- Messages
- 270
- Reaction score
- 234
- Points
- 43
இதழ் - 18
“பாட்டி... பாட்டி... எங்க இருக்க பாட்டி...?” கத்திக் கொண்டே ராதா வர,
“ஏய் ராதா என்னாச்சு? ஏன் இப்படி வானமே இடிஞ்சி கீழ விழற அளவுக்கு கத்திக்கிட்டு வரவ" வானதி தான் கேட்டது.
“ம்மா பாட்டி எங்க” என்றாள்.
“அதுக்கு ஏன் டி மூஞ்சிய கடுகடுன்னு வச்சிட்டு கேக்குறவ?”
“ம்ச் இப்ப சொல்ல போறியா இல்லையா"
“அது வெளியத்தே பக்கத்து ஊட்டு பங்கஜம் பாட்டி கூட நியாயம் பேசிட்டு இருக்கு" என்ற வானதி என்ன புள்ளையோ நினைத்து சமையல் கட்டில் நுழைந்து கொண்டார்.
“பாட்டி...” என மீண்டும் கத்தி கொண்டே வெளியே வர.
“அடி ஏன் டி நீ அந்த கூத்த கேக்குறவ. அந்த வெங்குடேசு பயலுக்கு என்னமோ ஊர்ல இல்லாத சீம சிறுக்கிய கூட்டியாந்து கல்யாணம் பண்ணி வச்சு, அவ ஆத்தாகாரி என்னா அலட்டு அலட்டிட்டு இருந்தா.
இப்ப பாரு வேற எவனோட புள்ளையோ வயித்துல சுமந்துட்டு இருந்த புள்ளைய இல்ல, அதோட அழகை காட்டி இவள ஏமாத்தி தலையில கட்டிபுட்டாக” பக்கத்து வீட்டு பங்கஜம் பாட்டி, அமுதவல்லி பாட்டியிடம் ஊர் கதையை ஒண்ணுக்கு ரெண்டாக திரித்து சொல்லி கொண்டு இருக்க,
அதை அமுதவல்லி பாட்டியும் “ஹா! அப்புறம் என்னாச்சி, நல்லா வேணும் அவளுக்கு. இந்த ஒரு கல்யாணத்த பண்ணிபுட்டு என்ன பீத்து பீத்தனா அந்த வடிவு...” என வாயில் கை வைத்து நாடியை இடித்து கதை கேட்டுக் கொண்டு இருந்தார்.
இதை எல்லாம் கேட்டு கொண்டே வந்த ராதா “பாட்டி இங்க என்ன பண்ணிட்டு இருக்க" என்றாள்.
“ஏன்டிம்மா, ஊருலேன்ந்து வந்தீங்களே ஒரு எட்டு என் வீட்டுக்கு வந்து தலைய காட்டிட்டு வர கூடாதா" முந்திக்கொண்டு கேட்டார் பங்கஜம்.
“ஐயோ, இந்த பாட்டி வேற பேச ஆரமிச்சா, ஊர் கதைல இருந்து அமெரிக்கால நடக்குற கதை வரைக்கும் பேசியே அருக்குமே” என்று நினைத்தவள்,
“இல்ல பாட்டி, உன்னைய பாக்கத்தே வீட்டுக்கு வர கெளம்பி வந்தேன். அதுக்குள்ள வெளிய வந்து பாத்தா நீயே நிக்கிற என்ன அதிசயம் இல்ல" பொய்யாய் ஆச்சிரியப்பட்டு சொல்ல,
“அது சரிடி யம்மா நல்லா சாமிளிக்கிற. ஆமா எங்க மீனாட்சி மவன ஆளையே பாக்க முடியல. ஊர்ல சொன்னானுவ நல்லா ராசா கணக்கா பேன்ட்டு சட்டையெல்லாம் போட்டுட்டு ஜம்முனு இருப்பான்னு”
“ஆமா நேசந்தே பங்கஜம். என் பேரன் நல்லா ராசா கணக்காதே இருப்பான். ராத்திரி தாமஷமா தூங்குனதால என் பேரன் தூங்கி எந்திரிச்சி இருக்க மாட்டான்" என்றார் பெருமையாக வள்ளி பாட்டி.
“ஹ்ம்ம்! பெரிய ஊருல இல்லாத பேரன், நல்லா வசதின்னு வேற சொன்னானுவளே எப்படியாவது நம்ம பேத்திய அவன் கூட சேத்து வச்சிட்டா நல்லா வசதியா வாழுவால்ல" மனதில் பங்கஜ்ம் ஒரு திட்டம் தீட்டிக் கொண்டார்.
“பாட்டிடிடி...” என பங்கஜம் பார்க்காத நேரம், வள்ளி பாட்டியை தட்டினாள் ராதா.
அதை புரிந்து கொண்ட பாட்டியும் “சரி பங்கஜம் நீயி உன் மவன் குடும்பத்தோட வரான்னு சொன்னியே போயி ஜோலிய பாரு, நானும் போயி என் பேர பசங்க எல்லாம் ஒன்னா இருக்க நேரத்துல என் கையாள பால் பாயசம் செஞ்சு குடுக்க போறேன்" வள்ளி பாட்டி எழுந்து கொள்ள,
“சரி வள்ளி, நான் போய்ட்டு அப்புறமா வரேன். என் மவ மருமவளுக்கு நானும் போயி சமைக்கணும்...” என ராகம் இழுத்துக் கொண்டே, அர்ஜூனை பார்க்க வந்து பார்க்காமல் போன கடுப்பில் பங்கஜம் சென்று விட்டார்.
“என்னடி ஆத்தா, எதுக்கு என்னைய கூட்டுட்டு அமைதியா நிக்கிறவ” ராதா தாடையை இடித்தார்.
“என்ன பாட்டி அப்படியே ஒண்ணுமே தெரியாத மாறி கேக்குற. நீயி என்கிட்ட என்ன சொன்ன, என் மாமாக்கு புடிச்ச ஆட்டு கால் பாயாவ இன்னைக்கு வைக்க கத்து கொடுக்குறேன்னு சொன்னல்ல. வா போலாம்" என பாட்டியை அவள் இழுக்க,
“அடி யாரு டி இவ. இவ கட்டிக்க போறவனுக்கு ஆக்கிபோட இந்த வயசான காலத்துல என் கை இழுத்து ஒடைக்கிறவ. பேசாம என்ன விடு நானே வர்றேன்” அவர் அலுத்துக்கொண்டு சமையல் கட்டுக்குச் செல்ல, ராதாவும் பின்னாலே சென்றாள்.
“என்ன அத்தை நீயி சமைக்க வந்தியா” வானதி கேட்க,
“ஆமா வானதி, உன் மவ அவ மாமனுக்கு புடிச்ச ஆட்டு கால் பாயா கத்து குடுக்க சொன்னா அதே" என்றிட,
“சரித்தே, நான் எத்தன முற சமயக்கட்டு பக்கம் வாடின்னு கூட்டு இருப்பேன். அப்பலாம் வராம, இப்ப கட்டிக்க போறவன்னு வந்ததும், தானா வந்துட்டா பாத்தியா அத்தை" வானதி மகளை முறைக்கும் போதே,
“இங்க என்ன மாநாடு நடக்குது, மாமியாருக்கும் மருமகளுக்கும் இடைல.” என்றபடி மீனாட்சி வந்தார்.
“அட வா மீனு, எல்லாம் இவ புராணந்தே. அவ மாமனுக்காக சமைக்க இன்னைக்குதே இங்க வந்துருக்கா பாரு” நொடித்தாள் வானதி.
அதில் சிரித்த மீனாட்சி "அதனால என்ன அண்ணி அவள கார்த்தி கூட கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்குள்ள என் மருமக நல்லா சமைக்க காத்துக்குவா. என்ன ராதா நான் சொன்னது சரிதானே” என்றதும் மீனாட்சி சொன்னதை கேட்டு பதறிய ராதா,
“ஐயோ அத்தை, அவசரப்பட்டு இப்படி ஒரு சபத வாக்கு எல்லாம் குடுத்துடாதீய. நான் சும்மா என் மாமனுக்கு பிடிச்சத மட்டுந்தே கத்துக்க போறேன். மத்தபடி சமையல் வேல எல்லாத்தையும் மாமாதே செய்யணும்" என்றவளை மூவரும் முறைத்தனர்.
“சரி சரி முறைக்காதீய. கொஞ்ச கொஞ்சமா கத்துக்கிறேன். இப்போதைக்கு நான் சொன்னத மட்டும் கத்துக்கிறேன். பாட்டி நீ சொல்ல ஸ்டார்ட் பண்ணு நானே செய்றன்" என்றவள் பாட்டி சொல்ல சொல்ல செய்ய ஆரம்பித்து இருந்தாள்.
படிகளில் சோர்வாக, கண்களை கசக்கி கொண்டே இறங்கி வந்த மகி சாய்வு நாற்காலியில் அமர “என்னமா மகி இப்பதே வரியா?” மீனாட்சி கேட்க,
“ம்ம்... ஆமா மீனு"
"நைட்டெல்லாம் தூங்கலையாமா கண்ணு கண்ணெல்லாம் சிவந்து போய் இருக்கே” என்றார் அக்கறையாக.
“அது வந்து மீனு, சூர்யாக்கு காய்ச்சல் ராவு முழுக்க அனாத்திக்கிட்டே கெடந்தான். அதே நானும் தூங்கல"
“இப்ப எப்படி மகி இருக்கு அவனுக்கு?”
“இப்ப பரவால்ல மீனு, விடியவும்தே மீனு கொஞ்ச தூங்கினான்"
“அடிங்க என்ன டி அத்தைய போயி பேர சொல்லி கூப்பிடுறவ. என்ன திமிரு உனக்கு” சாடிக் கொண்டே வந்த வானதி, அவளுக்கு கொண்டு வந்த காப்பியை தராமல் முறைக்க, அதில் முகத்தை இன்னும் சோகமாக வைத்து கொண்ட மகி மீனுவை பாவமாக பார்த்தாள்.
“அட என்ன அண்ணி நீய, என் மருமகளுக்கு என்னைய பேர் சொல்லி கூப்பிட எல்லாம் உரிமையும் இருக்கு. ஏன்னா நாங்க தான் பெஸ்ட் பிரண்ட்ஸ் ஆச்சே" என்ற மீனாட்சி மகி கன்னத்தை ஆட்ட, அதில் சிரித்துக் கொண்ட மகி, “அப்படி சொல்லு மீனு, இதெல்லாம் இந்த அம்மாக்கு புரியாது" மீனாட்சியை கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமழை பொழிந்தாள்.
அதிகாலையில் எழுந்த அர்ஜூன் உடற்பயிற்சியை செய்ய தோட்டதுக்கு சென்றவன், அங்கு மகி மாட்டுக்கு பால் கறக்க வராததால், ஏனோ தானோவென உடற்பயிற்சியை முடித்தவன், அறைக்கு வந்து குளித்து உடை மாற்றி தயாராகி மெத்தையில் அமர்ந்தான்.
அர்ஜூன் எப்போதும் காலையில் காபி, டீ, பாலுக்கு பதில் உயர்தர "ரம், விஸ்க்கி, பீர்..” என வகை வகையான சரக்குகளை தான் காலை புத்துணர்வு பானமாக அருந்துவான்.
ஆனால், இங்கு வந்து மகியிடம் சும்மா வம்பு வளப்பதற்காகவே பாதம், பிஸ்தா, முந்திரி, எல்லாம் போட்டு பால் கேட்டான். அவன் உண்மையாகவே கேட்டிருக்கிறான் என நினைத்த மகி அவனுக்கு முதல் நாள், அவன் கேட்டதை போலவே போட்டு கொடுக்க,
அதை கேட்டு விட்டானே தவிர, நினைவு தெரிந்து இதுவரை பால் குடித்து பழக்கம் இல்லாததால், மகி எதிரில் நிற்பதை உணர்ந்து வேண்டா வெறுப்பாக ஒரு மிடறு அருந்த, அமிர்தமே தோற்று விடும் அளவுக்கு அவன் நாவில் அந்த ருசி அப்பிக்கொண்டது.
அந்த பாலை மகி அல்லாமல் வேறு யாராவது, ஏன் அவன் தாயே அந்த இடத்தில் இருந்து கொடுத்திருந்தால் கூட திரும்பி கூட பாத்திருக்க மாட்டான்.
அதிலிருந்து காலை மாலை இரண்டு வேலையும் அவள் கையால் போடும் அந்த பாதம் பிஸ்தா கலந்த பாலை ருசிக்காமல் அன்றைய நாளே ஓடாது எனும் அளவுக்கு வந்து விட்டது. அன்றொரு நாள் குடித்து அவளை நெருங்கி வம்பு செய்ததில் இருந்து பூஜா, ரதி, ராதா என யாரிடமாவது பாலை குடுத்து அனுப்பி விடுவாள்.
அர்ஜூனும் அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும், மகி பால் கொண்டு வரமாட்டாளா என எதிர்பார்த்து ஏங்கி கொண்டிருக்க, அவள் கை பட போட்ட பால் மட்டும் சரியாக வந்துவிடும். ஆனால் அவன் எதிர்பார்க்கும் அவள் மட்டும் வராமல் போக, ஏமாற்றமாக போய் விடும்.
இதோ இப்போதும், இப்போதாவது அவள் வருவாளா என விழி மேல் விழி வைத்து காத்திருக்க, வெகு நேரமாகியும் அவள் கொடுத்தனுப்பும் பால் கூட வரவில்லை என்றதும் தலை வலி பிடித்து கொள்ள, வேகமாக எழுந்து ஒரு விஸ்கியை கையில் எடுத்து வாயில் சரிக்க போனவன் என்ன நினைத்தனோ, அதை எடுத்த இடத்திலேயே வைத்தவனுக்கு மகி மேல் கோவமாக வந்தது.
சரி கீழே சென்று அவளை பார்த்து கொள்ளலாம் என நினைத்து படிகளில் இறங்கி வர, அப்போது தான் அந்த அறிய காட்சி அவன் கண் முன் நடந்தது. அதாங்க, மகி மீனாட்சிக்கு இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தம் குடுத்து கொண்டு இருந்தது.
அதை கண்டவனுக்கு, தன் தாய்க்கு தானே முத்தம் தருகிறாள் அதுவும் பெண்கள் தானே என்ற எண்ணமெல்லாம் இல்லை. ஆனால் பொறாமையும் கோவமும் மட்டும் டன் கணக்கில் வந்தது. தலை வலி அதிகமாக, இறுகிய முகத்துடன் அவர்கள் எதிரில் வந்து அமர்ந்தான்.
“அர்ஜூன் கண்ணா இந்தா ப்பா டீ எடுத்துக்கோ" என வானதி அவனிடம் நீட்ட, அசால்டாக அத்தனை கசப்பான மது வகைகளை குடிப்பவனுக்கு, இந்த டீயின் மனம், தலை வலி வேறு இருப்பதால் குமட்டி கொண்டு வர,
“இல்ல வேணாம்...” என்றான் பட்டும் படாமலும். அதில் வானதி முகம் சுருங்குவதை பார்த்த மீனாட்சி,
“அண்ணி, அர்ஜூனுக்கு டீ காபி எல்லாம் பிடிக்காது அண்ணி அதான் அவன் அப்படி சொல்லிட்டான்" என்றார்.
“ஓ! அப்படியா, அப்ப அர்ஜூன் கண்ணா உனக்கு வேற என்ன ப்பா வேணும் சொல்லு உடனே செஞ்சு கொண்டாரேன்" என்றிட,
“இல்ல அத்தை இப்ப எனக்கு எதுவும் வேணா, நான் அப்புறமா கேக்குறன்" என்றான் மகியை முறைத்துக்கொண்டு. ஆனால் குரல் மட்டும் தேனை போல இனித்தது.
மகியும் அவனை கவனித்தாள் தான். அவன் முகம் சிவந்து இருப்பதை, அது அவள் மேல் உள்ள கோவத்திலான சிவப்பா, இல்லை தலை வலியினால் வந்த சிவப்பா என்று அர்ஜூனுக்கு தான் தெரியும்.
இருந்தும் அவளுக்கு ஏதோ போல் இருந்தது. எப்போதும் காலையிலேயே எழுந்து எல்லா வேலைகளையும் முடிப்பவள், இன்று இரவெல்லாம் தூங்காமல் சூர்யாவை பார்த்து கொண்டு இருந்ததால் விடியலில் கண் அயர்ந்தவள் எழ முடியாமல் போகவே, வானதி அனைத்து வேலைகளையும் முடித்திருந்தார்.
இது எப்போதும் நடப்பது தான். காலை ஐந்து மணிக்கெல்லாம் மகி எழுந்து வாசல் தெளிக்கும் சத்தம் கேட்கவில்லை என்றால், அவள் உறங்கிக் கொண்டும் இல்லை வேற எதாவது வேலையில் இருக்கலாம் என்று தெரிந்து வைத்து இருக்கும் வானதி, மகி அறைக்கு சென்று பார்க்க, சூர்யாவை மடியில் வைத்து கொண்டே கட்டில் முனையில் சாய்ந்தபடி உறங்கியதை கண்டு, என்ன நடந்திருக்கும் என புரிந்து கொண்டவர் சூர்யாவின் தலை வருடி மெத்தையில் கிடத்தி, மகியை நன்றாக படுக்க வைத்து விட்டு வீட்டு வேலையை கவனிக்க சென்றார்.
வேகமாக அங்கிருந்து எழுந்த மகி சென்று விட்டதை கண்டு ஆத்திரம் வந்து சிறிது நேர்த்தில் அர்ஜூனும் எழுந்து அவன் அறைக்கு சென்று, இதற்கு முன்னால் கையில் எடுத்த அதே விஸ்கியை திறந்து வாயில் சரிக்க போகும் நேரம் வேகமாக கதவு தட்டும் சத்தம் கேட்டது.
“மச்...” என்று எரிச்சலாகி கதவைத் திறக்க, மகி தான் நின்றிருந்தாள்.
அவளை பார்த்தவன், ஏதும் பேசாமல் சென்று இருக்கையில் அமர்ந்து கையில் இருந்த மதுவை குடிக்கப் போக, அதை வேகமாய் ஒரு கரம் பிடுங்கிவிட்டு, கண்ணாடி கோப்பை வழிய நிரம்பி இருந்த பாலை எடுத்து அவன் கையில் திணித்து இருந்த மகி, மூச்சு வாங்க அவனை முறைத்து கொண்டு நிற்க, அவளை பார்த்து முகத்தை திருப்பியவன் “எனக்கு வேணாம் எடுத்துட்டு போ...” என்றான் கோவித்து கொண்டு.
“ஏன்...?” ஒரே கேள்வியாக வந்தது அவளிடவிருந்து.
“ஏன்னா? என்ன டி சொல்ல. எனக்கு வேணாம்" பொத்தென பாலை மேஜையில் வைத்த அர்ஜுன்,
“அதை குடுத்துட்டு நீ போ...” என மகி கையில் இருந்த மதுவை கேக்க,
“முடியாது முதல்ல அந்த பால குடிங்க" என்றவளை, கண்கள் சிவக்க முறைத்து, மின்னல் வேகத்தில் எழுந்து அவளிடம் நெருங்கினான்.
“நான் அந்த பாலை குடிச்சா என்ன குடிக்கலனா உனக்கு என்ன? என் மேல அக்கறை பட நீ யாரு..?” அர்ஜூன் கேட்டு கொண்டே மகி முன்னால் நடக்க, மகி அவனை பார்த்து கொண்டே ஒரு ஒரு அடியாக பின்னெடுத்து வைத்து நகர்ந்து "நீய என் அத்தை மயன். அதே.. அந்த அக்கறைலதே பாலை குடிக்க சொன்னேன்" என்றவளின் வார்த்தைகள் தந்தியடித்தன.
“ஓ! உன் அத்தை மகனா? அதனால நீ என்கிட்ட அக்கறை எடுக்குற சரி. ஆனா என்னை பொறுத்த வரைக்கும் என் மேல அக்கறை காட்டணும்னா ஒன்னு என் அம்மாவா இருக்கனும் இல்ல எனக்கு வர போற பொண்டாட்டியா இருக்கணும். அப்படி இருக்க, நான் என்ன உரிமைல டி உன் அக்கறைல பங்கு எடுத்துக்கணும்? ஹான் சொல்லு...” என்று அர்ஜூன் உதடு மடக்கி கத்த, அர்ஜூன் பேசியதை கேட்டு விக்கித்து போய் பார்த்தாள் மகி.
தொடரும்.