்றீங்க, ஏன் போன் போட்டும் எடுக்கல” மணி இரவு பன்னிரெண்டை நெருங்கும் வேளையில் வீட்டுக்கு வந்த தாயிடம், அவருக்காக காத்திருந்த ஸ்ருதி வினவ.

சோம்பலாக தோளில் மாட்டி இருந்த பையை டீபாயில் போட்டவர். “ஆபீஸ்ல வேலை ஜாஸ்த்தி மா.. அது மட்டுமில்லாம ரொம்ப நாளா இழுத்தடிச்சிட்டு இருந்த ஆஸ்திரேலியா டீல் ஓகேவாகிடுச்சி, அதுக்கான பார்ட்டிய முடிச்சிட்டு வர லேட் ஆகிடுச்சி. சரி உனக்கு போன் போட்டு சொல்லலாம்னு பாத்தா பார்ட்டி நடக்குற இடத்துல ஒரு பிஸியான வேலையில மாட்டிக்கிட்டேன். சரி அதை விடு நீ போய் படுத்து தூங்கு ஸ்ருதி லேட்டாச்சு, எனக்கும் டையர்டா இருக்கு” என்றவர் அவர் அறைக்கு சென்று விட்டார்.

போகும் தாயின் முதுகை வெறித்த ஸ்ருதிக்கு ஏனோ இப்போதெல்லாம் சுகன்யாவின் செயல் வித்யாசமாக பட்டது. முன்பெல்லாம் எத்தனை வேலை இருந்தாலும் சரியாக மாலை 6.00 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து அவளையும் வீட்டையும் பொறுப்பாக பார்த்துக் கொள்வதோடு, ஸ்ருதிக்கு நிறைய அறிவுரைகள் வழங்கி அவளுக்கு நல்லதை மட்டுமே சொல்லிக் கொடுத்து, அப்பா இல்லாத மகள் எங்கே தந்தை பாசத்துக்கு ஏங்கி விடுவாளோ என்ற கவலையில் பல வேலை தலைக்கு மேல் குவிந்து கிடக்கும் நிலையிலும் அவளோடு நேரம் செலவிட தவற மாட்டார். ஆனால் சமீபத்திய நாளில் இருந்தே ஸ்ருதியின் முகத்தை பார்த்து பேச கூட தயங்கி ஓடி ஒளியும் சுகன்யா அவளுக்கு புதிது.

எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ, சுகன்யா வருவதற்கு முன்பு வரை கண்ணை சுழட்டி அடித்த தூக்கம் இப்போது காணாமல் போய் ஹாலிலே நடைபயின்று கொண்டிருந்தவள், கிட்ச்சன் சென்று அவளது தண்ணீர் போத்திலில் நீர் நிரப்பிக் கொண்டு அவள் அறைக்கு வந்தவள், உறக்கம் வராமல் பால்கணி கதவை திறந்து சென்று அங்கிருக்கும் பெரிய சைஸ் ஊஞ்சலில் அமர்ந்து, இதமாக வீசும் தென்றல் காற்றை சுவாசித்து ஆழ மூச்செடுத்து பலவித யோசனையில் ஊஞ்சல் ஆடிக்கொண்டு இருக்க, அந்நேரம் அவள் அலைப்பேசி அடிக்கவும் யாரென எடுத்து பார்க்க ரேஷ்மா என்று வரவும் ‘இவ ஏன் எனக்கு போன் பண்றா இந்த நேரத்துல’ என்ற யோசனையோடு அட்டென் செய்து காதில் வைத்தாள்.

ஹெலோ என்று சொல்லும் முன்னே, “ஹெலோ ஸ்ருதி.. எங்க இருந்தாலும் உடனே கிளம்பி **பப்புக்கு வா ப்ளீஸ்.. எனக்கு இங்க ஒரு பிரச்சனை டி.. என் மேல இருக்க கோவத்துல வராம விட்றாத ஸ்ருதி..” அந்த பக்கம் பதட்டமாக ரேஷ்மா கெஞ்சவும், என்னதான் தோழிகள் மீது கோபம் இருந்தாலும், அவர்களுக்கு ஒன்று என்றதும் பதறியது நெஞ்சம். “சரி ரேஷ்மா நான் வரேன், ஆனா மணி என்னாகுது இன்னும் ஏன் நீ பப்ல இருக்க” என்று இவள் கேட்கவும் அழைப்பு துண்டாகி விட்டது.

ச்ச.. என போனை காதில் இருந்து எடுத்தவள், ‘இவ மட்டும் தான் தனியா இருக்காளா இல்ல இவ கூட அந்த சுஷ்மியும் இருக்காளானு தெரியலயே, ஏந்தான் ரெண்டும் இப்டி கெட்டு சீரழியிதுங்கலோ’ என்று வசைப்பாடிய படியே அவளது இரு சக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தாள். அவளது ஓரளவு பெரியதான வீட்டில் அவளும் அவள் அன்னையும் மட்டுமே இருக்க, யாரிடமும் சொல்லி விட்டு வர வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. ஆளுக்கு ஒரு அறையில் இருப்பதால்.

நள்ளிரவு ஒரு மணியை நெருங்கி இருந்த வேளையிலும் வண்ண வண்ண விளக்குகள் எரிந்து, கையில் மது கிண்ணத்தோடு ஆட்டம் பாட்டம் என்று ஆண்கள் பெண்கள் என அநாகரிகமான செயலோடு ஆடிக் கொண்டு இருந்தனர் அந்த பப்பில். அதை எல்லாம் முகசுழிப்பாக பார்த்தபடி ரேஷ்மா இருக்கும் இடத்தை தேடி சென்ற ஸ்ருதி அங்கிருந்த ஒரு அறையை திறந்துக் கொண்டு உள்ளே சென்றவள், ரேஷ்மா இருந்த நிலையைப் பார்த்து அருவருத்து கண்களை மூடிக் கொண்டாள்.

“ஏய்.. என்ன கன்றாவி டி.. இந்த கேடு கெட்ட வேலைய பாத்துட்டு தான் என்ன இங்க கூப்ட்டியா ரேஷ்மா” கோவம் தாலாமல் அவள் இருந்த நிலையை கண்டு சகித்துக் கொள்ள முடியாமல் பற்களை கடித்தாள் ஸ்ருதி. புதிய ஆண் நண்பனோடு மது அருந்தியபடி கொஞ்சம் அதிகமாகவே ரூம் போட்டு பழகி விட, வெறி நாய் போல் அவளை எழுந்து நிற்க கூட முடியாத நிலையில் கடித்துக் கொதரி விட்டு ஓடி இருந்தான்.

“இப்ப ஏன் கோவப்பட்ற ஸ்ருதி. இதெல்லாம் ஒரு ஜாலி இந்த வயசுல என்ஜாய் பண்ணாம வேற எப்ப பண்றது. நமக்கு முக்கியம் சேஃப்டி தான் அப்புறம் என்ன” முடியாத நிலையிலும் கேவலமாக பதிலளிக்கும் ரேஷ்மாவை முறைத்த ஸ்ருதி. “உன்கிட்டல்லாம் பேசி ஒண்ணுமே ஆக போறது இல்ல. ஆமா உன் பெஸ்ட் பிரண்ட்ஸ எல்லாம் விட்டுட்டு எதுக்கு எனக்கு கால் செஞ்சி உயிர எடுக்குற” அவளை திட்டிக் கொண்டு இருந்தாலும், ஆங்காங்கே வீசி எரியப் பட்ட அவளது உடைகளை எடுத்து அவள் அணிய உதவி செய்துக் கொண்டு தான் இருந்தாள் வெறுப்பாக.

“அதுவா ஸ்ருதி, முதல்ல இந்த சுஷ்மிக்கு தான் கால் போட்டேன் அவ மார்னிங் தான் அவளோட புது பாய்பிரண்டோட கொடைக்கானல் கிளம்பி போனாளாம், அடுத்து நேத்ராக்கு கால் போட்டேன், அவ என்னடான்னா இனிமே எனக்கு கண்ட நேரத்துல போன் பண்ணினா கொன்னுடுவேன்னு மிரட்டுறா. அதான் உனக்கு போன் போட்டேன் என்ன இருந்தாலும் நீ ஸ்வீட் ஸ்ருதி.. என்னதான் என்மேல கோவம் இருந்தாலும் எனக்கு உதவின்னதும் அன்டைம்னு கூட பாக்காம ஓடி வந்த பாத்தியா அங்க நிக்கிற. இனி நீ மட்டும் தான் என் பெஸ்ட் பிரண்ட்” என்று அவள் கன்னத்தில் முத்தம் வைக்க.

“ஏய். ச்சீ.. வோக்.. என்ன கருமம் டி.. பண்ற தள்ளி போ” எரிச்சலாக கத்தி அவள் முத்தமிட்ட கன்னத்தை அழுத்தமாக துடைத்துக் கொண்டவள், கண்டதையும் உளறாம “முதல்ல இங்கிருந்து போலாம் வா, எனக்கு அப்டியே கொமட்டிட்டு வருது” முகம் சுழிக்க சொன்னவள் ரேஷ்மாவை கிளப்பிக் கொண்டு வெளியே வருவதற்குள் ஒரு வழியாகிப் போனாள்.

வெஸ்பாவை ஸ்டார்ட் செய்து அவளை பின்னால் அமர சொல்ல. போதை தெளியாமல் எங்கே விழுந்து விடுவோமோ என்று இரு பக்கம் கால் போட்டு அமர்ந்து ஸ்ருதியை இருக்கமாக கட்டிக் கொண்டதும், அப்டியே சாலையில் அவளை உருட்டி தள்ளி விட்டு சென்று விடலாமா என்றிருந்தது ஸ்ருதிக்கு. “ரேஷ்மா முதல்ல என்ன டச் பண்ணாம உட்காரு டென்ஷன் ஆகுது” அவள் கோவமாக சொல்லியும் கேளாமல், “நோ ஸ்ருதி எனக்கு பயமா இருக்கு. எங்கேயாவது நான் கீழ விழுந்து கால் கைய உடைச்சிகிட்டா நாளைக்கு என் புது பாய்பிரண்ட மீட் பண்ண முடியாம போய்டும். அதான் சேஃப்டிக்கு புடிச்சிருக்கேன், நீ வண்டிய ஸ்டார்ட் பண்ணு நான் உன்னை பத்திரமா நீ கீழ விழாம பிடிச்சுக்கிறேன்” போதை தெளியாமல் குலறியவளை கண்டு தலையில் அடித்துக் கொண்டு அவள் வீட்டில் விடுவதற்காக வண்டியைக் கிளப்பிய நேரம், எங்கிருந்தோ வந்த bmw அவள் வண்டியை இடிப்பது போல் சறுக்கிக் கொண்டு வந்து அரையடி மட்டுமே உள்ள இடைவெளியில் சடன் பிரேக் போட்டு நின்றது.

சட்டென இடிப்பதை போல கார் வரவும் பயந்து போய் இருக்கமாக கண்களை மூடிக் கொண்ட ஸ்ருதி. சில நிமிடம் கழித்தே மெதுவாக கண்களை திறந்து பார்த்தவளுக்கு, அவளின் எதிரே நின்று அவளை முறைத்துக் கொண்டிருக்கும் நரேனை பார்த்து வெறுப்பாகிப் போனது.

“இந்த நேரத்துல நீ இங்க என்ன பண்ற” அங்கிருந்த பப்பை ஒரு பார்வை பார்த்து விட்டு அவளிடம் விரைப்பாக வினவ. அவனை நக்கலாக பார்த்தவள், “உள்ள என் பாய் பிரண்ட மீட் பண்ணிட்டு வரேன். ஏன் mr. உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா” என்றதும் வந்த கோபத்தை கை முஷ்டியை இறுக மடக்கி அடக்கிக் கொண்டவன். “ஏய் என்ன திமிரா.. கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லு டி..” அவன் உரும.

“என்ன கேள்வி கேக்க நீங்க யாரு. நான் எதுக்கு உங்களுக்கு பதில் சொல்லணும். ஆமா என்ன கேள்வி கேக்குறீங்க சரி, நீங்க முதல்ல இந்த நேரத்துல இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க” அவளும் கோபம் கொண்டு எகிற. “நான் ஆம்பள எங்க வேணா இருப்பேன், ஆனா நீ அப்டியா” என்றபடி அவளை நெருங்கவும், அவள் அமர்ந்திருந்த வண்டி ஆடவும், “ஏய்.. ஸ்ருதி என்ன டி.. வண்டிய இந்த ஆட்டு ஆட்ற எனக்கு தெரியாம நீ மட்டும் சரக்கு போட்டியா” ரேஷ்மா வேறு ஒரு பக்கம் உளறி அவளை கடுப்பைக் கிளப்பி கொண்டு இருக்க, இவனும் நெருங்கவே முறைப்பாக அவனை கை நீட்டி வராதே என தடுத்து, “நேரமாச்சி நரேன் நான் இவளை அவ வீட்ல விட்டு நான் என் வீட்டுக்கு போகணும், தேவை இல்லாம வழிய மறிச்சி பிரச்சனை பண்ணாம வழி விடுங்க” என்றாள் கராராக.

ஏற்கனவே கட்சி மீட்டிங் அது இது என்று அன்றைய நாளை முழுக்க அவன் தந்தை எடுத்துக் கொண்டு எங்கே அவனை கொஞ்ச நேரம் விட்டாலும் கிடைக்கும் கேப்பில் புகுந்து எஸ்ஸாகி விடுவானோ என்ற நினைப்பில் அன்றைய நாள் முழுதும் அவனை அவர் கண்காணிப்பில் வைத்து எங்கும் நகர விடாமல் செய்ததோடு, அவர் சொந்த வேலையை (பெண்களோடு ஜல்ஸா) செய்ய ஆயுத்தமான போது தான் நரேன் நினைப்பு வந்து அப்போது தான் அவனுக்கு விடுதலை கொடுத்து வீட்டுக்கு செல்ல அனுப்பி வைத்தார். அந்த டென்ஷனில் காரை எடுத்துக் கொண்டு வேகமாக பறந்து வந்தவன் கண்ணில் ஸ்ருதி பட்டதோடு, அவள் திமிராக வேறு அவனை அலட்சியம் செய்து வெறுப்பேற்றி பேசவும் அதிகரித்த கோபத்தோடு அவளை கண்டவன். “வண்டிய விட்டு கீழ இறங்கி ரெண்டு பேரும் என்கூட வாங்க, நானே உங்கள வீட்ல விட்டுட்டு போறேன்” அவன் கேட்டது அனுமதி அல்ல வந்து தான் ஆக வேண்டும் என்ற உறுதி.

அதை நன்றாக உணர்ந்தவள். “இவ்ளோ தூரம் வந்த எனக்கு திரும்ப போக தெரியாதா, உங்க உதவி எனக்கு வேணாம் நீங்க கிளம்புங்க” என்றது தான் தாமதம் அவளின் வெஸ்பாவின் இரண்டு டயரும் பஞ்சர் ஆகி இருந்தது. வெறுப்பாக அவன் காரை ஓட்டுவதை பார்த்துக் கொண்டு அவன் அருகில் அமர்ந்திருந்த ஸ்ருதி “நினைச்சதை சாதீச்சிட்டீங்கள்ள நரேன். இதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லியே ஆகணும்” விரல் நீட்டி மூச்சி வாங்க கத்தியவளை நக்கலாக பார்த்து கோணல் புன்னகை சிந்தினானே தவித்து பதில் பேசவில்லை.

அவள் வரமாட்டேன் என்றதும், காரில் இருந்த கூர்மையான ஒன்றை வைத்து மின்னல் வேகத்தில் அவள் வண்டியை பஞ்சராக்கியது மட்டுமில்லாமல், ரேஷ்மாவை காரின் பின் சீட்டில் தூக்கி போட்டு, ஸ்ருதியும் வேறு வழி இல்லாமல் அவனை முறைத்து திட்டி தீர்த்தபடி பின் சீட்டில் அமரப் போனவளின் கை பிடித்து இழுத்து அவனுக்கு அருகில் போட்டுக் கொண்டு வண்டியை கிளப்பி இருந்தான்.

அவன் செயலை நினைக்க நினைக்க எரிமலையாக உள்ளம்குமைய அமர்ந்திருப்பவளை மேலும் வெறுப்பேற்றவே, fm மை ஆன் செய்ய அந்நேரம் அதில் ஓடிய "கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா கண்டபடி
கட்டிப்புடிடா" கில்மா பாடலுக்கும், அந்த ஏகாந்த இரவின் குளுமையிலும் அவள் ஏறி இறங்கும் தொண்டை பகுதியில் உருண்டோடும் வியர்வையை கண்டு.
"எந்த இடத்தில்
சுகம் மிக அதிகம்
கண்டுபிடிப்பேன்
கண்டுபிடிப்பேன்
கண்டுபிடிப்பேன்
அந்த இடத்தில்
நண்டு பிடிப்பேன்" பாடலை முணுமுணுக்க திரும்பி அவனை முறைத்தவளின் தாடையில் இருந்து இறங்கிய வியர்வை துளி ஊஞ்சல் ஆடி சட்டென அபாயகரமான பள்ளத்தாக்கில் விழுந்ததை கண்டு பெரு மூச்சி விட்டவன் "கட்டிக்கவா.. ஒட்டிக்கவா.. கட்டிக்கவா.. ஒட்டிக்கவா.. கவா கவா" மீண்டும் ஒரு மாதிரி குரலில் அவன் ராகம் இழுக்க.

“ஹெலோ.. கொஞ்சம் அந்த கருமத்தை நிறுத்திட்டு கத்தாம வண்டிய ஓட்டுங்க தலை வலிக்குது” அவன் கள்ளப்பார்வை மேயும் இடங்களை அறியாத பாவையோ அவனிடம் எரிந்து விழுந்தாள், இது போதாதென “ஹேய்.. ஆப்பரேட்டர் இப்ப ஓடின பாட்ட திரும்பவும் போடு மேன்.” “தொட்டுக்கவா.. முட்டிக்கவா.. தொட்டுக்கவா.. முட்டிக்கவா.. கவா கவா" அவன் விட்டத்தில் இருந்து இவள் பாடி போதையில் எழுந்து கவர்ச்சியாக ஆட, அதை கண்டு அதிர்ந்து போன ஸ்ருதி, “ஏய்.. ரேஷ்மா இப்ப மட்டும் அமைதியா நீ உக்காரல ஓடுற கார்ல இருந்து வெளிய தள்ளி விட்ருவேன் பாத்துக்கோ” அவள் மிரட்டியும் வாய் ஓயாது, கவா.. கவா.. வை விடாமல் பாடியவளை கண்டு எரிச்சலாக நரேனை முறைக்க. “என்ன முறைச்சா நான் என்ன பண்றது, நான் கட்டிக்கவானு தான் பாடினே, அவ தான் தொட்டுக்கவானு கேக்குறா யார கேக்குறானு எனக்கு கொஞ்சம் கேட்டு சொல்லே” வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு சீரியஸாக அவன் சொல்ல, ச்ச.. என முகத்தை வெட்டி திருப்பியவள் வீடு வந்து சேரும் வரை அவன் முகத்தை பார்க்கவே இல்லை.

ஆனால் கள்ளப்பூனையோ சான்ஸ் கிடைத்த இடத்தில் எல்லாம் பார்வை அலைகளை தொடுத்துக் கொண்டு காரை செலுத்தினான்.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் - 16
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top